Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கிறிஸ்து தமது பூலோக இராஜ்ஜியத்தை எப்படி அமைக்கப்போகிறார்

HOW CHRIST WILL SET UP HIS EARTHLY KINGDOM
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஜனவரி 13, 2019 கர்த்தருடைய நாள் மாலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, January 13, 2019

“அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால் மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்... அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார். அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்” (சகரியா 14:4-5, 9).


கிறிஸ்து முதலாவதாக பெத்தலகேமிலே, ஒரு தொழுவத்திலே கன்னி மரியாளுடைய வயிற்றிலிருந்து பிறக்க, தேவனால் அனுப்பப்பட்டார் என்பதைப்பற்றி இந்த உலகத்தில் ஏறக்குறைய ஒவ்வொருவரும் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆமாம், நீங்கள் அனைவரும் கிறிஸ்துவின் முதலாவது வருகையைப்பற்றி கேள்விபட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் வேதாகமத்தில் அவரது முதலாவது வருகையைப்பற்றி குறிப்பிடப்பட்ட குறிப்புகளில் எட்டில் ஒன்று என்ற விகிதாசாரப்படி அவரது இரண்டாம் வருகையைக் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் டேவிட் ஜெரேமியா அவர்கள் சொன்னார்கள்,

வேதவல்லுனர்கள் 1,845 வேதாகம குறிப்புகளில் அவரது இரண்டாம் வருகையைக் குறித்துக் குறிப்பிடப் பட்டுள்ளது, இதில் புதிய ஏற்பாட்டின் 318 குறிப்புகளும் அடங்கும். அவரது திரும்ப வருகை பதினேழு பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களுக்குக் குறையாமலும் மற்றும் புதிய ஏற்பாட்டில் ஒவ்வொரு பத்து அதிகாரங்களில் ஏழு அதிகாரங்களில் அவரது திரும்ப வருகை வலியுறுத்தப் பட்டுள்ளது. [கிறிஸ்து] அவர்தாமே அவரது திரும்ப வருகையை இருபத்தியொருமுறை குறிப்பிட்டுள்ளார். புதிய ஏற்பாட்டில் இரண்டாம் வருகை அதிகமாக ஆளுகை செய்யும் பாடங்களில் இரண்டாவதாக உள்ளது (David Jeremiah, D.D., What in the World is Going On?, Thomas Nelson Publishers, 2008, page 217).

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றிய தெளிவான பகுதிகளில் ஒன்று நமது பாடமாகிய சகரியா 14:4-5, 9 ஆகும். இந்தப் பாடத்தில் மூன்று பெரிய பாடங்களை நாம் கற்றுக்கொள்ளுகிறோம்.

I. முதலாவதாக, ஒலிவமலையின்மீது கிறிஸ்து திரும்ப வருவார்.

ஸ்கோபீல்டு குறிப்பு சரியானது என்று நான் உணர்த்தப்பட்டு இருக்கிறேன்.

சகரியா 14 முழுகாரியத்துக்கும் ஒரு பொழிப்புரையாக இருக்கிறது. [சம்பவங்களின்] ஒழுங்கு: (1) ஜாதிஜனங்களை ஒன்று திரட்டுதல், வ. 2 (“அர்மகெதோன்,” வெளிப்படுத்தல் 16:14; 19:11, குறிப்பை பார்க்கவும்); (2) விடுதலை வ. 3; (3) கிறிஸ்து ஒலிவமலையின்மேல் வருவார், அதனால் உண்டாகும் வெளிபிரகாரமான மாறுதலின் காட்சி, வ. 4-8; (4) பூலோக இராஜ்ஜியத்தை அமைத்தல், மற்றும் முழுமையான பூமிக்குரிய ஆசீர்வாதங்கள், வ. 9-21 (The Scofield Study Bible, 1917 edition, p. 978; note on Zechariah 13:8).

அந்திகிறிஸ்துவை தலைமையாக கொண்ட, புறஜாதிகளின் உலக சக்திகள், இஸ்ரவேலுக்கு விரோதமாக அர்மகெதோன் என்று அழைக்கப்படும் மெஜிடோவின் பள்ளத்தாக்குக்கு, தங்கள் படைகளை அனுப்புவார்கள். அந்த அந்திகிறிஸ்துவின் படைகள் எருசலேமை நெருங்கும், ஆனால் கிறிஸ்து உடனடியாக ஆகாயத்திலிருந்து திரும்ப வந்து அவர்களை வெற்றி கொள்ளுவார். தயவுசெய்து எழுந்து நின்று சகரியா 14:3-4ஐ வாசிக்கவும்.

“கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார் அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம். அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்” (சகரியா 14:3-4).

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

நீங்கள் அமரலாம்.

“அவருடைய பாதங்கள் அந்த நாளிலே ஒலிவமலையின்மேல் நிற்கும்” (சகரியா14:4). கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிறது அந்த ஒலிவமலை. அந்த ஒலிவமலையில்தான் இயேசுவானவர் தாம் கைது செய்யப்படுவதற்கு முன் இரவிலே ஜெபிக்க சென்றார். அந்த ஒலிவமலையில் இருந்துதான் இயேசுவானவர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார், இது அப்போஸ்தலர் 1:9-12ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்” (அப்போஸ்தலர் 1:9-12).

“அவருடைய பாதங்கள் அந்த நாளிலே ஒலிவமலையின்மேல் நிற்கும்” (சகரியா 14:4). சிலுவையிலே ஆணிகளால் குத்தப்பட்ட அதே பாதங்கள் அப்போஸ்தலர் 1:9ல் பரலோகத்துக்குத் திரும்பி சென்ற அதே மலைமீது இறங்கி வரும்.

“அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம். அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்” (சகரியா 14:4). டாக்டர் மெக்ஜீ சொன்னார்,

இங்கே நமக்கு நடக்கப்போகும் பெரிய வெளிபிரகாரமான மாற்றங்களைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கே ஒரு பெரிய பூமி அதிர்ச்சி இருக்கும், ஒலிவமலையின் மத்தியிலே பிளவு உண்டாகும். அதன் ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். “அங்கே ஒரு பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்” (J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson Publishers, 1982, volume III, p. 986).

அதனால், அதுதான் முதலாவது கருத்து – கிறிஸ்து வானத்திலிருந்து திரும்ப ஒலிவமலையின்மீது வருவார்.

II. இரண்டாவதாக, கிறிஸ்து தமது சகல பரிசுத்தவான்களோடு திரும்ப வருவார்.

ஐந்தாம் வசனத்தின் முடிவை பாருங்கள்.

“என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்” (சகரியா 14:5).

இதன்பொருள் என்னவென்றால் இதற்கு முன்பாக எடுத்துக்கொள்ளப்பட்ட கிறிஸ்தவர்கள் வானத்திலிருந்து இறங்கி, ஒலிவமலைக்கு, கிறிஸ்துவோடுகூட வருவார்கள். இந்தச் சம்பவத்தை முதலாவதாக ஏனோக்குத் தீர்க்கதரிசனமாக அறிவித்தார்.

“ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத் தீர்ப்புக் கொடுக்கிறதற்கும்… ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்” (யூதா 1:14, 15).

மற்றும் இதைப்பற்றி அப்போஸ்தலனாகிய யோவானும் வெளிப்படுத்தின விசேஷம் 19:14ல் பேசினார், “பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்,” அந்திகிறிஸ்துவின் சேனைகளை அழிப்பதற்கு அவர் ஒலிவமலையின்மேல் இறங்கி வருவார். டாக்டர் எரேமியா சொன்னார்,

கிறிஸ்துவின் இரண்டாவது வருகையில் பரலோக சேனைகளும் பரிசுத்தவான்களும் தூதர்களும் அவரோடு சேர்ந்து கொள்ளுவர்கள் – உன்னையும் என்னையும் போன்ற மக்கள் அளவில்லாத சக்தியோடு பரலோக சேனையோடு பக்கம் பக்கமாக நிற்போம்... அவர்கள் யுத்தம் செய்யமாட்டார்கள். இயேசுதாமே கலகக்காரர் களை அழித்துவிடுவார் (டேவிட் ஜெரேமியா, ஐபிட்., ப. 224).

“என் தேவனாகிய கர்த்தர் வருவார். தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்” (சகரியா 14:5).

டாக்டர் மெக்ஜீ சொன்னார்,

வேதாகமத்தில் இது மிகவும் உற்சாகமான ஒரு பகுதியாகும். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமிக்குத் திரும்ப வருவதைப்பற்றிய ஒரு படமாகும். இதை வெளிபடுத்தல் 19லும் நாம் காணலாம் அங்கே பரலோக சேனைகளும் அவரோடு சேர்ந்து கொள்ளுவர்கள் (ஜே. வெர்னான் மெக்ஜீ, ஐபிட்.).

சகரியா தீர்க்கதரிசனத்தில் இது இரண்டாவது பெரிய கருத்து ஆகும் – அந்திகிறிஸ்துவின் சேனையை வெற்றிகொள்வதற்குக் கிறிஸ்து தமது சகல பரிசுத்தவான்களோடும்கூட திரும்ப வருவார். மெய்யான மாறுதல் அடைந்தவர்கள் அனைவரும், இந்தக் காலங்கள் முழுவதிலும், அந்த நேரத்தில் கிறிஸ்துவோடு திரும்ப பூமிக்கு வருவார்கள்.

பத்தாயிரக்கணக்கான பத்தாயிரத்தோடு
   பிரகாசமாக மின்னும் வஸ்திரங்களோடு,
பரிசுத்தவான்களின் சேனைகளோடு
   ஏராளமான ஒளி பிரகாசத்தோடு வருகிறார்;
அது முடிந்தது, எல்லாம் முடிந்துவிட்டது,
   பாவம் மற்றும் மரணத்தோடு அவர்களின் யுத்தம் முடிந்தது;
வெற்றிபெற்றோர் உள்ளே சென்று நிரம்ப,
   பொற்கதவுகள் விரிவாக திறந்திருக்கிறது.
(“Ten Thousand Times Ten Thousand,” Henry Alford, 1810-1871).

ஜான் சென்னிக் மற்றும் சார்லஸ் வெஸ்லி எழுதினார்கள்,

இதோ! அவர் மேகங்களோடு இறங்கி வருகிறார்,
   ஒரு காலத்தில் நமது இரட்சிப்பை உண்டாக்கினவர்;
ஆயிரம், ஆயிரமாயிரமான பரிசுத்தவான்கள்சூழ,
   அவருடைய ரயிலுக்கு வெற்றி எக்காளம் ஊத;
அல்லேலூயா! அல்லேலூயா!
   தேவன் பூமிமீது அரசாள தோன்றுகிறார்.
(“Lo! He Comes,” John Cennick, 1718-1755;
    altered by Charles Wesley, 1707-1788).

III. மூன்றாவதாக, கிறிஸ்து தமது பூமிக்குரிய ராஜ்ஜியத்தை ஏற்படுத்த திரும்ப வரப்போகிறார்.

தயவுசெய்து எழுந்து நின்று சகரியா 14:9ஐ சத்தமாக வாசிக்கவும்.

“அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவா யிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார். அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்” (சகரியா 14:9).

நீங்கள் அமரலாம். அந்த நாளிலே கிறிஸ்து இந்தப் பூமி முழுவதுக்கும் ராஜாவாக இருப்பார். கடைசியாக, இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் செய்த ஜெபம் பதிலளிக்கப்படும்.

“உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10).

மற்றும் அவருடைய அரசாட்சி இந்தப் பூமியிலே ஒரு ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும். தயவுசெய்து வெளிப்படுத்தலுக்குத் திருப்பிக் கொள்ளுங்கள், அதிகாரம் 20, 4 முதல் 6 வசனங்கள். அந்த வசனங்களைச் சத்தமாக வாசியுங்கள்.

“அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர் களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்” (வெளிப்படுத்தல் 20:4-6).

எகோவா சாட்சிகள் இந்த 1,000 வருட அரசாட்சியை விசுவாசிக்கிறார்கள். ஆனால் அதில் எப்படி நுழைவது என்று அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்! எனது அலுவலகத்திலே ஒரு எகோவா சாட்சி கைப்பிரதியை நான் வைத்திருக்கிறேன் அதன் தலைப்பு என்னவென்றால் “எல்லாப் பாடுகளும் சீக்கிரமாக முடிந்துபோகும்!” அந்தப் பிரதியின் முடிவில் இப்படியாக சொல்லுகிறது, “முடிவு வரும்பொழுது, யார் தாக்குப்பிடிக்க முடியும்?... எகோவாவின் சித்தத்தைக் கற்றுக்கொண்டு அதைச் செய்பவர்கள்” (“எல்லாப் பாடுகளும் சீக்கிரமாக முடிந்துபோகும்!,” பார்க்கவும் டவர் பைபிள் மற்றும் கைப்பிரதிகள் சொசைடி ஆப் பென்னிசில்வானியா, 2005, ப.6). அதனால், எகோவா சாட்சிகள் அந்த ராஜ்ஜியத்தில் நுழையும் வழி தேவனுடைய சத்தியத்தை “கற்றுக்கொள்வது” “மற்றும் அதை “செய்வது” ஆகும். அது ஒரு பெரிய தவறு. அது கிரியையினால் இரட்சிப்பைப் பெறுதல் என்ற தவறு – இரட்சிப்பு கிடைப்பது எப்படியெனில் ஏதோ சிலவற்றை “கற்றுக்கொண்டு” மற்றும் அதை “செய்தல்!” வித்தியாசமாக, எகோவா சாட்சிகள் அடிக்கடி ரோமன் கத்தோலிக்கர்களுக்கு விரோதமாக பேசிக்கொள்ளுவார்கள் அதேபோன்ற தவறு இவர்களிடம் இருக்கிறது. கத்தோலிக்கர்கள் எகோவா சாட்சிகள் இருவரும் கிரியையின் மூலம் இரட்சிப்பு, சிலவற்றை கற்றுக்கொண்டு மற்றும் அதை செய்வதன் மூலம் இரட்சிப்பு என்று போதிப்பவர்கள்.

ஆனால் வேதாகமம் கிருபையின் மூலம் இரட்சிப்பு, கற்றுக்கொண்டு மற்றும் அதை செய்வதன் மூலம் அல்ல; மனித முயற்சியினால் அல்ல, ஆனால் கிருபையின் மூலம் மட்டுமே இரட்சிப்பு.

“கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப் பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல:” (எபேசியர் 28-9).

ஜான் நியூடன் சொன்னார்,

அற்புதமான கிருபை! அந்தச் சத்தம் எவ்வளவு இனிமையானது
   அது என்னைப்போன்ற பரிதவிக்கபடத்தக்கவரையும் இரட்சித்தது!
ஒருகாலத்தில் நான் இழக்கப்பட்டேன்,
ஆனால் இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்டேன்;
   நான் குருடனாக இருந்தேன், ஆனால் இப்பொழுது காண்கிறேன்.

எனது இருதயத்தை பயப்பட செய்ய கற்பித்தது கிருபையே,
   எனது பயங்கள் கிருபையினால் விலகிபோனது;
நான் முதலாவது விசுவாசித்த மணி நேரத்தில்
   அந்த கிருபை எவ்வளவு விலையேறபெற்றதாக இருந்தது!
(“Amazing Grace,” John Newton, 1725-1807).

தேவன் உனக்குக் கிருபை செய்வாராக

“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப்போஸ்தலர் 16:31).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாக தனிப்பாடல் பாடியவர் திரு. ஜேக் நான்:
“He is Coming Again” (Mabel Johnston Camp, 1871-1937).


முக்கிய குறிப்புகள்

கிறிஸ்து தமது பூலோக இராஜ்ஜியத்தை எப்படி அமைக்கப்போகிறார்

HOW CHRIST WILL SET UP HIS EARTHLY KINGDOM

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

“அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும். அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம். அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால் மட்டும் போகும். நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள். என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்… அப்பொழுது கர்த்தர் பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார். அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்” (சகரியா 14:4-5, 9).

I.    முதலாவதாக, ஒலிவமலையின்மீது கிறிஸ்து திரும்ப
வருவார், சகரியா 14:3-4; அப்போஸ்தலர் 1:9-12.

II.   இரண்டாவதாக, கிறிஸ்து தமது சகல பரிசுத்தவான்களோடு திரும்ப வருவார், சகரியா 14:5; யூதா 1:14,15; வெளிப்படுத்தல் 19:14.

III.  மூன்றாவதாக, கிறிஸ்து தமது பூமிக்குரிய ராஜ்ஜியத்தை ஏற்படுத்த திரும்ப வரபோகிறார், சகரியா 14:9; மத்தேயு 6:10; வெளிப்படுத்தல் 20:4-6; எபேசியர் 2:8-9;
அப்போஸ்தலர் 16:31.