Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




பிசாசுகளை ஜெயங்கொள்ளுவது அது நம்மை
பெலவீனப்படுத்தி உள்ளது – “இவ்வகை”!

OVERCOMING THE DEMONS THAT WEAKEN US –
“THIS KIND”!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஆகஸ்ட் 5, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, August 5, 2018

“வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற் போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். அதற்கு அவர் இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்” (மாற்கு 9:28-29).


இன்று இரவிலே நான் பிசாசுகளைப் பற்றியும் சாத்தானைப் பற்றியும் பேசப்போகிறேன், டாக்டர் ஜே. ஐ. பேக்கர் சொன்னது “இன்றுள்ள சபையின் உடைக்கப்பட்ட நிலைமை”, மற்றும் 1859 முதல் அமெரிக்க தேசத்தில் பெரிய எழுப்புதல் இல்லாத காரணம் பற்றியும் பேசபோகிறேன். டாக்டர் மார்ட்டின் லியோடு-ஜோன்ஸ் அவர்களின் போதனையின் வெளிக்குறிப்புகளை நான் நம்பியிருக்கிறேன். அடிப்படை கருத்தும் வெளிக்குறிப்புகளும் டாக்டர் மார்ட்டின் லியோடு-ஜோன்ஸ் அவர்களின் போதனையிலிருந்து எடுக்கப்பட்டவை.

“வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற் போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். அதற்கு அவர் இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்” (மாற்கு 9:28-29).

அந்த இரண்டு வசனங்களை நீங்கள் யோசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய உலகத்தின் “உடைக்கப்பட்ட” சபைகளின் அழுகை தேவைக்கு – நமது சபையின் சில நேர்முக கருத்துக்களையும் சேர்த்து அந்த வசனங்களை ஒப்பிடப்போகிறேன்.

“எழுப்புதல்” என்ற வார்த்தை மக்களை இன்று நிறுத்தி திருப்பிவிட்டது என்று நான் அறிவேன். அதை அவர்கள் கேட்க விரும்பவில்லை. ஆனால் இவ்விதமாக அவர்கள் உணருவதற்குக் காரணம் சாத்தானுடையதாகும்! இந்தத் தலைப்பைபற்றி மக்கள் நினைப்பதை பிசாசு விரும்புவதில்லை. அதனால் நமது சபையின் மற்றும் எல்லா சபைகளின் சிக்கலான தேவையைப்பற்றி நான் பேசும்போது, நீங்கள் ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் தீவிரமாக விருப்பம் கொண்டுள்ள ஒரு தலைப்பு இதுவாகும். இன்றுள்ள சபைகளின் நிலைமையைப்பற்றி பெரிய கரிசனையை நாம் உணராவிட்டால் நாம் மிகவும் ஏழை கிறிஸ்தவர்களாக இருப்போம். உண்மையில், உனக்கு மெய்யான எழுப்புதலில் விருப்பம் இல்லையானால், நீ ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறாயா என்பது கேள்விகுறி ஆகும்! நமது சபைக்காக, மற்றும் மற்றவர்களுக்காக உனக்கு அக்கறை இல்லையானால், நீ நிச்சயமாக ஒரு துடிப்பான கிறிஸ்தவன் அல்ல! நான் திரும்ப சொல்லுகிறேன், நாம் ஒவ்வொருவரும் தீவிரமாக விருப்பம் கொண்டுள்ள ஒன்று உண்மையான எழுப்புதலாகும்.

அதனால் மாற்கு ஒன்பதாம் அதிகாரத்தின் சம்பவத்தை நினைத்தவர்களாக நாம் ஆரம்பிப்போம். இது மிகவும் முக்கியமான ஒரு சம்பவமாகும், ஏன் என்றால் பரிசுத்த ஆவியானவர் பெரிய கவனம் எடுத்து நான்கு சுவிசேஷங்களில், மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்கா ஆகிய மூன்றில் இதைப்பற்றி எழுதி இருக்கிறார். நான் மாற்கிலிருந்து இரண்டு வசனங்களை வாசிக்கிறேன். மாற்கின் இந்த அதிகாரத்தின் ஆரம்ப பகுதியில் கிறிஸ்து பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை அழைத்துக்கொண்டு மறுரூபமலைக்குச் சென்றார் அங்கே அவர்கள் ஒரு அற்புதமான சம்பவத்தைக் கண்டார்கள் என்று சொல்லுகிறது. ஆனால், அவர்கள் மலையிலிருந்து கீழே வந்தபொழுது, திரளான மக்கள் மீதியிருந்த சீஷர்களை சூழ்ந்துகொண்டு அவர்களிடம் வாக்குவாதம் செய்ததை கண்டார்கள்! இயேசுவோடு இறங்கி வந்த மூன்றுபேருக்கும் இதைப்பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை. அதன்பிறகு ஒரு மனிதன் அந்தக் கூட்டத்திலிருந்து இயேசுவானவரிடம் வந்து தனது மகன் ஒரு பிசாசினால் பிடிக்கப்பட்டிருந்தான் அது அவனை வாயில் நுரைதள்ளி பல்லைக் கடிக்க செய்தது. பிறகு அந்த மனிதன் சொன்னான், “அதைத் [அந்தப் பிசாசை துரத்திவிடும்படி] உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன். அவர்களால் கூடாமற்போயிற்று” (மாற்கு 9:18). அவர்கள் முயற்சி செய்தார்கள், ஆனால் அவர்கள் தோற்றுப்போனார்கள்.

இயேசுவானவர் அந்த மனிதனிடம் சில கேள்விகள் கேட்டார். பிறகு மிகவும் விரைவாக அந்தப் பையனிடமிருந்து அந்த பிசாசை துரத்தி விடுகிறார். அதன்பிறகு இயேசுவானவர் வீட்டுக்குள்ளே போனார், மற்றும் சீஷர்களும் அவரோடு உள்ளே போனார்கள். அவர்கள் வீட்டில் இருந்தபொழுது சீஷர்கள் அவரிடம் கேட்டார்கள், “அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று?” (மாற்கு 9:28). அவர்கள் அதைச் செய்ய அதிகமாக முயற்சி செய்தார்கள். இதற்கு முன்பாக அநேகதரம் அவர்கள் வெற்றிபெற்றார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் முற்றிலும் தோற்றுப்போனார்கள். இருந்தாலும் இயேசுவானவர் எளிமையாக சொன்னார், “அவனைவிட்டு வெளியேவா” அந்தப் பையன் குணமாக்கப்பட்டான். அவர்கள் அவரிடம் கேட்டார்கள், “அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று?” கிறிஸ்து பதில் சொன்னார், “இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது” (மாற்கு 9:29).

இப்பொழுது நான் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி இன்று நமது சபைகளில் உள்ள பிரச்சனையைக் காட்டப்போகிறேன். இந்தப் பையன் நவீன உலகத்திலிருக்கும் இளம் மக்களை குறிக்கும். சீஷர்கள் இன்றுள்ள நமது சபைகளைக் குறிக்கும். நமது சபைகள் இளம் மக்களுக்கு உதவிசெய்ய தவறிவிட்டன என்பது வெளிப்படையாக இருக்கிறது அல்லவா? நாம் சபையில் எழுப்பப்பட்ட நமது 88% இளம் மக்களை, இழந்துவிட்டோம் என்று ஜார்ஜ் பர்னா நமக்குச் சொல்லுகிறார். மற்றும் உலகத்திலிருந்து ஒரு சில இளம் மக்களை, கடைசியில் வெகுசிலரை மட்டுமே, நாம் ஜெயிக்கிறோம். நமது சபைகள் மரித்துக்கொண்டிருக்கின்றன மற்றும் உபவாசிக்க தோற்றுப்போயின. தென் பாப்டிஸ்டுகள் ஒவ்வொருவருடமும் 1,000 சபைகளை இப்பொழுது இழந்து வருகிறார்கள்! அது அவர்களுடைய சொந்தக் கணக்கு! நமது சுதந்திரமான சபைகள் எதையும் அதிகமாக செய்துவிடவில்லை. கணிப்புகளைப் பார்க்கும் எவரும் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த சபைகளின் பாதிபலம்கூட இப்பொழுது இல்லை என்பதைக் காணமுடியும். அதனால்தான் டாக்டர் ஜே. ஐ. பேக்கர் சொன்னர் “இன்றுள்ள சபையின் உடைக்கப்பட்ட நிலைமை”.

சீஷர்களைப்போல, நமது சபைகள், தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கின்றன, இருந்தாலும் அவைகள் தோற்றுப்போகின்றன. அந்த இளம் மனிதனுக்கு உதவி செய்ய முயற்சி செய்து முடியாமல் தோற்றுப்போன சீஷர்களைப்போல மிகமோசமான நிலையில் அவைகள் தோற்றுப்போகின்றன. நாம் கேட்கவேண்டிய கேள்வி என்னவென்றால், “அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று?” இந்தத் தோல்விக்குக் காரணம் என்ன?

இங்கே, மாற்கு ஒன்பதாம் அதிகாரத்தில், அந்தக் கேள்வியை கிறிஸ்து சலக்கிரனை செய்கிறார் என்பதாக எனக்குக் காணப்படுகிறது. மற்றும் கிறிஸ்து கொடுத்த பதில் அன்றுபோல இன்றும் முக்கியமானதாகும்.

“வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற் போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். அதற்கு அவர் இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்” (மாற்கு 9:28-29).

இந்தப் பாடத்தை மூன்று எளிமையான கருத்துகளாக பிரிக்க முடியும்.

I. முதலாவது கருத்து “இவ்வகை” என்பதாகும்.

அதைத் துரத்திவிட அவர்களால் ஏன் கூடாமற்போயிற்று? கிறிஸ்து சொன்னார், “இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது.” ஒரு காரியத்துக்கும் மற்றகாரியத்துக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார். கடந்த காலத்தில் பிரசங்கம் செய்யவும் பிசாசுகளைத் துரத்தவும் அவர்களை அனுப்பினார் – மற்றும் அவர்கள் வெளியே சென்று பிரசங்கம் செய்தார்கள் மற்றும் அநேக பிசாசுகளைத் துரத்தினார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு திரும்பி வந்தார்கள். பிசாசுகளும் தங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்று சொன்னார்கள்.

அதனால் அந்த மனிதன் தனது மகனை அவர்களிடம் கொண்டுவந்தபோது முன்பு செய்ததைப்போல தங்களால் அவனுக்கு நிச்சயமாக உதவி செய்யமுடியும் என்று நினைத்தார்கள். இருந்தாலும் இந்தமுறை அவர்கள் முற்றிலும் தோற்றுப்போனார்கள். அவர்களுடைய எல்லாமுயற்சிகளாலும் அந்தப் பையனுக்கு உதவி இல்லாமல் போயிற்று, இது ஏனென்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அதன்பிறகு கிறிஸ்து பேசினார், “இவ்வகை” என்பதைப்பற்றி. அவர்கள் முன்னதாக கையாண்ட வகைக்கும் “இவ்வகை”க்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஒருவிதத்தில், பிரச்சனை எப்பொழுதும் ஒன்றுபோலவே இருக்கும். சபையின் வேலையானது இளம் மக்களைச் சாத்தான் மற்றும் பிசாசுகளிடமிருந்து, “அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு” (அப்போஸ்தலர் 26:18). ஒவ்வொரு காலத்துக்கும், மற்றும் ஒவ்வொரு நாகரீகத்துக்கும் அது எப்பொழுதும் ஒன்றுபோலவே இருக்கும். சபைகள் எப்பொழுதும் சாத்தான் மற்றும் பிசாசுகளிடம் போராட வேண்டியது அவசியமாகும். ஆனால் பிசாசுகளில் ஒரு வித்தியாசம் உண்டு. அவைகள் எல்லாம் ஒன்றுபோலவே இருக்காது. அப்போஸ்தலர் பவுல் அதைச் சொன்னார் “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபேசியர் 6:12). வித்தியாசமான கிரேடுகள் உள்ள பிசாசுகள் இருக்கின்றன, மற்றும் அவைகளுக்குத் தலைவன் சாத்தான் என்று அவர் நமக்குச் சொன்னார், “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவி” (எபேசியர் 2:2). சாத்தான் தன்னுடைய எல்லா வல்லமையோடும் ஜீவிக்கிறான். ஆனால் அவனுக்குக் கீழாக இந்தப் பிசாசுகளின் சக்திகள் இருக்கின்றன. பெலவீனமான பிசாசுகளை சீஷர்களால் எளிதாக ஓட்டிவிட முடிந்தது. ஆனால் இங்கே, அந்தப் பையனுக்குள், பெரிய வல்லமையுள்ள ஒரு ஆவி இருந்தது. “இவ்வகை” வித்தியாசமானது, அதனால் அதிகமான ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. முதலாவது நாம் “இவ்வகை” என்ன என்பதை கண்டு கொள்ளவேண்டிய காரியமாகும் அதோடு இன்று நாம் போராட வேண்டியது அவசியமாகும்.

நான் “இவ்வகை” என்ற அந்த வார்த்தையைப் பார்த்தபொழுது இன்றுள்ள அதிகமான அநேக போதகர்கள் நமக்கு ஒரு ஆவிக்குரிய யுத்தம் உண்டு என்று உணருகிறார்களா என்று ஆச்சரியப்படுகிறேன். அநேக போதகர்கள் சாத்தானோடும் பொல்லாத ஆவிகளோடும் ஒரு யுத்தம் செய்வது தங்கள் வேலை என்று ஒருபோதும் அறியவில்லை என நான் நிச்சயித்திருக்கிறேன். இறையியல், மற்றும் வேதாகம கல்லூரிகளிலும்கூட, மனுஷீக முறைகளின் பெரிய அழுத்தம் காணப்படுகிறது. ஆனால் அவர்கள் பிரசங்கிகளுக்குப் போதிப்பதில்லை இதன் பிரதான பிரச்சனை ஆவிக்குரிய அதிகார எல்லையாகும்.

அதனால் அவர்கள் கடந்த காலத்தில் வெற்றிபெற்ற குறிப்பிட்ட முறைகளை நாடிபோகிறார்கள். இன்றுள்ள “இவ்வகை”யோடு அந்தப் பழைய முறைகள் ஈடுசெய்ய முடியாது என்று அவர்கள் உணராதிருக்கிறார்கள். ஒரு தேவை இருக்கிறது என்று ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் கேள்வி என்னவென்றால் – அந்தச் சரியான தேவை என்ன? இன்று அந்தச் சரியான தேவையை பற்றிய விழிப்புணர்வைபெறாவிட்டால், சீஷர்கள் அந்தப் பையனோடு இருந்ததுபோல நாம் வெற்றி இல்லாதவர்களாக இருப்போம்.

இன்றுள்ள “இவ்வகை” என்பது என்ன? “இவ்வகை” என்பது புறமெய்மை மறுத்த வாழ்வியல் மெய்மை கோட்பாடு என்ற ஒரு பிசாசாகும். இந்தப் புறமெய்மை மறுத்த வாழ்வியல் மெய்மை கோட்பாடு சொல்லுகிறது அனுபவித்தால் மட்டுமே, – உணர்ந்தால் மட்டுமே அது உண்மை ஆகும். “உணர்வு பிசாசினால்” இன்று மக்களுடைய மனது குருடாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் புறமெய்மை மறுத்த வாழ்வியல் மெய்மை கோட்பாடு என்ற உணர்வு பிசாசு சொல்லுகிறது உனக்கு ஒரு தொடுஉணர்வு அனுபவம் – நிச்சயத்தின் ஒரு அனுபவம் அவசியமாகும். உனக்கு அந்த உணர்வின் அனுபவம் இருந்தால், நீ இரட்சிக்கப்பட்டாய் என்பது நிரூபணம் என்று அந்தப் பிசாசு சொல்லுகிறது.

இந்தக் குருடாக்கப்பட்ட மக்கள் ஒரு ஞாயத்தீர்ப்பின் தேவனை விசுவாசிப்பதில்லை. அவர்கள் உணர்வில் மட்டுமே விசுவாசம் வைக்கிறார்கள். இரட்சிக்கப்பட்டதற்கு ஒரு உணர்வு வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்பதற்கு ஒரு “நிரூபணமாக” ஒரு உணர்வு வேண்டும். அவர்களுடைய “நிச்சயம்” ஒரு விக்கிரகமாகும்! அவர்கள் தங்கள் உணர்வுகளை நம்புகிறார்கள், இயேசு கிறிஸ்துவை அல்ல! நாங்கள் மக்களிடம் கேட்போம், “நீ கிறிஸ்துவை நம்பி இருக்கிறாயா?” அவர்கள் சொல்லுவார்கள், “இல்லை.” அவர்கள் ஏன் இல்லை என்று சொல்லுகிறார்கள்? ஏனென்றால் அவர்களுக்குச் சரியான உணர்வு இல்லை! அவர்கள் தங்கள் உணர்வுகளை நம்புகிறார்கள், கிறிஸ்துவை அல்ல! பிசாசுகள் அவர்கள் கண்களைக் குருடாக்கி இருக்கிறான். “இவ்வகைப்” பிசாசு ஜெபத்தினாலும் மற்றும் உபவாசத்தினாலும் மட்டுமே வெற்றி கொள்ள முடியும்! “இவ்வகை” பிசாசுகளின் கோட்டைகளை உடைக்க நாம் உபவாசிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது!

II. இரண்டாவது கருத்து தோற்றுப்போன முறைகளாகும்.

கடந்த காலங்களில் மிகவும் உதவியாக இருந்த காரியங்களை நமது சபைகள் செய்வதை நான் பார்க்கிறேன், ஆனால் “இவ்வகை” மீது அதிகமான பலன் இல்லை. நாம் பழைய காரியங்களைச் சார்ந்திருக்கும் காரணத்தால், நாம் ஏறக்குறைய எல்லா இளம் மக்களையும் இழந்து விட்டோம், மற்றும் கஷ்டப்பட்டு ஒருவரையும் உலகத்திலிருந்து நாம் கொண்டுவர முடியவில்லை. தவறாக புரிந்து கொள்ளும் இடர்வரவுக்காக, நான் ஞாயிறு பள்ளியை இந்த வகையினத்தில் வைக்கிறேன். இது ஒரு நூற்று இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இன்று அதற்குக் குறைவான மதிப்புதான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இரட்சிப்பின் கைபிரதிகளைப் பற்றியும் இதே காரியத்தை நான் சொல்லுவேன். ஒரு காலத்தில் உண்மையாக மக்கள் அவைகளை வாசித்தார்கள் மற்றும் சபைக்கு வந்தார்கள். நான் எந்தப் போதகரிடமும் எளிமையாக கேட்பேன், “ஒரு கைபிரதியை வாசித்து சபைக்கு வந்த இரட்சிக்கப்பட்ட யாராவது இளம் மக்கள் உங்களிடம் உண்டா?” கடந்தகாலங்களில் மிகவும் உதவியாக இருந்த காரியங்கள் நமது நாட்களில் “இவ்வகை” பிசாசுகளால் நன்றாக எதிர் விளைவு இருப்பதில்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது. இந்த வகையினத்தில் வீடுகள்தோறும் சந்திப்பதையும் நான் வைப்பேன். இது கடந்தகாலங்களில் மிகவும் வல்லமையாக பயன்பட்டது, ஆனால் இப்பொழுது “இவ்வகை” பிசாசுகளால் இளம் மக்களைக் கொண்டுவருவதற்கு நன்றாக உதவியாக இருப்பதில்லை.

“இவ்வகை” பிசாசுகளால் சில காரியங்கள் உபயோகப்படுத்தப்பட்டபோது, இன்று உபயோகமற்றதாக காணப்படுகிறது. வேறுவிதமாக சொன்னால், கிறிஸ்துவானவர் வல்மையாக சொல்லுகிறார், “உனக்கிருந்த வல்லமை மற்ற காரியங்களுக்குப் போதுமானதாக இருந்தது, இந்தக் காரியத்தில் நீ தோற்றுப்போனாய், ஏனென்றால் இங்கே உனது பெலனுக்கு மதிப்பில்லை. ‘இவ்வகை’ பிசாசுகளின் கீழ் உள்ள பையனுக்கு உதவி செய்ய சக்தி இல்லாதபடி அது உன்னை செய்திருக்கிறது.”

கடந்தகாலங்களில் நாம் செய்த அநேக காரியங்கள் இன்று பயனற்றதாக இருக்கிறது என்று உணரும் போதகர்கள் உண்டு என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் சாத்தானுடைய “ஆயுதங்களைக்” காட்டிலும் ஆராய்ச்சி முறையில் பயிற்சிவிக்கப்பட்டவர்கள் (II கொரிந்தியர் 2:11) – அதனால் அவர்கள் பழைய முறைகளைவிட எந்தவிதத்திலும் சிறந்ததாக இல்லாத புதிய முறைகளில் பெரிதாக ஊஞ்சலாடுகிறார்கள் – அதாவது, இளம் மக்களை சபையின் நிலையான உறுப்பினர்களாக இருக்க வைக்க நாம் முயற்சி செய்தல். உதாரணமாக ஆதியாகமத்தின் சிருஷ்டிப்பு சரியானது மற்றும் பரிணாமம் தவறானது என்று “நிரூபிக்கும்” சில மனிதர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். அதனால் பரிணாமத்தை விட்டு ஆதியாகமத்தில் விடையைக் காணும்படி நாம் நிரூபித்தால், இளம் மக்கள் மாற்றப்படுவார்கள், மற்றும் மற்றவர்கள் உலகத்திலிருந்து உள்ளே வருவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தற்கால சூழ்நிலைக்கு இந்தமுறையில் டீல் பண்ண முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

டாக்டர் லியோடு-ஜோன்ஸ் சொன்னார், “பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மக்கள் தங்கள் நம்பிக்கையில் குத்திக்கொண்டு [தன்சமயத்துக்கு ஆதரவான வாதம்] இருந்தார்கள் அது சரியாக இதைப்போன்ற வழியாகவே இருக்கிறது. இதில், அவர்கள் நமக்கு, கிறிஸ்தவத்தின் சத்தியத்தை காட்டப்போகும் காரியங்களை கற்றுக்கொடுத்தார்கள், ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. “இவ்வகை” பிசாசுகள் ஒன்றும் அந்த வழியின் மூலமாக வரமுடியவில்லை.”

தோற்றுப்போன மற்றொரு முறையானது நவீன மொழிபெயர்ப்பு ஆகும். பழைய கிங் ஜேம்ஸ் வேதாகமத்தை இளம் மக்கள் புரிந்து கொள்ள முடியாது என்று நமக்குச் சொல்லப்பட்டது. நமக்குத் தேவையானது நவீன மொழியில் ஒரு வேதாகமம் இருக்க வேண்டும். இளம் மக்கள் அதை வாசிப்பார்கள். பிறகு அவர்கள் சொல்லுவார்கள், “இதுதான் கிறிஸ்தவம்” – மற்றும் அவர்கள் திரளாக நமது சபைகளுக்கு வருவார்கள். ஆனால் அது நடக்கவில்லை. உண்மையில், அதற்கு எதிர்மாறாக நடந்தது. நான் தனிபட்ட விதத்தில் இளம் மக்கள் மத்தியில் ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு இருக்கிறேன். இந்த நவீன மொழிபெயர்ப்பு இளம் மக்களை கவர்சிக்கவே இல்லை என்ற ஒரு உண்மை எனக்குத் தெரியும். உண்மையாக, அநேக மக்கள் சொன்னதை நான் கேட்டேன், “அது சரியானதாக இல்லை. ஒரு வேதாகத்தைபோல இல்லை.”

ஒரு நவீன மொழிபெயர்ப்பில் நான் ஒருபோதும் பிரசங்கித்ததில்லை, மற்றும் இனி ஒருபோதும் எனக்குச் சித்தமில்லை. இளம் மக்கள் எல்லா நேரத்திலும், நமது சபையிலும் மற்றும் உலகத்திலுமிருந்தும், மாற்றப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த நவீன மொழிபெயர்ப்பின் மதிப்பு என்னவாக இருந்தாலும், அவைகள் பிரச்சனையைத் தீர்க்கப்போவதில்லை. அவைகள் இந்த “இவ்வகை” பிசாசுகளோடு டீல் செய்வதில்லை.

அவர்கள் வேறு என்ன முயற்சிக்கிறார்கள்? ஓ, அந்தப் பெரிய ஒன்று நவீன இசை ஆகும்! “நமது இசையை சரிசெய்து கொள்ளுவோம் பிறகு அவர்கள் உள்ளே வருவார்கள் மற்றும் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள்.” இது மிகவும் துக்ககரமானது. மெய்யாக இதன்மீது நான் விமர்சனம் செய்ய வேண்டுமா? லாஸ் ஏஞ்ஜல்சில் வாடகையில் கூடும் ஒரு சதரன் பாப்டிஸ்டு சபை ஒன்று உண்டு. அந்தப் போதகர் ஒரு டி-சர்ட்டு போட்டுக்கொண்டு ஒரு ஸ்டூல்மீது உட்காருவார். அவர் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக, ஒரு மணி நேரத்துக்கு ராக் இசை இருக்கும். நமது மனிதரில் ஒருவர் அதை சோதிக்க போனார். அவர் திகைத்துப்போனார். அந்தக் கூட்டம் இருளாக மற்றும் பரிதாபமாக இருந்தது, ஆவிக்குரியதே அல்ல என்று அவர் சொன்னார். அந்த மக்கள் ஆத்துமாக்களை வெற்றிகொள்ள முடியாது, மற்றும் நமது இளம் மக்கள் செய்வதுபோல ஒரு மணிநேரம் அவர்கள் ஜெபிக்க முடியுமா என்று அவரால் கற்பனை செய்ய முடியவில்லை என்று அவர் சொன்னார். ஒரு மணி நேரம் வேறு ஒன்றுமல்ல ஜெபம் செய்வார்களா? அதை மறந்து விடுங்கள்! அதனால், நவீன ராக் இசையும் இந்த “இவ்வகை” பிசாசுகளை ஜெயிக்காமல் தோற்றுப்போனது.

III. மூன்றாவது கருத்து அந்தப் பொல்லாத சக்திக்குக் கீழாக சென்று, அதை அடைக்கக்கூடிய சிலது நமக்குத் தேவை, மற்றும் அதை ஒரே ஒரு காரியம்தான் செய்ய முடியும், அது தேவனுடைய வல்லமை ஆகும்!

டாக்டர் லியோடு-ஜோன்ஸ் சொன்னார், “அந்த ‘இவ்வகை’ பிசாசு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தேவனுடைய வல்லமை முடிவில்லாத பெரிதானதாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும், அதுதான் நமக்குத் தேவை அதிக அறிவு, அதிக புரிந்துகொள்ளுதல், அதிக சமயத்துக்கு ஆதரவான வாதம், [புதிய மொழிபெயர்ப்பு, அல்லது ராக் இசை] – தேவையில்லை, நமக்குத் தேவையானது மனிதனுடைய ஆத்துமாவில் நுழைந்து மற்றும் அவர்களை உடைத்து மற்றும் அவர்களை நொறுக்கி மற்றும் அவர்களைத் தாழ்த்தி அதன்பிறகு அவர்களை புதிதாக உருவாக்கும் ஒரு சக்தி அவசியமாகும். அதுதான் ஜீவனுள்ள தேவனுடைய வல்லமையாகும்.” அது நம்மை திரும்ப நமது பாடத்துக்கு எடுத்துச் செல்லுகிறது,

“அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். அதற்கு அவர் இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தி
னாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப் போகாது என்றார்” (மாற்கு 9:28-29).

ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும். “இவ்வகை” சாத்தானுடைய தாக்குதலை ஜெயிக்க வேறு ஒன்றும் நமது சபைகளுக்கு உதவி செய்ய முடியாது. இன்று நமது சபைகள் இளம் மக்களை சென்றடைவதில்லை. நாம் என்ன செய்ய முடியும்? “இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது.”

சில “வல்லுனர்கள்” சொல்லுவார்கள், “சிறந்த மூலபிரதியில் ‘உபவாசத்தினாலும்’ என்ற வார்த்தை இல்லை.” ஆனால் அந்த “வல்லுனருக்கு” பிசாசுகளைப்பற்றி என்ன தெரியும்? நமது நகரத்தின் தெருக்கள் மற்றும் கல்லூரி வளாகத்திலிருந்து புறஜாதிகளை மாற்றுவதைப்பற்றி அவருக்கு என்ன தெரியும்? இப்பொழுது சீனாவில் அவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் – எழுப்புதலைப்பற்றி அவருக்கு என்ன தெரியும்? அவைகளைப்பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. எனது வாழ்க்கையில் பாவத்தை மூடும் மூன்று எழுப்புதல்களுக்கு நான் கண்கண்ட சாட்சியாக இருந்திருக்கிறேன். அந்த மூன்று எழுப்புதல்களிலும் பிரசங்கம் செய்யும்படி பெரிய சிலாக்கியத்தை நான் பெற்றதை நினைத்து அதிகமாக பூரிப்படைகிறேன். அவைகள் சுவிசேஷ கூட்டங்கள் அல்ல. அந்த நேரங்களில் மனிதனுடைய இருதயத்தில் தேவனுடைய வல்லமை நுழைந்து, மற்றும் அவர்களை உடைத்து, மற்றும் அவர்களை நொருக்கி, மற்றும் அவர்களைத் தாழ்த்தி, அதன்பிறகு அவர்களை கிறிஸ்து இயேசுவில் புதிய சிருஷ்டியாக உருவாக்கியது!

அதனால், நாம் “உபவாசம்” என்ற வார்த்தையை நீக்கின அந்த இரண்டு பழைய மூலபிரதிகளைப் பின்பற்ற போவதில்லை. பழங்காலத்தவர் உபவாசத்தை அதிகமாக வலியுருத்தினார்கள். அதனால் சீனாய் மலை சார்ந்த மூல பிரதி தயார் செய்தவர்கள் “உபவாசத்தினாலும்” என்ற வார்த்தையைச் சமரச கிளையினர் பயன்படுத்தும்படியாக அதை நீக்கிவிட்டார்கள். “கஷ்டமான நிலைமைகளில் சமரசகிளையினர் உபவாசத்தை கடைபிடித்தார்கள்” (William R. Horne, Trinity Evangelical Seminary, “The Practice of Fasting in Church History,” p. 3). அந்த வார்த்தைகளை மூலபிரதி தயார் செய்தவர்கள் சேர்த்துவிட்டார்கள் என்று நவீன “வல்லுனர்கள்” சொல்லுகிறார்கள். அவைகளை நீக்கினதைவிட சேர்த்தது அதிகமாக விரும்பத்தக்கதாகும் (பார்க்கவும் The Secret History of the Gnostics: Their Scriptures, Beliefs and Traditions, by Andrew Phillip Smith, chapter 5, page 1). “உபவாசத்தினாலும்” என்ற வார்த்தையை கிறிஸ்து சொன்னார் என்று நாம் அறிகிறோம். அதை எப்படி நாம் அறிவோம்? இரண்டு காரணங்களால் நாம் அறிகிறோம். முதலாவது, முன்னதாக பிசாசுகளைத் துரத்தியபோது சீஷர்கள் வெளிப்படையாக ஜெபித்தார்கள். அதனால் ஏதோ ஒன்று சேர்க்க வேண்டியதாக இருந்தது. ஏதோ ஒன்று தேவையானதாக இருந்தது – உபவாசம்! ஜெபம் மட்டுமே போதாது. இதை அனுபவத்தில் நாமும் அறிந்திருக்கிறோம். நாம் உபவாசித்தோம் மற்றும் நாம் உபவாசித்து ஜெபித்து நமது இருதயத்தை ஊற்றினபொழுது தேவன் என்ன செய்ய முடிந்தது என்பதை நமது சொந்த கண்களால் பார்த்தோம்.

இப்பொழுது டாக்டர் லியோடு-ஜோன்ஸ் அவர்களின் மற்றொரு குறிப்பிலிருந்து நான் முடிக்கிறேன். என்ன ஒரு பிரசங்கியார்! அவரது உள்பார்வை என்ன! அவருக்காக நான் தேவனுக்கு எப்படி நன்றி செலுத்துவேன். மற்றொரு இடத்தில் அவர் சொன்னார்,

நான் ஆச்சரியப்படுகிறேன் இது எப்போதாவது நமக்கு நிகழ்ந்ததா உபவாசம் என்ற கேள்வியை நாம் கவனத்தில் கொண்டு உள்ளோமா? உண்மை என்ன வென்றால், இந்த முழுபாடமும், நமது வாழ்க்கையிலிருந்து விழுந்து போனதாக காணப்படுகிறது, நமது முழுகிறிஸ்தவ சிந்தனையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக இருக்கிறது இல்லையா?

மற்றும் இது, “இந்த வகை” பிசாசை நம்மால் ஏன் வெற்றிகொள்ள முடியாமல் இருக்கிறது, என்பதற்கு இது மற்ற எந்தக் காரியத்தையும்விட உண்மையாக இருக்கக்கூடியது.

ஒரு பொதுவான உபவாசத்துக்கு நமது சபையை நான் அழைக்க போகிறேன். இதைப்பற்றி அதிகமாக பின்னர் சொல்லுகிறேன். நாம் எப்போது உபவாசிப்போம் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நாம் எப்பொழுது உபவாசிப்போம் என்றும், உபவாசத்தை எப்படி முடிப்பது என்பதைப் பற்றியும் நான் உங்களுக்குச் சொல்லுவேன்.

அந்த நேரத்தில் நாம் இங்கே சபைக்கு வந்து ஒரு ஜெபகூட்டத்துக்கு முன்பாக ஒரு ஆகாரம் புசிப்போம். போன் செய்பவர்களில் சிலர் டாக்டர் கேஹன் மூலமாக சிறிது நேரம் பேசுவார்கள். நம்மில் மற்றவர்கள் ஜெபித்துக் கொண்டிருப்போம், டாக்டர் கேஹன் மற்றும் நானும் கேள்விகளுக்குப் பதிலளிப்போம்.


1.  நமது புதிய திட்டங்களுக்காக நாம் உபவாசித்து ஜெபிப்போம்.

2.  ஒரு புதிய “நெற்று” பையன்கள் மற்றும் ஒரு புதிய “நெற்று” பெண்களுக்காக நாம் உபவாசித்து ஜெபிப்போம். “நெற்று” என்பது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை காலை, மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரும் ஐந்து அல்லது ஆறு மக்கள் கொண்ட குழுவாகும் அவர்கள் சீஷர்களாக மாறவிருப்பமுள்ளவர்களாகும்.

3.  நமது சபையில் மாறுதல் அடைபவர்களுக்காக உபவாசமிருந்து ஜெபிப்போம். நாம் குறிப்பாக கூர்ந்து பார்ப்பது “இந்த வகை” –உணர்வுகளை எதிர்பார்க்கும் நபர்களை அடிமையாக்கும் பிசாசுகளுக்காக.


இப்பொழுது நான் இயேசுவானவரைப்பற்றி பேசாமல் இந்தக் கூட்டத்தை முடிக்க முடியாது. நமக்குத் தேவையான எல்லாம் அவருக்குள் காணப்படுகிறது. எபிரெயர் புத்தகம் சொல்லுகிறது,

“என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொரு வருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவ தூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்” (எபிரெயர் 2:9).

தேவகுமாரனாகிய, இயேசு, பாவிகளின் ஸ்தானத்தில், பாவிகளுக்குப் பதிலாக மரித்தார். இயேசுவானவர் உனக்கு ஜீவனை கொடுக்க, மாம்சத்தோடும் எலும்போடும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார். நீ இயேசுவானவரிடம் சரணடையும் நொடிபொழுதிலே அவருடைய சிலுவையின் மரணத்தின் மூலமாக உன்னுடைய பாவங்கள் நீக்கப்படும். உன்னை நீ அவரிடம் ஒப்படைக்கும் நொடிபொழுதிலே, உன்னுடைய பாவங்கள் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே சுத்தம் செய்யப்பட்டு தேவனுடைய பதிவேட்டிலிருந்து நீக்கப்படும். நீ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி அவர் மூலமாக பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட வேண்டுமென்று நாங்கள் எவ்வளவாக ஜெபிக்கிறோம். ஆமென் மற்றும் ஆமென். தயவுசெய்து எழுந்து நின்று உங்கள் பாட்டுத் தாளில் உள்ள 4ஆம் பாடலை பாடவும்.

நமது தேவன் ஒரு வல்லமையான கோட்டை,
ஒருபோதும் தவறாத ஒரு கொத்தளம்,
   அழிவின் வெள்ள தீமைகள் பெருக்கின் மத்தியில்,
   அவர் நமது உதவியாள்.
நமது பழைய சத்துரு நமக்கு தீங்கு செய்ய
கிரியைச் செய்ய தேடும் வேளையில்;
   அவனுடைய ஏமாற்று மற்றும் வல்லமை பெரியது,
   மற்றும், கொடூர வெறுப்பின் ஆயுதம் அணிந்தவன்,
பூமியிலே அவனுக்கு இணை இல்லை.

நமது சொந்த பெலத்தை நம்பி செயலாற்றினோமா,
நமது முயற்சி தோற்றுபோகும்,
   தேவனால் சொந்தமாக தெரிந்து கொள்ளப்பட்ட,
   சரியான மனிதர் நமது பக்கத்தில் இருக்கிறார்.
அது யாராக இருக்கும் என்று கேட்கிறாயா?
அது கிறிஸ்து இயேசுவே, அவரேதான்;
   அவரது பெயர் ஓய்வுநாளின் கர்த்தர்,
   காலத்தின் துவக்கமுதல் முடிவு மட்டும் மாறாதது,
மற்றும் அவரே யுத்தத்தில் ஜெயிக்க வேண்டும்.
   (“A Mighty Fortress Is Our God,” Martin Luther, 1483-1546).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Old-Time Power” (Paul Rader, 1878-1938).


முக்கிய குறிப்புகள்

பிசாசுகளை ஜெயங்கொள்ளுவது அது நம்மை
பெலவீனப்படுத்தி உள்ளது – “இவ்வகை”!

OVERCOMING THE DEMONS THAT WEAKEN US –
“THIS KIND”!

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

“வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற் போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். அதற்கு அவர் இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்” (மாற்கு 9:28-29).

(மாற்கு 9:18)

I.    முதலாவது கருத்து “இவ்வகை” என்பதாகும், அப்போஸ்தலர் 26:18;
 எபேசியர் 6:12; 2:2.

II.   இரண்டாவது கருத்து தோற்றுப்போன முறைகளாகும், II கொரிந்தியர் 2:11.

III.  மூன்றாவது கருத்து அந்த பொல்லாத சக்திக்குக் கீழாக சென்று, அதை அடைக்கக்கூடிய சிலது நமக்குத் தேவை, மற்றும் அதை ஒரே ஒரு காரியம்தான் செய்ய முடியும், அது தேவனுடைய வல்லமை ஆகும்!
எபிரெயர் 2:9.