Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கேள்விகளுக்கு பதிலளித்தல்

ANSWERING QUESTIONS
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்,
போதகர் எமரிட்டஸ்
by Dr. R. L. Hymers, Jr.,
Pastor Emeritus

அக்டோபர் 4, 2020 கர்த்தருடைய நாள் பிற்பகல் வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட பாடம்
A lesson given at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Afternoon, October 4, 2020

பாடத்துக்கு முன்பாக பாடப்பட்ட கீர்த்தனை:
   “ஓ ஒரு ஆயிரம் நாவுகள் வேண்டும்”
   (சார்லஸ் வெஸ்லி, 1707-1788).


ஒருவர் உங்களைக் கேள்விகள் கேட்டால் நீங்கள் இடறல் அடைந்துவிடுவீர்களா? நிச்சயமாக அப்படி இடறல் அடையமாட்டீர்கள். அப்போஸ்தலராகிய பேதுரு சொன்னார்,

“கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (I பேதுரு 3:15).

பொதுவான கேள்விகள்

1. நான் வேதாகமத்தை விசுவாசிப்பதில்லை.

அப்போஸ்தலனாகிய பவுல் வேதாகமத்தை விசுவாசிக்காத கிரேக்கர்களுக்கு வேதாகமத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். பவுல் அவர்களை உணர்த்தும்படியாக அதைச் சொல்ல முயற்சிக்கவில்லை. நாம் சாட்சியாகச் சொல்லும்போது நமது பிரதானமான செயலாக்கம் பிரகடணப்படுத்துதல் ஆகும், நமது சார்பாக பேசக்கூடாது.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM
என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

ஒரு நபர் நித்திய ஜீவனை எப்படி பெற்றுக்கொள்வது என்பதுதான் வேதாகமத்தின் பிரதானமான செய்தி ஆகும். அவர் நித்திய ஜீவனை விசுவாசிக்கவில்லை என்று சொன்னால், நீங்கள் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்கவேண்டும், “இந்தப் பாடத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? இந்தப் பாடத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதைப்பற்றிய புரிந்துகொள்ளுதல் உங்களுக்கு இருக்கிறதா?”

ஏறக்குறைய 98 சதவீத நேரம், அவர்கள் சொல்லுவார்கள், “பத்துக் கட்டளைகளைக் கைக்கொள்ளுவதன் மூலமாக அல்லது கிறிஸ்துவானவரின் மாதிரியைப் பின்பற்றுவதன் மூலமாக” என்று சொல்லுவார்கள். அதன்பிறகு நீங்கள் சொல்லலாம், “அதற்காகத்தான் நான் பயப்பட்டேன். வேதாகமத்தின் பிரதானமான செய்தியை நீங்கள் புரிந்துகொள்ளாமல் அதை நீங்கள் புறக்கணித்து விட்டீர்கள், ஏனென்றால் உங்கள் பதில் தவறானது மட்டுமல்ல, ஆனால் அது வேதாகமம் போதிக்கும் காரியங்களுக்கு எதிராக இருக்கிறது. இப்பொழுது, இதிலே அதிக அறிவு திறன் வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா இந்தக் கருத்தைக்குறித்து வேதாகமம் போதிக்கும் அறிவுதிறன்பற்றி நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறீர்களா? அதன்பிறகு நீங்கள் வேதாகமத்தைத் தள்ளிவிடலாம் அல்லது ஏற்றுக்கொள்ளலாம் என்று அறிவுபூர்வமான முடிவுக்கு வரலாம்”.

இப்பொழுது இயேசுவானவர் முன்னறிவித்த 10 காரியங்களை உங்களுக்குப் படித்துக் காட்டுகிறேன்.

(1) பரிகாசம் செய்யப்படுதல்,

“என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்” (சங்கீதம் 69:21).

(2) மற்றவர்களுக்காக துன்பப்படுதல்

“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:4-6).

(3) அற்புதங்களைச் செய்தல்

“அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்” (ஏசாயா 35:5 – 713 BC).

(4) ஒரு சினேகிதனால் காட்டிக்கொடுக்கப்படுதல்

“என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்” (சங்கீதம் 41:9).

(5) முப்பது வெள்ளிகாசுகளுக்கு விற்கப்படுதல்

“உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்” (சகரியா 11:12 – 487 BC).

(6) துப்புதல் மற்றும் வாரினால் அடித்தல்

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன், அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6 – 712 BC).

(7) சிலுவையில் ஆணிகளால் அறைதல்

“நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்” (சங்கீதம் 22:16).

(8) தேவனால் கைவிடப்படுதல்

“என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?” (சங்கீதம் 22:1).

(9) அவருடைய உயிர்த்தெழுதல்

“என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்: உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்” (சங்கீதம் 16:10).

(10) புறஜாதிகள் அவரிடம் மனந்திரும்பி வருதல்

“இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்து கொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்” (ஏசாயா 42:1 – 712 BC).

இவைகள் இயேசுவானவரைப்பற்றிய 10 தீர்க்கதரிசனங்கள் ஆகும். ஏறக்குறைய இரண்டாயிரத்துக்கும் அதிகமான குறிப்பிட்ட தீர்க்க தரிசனங்கள் வேதாகமத்திலே ஏற்கனவே நிறைவேற்றப்பட்டன.

அநேக ஆண்டுகளுக்கு முன்பாக தேசிய விசாரணையாளர் என்ற பத்திரிக்கை 61 தீர்க்க தரிசனங்கள் நவீன “தீர்க்கதரிசிகளால்” நிறைவேறினதாக அட்டவணை படுத்தி இருந்தது. அந்த 61 தீர்க்க தரிசனங்களும் அந்த வருடத்திலேயே கடைசி ஆறு மாதங்களில் நிறைவேறவேண்டியதாக இருந்தன. அவர்கள் எவ்வளவு நன்றாக செய்தார்கள் தெரியுமா? நீங்கள் நம்பினாலும் சரி அல்லது நம்பாவிட்டாலும் சரி, அவர்கள் 61 தீர்க்கதரிசனங்களையும் தவறவிட்டு விட்டார்கள்! போப் பால் ஓய்வு பெற்றுவிடுவார் மற்றும் ரோமன் கத்தோலிக்க சபை ஒரு சாதாரண கமிட்டியினால் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர்கள் சொன்னார்கள்; அந்த ஜார்ஜி போர்மேன் தன்னுடைய அதிக கனமுள்ள கிரிடத்தை ஆப்பிரிக்காவில் முகமது அலியோடுகூட வைப்பார்; மற்றும் அந்த டேடு கென்னடி ஜனாதிபதியாவார் என்று பிரச்சாரம் செய்தார்கள்! அந்த நவீன தீர்க்க தரிசனங்களுக்கும் வேதாகமத்துக்கும் ஒப்பிட்டால் நவீன “தீர்க்கதரிசனங்கள்” எப்போதும் தவறாகவே இருக்கின்றன, மற்றும் வேதாகம தீர்க்க தரிசனங்கள் எப்போதும் தவறில்லாததாகவே இருக்கின்றன!

2. பரிணாமகோட்பாடு சிருஷ்டிப்பை இல்லை என்று நிருபிக்க முடியுமா?

டாக்டர் ஏ. டபல்யு. டோசர் சொன்னார், “வேதாகமத்தை விசுவாசிக்கும் நாம் இந்தப் பிரபஞ்சம் ஒரு சிருஷ்டிப்பு என்று அறிந்திருக்கிறோம். அது நித்தியமானது அல்ல அதற்கு ஒரு ஆரம்பம் இருந்திருக்கும். அது ஒரு மரபுரிமை சார்ந்ததின் தற்செயலான மகிழ்விளைவுகள் அல்ல அதன் மூலம் எண்ணிக்கையுள்ள இணையும் பாகங்கள் ஒன்றை ஒன்று விபத்தைப்போல கண்டு, இடத்தில் விழுந்து, மற்றும் ரீங்காரம் செய்ய ஆரம்பிப்பதல்ல. இதை விசுவாசிக்க சில நபர்கள் சொந்தமாக்கிக்கொண்டுள்ள ஒரு ஏமாளித்தனம் தேவையாக இருக்கிறது.”

ஒரு இளம் வாலிபனிடம் கேட்கப்பட்டது, “பரிணாமம் உண்மை என்று எந்த ஆதாரம் உன்னை உறுதியாக நம்ப செய்தது?” என்று. அதற்கு அவன் சொன்னான், “மக்களுக்கும் மிருகங்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள். என்னை, பரிணாமம் உண்மை என்று நம்ப செய்தது”.

1950ன் பிற்பகுதியில் ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஜீவியத்தின் மூலக்கூறின் திறவுகோலாகிய, DNAவை கண்டு பிடித்தார்கள் – அந்தக் கண்டுபிடிப்பு அவர்களுக்கு நோபல் பரிசை பெற்றுத்தந்தது. மனித சரீரத்தில் பல ஆயிரம் கோடி DNA மூலக்கூறுகள் உள்ளன. இது ஒரு நம்பமுடியாத சிக்கலான ஒழுங்குமுறை ஆகும்.

கிரிக்கு, ஒரு நாஸ்தீகனான மற்றும் பரிணாமக்கொள்கைகாரனானவர், பரிணாமக்கோட்பாடு சொல்லுவதின்படி இந்தப் பூமியின் வாழ்க்கை 4.6 நூறு கோடி ஆண்டுகளில் உருவானது என்று பரிணாம கொள்கைகாரர்கள் சொல்லுகிறார்களே அதன்படி DNA மூலக்கூறுவின் நிகழ் தகவை கண்டுபிடிக்க தீர்மானம் செய்தார். உலகத்தின் வரலாற்றில் தனி ஒரு செல்லின் DNA மூலக்கூறுவின் வாய்ப்புகள் என்ன? அவருடைய ஆராய்ச்சியின் முடிவு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அது பூஜ்யம் ஆகும். 4.6 நூறு கோடி ஆண்டுகளிலும், இது ஒருபோதும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை!

அதன்பிறகு பிரான்சிஸ் கிரிக்கு இதை செய்தவர் தேவன் என்று சொன்னாரா? அவர் சொல்லவில்லை.

இந்த ஆதாரத்தை பெற்றிருந்தும், விஞ்ஞானிகளில் ஒருவரும் தங்கள் கோட்பாடு தவறு, என்று ஏற்றுக்கொள்ளாதது விசித்திரமாக காணப்படுகிறது இல்லையா? அவர்களில் ஒருவரும் சொல்லவில்லை, “டார்வினிலிருந்து, நாங்கள் உண்மையில்லாத ஒன்றை போதித்துக்கொண்டு இருக்கிறோம். அமினோ அமிலம் போன்ற ஆரம்ப காலத்திலிருந்த சகதியிலிருந்து இணைந்து மற்றும் ஒரு செல் உருவானது அந்த ஜீவன் தோன்றினது என்று நாங்கள் உங்களுக்கு கற்பிக்கிறோம். மற்றும், ஒரு நூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் இங்கே இருக்கிறோம். அப்படியாக நடந்தது என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் எங்கள் கோட்பாடு பொய்யாகப் போனது. நாங்கள் உங்களைத் தவறாக நடத்தினதற்காக வருந்துகிறோம்” என்று.

பிரான்சிஸ் கிரிக்கு என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் இன்னும் இயலாத ஒரு கோட்பாட்டை கொண்டு வந்தார். ஒரு முன்னேற்றம் அடைந்த உயிரினம் அதிக தூரமான கிரகத்தில் இருப்பதாகவும், அங்கிருந்து விண்கலங்களை அனுப்புவதாகவும், மற்றும் பல்வேறு கிரகங்கள் வித்தாக முதிர்வதாகவும், புதிய கோட்பாட்டைக் கொண்டு வந்தார். மற்றும் அங்கிருந்துதான் நாம் வந்தோம். இது நட்சத்திர யுத்தங்கள் போல சிறிதளவு ஒலிக்கிறது!

ஜீவனில்லாததிலிருந்து ஜீவன் வரமுடியாது. அதனால்தான் வேதாகமம் சொல்லுகிறது, “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதியாகமம் 1:1).

தேவன் இருக்கிறார் என்பதை நான் விசுவாசிக்கும்படி எனக்கு உதவிசெய்த மூன்று ஆதாரங்கள்:

(1) காரணம் மற்றும் விளைவு விதி.

     இந்தப் பிரபஞ்சத்திலே உருவாகுதல் மற்றும் விளைவுகளை நான் காணும் காரணத்தால் அது என்னை தர்க்கரீதியாக ஒரு பெரிய காணப்படாததை காட்டுகிறது அதை நான் தேவன் என்று விசுவாசிக்கிறேன்.

(2) வடிவமைப்பு முறையின் ஆதாரம்.

     நீங்கள் கடைக்குச் சென்று அங்கே பரிபூரணமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கடிகாரத்தைப் பார்த்தால், அந்தக் கடிகாரம் ஒரு கடிகாரம் செய்பவர் இருக்கிறார் என்று தர்க்கரீதியாக காட்டுகிறது என்று முடிவு செய்வீர்கள். அதுபோல நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த உலகம் ஒரு உலக உருவாக்குபவரைக் காட்டுகிறது, அவரை நான் தேவன் என்று அழைக்கிறேன்.

(3) ஆள்தத்துவத்தின் ஆதாரம்.

     மோனோ லிசாவின் புகழ்பெற்ற வண்ண ஓவியத்தை நாம் பார்க்கிறோம். ஆள் தத்துவத்தின் ஆதாரத்தை நாம் காண்கிறோம். ஒரு நபர் இல்லாமல் இந்த வர்ணம் பூச்சுத் தானாக வந்திருக்க முடியாது. இந்த மூன்றாவது ஆதாரம் முக்கியமானது ஏனென்றால் ஒரு நிகழ்வு அல்லது வலிமை கணக்கில்லாமல் நம்மை பற்றிக்கொள்ள முடியாது, ஆனால் நமது பாவங்களுக்கு ஒரு நபர் கணக்குக் கொடுக்க மற்றும் சித்தமாக இருக்க வேண்டும்.

3. எனது தேவன் அப்படிபட்டவர் அல்ல.

மெத்தடிஸ்டு சபையை ஆரம்பித்த, ஜான் வெஸ்லியின் வாழ்க்கை, இரட்சிப்புக்காகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தை மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அவர் ஆக்ஸ்போர்டு செமினரிக்குச் சென்று ஐந்து ஆண்டுகள் படித்து இங்கிலாந்து சபைக்கு ஒரு ஊழியராக மாறினார், அங்கே அவர் பத்து ஆண்டுகள் ஊழியம் செய்தார். அந்தக் காலத்தின் முடிவில், தோராயமாக 1735ல், அவர் இங்கிலாந்திலிருந்து ஜியோரியாவுக்கு ஒரு மிஷனரியாக மாறினார்.

அவரது வாழ்க்கை முழுவதும், அவர் தெய்வ பக்தியுள்ளவராக இருந்தபோதிலும், அவரை நாம் மிகவும், பக்தியுள்ளவராக எண்ணினபோதிலும், தனது ஊழியத்தில் தோல்வி அடைந்தார். அவர் காலை 4 மணிக்கு எழுந்தார் மற்றும் இரண்டு மணி நேரம் ஜெபித்தார். அதன்பிறகு சிறைகள், காவல் செய்யப்பட்ட இடங்கள், மற்றும் மருத்துவமனைகள் போன்ற இடங்களில் உள்ள எல்லாவிதமான மக்களுக்கும் ஊழியம் செய்ய செல்வதற்கு முன்பாக ஒரு மணி நேரம் வேதம் வாசிப்பார். அவர் இரவு வெகுநேரம் வரையிலும் மக்களுக்குப் போதிப்பார், ஜெபிப்பார் மற்றும் உதவி செய்வார். இதை அவர் அநேக ஆண்டுகள் செய்தார். உண்மையில், வெஸ்லி மற்றும் அவரது நண்பர்கள் வாழ்ந்த தேவ பக்தியுள்ள வாழ்க்கையிலிருந்துதான் அந்த மெத்தடிஸ்டு சபை என்ற பெயர் வந்தது.

அவர் அமெரிக்காவுக்குத் திரும்ப சென்று கொண்டிருந்தபோது, கடலிலே ஒரு பெரிய புயல் வீசியது. அவர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்த சிறிய கப்பல் மூழ்கிபோகும் நிலையில் இருந்தது. பெரிய அலைகள் கப்பலின் தளத்தை உடைத்தன, மற்றும் பலத்த காற்று பாய்மரத்தை கிழித்தது. அந்த மணி நேரத்திலே, மரித்துப் போய்விடுவேன் என்று வெஸ்லி பயப்பட்டார். அவர் மரித்தால் அவருக்கு என்ன சம்பிக்கும் என்ற நிச்சயம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் நல்லவராக இருக்க எல்லா முயற்சிகள் செய்தாலும், அவருக்கு மரணம் ஒரு பெரிய, கருப்பான, பயம் நிறைந்த கேள்விக்குறியாக இருந்தது.

கப்பலின் மறுபக்கத்திலே ஒரு கூட்டம் மனிதர்கள் கீர்த்தனைகள் பாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் அவர் கேட்டார், “இந்த இரவிலே நீங்கள் மரிக்க போகிறீர்களே உங்களால் எப்படி பாடமுடிகிறது?” அவர்கள் சொன்னார்கள், “இந்தக் கப்பல் கீழே போனால், நாங்கள் கர்த்தரோடு எப்பொழுதும் இருக்க மேலே போவோம்.”

வெஸ்லி தனது தலையை அசைத்துக்கொண்டு வெளியே வந்தார், தனக்குள் நினைத்தார், “அவர்களுக்கு இது எப்படி தெரிய முடியும்? நான் செய்ததைவிட இவர்கள் அதிகமாக என்ன செய்தார்கள்?”. அதன்பிறகு தனக்குள் கேட்டார், “நான் புறஜாதி மக்களை மாற்ற வந்தேன். ஆனால் ஆ, என்னை யார் மாற்றுவது?”

தேவனுடைய திருவருளினால், அந்தக் கப்பல் திரும்ப இங்லாந்துக்குச் சென்றது. வெஸ்லி லண்டனுக்கு சென்றார் மற்றும் தனது வழியிலே ஆல்டர்ஸ்கேட் தெருவில் இருந்த ஒரு சிறிய கிறிஸ்தவ தொழுகை இடத்தைக் கண்டார். அங்கே ஒரு மனிதன் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் மார்ட்டின் லூதர் அவர்களால் எழுதப்பட்ட, “ரோமர் புத்தகத்தக்கு முன்னுரையாக லூத்தரால் எழுதப்பட்டதை” படித்துக்கொண்டிருந்தார். இந்தப் போதனை உண்மையான நம்பிக்கை என்றால் என்ன என்பதை விளக்கமாக சொன்னது. இது நமது சொந்த நற்கிரியைகளினால் இரட்சிப்பு அல்ல – கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி இருப்பதினால் மட்டுமே இரட்சிப்பு என்றது.

தனது வாழ்நாள் எல்லாம் தவறான சாலையிலே சென்றதாக வெஸ்லி உடனடியாக உணர்ந்தார். அந்த இரவிலே தனது பயணக் குறிப்பில் இதை எழுதினார்: “ஒன்பதுக்கு முன்னால் ஒரு கால் இருந்தபொழுது, கர்த்தராகிய கிறிஸ்துவின் மேலே உள்ள விசுவாசத்தின் மூலமாக இருந்த மாற்றத்தைத் தேவன் இருதயத்திலே கிரியைச் செய்கிறார் என்று விவரித்தபொழுது, எனது இருதயம் பலமாகச் சூடாக்கப்பட்டதை நான் உணர்ந்தேன். நான் கர்த்தராகிய கிறிஸ்துவை நம்ப வேண்டும், கர்த்தராகிய கிறிஸ்துவை மட்டுமே, இரட்சிப்புக்காக நம்ப வேண்டும் என்று உணர்ந்தேன்; மற்றும் அவர் என் பாவங்களை, என்னுடைய பாவத்தையும் எடுத்துப்போட்டார், மற்றும் பாவம் மரணம் என்னும் பிரமாணங்களிலிருந்து என்னை இரட்சித்தார்.”

இது அங்கே இருக்கிறது. இதுதான் இரட்சிப்பின் நம்பிக்கை. அவருடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பி, கர்த்தராகிய கிறிஸ்துவை மட்டுமே இரட்சிப்புக்காக நம்பினார். இப்பொழுது, இந்த இரவுக்கு முன்பாக வெஸ்லி கர்த்தராகிய கிறிஸ்துவை நம்பவில்லை என்று நீங்கள் சொல்லுவீர்களா? ஒருவேளை, அவர் நம்பியிருந்தார் என்று சொல்லலாம். அவர் ஒரு வேதவல்லுனராக இருந்தார் மற்றும் கிறிஸ்துவைப்பற்றி ஆங்கிலம், லத்தீன், கிரேக்க, மற்றும் எபிரெய மொழிகளில் படித்தார். இந்த மொழிகளிலெல்லாம் அவர் கர்த்தராகிய கிறிஸ்துவை நம்பினார். ஆனால் தனது இரட்சிப்புக்காக ஜான் வெஸ்லியை மட்டுமே நம்பியிருந்தார்.

இதற்குபிறகு, அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரசங்கியாக மாறினார். ஆனால் கர்த்தராகிய கிறிஸ்துவை மட்டுமே இரட்சிப்புக்காக நம்பி அவரை தமது கர்த்தராக ஏற்றுக்கொண்ட பிறகுதான் இவைகளெல்லாம் ஆரம்பித்தன. (டாக்டர் ஜேம்ஸ் கெனடி, சுவிசேஷஊழியம் வெடித்தல், நாலாவது பதிப்பு, டைன்டேல் ஹவுஸ் பப்லிசர்ஸ், 1996, ப. 183-184).

தத்துவ சாஸ்திரத்தின் ஒரு கிளை எபிஸ்டிமோலஜி ஆகும் அது – நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும் என்று கேள்வி கேட்டு அறியும் ஒரு சாஸ்திரமாகும்? தேவனைப்பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பதிலளிக்க இரண்டு வழிகள் உண்டு.

1. பகுத்தறிவு. இந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தி மனித வர்க்கத்தை சில வித்தியாசமான மற்றும் வேடிக்கையான மத பாதைகளில் நடத்துகிறார்கள்.

2. வெளிப்பாடு. இப்பொழுது, கிறிஸ்தவ சபை தேவன் தம்மை வேதாகமத்தின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்று எப்பொழுதும் சொல்லுகிறது, மற்றும் பிரதானமாக தமது குமாரன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதனால் இப்பொழுது கேள்வி என்னவென்றால் யார் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்கு வேண்டாம். கேள்வி என்பது, “வேதாகமத்தில் தேவன் தமது குமாரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக என்ன வெளிப்படுத்தி இருக்கிறார், அதாவது என்ன சொல்லி இருக்கிறார்?”

4. புறஜாதிகள் இழக்கப்பட்டவர்களா?

இப்படி சொல்லலாம், “இங்கே இப்பொழுது நாம் என்ன செய்கிறோம் என்பது ஒரு இறையியல் வாக்குவாதத்தைச் சீரமைப்பு செய்வதைவிட மிகப்பெரிய அவசரமானதாகும்.”

ஒருவேளை நீங்கள் சொல்லலாம், “பாப், அது ஒரு நல்ல கேள்விதான், ஆனால் புறஜாதியான ஆப்ரிக்கர்களை முடிவில்லாத மகத்துவமான மற்றும் அளவற்ற இரக்கம் நிறைந்த, தேவனுடைய கரங்களில் மெய்யாகவே நாம் விட்டுவிட முடியும். உனக்கு நிச்சயமாக நித்திய ஜீவன் இருக்கிறது என்று நீ இன்று அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒருபோதும் சத்தியத்தை கேட்காதவர்களைப்பற்றி தேவன் என்ன சொல்லுகிறார் என்று ஒருவேளை அதன்பிறகு பார்க்கலாம்... இந்தப் பிரச்சனை இந்தக் கேள்வியை சுற்றி சுழலுகிறது, ‘ஒருபோதும் கேள்விப்படாத ஒரு கிறிஸ்துவானவரை அவர்கள் நம்பாதபடியினால் தேவன் புறஜாதி மக்களை நரகத்துக்கு அனுப்புவாரா?’

ஏற்கனவே ஆக்கினை தீர்ப்புக்கு உட்பட்டவர்களை ஆக்கினை தீர்க்கும்படி கிறிஸ்துவானவர் வரவில்லை என்று வேதாகமம் போதிக்கிறது. மனிதர்கள் ஒரே ஒரு காரியத்துக்காக ஆக்கினை தீர்ப்பு அடைகிறார்கள் அது – அவர்களுடைய பாவங்கள்.”

5. மரணத்துக்கு பிறகு இருக்கும் வாழ்க்கையை நான் விசுவாசிப்பவில்லை.

(1) பிளாட்டோ. பழங்கால தத்துவ ஞானியான பிளாட்டோ காட்டினார் அதாவது ஒரு விதை இனிமையான கனியை கொடுக்கும் ஒரு மரமாக வேண்டுமானால் அது முதலாவதாக அழிவடையவும் மற்றும் சாகவும் வேண்டும். மனித சரீரம் மற்ற உலகத்துக்கு மற்றும் மற்றொரு வாழ்க்கைக்கு வெளிப்பட வேண்டுமானால் அதற்கு முன்பாக அந்தச் சரீரம் சாகவேண்டும் என்று பிளாட்டோ முடிவு செய்தார்.
     கர்த்தராகிய கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் பிளாட்டோ வாழ்ந்தார். இருந்தாலும் கர்த்தராகிய கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலனாகிய பவுலும் எடுத்துக்காட்டின அதே மரணத்துக்குப் பிறகு உள்ள வாழ்க்கையை அவர் போதித்திருந்தார் I கொரிந்தியர் 15:35-36 மற்றும் யோவான் 12:24.

(2) இம்மானுவேல் கான்ட் என்ற தத்துவ மேதை மனித வர்க்கம் அனைத்தும் சரி தவறு என்ற அக்கரையோடு நீதியின் கடமை என்ற உணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள், என்ற கொள்கையைக் கடைபிடித்தார். அவர் சொன்னார், “நீதி மேலோங்கவில்லையானால் சரியானதை ஏன் செய்ய வேண்டும்?” இதை வேறுவிதமாக சொன்னால், ஒரு கடமை உணர்வு அர்த்தம் நிறைந்ததற்கு அவர் விளக்கம் அளித்தார், அங்கே நீதி இருக்க வேண்டியது அவசியம் அதனால் நீதி மேலோங்கவில்லையானால் சரியானதை ஏன் செய்ய வேண்டும்? இந்த வாழ்க்கையில் நீதி மேலோங்கவில்லை ஆனால், அது மேலோங்கும் வேறு ஒரு இடம் இருக்க வேண்டியது அவசியம். இதை வேறுவிதமாக சொன்னால், மரணத்துக்குப் பிறகு உள்ள வாழ்க்கையை நீதி கோருகிறது. வேதாகமம் விவரிக்கிறதைப்போல இது காணப்படுகிறது எபிரெயர் 9:27.
     இவ்வாறாக அனுபவபூர்வமாக நாஸ்தீகராக இருந்த இம்மானுவேல் கான்ட்க்கு, மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை, மற்றும் வேதாகமத்தில் உள்ளதைப் போன்ற நியாதிபதியான தேவன் தேவையாக இருந்தது.

(3) ஐன்ஸ்டீன் மூலமாக, உண்டான வெப்ப விசை இயலின் முதல் விதியில் உள்ளது. ஆற்றல் மற்றும் கருபொருளை உருவாக்கவோ மற்றும் அழிக்கவோ முடியாது. மனிதன் உயிர் வாழாமல் முடிந்து போனால், இந்தப் பிரபஞ்சத்திலே அவன் மட்டுமே இருப்பான். வேதாகமம் I கொரிந்தியர் 15:49-51 கிறிஸ்தவனின் சரீரம் எப்படியாக நீடித்து இருக்கப்போகிறது என்பதை விவரிக்கிறது. இவ்வாறாக ஐன்ஸ்டீன் ஒரு நாஸ்தீகனாக இல்லை.

(4) மரிக்கும் மக்களின் கடைசி வார்த்தைகள்.
     கிப்போன் என்ற நாஸ்தீகன், தனது மரணப் படுக்கையில், இவ்வாறாக அழுதான், “எல்லாம் இருளாக இருக்கிறது” என்று. ஆடாம்ஸ் என்ற மற்றொரு நாஸ்தீகன் மரித்துக்கொண்டிருந்தபொழுது, “இந்த அறையிலே பிசாசுகள் இருக்கின்றன அவைகள் என்னை கீழே இழுக்க விரும்புகின்றன” என்று அலறினதை கேட்டார்கள்.
     இதற்கு மாறாக, கிறிஸ்தவ கீர்த்தனை எழுத்தாளரான டாப்லேடி என்பவர் சத்தமிட்டார், “எல்லாம் வெளிச்சம், வெளிச்சம், வெளிச்சமாகவே இருக்கிறது!” எவரிட் என்பவர், தான் மரிப்பதற்கு முன்பாக 25 நிமிடங்களாக, சொன்னார், “மகிமை, மகிமை, மகிமை” என்று. வரப்போகிறது என்ன என்று ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வாழ்க்கையைக் கடந்து போவதற்கு முன்பாக, அவர்கள் காணும்படி கொடுக்கப்பட்டது.

6. புத்துயிர் பெற்ற மக்களின் நினைவுகூறுதல்.

இந்த விஞ்ஞான உலகத்திலே கல்லறைக்குப் பின்னரும் வாழ்க்கை தொடர்கிறது என்று விசுவாசிக்கும்படியாக அநேக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளால் தற்காலத்திலே அநேக விஞ்ஞானிகள் கலங்கி இருக்கிறார்கள் என்று அறிந்திருக்க வேண்டியது விலையேறப்பெற்றதாகும். பிரபலமான விஞ்ஞானிகள் நரகம் அல்லது பரலோகத்தின் ஒரு முன்ருசியைக் கண்டிருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த அனுபவங்கள் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறதாக இருக்கிறது. ஆனால் அவை ஆர்வமுள்ள சாட்சிகளையும் கொடுக்கின்றன.

எலிசபத் குப்லர்-ரோஸ் ஒரு வெளிப்படையான கிறிஸ்தவராக இல்லை, ஆனால் அவளுடைய அறிக்கை இது, “மரணத்துக்குப்பிறகு வாழ்க்கை இருக்கிறது. இது இப்பொழுது ஆதாரங்களின் முடிவாக இருக்கிறது.” டாக்டர் குப்லர்-ரோஸ் சொன்னார் மரணத்துக்குச் சமீபமான இந்த அனுபவங்கள் விஞ்ஞான பூர்வமாக சரிபார்க்கப்பட்டது. “நாங்கள் இதைப்பற்றி பேச பயப்பட்டுக் கொண்டிருக் கிறோம்,” என்று அவர் சொன்னார்.

டாக்டர் ரெய்மண்டு மூடி சொன்னார், “மரணச் சமயத்தில் ஒரு வட்டம் அல்லது ஒரு வளையம் இருக்கிறது.” புத்துயிர் கொடுக்கும் அறையிலே எல்லா மருத்துவர்களும் பார்த்துக்கொண்டிருக்க மற்றும் அவர்களுடைய சரீரங்களிலிருந்து மிதந்து வெளிவருகின்றன. இவைகள் கொஞ்சமல்ல, ஆனால் உலக முழுவதிலும் இருந்து, ஐநூறுபேர் கணக்கெடுக்கெடுக்கப்பட்டார்கள். இந்த நபர்களில் ஒவ்வொருவரும் ஒரு சமய ஈடுபாடுடைய உருவத்தைக் கண்டதாக விபரமாக அறிவித்திருக்கிறார்கள். இது சிறப்பாக நாஸ்தீகர்களுக்கு உண்மையாக இருக்கிறது.

டாக்டர் குப்லர்-ரோஸ் சொன்னார் நூற்றுக்கணக்காண மருத்துவ டாக்டர்கள் அவள் சொல்லுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள், ‘‘நான் சொல்லுவது உண்டு, ‘மரணத்துக்கு பிறகு வாழ்க்கை இருக்கிறது என்று.’ ஆனால் இப்பொழுது நான் அதை அறிந்திருக்கிறேன்.”

ஒரு ஆயிரம் மருத்துவ தொழில் வல்லுனர்கள் மற்றும் அறிஞர்கள் எழுந்து நின்று இந்த டாக்டருடைய பேச்சின் முடிவுரைக்கு ஆரவார வரவேற்பு கொடுத்தார்கள்.

7. மறுபிறவியைபற்றிய காரியம் என்ன?

இது இந்து மற்றும் புத்த மதத்தின் நம்பிக்கையாகும், ஆனால் கிறிஸ்தவத்தின் நம்பிக்கை அல்ல! இதற்கு நான் பதிலளிக்கிறேன், “வேதாகமம் சொல்லுகிறது, ‘அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது’” (எபிரெயர் 9:27).

இந்த யோசனைகள் எல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிகாரமான பலியை மற்றும் பரிபூரண நீதியை அறியவில்லை. அவர் சிலுவையிலே அடைந்த அவரது மரணத்தின் மூலமாக, நமது பாவங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக, வெளியே எடுத்துப்போடுகிறார். அதனால் நாம் இயேசுவானவரை நம்பும்பொழுது, அவர் சிலுவையிலே சிந்தின இரத்தத்தின் மூலமாக சுத்திகரிக்கப்படுகிறோம்!

8. நரகம் உண்மை இல்லையா.

சில நேரங்களில் இதைச் சொல்லுவது உதவியாக இருக்கும், “உங்களுக்குத் தெரியும், நாம் மிகவும் தீவிரமாக பயப்படும் காரியங்களை மிகவம் உணர்ச்சி வயப்பட்டு மறுதலிப்போம் என்பது ஒரு உளவியல் சம்மந்தமான உண்மை என்பது. நீங்கள் நரகத்தை நம்பாத காரணம் உங்களது ஆத்துமாவின் ஆழத்தில் அப்படி நரகம் என்று ஒன்று இருந்தால் அங்கு நாம் போய்விடுவோமோ என்ற பயம் இருக்கிறது.” அடிக்கடி இதன் பதில், “நீங்கள் சொல்லுவது சரி என்று நான் யூகம் பண்ணுகிறேன்” என்பதுதான்.

ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பின் நிமித்தமாக, “நீங்கள் நரகத்தை நம்ப வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நீங்கள் நிச்சயமாக நரகத்துக்குப் போகமாட்டீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். சுவிசேஷம் என்பது அதைப்பற்றி எல்லாம் சொல்லுவதாகும். நான் நரகத்தை நம்புகிறேன், ஆனால் தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கும் காரணத்தால் நான் அங்கே போகமாட்டேன் என்று நான் அறிந்திருக்கிறேன் என்று சொல்வது சிறந்ததாகும். இப்படிச் சொல்வதற்குப் பதிலாக ‘நான் நரகம் என்ற ஒரு இடம் இருப்பதை நம்பவில்லை ஏனென்றால் நான் அங்கே போகமாட்டேன்.’”

9. இங்கே இந்தப் பூமியிலேயே நமது நரகம் இருக்கிறது.

நீங்கள் ஒருபகுதி சரியானது என்று, உங்களுக்குத் தெரியும். போதைபொருள்களுக்கு அடிமையானவர்கள் இந்தப் பூமியிலேயே நரக வாழ்க்கை வாழுகிறார்கள் என்று நான் அறிந்திருக்கிறேன். குடிகாரர்கள் குடிக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று நான் அறிந்திருக்கிறேன்.

பாஸ்டர் மாற்கு பக்லே சொல்லுகிறார் போதை பொருள்களை உபயோகிப்பவர்கள் மனநல மருத்துவமனைகளில் முடிவடைகிறார்கள். பாஸ்டர் பக்லே இயேசுவானவரை நம்பினதின் மூலமாக இந்தப் பூமியிலேயே நரக வாழ்க்கையிலிருந்து தப்பினார். இயேசுவானவர் ரெவரண்ட் பக்லேயை பூமியிலே நரக வாழ்க்கையாகிய – போதை பொருள்களுக்கு அடிமையான வாழ்க்கையிலிருந்து இரட்சித்தார். அவர் இயேசுவானவர் மூலமாக அற்புதமாக மாற்றப்பட்ட அவரது வாழ்க்கை – கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மாற்றும் இரட்சிப்பின் ஒரு பிரதியை நீங்கள் ஆர்டர் செய்ய முடியும். அமேசான் இணையதளத்துக்குச் சென்று மாற்கு புத்தகத்தை ஆர்டர் செய்யுங்கள். அதன் தலைப்பு, “இருளிலிருந்து ஒளிக்குள்: எனது பயணம்” என்று பெயரிடப்பட்ட பாஸ்டர் மாற்கு பக்லேயின் புத்தகமாகும். நீங்கள் முதல் சில பக்கங்களைப் படித்தால், நீங்கள் முழுபுத்தகத்தையும் படிப்பீர்கள். இரண்டுமுறை இதை நானே படித்திருக்கிறேன்.

நாங்கள் ஞாயிற்றுக்கிழமையை ஓய்வு நாளாக கடைபிடிப்பவர்கள் அல்ல, ஆனால் பாஸ்டர் பக்லே உடன் நாங்கள் ஒத்துப்போகிறோம், அவர் சொன்னார்,

“நாம் தேவனை நம்பி மற்றும் இளைப்பாறும்பொழுது, அவர் நமது நீண்ட ஓட்டத்தில் அதிக கனிதரும்படியாக செய்யும் உள்காட்சியை மற்றும் புரிந்து கொள்ளுதலை தருகிறார்... நான் ஆவிக்குரிய தர்க்க சாஸ்திரத்துக்காக வாதாடவில்லை. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும் படியாக ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறேன்” (From Darkness to Light: My Journey, Mark Buckley).

நமது கீர்த்தனை பாடலை எழுந்து நின்று பாடவும்!

ஓ எனது பெரிய மீட்பரின் துதிகளை பாட
     எனது தேவன் மற்றும் ராஜாவின் மகிமையை,
வெற்றி சிறந்த அவரது கிருபையைப் பாட,
     ஓராயிரம் நாவுகள் வேண்டும்.

என் கிருபையுள்ள எஜமானே மற்றும் என் தேவனே,
     உமது நாமத்தின் கனமகிமையை,
உலகமெல்லாம் தூரதேசங்களிலும்,
     அறிவிக்க எனக்கு உதவி செய்யும்.

இயேசு! என்ற நாமம் நமது பயங்களை நீக்கும்,
     இது நமது துக்கங்களை துரத்திவிடும்;
இது ஜீவனும் சுகமும் மற்றும் சமாதானமும் தரும்,
     இது பாவியின் காதுகளில் இனிய இசையாகும்.

அவர் மூடப்பட்ட பாவத்தின் வல்லமையை உடைக்கிறார்,
     அவர் கைதியை சிறையினின்று விடுவிக்கிறார்;
அவரது இரத்தம் பளபளப்பாக சுத்தமாக்கும்;
     அவரது இரத்தம் எனக்கு கிடைக்கும்.
(“ஓ ஓராயிரம் நாவுகள் வேண்டும்” சார்லஸ் வெஸ்லி, 1707-1788).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.