Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




பேதுரு எப்படி ஒரு சீஷனாக மாறினான்

HOW PETER BECAME A DISCIPLE
(Tamil)

டாக்டர் கிறிஸ்டோபர் எல். கேஹன் அவர்களால் எழுதப்பட்டு;
டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
பிரசங்கிக்கப்பட்ட போதனை
செப்டம்பர் 1, 2019 கர்த்தருடைய நாள் மாலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
Text by Dr. Christopher L. Cagan;
preached by Dr. R. L. Hymers, Jr.
at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, September 1, 2019

“யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்” (யோவான் 1:40-42; ப. 1116 ஸ்கோபீள்டு).


பேதுரு இயேசுவானவரை சந்தித்தது இதுதான் முதல் முறையாகும். அவனது மூலப் பெயர் சீமோன் என்பதாகும். இயேசுவானவர் அவனுக்கு “பேதுரு” என்று பெயரிட்டார், அதற்கு “ஒரு பாறை“ என்று அர்த்தமாகும். அவனுடைய சகோதரன் அந்திரேயா ஆகும். பேதுரு மீன்பிடிப்பவர் ஆவார். அந்திரேயாவும் பேதுருவும் கலிலேயா கடலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்தார்கள், அங்கே அவர்கள் மீன் பிடித்தார்கள். மீன் பிடிக்கும் தொழிலானது, மிகவும் கஷ்டமானதாக இருந்தபடியினால், அவர்களுடைய வாழ்க்கை கடினமானதாக இருந்தது. பேதுரு விவாகமானவராக இருந்தார் ஏனென்றால் இயேசுவானவர் அவனுடைய மாமியைச் சுகமாக்கினார். பேதுரு இயேசுவை சந்தித்தபோது ஏறக்குறைய 30 வயதுள்ளவராக இருந்தார். சீஷர்களில் அவன்தான் அதிக வயதான சீஷனாகும்.

கலிலேய கடலில் மீன் பிடிப்பவர்கள் கடினமானவர்களாக இருந்தார்கள். மீன் பிடிக்கும் தொழில் சரீரபிரகாரமாக மிகவும் கஷ்டமானதாகும். கலிலேயக்கடலில் அடிக்கடி திடீரென பயங்கரமான புயல் வீசும், அதனால் அவர்கள் பயத்தைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும். அந்தப் புயல்கள் அவர்களுடைய சிறிய படகுகளைக் கவிழ்த்து மனிதர்களை மூழ்க செய்துவிடும்.

பேதுரு ஒரு பரிசேயன் அல்ல. அவன் ஒரு யூதனாக இருந்தபடியினால் சில நேரங்களில் ஜெப ஆலயங்களுக்குப் போவான். அவன் பரிசேயர்களைப்போல, தீவிரமான ஒரு பழைமைவாதி அல்ல. ஆனால் மற்ற மீனவர்களைப்போல அல்ல, பேதுரு தான் ஒரு பாவி என்று தன் இருதயத்தில் அறிந்திருந்தான். அதன்பிறகு அவன் இயேசுவிடம் சொன்னான், “ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும்” (லூக்கா 5:8; ப. 1078).

இவ்வாறாக, பேதுரு ஒரு மதவாதியான மனிதனாக, அல்லது ஒரு நல்ல கிறிஸ்தவனைப்போல ஆரம்பிக்கவில்லை. அவன் ஒரு கடினமான குணாதிசயம் உள்ளவனாக இருந்தான். அவன் ஒரு மீனவனாக இருக்க கடினமுள்ளவனாக இருக்க வேண்டியதாக இருந்தது. அவன் ஒரு முழுவதுமாகப் பயிற்சி எடுத்த “சபை மனிதன்” அல்ல. அவன் கெட்ட வார்த்தை பேசும் மற்றும் கோபம் கொள்ளும் மனிதனாக இருந்தான். அவன் அநேக தவறுகள் செய்யும் ஒரு பாவியாக இருந்தான்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM
என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

இப்பொழுது நீங்கள் கிறிஸ்துவுக்காக வெற்றிகொள்ள விரும்பும் அந்த நபரைப்பற்றி நினைத்துப்பாருங்கள். பேதுருவைப்போல, அவரும் ஒரு முழுவதுமாக பயிற்சி எடுத்த அல்லது சாமார்த்தியமுள்ள “சபை மனிதன்” அல்ல. அவர் ஏன் சபை கூட்டங்களுக்கு வரவேண்டும் என்று புரிந்துகொள்ள முடியாதவராக இருப்பார். மணிக்கணக்காக வீடியோ விளையாட்டில் அல்லது, இழக்கப்பட்ட நண்பர்களோடு இருப்பது சரியானதுதான் என்று அவர் நினைப்பார். அவருக்குத் தெரிந்த ஒவ்வொருவரும் அவரைப்போலவே இருக்கிறார்கள். அவரது பாவம் அவருக்குள் இருக்கிறது. அவரது தவறான யோசனைகள் அவருக்குள் இருக்கிறது. அவரது பிரச்சனைகள் அவருக்குள் இருக்கிறது. அவரோடு வாக்குவாதம்செய்து அவரை உன்னால் கிறிஸ்துவுக்காக வெற்றிகொள்ள முடியாது. அதற்கு பதிலாக, இயேசுவைப்பற்றி அவருக்குச் சொல்லு. உனக்கு இயேசு என்ன செய்தார் என்று அவருக்குச் சொல்லு. அவரோடு நட்பாக இரு. உன்னோடு அவரைச் சபைக்குக் கொண்டுவர அதிக சிந்தனை தேவையாக இருக்கும். பேதுரு பயிற்சிபெற்றவர் அல்ல, மற்றும் இந்த உலகத்தில் ஒரு இழக்கப்பட்ட நபரும் அல்ல.

அவனுடைய சகோதரன் அந்திரேயா இயேசுவானவரைப்பற்றி அவனிடம் பேசினான். “அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் [பேதுரு] கண்டு மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்: மேசியா [மேசியா] என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்” (யோவான் 1:41; ப. 1116). பேதுரு இயேசுவானவரைப்பற்றி முதல்முறையாக கேள்விப்பட்டபொழுது அவன் ஒரு சீஷனாக மாறிவிடவில்லை.

இது மிகவும் முக்கியமானது. ஒரு “தீர்மானஇஸத்தை” பற்றிய ஒரு கட்டுரையில், டாக்டர் ஏ. டபல்யு. டோசர் இதைப்பற்றி தெளிவாக்குகிறார் மக்களை “ஒரு பாவிகளின் ஜெபத்தை” சொல்ல கட்டாயப்படுத்துவது, வழக்கமாக உண்மையான கிறிஸ்தவர்களை உண்மையான சீஷர்களை உண்டாக்காது. பேதுரு இயேசுவானவரைப்பற்றி முதல்முறையாக கேள்விபட்டபொழுது அவன் ஒரு “தீர்மானத்தை” எடுக்கவில்லை. ஆமாம், பேதுரு விருப்பமுள்ளவனாக இருந்தான். அவன் அதிகமாக கேட்க விரும்பினான். ஆனால் யோவான்ஸ்நானகன் சிறையில் அடைக்கப்படும் வரைக்கும் இது நடக்கவில்லை, அதன்பிறகு ஒரு சீஷனாக, பேதுரு இயேசுவானவரைப் பின்பற்ற தீர்மானம் செய்தான்.

“யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக் கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார். இயேசு அவர்களை நோக்கி: என்பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்” (மாற்கு 1:14-18; ப. 1046).

நீங்கள் கிறிஸ்துவிடம் நடத்த முயற்சி செய்யும் ஒவ்வொரு நபரும் – ஏதோ ஒரு தருணத்தில் கிறிஸ்துவின் சீஷனாக மாறவேண்டுமா அல்லது மாறக்கூடாதா என்று தீர்மானம் செய்வார். இதுதான் போராட்டம். இதுதான் யுத்தம். அவர் உன்னோடு ஒரு சில வாரங்களோ அல்லது மாதங்களோ சபைக்கு வந்தால் இது முடிந்து விடாது. இது மாதக்கணக்காக அல்லது வருடக்கணக்காககூட தொடரும் ஒரு போராட்டமாகும்.

இதை அறியாமல் கிரைட்டன் சென் சுவிசேஷ ஊழியத்தில் இவ்வளவு பயன் அற்றவராக இருக்க செய்திருக்கிறது. அவர், மற்ற அநேக தீர்மானக்காரர்களைப் போல, சுவிசேஷத்தின் மேற்போக்கான “சத்தியங்களை” அறிந்து கொண்டால் அவர்கள் “உள்ளே” இருக்கிறார்கள் என்று நினைக்கிறார். சென் மற்றும் வால்டிரிப் புதிய மக்களை மிகவும் விரைவாக தூரம் “போக” செய்கிறார்கள். உண்மையான ஆத்தும ஆதாயம் என்பது ஒரு தொடர் போராட்டம் என்பதை அவர்கள் உணராமல் இருக்கிறார்கள். அதனால்தான் உண்மையான ஆத்தும ஆதாயத்துக்கு ஞானம் தேவையாக இருக்கிறது: “ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்” (நீதிமொழிகள் 11:30; ப. 680). அந்த வசனத்தை இப்படியும் மொழி பெயர்க்க முடியும், “ஞானமுள்ளவன் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறான்”. டாக்டர் ஏ. டபல்யு. டோசர் இதைப்பற்றி ஞானமாக சொன்னார்,

“ஒன்று அல்லது இரண்டு அனுபவங்களில் ரட்சிப்பின் எல்லா அனுபவங்களையும் திணிக்க முயற்சி செய்வது, உடனடி கிறிஸ்தவத்தின் வக்கீல்களின் முன்னேற்றத்துக்குக் கடைபிடிக்கும் சகல குணாதிசயங்களும் உள்ள விதியாக இருக்கிறது. அவர்கள் பரிசுத்தப்படுத்தும் பாடுகளின் விளைவுகளை, சிலுவையைச் சுமக்கும் மற்றும் அனுபவ பூர்வமான கீழ்ப்படிதலை புறக்கணிக்கிறார்கள். அவர்கள் ஆவிக்குரிய பயிற்சியின் தேவையைக் கடந்து, சரியான மதபழக்கங்களைத் தள்ளி மற்றும் உலகத்தோடுள்ள போராட்டம், பிசாசு மற்றும் மாம்சத்துக்கு எதிராக போராடுவதை எதிர்க்கிறார்கள்” (The Inadequacy of ‘Instant Christianity’).

ஒரு பெரிய “சபை பிளவின்” போது பேதுரு சோதிக்கப்பட்டார். மற்றவர்கள் போனார்கள். பேதுரு போகக்கூடாது என்று தீர்மானம் செய்தார். அவர் மற்றவர்களோடு போகக்கூடாது என்று தீர்மானம் செய்தார்.

“அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்” (யோவான் 6:66-69; ப. 1124).

இயேசுவானவர் அந்த பன்னிரண்டு சீஷர்களையும் பார்த்துச் சொன்னார், “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” (யோவான் 6:67, 68). இந்தப் பகுதியில் இரண்டு காரியங்கள் முக்கியமானவை ஆகும்.

1. பின்வாங்கி போனவர்கள் ஒருபோதும் மறுபடியும் திரும்பி வந்ததாக கேள்விபடவில்லை! நான் கண்டது, இந்த 61 வருட ஊழிய அனுபவத்தில், சபை பிரிவின்போது பின் வாங்கி போனவர்கள் ஒருபோதும் உறுதியான சீஷர்களாக மாறினது இல்லை. அப்படி மாறின ஒருவரையும் நான் ஒருபோதும் கண்டதில்லை!

2. பேதுரு பிரிவின்போது “பின் வாங்கி” போயிருந்தால் அவர் ஒருவேளை ஒருபோதும் மாற்றப்படாதவராகவே இருந்திருப்பார்.

“அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடைய வர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார் களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்” (I யோவான் 2:19; ப. 1322).

“கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சை களின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாத வர்களுமாமே” (யூதா 1:18, 19; ப. 1329).

பின் வாங்கி போனவர்கள் கிறிஸ்தவ சீஷத்துவத்தின் மெய்யான தன்மையைக் காணாதவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு சீஷனாக, ஒரு மெய்யான மாறுதலடைந்தவனாக இருப்பது என்பது, சில கோர்வையான வசனங்களை மனப்பாடம் செய்தல், அல்லது சில கோர்வையான போதனைகளை நம்புவதைவிட அதிகமானதாகும். சீஷத்துவம் தங்கி தரித்து இருக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுப்பதைச் சார்ந்தது; மற்றும் அதைவிட்டு போகவேண்டும் என்ற உணர்வு அதில் இருக்காது, ஏனென்றால் “அங்கிருந்து வெளியே” போவதால் எந்த உபயோகமும் இல்லை. பேதுரு இதைப் பார்த்தார் – ஆனால் அவர் இன்னும் மாற்றப்படாதவராக இருந்தார்!

ஆத்துமாவை ஆதாயம் செய்வது என்பது ஒரு பெரிய வேலை ஆகும் என்பதை நீங்கள் காணமுடியும் என்று நான் நினைக்கிறேன்! இது ஏதோ பெயரை வாங்குவதோ அல்லது ஒரு ஜெபத்தை சொல்ல செய்வதோ அல்ல. அது ஒரு ஜீவிக்கிற ஆத்துமாவிற்காக செய்யும் ஜீவனுள்ள போராட்டம்!

இயேசு யார் என்ற வெளிப்பாட்டை பெற்றுக்கொள்ளுவதைவிட மிகவும் அதிகமானது மாறுதல் மற்றும் சீஷத்துவம் ஆகும்!

“நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய: கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்: மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.” (மத்தேயு 16:15-17; ப. 1021).

பிதாவாகிய தேவன் இயேசு யார் என்பதைப் பேதுருவுக்குக் காட்டினார் (வெளிப்படுத்தினார்). இயேசு மெய்யாகவே யாராக இருக்கிறார் என்பதைப் பேதுருவுக்குத் தேவன் காட்டினார். ஆனால் பேதுரு இன்னும் மாற்றப்படாதவராகவே இருந்தார்!!! அதன்பிறகு அவர் மாற்றப்பட்டார் என்று அநேக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது தவறானது!

இயேசு மெய்யாகவே யாராக இருக்கிறார் என்பதைப் பேதுருவுக்குத் தேவன் காட்டினார் – பிறகு பேதுரு சுவிசேஷத்தைப் புறக்கணிக்க ஆரம்பித்தார்!!!

“அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்க வேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்: தேவனுக்குக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்” (மத்தேயு 16:21-23; ப. 1022).

பேதுரு சுவிசேஷத்தை எதிர்த்தார். இயேசுவானவர் சிலுவையில் மரித்து மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுவார் என்று சொன்னதற்காக அவரைக் கடிந்து கொண்டார். அவர் சுவிசேஷத்தைப் புறக்கணித்தார்! அதனால், ஒரு நபர் இயேசுவானவரை வருடகணக்காக பின்பற்றுபவராக இருந்தாலும் அவருக்கு எழுத்தளவிலும் மற்றும் போராட்டங்களும் இருக்க முடியும். நிச்சயமாக இருக்க முடியும்!

பேதுரு தான் எவ்வளவு ஒரு பலமான கிறிஸ்தவனாக இருப்பதைப்பற்றி பெருமை பாராட்டினான். கிறிஸ்துவானவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன் இரவிலே, பேதுரு அவரிடம் சொன்னான், “நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன்” (மத்தேயு 26:35; ப. 1038). இருந்தாலும் சில மணி நேரங்கள் கழித்து இயேசுவானவரை மூன்றுமுறை மறுதலித்தான்!

பேதுரு அதுவரையிலும் வெற்றிகொள்ளப்படாதவராக இருந்தார்! இயேசுவானவர் கெத்சமெனேயில் கைது செய்யப்பட்டபோது அவன் அவரைவிட்டு ஓடிப்போனான். அவன் கிறிஸ்துவை மூன்றுமுறை சத்தமாக மறுதலித்தான். பேதுரு மற்றவர்களோடு ஒரு சீஷனாக இருந்து வந்தான் – ஆனால் அவனுடைய போராட்டம் இன்னும் முடியவில்லை. அவன் இன்னும் வெற்றிகொள்ளப்படவில்லை. அவன் இன்னும் “உள்ளே” கூட வரவில்லை!

இயேசுவானவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழும் வரையிலும் அது நடைபெறவில்லை இறுதியாக பேதுரு மாற்றப்பட்டார். அது யோவான் 20:22ல் பதிவு செய்யப்பட்டுள்ளது,

“[இயேசுவானவர்] சொல்லி, அவர்கள்மேல் [பேதுரு மற்றும் மற்றவர்கள்] ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” (யோவான் 20:21-22; ப. 1144).

வேதவிமர்சகர் ஜான் எலிக்காட் நமக்குச் சொன்னார் அப்போஸ்தலனாகிய யோவான் “அந்த நேரமானது அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் எப்படியாக ஒரு புதிய ஆவிக்குரிய சிருஷ்டிப்பாக இருந்தது, அதன்மூலமாக அவர்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்கு அழைக்கப்பட்டார்கள் என்பதை அவர் நினைவுகூருகிறார்” (Ellicott’s Commentary on the Whole Bible). ஒருவேளை, டாக்டர் ஜே. வெர்னான் மெக்ஜீ சொன்னார் இப்போது பேதுரு மறுபிறப்படைந்தது, மறுபடியும் பிறந்தது, இயேசுவானவர் மரணத்திலிருந்து எழுந்த அன்று இரவிலே! (See Thru the Bible on John 20:22).

பேதுரு இயேசுவானவரை முழுமையாக நம்பினது அப்பொழுதுதான். அவன் விரைவாக தைரியமான அப்போஸ்தலனாக மாறினான் மற்றும் மூன்று ஆயிரம்பேர் இரட்சிக்கப்படும்படி பெந்தேகொஸ்தே நாளில் பேசினான். அதன்பிறகு கிறிஸ்துவை மறுதலிப்பதற்குப் பதிலாக அவருக்காக மரித்தான். ஆனால் அதற்கெல்லாவற்றுக்கும் முன்பாக, பேதுரு பொய்யான ஆரம்பங்கள் மற்றும் தோல்விகள் மற்றும் போராட்டங்கள் மற்றும் உட்காட்சிகளைக் கடந்து வந்தான்.

ஒரு ஆத்துமாவை வெற்றிகொள்ளுவது ஒரு தீவிரமான, பெரிய போராட்டம் என்பதை உன்னால் பார்க்க முடிகிறதா? அது ஒரு தொலைபேசி மூலமாக அல்லது ஒரு ஜெபத்தின் மூலமாக செய்யப்பட முடியாது. ஒரு ஆண் அல்லது பெண்ணின் ஆத்தும வாழ்க்கையின் வாழ்க்கை போராட்டம் அதுவாகும். அதற்கு உன்னுடைய ஜெபங்கள் தேவை. அதற்கு உன்னுடைய ஞானம் அவசியம். அது உன்னுடைய பிரயாசங்களை எடுத்துக்கொள்ளும். அது உனது நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். உனது வாழ்நாள் முழுவதிலும் நீ ஒரு ஆத்துமாவை வெற்றி கொண்டால், நீ ஆசீர்வதிக்கபட்டவன். நீ ஏராளமாக செய்திருக்கிறாய். நீ நன்றாக செய்திருக்கிறாய். அதை நீ செய்ய சாத்தியமாகும்படி நான் உனக்காக ஜெபிக்கிறேன்.

இது பின்பற்றுவதற்கு மிகவும் நீண்ட ஒரு சாலையாக காணப்படுகிறதா? இது மிகவும் கடினமானதாக மற்றும் மிகவும் நீண்டதாக காணப்படுகிறதா? இயேசுவானவர் சொன்னார், “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்தேயு 7:14; ப. 1004).

ஆனால் நாம் இந்தச் செய்தியின் கடைசி வார்த்தையைப் பேதுருவுக்குக் கொடுப்போம். பேதுரு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக அவர் எழுதின கடைசி வார்த்தைகள் இவைகள்,

“நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.” (II பேதுரு 3:18; ப. 1320).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.