Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
சீஷர்களை உருவாக்குவதில் கிறிஸ்துவின் ஒழுங்கு

CHRIST’S METHOD OF MAKING DISCIPLES
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஜூலை 15, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Evening, July 15, 2018


உங்கள் வேதாகமத்தை மத்தேயு 10:1க்கு தயவுசெய்து திருப்பிக் கொள்ளுங்கள். அது ஸ்கோபீல்டு வேதாகமத்தில் 1008ஆம் பக்கத்தில் உள்ளது. அந்த வசனத்தில் 1வது பகுதியைப் பாருங்கள்.

“அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து … ”

“சீஷன்” என்னும் வார்த்தையானது “மெத்தாட்டிஸ்” என்ற கீரேக்க வார்த்தையிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டதாகும். இந்த வார்த்தைக்குப் புதிய ஏற்பாட்டில் ஒரு போதகரைப் பின்பற்றி அந்தப் போதகரிடம் ஒரு நபர் கற்றுக்கொள்ளுவதைப் பற்றி சொல்லப்படுகிறது. இது பன்னிரண்டு மனிதர்கள் இயேசுவைப் பின்பற்றி சென்றதற்கு ஒப்பாகயிருக்கிறது.

இந்தப் பன்னிரண்டு மனிதர்களைக் கிறிஸ்துவானவர் எப்படியாக அழைத்து, அவர்கள் மறுப்பிறப்பு அடைவதற்கு முன்பாக அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார் என்பதை உங்களுக்குக் காட்டுவது என்னுடைய நோக்கமாகும். இன்று நம்முடைய அநேக சபைகளில் இந்த விதமாக செய்யப்படுவதில்லை. பாஷைகள் பேசும் பெந்தெகொஸ்தர்களிலிருந்து அடிப்படை வேதாகமப் போதகர்கள் வரையிலும் – நான் அறிந்த வரையிலும் ஒரே காரியத்தைச் செய்கிறார்கள். அவர்கள் வழக்கமாக சிக்கலில் இருக்கிற ஒரு புது நபரைப் பிடிக்கிறார்கள் மற்றும் சில வார்த்தைகளைச் சொல்லுகிறார்கள், “நீ பரலோகத்துக்குப் போக விரும்புகிறாயா?” அந்தப் புதிய நபரை இப்படியாகச் சொல்லும் வரையிலும் அதிக பட்சமாக அவரை நெருக்கிறார்கள், “ஆமாம், நான் விரும்புகிறேன்”. அதன்பிறகு அந்த ஆத்தும ஆதாயம் செய்பவர் சொல்கிறார், “இந்த வார்த்தைகளை என்னோடே கூட சேர்ந்து சொல்லி ஜெபிக்க வேண்டும்”. அந்தக் குழப்பத்தில் இருக்கும் புதிய நபரின் வாய் “ஆத்தும ஆதாயம்” செய்பவரின் வார்த்தைகளைச் சொல்லும் – அதன்பிறகு அவர் ஜோயல் ஆஸ்டின் தமது போதனைகளின் முடிவில் சொல்லுவதைப் போல சிலவற்றை சொல்லுவார்கள், “நாங்கள் விசுவாசிக்கிறோம், நீ இந்த ஜெபத்தை சொல்லியிருந்தால், நீ மறுப்பிறப்பு அடைந்துவிட்டாய்.” அந்த நல்ல சபைகளில் அவர்களுடைய பெயர் மற்றும் தொலைப்பேசி எண்ணை எழுதிக் கொள்ளுவார்கள் மற்றும் அவர்களோடு ஜெபிப்பார்கள் – அதன்பிறகு, சில நாட்கள் கழித்து, யாராவது ஒருவரை அந்த மாற்றப்பட்டவரை “பின்பற்றி” அணுகும்படியாக செய்வார்கள். என்னுடைய அனுபவத்தில் பார்த்தவரையில் இப்படிப்பட்ட காரியம் ஒருபோதும் ஒரு உண்மையான கிறிஸ்தவரை உருவாக்குவது கஷ்டமானதாகும்! அவர்கள் ஜெபித்த நபர் வழக்கமாக ஒரு மாறுதல் அடைந்தவராக இருக்கமாட்டார். அவர்கள் அந்த “ஆத்தும ஆதாயம்” செய்பவருக்கு மறைந்து கொள்ளுவார்கள், அல்லது அவரை “வெளியே போ” என்று கத்துவார்கள்! அவர்களை “பின்பற்றி” கவனிக்க முயற்சி செய்யும்பொழுது அவர்கள் நல்லவிதத்தில் பதிலளிக்கமாட்டார்கள்!

இந்த ஒழுங்குமுறையில் என்ன தவறு இருக்கிறது? வழக்கமாக இது செயல்படுவதில்லை! உண்மையில் இது எப்பொழுதும் செயல்படுவது கடினமாகும். நான் அறுபது ஆண்டுகளாக ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியாக இருந்துவருகிறேன் மற்றும் இது என்னுடைய அனுபவமாகும். இது ஏன் “வேலை” செய்யாது? இது ஏன் சீஷர்களை உருவாக்காது? அது ஏனென்றால் இயேசுவானவர் சீஷர்களை உருவாக்கினது போல அவர்கள் போதுமான கவனம் செலுத்தவில்லை! அதனால்தான்!

நான் “கர்த்தத்துவ இரட்சிப்பை” போதிக்கிறேன் என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், ஆனால் நான் அப்படி செய்யவில்லை. நான் ஜான் மெக் ஆர்த்தர் மற்றும் பால் வாஷர் போதிப்பது போல போதிக்கவில்லை. நான் ஏன் “கர்த்தத்துவ இரட்சிப்பை” தள்ளிவிடுகிறேன் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள தயவுசெய்து Preaching to a Dying Nation, pp. 117-119ஐ படிக்கவும். இந்த முழு புத்தகத்தையும் நம்முடைய, www.sermonsfortheworld.com. என்ற வலைதளத்தில் இலவசமாக நீங்கள் படிக்க முடியும். இயேசுவானவரை விசுவாசிப்பதும் மற்றும் அவருடைய இரத்தத்தினால் கழுவப்படுவதினாலும் இரட்சிப்புக் கிடைக்கிறது.

ஆனால் இயேசுவானவர் ஒரு “பாவியின் ஜெபத்தை” எங்கே சொன்னார், மற்றும் அதன் பிறகு அவர்கள் தம்மை பின்பற்றும்படி எங்கே சொல்லியிருக்கிறது என்பதை நான்கு சுவிசேஷங்களிலும் எனக்குக் காட்டுங்கள். இதை இயேசு கிறிஸ்துவானவர் செய்ததை நீங்கள் எங்கேயும் காட்ட முடியாது! அவர் முதலாவதாக “பின்பற்றும்படி” சொன்னார். முதலாவதாக எதை வைக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்தார்!

இயேசு கிறிஸ்து தமது மக்களை மாறுதல் அடைய செய்த வழி இதுதான்! சீஷத்துவத்தின் கஷ்டமான சத்தியங்களை முதலாவது அவர்கள் கேட்கவேண்டியது அவசியம் என்றும் – அவர்கள் மெய்யாக அவரை நம்பி மற்றும் இரட்சிப்பு அடைவதற்கு முன்னதாக அவர் அறிந்திருந்தார்!

“ஆனால்,” யாராவது ஒருவர் சொல்லலாம், “கடினமான சத்தியங்கள் அவர்களைச் சிதறடிக்கும்”. உண்மைதான்! கடினமான சத்தியங்கள் அவர்களில் அதிகமான பெயர்களைச் சிதறடிக்கும்! கிறிஸ்துவின் அநேக சீஷர்கள் அவரை விட்டுவிட்டார்கள். அவர்களை நிற்கும்படி அவர் கெஞ்சவில்லை. அவர் பன்னிரண்டு சீஷர்களிடம் கேட்டார், “நீங்களும் போய்விட மனதாயிருக் கிறீர்களோ?” (யோவான் 6:67). அனைவரும் போய்விடமாட்டார்கள்! தங்கியிருந்து கவனித்துக் கற்றுக்கொள்ளுபவர்கள் கிறிஸ்துவின் கடினமான பாறை சீஷர்களாக, மற்றும் சிலுவையின் சிப்பாய்களாக மாறுவார்கள்!

டாக்டர் ஐசக் வாட்ஸ் 18ஆம் நூற்றாண்டின் பழைய விதமான சுவிசேஷத்தைப் பற்றி பேசினார். ஐசக் வாட்ஸ் சொன்னார்,

நான் ஒரு சிலுவையின் சிப்பாயாக இருக்கிறேனா,
ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றுகிறவனா,
அவருடைய காரியங்களைச் சொந்தமாக்கிக்கொள்ள பயப்படுகிறேனா,
அல்லது அவருடைய நாமத்தைப் பற்றி வெட்கமடைகிறேனா?

நான் ஆளுகை செய்ய வேண்டுமானால்,
நிச்சயமாக நான் போராட வேண்டும்;
எனது தைரியத்தை வர்த்திக்க செய்யும், கர்த்தாவே.
உமது வார்த்தையின் ஆதாரமாக உள்ள,
கஷ்டங்களை நான் தாங்கி கொள்ளுவேன்,
வேதனைகளை சகித்துக்கொள்ளுவேன்.
(“Am I a Soldier of the Cross?”, Dr. Isaac Watts, 1674-1748).

புதிய மக்களை முதலாவதாக கிறிஸ்துவின் இரத்த யுத்தத்தில் குதிக்கும்படி எதிர்பார்க்க முடியாது. அப்படி அவர்கள் செய்தால் அது எளிமையாக இருக்கும். ஆனால் நான் அந்த வழியில் ஒரு கிறிஸ்தவனாகமாற முடியாது. சிலுவையைச் சுமக்கும் கிறிஸ்தவன்தான் உண்மையான கிறிஸ்தவன் என்பதை நான் முதலாவது புரிந்துக்கொள்ள வேண்டும். நான் இயேசுவை விசுவாசிப்பதற்கு முன்பாக, சிலுவையின் சிப்பாயாக மாறுவதற்கு முன்பாக நான் சில சீஷத்துவத்தின் கஷ்டங்களின் ஊடாக போக வேண்டும். மற்றும் அப்படியே நீங்களும் போக வேண்டியது அவசியம்!

நான் சொன்னவைகளை இன்று பல சபைகளில் பின்பற்றப்படுவதில்லை! எல்லாவிதத்திலும், இது உண்மையாக இருக்கிறது. “நான் ஆளுகை செய்ய வேண்டுமானால், நிச்சயமாக நான் போராட வேண்டும், எனது தைரியத்தை வர்த்திக்க செய்யும், கர்த்தாவே.” அப்படியாகதான் 18ஆம் நூற்றாண்டின் மிக பெரிய பாடல் எழுத்தாளர் எழுதுகிறார். மற்றும் ஜார்ஜ் ஒய்ட் பீல்டு அல்லது ஜான் வெஸ்லீ பிரசங்கித்தார்கள் அவர்களுக்கு முன்பாக பத்தாயிரக் கணக்கானவர்கள் பனியின் ஆங்கில் ஆழத்தில் நின்றார்கள்! ஆனால் இன்று அநேகக் கூட்டங்களில் அந்தப் பாடல் பாடுவதை நீங்கள் கேட்க முடியாது! நாம் இப்பொழுது உபயோகப்படுத்தும் பாடல் புத்தகங்களில் “கிறிஸ்தவ யுத்தம்” பற்றிய பாடல்கள் ஏன் மிக குறைவாக இருக்கிறது என்பதற்கு இதுவும் காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். கிறிஸ்தவ யுத்தத்துக்கு மற்றும் சீஷத்துவத்துக்கு அழைக்கும் பாடல்கள் வரிசையில் குறைந்த பிரபலமான பாடல்களே இப்பொழுது உள்ளன 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடல்களைவிட “நான் ஒரு சிலுவையின் சிப்பாயாக இருக்கிறேனா?”.

அது நமக்கு சுவிசேஷ செய்தியையே கொண்டு வருகிறது. இயேசுவானவர் தமது சீஷர்களுக்கு சுவிசேஷத்தை எப்பொழுது பிரசங்கிக்க ஆரம்பித்தார்? I கொரிந்தியர் 15:3, 4 சுவிசேஷத்தின் அடிப்படை உண்மைகளைத் தருகிறது:

“நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்த
தும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்
களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்
பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்” (I கொரிந்தியர் 15:3, 4).

இயேசுவானவர் சீஷர்களுக்கு சுவிசேஷத்தை கொடுக்க ஆரம்பித்தது அவர்கள் தம்மை பின்பற்றின ஒரு வருடத்திற்குப் பிறகு ஆகும். இது மத்தேயு 16:21, 22ல் பதிவு செய்யப்பட்டுள்ளது,

“அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய் ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்” (மத்தேயு 16:21, 22).

பேதுரு ஒரு வருட காலமாக இயேசுவானவரைப் பின்பற்றி கொண்டிருந்தார். இருந்தாலும் பேதுரு இப்படியாகச் சொன்னதற்கு அவரைக் கடிந்துகொண்டார் இயேசுவானவர் “கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும்” (மத்தேயு 16:21). பேதுரு இயேசுவானவரின் சீஷரான பிறகு ஒரு வருடம் கழித்தும் சுவிசேஷத்தை புரிந்துக்கொள்ளவில்லை என்பது வெளிப்படையாக உள்ளது.

அதன்பிறகு அதே வருடத்தில் மறுபடியுமாக அந்த சுவிசேஷத்தை சீஷர்களுக்குக் கொடுத்தார்,

“அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார். அவர்கள் அவரைக்கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்” (மத்தேயு 17:22, 23).

அவர்கள் ஏற்கனவே இயேசுவானவர் மறுரூபமானதை பார்த்தார்கள் என்பதைக் கவனிக்கவும். இயேசுவானவர் மறுரூபமானதை சீஷர்கள் பார்த்த பிறகுகூட அவர்களால் ஒரு இளம் மனிதனைப் பிடித்திருந்த பிசாசை அவர்கள் துரத்த தோற்றுப்போனார்கள். அவர்கள் இயேசுவானவரை பிசாசைத் தங்களால் ஏன் துரத்த முடியவில்லை என்று கேட்டபொழுது, இயேசு சொன்னார், “உங்களுடைய அவிசுவாசத்தின் காரணமாக” (மத்தேயு 17:20). அதன்பிறகு இயேசுவானவர் மறுபடியுமாக சுவிசேஷத்தை கொடுத்தார், “அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள் [இயேசு]; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந் திருப்பார் என்றார் [இயேசு]. அவர்கள் [சீஷர்கள்] மிகுந்த துக்கமடைந்தார்கள்” (மத்தேயு 17:23. NKJV). சீஷர்கள் இன்னும் அந்த சுவிசேஷத்தை புரிந்து கொள்ளவில்லை!

இயேசுவானவர் மூன்றாவது முறையாக சுவிசேஷத்தை கொடுத்தது மத்தேயு 20:17-19ல் இருக்கிறது. அதனுடைய இணையான பகுதி லூக்கா 18:31-34 ஆகும்.

“பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை” (லூக்கா 18:31-34).

சீஷர்கள் இன்னும் சுவிசேஷத்தை புரிந்துகொள்ளவில்லை இயேசுவானவர் அதை அவர்களுக்கு இரண்டு வருடங்களாக கற்பித்தார்,

“இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ள வில்லை” (லூக்கா 18:34).

அந்த சீஷர்கள் அநேக முறைகள் சுவிசேஷத்தை கேட்டாலும், அவர்களால் இயேசுவானவர் எதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார் என்பதை இன்னும் புரிந்துகொள்ளாமல் இருந்தார்கள்!

ஆனால் இயேசுவானவர் மறுபடியுமாக அவர்களுக்கு சொன்னார், “இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் [இயேசு] சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்” (மத்தேயு 26:2).

இப்பொழுது, மறுபடியும் மறுபடியுமாக அந்த சீஷர்கள் சுவிசேஷத்தை கேட்டபிறகு, அவருடைய சீஷர்களில் ஒருவனான, யூதாஸ் என்பவன், இயேசுவை பிரதான ஆசாரியர்களுக்குக் காட்டிக்கொடுக்க தீர்மானம் செய்தான்! (மத்தேயு 26:14, 15).

மறுபடியுமாக இயேசுவானவர் அவர்களுக்கு சுவிசேஷத்தை கொடுத்தார் (மத்தேயு 26:31, 32). பேதுரு மற்றும் மற்ற சீஷர்கள் கெத்செமேனே தோட்டத்தில் தூங்கினார்கள். இயேசுவானவரைக் கைது செய்ய சேவகர்கள் வந்தபொழுது, பேதுரு தன் பட்டயத்தை உருவி சேவகர்களைக் கொல்ல முயற்சி செய்தார். “அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு [இயேசுவை] ஓடிப்போனார்கள்” (மத்தேயு 26:56).

இப்பொழுது நாம், இறுதியாக, அந்தப் பதினொரு சீஷர்களின், புதிய பிறப்புக்குக் கடைசியாக வருகிறோம். யூதாஸ் ஏற்கனவே தற்கொலை செய்துக்கொண்டான் மற்றும் அவன் புதிய பிறப்பை ஒருபோதும் அனுபவிக்கவில்லை. உயிர்த்தெழுந்த இயேசுவானவர் மற்ற சீஷர்களையும் சந்தித்தார். அவர் தமது காயங்களை அவர்களுக்குக் காட்டினார்,

“அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்தார்” (லூக்கா 24:45).

அவர்களுடைய மறுபிறப்பு இங்கே நடைப்பெற்றது, இயேசுவானவர் “அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்தார்” (லூக்கா 24:45).

இப்பொழுது யோவான் 20:21-22க்கு திருப்புங்கள். இங்கே சீஷர்களின் புதுபிறப்பு இருக்கிறது. உயிர்த்தெழுந்த இயேசுவானவர் அவர்களிடம் வந்தார்,

“இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினது போல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, அவர்கள்மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” (யோவான் 20:21, 22).

அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள், மற்றும் கடைசியாக அவர்கள் மறுபடியும் பிறந்தார்கள்!

பழைய விமர்சகர்கள் இதை ஒத்துக்கொள்ளுகிறார்கள். நாம் மேத்யு ஹென்றி அவர்களுடைய, மற்றும் குறிப்பாக ஜான் சார்லஸ் அவர்களின் லூக்கா 24:45ன் விமர்சனத்தை படிக்க வேண்டும். டாக்டர் ஜே. வெர்னான் மெக்ஜீ சொன்னார், “நான் உண்மையாக நம்புகிறேன் நமது கர்த்தர் அவர்கள்மீது ஊதி சொன்னார், ‘பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்,’ அவர்களிடம் சொன்ன அந்தப் பொழுதில் அந்த மனிதர்கள் மாற்றப்பட்டார்கள் [மறுபிறப்படைந்தார்கள்]. அதற்கு முன்பாக அவர்கள் தேவனுடைய ஆவியைப் பெற்றிருக்கவில்லை... இயேசு கிறிஸ்து அந்த மனிதர்களுக்குள் நித்திய ஜீவனை ஊதினார்” (J. Vernon McGee, Thru the Bible, note on John 20:22).

டாக்டர் தாமஸ் ஹேல் அவர்களும் இதை மிகவும் தெளிவாக்குகிறார், “சீஷர்களுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியைக் கொடுத்தது மிகவும் முக்கியமான சம்பவமாகும். ஏனென்றால் அப்பொழுதுதான் அவர்கள் மறுபடியும் பிறந்தார்கள்... இப்பொழுதுதான் அவர்கள் மெய்யான மற்றும் முழுமையான விசுவாசத்தைப் பெற்றார்கள். இப்பொழுதுதான் அவர்கள் ஆவிக்குரிய ஜீவனைப் பெற்றார்கள்.” (Thomas Hale, M.D., The Applied New Testament Commentary, note on John 20:22, p. 448).

கிறிஸ்துவின் சீஷர்களின் புதுபிறப்புப்பற்றிய இந்தப் பாடத்தை நான் உங்களுக்குக் கொடுத்ததில் ஒரு சில காரணங்கள் உண்டு.

1. முதலாவது இது சீஷத்துவத்தைத் தொடர்ந்து, புதுபிறப்பைப் பற்றிய நவீன யோசனையைத் திருத்துகிறது. இந்தத் தேற்றம் இன்று நமது எல்லா சபைகளிலும் நடைமுறையில் பற்றியுள்ளது.

2. கிறிஸ்து சீஷர்களை உருவாக்கும் முறையை இது நமக்குத் தருகிறது: முதலாவது நீங்கள் அவர்களுக்குச் சொல்லித் தருகிறீர்கள், பிறகு அவர்கள் மாறுதலடைய நீங்கள் முயற்சிக்கிறீர்கள். சீஷர்களை உருவாக்குவதின் இழக்கப் பட்ட கலை என்ற ஒரு வழிகாட்டிகளின் புத்தகத்தில் கொடுக்கப்பட்டதற்கு இது எதிரானதாகும், The Lost Art of Disciple Making. என்னை பொறுத்தவரையில் இந்தப் புத்தகம் தவறானதாகும். அவர்கள் மறுபடியும் பிறப்பதற்கு முன்பாக சீஷர்களாக இருப்பதற்கு இயேசுவானவர் அவர்களுக்குப் போதித்தார்.


கிறிஸ்து பெரிய கட்டளையில் “சீஷராக்குங்கள்” என்று நமக்குக் கட்டளை கொடுத்தார் (மத்தேயு 28:19, 20 NASB).

“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி (சீஷராக்குங்கள்), பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள், இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்” (மத்தேயு 28:19, 20).

எனது அறிஞரான போதகர், டாக்டர் தீமோத்தேயு லின் சொன்னார்,

“இந்த வினைச்சொல் ‘சீஷர்களாக்கு’ கட்டளையிடும் மனநிலையில் உள்ளது... வேறுவிதமாக சொன்னால் ‘போ’ என்பது கட்டளையல்ல [இங்கே], ஆனால் ‘சீஷர்களாக்கு’ என்பது கட்டளை ஆகும். அந்தப் பெரிய கட்டளையின் பிரதானமான சொல்லடியாகும்” (The Secret of Church Growth, p. 57).

கிறிஸ்து கட்டளையிடுகிறார் “சகல ஜாதிகளுக்கும் உபதேசம்பண்ணுங்கள்” – அந்த வார்த்தையானது எழுத்தளவில் மொழி பெயர்த்தால் “சீஷர்களாக்கு” என்பதுதாக வரும் – W. A. கிரிஸ்வெல். உண்மையாக புதிய அமெரிக்கன் ஸ்டேன்டட் வேதாகமம் இதை இவ்வாறாக மொழி பெயர்த்து இருக்கிறது, “சீஷர்களாக்கு”.

இது முதலாவது முன்னூறு வருட வகுப்புகளில் செயலாக்கப்பட்டது, அங்கே புதிய மக்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பாக சீஷத்துவம் கற்பிக்கப்பட்டது. கிறிஸ்தவ வரலாற்று வல்லுனர், டாக்டர் பிலிப் ஸ்காப், சொன்னார், “இந்தப் போதனைகள் [கால அளவில்] சில நேரங்களில் இரண்டு வருடங்கள் சில நேரங்களில் மூன்று வருடங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது.” ஹிப்பாலிடஸ் என்பவர் ரோமின் பிஷப்பாக கி.பி. 217 முதல் கி.பி. 235 வரை இருந்தார். ஹிப்பாலிடஸ் சொன்னார், “[அவர்கள்] வார்த்தையைக் கேட்பவர்களாக மூன்று வருடம் இருக்கட்டும்” (The Apostolic Tradition of Hippolytus, part II).

இந்தப் புதிய மக்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பாக சீஷத்துவம் இந்தக் கால அளவில் கற்பிக்கப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுலின் போதனைகளில் அப்போஸ்தல நடபடிகளிலிருந்து குறைந்த பட்சமாக இரண்டு உதாரணங்கள் கொடுக்கலாம். பவுலை பர்னபா அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தார்.

“அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடி யிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணி னார்கள்” (அப்போஸ்தலர் 11:26).

இதே காரியத்தைப் பவுல் லீஸ்திரா, இக்கோனியா, மற்றும், மறுபடியுமாக, அந்தியோகியாவில் செய்தார்,

“சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்” (அப்போஸ்தலர் 14:22).

டாக்டர் ஸ்காப் சொன்னார், “சபையானது புறஜாதியருடைய உலகத்தின் மத்தியில் இருக்கிறது... அது சிறப்பான போதகர்கள் [வகுப்புக்கள்] மூலமாக ஞானஸ்நானத்துக்காக [மக்கள்] ஆயத்தப்படுத்த வேண்டியதின் அவசியத்தை அவள் கண்டாள்... அது... அந்த உலகத்துக்கும் அந்தச் சபைக்கும் ஒரு பாலமாகும்... பாலர் நிலையில் உள்ளவர்களை முன்னுக்கு நடத்தி முதிர்ச்சி அடைய செய்வதாகும். அவர்கள் [கற்றுகொள்பவர்கள்] அவிசுவாசிகளாக கருதப்பட வில்லை, ஆனால் பாதி கிறிஸ்தவர்களைபோல [இன்னும் சீஷராகவில்லை]” (History of the Christian Church, volume 2, p. 256). இந்த ஒழுங்குமுறை மிஷனரி பணியிடங்களில் “இன்னும் நடைமுறையில் உள்ளது” என்று டாக்டர் ஸ்காப் சொன்னார் (ibid., p. 255).

நமது காலை கூட்டத்தை சீஷத்துவ வகுப்பாக நாம் மாற்றப்போகிறோம். நமது பிள்ளைகளை உலகத்தில் விட்டிருப்பது நமது சபைகளின் தோல்வி, மற்றும் இளம் மக்களை உலகத்தின் பட்டியலில் விட்டிருப்பது நமது தோல்வி என்று நான் விசுவாசிக்கிறேன், இன்று இளம் மக்கள் புறஜாதியர்களாக, அன்னியர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மையைக் கணக்கிட முடியும் அதை சபைகள் உணரவில்லை, அவர்கள் புதுபிறப்பைப் பெறுவதற்கும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கும் முன்பாக அனுபவத்தில் சீஷர்களாக்கப்பட வேண்டியது அவசியமாகும். தெற்கு பாப்டிஸ்டுகள் 200,000 “அரை கிறிஸ்தவர்களாக” மட்டுமே இருந்து – ஒருபோதும் சீஷர்களாக மாறாத உறுப்பினர்களை ஒவ்வொரு வருடமும் இழந்து கொண்டு இருக்கிறது! ஜான் எஸ். டிக்கர்சன் சொன்னார் இளம் கிறிஸ்தவ சுவிசேஷ பிள்ளைகள் மக்கள் தொகையில் குறைந்து விடுவார்கள் “அவர்கள் 7 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான அமெரிக்கர்கள் ஆவார்கள் – “புதிய சீஷர்கள் உறுவாக்கப்படவில்லையானால்”. (The Great Evangelical Recession, p. 314).

அதுதான் நம்முடைய இலக்கு! கிறிஸ்துவிலிருக்கும் அதிஉன்னதமான சக்தியை இளம் மக்கள் பெற்றுக் கொள்ள உதவி செய்வது நம்முடைய இலக்கு ஆகும். இளம் மக்களை நம்முடைய சபைக்குக் கொண்டுவரவும், அவர்களை இயேசுவின் சீஷர்களாக மாற்றவும், மறுபடியும் பிறக்கவும், அவர்கள் மற்றவர்களை நமது சபைக்குக் கொண்டுவந்து இயேசுவானவரிடம் கற்றுக்கொள்ளவும், அவரை நம்பவும், மற்றும் மறுபடியும் பிறக்க உழைக்கவும் உதவி செய்ய நாங்கள் இங்கே இருக்கிறோம்!

இளம் மக்களே, தெரிந்து கொள்ளபட்டவர்களே, சில கடினமான மற்றும் சவாலான காரியங்களுக்கு நீங்கள் தயாராக இருப்பீர்களா. உண்மையான கிறிஸ்தவத்துக்குச் சவாலாக இருக்க விருப்பமில்லாதவர்கள் தாங்களாகவே களையெடுக்கப்பட்டு வெளியேறுவார்கள். அவர்கள் அப்படி ஆகக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அப்படி ஆவார்கள் என்று நாங்கள் அனுபவத்தில் அறிந்திருக்கிறோம்! அவர்கள் போகும்பொழுது உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. இயேசுவானவர் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள், “அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்”. மறுபடியும் பிறந்த உண்மையான சீஷர்கள் மட்டுமே நிலைத்திருப்பார்கள்!

நமது தேவன் இன்னும் வல்லமையுள்ளவராக ஜீவிக்கிறார் என்பதை நிரூபிக்க நாம் ஒன்றுபட்டு முன்செல்லுவோம். கடந்த காலத்தில் நாம் தவறுகள் இழைத்தோம். ஆனால் நமது தவறுகள் மற்றும் அனுபவங்கள் மூலமாக நாம் லாபம் அடைந்தோம். நமது தோல்விகளை வெற்றியாக மாற்றினோம். ஒரு உறுதியான சீஷர்கள் சபையை உருவாக்க இயலாத இன்றைய தேவதுரோகப் பெலவீனத்தில் நாம் அடுத்த அடியை எடுப்பதன் மூலமாக அதிகமான மற்றும் பெரிய வெற்றியைக் காண்போம். நினைவில் கொள்ளுங்கள், நாம் ஒருபோதும் நிறுத்தமாட்டோம், ஒருபோதும் சோர்ந்து போகமாட்டோம், மற்றும் ஒருபோதும் கைவிட மாட்டோம். நமது நல்ல சபை ஒரு பெரிய சபையாக மாறும் வரைக்கும் நாம் ஒருபோதும் நிறுத்தமாட்டோம் – அது இளம் மக்களுக்கு ஒரு சவால் மற்றும் அவர்களுக்குள் ஒரு வல்லமையான மறுபடியும் பிறந்த சீஷர்களை உண்டாக்குகிறது! உங்கள் பாட்டுத்தாளில் எண் ஆறாம் பாடலை எழுந்து நின்று பாடுங்கள், “நான் ஒரு சிலுவையின் சிப்பாயாக இருக்கிறேனா?” டாக்டர் ஐசக் வாட்ஸ் (1674-1748).

நான் ஒரு சிலுவையின் சிப்பாயாக இருக்கிறேனா,
ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றுகிறவனா,
அவருடைய காரியங்களைச் சொந்தமாக்கிக்கொள்ள பயப்படுகிறேனா,
அல்லது அவருடைய நாமத்தைப் பற்றி வெட்கமடைகிறேனா?

நான் சுகமான மலர் மெத்தையில் ஆகாயத்துக்குச்
சுமந்து செல்லப்பட வேண்டியது அவசியமா,
மற்றவர்கள் இரத்தக்கடலிலே பிரயாணம் செய்து போராடி,
பரிசை வெற்றி கொள்ளும்போது?

நான் எதிர்கொள்ள எந்த எதிரியும் இல்லையோ?
வெள்ளத்தில் நான் தண்டு வலிக்க வேண்டிய அவசியம் இல்லையோ?
தேவன் சார்பாக எனக்கு உதவி செய்ய,
ஒரு கிருபையுள்ள நண்பன் இல்லாத பயனற்ற உலகமோ?

நான் ஆளுகை செய்ய வேண்டுமானால்,
நிச்சயமாக நான் போராட வேண்டும்;
எனது தைரியத்தை வர்த்திக்க செய்யும், கர்த்தாவே.
உமது வார்த்தையின் ஆதாரமாக உள்ள,
கஷ்டங்களை நான் தாங்கி கொள்ளுவேன்,
வேதனைகளை சகித்துக்கொள்ளுவேன்.
(“Am I a Soldier of the Cross?”, Dr. Isaac Watts, 1674-1748).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Am I a Soldier of the Cross?” (Dr. Isaac Watts, 1674-1748).