Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
சுவிசேஷத்தின் அதிரடிவெடி

THE EVANGELISM EXPLOSION
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

நவம்பர் 3, 2019 கர்த்தருடைய நாள் மாலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி

A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, November 3, 2019

“கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப் பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” (எபேசியர் 2:8, 9).


சென்ற வியாழக்கிழமை இரவு நான் நமது சபை ஜெபகூட்டத்துக்கு வந்தேன். நான் பிரசங்கிக்கவில்லை அல்லது ஜெபக்கூட்டத்தை நடத்தவுமில்லை. ஆனால் நான் ஆடிடோரியத்தின் பின்னாக உட்கார்ந்தபோது ஒரு இழக்கப்பட்டிருந்த இளம் வாலிபனைப்பற்றி எனது மனசாட்சியில் உணர்த்தப்பட்டேன். கூட்டம் முடிந்த போது மற்றவர்கள் அறையைவிட்டு போனபிறகு அவனை அழைத்து எனது அருகில் வந்து அமரும்படி கேட்டுக்கொண்டேன்.

சுவிசேஷத்தின் அதிரடிவெடி Evangelism Explosion என்ற டாக்டர் D. ஜேம்ஸ் கென்னடி அவர்கள் எழுதினதை வாசித்துக் கொண்டிருந்தேன். அதனால் இந்த இளம் வாலிபனுக்கு டாக்டர் கென்னடி அவர்கள் சொன்னதைக் கொண்டு முயற்சி செய்யலாம் என்று நினைத்தேன். அது அவனுக்கு மிகவும் எளிமையானதாக காணப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவன் எங்கள் சபையில் அவனது வாழ்நாள் முழுவதும் வந்துகொண்டிருப்பவன். அவன் கணக்கில்லாத சுவிசேஷ போதனைகளைக் கேட்டவன். அவன் ஏற்கனவே கேட்ட பெரிய போதனைகளில் பெற்றுக்கொள்ள தவறினதை டாக்டர் கென்னடி அவர்களின் இந்த எளிமையான கருத்துக்கள் எப்படி அவனுக்குக் கொடுக்க முடியும்? ஆனால், நாங்கள் சொன்ன சகலமும் அவனை இரட்சிப்பதற்கு உதவிசெய்ய முடியாமல் போனாலும் அவனுக்கு டாக்டர் கென்னடி அவர்களின் இந்த எளிமையான விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM
என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

நான் அவனிடம் சொன்னேன், “நீ இன்று இரவு மரித்து, தேவனுக்கு முன்பாக பரலோக வாசற்கதவின் முன்னால் நிற்கும்போது – தேவன் உன்னிடம், ‘நான் உன்னை பரலோகத்துக்கு உள்ளே ஏன் அனுப்ப வேண்டும்?’ என்று கேட்டால் நீ தேவனிடம் என்ன சொல்லுவாய்?” அவன் அநேக நொடிகள் அமைதியாக இருந்தான். அதன்பிறகு அவன் சொன்னான், “நான் ஒரு நல்ல பையனாக இருந்திருக்கிறேன் என்று நான் தேவனிடம் சொல்லுவேன்.”

ரோமர் 6:23 சொல்லுகிறது, “தேவனுடைய கிருபைவரம் நித்தியஜீவன்.” பரலோகம் ஒரு இலவசமான ஈவு. அதை சம்பாதிக்கவோ அல்லது அதற்கு தகுதியாகவோ முடியாது. அதன்பிறகு நான் சொன்னேன், “நீ செய்ததைபோலவே நான் அநேக ஆண்டுகளாக நினைத்துக்கொண்டிருந்தேன். நான் போதுமானஅளவு நல்லவனாக இருந்தேன், நான் பரலோகத்தை ‘சம்பாதிக்க’ வேண்டும் மற்றும் அதற்காக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன்.”

அவன் சொன்னதை விசுவாசிப்பதற்கு எனக்குக் கடினமாக இருந்தது. அதனால் திரும்பவும் அந்தக் கேள்வியைக் கேட்டேன்: “தேவன் உன்னிடம், ‘நான் உன்னை பரலோகத்துக்கு உள்ளே ஏன் அனுப்ப வேண்டும்?’ என்று தேவன் கேட்டால் நீ அவரிடம் என்ன சொல்லுவாய்?” இந்த முறை அவனுடைய கண்களில் கண்ணீர் வருவதை நான் கவனித்தேன். ஆனால் அவன் அதேபதிலையே கொடுத்தான், “நான் ஒரு நல்ல பையனாக இருந்திருக்கிறேன் என்று நான் தேவனிடம் சொல்லுவேன்.” இங்கே ஒரு இளம் வாலிபன் தனது டீன்ஏஜின் இறுதியில் இருப்பவன் தனது வாழ்நாள் முழுவதும் எங்கள் சபைக்கு வந்துகொண்டிருந்தவன் – ஞாயிறு காலை மற்றும் ஞாயிறு இரவு, மற்றும் வாரமத்தியில் ஜெபகூட்டத்துக்குத் தவறாமல் வந்தவன். இருந்தாலும் அவனது பதில் தெளிவாக இருந்தது – நற்கிரியைகள் மூலமாக இரட்சிப்பு என்பதை அவன் விசுவாசித்து இருந்தான். மற்றும் அவன் எபேசியர் 2:8, 9ஐ விசுவாசிக்கவில்லை!!!

நான் அவனைத் திட்டவில்லை. அவனிடம் நான் எளிமையாக சொன்னேன், “அடுத்த சில நிமிடங்களில் நீ இதுவரைக் கேட்டிராத மிகப்பெரிய செய்தியை நான் உனக்குச் சொல்லப்போகிறேன்.” பிறகு அவனை எனது வேதாகமத்தில் எபேசியர் 2:8, 9ஐ வாசிக்க செய்தேன்.

“கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப் பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” (எபேசியர் 2:8, 9).

பிறகு நான் சொன்னேன், “நாம் இந்த வார்த்தைகளை வேதாகமத்தில் நெருக்கமாக பார்க்கலாம்.” இது “கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்” என்று ஆரம்பிக்கிறது. கிருபை ஒரு பரிசு, “அது தேவனுடைய பரிசு.” பரலோகம் ஒரு பரிசு – நித்திய ஜீவனாகிய பரிசு. அதன்பிறகு ரோமர் 6:23ன் இரண்டாம் பகுதியை, “தேவனுடைய கிருபைவரமோ நித்தியஜீவன்” என்று குறிப்பிட்டேன். பரலோகம் ஒரு இலவசமான பரிசு. இது சம்பாதிக்க முடியாதது அல்லது அதற்குத் தகுதிபெற முடியாதது. அதன்பிறகு நான் சொன்னேன், “நீ நினைப்பதைபோலவே நான் அநேக ஆண்டுகளாக நினைத்துக்கொண்டிருந்தேன். நான் போதுமானஅளவு நல்லவனாக இருந்தேன், நான் பரலோகத்தைச் ‘சம்பாதிக்க’ வேண்டும் மற்றும் அதற்காக வேலை செய்ய வேண்டும் என்று இருந்தேன். அதன்பிறகு இறுதியாக பரலோகம் ஒரு இலவசமான பரிசு – முற்றிலும் இலவசமானது என்று கண்டு கொண்டேன்! அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது! வேதாகமம் சொல்லுகிறது, ‘கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல’ (எபேசியர் 2:8, 9).”

அதன்பிறகு அவனிடம் சொன்னேன் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்,” (ரோமர் 3:23). நமது வார்த்தைகளில், சிந்தனைகளில் மற்றும் செயல்களில் நாம் பாவம் செய்தோம். பரலோகத்துக்குப் போவதற்கு நம்மில் ஒருவருக்கும் போதுமான நல்ல தகுதி இல்லை. நாம் போதுமான அளவுக்கு பரிபூரணராக இருக்க முடியாது.

ஆனால் தேவன் இரக்கமுள்ளவராக இருக்கிறார். அவர் நம்மை தண்டிக்க விரும்பவில்லை. அதேசமயம் தேவன் நேர்மையுள்ளவராகவும் இருக்கிறார் – அதனால் அவர் பாவத்தைத் தண்டிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. தேவன் தமது ஞானத்தில் அந்தத் தீர்வைக் கண்டார். நம்மை இரட்சிக்க தமது குமாரன் இயேசுவை, அனுப்பினதன் மூலமாக, இந்தப் பிரச்சனையைத் தேவன் தீர்த்து வைத்தார். இயேசு யார்? இயேசு தேவ மனிதனாக இருக்கிறார். வேதாகமத்தின்படி, இயேசு கிறிஸ்து தேவன், திரித்துவத்தின் இரண்டாவது நபர். மற்றும் வேதாகமம் சொல்லுகிறது அதாவது இயேசு “மாம்சமாகி, நமக்குள் வாசம் பண்ணினார்” (யோவான் 1:1, 14). இயேசு, தேவ மனிதனாக, சிலுவையிலே மரித்தார் மற்றும் நமது பாவத்துக்குரிய தண்டனை கிரயத்தைச் செலுத்த மற்றும் பரலோகத்திலே நித்திய ஜீவனை நமக்குக் கொடுக்க மரித்தோரிலிருந்து அவர் உயிர்த்தெழுந்தார். இயேசு நமது பாவத்தைத் தம்மீது, சிலுவையின்மேல் எடுத்துக்கொண்டார். கிறிஸ்து “தமது சொந்த சரீரத்திலே நமது பாவங்களைச் சுமந்தார்” (I பேதுரு 2:24). அவர் கல்லரையிலே மூன்று நாட்கள் அடக்கம்பண்ணப்பட்டிருந்தார். ஆனால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் மற்றும் நமக்காக ஒரு இடத்தை ஆயத்தம்பண்ண, பரலோகம் சென்றார். இப்பொழுது இயேசு பரலோகத்தில் நித்திய ஜீவனை – நமக்கு ஒரு இலவசமான ஈவாக கொடுக்கிறார். அதை நாம் எப்படி பெற்றுக்கொள்ளுகிறோம்? அந்த ஈவை விசுவாசத்தின் மூலமாக நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்! “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபேசியர் 2:8).

இயேசுவில் விசுவாசம் வைப்பது பரலோகத்திற்குப் போக கதவைத் திறக்கிறது. விசுவாசம் என்பது வெறும் அறிவுசார்ந்து ஆமோதிப்பது அல்ல. இயேசுவின் தெய்வீகத்தன்மையைப் பிசாசு மற்றும் பேய்களும் விசுவாசிக்கின்றன. ஆனால் அவைகள் இரட்சிக்கப்படுவதில்லை. விசுவாசம் என்பது வெறும் இந்த வாழ்க்கைக்குத் தேவையான – ஆரோக்கியம், பணம், பாதுகாப்பு மற்றும் வழிநடத்துதல் போன்ற காரியங்களைப் பெறுவது அல்ல – இந்த வாழ்க்கைக்குரிய காரியங்கள் கடந்து போகும்.

விசுவாசம் என்பது, வேதாகமத்தின்படி, இயேசுவை நம்புவது மட்டுமே ஆகும். அதனால் நாம் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும்படியாக, கிறிஸ்து நம்மை பரலோகத்துக்கு அழைத்துச்செல்ல வந்தார்! வேதாகமம் சொல்லுகிறது, “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப்போஸ்தலர் 16:31).

மக்கள் இரண்டு காரியங்களில் ஒரு காரியத்தை மட்டும் நம்புகிறார்கள் – தங்களிலோ அல்லது இயேசு கிறிஸ்துவிலோ நம்பிக்கை கொள்ளுகிறார்கள். நான் போதுமான அளவு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு எனது சொந்த பிரயாசங்களை நம்பிக்கொண்டு இருந்தேன். அதன்பிறகு என்னை நம்புவதை நிறுத்த வேண்டும், மற்றும் அதற்குப்பதிலாக இயேசுவை நம்ப வேண்டும் என்று உணர்ந்தேன். அதை நான் செய்தேன் – இயேசு எனக்கு நித்திய ஜீவனாகிய ஈவைக் கொடுத்தார். அது ஒரு ஈவு, “கிரியையினால் கிடைப்பது அல்ல.”

அது எப்படி செயல்படுகிறது என்று இந்த நாற்காலியைக் கொண்டு நான் விளக்குகிறேன். நீ இந்த நாற்காலியில் அமர்ந்தால், அது உன்னைத் தாங்கும் என்று நீ விசுவாசிக்கிறாயா? (ஆமாம்).

ஆனால் இப்பொழுது அது என்னை தாங்கவில்லை – ஏனென்றால் நான் அதன்மீது அமர்ந்துகொண்டு இருக்கவில்லை. நான் அந்த நாற்காலியை மெய்யாகவே நம்புகிறேன் என்பதை நான் எப்படி நிருபிக்க முடியும்? அதன்மீது அமருவதன் மூலமாக நான் நிரூபிக்க முடியும், அதுதான் சரி!

இயேசுவோடும் நாம் அதைதான் செய்ய வேண்டும். உன்னை பரலோகத்துக்கு எடுத்து செல்வதற்கு நீ அவரையே நம்பி இருக்க வேண்டியது அவசியமாகும். நீ சொன்னாய், “நான் ஒரு நல்ல பையனாக இருந்திருக்கிறேன் என்று நான் தேவனிடம் சொல்லுவேன்” என்று. உனது பதிலில் இருக்கும் ஒரே நபர் யார்? (நீ).

நீ அதைச் சொன்னபொழுது பரலோகத்துக்குப் போவதற்கு நீ யாரை நம்பிக்கொண்டு இருக்கிறாய்? (உன்னை, அது சரி).

நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள உன்னை நம்புவதை நிறுத்த வேண்டியது அவசியம், மற்றும் அதற்குப்பதிலாக இயேசுவை நம்ப வேண்டும். (காலியான நாற்காலியில் உட்காரு).

அது உனக்கு அர்த்தத்தை கொடுத்ததா? இப்பொழுது தேவன் உன்னை கேட்கும் கேள்வி இதுதான் – “நீ இப்பொழுதே நித்திய ஜீவனாகிய ஈவைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறாயா?” (ஆமாம், நான் விரும்புகிறேன்).

இப்பொழுது நான் ஜெபிப்பேன், “எனது நண்பருக்கு நீர் இப்பொழுதே நித்திய ஜீவனைக் கொடுக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.”

இப்பொழுது, இயேசுவானவர் இங்கே இருக்கிறார், அவர் செவி சாய்க்கிறார். உனக்கு மெய்யாகவே நித்திய ஜீவன் வேண்டுமென்று விரும்பினால் நீ இயேசுவானவரிடம் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் கொடுக்கும் வார்த்தைகளைத் திரும்ப சொல்லவும், ஆனால் அவைகளை இயேசுவானவரிடம் சொல்லவும்,

“இயேசுவானவரே, நான் இப்பொழுதே உம்மை நம்ப விரும்புகிறேன். நான் ஒரு பாவியாக இருக்கிறேன். நான் என்னையும் மற்றும் எனது சொந்த நன்மையையும் நம்பிக்கொண்டு இருந்தேன். நான் இப்பொழுது உம்மை நம்ப விரும்புகிறேன், கர்த்தராகிய இயேசுவே. நான் இப்பொழுது உம்மை நம்புகிறேன். எனது பாவங்களுக்கு உரிய கிரயம் கொடுக்க நீர் மரித்தீர் என்று நான் விசுவாசிக்கிறேன். இயேசுவே, நான் இப்பொழுது உம்மை நம்புகிறேன். எனது சொந்த நன்மை மற்றும் என் பாவங்களிலிருந்து நான் திரும்புகிறேன். நான் உம்மை நம்புகிறேன். நித்திய ஜீவனாகிய இலவசமான ஈவை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். இயேசுவானவரே, உமது நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.”

இப்பொழுது, நான் உனக்காக ஜெபிப்பேன். “இயேசுவானவரே, எனது நண்பர் ஜெபித்த அந்த ஜெபத்தை நீர் கேட்டீர். உமது சத்தத்தை அவன் தன் ஆத்துமாவில் கேட்கும்படி செய்யவேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், உம்முடைய குரல் சொல்கிறது, ‘உனது பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது.’ ‘என்னை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் கெட்டுபோவதில்லை, ஆனால் நித்திய ஜீவனை உடையவனாக இருக்கிறான்’. இயேசுவானவரின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன், ஆமென்.”

இப்பொழுது நீ யோவான் 6:47ஐ சத்தமாக வாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

“என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

ஒரு உணர்வு வேண்டும் என்று எதிர்பார்க்காதே. ஒரு எளிமையான விசுவாசத்தின் மூலமாக நீ இயேசு கிறிஸ்துமீது விசுவாசம் வைத்திருக்கிறாய். அது சரிதான் இல்லையா?

இப்பொழுது உனது இரட்சிப்புக்கு யார்மீது நம்பிக்கை வைத்திருக்கிறாய்? (இயேசு கிறிஸ்துமீது விசுவாசம் வைத்திருக்கிறாய்).

இரட்சிப்பின் நம்பிக்கை என்றால் நித்திய இரட்சிப்புக்கு இயேசுவை நம்புவது ஆகும். இப்பொழுது நீ செய்தது இதுதான் இல்லையா? (ஆமாம்).

யாராவது ஒருவர் அதை செய்திருந்தால் அவர் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுகிறார் என்று இயேசுவானவர் சொல்லுகிறார். இப்பொழுது நீ செய்தது இதுதான் இல்லையா? (ஆமாம்).

இப்பொழுது, இந்த இரவிலே நீ தூங்கும்பொழுது மரித்தால் மற்றும் உன்னை ஏன் பரலோகத்தில் விடவேண்டும் என்று தேவன் கேட்டால், நீ என்ன சொல்லுவாய்? (நித்திய இரட்சிப்புக்கு இயேசு கிறிஸ்துமீது நான் விசுவாசம் வைத்திருக்கிறேன்).

நண்பரே, இப்பொழுது ஜெபித்த ஜெபத்தை நீ மெய்யாக அர்த்தப்படுத்தி கொண்டால், இயேசு உனது பாவங்களை மன்னித்தார், மற்றும் இப்பொழுதே நீ நித்திய ஜீவனை பெற்று இருக்கிறாய்!

யோவான் சுவிசேஷத்தை ஒரு நாளுக்கு ஒரு அதிகாரத்தை, நீ வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். யோவான் சுவிசேஷத்தில் 21 அதிகாரங்கள் உள்ளன. ஒரு நாளுக்கு ஒரு அதிகாரத்தை நீ வாசிக்க வேண்டும், மூன்று வாரத்தில் யோவான் சுவிசேஷத்தை நீ வாசித்து முடித்திருப்பாய்.

உனக்கு என்ன நடந்தது என்று நீ இன்று இரவிலே ஒரு நபருக்குச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த நபர் யாராக இருக்கும்? (எனது சகோதரன்).

இன்று இரவிலே நீ இயேசுவானவரை விசுவாசித்ததை அவரிடம் சொல்லுவாயா? (ஆமாம்).

இப்பொழுது, நான் உன்னை அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்குச் சபைக்கு என்னோடுகூட அழைத்துவர விரும்புகிறேன். நான் உன்னை அழைத்தால் நீ என்னோடுகூட வருவாயா? (ஆமாம் வருகிறேன்). அதற்கு முன்பாகவே நீ என்னிடம் பேச விரும்பினால், என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொள். இதோ என்னுடைய தொலைபேசி எண்.

இப்பொழுது, உனது ஆத்துமாவை இரட்சித்ததற்காக மற்றும் உனக்கு நித்திய ஜீவனை கொடுத்ததற்காக, சிறிது நேரம் இயேசுவானவருக்கு நாம் நன்றி சொல்லலாமா? (ஜெபம்).

இப்பொழுது, எபேசியர் 2:8, 9ஐ நீ சத்தமாக வாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

“கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப் பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” (எபேசியர் 2:8, 9).

இந்த எளிமையான முறையின் மூலமாக உலகமுழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மெய்யாகவே மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். ஒருவேளை இன்னும் உங்களுக்கு நிச்சயமில்லாமல் இருக்குமானால், உமது முகத்தில் ஒரு புன்னகையோடு அந்தக் கூட்டத்தை முடிக்கவும், மற்றும் குறைந்தபட்சம் யோவான் சுவிசேஷத்தை ஒரு நாளுக்கு ஒரு அதிகாரத்தை வாசிக்க வேண்டும் என்று வாக்குகொடுக்கவும். நீங்கள் அவர்களைப் பைத்தியமாக்காமல் இருந்தால் அவர்களோடு பேசுவதற்கு மற்றொரு தருணம் உங்களுக்குக் கிடைக்கும்.

இந்தப் போதனையை உங்களோடு உங்கள் வீட்டுக்கு எடுத்துச்செல்லுங்கள். இந்தக் கருத்துக்கள் உங்கள் நினைவில் நிற்கும் வரைக்கும் இதைத் திருப்பத்திரும்ப வாசிக்கவும். வெளியே உள்ள ஒரு நண்பர் அல்லது உறவினரோடு இதை முயற்சி செய்யவும். அவர்கள் மெய்யாகவே விருப்பப்படுவதை மற்றும் உன்னோடு சபைக்கு வருவதை கண்டு நீ ஒருவேளை ஆச்சரியப்படுவாய்!

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.