Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
அவன் நடக்கிர மனிதர்களை
மரங்களைப் போல கண்டான்

HE SAW MEN AS TREES WALKING!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஆகஸ்ட் 26, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Evening, August 26, 2018

“பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் குருடனுடைய கையைப்பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். அவன் ஏறிட்டுப்பார்த்து நடக்கிற மனுஷரை மரங்களைப்போல் காண்கிறேன் என்றான். பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப்பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்” (மாற்கு 8:22-25).


கிறிஸ்து பெத்சாயிதாவுக்கு வந்தார். ஆனால் அவர் பெத்சாயிதாவில் பிரசங்கம் செய்யவில்லை. அவருடைய சீஷர்கள் பெத்சாயிதாவில் ஒரு குருடான மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அந்த நகரத்திலே அந்த மனிதனை கிறிஸ்து குணமாக்கவில்லை. பெத்சாயிதாவில்தான் இயேசுவானவர் ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீனைக்கொண்டு 5,000 மனிதர்களை போஷித்தார் அது 5,000 மக்களுக்குப் போதுமானதாக இருந்தது (மாற்கு 6:38-44). இயேசுவானவர் அங்கே கடலின்மேல் நடந்தார், மற்றும் அங்கே அநேக அற்புதங்களைச் செய்தார். இருந்தாலும் அந்த பெத்சாயிதா மக்கள் மனந்திரும்பி இயேசுவை நம்பவில்லை. அதனால் கிறிஸ்து அந்த நகரத்தை சபித்தார். அது தேவனால் கொடுமையாக “நியாயத்தீர்பின் நாளிலே” நியாயந்தீர்க்கப்படும் என்று சொன்னார்.

இப்பொழுது கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் அந்தச் சபிக்கப்பட்ட நகரத்துக்கு வந்தார்கள்.

“பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்” (மாற்கு 8:22).

இந்த பாவம்நிறைந்த நகரமாகிய லாஸ் ஏன்ஜல்சில் ஒரு இளம் மனிதன் எப்படி மனந்திரும்புகிறான் என்பதற்கு ஒரு படமாக உள்ளது.

I. முதலாவது,அந்த நகரம் சபிக்கப்பட்டிருந்தது, ஆனால் அந்தத் தெரிந்து கொள்ளப்பட்ட குருடான பையன் அல்ல!

தேவன் உலகத்தைச் சிருஷ்டிப்பதற்கு முன்பாகவே இரட்சிக்கப் படுவதற்காக அவர் மக்களை “தெரிந்து” கொண்டார், “தெரிந்துகொள்ளப்பட்டவர் களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்” (ரோமர் 11:7). அந்த நகரம் முழுவதும் குருடாக்கப்பட்டிருந்தது, தேவனால் கைவிடப்பட்டது, ஏனென்றால் அவர்கள் இயேசு கிறிஸ்துவை புறக்கணித்தார்கள் – இருந்தாலும், அந்த முழுநகரமும் சபிக்கப்பட்டதாக இருந்தாலும், அங்கே தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அந்த மனிதனை சீஷர்கள் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்!

“தெரிந்துகொள்ளுதல்” என்றால் தேர்ந்தெடுத்தல் அல்லது ஒருமுகமாக தேர்வுசெய்தல் என்பதாகும். சிருஷ்டிப்புக்கு முன்பாகவே மனித வர்க்கத்திலிருந்து தேவன் யாரை மீட்க வேண்டும் என்று தெரிந்துகொண்டார்.

அந்த குருடன் தெரிந்து கொள்ளபட்டவர்களில் ஒருவன். அதனால் இந்த ஒரு மனிதனிடம், இயேசுவிடம் அழைத்துவரத்தக்கதாக சீஷர்கள் அனுப்பப்பட்டார்கள்!

இப்பொழுது அந்த நகரம் முழுவதும் இயேசுவை புறக்கணித்ததற்காக தேவனால் வெறுக்கப்பட்டவர்களாக, நியாயந்தீர்க்கப்பட்டார்கள். சபைக்கு மக்களை வரவேற்கும்படியாக நாம் வெளியே செல்லுகிறோம். அநேகர் வரமாட்டார்கள் என்று நமக்குத் தெரியும். அநேகர் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டார்கள் என்று நினைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். லாஸ் ஏன்ஜல்சில் அநேக மக்கள் சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும். அவர்கள் சபைக்கு வந்து இயேசுவைப்பற்றி கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை வெறுக்கிறார்கள்! இருந்தாலும் சபைக்கு மக்களை வரவேற்கும்படியாக நாம் வெளியே செல்லுகிறோம், அநேகர் ஒருபோதும் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்று நமக்குத் தெரியும், ஏனென்றால் தேவன் அவர்களை ஏற்கனவே புறக்கணித்துவிட்டார். வேதாகமம் சொல்கிறது, “தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்... தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்... [அவர்கள்] தேவ பகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தை யுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப்பிணைக்கிறவர்களுமாய் பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்... நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்... தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” (ரோமர் 1:26-30; II தீமோத்தேயு 3:3, 4).

ஆமாம், நமது நகரம் முழுவதும் மாய்மாலக்காரர்கள், மாரிசூனா புகைப்பவர்கள், பாலுறவுக்கு அடிமைகள், உடல்நல விரும்பிகள், சிந்தனையாளர்கள், மற்றும் இயேசு கிறிஸ்துவானவரை வெறுக்கும் மக்கள் போன்றவர்களால் நிறைந்துள்ளது. உங்களைவிட எனக்கு நன்றாக தெரியும். இந்தத் தேவனற்ற நகரத்தில் அறுபது வருடங்களாக நான் பிரசங்கம் செய்வதில் செலவிட்டேன்!

ஆனால் எனக்குத் தெரியும் எங்கேயாவது, இந்த அப்பார்ட்மென்டுகளில், இந்தப் பந்து வீச்சு மைதானங்களில், இந்தப் பள்ளிக்கூடங்களில் – இந்த இடங்களில் ஒன்றில் ஒரு இளம் பையன் அல்லது பெண் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் உண்டு, இந்த வெறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அபரிமிதமான பாவிகளில், தேவனுடைய ஒரேபேரான குமாரனாகிய, இயேசு கிறிஸ்து மூலமாக இரட்சிப்புக்குத் தெரிந்து கொள்ளப்பட்டவர் உண்டு என்று நான் அறிவேன்!!! அந்த நபர் நீ தான் என்று நான் விசுவாசிக்கிறேன்!

மற்றும் அந்த இளம் மனிதன் அல்லது பெண் திரும்ப சபைக்கு வருவார், ஆவியானவர் மூலமாக பிரகாசிப்பார், பிசாசிடம் இருந்து விடுவிக்கப்படுவார், மற்றும் இயேசு கிறிஸ்து சிலுவையிலே சிந்தின இரத்தத்தின் மூலமாக கழுவி சுத்தமாக்கப்படுவார்!!!

சிலுவையில் அறையப்பட்ட ஒருவரின்
இரத்தத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டவர்!
   இப்பொழுது பாவத்திலிருந்து மீட்கப்பட்டார்
   மற்றும் ஒரு புதிய வேலை ஆரம்பம் ஆனது,
பிதாவுக்குத் துதி பாடுங்கள் மற்றும்
குமாரனைத் துதித்துப் பாடுங்கள்,
   சிலுவையில் அறையப்பட்ட ஒருவரின்
   இரத்தத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டவர்!
இரட்சிக்கப்பட்டேன்! இரட்சிக்கப்பட்டேன்!
எனது பாவங்கள் மன்னிக்கப்பட்டது, என் குற்றமெல்லாம் போயிற்று!
   இரட்சிக்கப்பட்டேன்! இரட்சிக்கப்பட்டேன்!
   சிலுவையில் அறையப்பட்ட ஒருவரின்
   இரத்தத்தின் மூலமாக நான் இரட்சிக்கப்பட்டேன்!
(“Saved by the Blood,” S. J. Henderson, 1902).

ஆமென்! தேவனுக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! சிலுவையில் அறையப்பட்ட ஒருவரின் இரத்தத்தின் மூலமாக நான் இரட்சிக்கப்பட்டேன்!

இந்த மனிதன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒருவர். மற்றும் சீஷர்கள் வந்தார்கள் மற்றும் அவரை அந்தப் பாவம் நிறைந்த, நரக துவாரமான ஒரு நகரத்தில் இருந்து – நாங்கள் வந்து உன்னை பிடித்ததைபோல! மற்றும் அவர்கள் அந்தக் குருடான பையனை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்! ஆமென்! அந்த நகரம் சபிக்கப்பட்டது மற்றும் தண்டிக்கப்பட்டது, ஆனால் அல்ல அந்த தெரிந்து கொள்ளப்பட்ட குருட்டுப் பையன் அல்ல! அவர்கள் அவனை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்!

II. இரண்டாவது, அந்த இளம் மனிதன் குருடாக இருந்தான்.

அவன் சத்தில்லாத ஒரு குருடன் – ஒரு வௌவாலைப்போல அவன் குருடனாக இருந்தான்! அவன் ஒரு தலை நறுக்கப்பட்ட துருக்கி பூசாடுபோல ஒரு குருடனாக இருந்தான்!!! நீங்கள் அடைய கூடிய வகையில் அவ்வளவு குருடன்! ஆமாம், அந்த இளம் மனிதன் குருடனாக இருந்தான் – குருடன்!

இப்பொழுது, அதன் அர்த்தம் சில பொருளாகும்! அதன் பொருள் அவன் குருடன், ஆமாம்! ஆனால் புதிய ஏற்பாட்டில் அதன் பொருள் அதைவிட அதிகமாகும்! அதன் பொருள், மேத்தியு ஹென்றி சொல்வதைப் போல, “ஆவிக்குரிய குருடு”. லூக்கா சுவிசேஷம் சொல்லுவதைபோல இயேசுவானவர் ஏசாயா 61:1ஐ நிறைவேற்றினார் “குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப் படுத்தவும்” (லூக்கா 4:18).

இயேசுவானவர் அந்தக் குருடனை தனது கரத்தினால் நடத்தினார், “அவர் குருடனுடைய கையைப்பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக் கொண்டுபோய்” (மாற்கு 8:23). இயேசுவானவர் குருடருடைய கண்களை திறக்க வேண்டுமானால் குருடான பாவிகள் மற்றபாவிகளை விட்டு பிரிக்க வேண்டியது அவசியம் என்பதை இது காட்டுகிறது. வேதாகமம் சொல்லுகிறது,

“அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப் படாதிருப்பீர்களாக... ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய்... என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக் கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (II கொரிந்தியர் 6:14, 17-18).

அநேக நேரங்களில் இளம் மக்கள் இரட்சிக்கப்பட விரும்புவார்கள், தேவனை அறிந்துகொள்ள விரும்புவார்கள், ஆனால் அவர்கள் பாவமுள்ள நண்பர்களால் தடுக்கப்படுவார்கள் – இயேசுவுக்காக அந்த நண்பர்களை அவர்களால் விட முடியாது. தேவனுக்கு ஸ்தோத்திரம், இயேசுவானவர் “கிராமத்துக்கு வெளியே அழைத்துக் கொண்டுபோனார்” அவனுக்குப் பார்வை வரும் முன்னே. அவன் அந்த நரகத்துக்கு நிகரான சகவாசத்தை விட்டு வெளியேவர வேண்டும். வெளியே! வெளியே வரவேண்டும்! வெளியே வரவேண்டும்! அவன் அந்தப் பொல்லாத நண்பர்களை விட்டு வெளியேவரவேண்டும் அவர்கள் அவனைக் குருடனாக வைத்திருப்பார்கள்! இயேசு அவனை தமது கரத்தினால் “கிராமத்துக்கு வெளியே அழைத்துக் கொண்டுபோனார்”. பெத்சாயிதாவிலே இருந்த அந்தப் பொல்லாத மக்களிடம் அவன் நட்பு வைத்திருந்தால் அவனால் இரட்சிக்கப் பட்டிருக்க முடியும் என்று நான் விசுவாசிக்கவில்லை!

III. மூன்றாவது, அவனது வெளிச்சம் மெதுவாக கிடைத்தது.

“அவன் கண்களில் உமிழ்ந்து, [அர்த்தம் என்னவென்றால், “கண்களுக்குள் உமிழ்ந்தார்”] அவன்மேல் கைகளை வைத்து [எதையாகிலும்] காண்கிறாயா என்று கேட்டார். அவன் ஏறிட்டுப்பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போல் காண்கிறேன் என்றான். பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்” (மாற்கு 8:23-25). இதைப்பற்றி நீதிமொழிகளின் புத்தகம் ஒரு நல்ல விமர்சனத்தை தருகிறது,

“நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிக மதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்” (நீதிமொழிகள் 4:18).

முதலில் நீ ஆவிக்குரிய குருடனாக இருக்கிறாய். நீ சபைக்கு வருகிறாய், ஆனால் நீ கேட்கும் காரியங்களில் அநேகம் தெளிவில்லாததாக இருக்கிறது. பிறகு கிறிஸ்து உனக்கு உதவி செய்ய முடியும் என்று உணர ஆரம்பிக்கிறாய். அவரால் உதவி செய்ய முடியும் என்று நம்ப ஆரம்பிக்கிறாய். ஆனால் உன்னால் அவரைப் பார்க்க முடியவில்லை, உன்னால் அவரை உணர முடியவில்லை. அதன்பிறகு உணர ஆரம்பிக்கிறாய் “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபிரெயர் 11:1).

அப்போஸ்தலனாகிய தோமா சொன்னார், “நான் விசுவாசிக்க மாட்டேன்.” அதன்பிறகு இயேசுவானவர் வந்தார் தோமா இயேசுவை அழைத்தார், “என் ஆண்டவரே! என் தேவனே!”. பிறகு இயேசுவானவர் தோமாவிடம் சொன்னார், “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்”. இரண்டாயிரம் வருடங்களாக இயேசுவானவர் மில்லியன் கணக்கான மக்களை இரட்சித்தார் “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்களை”.

ஜான் கேஹன் சொன்னதை கவனியுங்கள். அவர் சொன்னார், “என்னால் எந்தவிதமான சமாதானத்தையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நான் மரிப்பதைபோல உணர்ந்தேன்... [அதன்பிறகு] நான் செய்யவேண்டியதெல்லாம் [இயேசுவானவரை] நம்ப வேண்டும் அவ்வளவுதான். எந்தச் சரீர உணர்வும் இல்லை, எனக்கு ஒரு உணர்வு தேவைபடவில்லை, நான் கிறிஸ்துவை பெற்றுக்கொண்டேன்! நான் இயேசுவை மட்டும் பார்த்தேன்! விசுவாசத்தினாலே மட்டுமே இயேசுவானவர் என்னுடைய எல்லா பாவங்களையும் கழுவினார் என்று அறிந்தேன், மற்றும் என்னுடைய உறுதியான ஆதார நம்பிக்கையில் எனக்கு அது ஆச்சரியமாக காணப்பட்டது, ஆனால்... எனது நம்பிக்கை இயேசுவில் இருந்தது அதனால் கிடைத்தது சமாதானம் என்று கவனமாக அறிந்தேன். இயேசுவானவரே என்னுடைய ஒரே பதில்.”

பிலிப் சென் சொன்னதை கவனியுங்கள். “நான் ஒருபோதும் மனந்திரும்ப மாட்டேன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். மனந்திரும்புதல் உண்மையானதா என்றும் நான் சந்தேகப்பட ஆரம்பித்தேன்... [அதன்பிறகு] டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் கிறிஸ்து இல்லாதவர்களை சாத்தான் எப்படியாக குருடாக வைத்திருக்கிறான் என்று பிரசங்கித்தார். ஒரு இழக்கப்பட்ட நபருடைய மனதின் உள்ளே சாத்தான் எப்படியாக கிரியை செய்கிறான், மற்றும் நிச்சயத்துக்காக ஒரு உணர்வு வேண்டும் என்று நினைக்க செய்கிறான் என அவர் சொன்னார். பிறகு டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் நான் இயேசுவை மற்றும் அவரை மட்டும் நம்ப வேண்டும் என்று சொன்னார். வேறு ஒருவரையும் அல்ல, வேறு ஒரு பொருளையும் அல்ல. அதற்கு முன்பாக [எனது மனதில்] சந்தேக புயல் மற்றும் சுய பகுப்பாய்வு இருந்தது... இப்பொழுது இயேசு இருக்கிறார். இப்பொழுது அந்த இரட்சகர் என்னை தமது கரத்தில் தாங்க காத்திருக்கிறார்! நான் எனது ஆத்துமாவை நேசித்த இயேசுவை நோக்காமல், எனது பாவத்தை எப்படி பற்றிக்கொள்ள முடியும்? நான் முழங்கால்படியிட்டு இயேசுவையே நம்பினேன். ஒரு உணர்வின் அனுபவத்துக்காக நான் காத்திருக்கவில்லை. சாத்தானுடைய பொய்யைக் கவனிக்க நான் காத்திருக்கவில்லை. என்னுடைய பாவங்கள் சுத்திகரிக்கப்பட நான் இயேசுவிடம் போகவேண்டியதாக இருந்தது. நான் காத்திருக்க வேண்டியதில்லை! நிச்சயத்தை காணவேண்டும் என்ற எண்ணம் போய்விட்டது. நான் இயேசுவை நம்பினேன். இயேசு [தாமே] என்னுடைய நம்பிக்கை மற்றும் நிச்சயமாக மாறினார். எனது பளுவான பாவசுமையை இயேசுவே எடுத்துப்போட்டார். எனது பதிவுகளை எல்லாம் அவருடைய சொந்த இரத்தத்தால் சுத்தம் செய்தார். இப்பொழுது நான் இந்தப் பாடல்களை நினைவில் கொள்ளுகிறேன் “இயேசு, எனது ஆத்துமாவை நேசிப்பவர்,” மற்றும் இயேசுவில் எனக்கு ஒரு நண்பன் உண்டு என்று நினைவில் கொள்ளுகிறேன். தேவன் தம்முடைய குமாரன், இயேசுவை, தமது இரத்தத்தால் எனது பாவத்தை மன்னிக்க கொடுத்ததற்காக தேவனுக்கு ஸ்தோத்ரம்!”

இப்பொழுது ஒரு பெண்ணின் வார்த்தைகளை கவனியுங்கள் அவள் அநேக ஆண்டுகளாக இயேசுவை புறக்கணித்தவள். அவள் சொன்னாள், “நான் பாவத்தினால் ஆழமாக உணர்த்தப்பட்டேன் மற்றும் முற்றிலும் நம்பிக்கை அற்றவளாக உணர்ந்தேன். நான் ஏறக்குறைய ஒவ்வொருநாளும் ஜெபித்தேன். போதனை மூலபிரதிகளை ஒவ்வொரு நாளும் நான் வாசித்தேன். நான் அதிக விசுவாசத்தையும் அதிகமான உணர்வுகளையும் நம்பி காத்திருந்த காரணத்தினால் அவை எனக்கு உதவி செய்யவில்லை. எனக்கு ஒரு மங்கலான மனம் இருப்பதாக நான் டாக்டர் கேஹன் அவர்களிடம் சொன்னேன், அதனால் நான் இயேசுவிடம் வரமுடியவில்லை. டாக்டர் கேஹன் அவர்கள் சொன்னார்கள், ‘பிறகு உன்னுடைய மங்கலான மனதோடு இயேசுவிடம் வா!’ எனது மனந்திரும்புதலுக்குச் சற்று முன்பாக, திருவாளர் கிரிப்பித் பாடினார், ‘நீ இன்னும் நல்லபடியாகமாற காத்திருந்தால், நீ ஒருபோதும் வரமாட்டாய்.’ [நான் அதை அறிந்திருந்தேன்] என் உணர்வுகள் மற்றும் [மனக்கிளர்ச்சிகள்] ஒருபோதும் நிலையாக இருந்ததில்லை, அதனால் எந்தவிதத்திலும் அவைகளை என்னால் நம்ப முடியாது. நான் இயேசுவை நம்பினபொழுது, அவர் என்னுடைய எல்லா பாவங்களையும் மன்னித்தார் மற்றும் சுத்திகரித்தார். அவர் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னுடைய எல்லா பாவங்களையும் மன்னித்தார் மற்றும் சுத்திகரித்தார். இயேசு சாத்தானிடமிருந்து என்னை விடுவித்தார் மற்றும் சுதந்திரர் ஆக்கினார்! என்னை அழித்து இறுதியிலே நரகத்துக்குக் கொண்டு போகும், சாத்தானுக்கு அடிமையாக தொடர்ந்து இருப்பதைவிட, என்னை நேசிக்கும் மற்றும் எனக்காக கவலைப்படும், இயேசுவுக்கு ஒரு அடிமையாக இருப்பேன்.” இது உங்கள் பாட்டுத்தாளில் 2ஆம் பாடல். இதை எழுந்து நின்று பாடுங்கள்!

இயேசு, எனது ஆத்துமாவை நேசிப்பவர்,
   உமது மார்புக்கு பரந்து வருவேன்,
தண்ணீர்கள் அருகாக புரண்டோடும்பொழுது,
   புயல் இன்னும் உயரமாக அடிக்கும்பொழுது:
என்னை மறைத்துக்கொள்ளும், ஓ என் இரட்சகரே, மறைத்துக்கொள்ளும்,
   புயலான வாழ்க்கை கடந்து போகும் வரைக்கும்;
பரலோக வழிகாட்டியிடம் பத்திரமாக;
   ஓ கடைசியாக என் ஆத்துமாவை ஏற்றுக்கொள்ளும்!
(“Jesus, Lover of My Soul,” Charles Wesley, 1707-1788).

நீங்கள் அமரலாம்.

உங்கள் பாவங்கள் இயேசுவின் மூலமாக சுத்தம் செய்யபட வேண்டும் என்று நீ விரும்புகிறாய் என்று எனக்குத் தெரியும்! இயேசு உன்னை இரட்சிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய் என்று எனக்குத் தெரியும்! பரிபூரணமாக வேண்டுமென்று எதிர் பார்க்காதே. உனது குற்றத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் இயேசு உன்னை இரட்சிக்க வேண்டும் என்று காத்திரு. பரிபூரணம் பிறகு வரும். இப்பொழுது இயேசுவின் வார்த்தையை கவனி. இந்த வார்த்தைகள் இயேசுவின் வாயிலிருந்து வந்தன.

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28).

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்.” நீ இரவில் படுக்கைக்கு போகும்போது நீ அடிக்கடி மிகவும் பாவம் உள்ளதாக மற்றும் இழக்கப்பட்டதாக உணரகூடும். இரவிலே உனது பாவங்களைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டு படுக்கைக்குப் போகிறாய். ஏன் அப்படி கவலையோடு மறுபடியும் இன்றிரவு படுக்கைக்குப் போகவேண்டும்? இயேசு சொல்லுகிறார்,

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”

உனக்கு நிச்சயம் தேவையில்லை. உனக்கு தேவை இளைப்பாறுதல். உனது ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல். உங்கள் பாட்டுத்தாளில் 3ஆம் பாடலை திருப்பிக் கொள்ளுங்கள். அதை பாடுங்கள்.

வரவேற்பின் சத்தத்தை நான் கேட்கிறேன்,
   அது என்னைக் கூப்பிடுகிறது, கர்த்தாவே, உம்மிடத்திற்கு
உமது விலையேறப்பெற்ற இரத்தத்தில் சுத்திகரிக்க
   கல்வாரியில் வழிந்தோடிய அந்த இரத்தம்.
நான் வருகிறேன், கர்த்தாவே! இப்பொழுது உம்மிடம் வருகிறேன்!
சுத்திகரியும், உமது இரத்தத்தில் என்னை கழுவும்
   கல்வாரியில் வழிந்தோடிய அந்த இரத்தம்.
(“I Am Coming, Lord,” Lewis Hartsough, 1828-1919).

இயேசுவானவரை நம்புவதைப்பற்றி நீங்கள் எங்களோடு பேச விரும்பினால், தயவுசெய்து வந்து முதல் இரண்டு வரிசைகளில் அமருங்கள். ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“I Am Coming, Lord” (Lewis Hartsough, 1828-1919).


முக்கிய குறிப்புகள்

அவன் நடக்கிர மனிதர்களை
மரங்களைப் போல கண்டான்

HE SAW MEN AS TREES WALKING!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

“பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் குருடனுடைய கையைப்பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். அவன் ஏறிட்டுப்பார்த்து நடக்கிற மனுஷரை மரங்களைப்போல் காண்கிறேன் என்றான். பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப்பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்” (மாற்கு 8:22-25).

I.    முதலாவது, அந்த நகரம் சபிக்கப்பட்டிருந்தது, ஆனால் அந்த தெரிந்து கொள்ளப்பட்ட குருடான பையன் அல்ல!
ரோமர் 11:7; ரோமர் 1:26-30; II தீமோத்தேயு 3:3, 4.

II.   இரண்டாவது, அந்த இளம் மனிதன் குருடாக இருந்தான், லூக்கா 4:18; மாற்கு 8:23; II கொரிந்தியர் 6:14, 17-18.

III.  மூன்றாவது, அவனது வெளிச்சம் மெதுவாக கிடைத்தது, மாற்கு 8:23-25; நீதிமொழிகள் 4:18; எபிரேயர் 11:1;
மத்தேயு 11:28.