Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.பிரசங்கத்திற்கு முன் பாடிய பாடல்: “நான் ஒரு சிலுவையின் போர்வீரனாக இருக்கிறேனா?” (Dr. Isaac Watts, 1674-1748).


கிறிஸ்துவோடுகூட சிலுவையிலறையப்பட்டேன்!

CRUCIFIED WITH CHRIST!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்,
பாஸ்டர் எமெரிடஸ்
by Dr. R. L. Hymers, Jr.,
Pastor Emeritus

மே 17, 2020 கர்த்தருடைய நாள் பிற்பகல் வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Afternoon, May 17, 2020

“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலாத்தியர் 2:20).


“கிறிஸ்துவோடுகூட சிலுவையிலறையப்பட்டேன்” என்றால் என்ன? நமது ஆத்துமாவின் ஒரு இருண்ட இரவின் ஊடாக நாம் போகவேண்டியது அவசியம் என்று நான் விசுவாசிக்கிறேன். நமது பாவத்தை நாம் உணரவேண்டும், நியாயப்பிரமாணத்தின் கசை அடிகளை உணர வேண்டும், ஆணிகளை உணர வேண்டும், கிறிஸ்துவோடு மரிக்க வேண்டும் – கிறிஸ்துவோடு அவரது மரணத்தில், அதேபோல அவரது உயிர்த்தெழுதலிலும் இணைக்கப்பட வேண்டும்.

பாஸ்டர் ரிச்சார்டு உம்பிராண்டு சிறையில் இருந்தபொழுது கிறிஸ்துவோடு கூட சிலுவையிலறையப்பட்டதை, அவர் இரண்டு வருடங்கள் தனிமை சிறையில் அனுபவித்தார். அவருடைய புத்தகத்தில், தேவனுடைய பூமிக்கு அடியில், என்ற புத்தகத்தில் அவர் எப்படியாக கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப் பட்டிருந்தார் என்று அவர் விவரித்திருக்கிறார். உம்பிராண்டு சொன்னார்,

     நான் இரண்டு வருடங்கள் இந்த அறையில் தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். எனக்குப் படிப்பதற்கு ஒன்றுமில்லை மற்றும் எழுது பொருள்களும் இல்லை; நிறுவனத்தை நினைக்கும் நினைவுகள் மட்டுமே எனக்கிருந்தது, மற்றும் நான் ஒரு தியான மனிதனாக இல்லை, ஆனால் அமைதியை அறிதாக அறிந்த ஒரு ஆத்துமாவாக இருந்தேன்.
    நான் தேவனில் விசுவாசித்திருந்தேனா? இப்பொழுது சோதனை வந்தது. நான் தனித்திருந்தேன். அங்கே சம்பாதிக்க சம்பளமில்லை, தீர்மானம் செய்ய பொன்னான கருத்துக்கள் இல்லை. தேவன் எனக்குப் பாடுகளை மட்டுமே கொடுத்தார் – நான் தொடர்ந்து அவரை நேசிப்பேனா?
    மெதுவாக அந்த மரத்தில் அந்தச் சமாதான கனி அமைதியாகத் தொங்கியதை அறிந்தேன்... இங்கேயும்கூட [தனிமை சிறையில்] எனது எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் தேவனிடம் திரும்பினது, மற்றும் நான் இரவுக்கு இரவு ஜெபத்தில், ஆவிக்குரிய பயிற்சிகளில், மற்றும் துதிகளில் கடத்த முடிந்தது. நான் நடிப்பு விளையாட்டு செய்யவில்லை என்று எனக்குத் தெரியும். நான் விசுவாசித்தேன்! (தேவனுடைய பூமிக்கு அடியில், ப. 120).

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM
என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

“கிறிஸ்துவோடுகூட சிலுவையிலறையப்பட்டேன்” என்றால் என்ன? நமது ஆத்துமாவின் ஒரு இருண்ட இரவின் ஊடாக நாம் போகவேண்டியது அவசியம். உனது பாவத்தை நீ உணரவேண்டும், நியாயப்பிரமாணத்தின் கசை அடிகளை உணர வேண்டும், ஆணிகளை உணர வேண்டும், கிறிஸ்துவோடு மரிக்க வேண்டும் – கிறிஸ்துவோடு அவரது மரணத்தில், அதேபோல அவரது உயிர்த்தெழுதலிலும் இணைக்கப்பட வேண்டும்.

என்னைப்போன்ற ஒரு கடினமான மனிதன் சமர்பிப்பதற்கு முன்பாக மற்றும் முழுமையாக “கிறிஸ்துவோடுகூட சிலுவையிலறையப்படுவதற்கு” இதன் ஊடாக அடிக்கடி போகவேண்டியது அவசியம். இப்பொழுது நான் எனது வாழ்க்கையில் எண்பது வயதுக்கு மேலாக இருந்தாலும், இந்தச் சத்தியத்தை கற்றுக்கொள்ளும் நடைமுறையில் இன்னும் நான் இருக்கிறேன்.

நான் முதலாவது சீன சபையில் தங்கி இருந்தபொழுது முதலாவது இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன், அங்கே நான் ஒரு “வெளியாளாக” சில பத்தாண்டுகள் இருந்தேன். நான் விட்டுப்போக விரும்பினேன், ஆனால் தேவன் என்னை போகவிடவில்லை. நான் விட்டுபோகக்கூடாது என்று எபிரேயர் 10:25 மற்றும் மற்ற இடங்களில் தெளிவாக என்னிடம் சொன்னார். இவ்வாறாக நான் “கிறிஸ்துவோடுகூட சிலுவையிலறையப்பட” ஆரம்பித்தேன்.

அடுத்தமுறை நான் மாரின் கவுன்டியின் சதர்ன் பாப்டிஸ்டு செமினரியில் சோதிக்கப்பட்டேன். நான் அந்த இடத்தை வெறுத்தேன் ஏனென்றால் ஏறக்குறைய எல்லா பேராசிரியர்களும் மாற்றப்படாத முற்போக்குக் கட்சியினராக இருந்ததுமட்டுமல்லாமல் அவர்கள் ஒவ்வொரு வகுப்பறையிலும் வேதாகமத்தைத் துண்டு துண்டாக கிழித்தார்கள். நான் அங்கே இருந்ததை வெறுத்தேன், ஆனால் மறுபடியும், நான் எப்படி உணர்ந்தாலும் பரவாயில்லை, நான் அங்கே இருக்க வேண்டும் என்று தேவன் சொன்னார். நடு இரவுக்குப் பிறகு, செமினரியில் எனது அறையிலே, தேவன் என்னை வெளியே அழைத்தார். ஒரு “அமர்ந்த, மெல்லிய சத்தத்தில்” தேவன் என்னிடம் சொன்னார், “இப்பொழுதிருந்து அநேக ஆண்டுகளுக்குப் பிறகு நீ இந்த இரவை நினைப்பாய் மற்றும் இதை நான் உனக்குச் சொன்னேன் நீ வயதான பிறகு மட்டுமே உனது பிரதான வேலை ஆரம்பிக்கும்... இப்பொழுது பயப்படாதே என்பதைக் கற்றுக்கொள்ளுவாய். நான் உன்னோடு இருப்பேன்... நீ இதை சொல்லவில்லையானால் வேறு ஒருவரும் சொல்லமாட்டார்கள், இப்பொழுது அதைச் சொல்லவேண்டிய தேவை இருக்கிறது – மற்றும் மற்றவர்கள் அதைச் சொல்ல பயப்படுகிறார்கள், அதனால் நீ சொல்லாவிட்டால் ஒருவரும் சொல்லமாட்டார்கள், அல்லது குறைந்தபட்சமாக அவர்கள் அதை நன்றாக சொல்லமாட்டார்கள்.”

அதன்பிறகு என்னுடைய செவியறிவு நூல் பற்றிய ஆய்வுநூல் துறை விரியுரையாளர் டாக்டர் கோர்டன் கிரீன், என்னிடம் சொன்னார், “ஹைமர்ஸ், நீ மிகநல்ல ஒரு பிரசங்கியாக இருக்கிறாய், திறமையானவர்களில் ஒருவன் நீ. ஆனால்... தொந்தரவு கொடுப்பதை நீ நிறுத்தாவிட்டால் சதர்ன் பாப்டிஸ்டு சபையில் போதகராக நீ ஒருபோதும் வரமுடியாது.” அவருடைய கண்ணைப் பார்த்து நான் சொன்னேன், “அதுதான் இதற்கு விலைகிரயமானால் அப்படி ஒன்றை நான் விறும்பவில்லை.” இப்பொழுது இழப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை (எல்லா பயங்களுக்கும் எதிராக, ப. 86).

அதன்பிறகு நான் லாஸ் ஏன்ஜல்ஸ் நகரத்துக்கு வந்து இந்தச் சபையை ஆரம்பித்தேன். அதன்பிறகு கிரைட்டன் என்னோடு அவன் “ஒத்துப்போகாத காரணத்தால்” இந்தச் சபையைப் பிரித்தான். என்னோடு அவன் ஒத்துப்போகாத காரணம் என்ன? என்னோடு அவன் ஒத்துப்போகாத காரணம் பலவாரான பிரச்சனைகளில் என்னுடைய தைரியமான நிலை, அதுதான் என்னோடு அவன் ஒத்துப்போகாத காரணம்! அவன் ஒரு “சுண்டெலி” சிறிய மனிதன், தேவனுடைய சத்தியத்துக்காக நிற்க முடியாத பயந்தவன்! சிறிய சுண்டெலியே, போ!

இப்பொழுது, என்னுடைய எண்பதாவது ஆண்டில், தேவன் என்னை எல்லாவற்றிலும் ஒரு தீர்க்கதரிசனக் குரலாக விசுவாசத் துரோகம் உள்ள இந்தக் கடைசி காலத்தில் ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகிறார் என்று நான் உணருகிறேன் (II தெசலோனிக்கேயர் 2:3).

மற்றவர்கள் நீங்கள் உயிரோடு எழுப்பப்படுவீர்கள் என்று சொல்லும்போது, பெரிய உபத்திரவங்களில் அதிகமான பாடுகள் ஊடாக நீங்கள் கடந்துபோக வேண்டும் என்று, மார்வின் ஜே. ரோசன்தல் தி பிரி விராத் ரேப்சர் ஆப் த சர்ச் சொல்லுவதுபோல நான் சொல்லுகிறேன். மற்றவர்களும், கிரைட்டன் போன்றவர்களும், உன்னைப் புதிய சுவிசேஷகத்துக்கு இழுக்க விரும்புவார்கள், நான் சொல்லுகிறேன், “என்ன நடந்தாலும் பரவாயில்லை – கிறிஸ்துவுக்காக உறுதியாக நில்லுங்கள்.”

நான் ஜான் சாமுவேலை வெறுக்கவில்லை. இந்தக் கடைசி காலத்தின் ஒரு தீர்க்கதரிசன குரலாக இருக்க அவன் போதுமான உறுதி அற்றவனாக இருக்கிறான் என்று நான் உணருகிறேன். அவன் என்னோடு தங்கினால் “நொறுக்கப்பட்டு மற்றும் எரிக்கப்படுவான்” என்று பயப்படுகிறான். அது ஏனென்றால் ஜான் சாமுவேல் இன்னும் “கிறிஸ்துவோடுகூட சிலுவையிலறையப்படவில்லை”. நான் அநேகமுறை “நொறுக்கப்பட்டு மற்றும் எரிக்கப்பட்டேன்” அது இன்னும் என்னைக் காயப்படுத்தவில்லை!

டாக்டர் கேஹன் தொடர்ந்து என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தார் இந்தக் கடைசி நாட்களில் உறுதியாக இருப்பதைப்பற்றி நான் பிரசங்கிப்பதை அவர் விரும்புகிறார். அது என்னை உற்சாகப்படுத்துவதற்குப் போதுமானதற்கும் அதிகமாகும்! நீங்கள் “கிறிஸ்துவோடுகூட சிலுவையிலறையப்பட்டிருந்தால்” உங்களால் என்னோடு ஒட்டிக்கொண்டிருக்க முடியும் மற்றும் டாக்டர் கேஹனோடும் இந்த விசுவாச துரோக கடைசி காலத்தில் ஒட்டிக்கொண்டிருக்க முடியும் (II தெசலோனிக்கேயர் 2:3), மற்றும் நீங்கள் ஒரு மகிமையான இரத்தச் சாட்சிகளாக இருப்பீர்கள் – அல்லது ஒரு மகிமையான அறிக்கையாளராக இருப்பீர்கள், போதகர் உம்பிராண்டு போல!

“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலாத்தியர் 2:20).

டாக்டர் தீமோத்தேயு லின், தேவனுடைய ராஜ்யம் என்ற தமது புத்தகத்தில், சொன்னார், “இன்று அநேக சபை உறுப்பினர்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியவில்லை ஏனென்றால் மற்றெல்லாவற்றையும்விட அவர்கள் சுயத்தை நேசிக்கிறார்கள்... அவர்களுடைய இருதயங்கள் கடினமாக மாறின, மற்றும் அதனால் அவர்கள் அதிகமாகக் கற்றாலும் குறைவாகக் கேட்கிறார்கள். தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று அநேகர் நினைக்கிறார்கள், உண்மையில் அவர்கள் அநேக அடிப்படை சத்தியங்களையும் அறியாதிருக்கிறார்கள். அவர்களில் அநேகர் தங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று உங்களுக்குச் சொல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள்!” டாக்டர் ஏ. டபல்யு. டோசர் இந்த உதாரணத்தைக் கொடுத்தார்.

   ஒரு இளம் பல்கலைகழக மாணவனைக் கேள், “பாபு, நீ ஏன் இங்கே இருக்கிறாய்?”
   “நான் விவாகம் செய்துகொள்ள விரும்புகிறேன்; நான் பணம் சேர்க்க விரும்புகிறேன்; மற்றும் நான் பிரயாணம் செய்ய விரும்புகிறேன்.”
   “ஆனால் பாபு, இவைகளெல்லாம் குறுகிய பார்வை காரியங்கள். நீ இவைகளை செய்து வயதாகி மற்றும் மரிப்பாய். உனது வாழ்க்கையின் பெரிய நோக்கம் என்ன?”
   பிறகு பாபு சொல்லுவான், “எனது வாழ்க்கையில் ஏதாவது நோக்கம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது.”
   அநேக மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது நோக்கம் இருக்கிறதா என்று தெரியாதிருக்கிறார்கள் (“மனிதனுடைய நோக்கம்” ப. 27).

எனது வாழ்க்கையின் நோக்கம் பரலோகம் செல்லுவது என்று ஒருவேளை ஒரு கிறிஸ்தவர் சொல்லலாம். ஆனால் டாக்டர் லின் சொன்னார் விரிவாக பார்த்தாலும் உனது வாழ்க்கையின் நோக்கம் பரலோகம் செல்லுவது என்று வேதாகமத்தில் ஒரு வசனம்கூட சொல்லவில்லை!

உனது வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று உனக்கு காட்டும்படியாக, II தீமோத்தேயு 2:12ஐ பாருங்கள். 12ஆம் வசனத்தின் முதல் பாதியை வாசிக்கவும்.

“அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்...”

“சகித்தல்” என்றால் “தாங்கிக்கொள்ளுதல்” ஆகும். வெளிப்படுத்தல் 20:6 சொல்லுகிறது, “இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.” “சகித்தல்” என்ற வார்த்தைக்கு “தாங்கிக்கொள்ளுதல்” என்பது பொருளாகும். II தீமோத்தேயு 2:12ன் விரிவாக்கம் II தீமோத்தேயு 2:1-11ல் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கொபீல்டு குறிப்பு 1ஆம் வசனத்துக்குச் சரியாக அது விசுவாச துரோகநேரம் என்று சொல்லுகிறது, “இயேசு கிறிஸ்துவுக்கு ‘நல்ல போர்ச்சேவகனாய்த்’ தீங்கநுபவி”. கிறிஸ்துவோடு அரசாளுவதைப் பற்றி இந்தப் பத்து ராத்தல் திரவியத்தைக் குறித்த காரியத்தில் கிறிஸ்துவானவர் தெளிவாக சொன்னார், லூக்கா 19:11-27ல் சொன்னார். கிறிஸ்துவோடு ஆட்சி செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு வழங்கப்படும் “பத்து பட்டணங்களுக்கு அதிகாரி” (வ. 17) அல்லது “ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரி” (வ. 19). டாக்டர் தீமோத்தேயு லின் சொன்னார் இது எழுத்தின்படியே இருக்கும். இந்த உலக வாழ்க்கையில் சகித்துக்கொண்டு இருப்பவர்கள் கிறிஸ்துவோடு வரப்போகும் அவருடைய ராஜ்யத்தில் அரசாளுவார்கள்! “சகித்தல்” என்ற வார்த்தைக்கு “தாங்கிக்கொள்ளுதல்” என்பது பொருளாகும்.

அதனால் நாம் எதை சகித்தல் மற்றும் தாங்கிக்கொள்ளுதல் வேண்டும்? நாம் உலகத்தை நேசிக்காத காரணத்தால் பாடுகளைச் சகிக்க வேண்டி இருக்கிறது,

“உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூரா திருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைக ளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (I யோவான் 2:15-17).

நாம் சபை பிளவில் பிரிந்து போகாத காரணத்தால் பாடுகளைச் சகிக்க வேண்டி இருக்கிறது,

“அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடை யவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப் பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்” (I யோவான் 2:19).

நமது சபை பொய்ப்போதகர்களைப் பின்பற்றாத காரணத்தால் பாடுகளை நாம் சகிக்க வேண்டி இருக்கிறது,

“பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” (I யோவான் 4:1).

நமது சபை தேவனுக்குப் பிரியமான காரியங்களைச் செய்கிற காரணத்தால் நாம் பாடுகளைச் சகிக்க வேண்டி இருக்கிறது,

“அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிற படியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்” (I யோவான் 3:22).

நமது சபை தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு செய்கிற காரணத்தால் நாம் பாடுகளைச் சகிக்க வேண்டி இருக்கிறது,

“அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிற தெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது” (I யோவான் 3:22, 23).

நமது சபை போதகர்களுக்குக் கீழ்ப்படிந்து இருக்கிற காரணத்தால் நாம் பாடுகளைச் சகிக்க வேண்டி இருக்கிறது,

“தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர் களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தர வாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களான படியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமா யிருக்கமாட்டாதே” (எபிரெயர் 13:7, 17).

நமது சபை உறுதிப்பட்டவர்களாகக் “கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகி வருகிற காரணத்தால்’’ நாம் பாடுகளைச் சகிக்க வேண்டி இருக்கிறது – உறுதியாக!

“ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவா யிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக” (I கொரிந்தியர் 15:58).

இப்படிப்பட்ட காரியங்களை நாம் சகித்து வருவதால், நாம் சீஷர்களாகமாறவும், வரப்போகும் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் நாம் ஆளுகை செய்யவும் தேவன் நமக்குப் பயிற்சி கொடுக்கிறார்.

“நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்” (வெளிப்படுத்தல் 3: 21, 22).

போதகர் வாங் மிங் டாவ் (1900-1991) அவர்கள் தமது விசுவாசத்தின் காரணமாக 22 வருடங்கள் சீனாவில், கம்யூனிஸ்டு சிறையில் இருந்தார். அவர் சொன்னார்,

“சபை எந்தப் பாதையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். நான் கேள்விக்கு இடமில்லாமல், மரணபரியந்தமும் உண்மையாக இருக்கும்... அப்போஸ்தலர்களின் பாதையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பதில் சொன்னேன்.” டாக்டர் ஜான் சங் அவர்களின் அடக்க ஆராதனையில் அவர் பிரசங்கித்தார். அவர் சிறையில் இருந்தபொழுது தமது பற்களை எல்லாம் இழந்தார், அவரது செவிதிறன் மற்றும் கண் பார்வையை இழந்தார். அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபிறகு, அவரும் அவருடைய மனைவியும் தங்களுடைய குடியிருப்புப் பகுதியில் 1991ல் அவருடைய மரணம் வரையிலும் கிறிஸ்தவ குழுக்களுக்குப் போதனை செய்தார்கள்.

தயவுசெய்து நமது பாடலை எழுந்து நின்று பாடுங்கள்,

நான் ஒரு சிலுவையின் சிப்பாயாக இருக்கிறேனா,
ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றுகிறேனா;
அவருடைய காரியத்தைச் சொந்தமாக்க பயப்படுகிறேனா,
அல்லது அவரது நாமத்தைச் சொல்ல வெட்கப்படுகிறேனா?

நான் மலர் படுக்கையின்மீது சுகமாகப் படுத்து
ஆகாயத்தில் பறக்கவேண்டுமா,
மற்றவர்கள் பரிசைவெல்ல போராடும்பொழுது,
மற்றும் இரத்தக்கடலிலே பிரயாணம் செய்யும்பொழுது?

நான் எதிர்கொள்ள விரோதிகள் அங்கே இல்லையா?
நான் வெள்ளத்தைக் கடக்க வேண்டாமா?
இந்தப் பயனற்ற உலகத்தில் ஒரு நண்பரின் கிருபை,
தேவனிடம் செல்ல எனக்கு உதவி செய்யுமா?

நான் ஆளுகை செய்திட, நிச்சயமாக யுத்தம் செய்ய வேண்டும்;
தைரியத்தை அதிகரிக்கச் செய்யும், கர்த்தாவே!
நான் கஷ்டத்தை பொறுத்து, வலியைத் தாங்கி நிற்பேன்,
உம்முடைய வேதவசனத்தால் ஆதரிக்கப்பட்டு.
(“Am I a Soldier of the Cross?”, Dr. Isaac Watts, 1674-1748).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.