Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




வரப்போகும் காரியங்கள் – ஒரு புதுவருட போதனை

THINGS TO COME – A NEW YEAR’S SERMON
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஜனவரி 5, 2020 கர்த்தருடைய நாள் மாலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி

A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, January 5, 2020

“வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது; நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்” (I கொரிந்தியர் 3:22-23) ஸ்கோபீல்டு வேதாகமத்தில் ப. 1215).

“வருங்காரியங்கள்.” இந்த வார்த்தைகள் கிறிஸ்துவை அறியாதவர்களைப் பயமுறுத்திக்கொண்டிருக்கின்றன! “வருங்காரியங்கள்.” நம்மைச் சுற்றியுள்ள மக்கள் எதிர்காலத்தைப் பயத்தோடும் நடுக்கத்தோடும் எதிர்கொள்ளுவார்கள்! அவர்கள் ஒருவிதமான ஆழ்ந்த ஏமாற்றத்தையும் நம்பிக்கையற்ற தன்மையையும் உணருகிறார்கள்.

தொலைக்காட்சிகள், மற்றும் வலைதளங்கள் எழுந்ததினாலே, உலக அளவிலான துக்கங்கள், யுத்தங்கள், பயங்கரவாதங்கள், மரணம் மற்றும் அழிவுகளை ஒவ்வொரு நாளும் நமது வீட்டிலிருந்தே நம்மால் பார்க்க முடிகிறது. நாம் கொலைகளைப் பார்க்கிறோம். நாம் வெடிகுண்டுகள் வீசப்படுதல்களைப் பார்க்கிறோம். நாம் பயங்கரவாதத்தின் இரத்தம் சிந்தும் காரியங்களைப் பார்க்கிறோம். கற்பழிப்புகளை, குடிகள், கொள்ளைகள், பஞ்சம் மற்றும் உபத்திரவங்கள் நமது கண்களுக்கு முன்பாக உடனடியாக கொண்டுவரப் படுகின்றன. இந்த உலகத்திலே மற்ற எந்தத் தலைமுறைக்கும் பயங்கரங்கள் இப்படிப்பட்ட எளிதான அளவில் கிடைக்கவில்லை. அவர்கள் அதைப்பற்றி என்ன படித்தார்களோ அதை நாம் பார்க்கிறோம். நாம் உலக அளவிலான அழிவுகளை ஒவ்வொரு நாளும் செய்தி நிகழ்ச்சிகளில் பார்க்கிறோம் அவை எப்பொழுதும் பதட்டத்தை, கவலையை மற்றும் பயத்தை காற்று வழியாக கொடுக்கின்றன. நவீன எலக்ரானிக் தொடர்புகளைப் பற்றி கிறிஸ்துவானவர் முன்னதாக அறிந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் உலக அளவிலான “துன்பங்கள்” மற்றும் “பதற்றங்களை” பற்றி (லூக்கா 21:25) பேசினார் அதோடு,

“பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்” (லூக்கா 21:26).

ஆகாய விமானங்கள் கடத்தப்படுகின்றன. மாடிகட்டிடங்கள் நிர்மூலமாக்கப்படுகின்றன. நியுகுலர் வெடிகுண்டுகளை நன்றாக உபயோகப்படுத்தக்கூடிய பைத்தியம் பிடித்தவர்களின் கரங்களில் அவை வருகின்றன. அறிவியலில் பிரபலமான மனிதர்கள், மற்றும் முன்னோடிகளான அரசியல்வாதிகள், சமீபமாக எதிர்காலத்தில் நிகழவிருக்கும் உலகளவான குளிர்காய வைக்கும் அபாயங்களைப்பற்றி எச்சரிக்கிறார்கள். சிரிக்காதீர்கள்! ஆமாம், “வருங்காரியங்கள்“ மில்லியன் கணக்கானவர்களைப் பயமுறுத்திக்கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவானவர் முன்னறிவித்தபடியாக, “பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்(கின்றன).”

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM
என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

இந்தப் பயங்கரமான தொலைக்காட்சிகளின் படங்களுக்கு மேலாக, நான் ஒருபோதும் பார்த்திராத அளவில் மிகமோசமானவைகளை வாஷிங்டனில் நாம் எதிர்கொண்டோம்! அநேக அரசியல்வாதிகள் தங்கள் மனங்களை இழந்தவர்களாக காணப்படுகிறார்கள்! சிறப்பாக குடியரசுகளில் உள்ளவர்கள்!

இவைகள் எல்லாவற்றிக்கும் மேலாக நமது குடும்பங்கள் உடைக்கப்படுகின்றன, விவாகரத்துகள் தீவிரமாகின்றன, நமது பிள்ளைகள் சிதறடிக்கப்படுகிறார்கள், குழப்பப்படுகிறார்கள் மற்றும் அவர்கள்மேல் அழுத்தும் சமூக அமைப்புகளின் தழும்புகளினால் தூரமாகக் கொண்டுபோகப்படுகிறார்கள். இந்தத் தலைமுறையின் இளம் மக்களில் மூன்றில் ஒரு பங்கு கருவிலே அழிக்கப்படுகின்றன – 60 மில்லியன் மக்கள்! ஆப்பிரிக்க அமெரிக்க பிள்ளைகளில் ஏழில் நான்குபேர் இரத்தம் மற்றும் படுகொலையாகிய “சட்டப்பூர்வமான” கருகலைப்புக்கு ஆளாகிறார்கள். இவ்வாறாக, மில்லியன் கணக்கான பெண்களின் வயிற்றில் பயங்கரவாதம் உட்செலுத்தப்படுகின்றன. எந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை! ஒளிந்துகொள்ள எந்த இடமும் இல்லை! பாராட்டப்பட்ட ஐரிஸ் பாடகர் வில்லியம் பட்லர் யாட்ஸ் அவரது எல்லா பாடல்களிலும் சொல்லியிருக்கிறார், “இரண்டாம் வருகை”:

காரியங்கள் விழுந்து போகும்; மையத்தால் தாங்க முடியாது;
வெறுமையான அராஜகம் உலகத்தில் கட்டவிழ்க்க பட்டுள்ளது,
இரத்தம் மங்கும் கட்டவிழ்க்கும் காலம், எங்கும் உள்ளது
கபடின்மை விழாகொண்டாட்டம் மூழகி போனது;
மோசமானவர்கள் இருக்கும்போது,
   எல்லா உணர்வின்மையும் சிறந்திருக்கிறது
உணர்ச்சி வயப்பட்டநிலை தீவிரமாக நிறைந்திருக்கின்றன...

பாராட்டப்பட்ட தங்கப்பதக்கத்தை வாஷிங்டன்னில் வாங்கினபொழுது, பில்லி கிரஹாம் சொன்னார், “நாம் சுய அழிவின் ஒரு சமூக சமநிலை விளிம்பின்மேல் இருக்கிறோம்” (Los Angeles Times, May 3, 1996, p. A-10). மக்கள் எந்த இடத்திலும் பாதுகாப்பில்லை என்று உணர்கிறார்கள்! நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கும் தெலைக்காட்சி மற்றும் வலை தளங்களில் பயங்கரமான அழிவலிருந்து தப்பி மறைந்துகொள்ள எந்த மறைவிடமும் இல்லை. “வருங்காரியங்கள்” என்ற வார்த்தைகள் பயத்தையும் நடுக்கத்தையும் நிரப்புவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!

ஆனால் நமது பாடம் இழக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது அல்ல. ஏற்கனவே மாற்றப்பட்டவர்களுக்கு இது எழுதப்பட்டது. 21ம் வசனத்தில், அப்போஸ்தலன் சொல்லுகிறார், “எல்லாம் உங்களுடையது.” 22ம் வசனத்தில் ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்குரிய காரியங்களை அவர் பட்டியலிட்டார். அந்தப் பட்டியலின் முடிவில், அவர் சொன்னார், “வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது” (I கொரிந்தியர் 3:22). நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவாக இருந்தால், எதிர்காலம் உங்களுடையதாக இருக்கும்!

“வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது”
(I கொரிந்தியர் 3:22).

I. முதலாவது, கிறிஸ்தவத்தின் வெற்றி உங்களுடையது!

இயேசுவானவர் சொன்னார்,

“நான்… என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்தேயு 16:18).

பிரசங்கிகளின் இளவரசன் சி. எச். ஸ்பர்ஜன் சொன்னார்,

அரசியல் சூழ்நிலைகளை... நாம் பார்க்கும்பொழுது, அது இருளானதாக மற்றும் பயமுறுத்துவதாக நாம் நினைக்கிறோம். மேகங்கள் அங்கும் இங்குமாக கூடுகின்றன; தேவனுடைய சபையின் ஆபத்துச் சங்கடமானதாக தோன்றும்பொழுது, சிங்காசன வீழ்ச்சியின், நொறுக்குதலின் மத்தியில் நாம் நடுங்குகிறோம். ஆனால் எந்தவிதமான ராஜாங்க மாற்றங்களும் சபையை அழிப்பதற்கு ஒருபோதும் முடியாது. வரலாற்றின் ஒவ்வொரு நெருக்கடிகளிலும், மாநிலங்களின் ஒவ்வொரு கொடுமையான கிளர்ச்சிகளிலும், உலகத்திலே உண்டான ஒவ்வொரு பேரழிவுகளிலும், சபை எப்பொழுதும் நிச்சயமாக வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கிறது... தேசங்களின் திவாலான நிலைகளிலிருந்து, கிறிஸ்து [சபை] பொருளாதாரத்தை கூட்டி சேர்க்கிறார் (சி. எச். ஸ்பர்ஜன், “வருங்காரியங்கள்! பரிசுத்தவான்களின் ஒரு மறபுரிமையாகும்,“Spurgeon’s Sermons Beyond Volume 63, Day One Publications, 2009, pp. 341-342).

பிரிட்டிஷ் பேரரசு நொறுங்கினது மற்றும் விழுந்தது, ஆனால் கிறிஸ்தவம் அதன் முன்பிருந்த குடியிருப்புகளில் செழித்தது. தேவன் அனுப்பிய எழுப்புதலின் நேரத்தில் மில்லியன் கணக்காக மக்களைச் சபைகளில் கூட்டி சேர்த்தன! அமெரிக்க “பேரரசு” அழிவின் விளிம்பில் இருந்தபொழுது, பத்தாயிரக்கணக்கான மக்கள் தேவனுடைய சர்வ வல்லமையினால் மூன்றாம் உலக நாடுகளில் கிறிஸ்துவின் படையில் கூட்டி சேர்க்கப்பட்டார்கள்! மற்றும், இன்று இரவில் நான் பேசும்பொழுது, இரக்கமற்ற முறையில் இயேசுவானவரின் தீர்க்கதரிசனம் நிறைவேறுதலை நோக்கி நகருகிறது,

“ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்…” (மத்தேயு 24:14).

“கிரிடங்கள் மற்றும் சிங்காசனங்கள் ஒருவேளை அழியலாம்.” அதைப் பாடுங்கள்!

கிரிடங்கள் மற்றும் சிங்காசனங்கள் ஒருவேளை அழியலாம்,
   ராஜ்யங்கள் எழலாம் மற்றும் விழலாம்,
ஆனால் இயேசுவின் சபை என்றும் நிலைத்து நிற்கும்;
பாதாளத்தின் வாசல்கள் ஒருபோதும்
   ‘சபை பெருக்கத்தை மேற்கொள்ள முடியாது;
கிறிஸ்துவின் சொந்த வாக்குதத்தம் நமக்கு உண்டு;
   மற்றும் அது தவறமுடியாது.
முன்னேறி வாருங்கள், கிறிஸ்தவ படைவீரர்களே,
   யுத்தத்துக்கு அணிவகுப்பதுபோல,
இயேசுவானவரின் சிலுவை நமக்கு முன்னே போகிறது அதோடு!
   (“Onward, Christian Soldiers” by Sabine Baring-Gould, 1834-1924).

இப்பொழுது சண்டையிடும், சபை, விரைவில் வெற்றிபெறும் சபையாக மாறும்! விரைவாக தூதனுடைய சத்தம் தொனிக்கும்,

“உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின: அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்” (வெளிப்படுத்தல் 11:15).

“‘வருங்காரியங்கள், எல்லாம் உங்களுடையது” (I கொரிந்தியர் 3:22).

II. இரண்டாவதாக, வரப்போகும் கிறிஸ்துவின் ராஜ்யம் உங்களுடையது!

இயேசுவானவர் சொன்னார்,

“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” (மத்தேயு 5:5).

மறுபடியுமாக, இயேசுவானவர் சொன்னார்,

“பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்” (லூக்கா 12:32).

இங்கே அமெரிக்காவிலும் மற்றும் உலக முழுவதிலும் கிறிஸ்தவர்கள் பரிகாசம் பண்ணப்படுகிறார்கள் மற்றும் தாழ்வாக கருதப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் உபத்திரவப்படுத்தப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப் படுகிறார்கள், மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காக அடிக்கடி கொலை செய்யப்படுகிறார்கள். நாம் தோற்றுப்போவோம் என்று நமது காலத்தில் உள்ள சந்தேகிப்பவர்களும் மனிதநேயவாதிகளும் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் முற்றிலும் தவறானவர்கள்! வேதாகமம் சொல்லுகிறது,

“அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” (II தீமோத்தேயு 2:12).

அவருடைய ராஜாங்கம் இந்த உலகத்தை ஆளும்போது! அப்பொழுது நாம் கிறிஸ்துவுக்காக பாடுவோம்,

“நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” (வெளிப்படுத்தல் 5:9-10).

உங்கள் பாட்டு தாளிலிருந்து, 2வது பாடலைப் பாடுங்கள், “இரவு இருட்டாக இருந்தது.” அதை பாடுங்கள்!

இரவு இருட்டாக இருந்தது,
   பாவம் எங்களுக்கு விரோதமாக யுத்தம் செய்தது;
பாரமான துக்க சுமையை நாம் சுமந்தோம்;
ஆனால் இப்பொழுது அவருடைய
   வருகையின் அடையாளங்களை நாம் பார்க்கிறோம்;
நமது இருதயங்கள் நமக்குள் பிரகாசிக்கிறது,
மகிழ்ச்சியின் பாத்திரம் நிரம்பி வழிகிறது!
அவர் மறுபடியும் வருகிறார், அவர் மறுபடியும் வருகிறார்,
மனிதரால் தள்ளப்பட்ட, அதே இயேசுவானவர்;
அவர் மறுபடியும் வருகிறார், அவர் மறுபடியும் வருகிறார்;
வல்லமை மற்றும் மிகுந்த மகிமையோடும், அவர் மறுபடியும் வருகிறார்!
    (“He is Coming Again” by Mabel Johnston Camp, 1871-1937).

அதை மறுபடியும் பாடுங்கள்!

இரவு இருட்டாக இருந்தது,
   பாவம் எங்களுக்கு விரோதமாக யுத்தம் செய்தது;
பாரமான துக்க சுமையை நாம் சுமந்தோம்;
ஆனால் இப்பொழுது அவருடைய
   வருகையின் அடையாளங்களை நாம் பார்க்கிறோம்;
நமது இருதயங்கள் நமக்குள் பிரகாசிக்கிறது,
மகிழ்ச்சியின் பாத்திரம் நிரம்பி வழிகிறது!
அவர் மறுபடியும் வருகிறார், அவர் மறுபடியும் வருகிறார்,
மனிதரால் தள்ளப்பட்ட, அதே இயேசுவானவர்;
அவர் மறுபடியும் வருகிறார், அவர் மறுபடியும் வருகிறார்;
வல்லமை மற்றும் மிகுந்த மகிமையோடும், அவர் மறுபடியும் வருகிறார்!

நீ மாற்றப்பட்டால், வரப்போகும் கிறிஸ்துவின் ராஜ்யம் உன்னுடையது!

“வருங்காரியங்கள் எல்லாம் உங்களுடையது” (II கொரிந்தியர் 3:22).

III. மூன்றாவதாக, புதிய வானம் மற்றும் புதிய பூமி உன்னுடையது!

இந்தப் பழைய உலகம் கடந்து போகும்! கிறிஸ்து ஆயிர வருஷம் இந்தப் பூமியிலே ஆளுகை செய்யும்பொழுது, சாத்தான் அவனுடைய சிரையிலிருந்து விடுவிக்கப்படுவான் மற்றும் உலகத்தில் மாற்றப்படாத கலககாரர்களை அவருக்கு விரோதமாக நடத்துவான் (வெளிப்படுத்தல் 20:7-9). அதன் பிறகு தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இரங்கி வரும் (வெளிப்படுத்தல் 20:9),

“அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்… அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்” (II பேதுரு 3:10, 12).

ஆனால் ஒருபோதும் நம்பிக்கையை விட்டுவிட வேண்டாம், அப்போஸ்தலனாகிய யோவான் தமது தரிசனத்திலே சொன்னார்,

“நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின: சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்” (வெளிப்படுத்தல் 21:1-2).

தேவன் புதிய வானம் மற்றும் புதிய பூமி சிருஷ்டிக்கும்பொழுது, அந்தப் புதிய எருசலேமிலே நீ இருப்பாய் – நீ ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருந்தால்! ஆமாம், தேவனுடைய அந்தப் புதிய பரதீசிலே, அந்தப் புதிய பூமியிலே, மற்றும் அந்தப் புதிய எருசலேமிலே நீ என்றென்றுமாக இருப்பாய்!

வருங்காரியங்களாகிலும் எல்லாம் உங்களுடையது” (I கொரிந்தியர் 3:22).

“வருங்காரியங்களாகிலும் எல்லாம் உங்களுடையது” (I கொரிந்தியர் 3:22).

ஆனால் நாம் ஆரம்பத்தில் வாசித்த முழுபாடத்துக்கு, மறுபடியும் இன்னொருதரம் திரும்ப வந்து நான் முடிக்க வேண்டியது அவசியம்,

“...வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது; நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்” (I கொரிந்தியர் 3:22-23).

நாம் “வருங்காரியங்களான” கிறிஸ்துவுக்குரிய அற்புதமான காரியங்களை பார்த்தோம். ஆனால் நீ அவர்களில் ஒருவராக இருக்கிறாயா? நீ “கிறிஸ்துவினுடையவர்” என்று நிச்சயமாக சொல்ல முடியுமா? அப்படி உன்னால் சொல்ல முடியாவிட்டால், அந்த மகிழ்ச்சியான வாக்குதத்தங்களில் ஒன்றும் உனக்குச் சொந்தமல்ல! ஸ்பர்ஜன் சொன்னார், “உனக்கு விசுவாசம் இல்லையானால், எதிர்காலத்தில் உனக்கு ஒன்றும் இருக்காது ஆனால் பயம் மட்டுமே... நீ கிறிஸ்து உடையவராக இல்லாவிட்டால், உன்னை மகிழ்ச்சி படுத்த நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது” (ஐபிட்., ப. 347).

உனக்கு என்ன நன்மையை செய்யும் இந்தப் பெரிய பணத்தொகையைச் சம்பாதித்திருந்தால், மற்றும் மிகுந்த வேடிக்கையும் மற்றும் இன்பமும் இந்த வாழ்க்கையில் நீ அனுபவித்திருந்தால், முடிவில், நீ அதை எல்லாம் இழந்து விடுவாய் கிறிஸ்து இல்லாமல் மரணமடைவாய்? நீ கிறிஸ்துவுக்கு உண்மையாக இல்லாதிருந்தால் “வருங்காரியங்கள்“ உனக்கு ஒரு பெரிய பயங்கரமாக இருக்கும். உன்னுடைய ஆத்தம இரட்சிப்புக்காகப் பெரிதாக சிந்திக்கும்படி உன்னைக் கெஞ்சுகிறேன். உன்னுடைய பாவங்கள் மற்றும் உனது பாவம்நிறைந்த இருதயத்தைப்பற்றி நினைத்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். உனது பாவம் கண்டிப்பாக, சித்தத்தோடு உனது எல்லா நம்பிக்கையையும் பறித்துக்கொள்ளும் என்பதையும், மற்றும் அக்கினி கடலிலே தள்ளும் என்பதையும், நீ சிந்தித்துப்பார்க்கும்படி வேண்டுகிறேன். இந்த உலகத்தின் பாவ இருளிலிருந்து நீ திரும்ப வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நீ நேராக மற்றும் உடனடியாக இயேசு கிறிஸ்துவானவரிடம் வரவேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நீ அவரை விசுவாசத்தோடு பார்த்து உனது பாவத்தை அவருடைய நித்தய இரத்தத்தினால் போக்கிக்கொள்ளும்படி நான் ஜெபிக்கிறேன்! அவரிடம் வா. ஒருதரம் சிலுவையில் அறையப்பட்டு, இப்பொழுது மகிமைபடுத்தப் பட்டிருக்கும், தேவகுமாரனிடம் உன்னை நீயே ஒப்புக்கொடுக்கும்படி நான் ஜெபிக்கிறேன். அவர் உன்னை இரட்சிப்பார்! அவர் உன்னை இரட்சிப்பார்! அதன்பிறகு நான் பேசின மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்த “வருங்காரியங்கள்,” உன்னுடையதாகும், அதேபோல நம்முடையதாகும்!

ஒரு உண்மையான கிறிஸ்தவராக மாறுவதைப்பற்றி நமது போதகரிடம் நீ பேசவிரும்பினால், உங்கள் இருக்கையைவிட்டு எழுந்து இப்பொழுதே பின்னால் உள்ள அறைக்கு நடந்து செல்லவும் மற்றும் அங்கே அவர் உன் பாவத்தைப்பற்றியும், கிறிஸ்து இயேசுவில் உள்ள இரட்சிப்பைப்பற்றியும் உன்னிடம் பேசமுடியும்.

இப்பொழுது இன்னும் உங்களுக்கு ஒரு வார்த்தை. கிறிஸ்துவில் இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டுள்ள நாம் இந்த நற்செய்தியைத் தூரத்திலும் மற்றும் அருகிலும் பரப்ப தேடவேண்டியது சரியானது இல்லையா? கிறிஸ்து நமக்குக் கொடுத்த பெரிய கட்டளையை (மத்தேயு 28:19-20) நிறைவேற்ற கீழ்ப்படிய நமது வாழ்க்கையை மறுபிரதிஷ்டை செய்து இந்தப் புதிய வருஷத்தை துவக்க வேண்டியது முறையானது இல்லையா?

நாம் சொல்லுவோம், நமது எல்லா இருதயங்கள் மற்றும் ஆத்துமாக்களோடும், தனிபட்ட சுவிசேஷகத்தை செய்ய கீழ்ப்படிவோம் என்று; மற்றும் நமது சபையின் சுவிசேஷகூடுகையில் கலந்து கொண்டு இயேசுவானவரில் உள்ள இரட்சிப்பின் சுவிசேஷத்தை கேட்க நமது குடும்பம் மற்றும் நண்பர்களைத் தேடி கொண்டுவருவோம். 2020ல் ஒவ்வொரு தருணத்திலும் சுவிசேஷபணி செய்ய கீழ்ப்படிய தேவன் உதவி செய்வாராக! உங்கள் பாட்டுத்தாளில் உள்ள கடைசி கீர்த்தனை பாடலை எழுந்து நின்று பாடவும்.

இந்த நேரத்துக்கு ஏற்ற ஒரு வார்த்தையை,
   ஒரு நடுங்க செய்யும் ஒரு வார்த்தையை,
   வல்லமையுள்ள ஒரு வார்த்தையை எங்களுக்கு தாரும்,
ஒரு யுத்த கதறலை, வெற்றி அல்லது மரணத்துக்கு
   அழைக்கும் ஒரு அக்கினி மூச்சை தாரும்.
சபை ஓய்ந்துள்ள நிலையிலிருந்து கிளர்ந்தெழசெய்யும்,
   எஜமானின் பெரிய வேண்டுதலை கவனிக்க செய்யும் ஒரு வார்த்தை.
அழைப்பு கொடுக்கப்பட்டது, சேனையே, எழுந்திரு,
   நாம் கவனிக்கும் வார்த்தை, சுவிசேஷ ஊழியம் செய்!

மகிழ்ச்சி சுவிசேஷத்தை இப்பொழுது அறிவி,
   உலகமுழுவதிற்கும், இயேசுவானவரின் நாமத்தில்;
இந்த வார்த்தை ஆகாயங்களிலே ஒலிக்கிறது:
   சுவிசேஷ ஊழியம் செய்! சுவிசேஷ ஊழியம் செய்!
மரிக்கும் மனிதருக்கு, ஒரு விழுந்துபோன ஜாதிக்கு,
   சுவிசேஷ கிருபையின் வரத்தை அறியசெய்;
இப்பொழுது உலகம் இருளில் விழுந்து கிடக்கிறது,
   சுவிசேஷ ஊழியம் செய்! சுவிசேஷ ஊழியம் செய்!
   (“Evangelize! Evangelize!” by Dr. Oswald J. Smith, 1889-1986;
   altered by Dr. Hymers; to the tune of “And Can It Be?”
   by Charles Wesley, 1707-1788).

ஆமென்!

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.


முக்கிய குறிப்புகள்

வரப்போகும் காரியங்கள் – ஒரு புதுவருட போதனை

THINGS TO COME – A NEW YEAR’S SERMON

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

“வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது; நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்” (I கொரிந்தியர் 3:22-23).

(லூக்கா 21:25, 26; I கொரிந்தியர் 3:21, 22).

I.   முதலாவது, கிறிஸ்தவத்தின் வெற்றி உங்களுடையது!
மத்தேயு 16:18; மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 11:15.

II.  இரண்டாவதாக, வரப்போகும் கிறிஸ்துவின் ராஜ்யம் உங்களுடையது! மத்தேயு 5:5; லூக்கா 12:32; II தீமோத்தேயு 2:12;
வெளிப்படுத்துதல் 5:9-10.

III. மூன்றாவதாக, புதிய வானம் மற்றும் புதிய பூமி உன்னுடையது! வெளிப்படுத்துதல் 20:7-9; II பேதுரு 3:10, 12;
வெளிப்படுத்துதல் 21:1-2; மத்தேயு 28:19-20.