Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




ஜெயம் கொள்ளுபவராக மாறுவது எப்படி!

HOW TO BE AN OVERCOMER!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்,
போதகர் எமரிட்டஸ்
வாழ்க்கையை மாற்றும் பிரசங்கத்தைத் தழுவியது
திமோத்தி லின், Ph.D., எனது 24 வருட போதகர்
by Dr. R. L. Hymers, Jr.,
Pastor Emeritus
Adapted from a life-changing sermon
by Timothy Lin, Ph.D., my pastor for 24 years.

ஜுலை 26, 2020 கர்த்தருடைய நாள் பிற்பகல் வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Afternoon, July 26, 2020

போதனைக்கு முன்பாக பாடப்பட்ட கீர்த்தனை:
   “நான் ஒரு சிலுவையின் போர்வீரனாக இருக்கிறேனா?”
   (ஐசக் வாட்ஸ் 1674-1748, அவர்களால் எழுதப்பட்டது).

“வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக” (உன்னதப்பாட்டு 4:16).


எனது வாழ்க்கையிலே ஒருபோதும் கேள்விப்படாத மிக முக்கியமான போதனை இதுவாகும். நீங்கள் எனது சுயசரிதையை வாசித்தால் இந்தப் போதனை எனது வாழ்க்கையை ஏன் மாற்றிற்று என்று கண்டு கொள்ளமுடியும். டாக்டர் ராபர்ட் எல். சம்னார் சொன்னார், “சத்தியத்துக்காக நிற்க சித்தமுள்ள ஒரு மனிதனை நான் பாராட்டுவேன் மற்றும் விரும்புவேன் – வித்தியாசமான சகலமும் அவருக்கு விரோதமாக இருந்தபொழுது. ஆர். எல். ஹைமர்ஸ், ஜூனியர் அப்படிப்பட்ட ஒரு கிறிஸ்தவராக இருக்கிறார்” (தி ஆனர் வாஸ் ஆல் மைன்: ஜெயின்ட்ஸ் ஆப் த பெயித் வூஸ் பாத்ஸ் கிராஸ்டு மைன், பிப்லிகல் எவான்ஜிலிசம் பிரஸ் 2015, பக்கம் 103-105). இந்தோனேசியாவின் நமது மிஷனரிகளில் ஒருவர் சொன்னார், “டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் அநேக மரண யுத்தங்களை நடத்தி தப்பிப்பிழைத்த ஒரு தலைவராகும்.” ஜெயம்கொள்ளும் ஒருவனாக இருக்க என்னை ஊக்குவித்த இந்தப் போதனை டாக்டர் தீமோத்தேயு லின் அவர்களுடைய போதனையாகும். உங்கள் வாழ்க்கையையும் இந்தப் போதனை மாற்றும் என்று நான் நம்புகிறேன்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM
என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

டாக்டர் தீமோத்தேயு லின் அவர்கள் சொன்னார், “மனிதன் தற்செயலாக சிருஷ்டிக்கப்படவில்லை; தேவனுடைய சிருஷ்டிகள்மீது ஆளுகை செய்யும்படியாக அவன் சிருஷ்டிக்கப்பட்டான்... யோசேப்பின் வாழ்க்கை எதிர் காலத்தில் உள்ள ஆளுகைக்கு [வரப்போகும் கிறிஸ்துவின் இராஜ்யத்தில்] விசுவாசிகளை ஆயத்தப்படுத்துவதை வெளிப்படுத்துகிறது.”

யோசேப்பு எகிப்தின் அதிபதியாக மாறுவதற்கு முன்பாக, தேவன் அவனை ஜெயம்கொள்ளும் ஒருவனாக மாற்ற மற்றும் அவனுடைய வாழ்க்கையின் முடிவு வரையிலும் தேவனுடைய வார்த்தையை [அவன்] காத்துக்கொள்ளும் மனிதனாக மாற்ற அவனை ஒரு நீளமான கடினப் பாதையில் நடத்தி ஆயத்தப்படுத்தினார். யோசேப்பு செய்த பெரிய காரியங்கள் எகிப்துக்கு மட்டும் தொடர்புடையது அல்ல, ஆனால் அது இஸ்ரவேலுக்கும், காலமுழுவதிலும் உள்ள தேவனுடைய சபைக்கும் தொடர்புடையதாகும். யோசேப்பின் ஆளுகை இல்லாமல் இருந்தால், வல்லமைமிக்க எகிப்தியர் பட்டினியால் செத்தது மட்டுமல்ல, ஆனால் இஸ்ரவேல் தேசமும்கூட அழிந்து போயிருக்கும், மற்றும் ஆதியாகமத்தில் உள்ள தேவனுடைய மீட்பின் வெளிப்பாடு முழுமை பெற்றிருக்க முடியாது.

யோசேப்பின் ஆவிக்குரிய வாழ்க்கையைக்கட்ட தேவன் எடுத்த அடிச்சுவடுகளை உன்னதப்பாட்டு 4:16ன் வெளிச்சத்திலே நாம் தியானம் செய்யலாம்.

“வாடையே! எழும்பு, தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக” (உன்னதப்பாட்டு 4:16).

யோசேப்பின் ஆவிக்குரிய வாழ்க்கையைக் கவனமாக ஆராய்ச்சி செய்வதன் மூலமாக, தேவன் எப்படியாக வாடையை வடக்காற்றை மற்றும் தென்றலை தென்காற்றை மாறிமாறி அவன்மீது வீசச்செய்து அவனுடைய குணாதிசயங்களின் வாசனை திரவியங்களை எப்படியாக தானாக வெளியே கொண்டு வந்தார் என்பதை நாம் பார்க்க முடியும். அவனுடைய குணாதிசயங்களைத் தேவன் பாடுகளின் மூலமாக, அவனுடைய சரீரத்திலே அவன் கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பின் மூலமாக, அவனுக்குக் காட்டப்பட்ட இரக்கமில்லாத நிலைமைகளில் அவனது தாழ்மையின் மூலமாக, அநீதி மற்றும் நன்றி இல்லாத தன்மையினால் அவன் நெருக்கப்பட்டதன் மூலமாக, அவனது மனம் உழப்பட்டுப் பக்குவப்பட்டது, அவனது உணர்வுதிறன் நிலை படுத்தப்பட்டது, தன்னிச்சையாக செயலாற்றும் திறன் பலப்படுத்தப்பட்டது, அவனது நம்பிக்கை மற்றும் குணாதிசயங்கள் முன்னேற்றம் அடைந்தன, மற்றும் கர்த்தர்மீது இருந்த அவனது நம்பிக்கை அதிகமாக வளர்ந்தது. வாடையை வடக்காற்றை மற்றும் தென்றலை தென்காற்றை மாறிமாறி அவன்மீது வீசசெய்த தேவனுடைய செயலை யோசேப்பின் வாழ்க்கையில் தெளிவாக காணமுடியும்.

தென்றல் தென்காற்று – பெற்றோரின் பாசத்தை பெற்று அனுபவித்தல்

ஆதியாகமம் 37:1-4க்கு தயவுசெய்து திருப்பிக்கொள்ளுங்கள்.

“யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான். யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான். இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான். அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்” (ஆதியாகமம் 37:1-4).

டாக்டர் லின் சொன்னார், “ஒரு பிள்ளையின் எதிர்கால குணாதிசயங்களைக் கட்டுவதில் பெற்றோரின் பாசத்துக்கு ஏராளமான பங்கு இருக்கிறது...”

“அன்பு மற்றும் தீமைக்கு உள்ள வித்தியாசங்களை யோசேப்பு அறிந்திருந்தான்... அன்பு மற்றும் சத்தியம் இரண்டும் வேறுபட்ட கருத்துப்படிவங்களாகும், ஆனால் அன்பு மற்றும் தீமைக்கு இது பொருந்தாது, அவைகள் இரண்டும் வித்தியாசமான மூலக்கூறுகள் ஆகும். தீமையைவிட்டு விலகாமல் இருப்பது அன்பு அல்ல, அது கோழைத்தனம்... ஒரு மனிதனுடைய நோக்கம் சுயநலமுள்ளதாக இருக்கும் வரையிலும், தீமையை வெளிப்படுத்துதல் ஒரு உயர்ந்த செயலாக மற்றும் உற்சாகப்படுத்துவதாக இருக்கும்... யோசேப்பின் இரண்டு கனவுகளின் விளக்கங்கள் அவனுடைய சகோதரர்களின் கர்வத்தைக் காயப்படுத்தியது மற்றும் அவர்களின் பொறாமையைக் கிளறிவிட்டது; இருந்தாலும் யோசேப்பு இன்னும் தனது சகோதரர்களை நேசித்தான் மற்றும் தனது தகப்பனுக்குக் கீழ்ப்படிகிற ஒரு மகனாக இருந்தான்.”

நான் எனக்குள்ளே அப்பாவின் அன்பு இல்லாதவனாக இருந்தேன், ஆனால் எனது அம்மாவின் அன்பு மற்றும் அங்கிகாரம் என் அப்பாமீது கசப்புக் கொள்ளாதபடி என்னைக் காத்துக்கொண்டது. எனது அம்மா பரிபூரணத்துக்கு வெகுதூரமாக இருந்தார்கள், ஆனால் “அவர்கள் எனது இளம் வயதில் நான் பார்த்த எல்லாரையும்விட மிகவும் அன்பாக, இனிமையானவராக, சாமார்த்தியமுள்ளவராக இருந்தார்கள். புத்தகங்களை நேசிக்கவும், கார் ஓட்டவும், மற்றும் மிகமுக்கியமாக நான் தனியாக இருக்க வேண்டியதாக இருந்தாலும், என்ன தேவையோ அதைச்சொல்லவும் அதற்காக நிற்கவும் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள்” (எனது சுயசரிதை ப. 16). இவ்வாறாக, எனது தாயார் எப்பொழுதும் எனது சார்பாளராக மற்றும் பரிந்து பேசுகிறவராக இருந்தார். எனது அம்மா எனக்கு சொன்ன கடைசி வார்த்தைகள், “ராபர்ட், நான் உன்னை நேசிக்கிறேன்” (ப.181). எனது அம்மா கடைசியாக 80 வயதில் இரட்சிக்கப்பட்டபொழுது, அது எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய காரியமாக இருந்தது.

வாடைகாற்று வடக்கு காற்று – அடிமையாக விற்கப்பட்டது – ஆதியாகமம் 37:18-36

தயவுசெய்து ஆதியாகமம் 37:23-28க்கு திருப்பிக்கொள்ளுங்கள் இதை நான் வாசிக்கும்போது எழுந்து நில்லுங்கள்.

“யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி, அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள். அது தண்ணீரில்லாத வெறுங்குழியா யிருந்தது. பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள். அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள். அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள் நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும், நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள். அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்து போகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு போனார்கள்” (ஆதியாகமம் 37:23-28).

நீங்கள் அமரலாம்.

டாக்டர் லின் சொன்னார், “உண்மையாக இருத்தல், கீழ்ப்படிதல், பொறுமை, நம்பகத்தன்மை, ஊக்கமுடைமை, கவனமுடைமை, மற்றும் ஞானம் போன்றவற்றை எளிமையான வாழ்க்கையின் மூலமாக பெற்றுக்கொள்ள முடியாது, ஆனால் கஷ்டங்களை மற்றும் தடைகளைச் சகித்து முன்னேறி வருவதன் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். யோசேப்பு வீட்டிலேயே இருந்திருந்தால் [ஒரு வெற்றி வீரனாக] ஒருபோதும் முழுமையாக நிரப்பப்பட்டிருக்க முடியாது. அவனை 20 வெள்ளிகாசுக்கு விற்றுப்போட்டது அநேகரை மனநோயுக்கு உட்படுத்தி இருக்கும். ஆனால் யோசேப்பு தனது இரண்டு கனவுகளையும் தேவன் இந்தச் சூழ்நிலைகள் மூலமாக எப்படி நிறைவேற்றப்போகிறார் என்று ஆச்சரியப்பட்டான், மற்றும் தன் சகோதரர்களை அவன் குற்றம் சொல்லவும் மற்றும் சபிக்கவும் இல்லை.”

தென்றல் தென்காற்று – நம்பிக்கையை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் உயர்த்தப்படுதல் – ஆதியாகமம் 39: 1- 6

ஆதியாகமம் 39:1-6க்கு தயவுசெய்து திருப்பிக்கொள்ளுங்கள்.

“யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான். கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவ னானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு; யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனை தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனு மாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான் அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்கார னாக்கினதுமுதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார். வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது. ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்” (ஆதியாகமம் 39:1- 6).

மேலே பாருங்கள்.

போத்திபார் என்ற பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய ஒருவனிடத்தில் யோசேப்பு விற்கப்பட்டான். குற்றம் சொல்லுவதற்குப் பதிலாக யோசேப்பு தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்றினான் மற்றும் வேலைக்குப் போனான். அவன் தனது எஜமானாகிய போத்திபாரின், நம்பிக்கையை வெற்றி கொண்டான், மற்றும் வெற்றியின் குணாதிசயங்கள் நிறைந்த ஒரு மனிதனாக மாறினான். ஆனால் யோசேப்புக்கு இன்னும் பயிற்சி தேவையாக இருந்தது. அதனால் தேவன் அவனை அவமானப்படுத்த அனுமதித்தார்.

வாடைகாற்று வடக்கு காற்று – சோதனை மற்றும் அநீதியை சந்தித்தல் –
ஆதியாகமம் 39:7-20

இப்பொழுது ஆதியாகமம் 39:1-18ஐ நான் வாசிக்கும்போது எழுந்து நில்லுங்கள். டாக்டர் லின் சொன்னார், “அநேக இளம் மக்களுடைய வாழ்க்கையிலே வடக்குக் காற்று வீசும்போது, அது துக்ககரமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள்... ஆனால் அப்படிப்பட்ட கஷ்டங்கள் அடிக்கடி தேவனுடைய கிருபையின் வெளிப்பாடாக இருக்கும். எரேமியா சொன்னார், ‘தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது’ (புலம்பல் 3:27). கஷ்டமில்லாத இலகுவான ஒரு வாழ்க்கை ஒரு இளம் நபரை அழித்து விடமுடியும். ஆனால் தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது ஒரு உயர்ந்த பதவியை அடைவதற்கு ஒரு படிக்கல்லாக அவனுக்கு இருக்கும்.”

“யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேல ரிடத்தில் விலைக்கு வாங்கினான். கர்த்தர் யோசேப் போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான். அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப் பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு, யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனு மாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்கார னாக்கினது முதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது. ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனா யிருந்தான். சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார். இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை. நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை, இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை. இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை. அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான். அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனுஷன் நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன். நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள். அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து, அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான். அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள்” (ஆதியாகமம் 39:1-18).

நீங்கள் அமரலாம்.

ஒருநாள் யோசேப்பு தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனபொழுது, போத்திபாரின் மனைவி யோசேப்புனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து என்னோடே சயனி என்றாள். ஆனால் யோசேப்பு தன்னை விடுவித்துக்கொண்டு, தன் வஸ்திரத்தை அவளிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான்.

இந்தச் சோதனை மற்ற இளம் மனிதருக்கு எதிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம், ஆனால் யோசேப்பு அதை ஜெயித்தான். அவன் அதை விட்டு விரைவாக வெளியே வந்ததன் மூலமாக அதை விரைவாக ஜெயித்தான். சில சோதனைகளை எதிர்கொண்டு வெற்றிகொள்ள முடியும், ஆனால் பாலுறவு மற்றும் மாம்ச இச்சை தொடர்பான சோதனைகளுக்கு அவைகளைவிட்டு ஓடுவதன் மூலமாக மட்டுமே வெற்றிகொள்ள முடியும் (II தீமோத்தேயு 2:22 சொல்லுகிறது, “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு”). யோசேப்புக்கு வெற்றி கிடைத்த காரணம் – தேவனுக்கு – உண்மையாக இருந்தது, தன்மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்த போத்திபாருக்கு உண்மையாக இருந்தது, மற்றும் தன்னை, தீட்டுப்படுத்தாமல் பரிசுத்தமாக காத்துக்கொண்டது. அந்தப் பொல்லாத பெண்ணின் ஆசை இச்சைக்கு இணங்குவதைவிட தேவன் நிமித்தமாக சிறைக்குப் போனான். போத்திபாரின் நிமித்தமாக தனது எஜமானின் மனைவி மரியாதை இழுக்கு அடையாதபடி, தன்சார்பாக வழக்காட அவன் நிற்கவில்லை. அதனால் அவன் அமைதியாக இருந்தான். போத்திபார் திரும்ப வீட்டுக்கு வந்தபொழுது, தன்னுடைய மனைவியின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு, யோசேப்பை சிறையில் போட்டான்.

தென்றல் தென்காற்று – பதவி மற்றும் நட்புறவை பெற்றுக்கொள்ளுதல் –
ஆதியாகமம் 39:21-40:22

ஆதியாகமம் 39:19-22க்கு தயவுசெய்து திருப்பிக்கொள்ளுங்கள். நான் இதை வாசிக்கும்போது எழுந்து நில்லுங்கள்.

“உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது. யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான். அங்கே அவர்கள் செய்வதெல்லா வற்றையும் யோசேப்பு செய்வித்தான்” (ஆதியாகமம் 39:19-22).

நீங்கள் அமரலாம்.

யோசேப்பின் சரீரபிரகாரமான சுற்றுப்புறச் சூழல் மோசமாக மாறினாலும், அவனுடைய ஆவிக்குரிய சூழ்நிலை மாறவில்லை. மற்றும் தேவனுடைய பிரசன்னம் அவனுக்கு சிறையிலும் ஆசீர்வாதமாக தொடர்ந்து இருந்தது.

யோசேப்பு சிறையிலும் நட்புள்ள ஒரு சுற்றுப்புறச் சூழலை உருவாக்க முடிந்தது. பார்வோனின் பானபாத்திரக்காரன் மற்றும் சுயம்பாகியும், அந்தச் சிறையில் இருந்தார்கள், அவர்கள் கனவு கண்டு கலங்கி இருந்தார்கள். அந்தக் கனவுகளுக்கு அர்த்தத்தை சொல்ல ஒருவருமில்லை. யோசேப்பின் மனதிலே தேவன் எதையும் செய்ய முடிந்தது. அவன் அந்த பானபாத்திரக்காரன் மற்றும் சுயம்பாகியின் கனவுகளுக்கு அர்த்தத்தை சொன்னான். மூன்று நாட்களுக்குப் பிறகு இரண்டு கனவுகளின் அர்த்தங்களும் அவன் சொன்னபடியே நிறைவேறியது. மூன்று நாட்களுக்குப் பிறகு பானபாத்திரக்காரன் மறுபடியும் வேலையில் சேர்க்கப்பட்டான், மற்றும் சுயம்பாகி தூக்கிலிடப்பட்டான். இது யோசேப்புக்குச் சிறையிலும் தென்றல் தென்காற்று வீசியதற்கு ஒப்பாகும்.

வாடைகாற்று வடக்கு காற்று – நன்றிஅற்ற மற்றும் தாமதத்தை சகித்தல் –
ஆதியாகமம் 40:23

ஆதியாகமம் 40:23ஐ பாருங்கள்

“ஆனாலும் பானபத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்து விட்டான்” (ஆதியாகமம் 40:23).

யோசேப்பின் சிறை வாசம் இன்னும் இரண்டு நீண்ட ஆண்டுகள் தொடர்ந்தது நிச்சயமாகவே இது அவனுக்கு ஒரு தீவிரமான வாடைகாற்றுதான் வடக்கு காற்று. “ஆனாலும் பானபத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்து விட்டான்” (ஆதியாகமம் 40:23). இது அந்தப் பானபத்திரக்காரரின் தலைவரின் நன்றியற்ற குணத்தைக் காட்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை உலகத்தை அதன் நன்றியற்றதனத்தை வெறுக்க செய்யும், ஆனால் யோசேப்பு அப்படி அல்ல. அவன் தேவன் வேலை செய்ய வேண்டும் என்று காத்திருக்கும் தெய்வீகத்தைக் கற்றிருந்தான். தேவன் அவனது சிறையிருப்பின் நேரத்தை நீட்டிக்க செய்து தேவன் வேலை செய்ய வேண்டும் என்று காத்திருக்க வேண்டும் என்ற யோசேப்பின் பொறுமையை அதிகரிக்க செய்தார், மற்றும் தேவனுடைய உண்மையின்மேல் உள்ள நம்பிக்கையை ஆழப்படுத்தினார். தேவனுடைய தாமதம் அவருடைய ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு அவருடைய அதிகபடியான கிருபையின் அடையாளமாகும். அதன்பிறகு தாவீது சொன்னார், “கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு” (சங்கீதம் 27:14).

தென்றல் தென்காற்று – ஒரு ராஜாவைபோல ஆளுகை செய்தல் –
ஆதியாகமம் 47:12-31

ஆதியாகமம் 47:12-17ஐ நான் வாசிக்கும்போது எழுந்து நில்லுங்கள்.

“யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான். பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது, தேசமெங்கும் ஆகாரம் கிடையாமற்போயிற்று; எகிப்து தேசமும் கானான் தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. யோசேப்பு எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான். எகிப்து தேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்த போது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பினிடத்தில் வந்து: எங்களுக்கு ஆகாரம் தாரும், பணம் இல்லை, அதினால் நாங்கள் உமது சமூகத்தில் சாகவேண்டுமோ என்றார்கள். அதற்கு யோசேப்பு: உங்களிடத்தில் பணம் இல்லாமற் போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள், அவைகளுக்குப் பதிலாக உங்களுக்கு தானியம் கொடுக்கிறேன் என்றான். அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டு வந்தார்கள் யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருஷம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான்” (ஆதியாகமம் 47:12-17).

நீங்கள் அமரலாம்.

டாக்டர் லின் சொன்னார், “எந்தச் சிட்சையும் அதை ஏற்றுக்கொள்ளும்போது சந்தோஷமாய்க் காணாமல்; வேதனையுள்ளதாக மற்றும் மகிழ்ச்சியற்றதாகக் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” எபிரெயர் 12:11க்கு திருப்பிக்கொள்ளுங்கள்,

“எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு [வளரும்போது] அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” (எபிரெயர் 12:11).

மேலே பாருங்கள்.

அந்த இரண்டு ஆண்டுகளின் முடிவிலே, தேவன் பார்வோனுக்கு ஒரு கனவைக் கொடுத்தார் அப்பொழுது பானபாத்திரக்காரன் தனது கனவுக்கு யோசேப்பு விளக்கம் கொடுத்ததை நினைத்தான். யோசேப்பை அழைத்துக் கனவின் விளக்கத்தைக் கேட்கும்படி பானபாத்திரக்காரன் பார்வோனுக்குச் சொன்னான்! அந்தக் கனவுக்கு அர்த்தம் ஏழு வருட செழுமையான வருடங்கள் முடிந்த பிறகு ஏழு வருட பஞ்சமுள்ள வருடங்கள் வரும். அதற்கான திட்டத்தைச் செயல்படுத்தும்படியும் மற்றும் ஏழு வருட பஞ்சமுள்ள வருடங்களுக்காக ஆயத்தப்படுத்தும்படியும், பார்வோன் யோசேப்பை நியமித்தான். இந்த வேலையைச் செய்ய யோசேப்புக்கு தெய்வீக சக்தி இருப்பதைப் பார்வோன் கண்டான். இவ்வாறாக யோசேப்பு எகிப்து தேசம் முழுமைக்கும் ஒரு அதிபதியாக நியமிக்கப்பட்டான் (41:38-43). யோசேப்பு ஞானமுள்ள மற்றும் இரக்கமுள்ள ஒரு அதிபதியாக எகிப்து தேசம் முழுவதையும் ஆளுகை செய்தான் – மற்றும் தனது சகோதரர்களை ஒழுங்கு படுத்தினான் மற்றும் அன்பு பாராட்டினான். இறுதியாக யோசேப்பு தனது சகோதரர்களுக்கு மேலாக கனப்படுத்தப்பட்டான் (49:26).

டாக்டர் லின் சொன்னார், “ஒரு பூமிக்குரிய ராஜ்யத்தை நடத்தும்படி தேவன் யோசேப்புக்கு பயிற்சி கொடுத்ததுபோல, தேவன் ஜெயங்கொள்ளுபவர்களை வரப்போகும் தமது ராஜ்யத்தின்மீது அதிகாரிகளாக்க பயிற்சி கொடுக்கிறார். இரட்சிப்பு நிபந்தனை அற்றதாக இருக்கிறது, அதிலே எந்த வேலையும் இடம்பெறவில்லை. ஆனால் கிறிஸ்துவோடு அவருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்வது என்பது நிபந்தனை உள்ளதாக இருக்கிறது.” வேதாகமம் சொல்லுகிறது,

“அவரோடேகூடப் பாடுகளைச் [துன்பத்தை] சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” (II தீமோத்தேயு 2:12).

பாஸ்டர் ரிச்சார்டு உம்ராண்டு ஒரு கம்யுனிச சிறையில் 14 வருடங்கள் பாடுபட்டார். பாஸ்டர் ரிச்சார்டு உம்ராண்டு சொன்னார், “பாடுகள் மற்றும் உள்ளான போராட்டங்களின் ஊடாக சென்று உண்மையாக இருந்து அவைகளினால் மேன்மை அடையாமல் வெளியே வந்த ஒரு கிறிஸ்தவனை நான் அறியவில்லை” (“சிறையின் சுவர்கள் பேசக்கூடுமானால்” முன்னுரையில்).

மறுபடியுமாக, பாஸ்டர் ரிச்சார்டு உம்ராண்டு சொன்னார், “எனது சகோதர சகோதரிகளே, உங்கள் வாழ்க்கை தேவனுடைய கரத்திலே உள்ள களிமண்ணைபோல இருக்கிறது. அவர் ஒருபோதும் தவறுகள் செய்யமாட்டார். உங்களுக்குக் கடினமான நேரங்கள் வரும்போது... தேவனை நம்புங்கள். அவர் உன்னை செதுக்குகிறார் என்ற செய்தியை நீ கண்டுகொள்ளுவாய். ஆமென்.” (ப. 16).

நீ யோசேப்பைபோல ஒரு ஜெயங்கொள்ளுகிறவனாக மாறினால், தேவனிடம் உனக்கு ஒரு வாக்குத்தத்தம் உள்ளது. வெளிப்படுத்தல் 2:26க்கு திருப்புங்கள்.

“ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பேன்” (வெளிப்படுத்தல் 2:26).

நன்றி, டாக்டர் தீமோத்தேயு லின் அவர்களே, உமது பெரிய போதனையில் நாங்கள் கேட்டுக் கற்றுகொண்டதற்காக. அன்பான பாஸ்டர் அவர்களே, இது எனது வாழ்க்கையை மாற்றிவிட்டது. எனது வாழ்க்கையில் நான் இந்தப் போதனைக்குக் கடன்பட்டிருக்கிறேன்!

தயவுசெய்து எழுந்து நின்று நமது இன்றைய கீர்த்தனையைப் பாடுங்கள், “நான் ஒரு சிலுவையின் போர்வீரனாக இருக்கிறேனா?”

சிலுவையின் ஒரு போர்சேவகனாக,
ஆட்டுக்குட்டியானவரை பின்பற்றுபவனாக நான் இருக்கிறேனா;
அல்லது இயேசுவுக்கு சொந்தமாக இருக்க,
அவரது நாமத்தை சொல்ல நாணமடைகிறேனா?

மலர் படுக்கைகளிலே வானங்களில் நான்
சுகமாக சுமக்கப்பட விரும்புவேனா,
மற்றவர்கள் பரிசு பொருளை வெல்ல போராடி,
இரத்தக்கடலில் பிரயாணம் செய்யும்பொழுது?

எனக்கு எந்த எதிரிகளும் இல்லையோ?
எதிர் வெள்ளத்தில் தண்டு வலிக்க வேண்டாமோ?
இந்த இழிவான உலகம் கிருபைக்கு தோழனோ,
தேவனிடம்போக எனக்கு உதவி செய்யுமொ?

நான் ஆளுகை செய்ய வேண்டுமானால்,
நிச்சயமாக நான் போராட வேண்டும்;
கர்த்தாவே, என் தைரியத்தை அதிக படுத்தும்!
உமது வார்த்தையின்படி எனக்கு வரும்,
கஷ்டத்தை நான் தாங்குவேன், வலியை சகிப்பேன்.
(“சிலுவையின் ஒரு போர்சேவகனாக நான் இருக்கிறேனா?” டாக்டர் ஐசக் வாட்ஸ், 1674-1748).

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

நீ இன்னும் இரட்சிக்கப்படவில்லையானால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீ நம்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உன்னுடைய பாவங்களுக்குரிய தண்டனை கிரயத்தைக் கொடுக்க அவர் பரலோகத்திலிருந்து கீழேவந்து சிலுவையிலே மரித்தார். கர்த்தராகிய இயேசுவை நீ நம்பும் தருணத்திலே, அவருடைய இரத்தம் உனது பாவங்களை எல்லாம் சுத்தம் செய்யும். கர்த்தராகிய இயேசுவை நீ நம்ப வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.