Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
ஒரு ஸ்தல சபைக்கு வேதாகமும் மற்றும்
தேவதுரோகம் செய்பவர்களும்

THE BIBLE AND TRAITORS TO A LOCAL CHURCH
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
நவம்பர் 4, 2018 கர்த்தருடைய நாள் காலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
ரெவரண்ட் ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, November 4, 2018

“அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடை யவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப் பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்”
      (I யோவான் 2:19).


ஆல்பர்ட் காமூஸ் மற்றும் ஜீன்-பால் சார்டர் இருவரும் உயிர்வாழும் தத்துவத்தை பிரபலமாக்கின தத்துவ மேதைகளாகும். அவர்களுடைய தத்துவங்களை ஒருவேளை உணராமலே, அவைகள் அடிப்படையானவைகள் என்று அநேக மக்கள் இன்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். டாக்டர் ஆர். சி. ஸ்போரோல் சொன்னார், “நாம் உண்மையாகவே உயிர்வாழும் தத்துவத்தின் செல்வாக்கை ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையில் மற்றும் உண்மையாகவே நம்முடைய நாகரீகத்தின் ஒவ்வொரு கோளத்திலும் என்கவுன்டர் செய்கிறோம்... அதனுடைய செல்வாக்கின்கீழ் ஒவ்வொரு நாளும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” (Dr. R. C. Sproul, Lifeviews, Fleming H. Revell, 1986, p. 49). ஆல்பர்ட் மற்றும் சார்டர் இருவரின் உயிர்வாழும் தத்துவத்தின் அடிப்படை கருத்து “ஒரு தேவனற்ற உலகத்தில் மனிதனுடைய அடிப்படை தனிமை” என்பதாகும். (Dr. John Blanchard, Does God Believe in Atheists?, Evangelical Press, 2000, p. 138).

டாக்டர் ஆர். சி. ஸ்போரோல் உயிர்வாழும் தத்துவத்தில் “அதனுடைய செல்வாக்கின்கீழ்” நமது வாழ்க்கையில் “ஒவ்வொரு நாளும்” நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னது சரியா? ஆமாம், நான் அப்படிதான் நினைக்கிறேன். அதனால்தான் தனிமையின் கருத்து சிறப்பாக, இளம் மக்களுக்கு அப்படிப்பட்ட ஒரு ஆழமான முறையீடாக இருக்கிறது. இந்தத் தத்துவம் எங்கிருந்து வந்தது என்றும், அல்லது இதை யார் சொன்னது என்றும் உணராமல், நீங்கள் இன்னும் இதை உணருகிறீர்கள் – “ஒரு தேவனற்ற உலகத்தில் மனிதனுடைய அடிப்படை தனிமை”. இந்தச் சொற்றொடரில் ஒரு உண்மை வளையம் இருக்கிறது. ஒவ்வொரு இளம் நபரும் இதை உணருகிறார் – “ஒரு தேவனற்ற உலகத்தில் மனிதனுடைய அடிப்படை தனிமை.”

ஒரு கூட்டம் உள்ள அறையிலே நீ தனிமையை உணர முடியும். ஒரு கூட்டத்திலே, பேரங்காடியிலே, நீ தனிமையை உணர முடியும். நமது போதகர் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களிடம், ஒரு இளைஞர் சொன்னாராம், “நான் மிகவும் தனிமையாக இருக்கிறேன் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.” பிறகு அவர் ஒரு சில வாரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார். அநேக இளம் மக்கள் தனிமையின் உணர்வுகளினால் வாதிக்கப்படுகிறார்கள். இது “நாகரீகத்தின் ஒவ்வொரு கோளத்திலும்” உயிர்வாழும் தத்துவத்தின் ஒரு உற்பத்தி பொருளாகும்.

தனிமையானது பிரச்சனைதான், ஆனால் அதன் மாற்று மருந்து என்ன? குணமாக்குவது எது? இயேசு கிறிஸ்துவை தனிப்பட்ட விதத்தில் அறிந்து கொள்வதுதான் அதன் குணமாக்குதல் – மற்றும் ஸ்தல சபையில் தேவனுடைய குடும்பத்தின் அங்கமாக இருப்பதாகும். உயிர்வாழும் தத்துவ பயங்கரத்துக்கு மாறுத்தரமாக நாம் சொல்ல வேண்டுமானால், “ஏன் தனிமையாக இருக்க வேண்டும்? வீட்டுக்கு வாருங்கள் – சபைக்கு வாருங்கள்! ஏன் இழக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? வீட்டுக்கு வாருங்கள் – தேவகுமாரன் இயேசு கிறிஸ்துவின், வீட்டுக்கு வாருங்கள்!” அதை நாங்கள் சொல்லும்பொழுது, பொதுவாக காமூஸ், மற்றும் சார்டர், மற்றும் உயிர்வாழும் தத்துவத்துக்கு நாங்கள் பதிலளிக்கிறோம்! அதை நாங்கள் சொல்லும்பொழுது வேதனைகளுக்கும், தனிமைக்கும், நவீன உலகத்தின் அர்த்தமில்லாத ஒதுக்கப்படுதலுக்கும் நாங்கள் பதிலளிக்கிறோம்! சத்தமிடுகிறோம்! இரகசியமாக காதில் முணுமுணுக்கிறோம்! தூரமாக மற்றும் விரிவாக அதை சொல்லுகிறோம்! ஏன் தனிமையாக இருக்க வேண்டும்? வீட்டுக்கு வாருங்கள் – சபைக்கு வாருங்கள்! ஏன் இழக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? தேவகுமாரன் இயேசு கிறிஸ்துவின், வீட்டுக்கு வாருங்கள்!

ஆனால் ஒன்றில்லாமல் மற்றது இருக்கலாம் என்று சிலர் விரும்புகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் மாறுதல் இல்லாமல் ஸ்தல சபையோடு நட்பு கொள்ளலாம் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் முடிவிலே அது செயல்படாது. அவை இணைந்து செல்ல வேண்டியது அவசியம். கிறிஸ்தவத்தோடு இருப்பதற்கு வழி அதுதான் – கிறிஸ்துவில் மாறுதல் மற்றும் ஸ்தல சபையோடு நட்பு இவை இரண்டும் இணைந்து செல்ல வேண்டும். ஒன்றில்லாமல் மற்றதை நீங்கள் வைத்துக்கொள்ள முடியாது!

இங்கே கிறிஸ்துவின் மாறுதல் இல்லாமல் ஸ்தல சபையோடு நட்பு கொள்ளலாம் என்று முயற்சி செய்தால் என்ன நடக்கும். இறுதியாக ஐக்கியம் உடைந்து போகும். தாமதமாகவோ அல்லது விரைவாகவோ இது வேலை செய்யாது. நமது பாடம் இதைதான் பேசுகிறது.

“அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடைய வர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார் களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளி யாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்” (I யோவான் 2:19).

டாக்டர் W. A. கிரிஸ்வெல் சொன்னார், “சிலர் சபைகளைவிட்டு பிரிந்து போனார்கள்... அவர்களிடம் இதுவரையிலும், இரட்சிப்பின் நம்பிக்கை, உண்மையான ஐக்கியம் இல்லாமல் இருந்ததை இது மெய்யாக பிரகடனப்படுத்துகிறது” (The Criswell Study Bible, note on I John 2:19). நவீன மொழிபெயர்ப்பு இங்கே கொடுக்கப்படுகிறது I யோவான் 2:19,

“அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் உண்மையில் நம்முடையவர்களாயிருக்க வில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே: ஆனால் அவர் களுடைய வெளியேற்றம் அவர்களில் ஒருவரும் நம்முடையவர்களல்லவென்று காட்டியது” (I யோவான் 2:19 NIV).

இந்தப் பாடத்தைப்பற்றி இன்னும் ஆழமாக சிந்திப்போம்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

I. முதலாவதாக, அவர்கள் என்ன செய்தார்கள்.

டாக்டர் கிரிஸ்வெல் சொன்னார், “சிலர் சபைகளைவிட்டு பிரிந்து போனார்கள்.” அவர்கள் ஐக்கியத்தை அனுபவித்த காரணத்தால் சபைக்குள் வந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆரம்பகால சபைகள் குளிர்ந்துபோன மற்றும் இருதயமில்லாத ரோம உலகத்தில் இருந்தவர்களுக்கு ஆழமான நட்புறவு உள்ள இடமாக இருந்தது. அப்பொழுது சபையிலே காணப்பட்ட கதகதப்பு மற்றும் நட்புறவை மக்கள் விரும்பினார்கள்,

“தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவு பெற்றிருந்தார்கள்” (அப்போஸ்தலர் 2:47).

ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கை எப்பொழுதும் எளிதானதல்ல என்று அவர்கள் விரைவில் கண்டு கொண்டார்கள். அதை கண்டபிறகு அவர்களில் சிலர் பிரிந்து போனார்கள். அப்போஸ்தலன் சொன்னார்,

“தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னை விட்டுப்பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான்” (II தீமோத்தேயு 4:10-11).

கஷ்டம் வந்தபோது தேமா, கிரெஸ்கே மற்றும் தீத்து பவுலை விட்டு போனார்கள்.

அது இன்றும் நடக்கிறதா? ஆமாம் நடக்கிறது. மக்கள் சில காலம் சபைக்கு வருகிறார்கள். அவர்கள் சபையில் உருவாக்கிக்கொண்ட நட்புறவை அனுபவிக்கிறார்கள். அதெல்லாம் வேடிக்கையாக காணப்படுகிறது. ஆனால் அதன்பிறகு ஏதோ ஒரு காரியம் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலையில் லாஸ் வேகாஸிடம் சென்ற ஒரு நபரைப்பற்றி நான் கேள்விப்பட்டேன். அந்த நபர் சபைக்கு வருவதை விரும்பினார், ஆனால் லாஸ் வேகாஸ் அதிகமான வேடிக்கை சத்தம் கொடுப்பதை இன்னும் அதிகமாக விரும்பினார்! அந்த பார்டிகள் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடங்களில் சைகை காட்டி அழைப்பதை மற்றவர்கள் கண்டார்கள். அவர்கள் வெளிப்படையான உலக விருந்துகள் மற்றும் விழாக்களால் சோதிக்கப்பட்டார்கள் – அதனால் அவர்கள் சபையை விட்டுவிட்டார்கள். “அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை” (I யோவான் 2:19).

II. இரண்டாவதாக, அவர்கள் அதை ஏன் செய்தார்கள்.

நமது பாடம் சொல்லுகிறது, “அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே” (I யோவான் 2:19). I யோவான் 2:19ஐ விமர்சித்தபோது, டாக்டர் வெர்னான் மெக்ஜீ சொன்னார்,

ஒரு மனிதன் மெய்யான தேவனுடைய பிள்ளையாக இல்லாவிட்டால் உண்மையாக தனது நிறங்களை காட்டி தேவனுடைய சபையை விட்டு போய்விடுவான். அவர் கிறிஸ்தவர்களிடமிருந்து, விசுவாசிகளின் அங்கத்தி லிருந்து கழன்று கொள்ளுவான், மற்றும் அவன் போய்விடுவான்... திரும்ப உலகத்துக்குள் போவான்... கிறிஸ்தவர்களாக இருக்க ஏற்பாடுகள் செய்து கொண்டவர்கள் அநேகர், ஆனால் அவர்கள் அனைவரும் மெய்யாக கிறிஸ்தவர்கள் அல்ல (J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson Publishers, 1983, volume V, p. 777)

ஆல்பர்ட் பார்னாஸின் வார்த்தைகளை விமர்சனம் இல்லாமல் நான் கொடுக்கிறேன், வேதாகமத்தின் அவருடைய சிறந்த விமர்சனத்தில்,

அவர்கள் நம்முடையவர்களாக இருந்தால் அவர்கள். உண்மையுள்ள நேர்மையான கிறிஸ்தவர்களாக இருந்தார்களானால். நம்முடனே சந்தேகமில்லாமல் நிலைத்திருப்பார்களே... அவர்கள் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் சபையைவிட்டு ஒருபோதும் போயிருக்க மாட்டார்கள். அவர் இந்த அறிவிப்பை மிகவும் பொதுவாக செய்கிறார் அதாவது அது ஒரு சர்வலோக சத்தியமாக கருதப்படும்படியாக, மெய்யாகவே ஒருவர் ‘நம்முடையவராக’ இருந்தால், அதாவது, அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக இருந்தால், அவர்கள் சபையில் தொடர்ந்து இருப்பார்கள், அல்லது அவர்கள் ஒருபோதும் விழுந்துபோக மாட்டார்கள். இந்த அறிக்கையானது இவ்வாறாக கொடுக்கப்பட்டதுபோல யாராவது சபையிலிருந்து விழுந்தால், அவர்கள் ஒருபோதும் எந்த மதத்திலும் இல்லை என்று முழுமையாக நிரூபணமாகிறது, அப்படி அவர்கள் இருந்திருந்தால் அவர்கள் சபையிலே உறுதியாக நிலைத்திருந்திருப்பார்கள் (Albert Barnes, Notes on the New Testament, Baker Book House, 1983 reprint of the 1884-85 edition, note on I John 2:19).

இயேசுவானவர் சொன்னார்,

“கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும் போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர் கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள்” (லூக்கா 8:13).

III. மூன்றாவதாக, இதை திருத்தம் செய்வது எப்படி.

“அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடைய வர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார் களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளி யாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்” (I யோவான் 2:19).

மேத்யு ஹென்றி சொன்னார்,

உள்ளாக நாம் இருப்பதைபோல அவர்கள் இல்லை; ஆனால் அவர்கள் நம்முடையவர்கள் அல்ல; அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆரோக்கியமான உபதேசத்தின் திட்டத்துக்கு அவர்கள் இருதய பூர்வமாக கீழ்ப்படியவில்லை; தலையாகிய கிறிஸ்துவில் நம்மோடு அவர்கள் ஐக்கியமாக இல்லை (Matthew Henry’s Commentary on the Whole Bible, Hendrickson, 1996 reprint, volume 6, p. 863).

அவர்கள் கிறிஸ்துவோடு இணையவில்லை. அவர்கள் “நம்முடையவர்களாக” இல்லை. இந்த வசனத்தைப்பற்றி டாக்டர் மெக்ஜீ சொன்னார்,

இங்கே யோவான் மிகவும் பயபக்திக்குரிய மற்றும் தீவிரமான தகவலைத் தருகிறார், இன்று நமக்கு இந்தத் தகவலைத் தருகிறார். ஒரு அதிக மதரீதியான மனிதனாகிய, நிக்கொதேமுவிடம், அவன் மறுபடியுமாக பிறக்க வேண்டியது அவசியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்னார். அவனிடம் அவர் சொன்னார்... “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” (யோவான் 3:3). இங்கே யோவான் சொல்லுகிறார், “அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களா யிருக்கவில்லை அவர்கள் மெய்யான தேவனுடைய பிள்ளைகளைப்போல காணப்பட்டார்கள் ஆனால் அவர்கள் உண்மையில் அப்படி இல்லை” (டாக்டர் வெர்னான் மெக்ஜீ., ibid.)

நீ “எங்களுடையவர்களாக இருக்க வேண்டுமானால்” நீ மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியம், டாக்டர் மெக்ஜீ குறிபிட்டதுபோல. நீ கிறிஸ்துவோடு இணைய வேண்டியது அவசியம். நீ மெய்யாக மறுபடியும் பிறக்கும்போது இது நடைபெறுகிறது. இயேசுவானவர் சொன்னார்,

“நீ மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியம்” (யோவான் 3:7).

தேவதுரோகத்தை திருத்த வேண்டுமானால் புதுபிறப்பு அவசியம்! நீ உனது பாவங்களை ஒத்துக்கொண்டு கிறிஸ்துவிடம் வரும்பொழுது இது நடைபெறுகிறது. நீ அவரிடம் வரும்பொழுது, அவர் உன்னை ஏற்றுக்கொள்ளுவார் மற்றும் உனது பாவங்களை தமது இரத்தத்தினால் கழுவி வெளியே தள்ளுவார். நீங்கள் இதைக் கணக்கில் வைத்துக்கொள்ள முடியும், ஏனென்றால் அவர் சொன்னார்,

“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவ தில்லை” (யோவான் 6:37).

நீ கிறிஸ்துவிடம் வந்து, மற்றும் அவரோடு இணைந்து இருக்கும்பொழுது, புதிய பிறப்பை நீ பெற்றுக்கொள்ளுகிறாய். உன்னுடைய பாவங்கள் வெளியே தள்ளப்படுகின்றன, மற்றும் நீ ஒரு தேவனுடைய பிள்ளையாக மாறுகிறாய். நீ மறுபடியும் பிறப்பதால் மட்டுமே ஸ்தல சபையின் உண்மையான ஒரு உறுப்பினராக மாறுகிறாய். நீ கிறிஸ்துவிடம் வந்து மறுபடியும் பிறக்கும்பொழுது உயிர்வாழும் தத்துவம் வெளியே தள்ளப்படுகிறது. “ஒரு தேவனற்ற உலகத்தில் மனிதனுடைய அடிப்படை தனிமை” திருத்தப்படுகிறது மற்றும் குணமாக்கப்படுகிறது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை நீ ஏற்றுக்கொள்ளும்போது, மற்றும் ஸ்தல சபையின் ஒரு ஜீவனுள்ள பாகமாக மாறும்பொழுது. இயேசுவானவர் சொன்னார்,

“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவ தில்லை” (யோவான் 6:37).

நீ ஏன் இழக்கப்பட்டவராக இருக்க வேண்டும்? வீட்டுக்கு வாருங்கள் – தேவகுமாரனாகிய, கிறிஸ்துவிடம் வாருங்கள்!

சார்லஸ் ஸ்பர்ஜன் ஒரு போதனையை கொடுத்தார் “அன்பினால் நிரூபிக்கப்பட்ட வாழ்க்கை” என்ற தலைப்பில். அது I யோவான் 3:14ஐ அடிப்படையாக கொண்டது,

“நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்” (I யோவான் 3:14).

ஸ்பர்ஜன் சொன்னார்,

நீ மறுபடியும் பிறக்கும் வரையிலும், தேவனுடைய கிருபையின் அர்த்தத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. நீ ஒரு புதிய ஜீவனுக்குள், மரணத்திலிருந்து ஜீவனுக்குள் வரவேண்டியது அவசியம், இல்லாவிட்டால் இந்தக் காரியங்களை நீ அறிந்து கொள்ள முடியாது... “நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோ மென்று அறிந்திருக்கிறோம்.” அதனால், சகோதரரே, நாம் தேவனுடைய மக்களை, தேவனுடைய மக்களாக நேசிக்க முடியுமென்று சொல்லுவோமானால், ஏனென்றால் அவர்கள் தேவனுடைய மக்கள், நாம் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறோம் என்பதற்கு அது ஒரு அடையாளமாகும் (C. H. Spurgeon, “Life Proved by Love,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1976 reprint, volume XLIV, pp. 80-81).

மாறுதலின் மூலமாக நாம் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் கடந்து வரும்பொழுது, ஸ்தல சபையில் உள்ள சகோதர சகோதரிகளை நாம் நேசிப்போம்!

இந்தச் சபையிலே நீ ஏற்படத்திக்கொண்ட நட்பை நீ மதித்தால், மாறுதலின் அனுபவத்தை நீ பெறுவாய் என்று நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். நீ மாறுதல் அடைய வேண்டியது முக்கியமாகும். ஸ்தல சபையை ஒற்றுமையாக இணைத்து உறுதியாக பிடிக்கும் “வஜ்ஜிரமாக” கிறிஸ்து இருக்கிறார்!

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாக தனிப்பாடல் பாடியவர் திரு. ஜேக் நான்:
“Blest Be the Tie that Binds” (John Fawcett, 1740-1817).


முக்கிய குறிப்புகள்

ஒரு ஸ்தல சபைக்கு வேதாகமும் மற்றும்
தேவதுரோகம் செய்பவர்களும்

THE BIBLE AND TRAITORS TO A LOCAL CHURCH

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
ரெவரண்ட் ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Rev. John Samuel Cagan

“அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடை யவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப் பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்”
     (I யோவான் 2:19).

I.    முதலாவதாக, அவர்கள் என்ன செய்தார்கள்,
அப்போஸ்தலர் 2:47; II தீமோத்தேயு 4:10-11.

II.   இரண்டாவதாக, அவர்கள் அதை ஏன் செய்தார்கள்,
லூக்கா 8:13.

III.  மூன்றாவதாக, இதை திருத்தம் செய்வது எப்படி,
யோவான் 3:3, 7; 6:37; I யோவான் 3:14.