Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
மூன்றாம் உலகத்தில் பெந்தேகொஸ்தேஇஷம்

PENTECOSTALISM IN THE THIRD WORLD
(Tamil)

டாக்டர் கிறிஸ்டோபர் எல். கேஹன்
by Dr. Christopher L. Cagan

நவம்பர் 21, 2021 கர்த்தருடைய நாள் பிற்பகல் வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட ஒரு பாடம்
A lesson taught at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Afternoon, November 21, 2021

பாடத்துக்கு முன்பாக பாடப்பட்ட கீர்த்தனை: “அல்லேலூயா, என்ன ஒரு இரட்சகர்!” (பிலிப்பு பி. பிளிஸ், 1838-1876).

“அதற்கு இயேசு நானே வழியும் சத்தியமும் ஜீவனுமா யிருக்கிறேன்;, என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).


தேவனிடத்துக்குச் செல்ல அவர் ஒருவரே வழியாக இருக்கிறார் என்று கிறிஸ்து சொன்னார். இயேசுவானவர் மட்டுமே இரட்சிப்புக்கு அத்தியவசியமானவராக இருக்கிறார். அவர் மூலமாக அல்லாமல் ஒருவரும் தேவனிடத்தில் வரமுடியாது. புத்தர் அல்லது இந்து தெய்வங்கள் மூலமாக ஒருவரும் தேவனிடத்தில் வரமுடியாது. உன்னுடைய சொந்த நற்கிரியைகள் மூலமாக உன்னால் இரட்சிக்கப்பட முடியாது. பரிசுத்த ஆவியின் மூலமாகவும்கூட உன்னால் இரட்சிக்கப்பட முடியாது – இயேசு ஒருவரால் மட்டுமே இரட்சிக்கப்பட முடியும்! அப்போஸ்தலனாகிய பேதுரு இதே காரியத்தைச் சொன்னார்,

“அவராலேயன்றி வேரொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்” (அப்போஸ்தலர் 4:12).

இயேசுவானவரை நம்பாமல் ஒருவரும் பரலோகத்துக்குப் போகமுடியாது. நமது பாவத்துக்காகக் கிரயத்தைச் செலுத்த சிலுவையிலே மரித்தவர், நமது பாவத்தைக் கழுவ இரத்தம் சிந்தினவர், மற்றும் நமக்கு ஜீவனைக்கொடுக்க மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவர் அவர் ஒருவர் மட்டுமே பரிபூரணமான தேவகுமாரன். இது ஏதோ சில சிறிய விளக்கம் அல்ல. உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லாரும் காலாகாலமாக விசுவாசித்த இது, அடிப்படையான கிறிஸ்தவக் கோட்பாடு ஆகும். துக்கத்துக்குரியது என்னவென்றால், மூன்றாம் உலகத்தில் “கிறிஸ்தவ” மதத்தை ஆக்கிரமித்து இருக்கும் பெந்தேகொஸ்துகளால் இது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆமாம், பெந்தகொஸ்தே அல்லாத சில சபைகள் இருக்கின்றன, ஆனால் அவைகள் சிறியதாக மற்றும் கண்டுபிடிப்பது கடினமானதாக காணப்படுகின்றன. பெந்தேகொஸ்தேஇஸத்திலும் மேலான கிறிஸ்தவத்தின் பிரதான கிளை அங்கே இருக்கிறது. இந்தச் சபைகள் என்ன பிரசங்கம் செய்கின்றன? அவர்கள் என்ன செய்கிறார்கள்?

நான் இறைப்பயணமாக இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவிலே உள்ள மூன்று நாடுகளுக்கும் சென்றேன். நான் சொன்னதுபோல, ஏறக்குறைய எல்லா சபைகளும் பெந்தேகொஸ்தே சபைகளாகவே இருந்தன. அப்படி இல்லாத சில சபைகள் சிறியவைகளாக மற்றும் அமைதியானவைகளாக இருந்தன. அவைகளைப்பற்றி ஒருவரும் பேசுவதில்லை. கிறிஸ்தவமாக காணப்பட்டவை எல்லாம் ஏறக்குறைய பெந்தேகொஸ்தேவாகவே இருந்தன. ஆனால் இந்த மக்களில் சிலர் மாற்றப்பட்டார்கள். நான் அங்கே என்ன பார்த்தேன் என்பதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இந்தச் சபைகளில் இயேசுவானவர் சிறிதளவே குறிப்பிடப்படுகிறார் மற்றும் சுவிசேஷமும் சிறிதளவே குறிப்பிடப்படுகிறது. அதற்குப் பதிலாக, அந்தப் பிரசங்கிகள் ஒரு “மந்திரவித்தை மனிதனை” போல மக்களுக்கு ஆசீர்வாதம் தருகிறார்கள், ஆப்பிரிக்காவிலே மந்திரவாதி டாக்டர் போல மற்றும் இந்தியாவில் உள்ள குரு செய்வதைப்போல மக்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுப்பவர்களாக மாறிவிட்டார்கள். சிறிய சபைகளின் போதகர்கள் தங்களைப் பாஸ்டர்கள் அல்லது போதகர் என்று அழைக்கிறார்கள். அவரே பெரிய சபைகளை நடத்துபவராக இருந்தால், தன்னை “பிஷப்” என்று அழைத்துக்கொள்ளுகிறார். அவர் மெய்யாகவே வெற்றி உள்ளவராக இருந்தால், அவர் ஒரு “அப்போஸ்தலராக” மாறுகிறார். இந்தப் பிரசங்கிளில் சிலர் மந்திர சக்தி உள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள். ஒரு ஏழ்மையான நாடாக இருந்தாலும், இவர்களில் சிலர் போதுமான அளவு பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

செழுமையான பிரசங்கிகள் மக்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். பெரிய பேனர்களில் அவர்களுடைய விளம்பரங்களை நான் கண்டேன். அவர்களுக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் உள்ளன. இந்தியாவிலே ஒருவர் செழுமையைப் பற்றிய ஒரு நீண்ட போதனையை ஒரு தொலைக்காட்சியில் கொடுத்தார். நீ இரட்சிக்கப்படாவிட்டால் இந்தச் செல்வங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று இறுதியாகச் சொன்னார். மக்கள் இரட்சிக்கப்படும்படியாக ஒரு பாவியின் ஜெபத்தைச் செய்ய வேண்டும் என்று சொன்னார். ஆனால் அந்த மக்கள் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று அந்த ஜெபத்தைச் செய்யவில்லை. ஆனால் செழுமையான மக்களோடு சேர்ந்துகொள்ள ஒரு அனுமதி சீட்டாக அதைச் செய்தார்கள். பணக்காரர் ஆவதற்கு ஒரு வாசற்கதவாக இயேசுவை “நம்பினார்கள்”. நான் சில நேரங்களில் சொல்லுவேன், “பணம் என்பது ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு சர்வதேச மொழி” என்று. பெந்தேகொஸ்தே பிரசங்கிகளைப் பொறுத்த அளவில் இது நிச்சயமாக உண்மையாக இருக்கிறது! அவர்கள் சுவிசேத்தை பிரசங்கிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் பணத்தைப் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்! ஒரு கூட்டத்திலே, ஒரு பிரசங்கியார் மக்களைப் பார்த்து கைகளை உயர்த்தி சத்தமாக சொல்லச்சொன்னார், “நான் பணக்காரன். நான் பணக்காரன்.” ஆனால் பணக்காரனாக இருந்த ஒரே ஒருவர் அந்தப் பிரசங்கியார் மட்டுமே ஆகும். செழுமையின் தத்துவம் செயல்படாது. அது ஒரு தந்திரம்!

நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு, கிராமங்கள் மற்றும் பண்ணையிலே உள்ள மக்களுக்குச் செழுமையைப் பற்றி அவர்கள் ஏன் பிரசங்கிப்பதில்லை? அங்கே இருக்கிற மக்கள் பணதேவையில் இல்லையா? அந்த நாட்டிலே ஒரு செழுமையின் பிரசங்கியை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஏன் அப்படி? அந்தப் பிரசங்கியார் விரும்பும் வாழ்க்கை முறையை நடத்த துணையாக இருக்கும் பணத்தைக் கொடுக்க அந்த ஏழை மக்களால் முடியாது! அவருடைய ஆடம்பரமான காருக்கு, அவர் பயணம் செய்யும் விமான பயணங்களுக்கு, அவரது பெரிய வீட்டுக்கு, அவரது மனைவி அணியும் புதிய துணிகளுக்கு, தொலைகாட்சி நேரங்களுக்கு செலவிட போதுமான பணம் அவர்களிடம் இருக்காது. அதனால் அந்த பிரசங்கியார் ஏழை மக்களைப்பற்றி கவலைப்படமாட்டார். அவருடைய பிரசங்கத்தை அவர்கள் கேட்டாலும் அவர்களால் பணக்காரர்களாக மாறமுடியாது என்றும் அவருக்கு தெரியும். அவர்களால் அதிக பணம் கொடுக்க முடியாது என்றும் அவருக்கு தெரியும். எங்கே பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறதோ அங்கே அந்த நகரங்களில் மட்டுமே அந்த செழுமை பிரசங்கிகளை நான் பார்த்தேன். கோழிக்குஞ்சுகள் இல்லாத இடங்களுக்கு குள்ளநரிகள் போகாது!

ஆனால் நான் பார்த்ததெல்லாம் அதுமட்டுமல்ல. பிரசங்கியினால் தொடப்படும்படியாக மக்கள் வரிசையிலே நிற்பதையும் நான் கண்டேன். அவர்களைத் தொட்டபொழுது அவர்கள் கீழே விழுவார்கள் மற்றும் சில நிமிடங்கள் சுயநினைவு இல்லாமல் கிடப்பார்கள், சில நேரங்களில் சுழல்வார்கள் அல்லது சருக்குவார்கள். இது “ஆவியினால் வெட்டப்படுதல்” என்று அழைக்கப்பட்டது. ஆனால் அந்தப் பரிசுத்த ஆவி அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அந்தப் பிரசங்கியார் தொடுவதற்கு முன்பாக, அந்த மக்கள் தங்கள் முழங்கால்களை முடக்குவார்கள், பின்னாகச் சாய்வார்கள், மற்றும் தங்கள் தலைகளைப் பின்னாக வைப்பார்கள். பிரசங்கியார் தமது சுரத்தை அவர்களுடைய நெற்றியில் வைத்து மெதுவாக அவர்களை பின்னுக்குத் தள்ளுவார். அது உண்மையாக இருந்தால், அவர்கள் தங்கள் கால்களை வளைத்தாலும் வளைக்காமல் இருந்தாலும் பரிசுத்த ஆவியானவர் அவர்களைக் கையாளுவார்! அது போலியான – ஒன்று. இதிலே மோசம் என்னவென்றால் அது பேய்தனத்தை உடையது ஆகும்.

இந்தியாவிலே ஒரு மனிதன் ஓடிவந்து என்னுடைய பாதங்களைப் பிடித்துக்கொண்டான். அவன் ஏன் அப்படி செய்தான் என்று அவனை நான் கேட்டேன். அவன் பதிலளித்தான், ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலமாக அவன் சொன்னான், என்னைத் தொட்டு என்மூலமாக அவன் இரட்சிப்பைப் பெறலாம் என்று அவன் விரும்பினான் என்று. என்னால் இரட்சிப்பை கொடுக்க முடியாது என்று நான் அவனிடம் சொன்னேன். நான் ஒரு மனிதன், அவனைப்போல நானும் ஒரு பாவியான மனிதனாக இருக்கிறேன். என்னைவிட மிகவும் சிறந்த ஒரு மனிதர் இருக்கிறார் அவர் என்னுடைய புதிய நண்பருக்கு இட்சிப்பைக் கொடுக்க முடியும் ஆனால் அவரிடம் இவன் வந்தால் மற்றும் அவரை நம்பினால் மட்டுமே அவரால் இரட்சிப்பை இவனுக்கு கொடுக்க முடியும் என்று நான் அவனிடம் சொன்னேன். அந்த மனிதருடைய பெயர் இயேசு. நான் அவனுக்கு இயேசுவானவரைப்பற்றி சொன்னேன், இயேசு யார் மற்றும் அவர் என்ன செய்தார் என்றும் நான் அவனிடம் சொன்னேன். அதன்பிறகு அந்த ஏழை இந்திய மனிதனை நான் கிறிஸ்துவிடம் நடத்தினேன். அவன் இயேசுவானவரை நம்பினான். ஒரு மாதத்துக்கு பிறகு அந்த மனிதன் மரித்து பரலோகத்துக்குப் போனான்.

அநேக பெந்தேகொஸ்தே பிரசங்கிகள் இந்தியாவிலே ஒரு குருவைப்போல செயல்படுகிறார்கள், ஒரு ஆவிக்குரிய “தலைவர்” தனது சீஷர்களை உருவாக்கி அவர்களுக்குச் சக்தி கொடுத்து அவர்களை உயர்த்தும் ஒரு குருவாக நினைக்கிறார்கள். இதை நான் மேலும் மேலும் பார்த்தேன். பிரசங்கத்துக்குப் பிறகு அந்த மக்கள் முன்னுக்கு வந்து அந்த பிரசங்கியாரிடம் (அல்லது என்னிடம்!) தங்கள் வேண்டுதல்களை – குணமாகுதலை, பணத் தேவைகளை, அல்லது வேறுசில காரியங்களைச் சொன்னார்கள். ஒரு இந்து குருவுக்கு முன்பாக தங்கள் கைகளைக் கூப்பி குனிந்து வணங்குவது போல் என்னை வணங்கினார்கள். அவர்களுடைய நெற்றியில் என்னுடைய கைகளை வைத்து அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் பேசும்போது, ஒரு குருவிடம் பேசுவதைப் போன்ற வார்த்தைகளை என்னிடமும் பேசினார்கள். அவர்கள் “தேவனுடைய மனிதன்” என்று சொல்லுகிறார்கள் – இரண்டுவிதமான மனிதர்களுக்கும் ஒன்றுபோலவே செயல்பட்டார்கள். அந்த மக்களுக்கு, போதனை முக்கியமல்ல. அதன்பிறகு என்ன வருகிறது என்பதுதான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது – அதாவது பிரசங்கியாரின் தொடுகையின் மூலமாக கிடைக்கும் ஆசீர்வாதம்.

இந்தியாவிலும் மற்றும் ஆப்பிரிக்காவிலும் ஒரு பாரம்பரியமான பாடல் பாடப்பட்டதை நான் ஒருபோதும் கேட்கவில்லை. எனக்கு அந்த மொழிகள் தெரியாது, ஆனால் என்னால் அந்த இசையை அறிந்துகொள்ளமுடியும்! பெரிய சபைகளில் ராக் இசையை நான் கேட்டேன், அமெரிக்க சபைகளில் இசைப்பதைப் போன்ற இசைகள். அடிக்கடி மக்கள் கீர்த்தனைகளைப் பாடியதை நான் கேட்டேன். இந்தியாவில் ஒரு ஏழை சபையில் கிட்டார்கள் உள்ள ராக் குழு மற்றும் பெரிய ஒலிபெருக்கிகள் போன்றவைகளுக்குக் கொடுப்பதற்குப் பணம் இல்லை. ஆனால் அவர்களிடம் ஒரு மேள சத்தம் இருந்தது. இருபது நிமிடங்களாக மக்கள் “ஏசய்யா” என்று மறுபடியும் மறுபடியுமாக மேளம் அடித்துக்கொண்டு அவர்கள் சொன்னார்கள். ஒரு யானை மெதுவாக நடந்து ஒரு சாலையிலே இறங்கி வருவதைப்போல நான் நினைத்தேன் – அந்தவிதமாக அவர்களுடைய மேளசத்தம் இருந்தது. இயேசுவானவருக்கு அவர்கள் வைத்த பெயர் “இயேசய்யா” என்பதாகும். ஆனால் அந்தப் பெயர் ஒரு “கோஷமாக” இருந்ததே ஒழிய, ஒரு துதி இசையாகப் பாடப்படவில்லை.

இயேசுவானவரைக் குறிப்பிட்டிருந்தாலும், கிறிஸ்து மற்றும் சுவிசேஷம் அவர்களுடைய மையமானதாக சபைகளின் காணப்படவில்லை. மற்ற காரியங்கள் மையமாக இருந்தன – பரிசுத்த ஆவி, பிரசங்கியாரின் தொடுதல், செழுமை போன்றவை – ஆனால் பாவத்துக்குக் கிரயத்தைச் செலுத்த சிலுவையிலே மரித்த கிறிஸ்து மையமாக இல்லை.

ஆப்பிரிக்காவிலே ஒரு கூட்டத்திலே போதனைக்கு முன்பாக ஒரு மணி நேரம் இசை இருந்தது, மேடைமீதும் அதற்கு முன்பாகவும் மக்கள் நடனம் ஆடினார்கள். இசையின் இறுதியிலே பாஸ்டர் என்னிடம் வந்து சில மக்கள் மறுபயும் பிறக்க விரும்புகிறார்கள் என்று என்னிடம் சொன்னார். ஆனால் அவர்கள் சுவிசேஷத்தை கேட்கவே இல்லை! அவர்கள் என்னவிதமான “புதிய பிறப்பை” பெற்றுக்கொள்ள முடியும்? முதலாவது சுவிசேஷத்தை கேட்காதவர்களுக்கு நான் ஆலோசனை கொடுக்கமாட்டேன் என்று அந்தப் பாஸ்டரிடம் நான் சொன்னேன். அவர் ஆச்சரியப்பட்டார்! போதனையைப் பிரசங்கித்த பிறகு நான் அவர்களுக்கு ஆலோசனை கொடுத்தேன் மற்றும் அவர்களை கிறிஸ்துவிடம் கொண்டுவர முயற்சி செய்தேன்.

அங்கே இருந்த மக்கள் மாற்றப்பட்டது “மோசமானதாக” இருந்தது. சில மனிதர்கள் மற்றும் மனுஷிகள் மந்திரவாதத்தில் ஈடுபட்டிருந்ததாக நான் கேள்விப்பட்டேன். பிரசங்கம் முடிந்த பிறகு ஒரு சிறப்பான அழைப்புக் கொடுக்கும்படியாக நான் அந்தப் பாஸ்டரிடம் சொன்னேன், அந்தப் பாஸ்டர் தயங்கினார். நான் நாலாவது முறையாக அறிவுறுத்தின பிறகு அந்தப் பாஸ்டர் இறுதியாக ஆங்கிலத்திலே அழைப்புக் கொடுத்தார் மற்றும் அது ஸ்தல பாஷையிலே மொழி பெயர்க்கப்பட்டது. ஆறு அல்லது ஏழு நபர்கள் வந்தார்கள். அவர்கள் செய்த தவறை அவர்கள் அறிந்திருந்தார்கள். தாங்கள் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை. அவர்கள் கஷ்டத்தில் இருப்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு ஆலோசனை கொடுத்து அவர்களுடைய பொருளாதார இடர்பாடுகளைச் சலக்கிரனைச் செய்தேன். அதன்பிறகு நான் அவர்களுக்கு சுவிசேஷத்தைக் கொடுத்தேன் மற்றும் அவர்களை கிறிஸ்துவிடம் நடத்தினேன்.

பெந்தேகொஸ்தேஇஸத்தில் ஏராளமான மனஎழுப்புதல்கள் உள்ளன, ஆனால் மிகவும் குறைவான இரட்சிப்பே இருக்கிறது. இரட்சிக்கபடாத நிலையில் பல வருடங்களாக, பல பத்தாண்டுகளாக, உங்கள் வாழ்நாள் முழுவதும்கூட, நீங்கள் கடந்து சென்றுகொண்டே இருக்கலாம். ஒரு இந்து அல்லது ஒரு புறஜாதியான் நரகத்துக்கு போவதைப் போல பெந்தேகொஸ்தேவாகிய நீங்கள் நரகத்துக்குப் போவீர்கள்.

கிளாசிகல் கிறிஸ்துவத்துக்கும் பெந்தேகொஸ்தே சபைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஒரு கிளாசிக்கல் புராட்டஸ்டன்ட் சபையில், நிகழும் மிகமுக்கியமான காரியம் என்பது போதனையாகும். போதகர் தேவனுடைய வார்த்தையைப் போதிப்பார். சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.

ஒரு பெந்தேகொஸ்தே சபையில் மாம்ச எழுப்புதல் மற்றும் அனுபவங்கள் மிகமுக்கியமானவைகளாகும். இசையின் மூலமாக மக்கள் மாம்ச எழுச்சியைப் பெறுகிறார்கள். கடைசியாக அவர்கள் பாஸ்டர் மூலமாக ஒரு ஜெபத்தை பெற்றுக்கொள்ளலாம். பணக்காரராக மாறுவதற்கு ஒரு வழியை அவர்கள் எதிர்பார்க்கலாம். சில சமயங்களில் அவர்கள் “ஆவியினால்” பிடிக்கப்பட்டு கீழே விழுவார்கள். ஆனால் அவைகள் எல்லாம் உணர்வுகள் மட்டுமே. அது இரட்சிப்பு அல்ல! உள்ளபடி பார்த்தால் அது நேரத்தை வீணாக்குவது, மற்றும் மோசமான பிசாசின் காரியம் ஆகும்.

சிலர் நினைக்கலாம், “நீங்கள் மூன்றாம் உலகத்தில் இதை எல்லாம் பார்த்தீர்கள். நாங்கள் இங்கே அமெரிக்காவில் நன்றாக இருக்கிறோம்” என்று. இல்லை, இல்லை! இங்கே என்ன பெரிய மாற்றம் இருக்கிறது? எல்லாவற்றிற்கும் மேலாக, மூன்றாம் உலகத்தில் உள்ள பெந்தேகொஸ்துக்கள் நமது நாட்டில் உள்ள கிரேசி பெந்தேகொஸ்துகளிடம் கிரேசியாக இருக்க கற்றுக்கொண்டார்கள்.

ஒருசில வருடங்களுக்கு முன்பாக நானும் ஜேக்நாஃஹன் அவர்களும் ஒரு பெந்தேகொஸ்தே கூட்டத்துக்கு போனோம். அது ஒரு எழுப்புதல் கூட்டம் என்று அழைக்கப்பட்டதாகும். அது அது மிகவும் சத்தமான ராக் இசையோடு ஆரம்பித்தது. இறுதியாக அங்கே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வந்து மேல்தளத்தில் கட்டப்பட்ட கயிற்றிலே முன்னும் பின்னுமாக ஊஞ்சல் ஆடினார்கள் அது ஒரு சர்கஸில் செய்வதைப்போல இருந்தது. அவர்கள் மெய்யாகவே உயரத்தில் ஊஞ்சல் ஆடும்போது, ஆங்கிலத்தில் எழுப்புதல்! என்ற வார்த்தைகள் திரையிலே மிகப் பெரியதாகப் போடப்பட்டது. மெய்யாக அது ஒரு எழுப்புதலே அல்ல! ஆனால் மக்கள் அப்படி நினைத்துக்கொண்டார்கள். அதன்பிறகு சில பாஸ்டர்கள் பேசினார்கள். ஒரு மணிநேர செய்தியில், இயேசு ஒரே ஒருமுறை மட்டுமே குறிப்பிடப்பட்டார். சுவிசேஷம் அறிவிக்கப்படவில்லை. அரிஜோனாவில் இருந்து வந்த ஒரு பாஸ்டர் தங்கள் மக்கள் “அக்கினி தழலில்” இருப்பதாக ஊடேபோவதாக சொன்னார். நான் நினைவுபடுத்திக்கொள்ளுகிறேன், “அக்கினி தழல்கள் வேதாகமத்தில் இல்லை” என்பதை நான் நினைவுபடுத்திக்கொள்ளுகிறேன். ஆனால் அங்கே நடந்த பெரிய காரியங்கள் அவர்களுக்கு மிகவும் உணர்ச்சி ஊட்டியது! இறுதியாக அதை நடத்திய பாஸ்டர் சொன்னார் ஜெபம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறவர்கள், மேடைமீது வரலாம் என்றார். மக்கள் மேடைமீது ஏறினார்கள் பாஸ்டர்கள் தங்கள் கைகளை அவர்கள் மீது வைத்து ஜெபித்தார்கள். மக்கள் நடுங்கினார்கள், சுற்றினார்கள் மற்றும் சருக்கி விழுந்தார்கள். அந்தப் பாஸ்டர்களில் ஒருவர் சத்தமிட்டார், “பிடிப்பவர்களே!” இவர்கள் விழுபவர்களைப் பிடிப்பதற்காக முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டவர்கள். இவை எல்லாம் திட்டமிடப்பட்டவைகள்! இறுதியாக அந்தக் கூட்டம் சரியாக இரவு 9.30 மணிக்கு முடிவடைந்தது. பாருங்கள், அந்த அறை 9.30 மணிவரையிலும் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகும். அதனால் அந்த வாடகைக்கு வாங்கப்பட்ட “பரிசுத்த ஆவி” அந்த அறையை விட்டு 9.30 மணிக்குப் போய்விட்டது. மக்கள் பிசாசு பிடித்தவர்களைப்போல, உள்ளே வந்த வண்ணமாகவே, வெளியே போனார்கள். அது “எழுப்புதல்” என்று சொல்லப்பட்டது, ஆனால் அப்படி எதுவும் இல்லை.

ஒவ்வொரு பெந்தேகொஸ்தே அல்லது கரிஸ்மேட்டிக் சபைகளும் அப்படிப்பட்ட கொடுமையில் அல்ல. ஆனால் வலியுறுத்தல் ஒரே மாதிரியாக இருந்தது – அங்கே சுவிசேஷம் அல்ல ஆனால் அணுகுமுறை ஒரே கேளிக்கைகள் மற்றும் உணர்ச்சி கிளப்புதல்கள் இருந்தன. அமெரிக்காவில் அநேக சபைகளில், சுவிசேஷம் சொல்லப்படுவதில்லை குறிப்பிடப்படுவதும் இல்லை. அவர்களுக்கு, இயேசு என்பவர் பரலோகத்துக்குப் போக எளிதாக அனுமதி சீட்டுக் கொடுப்பவர் மக்களை தங்கள் உறவுகளுக்கு நடத்துபவர். அவருடைய பிரதானமான வேலை பாவங்களை மன்னிக்கிறது அல்ல ஆனால் மக்களை மகிழ்ச்சிபடுத்துவதுதான். பெந்தேகொஸ்தே சபைகள் உணர்ச்சிகளையும் கிளர்ச்சிகளையும் அனுபவங்களையும் தருகின்றன. அவர்கள் காட்டுத்தனமான ராக் இசைகளைக் கொடுத்து மக்களைக் கிளர்ச்சி அடைய செய்கிறார்கள்! பெந்தேகொஸ்துக்கள் பாஷைகள், செல்வத்தில் நம்பிக்கை, மற்றும் குணமாக்குதலைக் கொடுக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைக் கொடுப்பதில்லை.

இதற்குப் பதில் என்ன? இயேசுவானவர் இதற்குப் பதிலைக் கொடுக்கிறார்,

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).

போதகரே, இயேசுவானவரை நீங்கள் நம்பி இருக்கிறீர்களா என்று நீங்களே உறுதி படுத்திக்கொள்ளுங்கள். அதன்பிறகு இயேசுகிறிஸ்துவைப் பிரசங்கியுங்கள் மற்றும் போதியுங்கள்! இயேசுவவானவர் யார் மற்றும் அவர் நமக்காக என்ன செய்தார் என்பதைத் தெளிவு படுத்துங்கள். கவனமாக சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் – சுவிசேஷத்தை மட்டுமே வேறொன்றும் வேண்டாம். ஞாயிறு பள்ளியிலும் வேத பள்ளிகளிலும் சுவிசேஷத்தைத் தொடர்ந்து போதியுங்கள். உங்கள் சபையில் கிறிஸ்து மற்றும் இரட்சிப்பை மட்டுமே பிரதானமான பாடமாகக் கொள்ளுங்கள். ஆவிக்குரிய வரங்கள் மற்றும் செழுமையின் ஆசீர்வாதங்களைப் பற்றி ஒருபோதும் கவலைப்படாதிருங்கள். மக்கள் பணக்காரர் ஆகமாட்டார்கள். ஆனால் எப்படியும் செல்வந்தர்களாக மாறமாட்டாகள். பாஷைகளைப் பற்றி சிந்தை கொள்ள வேண்டாம். பாஷைகள் ஒருவருக்கும் ஒரு நன்மையும் ஒருபோதும் செய்தது இல்லை. இயேசு கிறிஸ்துவை பிரசங்கியுங்கள் மற்றும் போதியுங்கள்!

உங்கள் சபையில் உள்ள ஒவ்வொரு நபரிடமும் தனிப்பட்டவிதத்தில் பேசுங்கள். மக்கள் சுவிசேஷத்தைப் புரிந்து கொள்வதற்கு இயேசுவானவரை நம்புவதற்கு உங்களால் முடிந்த வரையிலும் எல்லாவற்றையும் செய்யுங்கள். அதன்பிறகு அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். அதுவே உங்களுடைய உண்மையான ஊழியம். இதை செய்யும்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இயேசுவின் நாமத்தில், ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.