Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




சிலுவையின் கிறிஸ்து

THE CHRIST OF THE CROSS
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
ஜூன் 10, 2018 கர்த்தருடைய நாள் காலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
ரெவரண்ட் ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, June 10, 2018

“அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப் படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண் டிருந்தால், அதினாலே இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங் களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:1-3).


இது அப்போஸ்தலனாகிய பவுலின் தெளிவான மற்றும் அடக்கமான கிறிஸ்துவ சுவிசேஷத்தின் வாக்குமூலமாகும். “சுவிசேஷம்” என்ற வார்த்தைக்கு “நற்செய்தி” என்று அர்த்தமாகும். பவுல் கொரிந்து சபைக்கு சுவிசேஷத்தின் நற்செய்தியை பிரசங்கித்தேன் என்று சொன்னார். அவர்கள் சுவிசேஷத்தினால் இரட்சிக்கப்பட்டார்கள், இல்லையானால் அவர்கள் ஒரு பொய்யான மாறுதலைப் பெற்றிருந்திருப்பார்கள், “மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே” (I கொரிந்தியர் 15:2). அதன்பிறகு அவர்களுக்கு அறிவித்த நற்செய்தியைத் திரும்ப சொல்லுகிறார். இந்த சுவிசேஷத்துக்கு மூன்று எளிமையான கருத்துக்கள் உள்ளன: (1) “வேத வாக்கியங்களின்படி, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்.” (2) “அவர் அடக்கம் பண்ணப்பட்டார்.” (3) “அவர் வேத வாக்கியங்களின்படியே, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.” இதுதான் சுவிசேஷமாகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உண்மையான சுவிசேஷ பிரசங்கிகள் பிரசங்கித்து வந்த நற்செய்தி இதுவாகும். நான் நியமனம் பெற்றபொழுது, என்னுடைய நியமன சான்றிதழ் “சுவிசேஷ ஊழியம்” என்று சொன்னது. அதன்பொருள் நான் சுவிசேஷ ஊழியத்திற்கு நியமிக்கப்பட்டவன் அல்லது ஏற்படுத்தப்பட்டவன் அதாவது பிரதானமாக சுவிசேஷத்தை பிரசங்கிப்பதாகும். “சுவிசேஷ ஊழியத்தில்” நான் செய்ய வேண்டிய பிரதானமான வேலை கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலை நற்செய்தியாக அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு போதகரும் அதற்காகதான் அழைக்கப்பட்டார்கள், நியமிக்கப்பட்டார்கள், மற்றும் அதை செய்ய பிரித்தெடுக்கப்பட்டார்கள். மற்றும் பவுல் சொன்னார், “உங்களுக்கு நான் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் தெரியப்படுத்துகிறேன்” (I கொரிந்தியர் 15:1). ஆனால் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதை பற்றி நான் உங்களுக்கு அநேக காரியங்களைச் சொல்ல வேண்டியது அவசியமாகும்.

I. முதலாவதாக, அநேக போதகர்கள் தங்கள் பிரசங்கத்தில் சுவிசேஷத்தை மையமாக கொள்ளுவதை விட்டு வேறு சிலவற்றை செய்கிறார்கள்.

அரசியலை பிரசங்கிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய போதனைகள் எப்படியிருந்தாலும் அவை அரசியலின் எல்லையின் அடிபடையில் இருக்கும். இப்படிப்பட்ட பிரசங்கிகள் இரட்சிப்பை முக்கியப்படுத்தமாட்டார்கள் ஏனென்றால் அது அவசியமில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் வெறும் அரசியல்வாதிகள் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பாக, நமது போதகர் டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள், உறுப்பினர்களாகயிருந்த சீன சபையில், ஒரு இளம் மனிதன், போதகர் டாக்டர் லின் வியட்நாம் போருக்கு விரோதமாக பிரசங்கிக்க வேண்டும் என்று நினைத்தான். இறுதியாக அவன் அநேக இளம் மக்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு சபையைவிட்டுப் போனான். அவர்கள் லாஸ் ஏஞ்சல்சின் ஒரு துணை நகரமான, பாசாடானா என்ற இடத்திலிருந்த ஆள் செயின்ஸ் எபிஸ்கோபால் சபைக்குப் போனார்கள். அந்தச் சபை மிகவும் தற்காலச் சபையாக கருதப்பட்டது. அதன் போதகர், டாக்டர் ஜார்ஜ் ராகாஸ் அவர்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வியட்நாம் போருக்கு விரோதமாக மற்றும் மற்ற அரசியல் தலைப்புகளைப்பற்றி பேசினார். ஆனால் அதன்பிறகு அந்த இளம் மக்கள் அரசியல் பேச்சைவிட வேறொன்றும் இல்லாததால் சிறிது காலத்துக்குள் சோர்ந்து போனார்கள். இறுதியாக, அவர்கள் அனைவரும் அந்தச் சபையைவிட்டு உலகத்துக்குத் திரும்பி போய்விட்டார்கள். இப்பொழுது டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்குத் தெரிந்தவரையில் ஒருவரும் சபைக்குப் போவதில்லை. இதேப்போலவே “மெயின்லைன்” பிரிவுகள் என்றழைக்கப்படுபவர்கள் அனைவருக்கும் சம்பவிக்கிறது. அரசியல் பிரசங்கிக்கும் இடது இறக்கை ஒருபோதும் மக்களைப் பிடித்து வைக்க முடியாது. ஒவ்வொரு மெயின்லைன் சபைகளும் பத்தாயிரக்கணக்கான, மற்றும் மில்லியன் கணக்கான, உறுப்பினர்களை கடந்த சில பத்து ஆண்டுகளில் இழந்துவிட்டார்கள், அதிகபடியாக அவர்களுடைய போதனைகள் அரசியல் மற்றும் சமூகத்தை அடிப்படையாக கொண்டிருந்ததே காரணமாகும்.

சிலருடைய பிரசங்கங்கள் மனோத்தத்துவத்தை நோக்கியதாக இருக்கின்றன. அவர்களுடைய சுய உதவி போதனைகள் ஜோயல் ஓஸ்டீனை போல இருக்கிறது. அவர்கள் சில நேரங்களில் ஒரு வேத வசனத்தை தூக்கி போடுவார்கள், ஆனால் அவர்களுடைய போதனையின் அதிகமானவை வேதாகமத்தை மையமாக கொண்டதாக இருக்காது. டிவியில் ஓப்ரா வின்ப்ரே மற்றும் டாக்டர் டுரு போன்றவர்களின் பிரசங்கங்கள், நன்றாக இருப்பது எப்படி மற்றும் வெற்றிக்கரமாக இருப்பது எப்படி என்ற தலைப்புகளில் இருக்கும். ஒருநாள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரோம கத்தோலிக்க பூசையில் கலந்து கொண்டு மற்றும் ஜோயல் ஓஸ்டீனை டிவியில் கவனிக்கும் ஒரு செவிலியரிடம் பேசினார். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் மருத்துவம் பார்த்த ஒரு மருத்துவமனையில் வேலை செய்த அவள் ஒரு பிலப்பைனா செவிலியராகும். ஒவ்வொரு நேரத்திலும் டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் பார்த்தபொழுதெல்லாம் அவளுடைய முகத்தில் ஒரு முகச்சுளிவு மற்றும் சோகம் காணப்பட்டது. அவர் சில நகைசுவைகளைச் சொன்னார், ஆனாலும் அவளை அவரால் சிரிக்க வைக்க முடியவில்லை. இறுதியாக அவளுடைய மதத்தை பற்றி அவர் கேட்டபொழுது, அவள் பூசைக்குப் போவதாக அவரிடம் சொன்னார், மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஜோயல் ஓஸ்டீனை கவனிப்பதாகவும் சொன்னாள், ஏனென்றால் அவர் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதை போதிக்கிறார்! அப்படிப்பட்ட பிரசங்கிகள் மக்களுக்கு நல்லதாக உணர்வதை பிரசங்கிக்கிறார்கள், ஆனால் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள், மற்றும் நித்தியமான ஆத்துமாக்களுக்கு இரட்சிப்பைப் பற்றி குறைவாக அல்லது குறிப்பிடுவதே இல்லை!

மூன்றாவதாக, வேதாகமத்தை வசனம் வசனமாக போதிப்பவர்கள் இருக்கிறார்கள். வேதாகமத்தில் அநேக பாடங்கள் இருக்கிற காரணத்தால், இந்த மனிதர்கள் எப்பொழுதும் சுற்றி குதிப்பவர்கள், தங்கள் போதனையில், ஒரு யோசனையிலிருந்து மற்றதற்குத் தாவுவார்கள். இன்று இப்படிப்பட்ட போதனைகளை அதிகமான தற்காத்துக்கொள்ளும் போதகர்கள் செய்கிறார்கள். ஆனால் இது அதிக அளவு பயனற்றதாக இருக்கும். இவை எப்பொழுதும் கிட்டதட்ட அநேக யோசனைகள் மற்றும் எண்ணங்கள் நிறைந்திருக்கும் அது மக்களின் வாழ்க்கையை மாற்றாது. எனது தகப்பனார், டாக்டர் கேஹன், தமது இரட்சிப்புக்கு முன்பாக, அநேக மாதங்களாக டாக்டர் மெக் ஆர்த்தரின் சபைக்குச் சென்றார். டாக்டர் மெக் ஆர்த்தர் உற்சாகமான விளக்கத்தை கொடுப்பவர், ஆனால் டாக்டர் கேஹன் இரட்சிப்பை தேடும்படியாக நோக்கத்தை உண்டாக்கவில்லை. அவர் ஒரு கிறிஸ்தவராக வேண்டுமென்று அதிக பலமான ஆவல் உள்ளவராக இருந்தாலும், அவர் இரட்சிக்கப்படாதவராகவே சபைக்கு வந்து போய்கொண்டு இருந்தார். வசனத்துக்கு அடுத்து வசனம் போதிக்கும் சபைகளின் பொதுவான மையக்கருத்து வேத ஆராய்ச்சி மற்றும் அதன் நோக்கம் பிரசங்கம் ஆகும். வேதாகமத்தின் கிறிஸ்து மையமாக இருப்பதற்குப் பதிலாக, வேதாகமம் மையமாக இருக்கும். இது சென்டாமினிசம் என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சபைகளில் அநேக மக்கள் குளிர்ந்த நிலையில் இருப்பார்கள், ஆனால் பழங்கால பரிசேயர்களைப்போல, கூர்மையான அறிவுள்ளவர்களாக இருப்பார்கள்.

இறுதியாக, “ஆராதனை” என்று பெயரளவில் அழைக்கப்படுவதை நோக்கி இருப்பவர்கள். இதற்கு அநேக வித்தியாசமான முருக்கு மற்றும் திருப்புத் தேவைப்படும். டாக்டர் ஹைமர்ஸ் மற்றும் அவருடைய நண்பரான போதகர் ஒருவரோடு பார்வையாளராக மூர்க்கமான “ஆராதனை” கூட்டத்துக்குச் சென்றார்கள், அங்கே மக்கள் சிங்கத்தைப் போல கெர்ச்சித்தார்கள் மற்றும் ஒருவரை ஒருவர் பூரிக் கொண்டார்கள், மற்றவர்கள் கத்தினார்கள் மற்றும் கூண்டில் அடைக்கப்படாத பிசாசுகளைப் போல தரையிலே உருண்டார்கள். மற்றொரு “ஆராதனை” கூட்டத்தில் டாக்டர் ஹைமர்ஸ், அவரது மனைவி மற்றும் மகன்கள் கவனித்தபொழுது அவர்கள் சிரித்தார்கள் மற்றும் அவர்களாகவே தரையிலே முகங்குப்புற விழுந்து விக்கிரங்களை பணிந்துகொண்டார்கள். அவர்கள் ஒரு பித்தர் காப்பகத்தில் இருந்ததை போல அந்த இடத்தை உணர்ந்தார்கள்! மற்றொரு இடத்தில், ஒரு கிறிஸ்துவ கல்லூரியில், பெண்கள் வேசிகளைப் போல நடனம் ஆடினார்கள், அப்பொழுது ஒரு எந்திரத்திலிருந்து சிவப்பான புகை வந்துகொண்டிருந்தது மற்றும் இசை அதற்கேற்றபடி இசைத்துக் கொண்டிருந்தது. மற்றவர்கள், குறைவான தீக்கொழுந்து நிறமுள்ள “ஆராதனை” கூட்டத்தில் மணிக்கணக்காக ஒரே பல்லவியைத் திரும்ப திரும்ப பாடினார்கள் மற்றும் அவர்கள் ஏறக்குறைய வசீகரிக்கப்பட்டவர்களாகவே காணப்பட்டார்கள். அப்படிப்பட்ட கூட்டங்களில் மெய்யான பிரசங்கத்துக்குக் குறைவான நேரமே கொடுக்கப்படும். இந்தச் சபைகளில், கிறிஸ்துவுக்கு முதலிடம் கொடுக்கப்படமாட்டாது என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை!

இந்தக் கூட்டங்களில் அடிக்கடி சொல்லப்படும் “கிறிஸ்து” உண்மையான கிறிஸ்துவே அல்ல. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் நோக்கம் ஒருவருடைய உணர்ச்சிகளுக்குக் கீழாக மாற்றப்பட்டது. டாக்டர் மைக்கல் ஹார்டன் தம்முடைய நுட்பமான ஆராய்ச்சி புத்தகமான, கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவம், என்ற நூலில் அவர் சொன்னார்,

     இயேசு கிறிஸ்து மூலமாக தேவனோடு தனிப்பட்ட உறவுக்கொள்ளுவதை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் வரையிலும், சுயத்தோடு இருப்பதை தவிர, அங்கே அதிகமான ஒரு உறவு இருப்பதாக காணப்படாது... இயேசு மெய்யாகவே என்னுடைய ஈகோவின் பலிபீடமாக மாறுகிறார் (Michael Horton, Ph.D., Baker Books, 2008, p. 43).

ஒரு இளம் மனிதன் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களை சந்தித்து சொன்னான், “எனக்கு வேதாகமம் அல்லது சபை தேவையில்லை. எனக்குக் கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவு இருக்கிறது, மற்றும் எனக்குத் தேவையானது அதுதான்”. இன்று அநேகருடைய பிரசங்கங்கள் அப்படிப்பட்ட மக்களை உருவாக்குகிறது, தங்களுடைய சொந்த எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள்தான் கிறிஸ்து என்று விசுவாசிக்கிறார்கள். அது வேறொரு இயேசு! அதுதான் ஒரு பொய்யான கிறிஸ்து! நம்முடைய பாடத்தில் பவுல் சொல்லுவது அந்தச் சுவிசேஷம் அல்ல! அந்தவிதமான நினைவுகள், மற்றும் மற்ற பொய்யான யோசனைகள், அநேக போதகர்கள் சுவிசேஷத்துக்குப் புறம்பான சில காரியங்களை தங்கள் பிரசங்கத்தில் நுழைக்கிறார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருவன பற்றி பேசினார் “நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷம்” (II கொரிந்தியர் 11:4). “வேறொரு சுவிசேஷம்” இந்த கருத்தை மையமாக கொண்டுதான் நான் எல்லாவற்றையும் பேசினேன். நமது பாடத்தில் பவுல் சொன்னார்.

“நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்பு வித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:3).

அதுதான் இந்த சுவிசேஷம்!

II. இரண்டாவதாக, கிறிஸ்துவின் சிலுவை சுவிசேஷத்தின் மையமாகும்.

இதுவரையிலும் நான் குறிப்பிட்ட எல்லாவிதமான பிரசங்கங்களிலும், கிறிஸ்துவின் சிலுவை மையமாக இல்லை – பிரதானமான காரியமாக இல்லை – கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாக இல்லை. டாக்டர் W. A. கிறிஸ்வெல் சொன்னார்,

     கிறிஸ்துவின் மரணத்தை அந்தச் செய்தியிலிருந்து எடுத்துவிடு... வேறு ஒன்றும் மீதியாக இருக்காது. பிரசங்கியிடம் இனிமேலும் “நற்செய்தி” இருக்காது, நமது பாவங்களுக்கு மன்னிப்பின் சுவிசேஷம் இருக்காது... அவைகள் என்ன... அவ்விதமான கிறிஸ்தவம் புதிய ஏற்பாட்டின் கிறிஸ்தவமா? சிலுவையின் கிறிஸ்தவம் தான் சந்தேகமில்லாததாகும். (W. A. Criswell, Ph.D., In Defense of the Faith, Zondervan Publishing House, 1967, p. 67).

அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்,

“நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக” (கலாத்தியர் 6:14).

“கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார்.” பவுலின் பிரசங்கத்தில் அதுதான் பிரதான பாடமாக இருந்தது. உண்மையாக, அவர் கொரிந்துவில் இருந்த சபைக்குச் சொன்னார், “இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்” (I கொரிந்தியர் 2:2). இது கிறிஸ்தவத்தின் வேதாகமாக இருந்தால், இதுவே கிறிஸ்தவத்தின் சிலுவையாகும். பெரிய ஸ்பர்ஜன், “பிரசங்கிகளின் இளவரசன்,” சொன்னார், “சுவிசேஷத்தின் இருதயம் மீட்பு ஆகும், மீட்பின் சாராம்சம் கிறிஸ்து சிலுவையிலே நமக்குப் பதிலாக செய்த தியாகபலி ஆகும்.”

இன்று அநேக சபைகள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் அடையாள சின்னமாக ஒரு புறாவை உபயோகப்படுத்துகிறார்கள். எனக்கு அது ஒரு தவறாக காணப்படுகிறது. புறா பரிசுத்த ஆவியானவரைக் குறிப்பதாகும். ஆனால் சுவிசேஷ செய்தியில் பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தின் மையமான நபர் அல்ல. யோவான் பதினாராம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவியானவரைப் பற்றி இயேசுவானவர் சொன்னார் “அவர் சுயமாய் பேசமாட்டார்” (யோவான் 16:13). மறுபடியுமாக, இயேசு சொன்னார், “அவர் என்னை மகிமைப்படுத்துவார்” (யோவான் 16:14). பரிசுத்த ஆவியானவரின் வேலை தம் பக்கமாக கவனத்தை ஈர்ப்பது அல்ல, ஆனால் கிறிஸ்துவுக்கு மகிமையை கொண்டு வருவதாகும். அதனால் பரிசுத்த ஆவியை மையச்செய்தியின் நோக்கமாக கொண்டிருக்கும் சபை மெய்யான வேதாகமச் சபை அல்ல. நம்முடைய எல்லா ஊழியத்திலும் மற்றும் நமது எல்லா பிரசங்கத்திலும் கிறிஸ்துவுக்குப் பிரதான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார். அவர் சொன்னார் கிறிஸ்து

“...சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். [அதாவது எல்லாவற்றிலும் அவருக்கு உயர்ந்த ஸ்தானம் இருக்க வேண்டும்]. சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத் தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்தி லுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” (கொலோசெயர் 1:18-20).

கிறிஸ்துவின் சிலுவையின் இரத்தத்தினால் மட்டுமே, நமக்குப் பாவ மன்னிப்பு உண்டு, “அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே” – மற்றும் தேவனோடுகூட சமாதானம் பெற்றிருக்கிறோம்!

சுத்திகரிப்பின் வல்லமைக்காக நீ இயேசுவோடு இருந்திருக்கிறாயா?
   ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் நீ கழுவப்பட்டு இருக்கிறாயா?
இந்த நேரத்தில் நீ அவரது கிருபையை முழுதும் நம்பி இருக்கிறாயா?
   ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் நீ கழுவப்பட்டு இருக்கிறாயா?
இரத்தத்தில் நீ கழுவப்பட்டு இருக்கிறாயா,
ஆட்டுக்குட்டியின் ஆத்தும சுத்தி இரத்தத்தில்?
   உனது உடைகள் கறையில்லாமல் இருக்கிறதா?
   அவை பனிகட்டிபோல வெண்மையாக இருக்கிறதா?
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் நீ கழுவப்பட்டு இருக்கிறாயா?
(“Are You Washed in the Blood?”, Elisha A. Hoffman, 1839-1929).

ஓ! இந்தக் குருதியோட்டம் விலையேறப்பெற்றது
   அது என்னை பனிகட்டியிலும் வெண்மையாக்குகிறது:
வேறெந்த ஓட்டத்தையும் நான் அறியேன்,
   இயேசுவின் இரத்தத்தை தவிர வேறொன்றும் இல்லை.
(“Nothing But the Blood” by Robert Lowry, 1826-1899).

“நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்பு வித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக் கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்…” (I கொரிந்தியர் 15:3).

டாக்டர் கிறிஸ்வெல் சொன்னார்,

     “முதலாவதாக” என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன? அதனுடைய முக்கியத்துவத்தைபோல அவருடைய குறிப்பு நேரத்தோடு அவ்வளவாக செயல்படவில்லை... கிறிஸ்துவின் மரணத்தின் [பாவியின் ஸ்தானத்தில்] மூலமாக நமது பாவங்கள் பதிலீடாக செய்யப்பட்டது என்ற உபதேசம் கிருபையின் சாவிகல்லாகும், சுவிசேஷத்தின் இருதயமாகும். அவ்வளவு உயர்ந்ததாக வேறு எந்தச் சத்தியமும் நிற்கவில்லை... பரிசுத்த வேதத்தின் பெரிய உபதேசங்கள் எல்லாம் சிலுவைக்கு நடத்துகின்றன.
     சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜனிடம் ஒரு சமயம் ஒரு திறனாய்வாளர் சொன்னார், “உங்களுடைய போதனைகள் எல்லாம் ஒன்றுபோலவே ஒலிக்கிறதே,” அதற்கு உலக புகழ்பெற்ற லண்டன் பிரசங்கி சொன்னார், “ஆமாம், என்னுடைய பாடத்தை நான் வேதத்தின் எங்கிருந்தும் எடுக்கிறேன் மற்றும் சிலுவைக்கு ஒரு தேனீகோடு [நேராக போவது] உண்டாக்குகிறேன்.” பிராயசித்தபலி இல்லாமல் மன்னிப்பு இல்லை; இரத்தம் சித்துதல் இல்லாமல் தண்டனை குறைப்பு இல்லை; கடனுக்குக் கிரயம் செலுத்தாமல் ஒப்புறவு இல்லை...
     கிறிஸ்துவின் பாவநிவாரண பலி மரணத்தை பிரசங்கித்தல் சென்றடையும் இடமாகும், அதுவே புதிய ஏற்பாட்டு உபதேசத்தின் தீர்மான முடிவு ஆகும். இது மற்ற எல்லா மதங்களிலிருந்தும் நமது நம்பிக்கையை வித்தியாசப்படுத்துகிறது. கிறிஸ்தவ செய்தி குறிப்பிடத்தக்கது மீட்பின் செய்தியாகும். அதன் அடிப்படை நோக்கம் மக்களைப் பாவ அடிமைத்தனத்திலிருந்து மற்றும் நியாயத்தீர்ப்பிலிருந்து மீட்பதாகும்... இது முதலாவதாக மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மீட்பின் சுவிசேஷமாகும், கிறிஸ்துவின் நிமித்தமாக தேவன் நம்மை மன்னிக்கும் நற்செய்தியின் ஒரு அறிவிப்பாகும். (W. A. Criswell, Ph.D., In Defense of the Faith, ibid,. pp. 68-70).

III. மூன்றாவதாக, சிலுவையின் கிறிஸ்து நம்மை பாவங்களிலிருந்து இரட்சிக்கிறது.

முஸ்லீம்கள் இயேசுவை விசுவாசிக்கிறார்கள் – ஒருவிதத்தில். அவர்கள் அவரை “ஈசா” என்று அழைக்கிறார்கள். அவர் ஒரு கன்னியினிடத்தில் பிறந்தவர் என்றும் குறான் சொல்லுகிறது. அவர் பரலோகத்துக்கு ஏறிப்போனார் என்றும் அது சொல்லுகிறது. அது போதும் என்று சில முட்டாள் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் குறானின் இயேசுவாகிய “ஈசா”வை விட்டு திரும்பி போகும் நுற்றுக்கணக்காண முகமதிய உலக வாலிப மக்கள் உண்டு. கடந்த காலத்தைவிட இன்று அவர்களில் அநேகர் வேதாகமத்தின் இயேசுவிடம் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்தவத்தின் இயேசுவை நம்புவதால் அவர்கள் ஏறக்குறைய எப்பொழுதும் துன்பங்கள் மற்றும் பாடுகளின் ஊடாக செல்லுகிறார்கள். நமது இயேசுவை நம்புவதால், அவர்கள் பாடுபடுகிறார்கள், மேலும் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் ஏன்? ஏன் என்று நான் சொல்லுகிறேன்! குறானின் இயேசு நமது பாவங்களுக்காக சிலுவையிலே மரிக்கவில்லை – அதனால்தான் அவர்கள் அப்படி பாடுபடுகிறார்கள்! நம்மை இரட்சிப்பதற்காக அவர் சிலுவையிலே மரிக்கவில்லை என்று குறான் சொல்லுகிறது! ஆனால் அவர்கள் பாவங்கள் எப்படி மன்னிக்கப்படும் என்று குறான் அவர்களுக்குச் சொல்லுவதில்லை. நன்மை செய்யவேண்டும், சட்டங்களுக்குக் கீழ்படிய வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுகிறது, ஆனால் பாவங்கள் எப்படி மன்னிக்கப்படும் மற்றும் ஒரு தேவனுடைய பிள்ளையாக ஏற்றுக்கொள்வது எப்படி என்று அது அவர்களுக்குச் சொல்லுவதில்லை. குறான் அதை அவர்களுக்குச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சிலுவையிலே மரித்ததை குறான் மறுதலிக்கிறது! நமது இயேசுவை அவர்கள் விசுவாசித்தால் உபத்திரவப்படுத்தப்படுகிறார்கள் ஏனென்றால் அவர் மட்டுமே அவர்களுக்குத் தேவனோடு சமாதானத்தை கொடுக்கிறார், “அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கினார்” (கொலோசெயர் 1:20).

சிலுவையின் கிறிஸ்துவை நம்பினதால் நீ உபத்திரவத்தின் ஊடாக போகிறாயா? தேவனோடு சமாதானமாக இருக்க உனது வாழ்க்கையைப் பணயம் வைக்கிறாயா “[அந்த] சிலுவையின் இரத்தத்தின் மூலமாக”? அவர்கள் அப்படி செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் அப்படி செய்கிறார்கள். சிலுவையிலே கிறிஸ்து உன்னை இரட்சிக்க சிந்தின இரத்தத்தின் மூலமாக உனது பாவங்களுக்கு மன்னிப்பு என்று கண்டுகொண்ட காரணத்துக்காக முகமதியர்களின் அக்கினியான வெறுப்பின் ஊடாக நீ போகிறாயா? அவர்கள் அப்படி செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் அப்படி செய்கிறார்கள்.

இந்தோனேசியாவில் ஒரு இளம் முகமதிய பெண்ணின் முகத்தை சிலகாலத்துக்கு முன்பாக டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் போதகர் உர்ம்பிராண்டு அவர்களின் பத்திரியில் பார்த்தார். அவள் இயேசுவை நம்பினபொழுது அவர்கள் அவள் முகத்தின்மீது ஆசிட் ஊற்றினார்கள். அவளது முகம் இப்பொழுது பயங்கரமானதாக இருக்கிறது, ஏறக்குறைய விவரிக்க முடியாததாக இருக்கிறது. ஆனால் அவள் சிரித்துக்கொண்டிருக்கிறாள். அவள் எப்பொழுதும் புன்னுருவல் பூத்துக்கொண்டே இருக்கிறாள் என்று அவர்கள் சொன்னார்கள். கிறிஸ்துவின் சிலுவையை ஆதாயப்படுத்திக்கொள்ள அவளது முகஅழகை இழந்தது தகுதியானது என்று அவள் உணருகிறாள்! ஏன்? ஏன் என்றால்,

“கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங் களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:3).

எனது பாவம் – ஓ, இந்த மகிமையான நினைவின் ஆசீர்வாதம்,
   எனது பாவம், பகுதியாக அல்ல, ஆனால் ஒட்டுமொத்தமாக –
சிலுவையில் அறையப்பட்டது மற்றும் அதை நான் இனி சுமக்கவில்லை,
   என் ஆத்துமாவே, கர்த்தரை துதி, கர்த்தரை ஸ்தோத்தரி!
(“It Is Well With My Soul,” H. G. Spafford, 1828-1888).

ஆமாம், கிறிஸ்து திரும்பவும் பரலோகத்துக்கு ஏறிச்சென்றார். ஆனால் இதை குறான் சொல்லுகிறது! சிலுவை இல்லாமல் இயேசு பரலோகத்துக்கு ஏறிபோயிருந்தால் – உனக்கு இரட்சிப்புக் கிடைத்திருக்காது. உனக்குச் சிலுவை இருக்க வேண்டியது அவசியம்! சிலுவையில் உனது பாவத்துக்குரிய கிரயத்தை இயேசுவானவர் செலுத்தினார். சிலுவையில் அல்லாமல் பாவத்துக்குக் கிரயம் இல்லை, மற்றும் தேவனோடு சமாதானம் இல்லை. சிலுவையின் கிறிஸ்து மட்டுமே உன்னை பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும்! சிலுவையின் கிறிஸ்து மட்டுமே உன்னை சகல பாவங்களிலிருந்தும் இரட்சிக்க தமது பரிசுத்தமான இரத்தத்தை சிந்தினார். ஆமாம்,

“கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங் களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:3).

மில்லியன் கணக்கான இரத்த சாட்சிகள் மற்றும் பரிசுத்தவான்கள் சொன்னார்கள், ”சிலுவையின் கிறிஸ்துவுக்கு எனது ஜீவனைக் கொடுக்கிறேன்! சிலுவையின் கிறிஸ்துவுக்காக எனது கைகளையும் கால்களையும் கொடுக்கிறேன்! சிலுவையின் கிறிஸ்துவுக்காக எனது சரீரத்தை கொடிய மிருகங்களுக்குக் கொடுக்கிறேன்! சிலுவையின் கிறிஸ்துவுக்காக எனது முழுவாழ்க்கையைக் கொடுக்கிறேன்!”

அவர்கள் கொடுங்கோலரின் அடுப்புச் சூட்டுக்கோலை சந்தித்தார்கள்,
   சிங்கத்தின் இரத்தம் தோய்ந்த கொடுமையை சந்தித்தார்கள்;
மரணத்தை உணர்ந்து தங்கள் கழுத்தைத் தாழ்த்திக் கொடுத்தார்கள்:
   தங்கள் தொடரில் பின்பற்றினவர்கள் யார்?
(“The Son of God Goes Forth to War,” Reginald Heber, 1783-1826).

சிலுவையின் கிறிஸ்து மூலமாக தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படவும் மற்றும் கழுவப்படவும் தக்கதாக இந்தப் பாடுகள் எல்லாம் தங்களுக்குத் தகுதியானவைகள் என்று அவர்கள் சொன்னார்கள்.

நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுவாயா? இந்தக் காலையிலே, நீ அவரை நம்புவாயா? டாக்டர் வாட்ஸ் அவர்களோடு சேர்ந்து சொல்வாயா, “கர்த்தாவே, இங்கே, என்னையே ஒப்புக்கொடுக்கிறேன், என்னால் செய்ய முடிந்ததெல்லாம் இதுதான்”? நீயும் சொல்லுவாயா, “என் பாவத்திலிருந்து என்னை இரட்சிக்க மரித்த சிலுவையின் கிறிஸ்துவுக்கு, என்னை ஒப்புக்கொடுக்க தயாராக இருக்கிறேன்.” இப்படியாகச் சொல்லுபவர்களைத் தவிர மற்றவர்கள் மேலறைக்கு உணவு அருந்த போவார்கள். அவர்கள் மேலே செல்லும்போது, நீங்கள் முதல் இரண்டு வரிசை இருக்கைகளில் வந்து அமரவும். இயேசுவை நம்புவதைப்பற்றி நாங்கள் உங்களோடு பேசுவோம். இந்தக் காலையில் யாராவது சிலர் இயேசுவை நம்பவேண்டும் என்று நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “The Old Rugged Cross” (George Bennard, 1873-1958).


முக்கிய குறிப்புகள்

சிலுவையின் கிறிஸ்து

THE CHRIST OF THE CROSS

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Rev. John Samuel Cagan

“அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப் படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக் கொண்டிருந்தால், அதினாலே இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:1-3).

I.   முதலாவதாக, அநேக போதகர்கள் தங்கள் பிரசங்கத்தில் சுவிசேஷத்தை மையமாக கொள்ளுவதை விட்டு வேறு சிலவற்றை செய்கிறார்கள், II கொரிந்தியர் 11:4.

II.  இரண்டாவதாக, கிறிஸ்துவின் சிலுவை சுவிசேஷத்தின் மையமாகும், கலாத்தியர் 6:14; I கொரிந்தியர் 2:2; யோவான் 16:13,14; கொலோசெயர் 1: 18-20.

III. மூன்றாவதாக, சிலுவையின் கிறிஸ்து நம்மை பாவங்களிலிருந்து இரட்சிக்கிறது, கொலோசெயர் 1:20.