Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




பொய் கிறிஸ்தவன் கண்டுபிடிக்கப்பட்டான்!

THE FALSE CHRISTIAN DISCOVERED!
(Tamil)

by Dr. R. L. Hymers, Jr.

ஜூலை 7, 2019 கர்த்தருடைய நாள் காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, July 7, 2019

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்தேயு 7:21-23).


எனது பாடத்தை நான் வசனம் 21ல் இருந்து எடுக்கிறேன்,

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத்தேயு 7:21).

இந்தப் போதனை எனது சொந்த யோசனையை அடிப்படையாக கொண்டது அல்ல. இது கிறிஸ்துவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டது ஆகும், மற்றும் பெரிய பூரிட்டன் விமர்சகரான மேத்தியூ மீடு (1629-1699) விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும். வேதாகம விமர்சகர் ஜான்மெக் ஆர்த்தர், தி அல்மோஸ்டு கிறிஸ்டியன் டிஸ்கவர்டு என்ற மீடின் புத்தகத்தைச் சரியாக இணைத்திருக்கிறார். நானும்கூட இதை இணைத்திருக்கிறேன்.

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானே
யல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத்தேயு 7:21).

ஒரு நபருக்கு அதிகமான அறிவு இருக்கலாம், கிறிஸ்துவின் அதிகமான அறிவு இருக்கலாம், மற்றும் இருந்தாலும் இழக்கப்பட்டு இருக்கிறான். பரிசேயர்கள் அதிகமான அறிவு உள்ளவர்களாக இருந்தார்கள், இருந்தாலும் அவர்கள் ஒரு மாயக்காரரான சந்ததியாராக இருந்தார்கள். ஐயோ! அதிகமான அறிவு உள்ளவர்களாக இருந்தவர்கள் அநேகர் நரகத்துக்குச் சென்றார்கள்! அரும்பொருளை அடிப்படையாகக் கொண்ட அறிதல் மட்டுமே அதிகமான அறிதலாகும். அறிதல் வெளிபடமாக நீ என்ன அறிந்திருக்கிறாயோ அது வெறுமையான மகிமை ஆகும். அறிந்து கொள்ள வேண்டியது மற்றும் கடைபிடிக்க வேண்டியது என்னவென்றால் உண்மையான கிறிஸ்தவம்!

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM
என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

ஒரு நபருக்குப் பெரிய ஆவிக்குரிய வரங்கள் இருக்கலாம் இருந்தாலும் இழக்கப்பட்டு இருக்கிறான். ஜெப வரம் ஒரு ஆவிக்குரிய வரம். ஒரு நபர் அற்புதமாக ஜெபிக்கலாம் இருந்தாலும் இழக்கப்பட்டு இருக்கிறான். ஒரு நபருக்குப் பிரசங்க வரம் இருக்கலாம் மற்றும் இரட்சிக்கப்படவில்லை. யூதாஸ் ஒரு பெரிய பிரசங்கியாக இருந்தான். யூதாஸ் சொன்னான், “கர்த்தாவே, கர்த்தாவே, நாங்கள் உமது நாமத்தினாலே [பிரசங்கித்தோம்], உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம்.” அவன் வெளியே ஜெபிக்கும், மற்றும் வெளியே பிரசங்கிக்கும் உண்மையான கிறிஸ்தவனாக இருக்கலாம் இருந்தாலும் அவன் ஒரு உண்மையான கிறிஸ்தவனல்ல. ஒரு மனிதன் தனது ஜெபங்கள் மற்றும் பிரசங்கம் மூலமாக மற்றவர்களுக்கு உதவி செய்யலாம், இருந்தாலும் தனக்கே உதவியே இல்லாதவனாக இருக்கிறான்.

பிரசங்கம் மற்றும் ஜெபத்தின் வல்லமை பிரசங்கியின் அதிகாரத்தைச் சார்ந்து இல்லை, ஆனால் அதை ஆசீர்வதிக்கிர தேவனின் அதிகாரத்தைச் சார்ந்து இருக்கிறது. அவருடைய பிரசங்கத்தின் மூலமாக யாராவது ஒருவர் மாற்றப்படலாம், இருந்தாலும் அந்த பிரசங்கியார் தாமே நரகத்திலே தள்ளப்படுவார்! ராணி மேரியின் தினத்தில் பென்லிடன் சேன்டர்ஸ்க்கு பிரசங்கம் செய்தான் சுவிசேஷத்துக்காக எழுந்து நிற்கும்படி பிரசங்கம் செய்தான், இருந்தாலும் அதன்பிறகு ஒரு துரோகியாக மாறி நரகத்துக்குப் போனான்! வல்லமைமிக்க இளம் மனிதர்களை நான் அறிவேன், ஆனால் அதன்பிறகு அவர்கள் மாயக்காரர்களாக மட்டுமே நிரூபிக்கப்பட்டார்கள்! ஒரு மனிதன் அப்போஸ்தலர்களில் ஒருவனைப்போல பிரசங்கம் செய்யலாம் மற்றும் ஒரு தேவதூதனைப்போல ஜெபம் செய்யலாம், இருந்தாலும் அவன் ஒரு பிசாசின் இருதயத்தை உடையவனாக இருக்கலாம்! ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய வரங்கள் இருக்கலாம் இருந்தாலும் அவன் தன்னில்தானே ஒரு இழக்கப்பட்டவனாக இருக்கலாம். ஒரு பெரிய பிஷப் சொன்னார், “படிப்பறியாத, ஏழை மக்கள் பரலோகத்துக்குப் போகிறார்கள், நாமோ, நமது கல்வி அறிவோடு நரகத்திலே விழுகிறோம்.” ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய வரங்கள் இருக்கலாம், இருந்தாலும் அவன் ஒரு இழக்கப்பட்ட மனிதனாக மட்டுமே இருக்கிறான். ஒரு அவுன்ஸ் உண்மையான கிருபை பத்து பவுன்டு வரங்களின் மதிப்பைவிட அதிகம் ஆகும். யூதாஸ் கிறிஸ்துவைப் பின்பற்றினான்! அவன் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான், அவன் கிறிஸ்துவின் நாமத்தினாலே, பிசாசுகளைத் துரத்தினான், கிறிஸ்துவைப்போல அதே மேஜையில் புசித்தான் மற்றும் குடித்தான்; இருந்தாலும் யூதாஸ் ஒரு மாயக்காரனாக மட்டுமே இருந்தான், அவன் “தனது சொந்த இடமான” நரகத்துக்குப் போனான்! பரிசுத்தமாக இருப்பதாக பாசாங்கு செய்பவன் இருந்தாலும் தேவபக்தியைக் கடைபிடிக்க மாட்டான் “தேவபக்தியின் ஒரு வேஷத்தை தரித்திருப்பான், ஆனால் அதின் பெலனை மறுதலிப்பான்.”

ஒரு நபர் தன்னை ஒரு கிறிஸ்தவனாக அழைத்துக் கொள்ளலாம், இருந்தாலும் அவனுடைய இருதயம் ஒருபோதும் மாற்றப்பட்டு இருக்காது. அவன் ஒரு நல்ல கிறிஸ்தவனாக தோற்றமளிக்கிற ஒரு மாயக்காரன், ஆனால் பெருமையினால் மற்றும் கலகத்தினால் நிறைந்தவன். அநேகர் நீதிமான்களாக காட்சி அளிக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் நீதியை முகமூடியாக தரித்தவர்கள், தங்கள் இருதயங்களில் பெருமை மற்றும் கலகத்தை மறைத்தவர்கள். ஒரு மனிதன் இறையியல் படிப்புக்குச் சென்று பட்டம் பெற்றவனை அது விவரிக்கிறது. ஆனால் அவனுடைய இருதயம் மாற்றப்படவில்லை. அதனால் அவன் நமது சபையை விட்டு இழக்கப்பட்ட அழகான ஒரு பெண்ணைப் பின்பற்றி போனான். “தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்பிரிந்து… போய்விட்டான்” (II தீமோத்தேயு 4:10). அது டாக்டர் கிரிட்டன் எல். ஷென்னை விவரிக்கிறது, அவருடைய பெருமை மற்றும் கலகம் வெளிப்படையாக மாறினபொழுது அவர் ஒரு மாயக்காரராக மட்டுமே நிருபிக்கப்பட்டார், அவருடைய முகமூடி கிழிந்த பிறகு நாங்கள் அவரை ஒரு மாயக்காரராக பார்த்தோம்.

“அந்நாளில் அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் [உரைத்தோம்] அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை: அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”

எலிகள் மற்றும் சுண்டெலிகள் ஒரு வீட்டில் குடியிருக்கலாம். ஆனால் அந்த வீடு விழும் நிலையில் இருக்கும்போது, அவைகள் வேறு பாதுகாப்பான இடத்தைப் பார்த்து, ஓடிபோகும். ஒரு சபையின் மகிழ்ச்சியான நாட்களில் அநேக பொய்யான மாயக்காரர்களை அதன் உள்ளே கொண்டு வரப்படும். ஆனால் சபை அசைக்கப்படும்போது, அவர்கள் வெளியே ஓடிபோவார்கள் – அவர்கள் முன்பாக என்ன சொல்லி இருந்தாலும் பரவாயில்லை அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல என்று நிருபிப்பார்கள். அவர்களில் சிலரை இங்கே கொடுக்கிறேன்.

ஒரு மனிதன் சொன்னான், “அவர் என்னை எங்கே நடத்துகிறாரோ நான் பின்பற்றுவேன். நான் கஷ்டங்களையும் தொந்தரவுகளையும் சந்தித்தாலும் இயேசுவே... எனது வாழ்க்கையைக் கொடுத்தவர். இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்.” இருந்தாலும் இந்த மனிதன் நமது சபையில் பிளவு ஆரம்பித்தபொழுது ஓடின முதல் மனிதனாக இருந்தான்.

ஒரு சீன பெண் சொன்னாள், “தேவன் எனக்குச் செய்த பெரிய காரியங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவன் எனது வாழ்க்கையைத் தமது சாட்சியாக உபயோக படுத்துவாராக.” ஆனால் இவள் சபையில் பிளவு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஓடிவிட்டாள்!

மற்றொரு சீன இளம் மனிதன் சொன்னான், “இயேசுவின் மூலமாக இரட்சிக்கப்படுவது எவ்வளவு பெரியது என்று என்னால் விவரிக்க முடியவில்லை... கிறிஸ்து எனக்குச் செய்த பெரிய காரியங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” இருந்தாலும் ஒரு குறுகிய காலத்துக்குப் பிறகு அவன் ஷென்னை பின்பற்ற சபையை விட்டுப் போனான், மற்றும் அவனுடைய வார்த்தைகள் ஒன்றும் அர்த்தமில்லாதவை என்று காட்டினான். அவன் இன்னும் நரகத்துக்குப் போகிற, ஒரு இழக்கப்பட்ட மாயக்காரனாக மட்டுமே இருக்கிறான்!

ஒரு வியட்னாம் இளம் மனிதன் சொன்னான், “இயேசு எனக்காக கொண்டிருக்கும் எல்லா அன்புக்கு, போதுமான அளவு என்னால் அன்புகூற முடியவில்லை. எனது வாழ்க்கையை இயேசுவுக்கு, என் இரட்சகருக்குக் கொடுக்கிறேன்.” ஒரு வருடத்துக்குப் பிறகு அவன் இரட்சகரைக் காட்டிக்கொடுத்தான், மற்றும் அவன் துரோகியான ஷென்னோடு சபையை விட்டு போனான்.

மற்றொரு இளம் கல்லூரி மாணவி சொன்னாள், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் என்னை சுத்தமாக்கினதற்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” இது நன்றாக ஒலிக்கிறது, இல்லையா? இதை அவள் சிறிது நாட்களில், அவள் சீக்கிரமாக சபையை விட்டு உலகத்தின் பாவங்களுக்குச் சென்று விட்டாள்.

ஒரு ஜப்பானிய/அமெரிக்க பெண் சொன்னாள், “எனது சாட்சி மிகவும் எளிமையானது. நான் இயேசுவை நம்பினேன், அவர் என்னை இரட்சித்தார்” – அவள் சபையைவிட்டுத் துரோகியான ஷென்னுடன் ஓடியதன் மூலமாக அவருக்கு மறுகிரயம் செலுத்தினாள்!

ஒரு மெக்சிகன் மனிதன் சொன்னான், “ஒரு அன்பான இரட்சகர் மூலமாக நான் இரக்கம் காட்டப்பட்டேன், இதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்” – ஆனால் குறுகிய காலத்துக்குள்ளாக அவன் சொன்னதை மறந்து போனான், அவன் துரோகியான ஷென்னுடன் போனான். அவன் கலகக்காரரான மாயக்காரரோடு நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் என்னிடம் உள்ளது, அவன் துரோகியான ஷென்னுக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறான்.

ஒரு சீன இளம் பெண் சொன்னாள், “இயேசு என்னை நேசிக்கிறார்! இப்பொழுது நான் என் இரட்சகர், இயேசு கிறிஸ்துவுக்காக பாட விரும்புகிறேன்!” இது நன்றாக ஒலிக்கிறது, இல்லையா? ஆனால் மிகவிரைவாக அவள் நமது சபையைக் காட்டிக்கொடுத்து, துரோகியான ஷென்னோடு ஓடிப்போனாள்!

ஒருவர் என்னிடம் சொன்னார், “டாக்டர் ஹைமர்ஸ் அவர்களே, அதிகமான சீன மக்களை உள்ளே கொண்டு வரவேண்டாம். அவர்கள் அனைவரும் இரண்டு முகமுள்ள மாயக்காரர்களாக இருக்கிறார்கள்!” இது உண்மைதான், அவர்கள் உண்மையான ஒரு மாறுதலை அனுபவிக்காவிட்டால் இங்கே நான் குறிப்பிட்ட ஒருவரைபோல இழக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இயேசு சொன்னார், “நீ மறுபடியும் பிறக்க வேண்டும்” (யோவான் 3:7).

“மலிவான கிருபை” மற்றும் “எளிதாக நம்பிக்கை கொள்கை” என்பவைகள் புதிதாக உள்ளவைகள், ஆனால் “அறஒழுக்கத்தின் கட்டுப்பாட்டின் கொள்கை” அப்படி இல்லை. மார்டீன் லூத்தர் (1483-1546) நமக்கு ஒரு வாக்கியம் கொடுத்திருக்கிறார். அது இரட்சிப்பின் எல்லா நன்மைகளையும் விரும்புபவர்களுக்கு பொருந்தும் ஆனால் நன்றிக்கடன் உள்ளவர்களுக்கு அது பொருந்தாது (Soli Deo Gloria Publications, jacket cover of Matthew Mead’s The Almost Christian Discovered, foreword by John MacArthur).

துரோகியான ஷென்னின் மக்களில் ஒருவர் சொன்னார், “அவருடைய சபைக்குப் போகவில்லையானால் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது என்று டாக்டர் ஹைமர்ஸ் நினைக்கிறார்.” சமயகோட்பாட்டுக்கு அடங்காதவர்கள் அவனைப்போல பொல்லாத பாவங்களிலே இழக்கப்பட்டவர்கள் தங்கள் பாவங்களை மற்றும் இழக்கப்பட்டதை மூடும்படியாக எந்தப் பொய்யை வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த மனிதன் அப்படியாக பொய்யாக சொன்னதற்காக நான் ஆச்சரியப்படவில்லை, நான் அப்படி சொல்லவில்லை என்று அந்தமனிதனே பரிபூரணமாக அறிவான் – மேலும் நான் அதை விசுவாசிப்பதும் இல்லை.

சபையானது “கிறிஸ்துவின் சரீரம்” (எபேசியர் 4:12) என்பதை நான் விசுவாசிக்கிறேன். அவருடைய சபையை விட்டுப் போகிறவர்கள் அவருடைய சரீரத்தைப் பெலவீனப்படுத்துகிறார்கள். அவருடைய சபையைத் தாக்குகிறவர்கள், அவருடைய சரீரத்தைத் தாக்குகிறார்கள். அவருடைய சபையைப் பிரிக்கிறவர்கள், அவருடைய சரீரத்தைப் பிரிக்கிறார்கள். அவருடைய சபையின் உறுப்பினராக இல்லாதவர்கள், அவருடைய சரீரத்தின் உறுப்பினர்கள் அல்ல. அநேக புதிய சுவிசேஷகர்கள் வேதவாக்கியங்களைச் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. அதனால்தான் அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து கொள்கை மீறுகிறார்கள்!

சில மக்கள் அதை “எல்லைக்குறி” நோக்கு என்று அழைக்கிறார்கள். நீங்கள் அதை என்னவாக அழைக்கிறீர்கள் என்பதைப்பற்றி நான் கவலைப்படவில்லை, அதுதான் வேதாகம நிலைமை ஆகும். சபை “கிறிஸ்துவின் சரீரமாக” இருக்கிறது!

நீ இயேசுவானவரிடம் வரவேண்டும் என்று நான் உன்னைக் கேட்டுக்கொள்ளுகிறேன். அவர் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் மேலே பரலோகத்திலே, தேவனுடைய வலது பக்கத்திலே அமர்ந்திருக்கிறார். நீ இயேசுவானவரிடம் வா. உலகப்பிரகாரமான காரியங்களிலிருந்தும் பாவத்திலிருந்தும் திரும்பு. இயேசுவானவரை நம்பு, அவர் உனது எல்லா பாவங்களையும் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் சுத்தம் செய்வார்! இயேசுவானவரை நம்பு நீ அவருடைய சபையாகிய சரீரத்தின், அங்கமாக மாறுவாய். ஆமென்.

இயேசுவானவரை நம்புவதைப்பற்றி நீ எங்களோடு பேசவிரும்பினால் தயவுசெய்து இப்பொழுதே இங்கே வந்து முன்வரிசையில் நிற்கவும். நாங்கள் எண் 5வது பாடலான, “நான் இருக்கிறபடியே” என்ற பாடலைப் பாடும்பொழுது, நீங்கள் முன்னுக்கு வரலாம்.

நான் இருக்கிற வண்ணமாகவே, எந்த ஒரு முறையீடும் இல்லாமல்,
   உமது இரத்தம் எனக்காக சிந்தபட்டபடியினாலே,
நீர் என்னை உம்மிடம் வரும்படி அழைத்தபடியினாலே,
   ஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்! நான் வருகிறேன்!

நான் இருக்கிற வண்ணமாகவே, எதற்கும் காத்திராமல்,
   எனது ஆத்தும பாவங்களின் கருப்புக்கறையும் இல்லாமல்,
எனது ஒவ்வொரு பாகத்தையும் உமது இரத்தம் சுத்திகரிக்கும் உம்மிடம்,
   ஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்! நான் வருகிறேன்!

நான் இருக்கிற வண்ணமாகவே, அநேக முறையீடுகளாலும்,
   அநேக சந்தேகங்களாளும் நான் புரட்டப்பட்டாலும்,
உள்ளாக போராட்டங்கள் மற்றும் பயங்கள், இல்லாமல்,
   ஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்! நான் வருகிறேன்!
(“Just As I Am,” Charlotte Elliott, 1789-1871, altered by the Pastor).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.