Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




ஆரம்பகால சபைகளில் சுவிசேஷ ஊழியங்கள்

EVANGELISM IN THE EARLY CHURCHES
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஆகஸ்ட் 19, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Evening, August 19, 2018

“அவர் பன்னிருவரையும் அழைத்து... அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினார்” (மாற்கு 6:7, 11).


இந்தப் பனிரெண்டு மனிதர்களும் இயேசுவானவரோடு சில வாரங்கள் மட்டுமே இருந்தவர்கள். ஆனால் நேரடியாக அவர் அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார் (மாற்கு 6:12). அவர்களை அழைத்த அந்த நேரத்திலே, அவர் அப்படி செய்தார் “பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்” (மாற்கு 3:14). இந்த மனிதர்கள் இன்னும் ஆவிக்குரியவர்களாக இல்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறியலாம். யூதாஸ் மற்றப்படவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறியலாம், தோமா இன்னும் சுவிசேஷத்தை விசுவாசிக்கவில்லை, பேதுரு அதன்பிறகு இயேசுவானவர் சிலுவைக்குப் போகாதபடி தடுக்க முயற்சித்தார். இருந்தாலும் இயேசுவானவர் அவர்களை உடனே சுவிசேஷம் பிரசங்கம் செய்யும்படி அனுப்பினார்! பேதுரு மற்றும் அந்திரேயாவிடம் இயேசு சொன்ன முதலாவது காரியம் என்னவென்றால், “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்” (மத்தேயு 4:19, 20).

மறுபடியும், ஒரு வருடத்துக்குப் பிறகு, கிறிஸ்து தம்மை பின்பற்றின எழுபதுபேரை அழைத்தார், “இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்” (லூக்கா 10:1). தயவுசெய்து லூக்கா 10க்கு திருப்பிக்கொள்ளுங்கள். வசனங்கள் 1 முதல் 3 வரையிலும் நான் வாசிக்கும்பொழுது எழுந்து நில்லுங்கள்.

“இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் காலம்) தமது அறுப்புக்கு வேலை யாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங் கள். புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய் களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்” (லூக்கா 10:1- 3).

நீங்கள் அமரலாம்.

மக்களை இரண்டு இரண்டு பேராக சுவிசேஷத்தக்கு வெளியே அனுப்பியது கிறிஸ்துவின் முறையாகும். நாமும் இன்று சரியாக அப்படியே செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும் இவர்கள் அனுபவமற்றவர்கள், குழந்தை கிறிஸ்தவர்கள், இருந்தாலும் அவர்களை அனுப்பினார் என்பதை கவனியுங்கள். அவர்களை அனுப்புவதற்கு முன்பாக வருடக்கணக்காக அவர்களுக்கு வேதாகமத்தைப் போதிக்கவில்லை. இல்லை! அவர்களிடம் அவர் சொன்னார்,

“புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக் குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்” (லூக்கா 10:3).

இந்த அனுபவமற்ற புதிய பின்பற்றினவர்களிடம் என்ன ஜெபிக்க வேண்டும் என்று சொன்னார் என்பதை கவனியுங்கள். இரண்டாம் வசனத்தில் என்ன ஜெபிக்க வேண்டும் என்று சரியாக சொன்னார்,

“ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக் கொள்ளுங்கள்” (லூக்கா 10:2).

அவர் இந்த அனுபவமற்ற இளம் பின்பற்றுபவர்களிடம் தேவன் தமது அறுப்புக்கு வேலையாட்களை அதிகமாக அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளும்படி சொன்னார்! டாக்டர் ஜான் ஆர். ரைஸ் அவர்கள் தமது அசைவுள்ள ஒரு பாடலிலே நன்றாக சொன்னார். அது உங்கள் பாட்டுத்தாளில் 4வது பாடல். அதை எழுந்து நின்று பாடுங்கள்!

அறுவடையின் கர்த்தரிடம் நாம் ஜெபிக்க வேண்டியது அவசியம்,
   “அறுப்புக்கு வேலையாட்களை உமது வயலுக்கு அனுப்பும்”.
ஆட்கள் கொஞ்சமாக இருக்கிறார்கள்; வயல் ஏராளமாக
   விளைந்திருக்கிறது, விளைவு எவ்வளவாக இருக்கிறது.
நான் இங்கே இருக்கிறேன்! நான் இங்கே இருக்கிறேன்!
என்னை அனுப்பும், ஓ அறுப்புக்கு எஜமானே,
   உமது பரிசுத்த ஆவியை என்மீது ஊதும்.
நான் இங்கே இருக்கிறேன்! நான் இங்கே இருக்கிறேன்!
   இன்று சில விலையேறப்பெற்ற ஆத்துமாக்களை
   வெற்றிகொள்ள என்னை அனுப்பும்.
(“Here Am I”, Dr. John R. Rice, 1895-1980).

இரண்டாம் நூற்றாண்டிலே பெரிய வேதவல்லுனர் ஓரிஜன் சொன்னார், “கிறிஸ்தவர்கள் தங்கள் வல்லமையில் இந்த விசுவாசத்தை உலக முழுவதும் பரப்புகிறார்கள்.” தமது பூலோக ஊழியத்தின் முடிவிலே, கிறிஸ்து சொன்னார்,

“வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.” (மத்தேயு 28:18-20).

மாற்கு முடிவிலே கிறிஸ்து சொன்னார்,

“நீங்கள் உலகமெங்கும் போய், சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (மாற்கு 16:15).

லூக்காவின் முடிவிலே கிறிஸ்து சொன்னார்,

“...மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது” (லூக்கா 24:47).

யோவான் சுவிசேஷத்தின் முடிவிலே கிறிஸ்து சொன்னார்,

“பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” (யோவான் 20:21).

மற்றும் கிறிஸ்து திரும்பவும் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பாக அவர் சொன்ன கடைசி வார்த்தைகள்,

“எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப் பீர்கள் என்றார்” (அப்போஸ்தலர் 1:8).

ஒரு சமயத்தில் ஒரு மனிதன் இந்தக் கட்டளைகள் அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே இன்று எந்தக் கிறிஸ்தவனும், அதற்குக் கீழ்ப்படிய தேவையில்லை என்று சொல்லி தனது சபையைப் பிரித்தான். சபையை விட்டு தன்னை பின்பற்றும்படி அவன் ஹைபர் கால்வனிஸத்தை மேற்போர்வையாக கொண்டு மக்களை இழுத்தான். ஆனால் அதனால் ஒன்றும்பலனில்லை, இயேசுவானவரின் வார்த்தைகள் திரிக்கப்பட்ட மற்றும் கீழ்ப்படியப்படாத இடத்தில் ஒருபோதும் ஆசீர்வாதம் வரமுடியாது.

ஸ்பர்ஜன் ஒரு ஐந்து கருத்து கால்வனிஸ்டாக இருந்தார், ஆனால் அவர் ஒரு ஹைபர் கால்வனிஸ்ட் அல்ல. இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள, ஒரு வித்தியாசத்தை நாம் பார்க்கலாம். ஸ்பர்ஜன் சொன்னார்,

ஓ! இரட்சகர் சபைக்குச் சொன்னதை அது இப்போது கவனிக்க வேண்டும்; கிறிஸ்துவின் வார்த்தைகள் ஜீவனுள்ள வார்த்தைகள், நேற்று மட்டுமே அதற்கு வல்லமை இருந்தது என்பதல்ல, ஆனால் இன்றும் அவை வல்லமை உள்ளவைகள் என்று சொல்லுவேன். இரட்சகரின் அந்த உத்தரவுகள் [கட்டளைகள்] கடமையில் பரிபூரணமானவைகள்: அவைகள் வெறும் அப்போஸ் தலர்களை மட்டும் கட்டுப்படுத்துபவைகள் அல்ல, ஆனால் அவைகள் நம் மீதும் விழுந்த கடமையாகும், இந்த நுகம் ஒவ்வொரு கிறிஸ்தவர் மீதும் விழுந்ததாகும், “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதி களையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள்”. ஆட்டுக்குட்டியானவரை முதலாவது பின்பற்றினவர் களின் பணிகளுக்கு நாம் விலக்கானவர்கள் அல்ல; அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட முன்னேறும் கட்டளைகள் நமக்கும் உரியது, நமது தலைவர் பரிபூரணமான மற்றும் செயலாயத்தமான கீழ்ப்படிதல் அவர்களிடம் இருந்ததைபோல நம்மிடம் எதிர்பார்க்கிறார் (C. H. Spurgeon, The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1986 reprint, volume VII, p. 281).

டாக்டர் ஜான் ஆர். ரைஸ் அவர்களோடு சேர்ந்து நாம் ஒவ்வொருவரும் சொல்லுவோமாக,

நான் இங்கே இருக்கிறேன்! நான் இங்கே இருக்கிறேன்!
என்னை அனுப்பும், ஓ அறுப்புக்கு எஜமானே,
   உமது பரிசுத்த ஆவியை என்மீது ஊதும்.
நான் இங்கே இருக்கிறேன்! நான் இங்கே இருக்கிறேன்!
   இன்று சில விலையேறப்பெற்ற ஆத்துமாக்களை
   வெற்றிகொள்ள என்னை அனுப்பும்.

பெரிய விருந்து பற்றிய உவமையில் இயேசு சொன்னார், “நீ பெருவழி களிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23). கல்யாண விருந்து பற்றிய உவமையில் இயேசு சொன்னார், “ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக் கொண்டு வாருங்கள்” (மத்தேயு 22:9).

இயேசுவானவர் எருசலேமில் நிறுவின ஸ்தலசபை அவருடைய சுவிசேஷ ஊழியக் கட்டளையை எழுத்தளவாக எடுத்துக் கொண்டது. பெந்தேகொஸ்தே நாளுக்கு ஒரு சில வாரங்களுக்குப் பிறகு பிரதான ஆசாரியர்கள் குற்றம் சொன்னார்கள் “எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி” (அப்போஸ்தலர் 5:28). அதன்பிறகு அப்போஸ்தலர் 5:42ல் நமக்குச் சொல்லப்பட்டது, “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம் பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்”. அப்போஸ்தலர் 6:1ல் நாம் வாசிக்கிறோம், “சீஷர்கள் பெருகினார்கள்”. அதன்பிறகு, அப்போஸ்தலர் 12:24ல், நாம் வாசிக்கிறோம் “தேவவசனம் வளர்ந்து பெருகிற்று”. டாக்டர் ஜான் ஆர். ரைஸ் சொன்னார்,

     சமாரியாவில், உதவிக்காரர் பிலிப்பு பிரசங்கம் செய்யும்படி செல்லும்போது, நமக்கு அப்போஸ்தலர் 8:6ல் சொல்லப்பட்டது, “பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டுக் கண்டு, அவனால் சொல்லப் பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்...” மறுபடியும் 12ம் வசனத்தில், “தேவனுடைய ராஜ்யத்துக் கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவை களைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரிகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள்”. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான தேவனுடைய வல்லமை வாய்ப்பு ஏற்பட்டது மற்றும் புதிய ஏற்பாட்டுச் சபைகளில் மக்கள் இரட்சிக்கப்படுவது சாதாரணமாக இருந்தது.
     உண்மையாக, அப்போஸ்தலர் 9:31 சொல்லு கிறது, “அப்பொழுது... சபைகள் சமாதானம் பெற்று, பக்தி விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின”.
     சபைகள் “பெருகினது”, அதாவது, மாற்றப் பட்டவர்கள் பெருகினார்கள் மற்றும் அந்தச் சபைகள் வளர்ந்தது. அது ஒரு ஒழுங்காகும், அந்தப் புதிய ஏற்பாட்டுச் சபைகளில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நாளும் சாட்சியாக வெளியே அனுப்பப்பட்டு ஒவ்வொருவரையும் முடிந்தவரையிலும் வெற்றி கொண்டார்கள் (John R. Rice, D.D., Why Our Churches Do Not Win Souls, Sword of the Lord Publishers, 1966, p. 25).

டாக்டர் ரைஸ் தொடர்ந்து சொல்லுகிறார், “அவமானங்கள் உபத்திரவங்கள், புறஜாதிகள், குருடாக்கப்பட்ட மக்கள் மத்தியில், அவர்கள் திரளான மக்களை வெற்றி கொண்டார்கள்... நமது எண்ணத்துக்கு அப்பாற்பட்ட வகையில் புதிய ஏற்பாட்டுச் சபைகள் அற்புதமாக வளர்ந்தது. வார்நாக் அவர்கள், தமது புரோட்டஸ்டென்டு மிஷன் வரலாற்றில், சொல்லுகிறார் முதலாம் நூற்றாண்டு முடிவில் [அறுபத்து ஏழு] பெந்தேகொஸ்தேவுக்குப் பிறகு, ஏறக்குறைய 200,000 கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். மூன்றாம் நூற்றாண்டின் முடிவில் [8,000,000] கிறிஸ்தவர்கள் அவமானங்கள் கொடுமையான உபத்திரவங்கள் ஆயிரக்கணக்கானவர்கள் [அந்த] இரத்தச் சாட்சிகள் மத்தியில் இருந்தார்கள் என்று சொல்லுகிறார். ரோமப் பேரரசு முழுவதும் இப்பொழுது பதினைந்தில் ஒரு பாகம் கிறிஸ்தவர்கள்! [அதாவது, 15 மக்களில் ஒரு கிறிஸ்தவர் இருந்தார்]... ரோமப் பேரரசில் இரத்தம் சிந்தும் அளவுக்கு உபத்திரவங்கள் இருந்தாலும். எருசலேமில் ஸ்தேவான் மற்றும் யாக்கோபு இரத்தச் சாட்சிகள், மற்றும் அநேகர், துன்பப்பட்டார்கள் ‘புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினார்கள்’ (அப்போஸ்தலர் 22:4), பவுலின் சிறைபடுத்தப்படுதல் மற்றும் கொலை முயற்சி, யூதர்கள் மத்தியில் ஆயிரக்கணக்கானவர்களை வெற்றி கொண்டது. நீரோவினால் ஏற்பட்ட இரத்த உபத்திரவத்தால், பவுலும் மற்றவர்களும் சிரசேதம் செய்யப்பட்டார்கள்; ஹார்டியன்களால் உண்டான உபத்திரவங்களால் குறிப்பாக ஆண்டோனினஸ் பயஸ், மார்கஸ் அவரிலியஸ் மற்றும் செப்டிமஸ் சிவிரஸ், இன்னும் குறிப்பிடத்தக்க சுவிசேஷ அக்கினி தொடர்ந்தது. ஒர்க்மேன் சொன்னார்,

     இருநூறு ஆண்டுகளாக, கிறிஸ்தவராவது என்றால் அது ஒரு பெரிய தன்னல மறுப்பு ஆகும், வெறுக்கப்பட்ட மற்றும் உபத்திரவ படுத்தபட்ட பிரிவில் சேர்வது, பிரபலமான தீமைக்கு எதிராக நீந்துவது, பேரரசின் தடை உத்தரவுக்குக் கீழ்வருவது, மற்றும் அதனால் பயங்கரமான விதங்களில் மரணபரியந்தம் துன்பபடுதலாகும். இருநூறு ஆண்டுகளாக கிறிஸ்துவை பின்பற்றினவர்கள், அவர்கள் வாழ்க்கை மற்றும் சுயாதீனத்துக்கு... கிரயத்தை கணக்கிட வேண்டியது மற்றும் கிரயம் செலுத்த ஆயத்தமாக வேண்டியது அவசியமாக இருந்தது. இருநூறு ஆண்டுகளாக கிறிஸ்தவம் என்பதே ஒரு குற்றமாக இருந்தது (Rice, ibid., pp. 27-28).

டாக்டர் ரைஸ் சொன்னார், “அதிக தீங்கான சூழ்நிலையிலே, கொடூர வெறுப்பிலே, உபத்திரவங்களிலே மற்றும் ‘மூடப்பட்ட கதவுகளுக்கிடையிலே,’ புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் அற்புதமான ஆத்தும ஆதாய பணியைத் தொடர்ந்தார்கள். புதிய ஏற்பாட்டுப் போதனைகள் மற்றும் அனுபவங்களோடு நமது சபைகளின் ஆத்தும ஆதாய பணியை எப்படி ஒப்பிட முடியும்?” (Rice, ibid.). “புதிய ஏற்பாட்டுச் சபைகளை மற்றும் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களை ஒப்பிடும்போது, நமது தற்கால சபைகள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் பொதுவாக அவலமான மற்றும் வெட்கமான நிலையில் தோற்றுப்போனவர்கள் ஆகும்” (Rice, ibid., p. 29).

மறுபடியுமாக, டாக்டர் ரைஸ் சொன்னார், “புதிய ஏற்பாட்டு ஆத்தும ஆதாயத்துக்கு அனைவரும வெளியேறும் முயற்சி மட்டுமே பொருத்தமாகும்... செஞ்சூட்டு கிளர்ச்சி மற்றும் வெதுவெதுப்பில் விருப்பம், தேவனுடைய காரியங்களை அரை மனதோடு செய்தல், போன்ற நமக்குள் இருக்கும் எளிய மாம்ச சுபாவம் அனைவரும் வெளியேறும் கீழ்ப்படிதலிலிருந்து நம்மை கழன்று கொள்ள செய்கிறது. ஒரு பெரிய பழைய பாடல் சொல்லுவதைப்போல,

சுற்றித்திரிய ஒப்புக்கொடுக்கிறேன்,
கர்த்தாவே, அதை நான் உணருகிறேன்,
நான் நேசிக்கும் தேவனை விட்டுவிட ஒப்புவித்தேன்.

இவ்வாறாக சபைகளில் மறுபடியும் மறுபடியுமாக ஒரு எழுப்புதலுக்கான வாஞ்சை தேவையாக இருக்கிறது, ஆத்தும ஆதாயத்தின் இரக்கமுள்ள ஒரு எழுப்புதல், தேவனுடைய வல்லமை நம்மீது இருக்கும் ஒரு எழுப்புதல் தேவையாக இருக்கிறது. புதிய ஏற்பாட்டு மாதிரியான அனைவரும் வெளியேறும் ஒரு முயற்சி மூலமாக அல்லாமல் ஆத்துமாக்களை ஆதாயம்செய்ய ஒரு சபைக்கு வேறு வழியில்லை” (Rice, ibid., p. 149-150).

டாக்டர் ரைஸ் அவர்கள் ஒவ்வொரு நபரும் சுவிசேஷத்தை செய்வதை வலியுறுத்துகிறார் அது “வேலை” செய்யாது என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் சிலர் ஹைபர் கால்வனிஸத்துக்கு திரும்பினார்கள் – ஐந்து கருத்து காலவனிஸம் அல்ல – ஆனால் ஹைபர் கால்வனிஸத்துக்கு திரும்பினார்கள், இழக்கப்பட்டவர்களுக்குப் பின்னாக போகதேவையில்லை என்ற யோசனை; கிறிஸ்தவர்கள் சுவிசேஷ ஊழியத்தை செய்யாமல் தேவன் தமது சர்வவல்ல கிருபையினாலே அவர்களை உள்ளே கொண்டு வருவார் என்பதாலாகும். ஜார்ஜ் ஒயிட்பீல்டு, வில்லியம் கேரி, ஸ்பர்ஜன் மற்றும் மற்ற பெரிய ஆத்தும ஆதாயம் செய்பவர்கள் ஐந்து கருத்து கால்வனிஸத்தவர்கள், ஆனால் அவர்கள் ஹைபர் கால்வனிஸத்தவர்கள் அல்ல. அவர்கள் விசுவாசித்தார்கள் நாம் அனைவரும் “ஒரு சுவிசேஷகனுடைய வேலையை செய்” (II தீமோத்தேயு 4:5). ஓவ்வொரு மறுமலர்ச்சி போதகர்களும் படிக்க வேண்டும், Spurgeon v. Hyper-Calvinism, ரெவரண்ட் ஐயன் எச். மூரே எழுதியதை (Banner of Truth Trust, 1995). அதை பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும். அது ஒரு அற்புதமான புத்தகம் அது உன்னை ஊக்குவிக்கும், உனது இருதயத்தை அனலாக்கும், இழக்கப்பட்டவர்களுக்கு சுவிசேஷம் சொல்ல உனது வாஞ்சையை புதுப்பிக்கும்!

கிறிஸ்தவ மக்கள் தங்கள் இருதயங்கள் மற்றும் ஆத்துமாக்களை சுவிசேஷ வேலையை செய்ய டாக்டர் ரைஸ் அவர்கள் தவறாக வற்புறுத்தவில்லை. அவரை பின்பற்றின அநேக சபைகள் இழக்கப்பட்டவர்களை உள்ளே கொண்டுவர பிரயாசபட போதுமான நேரத்தைச் செலவிடவில்லை அந்தக் காரணத்தினால் பெலவீனம் வந்தது. வழக்கமாக அவர்கள் மக்கள் கிறிஸ்து இயேசுவில் மெய்யான மாற்றத்தை அனுபவிக்காமல் ஒரு “விரைவான ஜெபத்தை” சொல்ல சொல்லுகிறார்கள், ஞானஸ்நானம் கொடுப்பதற்கு முன்பாக, அவர்கள் மனந்திரும்பினார்களா என்று நிச்சயப்படுத்திக்கொள்ள நேரம் எடுக்காமல். டாக்டர் கேஹனும் நானும் சேர்ந்து “தீர்மானஇஸம்” என்ற பிரச்சனையை பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறோம் அதை நீங்கள் கட்டணமில்லாமல் இந்த வலைதளத்தில் இங்கே கிளிக் செய்து படிக்கலாம் Today’s Apostasy: How Decisionism is Destroying Our Churches.

குழந்தையைக் குளிக்கும் தண்ணீரோடு வெளியே எரிந்துவிட வேண்டாம்! நான் டாக்டர் ஜான் ஆர். ரைஸ் சொன்னதாக கொடுத்த எல்லா மேற்கோள்களையும் நான் முழுவதுமாக ஒத்துக்கொள்ளுகிறேன். ஆரம்ப கால சபைகளின் சுவிசேஷ வைராக்கியத்தை நாம் பரீட்சித்துப் பார்க்க வேண்டியது அவசியம், மற்றும் அவர்களுடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டியது அவசியம்! இழக்கப்பட்டவர்களை சுவிசேஷத்தால் சந்திக்க நம்மை நாமே விரிவு படுத்தி கொள்ளுவோம்! அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு முன்பாக முடிந்த வரையிலும் மெய்யாக மாற்றப்பட்டார்களா என்று உறுதி படுத்திக்கொள்ள மிகவும் கவனமாக இருப்போம்! எல்லாவற்றுக்கும் மேலாக, கிறிஸ்துவின் கட்டளையை நாம் நினைவில் கொள்ளுவோம்,

“நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23).

இந்த இரண்டாம் நூற்றாண்டு ஓரிஜன் சொன்னார், “கிறிஸ்தவர்கள் தங்கள் முழுவல்லமையோடும் இந்த உலகம் முழுவதும் அந்த விசுவாசத்தைப் பரப்ப செய்யகிறார்கள்”. அதே காரியத்தை நாம் செய்வோமாக! நாம் நின்றவாறு பாடுவோமாக டாக்டர் ஓஸ்வெல் ஜே. ஸ்மித் அவர்களின் பெரிய பாடல் – “Evangelize! Evangelize!” (சுவிசேஷ ஊழியம் செய்! சுவிசேஷ ஊழியம் செய்!) உங்கள் பாட்டுதாளில் உள்ள 1ம் எண் பாடலை.

இந்த நேரத்துக்கு ஏற்ற ஒரு கவனிப்பு வார்த்தையை எங்களுக்கு தாரும்,
சிலிர்ப்பூட்டும் வார்த்தையை, வல்லமையுள்ள வார்த்தையை,
ஒரு யுத்த அழுகை, அன்பினால் அல்லது மரணத்தால்
ஆட்கொள்ளப்பட்ட ஒரு தீ மூச்சோடு அழைக்கும் எங்களுக்கு தாரும்.
வார்த்தை எங்களுக்கு தாரும் எஜமானின் பெரிய வேண்டுதலை கவனித்து,
ஓய்ந்திருக்கும் சபையை வீருகொண்டு விழித்தெழ செய்ய.
சேனைகளே, எழுந்திருங்கள், அழைப்பு கொடுக்கப்பட்டு விட்டது,
சுவிசேஷ ஊழியம், நமது கவனிப்பு வார்த்தை!

மகிழ்ச்சியின் நற்செய்தியை இப்பொழுது சொல்,
இயேசுவின் நாமத்தில், உலக முழுவதுக்கும்;
இந்த வார்த்தை வானங்களின் ஊடாக ஒலித்துக்கொண்டிருக்கிறது:
சுவிசேஷ ஊழியம் செய்! சுவிசேஷ ஊழியம் செய்!
மரிக்கும் மனிதனுக்கு, ஒரு விழுந்துபோன இனத்துக்கு,
கிருபையின் சுவிசேஷ வரத்தை அறியப்படுத்து;
இப்பொழுது உலகமானது இருளிலே கிடக்கிறது,
சுவிசேஷ ஊழியம் செய்! சுவிசேஷ ஊழியம் செய்!
(“Evangelize! Evangelize!” by Dr. Oswald J. Smith, 1889-1986;
to the tune of “And Can It Be?” by Charles Wesley, 1707-1788).


நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Here Am I” (Dr. John R. Rice, 1895-1980).