Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
யோனா – எழுப்புதல் தீர்க்கதரிசி!

JONAH – THE PROPHET OF REVIVAL!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்,
போதகர் எமரிட்டஸ்
by Dr. R. L. Hymers, Jr.,
Pastor Emeritus

ஜுன் 14, 2020 கர்த்தருடைய நாள் பிற்பகல் வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Afternoon, June 14, 2020

“அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்” (யோனா 1:1, 2).


யோனாவின் புத்தகத்தை யோனா தீர்க்கதரிசி எழுத வேண்டியிருந்தது. நான் அதை ஏன் சொல்கிறேன் என்றால் அது யோனாவின் எண்ணங்கள் மற்றும் ஜெபங்களை வெளிப்படுத்துகிறது, அது வேறுயாருக்கும் தெரியாது யோனாவுக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும். யோனா ஒரு சரித்திர ஆசிரியர் என்பதை II ராஜாக்கள் 14:24-25ல் அந்தப் பழைய ரபீகள் அவரை, “காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா” (II ராஜாக்கள் 14:25) என்று குறிப்பிட்டு இருப்பதைப் பார்க்கிறோம். யோனா ஒரு மெய்யான சரித்திரபூர்வமான தீர்க்கதரிசி என்பதைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தாமே சொல்லி இருக்கிறார். தயவுசெய்து மத்தேயு 12:39-41க்கு திருப்பிக் கொள்ளுங்கள். யோனாவைப்பற்றி இயேசுவானவர் என்ன சொன்னார் என்பதை நான் வாசிக்கும்போது எழுந்து நிற்கவும்.

“அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவ தில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்” (மத்தேயு 12:39-41).

அப்படியே நின்று கொண்டு லூக்கா 11:29-30க்கு திருப்பிக்கொள்ளுங்கள்.

“ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமா யிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார்” (லூக்கா 11:29-30).

நீங்கள் அமரலாம்.

அதனால் II ராஜாக்கள் 14:25 யோனாவின் சரித்திரபூர்வமான தகவலைக் கொடுக்கிறது. மற்றும் லூக்கா 11:29-30ல் யோனாவை ஒரு அடையாளமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குறிப்பிட்டிருப்பதைச் சொல்லுகிறது. மற்றும் மத்தேயு 12:39-41 யோனாவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்துவினுடைய சொந்த அடக்கத்துக்கு ஒரு அடையாளமாகும் மற்றும் அவர் அடக்கம் பண்ணப்பட்டபிறகு மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததைப்பற்றி சொல்லுகிறது. இவ்வாறாக, யோனா ஒரு உண்மையான நபராக பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது, மற்றும் யோனாவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் கிறிஸ்துவானவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு ஒரு தீர்க்க தரிசனமாக இருந்தது என்று கிறிஸ்துவானவர் தாமே நமக்குச் சொல்லுகிறார். சர் வின்ஸ்டன் சர்ச்சில் நன்றாக சொன்னார், “பேராசிரியர் கிராடுகிரின்டு மற்றும் டாக்டர் டரையாஸ்டஸ்டின் பருமனான புத்தகங்கள் மூலமாக [தாராளவாத] நாம் உணர்த்தப்படாமல் இருக்கிறோம். இந்தக் காரியங்கள் எல்லாம் பரிசுத்த சாசனத்தின்படி [வேதாகமம்] நடந்தது என்று நாம் நிச்சயமாக இருக்கலாம்.” (மேற்கோள் காட்டியது டாக்டர் ஜே. வெர்னான் மெக்ஜீ, Thru the Bible, IIIவது தொகுப்பில், யோனாவின் குறிப்பு, முன்னுரை, ப. 738).

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM
என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

I. முதலாவது, யோனாவின் அழைப்பு.

“அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி…” (யோனா 1:1, 2).

3ம் வசனம்,

“அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து…” (யோனா 1:3).

இந்த யோனா என்ற மனிதனை நான் புரிந்து கொண்டேன். அதனால்தான் பழைய ஏற்பாட்டில் இந்த யோனாவின் சிறிய புத்தகம் என்னுடைய விருப்பமான புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது. யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடினார். நான் அதை செய்யவில்லை. நான் ஒரு மிஷனரியாக இருக்க அழைக்கப்பட்டேன் மற்றும் அதை அறிந்திருந்தேன். ஆனால் நான் கல்லூரியில் பட்டம் பெறமுடியாதபடி ஒரு ஏழை மாணவனாக இருந்தேன் என்பதை அறிந்திருந்தேன். நான் ஒரு சதர்ன் பாப்டிஸ்டு மிஷனரியாக மாறுவதற்காக ஒரு கல்லூரி மற்றும் செமினரியில் படிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் நான் ஒருவிதத்தில் யோனாவைபோல உணர்ந்தேன். நான் அழைக்கப்பட்டேன் என்பதை அறிந்திருந்தேன், ஆனால் நான் கல்லூரியில் தோல்வி அடைவேன் என்ற பயத்தில் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓட முயற்சி செய்தேன். முடியாத கடினமான சில காரியங்களைச் செய்யும்படி தேவன் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒரு இளம் செமினரி மாணவன் என்னிடம் சொன்னான், “நான் ஊழியத்துக்குள் போகமுடியாது ஏனென்றால் நான் நசுக்கப்பட்டு மற்றும் எரிக்கப்படுவேன் என்று எனக்குத் தெரியும்.” அவன் ஊழியத்தில் தோல்வி அடைவான் என்று பயந்தான். நான் அதைப்பற்றி நினைத்தேன். அதன்பிறகு நான் சொன்னேன், “நான் ஏற்கனவே அநேக நேரங்களாக நசுக்கப்பட்டேன் மற்றும் எரிக்கப்பட்டேன் அதனால் அதற்காக இனிமேல் நான் பயப்படமாட்டேன்.”

தேவனால் அழைக்கப்பட்ட ஒரு மனிதனை ஊழியத்திலிருந்து விலக செய்வது பயம் ஆகும். ஒரு வழியிலோ அல்லது மற்ற வழியிலோ பயம் எப்பொழுதும் நமக்கு இருக்கும். இந்தக் குறிப்பிட்ட இளம் மனிதன் தான் செய்த எல்லாவற்றிலும் வெற்றிபெற்றவன் – ஆனால் அவன் ஊழியத்தில் தோல்வி அடைவேன் என்று பயந்தான். அவனைப்பற்றி அவனுடைய தம்பி சொன்னான், “என் சகோதரனால் எதையும் செய்ய முடியும்.” ஆனால் “நசுக்கப்படுதல் மற்றும் எரிக்கப்படுதல்” என்ற பயத்தை உடைத்து விடுதலையாக அவனால் முடியவில்லை. அவன் ஆறு அடி உயரம், ஒரு நேரான “முதல்” மாணவனாக, மற்றும் ஒரு வரம்பெற்ற பிரசங்கியாக இருந்தான். அவன் பயந்ததின் காரணத்தினால் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடினான்!

இப்பொழுதும், இளம் மக்களே, என் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட சிலவற்றை உங்களுக்குச் சொல்லுகிறேன், “நீ செய்ய வேண்டும் என்று தேவன் அழைத்த எந்தக் காரியத்தையும் உன்னால் செய்ய முடியும் – எந்தக் காரியத்தையும்!” வேதாகமம் சொல்லுகிறது, “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13). நான் இந்த வசனத்தை நிரூபித்திருக்கிற காரணத்தால், இது உண்மை என்று நான் அறந்திருக்கிறேன். எனது வாழ்க்கையின் 80வது ஆண்டிலே நான் இங்கே இருக்கிறேன், ஒரு புற்றுநோயைக் கடந்தவர், எனது முழங்காலில் வாதநோய் கண்டவர், ஆனால் நான் பயப்படவில்லை, இரண்டு பொல்லாத மனிதர்கள் நமது சபையில் 3/4 பாகம் சபை மக்களைப் பயங்கரமாக எடுத்துச் சென்றபோதும். ஒரு சிறிய குழந்தையாக எனது தாயின் புயங்களில் அமைதியாக இருப்பதுபோல நான் இருக்கிறேன். நான் பயப்படுகிறேனா? நேர்மையாக, ஒரு சிறிதளவுகூட நான் பயப்படவில்லை! எனது அம்மாவின் அம்மா, “உனக்குப் பயப்பட ஒன்றுமில்லை ஆனால் பயம்தானே உனக்கு உள்ளது,” என்று தலைவர் பிராங்கிளின் டி. ரூசிவெல்ட் தனது பெரிய மனஅழுத்தத்தில் சொல்ல கேட்டதை அவர்கள் என்னிடம் வழக்கமாக சொல்லுவது உண்டு. எனது பழைய பாட்டி சொன்னது சரி என்று நான் கண்டு கொண்டேன்!

என்றென்றும் “கர்த்தருடைய சமுகத்தினின்று” நான் விலகி ஓட முடியாது என்றும் நான் கண்டு கொண்டேன். ஏன்? ஏனென்றால் நான் எங்கே சென்றாலும் தேவன் என்னோடு கூடசெல்லுகிறார் – அதனால்தான்! யோனா தர்சீசுக்கு, போனதுபோல நீயும், போக முடியும். ஆனால் தேவன் அவ்வளவுக்கு அதிகமாக அவர் வீட்டில் இருப்பதுபோல இருப்பார்! மற்றும் தேவன் ஒரு பிரசங்கியை ஒரு பெரிய சண்டை இல்லாமல் போகவிடமாட்டார்.

ஒரு சமயம் மது குடிக்கும் ஒரு மனிதனை எனக்குத் தெரியும். தேவன் அவனை அழைத்தார் என்பதை மனதளவில் மறைப்பதற்கு அவன் குடித்தான் என்பதை நான் அறிந்தேன், தேவனுடைய அழைப்புக்குக் கீழ்ப்படிய அவன் மிகவும் பயந்தான். அதனால் இப்பொழுது பயத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஒவ்வொரு இரவிலும் அவன் குடிக்கிறான். அவன் பெயர் ஜான் பிரிச் (விளையாட்டுதனம் அல்ல!) மற்றும் செமினரியில் அவன் அங்கே என்னோடு இருந்தான், அவன் குடிகாரனாக இருந்த காரணத்தால் தூங்கும் அறையில் இரகசியமாக உள்ளும் வெளியுமாக இருப்பான்!

ஆலன் என்ற மற்றொரு மனிதனை எனக்குத் தெரியும். நான் ஆலனை கிறிஸ்துவிடம் நடத்தினேன், ஆனால் அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஏன்? ஆலன் இரட்சிக்கப்பட்டால் அவன் பரலோகத்துக்குப் போகவேண்டுமே என்று அவன் பயப்படுகிறான்! பரலோகத்துக்குப் போவதற்கு ஏன் அவன் பயப்படுகிறான்? அதை அவன் ஒரு நாள் என்னிடம் சொன்னான், “என்னுடைய அப்பாவை மறுபடியுமாக நான் அங்கே பார்க்க வேண்டியதாக இருக்கும் செமினரிக்குச் சென்று அவர் இருந்ததைபோல பிரிஸ்பிடேரியன் சபை பிரசங்கியாக மாறாததற்காக அவர் என்மீது மிகவும் கோபமாக இருப்பார்.” ஆலனுக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் ஒரு பிரிஸ்பிடேரியன் சபையில் அமர்ந்திருந்தார், அவருடைய மரித்த அப்பா பரலோகத்தில் அவர்மீது கோபப்படுவார் என்ற காரணத்தால் அவர் இரட்சிக்கப்படுவதற்குப் பயப்பட்டார்! அந்த எண்ணத்தினால் அவர் நாற்பது வருடங்களாக வாதிக்கப்பட்டார். ஆனால் அவருடைய அப்பா [ரெவ. திரு. பிளாக்] புன்னுருவலோடு கெட்ட குமாரன் வீட்டுக்கு வந்தபொழுது, அவனுடைய அப்பா செய்ததைப்போல அவரை கட்டி அணைத்துக்கொள்ளுவார், என்று அவனிடம் நான் சொல்லி அவனை உணர்த்த முடிந்தது. நான் கிறிஸ்துவினிடத்தில் நடத்தின முதலாவது மனிதன் ஆலன் ஆகும்!

நான் செமினரியில் இருக்கும்போது, எங்கள் கூட்டங்களில் ஒரு காலேஜ் வயது பெண் இரட்சிக்கப்பட்டாள். அவள் ஒரு வெட்கம் நிறைந்த பெண், ஆனால் அவள் வேதனையாக இருப்பதை நான் கவனித்தேன், அதனால் அவளிடம் சென்று பேசினேன். அவள் சொன்னாள், “நான் இரட்சிக்கப்பட்டதை எனது அம்மாவிடம் சொல்ல நான் பயப்படுகிறேன்.” நான் சொன்னேன், “போ மற்றும் அம்மாவிடம் சொல்லு. அவள் கோபப்படமாட்டாள்.” ஆனால் நான் சொன்னது தவறு. அவள் இரட்சிக்கப்பட்டதை அவளுடைய அம்மா அறிந்தபொழுது, அந்த பெண்ணை உதைத்து வீட்டைவிட்டு வெளியே தள்ளினாள். அந்தப் பெண் அழுததை நான் பார்த்தேன். அதனால் நான் சொன்னேன், “நான் போய் உன்னுடைய அம்மாவிடம் பேசுகிறேன்”. நான் சூட் மற்றும் டை கட்டிக்கொண்டு, அந்த ஸ்திரியைப் பார்க்க சென்றேன். நான் யார் என்று அவள் அறிந்தபிறகு, என்னிடம் அலர ஆரம்பித்தாள். இறுதியாக அந்த ஸ்திரியின் வீட்டு அறைக்குள் சென்றேன். நான் கேட்டேன், “உன்னுடைய மகளை வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ள முடியாதா?” அதற்கு அவள் சொன்னாள், “அவள் பால் உறவு வைத்துக்கொண்டாலும் மற்றும் போதை பொருள் எடுத்துக்கொண்டாலும் அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் அவள் இப்பொழுது ஒரு கிறிஸ்தவள் ஆகிவிட்டாள்! அதனால் அவளை மறுபடியும் ஒருபோதும் என்னுடைய வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ள மாட்டேன்.”

அந்த ஏழை பெண் சபையிலிருந்த ஒருவருடைய வீட்டில் தங்கினாள் மற்றும் அவளுக்கு ஒரு வேலை கிடைத்தது, மற்றும் அவளுடைய கல்லூரி படிப்பை முடித்தாள். இறுதியாக அவள் நல்ல ஒரு கிறிஸ்தவ இளம் வாலிபனை விவாகம் செய்தாள். அந்த விவாகத்தில் அவளுடைய அம்மா கலந்துகொள்ளவில்லை என்று நான் புரிந்து கொண்டேன். அந்த இளம் தம்பதிகள் ஐரோப்பாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு மிஷனரிகளாக சென்றார்கள். அவர்களுக்கு உதவியாக நாங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புகிறோம்.

அதன்பிறகு ஒருநாள் செய்தித்தாள்கள் அவளுடைய தாயின் வீட்டுக்கதவுக்கு முன் குவிந்திருந்தது என்பதை நான் கேள்விப்பட்டேன். போலீஸ் கதவை உடைத்தது – அந்தத் தாய் தரையில் செத்துக்கிடந்தாள் – அவளுடைய கை பாதி காலியான வோட்கா பாட்டிலை கெட்டியாக பிடித்திருந்தது!

ஓ, அந்த பெண் ஒரு கிறிஸ்தவளாக மற்றும் ஒரு மிஷனரியாக மாற எவ்வளவு கண்ணீர் மற்றும் வேதனையைச் சகிக்க வேண்டியதாக இருந்தது! ஆனால் தன் பயங்களை வெற்றிகொள்ள மற்றும் மிஷன் ஊழியத்தைச் செய்ய போதுமான அளவு அவள் இயேசுவானவரை நேசித்தாள்! இயேசு சொன்னதைக் கேட்பதற்கும், அவர் சொன்னதைக் கடைப்பிடிப்பதற்கும் அவள் ஆன்மீகவாதியாக இருந்தாள்.

நீங்கள் எழுந்து நில்லுங்கள் மற்றும் உங்கள் வேதாகமத்தை மத்தேயு 10:34-39க்கு திருப்பிக் கொள்ளுங்கள்.

“பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்” (மத்தேயு 10:34-39.)

நீங்கள் அமரலாம்.

உங்களில் சிலருடைய பெற்றோர் நமது சபையை விட்டு நீங்கள் விலகிப்போக தங்களால் முடிந்தவரை முயற்சி செய்வார்கள். நீங்கள் தயவுசெய்து இந்தப் பெண்ணின் உதாரணத்தை நினைவில் கொள்ளுங்கள் அவளைப் பின்பற்றுங்கள். நீங்கள் அப்படி செய்யும்பொழுது, அவர்கள் உங்கள்மீது மிகவும் கோபமாக இருப்பார்கள் – சில காலங்கள். ஆனால் அவர்கள் உங்கள் நல்ல வாழ்க்கையைப் பார்க்கும்போது, அவர்கள் இறுதியாக – எதிர்காலத்தில் – உங்களுடன் எங்கள் தேவாலயத்திற்கு வருவார்கள். ஆனால் அவர்கள் உங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், கிறிஸ்துவைப் பின்பற்ற உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும்! யோனாவை போல கர்த்தருடைய சமுகத்தினின்று நீ விலகி ஓட முயற்சிக்க வேண்டாம்!!!

சீன சபையிலே, எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள் – பென் மற்றும் ஜேக் என்பவர்கள். டாக்டர் லின்கு விரோதமாக பென் கலகம் செய்தான். கடைசியாக அவன் தன் பெண் தோழியைக் காதலித்து அவளுடன் ஓடிப்போனான். அவனை நான் மறுபடியும் ஒருபோதும் பார்க்கவில்லை. ஆனால் ஜேக் ஒரு மருந்து ஆளுனராகப் பயிற்சி பெற்றான். இருந்தாலும் அதை அவன் விரும்பவில்லை, அதனால் அவன் டால்போட் செமினரிக்குச் சென்று ஒரு பிரசங்கியாக மாறினான். அவன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான். அவனது விவாகத்தில் நான் சிறப்பு விருந்தினராக இருந்தேன். எங்களுடைய கூட்டங்கள் ஒன்றில் அவன் இயேசுவானவரை நம்பினான். அதன்பிறகு அவன் எழுதினான், “வருடங்கள் கடந்தபிறகு இது எனது சொந்த அம்மா மற்றும் அப்பா இரட்சிப்பின் கனியைக் கொடுத்தது... எனது அப்பா பயிற்சிபெற்று மற்றும் ஒரு ஞாயிறுபள்ளி ஆசிரியராகச் சேவைசெய்தார், தமது மாணவர்களின் வாழ்க்கைக்காக உழைத்தார் மற்றும் சபையின் வளர்ச்சிக்காக பங்களிப்புச் செய்தார்.”

II. இரண்டாவதாக, யோனாவின் உபத்திரவம்.

“அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று” (யோனா 1:3-4).

மேலே பார். இந்தப் புயல் தேவனிடத்திலிருந்து வந்தது என்று யோனா அறிந்திருந்தான்.

“அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்” (யோனா 1:12).

இறுதியாகக் கப்பற்காரர் யோனாவை எடுத்து கடலிலே எரிந்தார்கள், மற்றும் கடல் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.

“யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான். அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்” (யோனா 1:17- 2:1)

முதலில் நான் இதை விசுவாசிப்பதற்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அதன்பிறகு இந்தச் சம்பவம், சிலுவையிலே மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மற்றும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த இயேசுவானவருக்கு மாதிரியாக இருந்தது என்று நான் கண்டேன்.

அதன்பிறகு டாக்டர் எம். ஆர். டிஹான் அவர்கள் யோனா மற்றும் அந்தப் பெரிய மீன்பற்றி சொன்னதை வாசித்தேன். டாக்டர் டிஹான் சொன்னார் அதாவது அந்தப் பெரிய மீனின் உள்ளே யோனா மரித்தான். டாக்டர் ஜே. வெர்னான் மெக்ஜீ சொன்னார்,

இந்தப் புத்தகம் மெய்யாகவே உயிர்த்தெழுதலுக்குத் தீர்க்கதரிசனமாகும். நினிவே மக்களுக்கு யோனா ஒரு அடையாளமாக இருந்ததுபோல, அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவது இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்று கர்த்தராகிய இயேசுவானவரே சொல்லி இருக்கிறார்... யோனாவின் இந்தச் சிறிய புத்தகம் கர்த்தராகிய இயேசுவானவரின் உயிர்த்தெழுதலைக்குறித்து எடுத்துக்காட்டுகிறது மற்றும் கற்பிக்கிறது (Thru the Bible, யோனாவின் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் குறிப்பு, பகுதி III, ப. 739).

யோனா 1:17ஐ பார்க்கவும்.

“யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்” (யோனா 1:17).

இப்பொழுது யோனா புத்தகத்தில் மிக முக்கியமான யோனாவின் வார்த்தைகளைப் பார், யோனாவின் இந்தக் கடைசி இரண்டு வார்த்தைகள் யோனா 2:9ல் உள்ளது,

“இரட்சிப்பு கர்த்தருடையது” (யோனா 2:9ஆ).

நான் இங்கே நிறுத்துகிறேன் மற்றும் அந்தப் பெரிய மீனில் யோனாவின் உபத்திரவத்தைப்பற்றி என்னுடைய சொந்த கருத்துக்களைக் கொடுக்கிறேன்.

மற்ற இரவிலே நான் யோனாவின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போது, நான் இதற்கு முன்பாக நினைத்திராத சிலவற்றால் நான் தடைபடுத்தப்பட்டேன். வெளிப்பிரகாரமான சூழ்நிலைகளால் எழுப்புதல்கள் “உண்டாகிறது” என்று நினைப்பது பொதுவானது. கொரோனா வைரஸ் ஒரு எழுப்புதலை “உண்டாக்கும்” என்று அநேக அறியப்படாத பிரசங்கிகள் சொல்லுகிறார்கள். நான் அதை முழுமையாக விசுவாசிக்கவில்லை!!! அந்த ஒரு கருத்துப் ஃபின்ணேவின் எண்ணமாகும், மற்றும் அதிலே உண்மையே இல்லை.

ஆனால் இங்கே எழுப்புதலின் மெய்யான உண்மை இருக்கிறது – இது “உண்டாகி” இருக்கிறது (இன்று புதிய சுவிசேஷகர்கள் மூலமாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகளை நான் வெறுக்கிறேன்) – தேவன் மூலமாகதான் எழுப்புதல் “உண்டாகிறது”, “இரட்சிப்புக் கர்த்தருடையது” (யோனா 2:9ஆ).

ஆனால் இங்கே மற்ற இரவிலே நான் தெளிவாக பார்த்தது என்னவென்றால் – வரலாற்றின் பெரிய எழுப்புதல்களைப்பற்றி நான் படித்தபொழுது, தலைவர்கள் உபத்திரவங்களின் ஊடாக போனபொழுது பெரிய எழுப்புதல்கள் ஆரம்பித்தன என்பதை நாங்கள் கண்டு பிடித்தோம். எனது மனதுக்கு வரும் ஒரு சில பெயர்களை நான் குறிப்பிடுகிறேன்.

ஜான் வெஸ்லி – அந்த முதல் பெரிய எழுப்புதலுக்கு முன்பாக அவர் அனுபவித்த ஒருசில உபத்திரவங்களை நான் எடுத்துக் காட்டுகிறேன். அவர் ஒரு மிஷனரியாக ஜார்ஜியாவில் தோல்வி அடைந்தவராக இருந்தார். பிசாசுகளோடு போராட்டத்தை அவர் அனுபவித்தார். அவர் கொடும்பாவி எரிக்கப்பட்டார். அவர் ஏறக்குறைய மரித்தார். அவரது நண்பர் ஜார்ஜ் ஒயிட்பீல்டு அவரோடு இருந்த தனது ஐக்கியத்தை முறித்துக்கொண்டார். அவர் தனது சொந்த வகுப்பினரால் அவதூறாக பேசப்பட்டார். அவருடைய அப்பாவின் சபையினால் அவதூறு செய்யப்பட்டார் மற்றும் பாஸ்டர் மூலமாக கர்த்தருடைய பந்தி அவருக்கு மறுக்கப்பட்டது. அவர் ஒரு ஸ்திரியை விவாகம் செய்தார் அவள் அவருடைய முடியைப் பிடித்து இழுத்தாள் மற்றும் அவரை விட்டுப் போனாள். அதன்பிறகு அவருடைய சொந்த பெந்தேகோஸ்த்தை அனுபவித்தார். அதன்பிறகு மட்டுமே அவருடைய சொந்த பெந்தேகோஸ்த்தை அவர் அனுபவித்தார்! நடுங்கும் குளிரில் ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய பிரசங்கத்தைக் கேட்டார்கள். அவருடைய வேலையைப்பற்றி ராஜாவின் வழக்கறிஞர் பாராட்டினார்: “இவ்வளவு அதிகமான மனங்களின் செல்வாக்கை எந்தத் தனிநபரும் பெற்றதில்லை. இவ்வளவு அதிகமான இருதயங்களை எந்தத் தனிகுரளும் தொட்டதில்லை. இங்கிலாந்துக்காக மற்ற எந்த மனிதனும் இப்படி ஒரு ஜீவனுள்ள வேலையைச் செய்ததில்லை” என்று பாராட்டினார். சமீபத்தில் ஒரு பதிப்பகம் சொல்லியது, அதாவது ஜான் வெஸ்லி “அப்போஸ்தல நாட்களிலிருந்து அதிக வல்லமைமிக்க பிரசங்கிகளில் ஒருவராகும்.”

மேரி மான்சன் – இவள் சீனாவில் எழுப்புதலுக்காக உபவாசம் மற்றும் ஜெபம் செய்த ஒரு சகோதரி ஆகும். பிசாசு அவளைத் தரையிலே இழுத்து தள்ளியது ஒரு பெரிய பாம்பைப்போல அவளுடைய சரிரத்தில் சுற்றிக்கொண்டது. அவள் உதவியில்லாமல் அல்லது துணை இல்லாமல், ஒரு தனிமையான, ஒரே பெண் மிஷனரியாக அந்தப் பெரிய எழுப்புதலுக்காகக் கீழே ஜெபித்தாள் அது இந்த நாள் வரைக்கும் சீனாவின் வீட்டுச் சபைகளில் எழுப்புதலைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

ஜோனத்தான் கோபோர்த் – இவரும் இவரது மனைவியும் சீனாவுக்குச் சென்றார்கள் அவர்கள் அங்கே அதிகமாக உபத்திரவப்பட்டார்கள். அவர்களுடைய நான்கு குழந்தைகள் மரித்துப் போயின. திரு. கோபோர்த்தும் இருமுறை ஏறக்குறைய மரித்தார். அவருடைய குழந்தைகளுக்குக் கிறிஸ்தவ அடக்கம் செய்வதற்கு அவருடைய மரித்த குழந்தைகளை 12 மணி நேரங்கள் ஒரு வண்டியில் எடுத்துச்செல்ல வேண்டியதாக இருந்தது. திருமதி கோபோர்த் மற்றும் அவருடைய பிள்ளைகள் எப்படியாகப் பாடுபட்டார்கள் என்று சொல்ல எனக்கு நேரம் இருந்தது. அவர்களுடைய குழந்தை கான்ஸ்டன்சி மரித்தபொழுது, “எங்கள் சிறிய கான்ஸ்டன்சியின் சரிரம் அவளுடைய சகோதரியின் கல்லரைக்குப் பின்னால் அவளுடைய பிறந்த நாளான, அக்டோபர் 13, 1902 அன்று கிடத்தப்பட்டது.”
     அதற்குப் பிறகு மட்டுமே தேவனுடைய எழுப்புதலின் அக்கினி கோபோர்த்தின் கூட்டங்களில் இறங்கி வந்தது. ஜெபத்துக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. திருமதி கோபோர்த் சொன்னார்கள், “அது திடீர் என்று வந்தது மற்றும் ஒரு புயல் இடியின் வன்முறையைப்போல வந்தது... அதனால் அது இங்கே ஜெப புயலோடு இருந்தது. அங்கே அதற்கு எதிர்ப்பு இல்லை, அப்படி செய்ய முயற்சியும் இல்லை... ஆண்களும் பெண்களும் ஜெப வல்லமையின் கீழ் வந்தபொழுது... தேவனுக்கு மிகவும் தூரமாக அலைந்த சிலர், இப்பொழுது பகிரங்கமாக தங்கள் பாவங்களை அறிக்கைசெய்து தேவனிடத்தில் திரும்பி வந்தார்கள்... அங்கே குழப்பம் இல்லை. அந்த முழுகூட்டமும் ஜெபத்தில் ஒன்று சேர்ந்தது... நாம் அனைவரும் நேராக முழங்காலிலிருந்து அந்தக் கூட்டங்களுக்குச் செல்லுவோம், மற்றும், ஓ, அந்த ஆனந்தம் மற்றும் அதன் மகிமை!... நாங்கள் எங்கள் தலைகளை வணங்கி எங்களுக்குச் சொல்லும் தேவனுடைய சத்தத்தைக் கவனித்தோம், ‘நானே தேவன் என்று அமர்ந்திருந்து அறிந்து கொள்ளுங்கள்’. இப்பொழுது நாங்கள் அதைக் கற்றுக்கொண்டோம் ‘பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தாலும் அல்ல, ஆனால் என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று, சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’ என்று.
     பெரிய காரியங்கள், 700 பேருக்கு மேலாக, தங்கள் பாவங்களை அறிக்கையிட கூட்டமாக முன்னுக்கு வந்தார்கள்... அந்தக் கூட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவது கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு கூட்டமும் மூன்று மணி நேரத்துக்குமேல் சென்றன. உண்மையில், ஒவ்வொரு கூட்டமும் நாள்முழுவதும் நடந்தது... கோபோர்த்தின் மூலமாக ஒரு குறுகிய செய்தி கொடுக்கப்பட்டது அந்த ஆரம்பத்திலிருந்து அதை தொடர்ந்து ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில நல்ல அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இவர்கள் கண்டிப்பான பிரிஸ்பிட்டேரியன்கள், சாதாரணமாக தன்னடக்கத்தோடு, தேவனிடம், இரக்கத்துக்காக அழுதார்கள்... ஒரு உறுதியான பிரிஸ்பிட்டேரியன் பிரசங்கியார், தனது அறையில் தனிமையாக, ஆத்துமாவின் பெரிய வேதனையில் ஜெபித்தார் என்பது பின்னர் தெரிய வந்தது.” திருமதி கோபோர்த் சொன்னார், “அப்படிப்பட்ட ஜெபம் – நேரடையானதன்மை மற்றும் எளிமையோடு, நிச்சயத்தில் ஜெபித்த ஜெபம்! அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு ஒரு ஊக்கம் அளிப்பதாக இருந்தது!”
     “அந்த வெள்ளை மிஷனரிகள் தங்கள் சீன சகோதரர்களோடு சேர்ந்து தங்கள் தவறுகள் மற்றும் பாவங்கள் மற்றும் குறைபாடுகளை அறிக்கையிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாக இணைக்கப்பட்டார்கள் – சீனரோடு சீனர், மிஷனரியோடு சீனர், மற்றும் எல்லாரையும் கிறிஸ்துவுக்குள் ஒன்று கூட்டும் நேரமாக அது இருந்தது. மற்றும் நம் அனைவருக்கும் கிறிஸ்துவானவர் சொல்லுகிறார், ‘நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல... அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்ளுகிறேன், ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாக இருக்கும்படிக்கு வேண்டிக்கொள்ளுகிறேன்.’”

எங்களுடைய பழைய சபையிலே சில கூட்டங்களை நாங்கள் நடத்தினோம் அது வெளிப்படையாக டாக்டர் கோபோர்த் சீனாவிலே நடத்தினதுபோல காணப்பட்டது. நான் “வெளிப்படையாக” என்று சொன்னதில் நோக்கம் உண்டு. ஆனால் நமது சபையின் “தலைவர்களில்” அதிகமானவர்கள் தேவனிடம் தங்கள் பாவங்களை அறிக்கையிடும்போது பொய்ச் சொன்னார்கள். இவ்வாறாக, டாக்டர் டோசர் சொன்னதுபோல, அவர்கள் இரண்டு பாவங்களைச் செய்தார்கள் – பொய் என்னும் பாவம், மற்றும் தேவனுடைய நாமத்திலே பொய் சொல்லுதல் என்னும் பாவம்! கிரைட்டான் டாக்டர் கேஹன் அவர்களிடம் பொய் சொன்னான் “நிறைவாக” இருப்பதற்காக அவன் “பிரசங்கிக்க” வேண்டிய அவசியமில்லை என்றான். இவ்வாறாக இந்தத் துக்கமான சிறிய மனிதன் கிறிஸ்துவானவரைக் காட்டிக்கொடுத்த, யூதாஸைபோல அதிகமாக மாறினான், அதன்பிறகு பேதுருவைப்போல உண்மையாக அவன் மனஸ்தாபப்பட்டான்.

ஜோனத்தான் கோபோர்த்தின் கீழ் ஏற்பட்ட உண்மையான மனந் திரும்புதல் என்பது டாக்டர் தீமோத்தேயு லின் அவர்களின் கீழ் ஏற்பட்டதைப் போல அதிக உண்மையான எழுப்புதல் என்பதை நான் தனிப்பட்ட விதத்தில் கண்டேன், 1960ன் கடைசியில் முதல் சீன பாப்டிஸ்டு சபையில் ஏற்பட்டதைப் போல, உண்மையாக அங்கே “ஆவியின் வரங்கள்” வலியுருத்தப்படவில்லை – ஆனால் உண்மையான மனந்திரும்புதல் மற்றும் ஜெபம் மட்டுமே இருந்தது. துக்ககரமாக, எனக்குக் காணப்படுவது என்னவென்றால், “உணர்த்தப்படுதல் மற்றும் மனந்திரும்புதல்” என்பது தற்பொழுது உணர்ச்சிப்பூர்வமானதாக மட்டுமே இருந்தது – உண்மையானதாக இல்லை என்பது. கிரைட்டன் மற்றும் கிரிப்பித் போன்ற மனிதர்கள் தேவனை முட்டாளாக்க முடியும் என்று நினைப்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது!!! என்ன குருட்டுத்தனம்!!!

சில இரவுகளுக்கு முன்பாக நான் இந்த போதனையை குளியலறையில் எழுதிக்கொண்டு இருந்தபொழுது, எங்கள் குளியலறை தொட்டியின் விளிம்பில் நான் அமர்ந்திருந்தேன். அப்பொழுது நான் பின்பக்கமாக தொட்டியில் விழுந்தேன், என் தலை தொட்டியின் அடியில் மோதியது. அங்கே என் கால்களை நேராக மேலே நீட்டினேன். நான் விடுபட முயற்சி செய்து சுழன்றேன், ஆனால் என்னால் முடியவில்லை. அங்கே நான் விழுந்து கிடந்தபொழுது, நான் தொட்டியில் அகப்பட்டேன், எனது கழுத்தை உடைத்துக்கொண்டேன் என்று நான் நினைத்தேன். ஆனால் என் கால் விரல்களை அசைக்க என்னால் முடிந்தது, அதனால் எனது தண்டுவடம் உடையவில்லை என்று அறிந்தேன்.

அந்தவிதமான பயங்கரமான நிலையிலே நான் விழுந்தபொழுது, நாம் உண்மையான எழுப்புதலை ஒருபோதும் பெறமுடியாது என்று பிசாசு என்னிடம் சொன்னான். அப்போதுதான் தேவன் வரலாற்றில் மிகப்பெரிய எழுப்புதல்கள் எதன்பிறகு வந்தது என்பதைக் காட்டினார் அதாவது வெஸ்லி, மேரி மான்சன், மற்றும் ஜோனத்தான் கோபோர்த், மற்றும் ஜான் சங் போன்ற மற்றவர்கள், அந்தப் பெரிய மீன் வயிற்றில் யோனா அகப்பட்டதுபோல, பெரிய சோதனைகளை அவர்கள் அனுபவித்தபோதுதான் ஏற்பட்டது என்றும், அப்படிப்பட்ட எழுப்புதல்களுக்கு முன்பாக தேவன் அவர்களை நம்ப வேண்டும் என்றும் தேவன் காட்டினார். இப்பொழுது நாம் மெய்யான எழுப்புதலைப் பெறமுடியுமா? ஒருவேளை பெறலாம். ஆனால் நாம் மிகவும் உண்மையாக மற்றும் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம், இல்லை என்றால் இந்த வருடங்களெல்லாம் நம்மில் சிலர் ஜெபித்து வந்ததுபோல உண்மையான எழுப்புதலைத் தேவன் அனுப்பமாட்டார்!

யோனாவைப் போல, பாஸ்டர் ரிச்சார்டு உம்பிராண்டு கம்யுனிஸ்டு சிறை என்ற மீன் வயிற்றில் 14 ஆண்டுகள் இருந்தார். அந்த 14 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் கடுங்காவலில், அதாவது கம்யூனிஸ்டு சித்திரவதைச் செய்பவர்களைத் தவிர வேறு ஒருவரையும் பார்க்க முடியாத நிலையில் இருந்தார். இவைகள் எல்லாவற்றின் ஊடாக செல்ல உம்பிராண்டைத் தேவன் ஏன் அனுமதித்தார்? அவருடைய புத்தகங்களை நீங்கள் படித்தால் அவர் நேர்மையாக மற்றும் அன்பாக இருப்பதற்குக் கற்றுக்கொடுக்க தேவன் அந்த சிறை அறையை உபயோகப்படுத்தினார் என்று அறிந்து கொள்ளலாம். ரிச்சார்டு உம்பிராண்டைபோல உண்மையாக இருந்த மனிதரை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை. அவர் கடுங்காவல் சிறையில் இருந்தபொழுது உண்மையாக பேச கற்றுக்கொண்டார் அவர் சிறையிலிருந்து விடுதலையான பிறகு உலக முழுவதிற்கும் உண்மையாகப் பேசினார். சிறிய மனிதர்களான கிரைட்டன் மற்றும் கிரிப்பித் போன்ற மனிதர்கள் ஒருபோதும் உண்மையானவர்களாக இல்லை. அவர்கள் தேவனிடத்திலும் பொய் சொன்னார்கள். அவர்களுக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத அர்த்தமற்ற வகையில் பாவங்களை “அறிக்கையிட்டார்கள்”.

அதை நாம் எளிமையாகக் காண முடியும் அதாவது ஜான் வெஸ்லி, மேரி மான்சன், மற்றும் ஜோனத்தான் கோபோர்த் போன்றவர்கள் தீவிரமான மக்கள், அற்பமானவர்கள் அல்ல. யோனாவைப் போல!

டாக்டர் ஏ. டபல்யு. டோசர் சொன்னார், “நாம் முட்டாள்தனமாக இருந்தால் அதைச் செய்ய முடியும், எழுப்புதலை அனுப்பும் என்று தேவனை கெஞ்சிக்கொண்டு வருடத்தை வீணாக்குவோம், பார்வையற்றவர்களாக தேவனுடைய தேவைகளைக் கவனிக்காமல் அவருடைய சட்டங்களை மீறிக்கொண்டிருந்தால். அல்லது அவருக்கு இப்பொழுது கீழ்ப்படிய ஆரம்பிப்போம் மற்றும் கீழ்ப்படிதலின் ஆசீர்வாதத்தைக் கற்றுக்கொள்ளுவோம். தேவனுடைய வார்த்தை நமக்கு முன்பாக இருக்கிறது. அங்கே எழுதப்பட்டதைப் படிக்க வேண்டும் மற்றும் அங்கே என்ன எழுதப்பட்டதோ அதை மட்டும் செய்ய வேண்டும் மற்றும் எழுப்புதல்... விதைத்து மற்றும் நட்டபிறகு அறுவடை வருவதைபோல இயற்கையாக வரும்” (“எழுப்புதலைப்பற்றி என்ன? – பகுதி I”). தேவன் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பது உண்மையாகும்!

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.


முக்கிய குறிப்புகள்

முக்கியக் குறிப்புகள்

யோனா – எழுப்புதல் தீர்க்கதரிசி!
JONAH – THE PROPHET OF REVIVAL!

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.,

“‘அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்” (யோனா 1:1, 2).

(II ராஜாக்கள் 14:25; மத்தேயு 12:39-41; லூக்கா 11:29-30)

I.    முதலாவது, யோனாவின் அழைப்பு, யோனா 1: 1, 2, 3; பிலிப்பியர் 4:13; மத்தேயு 10:34-39.

II.   இரண்டாவதாக, யோனாவின் உபத்திரவம், யோனா 1:3-4, 12; 1:17-2:1; 1:17; 2:9ஆ.