Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




வேதாகமத்தில் காணப்படாமல் தவறிப்போன ஒரு தீர்க்கதரிசன பகுதி இன்று நமக்குத் தெளிவாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது

A MISSING PIECE OF BIBLE PROPHECY
ILLUMINATED FOR US TODAY
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

செப்டம்பர் 22, 2019 கர்த்தருடைய நாள் மாலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி

A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, September 22, 2019

“தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு” (தானியேல் 12:4; ஸ்கோபீல்டு வேதாகமத்தில் ப. 919).

“நான் அதைக் கேட்டும், அதின் பொருளை அறிய வில்லை; ஆகையால் என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்தரிக்கப்பட்டும் இருக்கும்” (தானியேல் 12:8, 9; ப. 920).


தீர்க்கதரிசியாகிய தானியேல் “முடிவுகாலத்தின்” விபரங்களைத் புரிந்து கொள்ளவில்லை. நமக்குத் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது, 8ஆம் வசனத்தில், “நான் அதைக் கேட்டும், அதின் பொருளை அறியவில்லை” என்று. அதன்பிறகு தேவன் தானியேலிடம் சொன்னார், “இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்தரிக்கப்பட்டும் இருக்கும்” (தானியேல் 12:9).

தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளைத் தானியேல் புரிந்துகொண்டான். ஆனால் முடிவுகால சம்பவங்கள் எப்படி இருக்கும் என்று அவன் புரிந்துகொள்ளவில்லை. “இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்தரிக்கப்பட்டும் இருக்கும்” (தானியேல் 12:9). அவனுக்கு உள்ளுணர்வின் வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவைகளின் அர்த்தத்தைப்பற்றி விளக்கமாக கொடுக்கவில்லை. அந்த வார்த்தைகளின் விளக்கம் “முடிவுகாலமட்டும்” கிடைக்கவில்லை. இந்தக் காலகட்டத்தின் முடிவை நாம் நெருங்கிக்கொண்டிருக்கும்பொழுது, தீர்க்கதரிசனத்தின் உட்காட்சியின் விளக்கம் கிடைத்திருக்கிறது.

நான் முதல் முறையாக “எடுத்துக்கொள்ளப்படுதலை” பற்றி கேள்விப்பட்டது எனக்குத் தெளிவாக நினைவில் இருக்கிறது. அந்த ஏழு வருட உபத்திரவக் காலத்துக்கு முன்பாக இந்த எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும் என்று எனது ஆசிரியர் எங்களுக்குச் சொன்னார். உபத்திரவக் காலத்துக்கு முன்பாக இந்த எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும் என்று வேதத்தில் எங்கே போதிக்கப் பட்டிருக்கிறது என்று நான் எனது ஆசிரியரிடம் கேட்டேன். அவரால் எனக்குப் பதிலளிக்க முடியவில்லை. இவ்வாறாக, “எந்த ஷணத்திலும்” அந்த ஏழு வருட உபத்திரவ காலத்துக்கு முன்பாக இந்த எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும் என்பதைப்பற்றி, பத்தாண்டுகளாக இந்தக் கேள்வி என்னில் இருந்தது. அதன்பிறகு உபத்திரவக் காலத்துக்கு முன் எடுத்துக்கொள்ளப்படுதல் ஜே. என். தார்பே அதை முதலாவது பிரபலபடுத்தினார் என்பதைக் கண்டேன், மற்றும் அந்தத் தார்பே எப்படிக் “கண்டுபிடித்தார்” என்றால், ஒரு பதினைந்து வயது நிரம்பிய மார்கரேட் மெக்டோனால்டு என்ற ஒரு கரிஸ்மேடிக் பெண் அதைப்பற்றி “கனவு கண்டதை” வைத்து தான். சில காரணங்களுக்காக ஜே. என். தார்பே அதை விளம்பரபடுத்த ஆரம்பித்தார். அதன்பிறகு அது சி.ஐ. ஸ்கோபீல்டு அவர்கள் ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் அதை வெளியிட்டார். இப்பொழுது அது புதிய சுவிசேஷகர்களால் பெரும்பான்மையான நிலையாக இருக்கிறது.

அதன்பிறகு மார்வின் ஜே. ரோசென்தால் ஒரு புத்தகத்தை எழுதினார் அதன் பெயர் The Pre-Wrath Rapture of the Church (Thomas Nelson, 1990). ரோசென்தால் எழுதின எல்லாவற்றையும் நான் ஒத்துக்கொள்ளாதபோதிலும், “எடுத்துக்கொள்ளபடுதல்” எப்பொழுது நடக்கும் என்று சிறந்த புரிந்து கொள்ளுதலுக்காக அவர் கதவைத் திறந்தார் என்று நான் நினைக்கிறேன். ரெவரண்ட் ரோசென்தாலின் கருத்தை ஏளனம் செய்வதற்கு முன்பாக அந்தப் புத்தகத்தை வாங்கி கவனமாக படியுங்கள். “எடுத்துக்கொள்ளபடுதல்” உபத்திரவக் காலத்தின் முடிவின் சமீபத்தில் நிகழும், தேவனுடைய கோபாக்கினையின் “கலசத்தின் நியாயதீர்ப்புகள்” ஊற்றப்படுதல் விரைவில் நிகழும் என்று அவர் போதிக்கிறார், வெளிப்படுத்தல் 16ஆம் அதிகாரம். அது எனக்கு அர்த்தமுள்ளதாக இருக்கிறது – ஒரு டீன்ஏஜருடைய கனவைவிட மிகவும் அதிகமாக அது எனக்கு உணர்வை கொடுப்பதாக இருக்கிறது!

இது ஏன் முக்கியமானது? ஏனென்று நான் சொல்லுகிறேன். அந்த ஏழு வருட உபத்திரவக் காலத்துக்கு முன்பாக இந்த எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும் என்றால், கிறிஸ்தவர்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. ஞாயிறு காலையிலே கூட்டத்தோடு ஒரு மணிநேரம் போனால்போதும்! நீங்கள் ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டியதில்லை. தேவனற்றவர்களிடமிருந்து பிரிந்திருக்க வேண்டியதில்லை. அது ஆன்டினோமியனிஸத்தை (click here to read about it) உற்பத்தி செய்கிறது.

இந்தச் செய்தியின் தலைப்பு, “வேதாகமத்தில் காணப்படாமல் தவறிப்போன ஒரு தீர்க்கதரிசன பகுதி இன்று நமக்காகத் தெளிவாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது” என்பதாகும். அந்த “தவறிப்போன பகுதி” என்ன? அது “விசுவாச துரோகம்” ஆகும். நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக வேதாகம தீர்க்கதரிசனத்தைப் பற்றி படித்துக்கொண்டு வருகிறேன். நமது நாட்களில் ஒரு முக்கியமான பாடமான “விசுவாச துரோகம்” அதிகமாக புறக்கணிக்கப்படுகிறதைப் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இந்தப் பாடத்தின் வேதாகம தீர்க்கதரிசனத்தின் எல்லா பிரதான கருத்துக்களையும் உள்ளடக்கி எழுதப்பட்ட – மூன்று பிரதான புத்தகங்கள் எனது அலமாரியில் உள்ளன. அவைகள் நல்ல தேவபக்தி உள்ள மனிதர்களால், அந்த முக்கியமான பாடத்தைப்பற்றி நம்பத்தகுந்தவர்களால் எழுதப்பட்டவைகளாகும். ஆனால் அவர்களில் ஒருவரும் “விசுவாசத் துரோகம்” பற்றி ஒரு பாகத்தை எழுதவில்லை. அந்த “விசுவாச துரோகம்” இன்று நமக்கு ஒரு ஆதாரமான கருத்தாகும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM
என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

தயவுசெய்து II தெசலோனிக்கேயர் 2:3க்கு திருப்புங்கள். இங்கே கிங் ஜேம்ஸில்,

“எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது” (II தெசலோனிக்கேயர் 2:3; ஸ்கோபீல்டில் ப. 1272).

இந்த வார்த்தை, புதிய அமெரிக்கன் ஸ்டேண்டர்டு வேதாகமத்தில் கீழ்க்கண்டபடி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது,

“எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் [கர்த்தருடைய நாள்] வராது” (II தெசலோனிக்கேயர் 2:3, NASB).

“ஹிப்போடேஸியா” என்ற வார்த்தையிலிருந்து “விசுவாச துரோகம்” என்ற வர்த்தை மொழிபெயர்க்கப்பட்டது. மேலும் இது “ஒரு வீழ்ச்சி” என்றும் கிங் ஜேம்ஸில் மொழிபெயர்க்கப்பட்டது.

டாக்டர் எபல்யு. எ. கிரிஸ்வெல் கென்டகி, லோவிஸ்வில்லாவில் உள்ள தென் பாப்டிஸ்டு வேதாக செமினரியில் கிரேக்க எக்ஸிகெஸில் ஒரு டாக்டர் பட்டம் பெற்றவர். டாக்டர் கிரிஸ்வெல் புதிய ஏற்பாட்டின் கிரேக்க வார்த்தைகளில் நெருக்கமான கவனம் செலுத்தினார். டாக்டர் கிரிஸ்வெல் சொன்னார், “அந்தக் கர்த்தருடைய நாளுக்கு முன்பாக, தெரிந்து கொள்ளப்பட்ட விசுவாசிகளில் ஒரு வீழ்ச்சி உண்டாகும். இங்கே உபயோகப்படுத்திய [அவன்] என்பது குறிப்பிட்ட விசுவாச துரோகத்தை மனதில்கொண்டு பவுல் குறிப்பிடுகிறார்.” இதை நாம் அறிந்து, இரண்டு முக்கியமான கருத்துக்களை II தெசலோனிக்கேயர் 2:3லிருந்து நாம் கற்றுக்கொள்ளுகிறோம்,


1. கர்த்தருடைய நாளுக்கு முன்பாக, இந்த விசுவாச துரோகம் நிகழும்.

2. கர்த்தருடைய நாளுக்கு முன்பாக, அந்திகிறிஸ்து “வெளிப்படுவான்”.


கர்த்தருடைய நாளுக்கு முன்பாக இந்த இரண்டு காரியங்களும் நடக்கும், இந்தக் காலத்தின் முடிவிலே, உபத்திரவம் மற்றும் தேவனுடைய கோபாக்கினையின் காலம் இருக்கும். எடுக்கப்படுதலுக்கு முன்பாக உபத்திரவ தத்துவம் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஏற்கனவே சென்றுவிட்டது. அதனால்தான் “விசுவாச துரோகம்” இன்றுள்ள சுவிசேஷ கிறிஸ்தவர்களுக்குப் பிரசங்கிக்கப்படவில்லை, மற்றும் அதனால்தான் இன்று உள்ள அதிகமான வேதாகம தீர்க்கதரிசன புத்தகங்களில் “விசுவாச துரோகம்” என்ற பகுதி இல்லை!

ஆனால் மார்வின் ரோசென்தால் சொன்னது சரி என்றால், அவர் சரியானவராக இருக்கிறார், பிறகு நாம் இப்பொழுதே “விசுவாச துரோகத்தின்” துவக்கத்தில் இருக்கிறோம்! இது இன்று கிறிஸ்தவர்களை எப்படி பாதிக்கிறது? “மூன்றாம் உலகத்தில்” முன்பிருந்த எந்தக் காலத்தையும்விட அவர்கள் அதிக ஆழமாக வாதிக்கப்படுகிறார்கள். மற்றும் “மேற்கத்திய உலகத்தில்” சாத்தானுக்கும் அவனுடைய பிசாசுகளுக்கும் நாம் மிகுந்த அஜாக்கிரதையாக இருக்கிறோம். இந்தக் காரியங்கள் தானியேலுக்குச் சொல்லப்பட்டன, ஆனால் அவன் சொன்னான், “நான் புரிந்துகொள்ளவில்லை.” பிறகு தேவன் தானியேலிடம் சொன்னார், “இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்தரிக்கப்பட்டும் இருக்கும்” (தானியேல் 12:8, 9).

ஜான் எஸ். டிக்கர்சன் ஒரு நல்ல புத்தகத்தில் எழுதினார், The Great Evangelical Recession (Baker Books, 2013). கேபி லியோன்ஸ் சொன்னதை டிக்கர்சன் குறிப்பிட்டார், அவர் சொன்னார்,

“இந்தக் காலமானது வரலாற்றில் மற்றெல்லாக் காலங்களையும்விட விரும்பத்தகாததாக இருக்கிறது. இதன் தனித்தன்மை ஒரு உண்மையான பொறுப்பைக் கோருகிறது. ஒரு வித்தியாசமான வழியில் முன்செல்ல நாம் தவறினால், முழுதலைமுறையையும் உணர்ச்சி இன்மையில் மற்றும் சிடுமூஞ்சியில் [இழந்து விடுவோம்]... நமது நண்பர்கள் குறைவான நேரங்கள் ஆராதனை நடக்கும் [இடங்களுக்குத்] தொடர்ந்து கழன்று போய்கொண்டே இருப்பார்கள்... குறைந்த நேரம், ஆனால் அதிகமாக முறையீடு செய்வார்கள் (The Next Christians, Doubleday, 2010, p. 11; emphasis mine).

டிக்கர்சனின் புத்தக ஜாக்கட் கவரில் சொல்லுகிறது,

“அமெரிக்க சபை... சுருங்கிக்கொண்டு இருக்கிறது. இளம் கிறிஸ்தவர்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். நமது அன்பளிப்புகள் உலர்ந்து போகின்றன... ஐக்கிய நாடுகளின் பண்பாடு விரைவில் விரோதமாக மற்றும் பகைமையாக மாறிவருகிறது. ஒரு பாழாக்கும் அழிவை நாம் எப்படி தவிர்க்க முடியும்?”

ஜான் டிக்கர்சனின் முதல் பாதி புத்தகத்தை நான் நேசித்தாலும், கடைசி பகுதியில் எப்படி ஆயத்தப்பட வேண்டும் என்பதில், அதிகமானவைகளை நான் சம்மதிக்கவில்லை.

ஆயத்தப்படுவதற்காக, நாம் இப்பொழுதே, “விசுவாச துரோகத்தின்” துவக்கத்தில் இருக்கிறோம் என்பதை உணரவேண்டியது அவசியமாகும். அதிகமான உபத்திரவம் வருவதற்கு முன்பாக நாம் எடுத்துக்கொள்ளப்படுவோம் என்று நாம் நினைத்தால், நமக்கு முன்னே உள்ளதற்காக நாம் ஆயத்தப்படமாட்டோம்.

போதகர் ரிச்சர்டு உம்ராண்டு ஒரு சுவிசேஷ ஊழியராக இருந்தவர் 14 ஆண்டுகள் கம்பினுச சிறையில் கழித்தார், ருமேனியாவில் கிறிஸ்துவுக்காக வாதிக்கப்பட்டார். அமெரிக்கா அறிந்த எந்த ஒரு வாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கும் அதிகமாக அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அனுபவங்கள் உள்ளவர். அவரது அறையிலே எலிகள் இரவில் பாதங்களைத் தின்றன. அவர் அடிக்கப்பட்டார். சிவப்பான சூடுகோல்களால் அவரது கழுத்திலும் சரீரத்திலும் பயங்கர ஆழமான காயங்கள் உண்டாக்கப்பட்டன. அவர் ஏறக்குறைய மரணத்தை அடையும் வரையிலும் பட்டினியாக இருந்தார். இப்படியான பயங்கர சித்திரவதை 14 வருடங்கள் தொடர்ந்து நடந்தன. அதனால் போதகர் உம்ராண்டு “பாடுகளின்இயல்” என்று அழைக்கப்படும், பாடுகளின் போதனையை அவர் முன்னேற்றம் செய்தார். அவர் (ஒரு அற்புதத்தின் மூலமாக) அமெரிக்கா வந்த பிறகு பாடுபடுவதற்குத் தேவையான ஆயத்தத்தின் அவசியத்தைப்பற்றி – நமது சொந்த சபையையும் சேர்த்து அநேக சபைகளில் போதித்தார். அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவர்கள் பாடுபடுவதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று போதகர் உம்ராண்டு போதித்தார். அவர் சொன்னார், “நாம் சிறைகளில் அடைக்கப்படுதற்கு முன்பாக இப்பொழுதே, நாம் ஆயத்தங்களைச் செய்யவேண்டும். சிறையிலே நீ எல்லாவற்றையும் இழந்து தவிப்பாய்... வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் ஒன்றும் இருக்காது. முன்னதாக வாழ்க்கையின் இன்பத்தை ஒழிக்காத ஒருவரும் எதிர்த்து நிற்க முடியாது” (ஜான் பைப்பர் குறிப்பிட்டுள்ளது Let the Nations Be Glad, Baker Books, 2020, p. 10).

டாக்டர் பால் நெய்குஸ்டு சொன்னார், “ஆயத்தமாகுங்கள். நாகரீக மாற்றங்கள் நமது தேசத்தைப் பெருக்கி கொண்டு வேகமாக போகும்பொழுது, வேதாகமம் அதைப்பற்றி சொல்லுகிறபடி நாம் வாழ்க்கை மாற்றத்தை விரைவாக உண்டாக்கி கொள்ள வேண்டும்... உபத்திரவங்களுக்குப் பதில் கொடுத்தல்” (J. Paul Nyquist, Prepare: Living Your Faith in an Increasingly Hostile Culture, Moody Publishers, 2015, p. 14).

நோவாவின் நாட்கள் விசுவாச
துரோகமான நாட்களாகும்

இயேசு சொன்னார்,

“[நோவா]வின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படி யெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே [நோவா] பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக் கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்: அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” (மத்தேயு 24:37-39; p.1034).

நோவாவின் நாட்கள் மகா உபத்திரவத்தின் நாட்கள் என்று அநேக சுவிசேகர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதைவிட அதிகமாக இருக்கும். நோவாவின் நாட்களில் மக்கள் “நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும் வாழ்ந்தார்கள்” (மத்தேயு 24:38).

அமெரிக்காவிலும் மேற்கத்திய உலகத்திலும் அதுதான் சரியாக நடந்து கொண்டு இருக்கிறது! “மூன்றாம் உலகத்தில்” அதிகமான உபத்திரவம் உண்டாகி இருக்கிறது. சீனா போன்ற நாடுகளில் மெய்யான எழுப்புதல் உண்டாகி இருக்கிறது. ஆனால் அமெக்காவிலும் மேற்கிலும் அல்ல! இங்கே மக்கள் பொருளாதாரத்திலே அக்கரை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும் வாழ்கிறார்கள். இவைகள் சாதாரண காரியங்களாக காணப்படுகிறது. ஆனால் அதைவிட அதிகமாக இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையின் மையமாக காணப்படுகிறது – “புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும் வாழ்தல்”. இந்தக் காரியங்களுக்காகதான் அவர்கள் வாழ்கிறார்கள் என்று நினைத்தார்கள்! அவர்களுடைய வாழ்க்கையின் மையமாக தேவன் இல்லை! அவர்களுக்கு வாழ்க்கையில் மிகமுக்கியமாக காணப்படுவது விவாக காரியங்கள் ஆகும்!

லவோதிக்கேயாவில் இருந்த சபை
அமெரிக்க மற்றும் மேற்கில் உள்ள சபைகளுக்கு
ஒரு படமாக இருக்கிறது

இயேசு சொன்னார்,

“லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில் உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது: உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல: நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பா யிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். நீ நிர்ப்பாக்கியமுள்ள வனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிற படியால்; நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வ தற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக் கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு” (வெளிப்படுத்தல் 3:14-19; p. 1334).

விசுவாச துரோக சபைக்கு இது ஒரு படமாக இருக்கிறது. இது வெதுவெதுப்பான ஒரு சபையாக இருக்கிறது, “குளிருமல்ல அனலுமல்ல” (வெளிப்படுத்தல் 3:16). இது மாற்றப்படாத மக்கள் நிறைந்த ஒரு சபையாக இருக்கிறது (வெளிப்படுத்தல் 3:17). இது மனந்திரும்ப மறுத்த ஒரு சபையாக இருந்தது (வெளிப்படுத்தல் 3:19).

கடந்த 40 ஆண்டுகளில் நாம் இரண்டு பெரிய சபை பிளவுகளை அனுபவித்தோம். இரண்டு தருணங்களிலும் ஆத்துமா ஆதாயம் செய்வதில் “வெதுவெதுப்பாக” இருக்க விரும்பினவர்கள் நம்மைவிட்டுப் போனார்கள். இருதரத்தாரும் ஆத்துமா ஆதாயத்தில் “வெதுவெதுப்பாக” இருந்தார்கள். இருதரத்தாரும் தீவிரமான கிறிஸ்தவத்தை தள்ளிவிட்டவர்கள். மக்கள் எங்களைவிட்டு வெளியே போனார்கள், அவர்களை நோக்கி, அதற்குக் காரணம் நாங்கள் “மிகவும் கண்டிப்பானவர்களாக” இருந்தோம் எங்களை விட்டுப்போனால் அவர்களுக்கு அதிக “வேடிக்கை” கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் இருமுறை “அக்கினி மேல்” உள்ள சபையைப் பெற்றுக்கொள்ள அவர்கள் தவறிபோனார்கள். அவர்கள் இரண்டு குழுவினரும் தங்கள் சொந்த மக்களை வெதுவெதுப்பான சூழ்நிலையில் வைக்க முடியவில்லை என்று (இறுதியாக) இருதரத்தாரும் கண்டு கொண்டார்கள். இறுதியில் இருதரத்தாரும் தோற்றுப் போனார்கள். இயேசுவானவர் சொன்னார், “உன்னை என் வாயினின்று [துப்பி] வாந்திபண்ணிப்போடுவேன்” (வெளிப்படுத்தல் 3:16). அவர்கள் உலகத்திலிருந்து பிரிந்துவாழ விரும்பவில்லை, அதனால் அவர்கள் உலகத்துக்கும், மாம்சத்துக்கும், மற்றும் பிசாசுக்கும் கொஞ்சங்கொஞ்சமாக மாறிபோனார்கள். அவர்கள் அடிப்படை சிப்பாய்களாக இருக்க விரும்பவில்லை, அதனால் விரைவாக வெதுவெதுப்பான புதிய சுவிசேஷகர்களாக மாறினார்கள்! ஆவிக்குரிய விஷயத்தில் அவர்கள் பாதிஉயிருள்ளவர்களாக – அல்லது அதைவிட மோசமாக மாறினார்கள்!

உன்னை நீயே கேள். சென்னோடு சென்ற மக்கள் சீனாவில் இருந்தார்கள், அவர்கள் பூமிக்கடியில் இருந்த சபைகளில் தங்கினார்களா, அல்லது கம்யூனிஸ்டு துணையில் இருந்த “மூன்று சுய சபை”க்குப் போனார்களா? உங்களுக்குப் பதில் தெரியும்! ஏற்கனவே நீங்கள் பதிலை அறிந்திருக்கிறீர்கள்! அவர்கள் எழுத்தின்படியாக கம்யூனிஸ்டு சபைக்கு ஓடிப்போயிருக்க வேண்டும். ஏன்? ஏனென்றால் அவர்கள் மெய்யான கிறிஸ்தவத்தை விரும்பவில்லை. அவர்களுடைய வாய்கள் பசியாக இருந்தன, மென்மையான ஒரு புதிய சுவிசேஷக “சபை”யாக மாறுவதற்காக. அதைதான் விசுவாச துரோகி சென் அவர்களுக்குக் கொடுத்தான்! மென்மையான, ஒரு புதிய சுவிசேஷக “சபை.” உங்களுக்குத் தெரியும்! நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள்!!! நான் உங்களுக்குப் புதிதாக எந்தக் காரியத்தையும் சொல்லிக்கொண்டிருக்கவில்லை!!!

நமது நாளில் இருக்கும் இந்த புதிய சுவிசேஷக சபைகளைபற்றிய ஒரு விளக்கத்தோடு இந்த செய்தியை நான் முடிக்கிறேன்,

“மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர் களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர் களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர் களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமை யுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப் புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்: இப்படிப் பட்டவர்களை நீ விட்டு விலகு” (II தீமோத்தேயு 3:1-5; pp. 1280, 1281).

“எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற” (II தீமோத்தேயு 3:7; p. 1281).

“அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (II தீமோத்தேயு 3:12; p. 1281).

“சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனா யிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று” (II தீமோத்தேயு 4:2-5; p. 1281).

“ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசை வைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்” (II தீமோத்தேயு 4:10; p. 1281).

“அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டு மென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். அப்படிப் பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப் பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்” ரோமர் 16:17, 18; p. 1210).

என் அன்பான சகோதர சகோதரிகளே, நான் இன்று இரவு உங்களுக்குப் பிரசங்கித்த காரியங்களைப் பெரிய தீர்க்கதரிசியாகிய தானியேல் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. ஆனால் கர்த்தருக்கு நன்றி அவர் மார்வின் ரோசன்தால் என்ற இறைபணியாளரை எழுப்பி இதைப்பற்றி பேசவும் மற்றும் “எடுக்கப்படுதலைப்பற்றிய புதிய புரிந்துகொள்ளுதல். உபத்திரவம் மற்றும் இயேசுவானவரின் இரண்டாம் வருகையைப் பற்றிய புதிய புரிந்துகொள்ளுதலை” நமக்குக் கொடுத்தார் (jacket cover of The Pre-Wrath Rapture of the Church, Thomas Nelson, 1990).

ஆமாம், நாம் இப்பொழுது அந்த பெரிய விசுவாச துரோகத்தின் கடைசி காலத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் இருக்கிறோம். ஆமாம், நாம் உபத்திரவங்களின் ஊடாக செல்ல வேண்டியது அவசியம், சீனாவில் உள்ள மக்கள் படும் பாடுகளைப்போல, ரிச்சர்டு உம்பிராண்டு பட்ட பாடுகளைப்போல, “மூன்றாம் உலகத்தின்” முழுவதிலும் உள்ள மக்கள் படும்பாடுகளைப்போல. ஆனால் இயேசுவானவரை நேசிக்கிறவர்கள் முடிவிலே வெற்றிபெறுவார்கள், இயேசுவானவர் சொன்னார்,

“என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர் களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்: ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. ஜெயங்கொள்ளு கிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை: என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது” (வெளிப்படுத்தல் 3:10-13; p. 1334).

தயவுசெய்து எழுந்து நின்று பாடவும் 1, 2 மற்றும் 4 சரணங்கள் “நான் ஒரு சிலுவையின் சிப்பாயாக இருக்கிறேனா?”

நான் ஒரு சிலுவையின் சிப்பாயாக இருக்கிறேனா,
ஆட்டுக்குட்டியானவரை பின்பற்றுகிற ஒருவனாக இருக்கிறேனா,
அவருக்காக பயப்படுகிறவனாக இருக்கிறேனா,
அவருடைய நாமத்தை சொல்ல வெட்கப்படுகிறேனா?

நான் சுகமான மலர் படுக்கையில் படுத்து
ஆகாயத்தில் சென்று கொண்டிருப்பேனா,
பரிசை வெல்வதற்காக மற்றவர்கள் போராடி,
இரத்தக்கடலில் பிரயாணம் செய்யும்பொழுது?

நான் நிச்சயமாக போராடவும், உம்மோடு அரசாளவும் வேண்டும்;
எனது தைரியத்தை வர்த்திக்க செய்யும், கர்த்தாவே;
உமது வார்த்தையின் ஆதாரத்தில் வரும், வேதனையை தாங்கி,
உபத்திரவங்களை நான் பொறுத்துக்கொள்ளுவேன்.
(“Am I a Soldier of the Cross?”, Dr. Isaac Watts, 1674-1748).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.