Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




உபத்திரவத்தில் உற்சாகப்படுத்துதல் மற்றும் எச்சரிக்கை – இப்பொழுதும் எதிர்காலத்திலும்

ENCOURAGEMENT AND WARNING IN TRIBULATION –
NOW AND IN THE FUTURE
(Tamil)

டாக்டர் கிறிஸ்டோபர் எல். கேஹன் அவர்களால் சொல்லப்பட்டு
டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்ட போதனை
மே 19, 2019 கர்த்தருடைய நாள் மாலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
with material by Dr. Christopher L. Cagan
preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Evening, May 19, 2019

“என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:33).


இயேசுவானவர் சொன்னார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு.” “உபத்திரவம்” என்ற வார்த்தை திலிப்சிஸ் என்ற பதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. இதை “அழுத்தம்” என்றும் மொழிபெயர்க்கப்பட முடியும். நம் எல்லாருக்கும் வாழ்க்கையில் நமக்கு அழுத்தம் உண்டு. ஆனால் மிகமோசமான அழுத்தத்ததின் நேரம் இன்னும் நமக்கு வரவில்லை. கிறிஸ்து ஒலிவ மலையின்மீது இறங்கி இந்த உலகத்தை நீதியாக அரசாட்சி செய்வதற்கு முன்பாக அந்த உபத்திரவம் ஏழு வருட காலமாக இருக்கும். அந்த உபத்திரவத்தின் மிகமோசமான பகுதி கடைசி மூன்றரை வருடங்களாகும். கிறிஸ்து இந்தப் பூமிக்கு வருவதற்கு முன்பாக, அந்திகிறிஸ்து ஏழுவருடங்கள் இந்த உலகத்தை அரசாட்சி செய்வான். அந்த ஏழுவருடங்களில் கிறிஸ்தவர்களாக மாறுபவர்கள் இரத்தச் சாட்சிகள் ஆவாவார்கள்.

இந்த உபத்திரவ கிறிஸ்தவர்களின் ஆத்துமாக்களை அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு தரிசனத்திலே பரலோகத்தில் கண்டார். அவர் சொன்னார்,

“தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினி மித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்” (வெளிப்படுத்தல் 6:9).

அதன் பிறகு அவர் எழுதினார்,

“இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியான வருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்” (வெளிப்படுத்தல் 7:14).

வரலாற்றிலே இருந்த எல்லா காலங்களையும்விட இந்த ஏழு வருடங்கள் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் மோசமான காலங்களாக இருக்கும். இயேசுவானவர் சொன்னார்,

“உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராத தும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” (மத்தேயு 24:21).

ஆமாம், எடுத்துக்கொள்ளப்படுதல் என்று ஒன்று உண்டு. வேதாகமம் சொல்லுகிறது,

“ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்து வுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கா;த்தருடனேகூட இருப்போம்” (I தெசலோனிக்கேயர் 4:16-17).

இருந்தாலும் இந்த வாக்குத்தத்தம் இன்றுள்ள சோதனையில் இருந்தும், மகாஉபத்திரவத்துக்கு முன்பாகவும் நம்மை விடுவித்துவிடும் என்று நாம் நினைக்க கூடாது. நமது பாடத்தில், இந்தக் காலம் முழுவதிலும் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவம் இருக்கும் என்று இயேசுவானவர் சொன்னார்.

“என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:33).

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM
என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

இயேசுவானவர் இங்கே என்ன சொன்னார் என்று மிகவும் கவனமாக தியானிப்போம். நான் இந்த வசனத்தின் இரண்டாவது பகுதியை விமர்சிக்கிறேன், அதன்பிறகு முதல் பகுதி, மற்றும் அதன்பிறகு கடைசி பகுதியைக் கவனிப்போம்.

I. முதலாவதாக, “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு.”

இயேசுவானவர் இதை சீஷர்களுக்குச் சொன்னார், மற்றும் இந்தக் காலத்தில் உள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இது பொருந்துவதாக உள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்,

“அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது…” (II கொரிந்தியர் 12:7).

இது பவுலுக்குக் கண்பார்வையில் இருந்த பிரச்சனையைக் குறிப்பதாக காணப்படுகிறது. கிறிஸ்தவர்கள் சரீரபிரகாரமாக போகவேண்டிய வியாதிகள், வலி, மற்றும் சரீர மரணம் போன்றவற்றை இது குறிக்கிறது. நாம் கிறிஸ்தவர்களாக மாறினால் சரீரபிரகாரமான வியாதி மற்றும் வலி போன்றவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது.

நம்முடைய விழுந்துபோன பாவம் நிறைந்த உலகத்தில், நாம் கிறிஸ்தவர்களாக மற்ற சோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் ஊடாக கடந்து செல்ல வேண்டும். கிறிஸ்தவர்கள் அனுபவித்து கொண்டிருப்பதைப்பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்

“...உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும் … உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?” (ரோமர் 8:35-36).

ஆனால் அவர் இந்த உபத்திரவங்களில் ஒன்றும் “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை” பிரிக்க முடியாது (ரோமர் 8:36அ) என்று குறிப்பிடுகிறார்.

“உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” (யோவான் 16:33).

கிறிஸ்துவின்மீது அப்போஸ்தலர்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாக மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் கொல்லப்பட்டார்கள் – யோவானை தவிர – அவர் கொதிக்கும் எண்ணையில் அமிழ்த்தப்பட்டார், மற்றும் தமது வாழ்நாள் முழுவதும் காயவடுக்களோடு இருந்தார். கிறிஸ்தவர்கள் கடந்த காலம் முழுவதிலும் தாங்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாக பாடுகளை அனுபவித்தார்கள். இரத்தச் சாட்சிகளின் பாக்ஸ்ஸஸ் என்ற ஒரு பழங்கால புத்தகம் வரலாறு முழுவதும் பாடுபட்ட கிறிஸ்தவர்களைப்பற்றிய தஸ்தாவேஜூகளை தருகிறது. டாக்டர் பால் மார்ஷல் சொன்னார்,

மத்திய அமெரிக்க காடுகளிலும்... சீன தொழிலாளர் முகாம்களிலும், பாக்கிஸ்தான் சிறைகளிலும், இந்திய கலவரங்களிலும், மற்றும் சுடானேசி கிராமங்களிலும் எண்ணிக்கையில்லாத விசுவாசிகள் தாங்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாக ஏற்கனவே இறுதி கிரயத்தைச் செலுத்தினார்கள் (ஐபிட்., பக்கம் 160).

சூடானில் கிறிஸ்தவர்கள் அடிமைபடுத்தப்பட்டார்கள். ஈரானில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கூபாவிலே அவர்கள் சிறைகளில் தள்ளப்பட்டார்கள். சீனாவிலே அவர்கள் மரணமட்டும் அடித்துக் கொல்லப்பட்டார்கள். உலகமுழுவதிலும் 60 நாடுகளுக்கும் மேலாக கிறிஸ்தவர்கள் தாங்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாக தொல்லை படுத்தப்பட்டார்கள், கெடுவழக்கம் மோசடி செய்யப்பட்டார்கள், வாதிக்கப்பட்டார்கள் அல்லது படுகொலை செய்யப்பட்டார்கள். உலகம் முழுவதிலும் 200,000,000 கிறிஸ்தவர்கள் அனுதினமும் இரகசிய காவலர்களுக்கும், நிலவர அமைதி காப்புக் குழுவினருக்கும், அல்லது அடக்குமுறையாளர்களுக்கும் மற்றும் வேறுபட்டவர்களுக்கும் பயந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்... நூற்றுக்கணக்கான மில்லியன் கணக்காக கிறிஸ்தவர்கள் தாங்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாகவே வாதிக்கப்படுகிறார்கள் (Paul Marshall, Ph.D., Their Blood Cries Out, Word, 1997, back jacket).

இங்கேயும்கூட மேற்கிலே, உண்மையான கிறிஸ்தவர்கள் அடிக்கடி சமயக்கட்டுப்பாட்டுச் சமூகத்தினரால் தனிமைபடுத்தப்படுகிறார்கள், மற்றும் சிறுமை படுத்தப்படுகிறார்கள் அல்லது தொல்லை படுத்தப்படுகிறார்கள். கல்லூரி வகுப்புகளில் கிறிஸ்தவம் மற்றும் வேதாகமம் பரிகாசம் பண்ணப்படுகின்றன. அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் சபைகளில் கர்த்தருடைய நாளில் தேவனை ஆராதிக்க வேண்டியதின் காரணமாக உயர்வை இழந்தார்கள், மற்றவர்கள் தங்கள் வேலைகளில் வாதிக்கப்பட்டார்கள். கிறிஸ்தவரல்லாத குடும்ப உறுப்பினர்களும்கூட பெலவீனமான, மென்மையான புதிய சுவிசேஷகர்களும் அர்ப்பணிக்கப்பட்ட கிறிஸ்தவர்களைப் பரியாசம் செய்தார்கள். இயேசுவானவர் சொன்னதுபோல,

“உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” (யோவான் 16:33).

II. இரண்டாவதாக, “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.”

“கிறிஸ்துவுக்குள்” இருப்பவர்களுக்கு இது ஒரு வாக்குத்தத்தம் ஆகும். “என்னிடத்தில்.” அவரே உள்ளான சமாதானத்தின் ஊற்றாக இருக்கிறார். இயேசுவானவர் சொன்னார்,

“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை...” (யோவான் 14:27).

ஒரு மனிதன் கிறிஸ்துவை அறிந்துகொள்ளும்பொழுது, மற்ற உலகத்தாருக்கு இல்லாத ஒரு நிலையான, உள்ளான சமாதானத்தை பெறுகிறான்.

கிறிஸ்து“வுக்குள்” இருக்கும் நபர், மற்றும் தனது பிரச்சனைகளைத் தேவனிடத்தில் ஜெபித்து ஒப்புக்கொடுத்தவருக்கு, ஒரு வினோதமான சமாதானமிருக்கும், அதை வேதாகமம் “எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம்” (பிலிப்பியர் 4:7) என்று அழைக்கிறது. இந்த இரவிலே உலகமுழுவதிலும் அநேக நாடுகளில் கிறிஸ்தவர்கள் கைதுசெய்யவும், வாதிக்கப்படவும், சிறைபடுத்தவும், மற்றும் சிரச்சேதமும் செய்யவும் – ஒப்புக்கொடுக்கப்படுவது ஏன் என்று இந்த உலகத்தால் எளிதாக புரிந்துகொள்ள முடியாது.

கிறிஸ்தவனுக்கு உள்ளான போரட்டம், உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனைகள், அல்லது சரீரநோவு இல்லாததினால் இந்தச் சமாதானம் என்பது அல்ல. அமெரிக்காவில் அநேக சுவிசேஷகர்கள் அன்போடுகூட வெற்றி, சொத்து, சாந்தி, மகிழ்ச்சி, மற்றும் சுயமுன்னேற்றம் பெற்றிருக்கிறார்கள். இந்தப் பாடம் தனது விசுவாசத்துக்காக தலைகீழாக தொங்கவிடப்படும் ஒரு சீன கிறிஸ்தவருக்கு, அல்லது ஒரு ஐந்து ஆண்டுகள் தனிமை சிறைதண்டனை அனுபவித்த கூபன் கிறிஸ்தவருக்கு, அல்லது இயேசுவை விசுவாசித்ததால் மரணத்தைச் சந்திக்கும் ஒரு ஈரானில் உள்ள கிறிஸ்தவருக்கு, ஏளனம் செய்வதாக காணப்படலாம்.

இந்த மூன்றாம் உலக நாடுகளில் உள்ள உபத்திரவப்படும் கிறிஸ்தவர்கள் இயேசுவானவர் “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 16:33) என்று சொன்னதன் கருத்தை மிக நெருக்கமாக புரிந்து கொள்ளுவார்கள். அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன மற்றும் அவர்களுக்காக தேவன் கவனம் எடுத்துக்கொள்ளுகிறார் என்ற அறிவின் விளைவாக, இந்தச் சமாதானம் ஒரு உள்ளான அமைதி என்பதை, அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

நான் II கொரிந்தியர் 11:24-28ஐ வாசிக்க போகிறேன். அப்போஸ்தலனாகிய பவுலுக்கு என்ன நடந்தது என்று நான் சொல்லும்போது கவனிக்கவும். அவர் சொன்னார்,

“யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிராயணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங் களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது” (II கொரிந்தியர் 11:24-28).

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சமாதானமாக இருப்பதாக பவுல் எப்படி சொல்ல முடியும்? இருந்தாலும் அவர் செய்தார். பிலிப்பியர் 4:6, 7ல் பவுல் இதற்கு விடையைக் கொடுக்கிறார்.

“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக்க காத்துக்கொள்ளும்” (பிலிப்பியர் 4:6-7).

பவுல் அதிகமான பாடுகள் மற்றும் உபத்திரவங்கள் மூலமாக சென்றார், இருந்தாலும் இங்கே “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்” பற்றி பேசினார்.

III. மூன்றாவதாக, “திடன்கொள்ளுங்கள்: நான் உலகத்தை ஜெயித்தேன்.”

வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் ஊடாகபோக முடியுமா அல்லது முடியாதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். உலகியல் சார்ந்த கல்லூரிகளில் வகுப்புக்கு வகுப்பு மாறி உட்கார்ந்து, வகுப்புக்குப் பிறகு வேதாகமமும் மற்றும் கிறிஸ்தவமும் கடுமையாக தாக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும், மற்றும் பரியாசம் பண்ணப்படுவதையும் கேட்டுக்கொண்டு இருக்கலாம். “இதை சமாளித்து, என்னால் ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியுமா?”, கல்லூரி மாணவன் நினைக்கிறான். “இந்தத் தற்போதைய சோதனையை என்னால் கடந்து வரமுடியுமா? மக்கள் எனக்கு விரோதமாக திரும்பும்போது என்னால் இதை செய்ய முடியுமா? நான் பயத்தில் இருக்கும்போது என்னால் இதை பற்றிக்கொண்டு இருக்க முடியுமா – மற்றும் எனக்கு அதிக விசுவாசம் இல்லை?”

இன்று தீவிரமான கிறிஸ்தவர்கள் வெறியர்களாக பரியாசம் பண்ணப்படுகிறார்கள். நீ இயேசுவுக்காக அதிகமாக செய்கிறாய் என்று மக்கள் சொல்லுவார்கள். அவர்கள் உன்னை சுலபமான ஒரு மணிநேர ஞாயிறு காலை சபைக்கு அழைப்பார்கள், அல்லது சபையே வேண்டாம் என்று சொல்லுவார்கள். நீ கிறிஸ்துவை பின்பற்றாமல் நிருத்தினால் மட்டுமே சந்தோஷமாக இருப்பாய் என்று சொல்லுவார்கள். “சிலுவையைச் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. பாடுகளும் வேதனைகளும் படவேண்டிய அவசியம் இல்லை,” என்று அவர்கள் சொல்லுவார்கள். “அதை எல்லாம் மறந்துவிடு. நாம் இருக்கிறபடி அப்படியே செல்லுவோம்.” அவர்கள் உன்மீது அழுத்தம் கொடுப்பார்கள். இயேசுவானவர் சொன்னதுபோல, “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு.”

ஆனால் கிறிஸ்து சொல்லுகிறார், “ஆனாலும் திடன்கொள்ளுங்கள்: நான் உலகத்தை ஜெயித்தேன்.” நான் ரோமர் 8:35-39ஐ வாசிக்கும்போது கவனிக்கவும்.

“உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவை யெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானா லும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (ரோமர் 8:35-39).

நீ கிறிஸ்துவினிடத்தில் வரும்பொழுது, அவர் பொறுப்பெடுத்துக்கொள்ளுகிறார். அவர் உன்னை விடாதபடி பற்றி பிடித்துக்கொள்ளுகிறார். நீ கிறிஸ்துவினிடத்தில் வரும்பொழுது, அவரை நீ பற்றிக் கொள்ள வேண்டியதில்லை. அவர் உன்னை பற்றிக்கொள்ளுவார்! உன்னுடைய மாறுதலின் நேரத்திலிருந்து, நீ கிறிஸ்துவில் நித்தியமாக பாதுகாக்கப் பட்டிருக்கிறாய். 200 மில்லியன் மக்கள் மூன்றாம் உலகத்தில் தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்துக்காக பாடுபட சித்தமாக இருக்கிறார்கள் என்ற உண்மை கிறிஸ்து தம்மை பின்பற்றுபவர்களைப் பற்றிக்கொண்டிருக்கிறார், மற்றும் அவர்களைப் பரலோக நம்பிக்கை இல்லாமல் அழியவிடமாட்டார் என்பதை நிரூபிக்கிறது. கிறிஸ்துவினிடம் வா, மற்றும் எல்லா இரட்சிப்பும், மற்றும் எல்லா பாதுகாப்பும் அவர் செய்கிறார்! போதனைக்கு முன்னதாக திருவாளர் நாஹன் பாடினதுபோல,

இயேசுவிடம் உள்ள ஆத்துமா அவர்மேல் சாய்ந்து இளைப்பாறும்,
   அவனுடைய எதிரி இடம், நான் கைவிடவேமாட்டேன்;
அந்த ஆத்துமாவை, சகல நரகமும் அசைக்க முயன்றாலும்,
   நான் ஒருபோதும், இல்லை ஒருபோதும், கைவிடமாட்டேன்.
(“How Firm a Foundation,” ‘K’ in Rippon’s ‘Selection of Hymns,’ 1787).

இந்தப் போதனையின் தலைப்பு “உபத்திரவத்தில் உற்சாகப்படுத்துதல் மற்றும் எச்சரிக்கை – இப்பொழுதும் எதிர்காலத்திலும்.” இந்த இரவிலே நான் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தேன். ஆனால் நான் உங்களுக்கு ஒரு எச்சரிப்பின் வார்த்தையையும் கொடுக்க வேண்டும். இப்பொழுது நாம் அனுபவிக்கும் பாடுகள் என்னவாக இருந்தாலும் அது மற்ற இடங்களில் உள்ள மக்கள் படும்பாடுகளோடு ஒப்பிட்டால் அது மிகவும் சிறிதானதே ஆகும். மூன்றாம் உலகத்துக் கிறிஸ்தவர்கள் அடிக்கப்படுகிறார்கள், சிறையில் போடப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள் இயேசுவை விசுவாசிக்கிறதற்காக கொல்லப் படுகிறார்கள். அங்கே இருப்பதை ஒப்பிடும்போது அமெரிக்காவில் நமது வாழ்க்கை ஒரு பருவவிடுமுறை போன்றது. எதிர்கால வருடங்களில் இங்கே ஒரு கிறிஸ்தவனாக இருப்பது மிகவும் கடினமாக இருக்கும். அழுத்தம் மிகவும் மோசமாக இருக்கும். நீங்கள் ஒரு தீவிரமான கிறிஸ்தவனாக இருப்பதால் உங்கள் வேலையையும், உங்கள் வீட்டையும், மற்றும் உங்கள் பணத்தையும் இழக்க வேண்டியதாக இருக்கலாம். அது மற்ற நாடுகளில் இப்பொழுதே நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு விரோதமாக திரும்பலாம். உபத்திரவத்தைப்பற்றி பேசும்பொழுது, இயேசு சொன்னார், “அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள். என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்” (மாற்கு 13:12, 13). அது மற்ற நாடுகளில் இப்பொழுதே நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஏழு வருடங்களுக்கு முன்பாகவே மக்கள் உங்களைப் புறக்கணித்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.

தீர்க்கதரிசியாகிய எரேமியா சொன்னார், “நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?“ (எரேமியா 12:5). ஆமாம், இப்பொழுது நீ சில உபத்திரவங்கள் ஊடாக போகிறாய். ஆனால் இன்று இந்தச் சிறிய அழுத்தத்தை உன்னால் தாங்கமுடியாவிட்டால், அது இன்னும் மோசமானால் நீ என்ன செய்வாய்? இன்று உள்ள பருவ விடுமுறை காலத்தைப் போன்ற காலத்தில் கிறிஸ்தவ வாழ்க்கை வாழமுடியாவிட்டால், புயல் வரும்போது நீ என்ன செய்வாய்? இப்பொழுதே ஒரு உறுதியான கிறிஸ்தவனாக இரு என்று நான் உன்னை வற்புறுத்துகிறேன். இப்பொழுது நீ அதை செய்தால் பின்னால் நீ ஒரு உறுதியான கிறிஸ்தவனாக இருப்பாய். நான் என்னை ஒரு புதுகிறிஸ்தவனாக நினைத்தேன், ரிச்சர்ட் வர்ம்பிராண்ட் எழுதின கிறிஸ்துவுக்காக வாதிக்கப்பட்டவர்கள் என்ற புத்தகத்தைப் படித்தபொழுது. அது வெறும் படிக்கக்கூடிய ஒரு புத்தகமாக இல்லை. அது எனது வாழ்க்கையை மாற்றினது. ஒரு கிறிஸ்தவனாக இருப்பது எப்பொழுதும் ஒரு பருவ ஓய்வு அல்ல. அது கடினமாகவும் இருக்க முடியும். அது கடினமாக இருக்கிறது. ஆமாம், “திடன்கொள்ளுங்கள்” (யோவான் 16:33). ஆனால் செல்லுஞ்செலவைக் கணக்குப் பார்க்கவும் வேண்டும் (லூக்கா 14:28 பார்க்கவும்). அது எல்லாவற்றுக்கும் மேலான விலை மதிப்புக்குரியது, நீ என்றென்றுமாக கிறிஸ்துவோடு வாழுவாய்.

இப்பொழுது நான் இழக்கப்பட்டவர்களோடு பேசவேண்டியது அவசியமாகும். இயேசு உன்னை நேசிக்கிறார். உன்னுடைய பாவங்களுக்குக் கிரயத்தைச் செலுத்த அவர் சிலுவையின்மீது மரித்தார். உன்னுடைய பாவங்களைக் கழுவி சுத்தம்செய்ய அவர் இரத்தம் சிந்தினார். உனக்கு ஜீவனை கொடுக்க அவர் கல்லரையிலிருந்து உயிரோடு எழுந்தார். நீ அவரை நம்பினால், நீ என்றென்றுமாக இரட்சிக்கப்படுவாய். ஆனால் இயேசுவானவரை நம்புவது ஏதோ சில வார்த்தைகள் அல்ல. இயேசுவானவரை நம்புவது என்றால் இயேசுவானவரை நம்புவதுதான். ஆமாம், கடினமான நேரங்கள் இருக்கலாம். ஆமாம், நீ பாடுபடவேண்டி இருக்கலாம். ஆனால் அது எல்லாவற்றுக்கும் தகுதியானதாக இருக்கும். நீ இயேசுவானவரை அறிந்துகொள்ளுவாய். நீ அவரை நம்பினால் என்றென்றுமாக கிறிஸ்துவோடு நீ வாழுவாய். இயேசுவானவரை நம்புவதைப்பற்றி நீ என்னோடு பேசவிரும்பினால், தயவுசெய்து முன் இரண்டு வரிசைகளில் வந்து அமரவும். ஆமென்.

போதனைக்கு முன்பாக தனிப்பாடல் பாடியவர் திரு. ஜேக் நாஹன்:
“How Firm a Foundation” (‘K’ in Rippon’s ‘Selection of Hymns,’ 1787).


முக்கிய குறிப்புகள்

உபத்திரவத்தில் உற்சாகப்படுத்துதல் மற்றும் எச்சரிக்கை – இப்பொழுதும் எதிர்காலத்திலும்.

ENCOURAGEMENT AND WARNING IN TRIBULATION –
NOW AND IN THE FUTURE

டாக்டர் கிறிஸ்டோபர் எல். கேஹன் அவர்களால் சொல்லப்பட்டு
டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்ட போதனை
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
with material by Dr. Christopher L. Cagan

“என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:33).

(வெளிப்படுத்தல் 6:9; 7:14; மத்தேயு 24:21;
I தெசலோனிக்கேயர் 4:16-17).

I.   முதலாவதாக, “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு,” II கொரிந்தியர் 12:7; ரோமர் 8:35-36.

II.  இரண்டாவதாக, “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்,” யோவான் 14:27; II கொரிந்தியர்11:24-28; பிலிப்பியர் 4:6-7.

III. மூன்றாவதாக, “திடன்கொள்ளுங்கள்: நான் உலகத்தை ஜெயித்தேன்,” ரோமர் 8:35-39; மாற்கு 13:12, 13;
எரேமியா 12:5; லூக்கா 14:28.