Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
பாதாளத்தின் வாசற்கதவுகள்மீது முற்றுகை!

STORMING THE GATES OF HELL!
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் by Dr. R. L. Hymers, Jr.

ஜூலை 8, 2018 கர்த்தருடைய நாள் காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, July 8, 2018


உங்கள் வேதாகமத்தை மத்தேயு 16:18க்கு தயவுசெய்து திருப்பிக் கொள்ளுங்கள், அந்த வசனத்தில் இரண்டாவது பகுதியைப் பாருங்கள். அது ஸ்கோபீல்டு வேதாகமத்தில் 1021ஆம் பக்கத்தில் உள்ளது. இயேசுவானவர் சொன்னார்,

“என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்தேயு 16:18ஆ).

வேத விமர்சகர் ஆர். சி. எச். லென்ஸ்கி சொன்னார், “பாதாளத்தின் வாசற்கதவுகள் தன்னுடைய சேனைகளை [பிசாசுகள்] அனுப்பி கிறிஸ்துவின் சபையை முற்றுகையிடும், ஆனால் சபையை விழதள்ள முடியாது” (லென்ஸ்கி அவர்களின், மத்தேயு 16:18ஆ குறிப்பு). ஒருவேளை இது உண்மையான சபையைக் குறிப்பதாகும், கடைசி காலத்தின் சமய கோட்பாடுகளுக்கு அடங்காத சபையைக் குறிப்பதல்ல. சமய கோட்பாடுகளுக்கு அடங்காத சபையைப் பிசாசின் ஆவிகள் ஏற்கனவே விழதள்ளிவிட்டன. வேதாகமம் இதை முன்னுரைத்தது,

“ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிற படி, பிற்காலங்களிலே [நாம் வாழும், இந்தக் கடைசி காலங்களில்] மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்” (I தீமோத்தேயு 4:1).

சாத்தான் மற்றும் அவனுடைய பிசாசுகளின் செயல்பாடுகள் பொய்யான சபையில் அநேகரை தேவனால் கொடுக்கப்பட்ட வேதாகமத்தின் வார்த்தைகளின் “விசுவாசத்தை விட்டு விலகிப்போகும்படி” செய்யும்.

இது II தீமோத்தேயு 3:1-8ல் “கடைசிநாட்களில்” விவரிக்கப்பட்ட பொய்யான சபையை உருவாக்கும், அங்கே அதிகமான சபை உறுப்பினர்கள் இருப்பார்கள்

“துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள் ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியரா யும், தேவபக்தியின் [வெளிப்புற வடிவம்] வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப் பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு” (II தீமோத்தேயு 3:4, 5).

இவ்வாறாக வேதாகமத்தில் இரண்டுவிதமான சபைகள் இருப்பதைப் பார்க்கிறோம் – பொய்யான சபை, மற்றும் மெய்யான சபை. அந்த மெய்யான சபைக்கு மட்டுமே இயேசுவானவர் இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார்,

“என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்தேயு 16:18ஆ).

இன்று அமெரிக்காவில் நாம் பொய்யான சபைகளில் சூழப்பட்டு இருக்கிறோம். பொய்யான சபைகள் லவோதிக்கேயாவில் இருந்த சபைகளைப் போன்றவைகள், அதைப்பற்றி ஸ்கோபீல்டு குறிப்பு “தேவதுரோகக் காலத்தின் இறுதி நிலை” என்பதாக அறிவிக்கிறது. இன்று இருக்கும் அநேக சபைகளின் லவோதிக்கேய தேவதுரோகம் பற்றி கிறிஸ்துவின் விளக்கம் இதோ:

“நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம் பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால்” (வெளிப்படுத்தல் 3:17)

“இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பா யிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப்போடுவேன்” (வெளிப்படுத்தல் 3:16)

பிசாசின் போதனைகளைக் கவனிப்பதன் விளைவாகவும் (I தீமோத்தேயு 4:1) மற்றும் கிறிஸ்தவத்தின் வெளிதோற்றத்தைக் கொண்டிருப்பதால் மட்டுமே (II தீமோத்தேயு 3:4, 5) இந்தக் கடைசி காலத்தின் சமயக் கோட்பாடுகளுக்கு அடங்காத சுவிசேஷ சபைகள் பெருகி இருக்கின்றன. டாக்டர் ஜான் மெக்ஆர்த்தர் சரியாக சொன்னதுபோல, இந்தச் சபை உறுப்பினர்கள் வைராக்கிய வாஞ்சை இல்லாதவர்களாக, மற்றும் “வெதுவெதுப்பானவர்களாக, மாய்மாலக்காரர்களாக, கிறிஸ்துவை அறிந்தவர்களாக சொல்லிக்கொள்ளுவார்கள், ஆனால் அவரை சேர்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள்... இவர்கள் சுய ஏமாற்றம் அடைந்த மாய்மாலக்காரர்கள் [நோயுற்ற] கிறிஸ்தவர்கள்.” டாக்டர் மெக்ஆர்த்தர் கிறிஸ்துவின் இரத்தத்தைப் பற்றி தவறாக நினைத்தாலும், சுவிசேஷ சபைகள் பற்றி சரியாக விவரித்துள்ளார் அனேக சுவிசேஷ கிறிஸ்தவர்கள் “சுய ஏமாற்றம் அடைந்த மாய்மாலக்காரர்கள்”.

இந்த சுவிசேஷ சபைகள் நடைமுறையில் தங்கள் இளம் மக்கள் அனைவரையும் இழந்திருப்பதற்கு இதுதான் காரணம். ஜோனத்தான் எஸ். டிக்கர்சன் அவர்கள் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் அதன் தலைப்பு, பெரிய சுவிசேஷ பின்னடைவு (Baker Books). அவர் சரியான புள்ளி விபரத்தைத் தருகிறார். இன்று 7 சதவீத இளம் மக்கள் மட்டுமே தங்களை கிறிஸ்தவர்களாக உரிமை பாராட்டுகிறார்கள். இந்த இளம் மக்களின் எண்ணிக்கை விரைவில் 7 சதவீதத்திலிருந்து “4 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக போகும் – புதிய சீஷர்கள் உருவாக்கப்படாவிட்டால்” (Dickerson, p. 144).

இன்றுள்ள சபையின் இளம் மக்களின் எண்ணிக்கையில் ஏன் இப்படிப்பட்ட ஒரு பெரிய வீழ்ச்சி? அதனுடைய பிரதான காரணம் அவர்கள் பெரும்பாலான சபை உறுப்பினர்களை “சுய ஏமாற்றம் அடைந்த மாய்மாலக்காரர்களாக” பார்க்கிறார்கள், டாக்டர் ஜான் மெக்ஆர்த்தர் சொன்னதுபோல. பழைய சபை உறுப்பினர்களைக் கெட்டியில்லாத, பெலவீனமான மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள பாவம் நிறைந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாதவர்களாக பார்க்கிறார்கள், அதனால்தான் அந்த வீழ்ச்சி! டாக்டர் டேவிட் எப். வெல்ஸ் அவர்களும் இதை பார்க்கிறார்கள். அதனால்தான் அவர் தமது புத்தகத்தில் எழுதுகிறார், எவான்ஜிலிகல் தியாலஜியில் என்ன நடந்தாலும் அதில்: சத்தியத்துக்கு இடமில்லை? (Eerdmans, 1993). பிரபலமான வேத அறிஞர் டாக்டர் கார்ல் எப். எச். ஹென்றி அவர்களும் இதை பார்த்தார்கள். அவர் சொன்னார்,

“மறுபிறப்பின் [புதிய பிறப்பு] விழிப்புணர்வு இல்லாமல் ஒரு முழு தலைமுறை வளர்ந்து வருகிறது. தரங்கெட்ட ஒரு நாகாரீகத்தில் காட்டுமிராண்டித்தனம் கலக்கிக்கொண் டிருக்கிறது மற்றும் ஊனமுற்ற ஒரு சபையின் மறைவுகளில் ஏற்கனவே மூழ்கிவிட்டது” (Twilight of a Great Civilization, Crossway Books, pp. 15-17).

ஊனமுற்ற ஒரு சபை.” அப்படித்தான் அந்த சுவிசேஷ சபையை டாக்டர் கார்ல் எப். எச். ஹென்றி அவர்கள் அழைத்தார்கள்! “ஊனமுற்ற ஒரு சபை.” பெரிய பிரசங்கி டாக்டர் மார்டின் லியோடு-ஜோன்ஸ் அவர்கள் சொன்னார் “‘கடந்த நூறு ஆண்டுகளாக பயங்கரமான தேவதுரோகம் சபையின் குணாதிசியமாக பெருகிக்கொண்டு வருகிறது” (Revival, Crossway Books, p. 57).

நாம் சபைகளில் நமது எல்லா இளம் மக்களையும் நடைமுறையில் இழந்து வருகிறோம். “புதிய சீஷர்களை உருவாக்க” நாம் முழுமையாக தோற்று வருகிறோம். டாக்டர் வெல்ஸ் சொன்னார், “இந்த சுவிசேஷ [சபை] தனது தீவிரத் தன்மையை இழந்தது.” சுவிசேஷ சபைகள் மென்மையாக, பெலவீனமாக, உள்நோக்கமுள்ளவர்களாக மற்றும் சுயநலமுள்ளவர்களாக இருக்கிறார்கள் – வெளிப்படையாக பேச பயப்படுகிறார்கள் அல்லது பிரகாசமான சீஷத்துவத்துக்கு அழைக்க பயப்படுகிறார்கள். இளம் மக்கள் விருப்பமில்லாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை!

உங்களை ஒரு பெலவீனமான, சுயநலமுள்ள சுவிசேஷகராக மாற்ற நாங்கள் இங்கே இல்லை. இயேசு கிறிஸ்துவின் பிரகாசமான சீஷர்களாக மாறும்படியாக உங்களை அழைக்க நாங்கள் இங்கே இருக்கிறோம்! ஒரு சபையாக அது எங்களுடைய இலக்காக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவில் உள்ள அதிஉயர்ந்த உள்ளார்ந்த ஆற்றலை அடைய இளம் மக்களை ஊக்கப்படுத்துவது எங்களுடைய இலக்காக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவுக்காக மற்றும் அவருடைய ராஜ்ஜியத்தில் தங்கப் பதக்கம் வெற்றி கொள்ளும் வீரர்களாக மாற்ற உங்களை ஊக்கப்படுத்த நாங்கள் இங்கே இருக்கிறோம்! இளம் மக்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், பிரகாசமான புரோடஸ்டன்ட் கிறிஸ்தவத்தை சவால்விட தயாராக இருப்பவர்கள் ஆகும். வல்லமையுள்ள கால்வினிஸ்டிக் கிறிஸ்தவத்தை சவால்விட தயாராக இல்லாதவர்கள் தாங்களாகவே களையெடுக்கபட வேண்டும்! இயேசுவானவர் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள், “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்.”

சுவிசேஷ ஊழியத்தை மெதுவாக குறைப்பதற்கு நேரமில்லை. கடந்த இரவு உணவு முடித்தபிறகு நாங்கள் இங்கே சபையில் “பவுல், கிறிஸ்துவின் அப்போஸ்தலனை” இரவு உணவுக்குப்பின் பார்த்தோம். “பவுல், கிறிஸ்துவின் அப்போஸ்தலன்” கிறிஸ்துவுக்கு உண்மையான சீஷர்களாக இருக்க முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கடந்துவந்த பாடுகள் மற்றும் கஷ்டங்கள் காட்டப்பட்டது. இந்தப் பிற்பகலிலே மற்ற இளம் மக்கள் பிரகாசமுள்ள சீஷர்களாக மாற்ற சுவிசேஷ ஊழியம் செய்ய போகிறோம். கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து, என்ன ஒரு பெரிய நேரம் நமக்கு இருக்க போகிறது. கிறிஸ்து சொன்னார், “பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா.” நம்மை இரட்சிக்க இயேசு கிறிஸ்து ஒரு இரத்தச் சிலுவையிலே மரித்தார். இயேசு கிறிஸ்து நமக்கு ஜீவனைக் கொடுக்க மரித்தோரிலிருந்து சரீர பிரகாரமாக, மாம்சம் மற்றும் எலும்போடு, உயிர்த்தெழுந்தார்!

இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று எனக்குத் தெரியும். ஈஸ்டர் நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அது எனக்குத் தெரியும். நான் இரவிலே தூங்கும்போதும் அது எனக்குத் தெரியும். காலையிலும், மற்றும் நாள் முழுவதும் அது எனக்குத் தெரியும். “அவர் இங்கே இல்லை – அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்!” கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த் தெழுந்தார் என்று எனக்குத் தெரியும் ஏனென்றால் தேவனுடைய வசனம் அப்படி சொல்லுகிறது! இந்த வயதான மனிதனுடைய உதடுகள் மூலமாக இந்தக் காலையிலே அவர் உன்னிடம் வருகிறார். அவர் உன்னிடம் வருகிறார். அவர் உன்னிடம் சொல்லுகிறார் – “நான் என்றென்றுமாக ஜீவிக்கிறேன்.” கிறிஸ்து ஜீவிப்பவராக இருப்பதால் அவர் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். அவர் ஜீவிப்பதால் நீயும் அப்படியே ஜீவிக்கலாம். அவர் என்றென்றும் ஜீவிப்பதால், நீயும் அவருடைய கிருபையினாலே என்றென்றுமாக ஜீவிக்கலாம். கிறிஸ்துவின் உண்மையான சீஷனுக்கு முடிவு இல்லை. இயேசுவோடு நாளைக்குப் பிரகாசமான நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள எங்களோடு வந்து போய்க்கொண்டிரு. அவர் உன்னை தோல்வியுறவிடமாட்டார்! வா, இந்தச் சபையை ஒரு சிறப்பு இராணுவ படைபிரிவாக, கிறிஸ்துவுக்காக மற்றும் அவருடைய ராஜ்ஜியத்துக்காக ஒரு வல்லமை மிக்க படையாக இருக்க எங்களுக்கு உதவி செய்!

ரெவரன்ட் ஜான் கேஹன் 24 வயதுள்ளவர். அவர் ஒரு இயேசுவின் சீஷர். அவர் ஒரு சிலுவையின் சிப்பாய். அவர் கிறிஸ்துவினுடைய ராஜ்ஜியத்தில் தங்கப் பதக்கம் வெற்றி கொள்ளும் வீரர். அவர் இன்று இரவு 6.15க்கு பிரசங்கிக்கபோகும் போதனையை நான் வாசித்தேன்! நான் ஒருபோதும் வாசிக்காத மிகவும் எழுச்சியூட்டும் போதனைகளில் அதுவும் ஒன்றாகும். வாருங்கள் மற்றும் போதகர் ஜான் உங்களை எழுச்சியூட்டட்டும் அவரோடு நீங்களும் தேவனுக்காக இந்தச் சபையை ஒரு கலங்கரை விளக்கமாக, மற்றும் சாத்தானுடைய சேனைகளுக்கு விரோதமாக ஒரு சேனையாக மாறுங்கள்!

எழுந்திருங்கள், தேவனுடைய மக்களே!
தேவனுக்காக குறைவான காரியங்களைச் செய்யும்;
ராஜாதி ராஜாவை சேவிக்க
இருதயத்தை மனதை ஆத்துமாவை மற்றும் பெலத்தை கொடுங்கள்.

எழுந்திருங்கள், தேவனுடைய மக்களே!
இந்த சபை உங்களுக்காக காத்திருக்கும்,
அவளது பெலன் அவளுடைய பணிக்கு சமனற்றது;
எழுந்திருங்கள், மற்றும் அவளை பெரிதாக்குங்கள்!
(“Rise Up, O Men of God” by William P. Merrill, 1867-1954;
      altered by the Pastor).

இது உங்கள் பாட்டுத்தாளில் எண் 1ல் உள்ளது. இதை எழுந்து நின்று பாடுங்கள்!

எழுந்திருங்கள், தேவனுடைய மக்களே!
தேவனுக்காக குறைவான காரியங்களைச் செய்யும்;
ராஜாதி ராஜாவை சேவிக்க
இருதயத்தை மனதை ஆத்துமாவை மற்றும் பெலத்தை கொடுங்கள்.

எழுந்திருங்கள், தேவனுடைய மக்களே!
இந்த சபை உங்களுக்காக காத்திருக்கும்,
அவளது பெலன் அவளுடைய பணிக்கு சமனற்றது;
எழுந்திருங்கள், மற்றும் அவளை பெரிதாக்குங்கள்!

நீங்கள் அமரலாம்.

ஆமாம், லவோதிக்கா சபையைபோல அவ்வளவு பெலவீனமான மற்றும் தேவதுரோகமுள்ள சபைகளாக சுவிசேஷ சபைகள் இருக்கும் காலத்தில் நாம் வசிக்கிறோம். ஆமாம், அவர்கள் நடைமுறையில் தங்கள் இளம் மக்களை எல்லாம் இழந்து வருகிறார்கள். ஆமாம், தங்களோடு படையாக சேர்ந்துகொள்ள மற்ற இளம் மக்களை ஊக்கப்படுத்த அவர்களால் முடியாது. ஆமாம், அவர்கள் மென்மையாக, வலுவிழந்த மற்றும் விருப்பமற்றவர்களாக இருக்கிறார்கள். ஆமாம், நான் உங்களைப்போல இளமையாக இருந்தபொழுது அவர்கள் “என்னை எப்படி திருப்பினார்கள்” என்று நான் நினைவு கூறுகிறேன். நான் அவர்களுக்கு விரோதமாக, மார்டின் லூத்தர் கலகம் செய்ததைபோல, பரிசுத்த கலகம் செய்தேன். மற்றவர்கள் மறுமலர்ச்சியை மறந்துவிட்டார்கள். அவர்கள் தூங்கட்டும். நீங்கள் நமது சபைக்கு வந்து இங்கே ஒரு புதிய மறுமலர்ச்சியைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உதவி செய்யுங்கள்! இப்பொது மறுமலர்ச்சி! நாளைக்கு மறுமலர்ச்சி! என்றென்றும் மறுமலர்ச்சி!

லவோதிக்கா சபையைபோல தேவதுரோகமுள்ளவர்கள் மத்தியில் பிலதெல்பியா சபையைப்போல ஒரு சபையை உடையவர்களாக நாம் இருக்க முடியுமா? பிலதெல்பியா சபைக்கு கிறிஸ்து சொன்னார்,

“உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியி னாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்ட மாட்டான்” (வெளிப்படுத்தல் 3:8).

கிறிஸ்துவின் அடிப்படையைக் கொண்ட இளம் மக்களால் நிறைந்த ஒரு சபையை உடையவர்களாக நாம் இருக்க முடியுமா? அது இழக்கப்பட்ட ஒரு காரியம் என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். அது முடியாதது என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். தலைவருக்குரிய பிரசங்கத்தை எழுதும் பேட்ரிக் ஜே. புச்சனான் சொன்னதை நான் விரும்புகிறேன், “இழக்கப்பட்ட காரியங்கள் மட்டுமே மதிக்க தகுதியானவைகள்”. இன்று இரவு திரும்பி வந்து 6:15 மணிக்கு எங்களோடு விருந்து சாப்பிடுங்கள். இரவு திரும்பி வாருங்கள் போதகர் ஜான் உங்களை எழுச்சியூட்டட்டும் அவரோடு நீங்களும் தேவனுக்காக யுத்தத்தில் சேர்ந்து கொள்ளுங்கள் – இது மெய்யாகவே ஒரு இழக்கப்பட்ட காரியமல்ல. அப்படி அது காணப்படலாம், ஆனால் வெற்றி நிச்சயம். கிறிஸ்து சொன்னார், “இந்த கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” “பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” பாதாளத்தின் வாசல்கள் என்பது மரணத்தின் வாசல்கள். பாதாளத்தின் வாசல்கள் நம்மை நிறுத்த முடியாது ஏனென்றால் நமது கர்த்தராகிய கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார்! அவர் ஜீவிக்கிரபடியினால் “பாதாளத்தின் வாசல்கள்” நமக்கு விரோதமாக வெற்றிகொள்ள முடியாது!” ஆமென். இன்று இரவு திரும்பி 6:15 மணிக்கு வாருங்கள். பாதாளத்தின் வாசல்கள் நமக்கு விரோதமாக வெற்றிகொள்ள முடியாது!

நான் டாக்டர் பிரான்சிஸ் ஏ. ஸ்காயிப்பர் அவர்களின் சவால் வார்த்தைகளோடு முடிக்கிறேன். டாக்டர் ஸ்காயிப்பர் ஒரு பெரிய வேதவல்லுனர், மற்றும் நமது காலத்தின் உண்மையான ஒரு தீர்க்கதரிசி ஆகும். அவர் சொன்னார், “சுவிசேஷ சபை உலகப்பிரகாரமானதாகவும் மற்றும் ஜீவனுள்ள கிறிஸ்துவுக்கு உண்மையில்லாததாகவும் இருக்கிறது... நான் உங்களிடம் சவால்விடுகிறேன். நான் கிறிஸ்தவ மூலாதாரமானவர்களை அழைக்கிறேன், குறிப்பாக இளைய கிறிஸ்தவ மூலாதாரமானவர்களை அழைக்கிறேன், சபையில் தவறானவைகள் மற்றும் அழிவுக்குரியவைகளுக்கு, நமது நாகாகரீகம், மற்றும் அந்த நிலைகள் அனைத்துக்கும் எதிராக அன்போடு நிற்பதற்காக. (The Great Evangelical Disaster, pp. 38, 151).

உங்கள் பாட்டுத்தாளில் எண் 2ம் பாடலை எழுந்து நின்று பாடுங்கள். இது மார்டின் லூத்தர் அவர்களின் மறுமலர்ச்சி பாடல்! உங்களால் முடிந்த வரையிலும் சத்தமாக பாடுங்கள்!

நம்முடைய தேவன் வல்லமையான ஒரு அறனாகும்,
ஒருபோதும் தவறாத ஒரு பாதுகாப்பாகும்,
   வெள்ளம் போன்ற சாவுக்குரிய இடையூறுகள்,
   பெருகுவதன் மத்தியில் அவரே நம்முடைய உதவியாளராகும்.
நமது பழங்கால சத்துரு நமக்கு
ஆபத்து விளைவிக்க இன்னும் தேடும்பொழுது;
   அவனது சூழ்ச்சி மற்றும் வல்லமை பெரியவைகள்,
   மற்றும், கொடிய வெறுப்போடு ஆயுதம் அணிந்தவன்,
அவனுக்கு சமமானவன் பூமியில் ஒருவனுமில்லை.

பிசாசுகள் நிறைந்த இந்த உலகத்தில், நம்மை பயப்படுத்தி,
செயல்பட முடியாமல் செய்தாலும்,
   நாங்கள் பயப்படோம், காரணம் தேவன் எங்கள் மூலமாக
   அவரது சத்தியம் வெற்றி கொண்டாட அவர் சித்தமாக இருக்கிறார்.
கொடிய அந்தகார பிரபு வந்தாலும் –
நாங்கள் அவனுக்குப் பயந்து நடுங்க மாட்டோம்;
   அவனது கோபத்தை நாம் சகிப்போம், இதோ!
   அவனது அழிவு நிச்சயம்,
ஒரு சிறிய வார்த்தை அவனை விழவைக்கும்.

அந்த வார்த்தை பூமியின் வல்லமைகளுக்கெல்லாம் மேலானது –
அவைகளுக்கு நன்றி செலுத்த முடியாது – அது நிலைத்திருப்பது;
   நமது பக்கத்தில் இருக்கும் அவர் மூலமாக
   ஆவியும் வரங்களும் நம்முடையவைகள்.
நல்லவைகளும் இனத்தவர்களும் போனாலும்,
இந்த அழியும் வாழ்வும் போனாலும்;
   இந்த சரீரத்தை அவர்கள் கொன்றாலும்:
   தேவசத்தியம் இன்னும் நிலைக்கும்,
தேவனுடைய ராஜ்ஜியம் என்றென்றும் உள்ளது.
(“A Mighty Fortress Is Our God,” Martin Luther, 1483-1546).

போதகர் ஜான் அவர்களே, தயவுசெய்து எங்களை ஜெபத்தில் நடத்துங்கள் மற்றும் ஆகாரத்துக்காக நன்றி செலுத்துங்கள்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “A Mighty Fortress Is Our God” (Martin Luther, 1483-1546).