Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டது

WASHED IN CHRIST’S BLOOD!
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
ஜூன் 3, 2018 கர்த்தருடைய நாள் காலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
ரெவரண்ட் ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, June 3, 2018

“நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினவர்” (வெளிப்படுத்தல் 1:6).


இந்த வசனத்தின் முதல் பாதிபகுதி அப்போஸ்தலனாகிய யோவானுடைய வணக்கவுரையாக இருக்கிறது, அதிலே அவர் தம்மிடம் கேட்கும் மக்களுக்காக, அந்த ஏழு சபைகளுக்கு, இயேசு கிறிஸ்துவிடமிருந்து கிருபையும் சமாதானமும் பெற்றுக்கொள்ள அவர் ஜெபிக்கிறார், “உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின்ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.” கிறிஸ்துவைப்பற்றிய இந்த விபர அறிப்பை சொன்னபிறகு, யோவான் சொன்னார்,

“நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினவர்” (வெளிப்படுத்தல் 1:6).

வசனம் சொல்லுகிறது கிறிஸ்து “அன்புகூர்ந்து, பாவங்களற நம்மைக் கழுவினவர்” தமது இரத்தத்தினால். புலமை என்ற பெயரில், நவீன திறனாய்வாளர்கள் மூலபாடத்துக்குரிய “கழுவினார்” என்பதை “அவிழ்த்துவிட்டார்” என்று மாற்றினார்கள். அவர்கள் இதை நெஸ்டில் ஆலந்து கிரேக்கப் புதிய ஏற்பாட்டில் சீனாய்மலை சார்ந்த சமரச மறையியல் பழிசேர்ந்த பாடத்தில், ஒரு கிரேக்க எழுத்தின் அடிப்படையில் இதை செய்தார்கள். ஆனால் “அவிழ்த்தார்” என்பது, கீழ்த்தரமான அலெக்ஸாண்டிரியன் சமயக்கிளை பாடத்தை சார்ந்ததாகும். இது ஒருவர் இரத்தத்தால் “கழுவப்படுவதற்று” எதிரிடையான சமயகிளை ஆகும்! அதனால், அந்த அலெக்ஸாண்டிரியன் சமயக்கிளையினர் ஒரு கிரேக்க எழுத்தை தவர விட்டு – “கழுவுதல்” என்பதற்கு பதிலாக “அவிழ்த்தல்” என்று மாற்றிக்கொண்டார்கள்.

டாக்டர் சார்லஸ் ஜான் எலிகோட் (1829-1903) அவர்கள் ஒரு ஆங்கலிக்கன் வல்லுனராகும், கேம்பிரிட்ஜில் புதிய ஏற்பாட்டு விரிவுரையாளராகும், புதிய ஏற்பாட்டு ரிவைஸ்டு வர்ஸனின் (RV) மொழிபெயர்ப்பு வல்லுனர் கமிட்டியின் தலைவராகும். டாக்டர் எலிகோட் ஒரு பதிப்பாளர் ஆவார் Ellicott’s Commentary on the Whole Bible (Zondervan Publishing House). நமது பாடத்தைப்பற்றி எலிகோட் அவர்களின் விமர்சனம் சொல்லுகிறது,

“நம்மை கழுவினார்” என்பதற்குப் பதிலாக, சில [மூலப்பிரதி] வாசகங்களில் “நம்மை அவிழ்த்தார்” என்று படிக்கிறோம். கிரேக்கப் பதத்தில் இந்த இரண்டுக்கும் இடையில் ஒரேயொரு எழுத்துதான் வித்தியாசமாகும். மையக்கருத்தின் பொதுவான தொனி நம்மை “கழுவினார்” என்பதை எடுத்துக் கொள்ளும்படி வழிநடத்துகிறது அது படிப்பதற்கு மெய்யாக இருக்கிறது. பயபக்தியான அந்தச் சமயத்தை, கர்த்தர் சொன்னதை யோவான் தெளிவாக நினைவுகூர்ந்து, கர்த்தர் சொல்லுகிறார், “நான் உன்னை கழுவாவிட்டால், உனக்கு என்னிடத்தில் பங்கில்லை.” அந்தக் கருத்து “சுத்திகரிக்கும் இரத்தம்,” கிறிஸ்துவின் விலாவிலே குத்தப்பட்டபோது இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டு வந்தது [யோவான் 19:34], அதை அவர் பார்த்ததாக தனது மனதில் பதிவுசெய்து வைத்திருந்தார், வெளிப்படுத்தல் 7:13, 14; I யோவான் 1:7; 5:5-8 (Charles John Ellicott, M.A., D.D., Ellicott’s Commentary on the Whole Bible, Zondervan Publishing House, n.d., volume VIII, p. 535; note on Revelation 1:5).

வெளிப்படுத்தல் 7:14 நமக்கு மேலும் சொல்லப்பட்டது,

“இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவ ருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்” (வெளிப்படுத்தல் 7:14).

இந்த வசனத்தில் பரலோகத்தில் தங்கள் வஸ்திரங்களை “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் தோய்த்து,” பிறகு “கழுவி சுத்தம்” செய்து கொண்டதைத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் வெளிப்படுத்தல் 7:14ல் தெளிவாக்கப்பட்டிருப்பதால், நமது பாடத்தில் “கழுவுதல்” என்ற பதம் பொருத்தமாகும்:

“நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினவர்” (வெளிப்படுத்தல் 1:6).

டாக்டர் ஜான் எப். உள்வேர்டு அவர்கள் “லோவோ” (கழுவப்பட்டது) என்ற வார்த்தையில் மற்றொரு எழுத்து “லுவோ” (அவிழ்த்துவிடு) என்று உள்ளதை குறிப்பிடுகிறார். டாக்டர் உள்வேர்டு சொன்னார் எலிகாட் போன்ற வல்லுநர்கள் நீண்ட வார்த்தையை (கழுவப்பட்டது) தேர்ந்தெடுத்தது ஏனென்றால் “வரைபவர்களுக்கு ஒரு எழுத்தை விடுவதை காட்டிலும் சேர்ப்பது எளிதாகும்” (John F. Walvoord, Th.D., The Revelation of Jesus Christ, Moody Press, 1966, footnote 1, p 38). கிங் ஜெம்ஸ் மொழிப்பெயர்ப்பின் சார்பில் இது ஒரு பலமான வாக்குவாதம் ஆகும்.

லூத்தர் அவர்களின் “வேத வசனங்களின் ஒப்புமை” என்ற விளக்க உரை வாசகத்தில் இன்னும் உண்மை அடங்கியிருக்கிறது – ஒரு வேத வசனத்தின் பகுதி அதே கருத்தை குறித்துப் பேசக்கூடிய, மற்றதை வெளிப்படுத்தி காட்டுகிறது – சிறப்பாக அதே புத்தகத்தில் உள்ளது! அதனால் நமது கண்களைத் தாழ்த்தி நவீன எழுத்தாளர்கள் பக்கமாக நமது முதுகை திரும்பி பார்க்க வேண்டியதாக இருக்கிறது, அந்தப் பரிசுத்தத்திலிருந்து “கழுவப்பட்டது” என்ற ஏவப்பட்டு எழுதப்பட்ட கிரேக்க வார்த்தையிலிருந்து நம்மை திருப்ப முயற்சிக்கிறார்கள். கர்த்தருக்கு நன்றி, ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவரும் இயேசுவுக்கு “மகிமை” என்று சொல்ல முடியும், “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினவர்”!

இப்பொழுது இந்தக் கருத்துக்கு நான் இவ்வளவு கஷ்டப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. உன்னுடைய பாவத்திலிருந்து “அவிழ்த்துவிடு” என்பதைவிட, “கழுவப்பட வேண்டியது” அதிகமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீ தேவனை முகமுகமாய் சந்திக்க போகிறாய். நியாயத்தீர்ப்பில் உன்னுடைய பதிவில் பாவத்தோடு நீ நின்றால், உனக்கு மெய்யான கஷ்டம் உண்டாகும்! தேவனுடைய கடைசி நியாயத்தீர்ப்பின்போது உனக்குத் தெளிவான பதிவு இருக்க வேண்டியது அவசியம் இல்லையானால் தேவன் உன்னை அக்கினி ஜுவாலைக்குத் தீர்ப்பு செய்வார் (வெளிப்படுத்தல் 20:11-15). தேவன் உன்னுடைய பதிவை பார்க்கும்பொழுது அங்கே எந்தப் பாவப் பதிவும் இல்லாது இருக்க வேண்டியது நல்லதாகும். நியாயத்தீர்ப்பின் நாளில் உன்னுடைய பாவங்கள் “அவிழ்த்துவிடபட்டது” மட்டுமே போதுமானது அல்ல. ஓ, இல்லை! நரகத்தின் நித்தியமான வேதனைகளிலிருந்து நீ இரட்சிக்கப்பட வேண்டுமானால் “கழுவப்படுதல்” [மற்றும்] “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் வெண்மையாக்கப் படுதல் உனக்கு அவசியமாக இருக்கிறது” (வெளிப்படுத்தல் 7:14). நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது வெளிப்படுத்தல் 7ல் பரலோகத்தில் “இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்” (வெளிப்படுத்தல் 7:14). இந்த வசனத்தின் மூலமாக நாம் அனைவரும் நரகத்திலிருந்து காப்பாற்றப்பட்டு மற்றும் பரலோகத்தில் பத்திரமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டோம் என்று அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதனால்தான் இந்தக் கருத்தை இவ்வளவு கஷ்டப்பட்டுச் சுட்டிக்காட்டினேன். கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீ கழுவப்பட்டுச் சுத்திகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் அல்லது நித்தியக்கால முழுவதும் நீ நரகத்திற்குப் போக வேண்டியதாக இருக்கும். இந்தப் புது சுவிசேஷகர்கள் மற்றும் சுயாதீனவாதிகள் “வேத ஆசிரியர்கள்” நினைப்பார்கள் “கழுவதை” விட “அவிழ்த்துவிடு” என்பது சொல்லுவதற்கு நன்றாக இருக்கிறது என்று. ஆனால் உன்னை போன்ற பாவிகளுக்குப் பிரசங்கம் செய்ய வேண்டியது என்னுடைய வேலையாகும். உனது பதிவேட்டில் பாவங்கள் உள்ளன! அவைகள் கழுவப்பட்டு சுத்தகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் இல்லையானால் தேவன் உன்னை நரகத்திற்கு அனுப்புவார். உன்னுடைய பாவத்தை கழுவி நீக்க எதனால் முடியும்? வேறொன்றுமில்லை ஆனால் இயேசுவின் இரத்தத்தினால் முடியும்!

“நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினவர்” (வெளிப்படுத்தல் 1:6).

நான் உனக்குச் சொல்லுகிறேன், இங்கே மற்றும் இப்பொழுதே, கிறிஸ்துவின் இரத்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! நீ உனது நித்தியத்தை எங்கே கழிக்கப்போகிறாய் என்பது கிறிஸ்துவின் இரத்தத்தைச் சார்ந்ததாக இருக்கிறது! நீ ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது என்பது கிறிஸ்துவின் இரத்தத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. இரத்தத்தைப் பற்றி சில முக்கியமான கருத்துகள் இங்கே உள்ளன.

I. முதலாவதாக, இரத்த பலியானது ஆரம்பக்காலத்துக்குத் திரும்ப அழைத்துப் போகிறது.

உலகத்திலுள்ள எல்லா மூத்த மக்களும் இரத்தப் பலியை விசுவாசிக்கிறார்கள். உலகத்தின் பழங்கால நாகாரீகங்கள் அனைத்திலும் இரத்தப் பலியில்லாததிருந்ததைப் பார்க்க முடியாது. உதாரணமாக, அமெரிக்க கண்டத்து மெக்சிக்கோ பகுதியின் பழங்குடி இனத்தரான இந்தியர்கள் 20,000 நர பலிகளைத் தங்கள் தேவர்கள் மற்றும் விக்கிரகங்களைச் சமாதானப்படுத்த, தங்கள் புறஜாதி பலிபீடங்களில் பலி செலுத்தினார்கள். அமெரிக்க மாயர்களும் இதை செய்தார்கள். பசுபிக் சமுத்திர தீவுகளிலிருந்த பழங்குடி இனத்தவர்களும் தங்கள் காலத்தில் இரத்தப் பலியைச் செலுத்தினார்கள். அப்படியே நடைமுறையில் ஆப்பிரிக்க இனப் பழங்குடியினரும் இப்படியே செய்தார்கள். சீனப் பழங்குடியினர் தங்களுடைய ஏகத்துவ தெய்வத்துக்கு இரத்தப் பலி செலுத்தினார்கள், அதற்கு ஷன் டீ என்று பெயரிட்டார்கள், இது கிறிஸ்து பிறப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பு. சீனர்கள் ஒரே தேவனைப் பற்றி அறிந்திருந்தார்கள், மற்றும் இரத்தப் பலியின் தேவையையும் அறிந்திருந்தார்கள், இதை வரலாற்றின் ஆரம்பத்தில், காலத்தின் துவக்கத்தில் இருந்தது! பழங்கால சீனர்கள் தேவனைப் பற்றி எழுதினார்கள், மற்றும் அவருக்கு இடப்பட்ட இரத்தப் பலியை பற்றி, எலும்பு துண்டு மற்றும் கடலாமை ஓடுகள், சமீபக்காலத்தில் அகழ்வாராய்ச்சி மூலமாக கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிக்கல்கள் நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாக செல்லுகின்றன. இந்த யோசனை எங்கிருந்து வந்தது? இது முதலாவது ஆதாம் மற்றும் அவனுடைய சந்ததியாரிடத்திலிருந்து தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டதாகும்.

வரலாற்றின் ஆரம்பத்தில் மோசே ஆதியாகமப் புத்தகத்தை எழுதினார். முதல் பெற்றோர் செய்த பாவத்தை மூடுவதற்காக மிருகங்கள் கொல்லப்பட்டது என்ற உண்மையை அவர் பதிவுசெய்து வைத்திருக்கிறார். அவர்களுடைய குமாரன் ஆபேல் தேவனுக்குப் பிரியமான ஒரு இரத்தப் பலியைக் கொண்டு வந்தார். அவருடைய சகோதரன் காயீன் கொண்டு வந்த காய்கறி பலிகள் நிராகரிக்கப்பட்டன. நோவா தேவனுக்கு இரத்தப் பலியைச் செலுத்தினார். அப்படியே ஆபிரகாமும் செய்தார். இந்த இரத்தப் பலிகளெல்லாம் நீண்ட காலத்துக்கு முன்பாக யூத மக்கள் தேவனுக்கு மிருகப் பலிகளைச் செலுத்தினார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபொழுது தேவன் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை அவர்களுடைய நிலைகால்களின் மீது தெளிக்கும்படி சொன்னார். அவர் இரத்தத்தைப் பார்க்கும்பொழுது அவர்களைவிட்டு கடந்து போவேன் என்று தேவன் சொன்னார், மற்றும் அவர்களுடைய பாவத்துக்காக அவர்களை தண்டிப்பதில்லை என்று சொன்னார். அதை பற்றி நமக்கு ஒரு பாடல் உண்டு,

நான் இரத்தத்தை பார்க்கும்பொழுது, நான் இரத்தத்தை பார்க்கும்பொழுது,
   நான் இரத்தத்தை பார்க்கும்பொழுது, நான் கடந்து போவேன்,
நான் உங்களைவிட்டு கடந்து போவேன்.
(“When I See the Blood,” John Foote, 19th century).

யூதர்களின் அடிமை தனத்தின்போது, தேவன் அதைதான் சொன்னார், எகிப்திலே. முதலாவது பஸ்காவின் அந்த இரவிலே தேவன் யூதர்களுக்குச் சொன்னார்,

“நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும். அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்” (யாத்திராகமம் 12:13).

யூதமக்கள் இந்த நாள் வரையிலும் தொடர்ந்து அடையாளமாக பஸ்கா பலியைச் செலுத்தி வருகிறார்கள். கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்நாள் இரவிலே, அவர் பஸ்காவின் அர்த்தத்தை மாற்றி அதை கர்த்தருடைய மேஜையாக மாற்றினார். சில சபைகள் இதை பரிசுத்த ஐக்கியம் என்று அழைக்கின்றன. கத்தோலிக்கர்கள் மற்றும் கிழக்கித்திய பழைமைவாதிகள் இதை மாஸ் என்று சொல்லுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு டிரினிடேரியன் சபையும் இதை பழக்கப்படுத்தி வருகின்றன. வேதாகமம் சொல்லுகிறது,

“அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப் படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமா யிருக்கிறது” (மத்தேயு 26:26-28).

பாருங்கள், புறஜாதியர் செலுத்தும் எல்லா இரத்தப் பலிகளும் மனிதனுக்காக தேவனுக்குத் தேவையான பலியைக் குறித்த ஒரு மங்கலான நினைவிலிருந்து வந்ததாகும். மற்றும் பழைய ஏற்பாட்டின் பஸ்கா மேசியாவாகிய, கிறிஸ்து, சிலுவையிலே செய்த பலியை, குறித்துக் காட்டுகிறது. மற்றும் அந்தச் சிலுவையிலே நம்மை இரட்சிக்க கிறிஸ்து செய்ததை கர்த்தருடைய மேஜையானது இன்று எடுத்துக் காட்டுகிறது. கிறிஸ்துவின் சிலுவை மரணம், மற்றும் அங்கே சிந்தப்பட்ட அவருடைய இரத்தம், உலக வரலாறு முழுவதற்கும் நித்திய பலியின் மையமாக இருக்கிறது!

“நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்கள றநம்மைக் கழுவினவர்” (வெளிப்படுத்தல் 1:6).

சிலுவையில் கிறிஸ்துவின் இரத்தப் பிராயச்சித்த பலி இவ்வளவு முக்கியமானது ஏன் என்பதை பற்றி நான் சரியாக சொல்ல போகிறேன். ஆனால் மற்றொரு கருத்தை நான் முதலாவது விளக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

II. இரண்டாவதாக, கிறிஸ்துவின் இரத்தம் சாத்தானால் மிகவும் கசப்பாக வெறுக்கப்பட்டது.

வெளிப்படுத்தல் புத்தகத்தில் நாம் இப்படியாக வாசிக்கிறோம்,

“இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் [சாத்தான்] தாழத் தள்ளப்பட்டுப்போனான். மரணம் நேரிடுகிறதாயிருந்
தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்...” (வெளிப்படுத்தல் 12:10-11).

ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் அந்த ஒரேவழியினால் மட்டுமே எந்த ஒரு மனிதனும் சாத்தானை ஜெயிக்க முடியும் என்று அவனுக்குத் தெரியும் – அதுதான், தேவ ஆட்டுக்குட்டியாகிய, கிறிஸ்துவின் இரத்தம். சாத்தான் ஒரு கொலைகாரன் என்று வேதாகமம் சொல்லுகிறது. அவனால் முடிந்தால் ஒவ்வொருவரையும் அழிக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான். அதனால்தான் அவன் கிறிஸ்துவின் இரத்தத்தைக் கசப்பாக வெறுக்கிறான். ஒரு மனிதனுக்குக் கிறிஸ்துவின் இரத்தம் இருந்தால், அவன் வெற்றி பெறுவான் என்று அவனுக்குத் தெரியும். பாவி கிறிஸ்துவின் இரத்தத்தினால் சாத்தானை வெற்றிகொள்ளுகிறான். அது நடக்க வேண்டும் என்று சாத்தான் விரும்பவில்லை. அதனால் அவனால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கிறிஸ்துவின் இரத்தத்தைக் கீழே தள்ளவும் மற்றும் நம்பிக்கை கேடு உண்டாக்கவும் செய்கிறான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கிறிஸ்துவின் இரத்தத்தைத் தாக்கும்படியாக, டாக்டர் ஹென்றி எமல்சன் போஸ்டிக் மற்றும் டாக்டர் நெல்ஸ் ப்பிரே போன்ற அநேக வேத அறிஞர்களான சுயாதீனர்கள் மூலமாக சாத்தான் செயல்பட்டான். டாக்டர் ப்பிரே சொன்னார், “கிறிஸ்துவின் இரத்தம் ஒரு கோழிகுஞ்சின் இரத்தத்தைவிட வல்லமையுள்ளதல்ல.” டாக்டர் போஸ்டிக் இரத்தப் பிராயசித்தப் பலியை, “ஒரு இறைச்சிகடை மதம்” என்று சொன்னார். அப்படிப்பட்ட மனிதர்கள் சாத்தானால் ஏவப்பட்ட படியினால் – கிறிஸ்துவின் இரத்தத்துக்கு விரோதமாக பயங்கரமாக பேசினார்கள்.

ஆனால், இருபதாம் நூற்றாண்டின் பின்பகுதியில், கிறிஸ்துவின் இரத்தத்தை வேறுவழியில் சாத்தான் தாக்க ஆரம்பித்தான். குறைவாக மதிப்பிடப்பட்ட சுவிசேஷ மனிதர்களை கொண்டு கிறிஸ்துவின் இரத்தத்தைத் தாழ்வாக விளையாட வற்புறுத்தினான். டாக்டர் ஜே. வர்னான் மெக்ஜீ, அமெரிக்காவின் மிகவும் பிரியமானவர் மற்றும் வானொலி வேத ஆசிரியர், பிசாசின் போக்கை கவனிக்க ஆரம்பித்தார். வெளிபடுத்தல் 1:6 நமது பாடத்தின் அவரது குறிப்பில், டாக்டர் மெக்ஜீ சொன்னார்,

கிறிஸ்துவின் இரத்தத்தை ஒருபொருளல்ல என்று இன்று சில மனிதர்கள் செய்வதைப்போல அதை சார்ந்து நான் இல்லை. இந்தப் பாடல்களின் வார்த்தைகளை நான் இன்னும் விரும்புகிறேன்,

இம்மானுவேலின் தமனியிலிருந்து இழுக்கப்பட்ட
   இரத்தத்தால் நிறைந்த ஒரு ஊற்று உண்டு;
மற்றும் பாவிகள், அந்த வெள்ளத்தினுள் மூழ்கி,
   தங்கள் குற்றக்கறைகளை எல்லாம் நீக்குகிறார்கள்.
(J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson Publishers, 1983, volume V, pp. 890, 891; note on Revelation 1:5-6).

கிறிஸ்துவின் இரத்தத்தைத் தரக்குறைவாக நினைத்ததை டாக்டர் மெக்ஜீ குறிப்பிட்டார் என்பது வெளிப்படையாகும், ஆர். பி. தைமி, ஜான் மாக்ஆர்த்தர், மற்றும் சார்லஸ் சி. ரெய்ரியும், காயினுடைய காணிக்கையைக் குறித்துச் சொன்னார்கள், “ஒரு இரத்தமில்லாத காணிக்கை பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளதக்கது” (Charles C. Ryrie, Th.D., The Ryrie Study Bible, Moody Press, 1978; note on Genesis 4:3). டாக்டர் ரெய்ரியின் இந்தக் குறிப்பை நான் படித்தபொழுது இதை விசுவாசிப்பதற்கு எனது கண்களுக்குக் கஷ்டமாக இருந்தது. இப்படி ரெய்ரி சொன்னதை வாரன் விர்ஸ்பி “பாராட்டினார்” அது எனக்கு வித்தியாசமாக இருந்தது! (Warren W. Wiersbe, 50 People Every Christian Should Know, Baker Books, 2009, p. 207). சுயாதீன இஸத்துக்குச் சார்பான மற்றொரு இடம் இருப்பதைபோல இவைகள் எனக்குக் காணப்படுகின்றன. அந்தச் சுயாதீன அறிஞர்களின் ஒப்புதலை பார்ப்பதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது – காலம் !

இரட்சகரின் இரத்தத்தின் வியக்கத்தக்க முக்கியத்துவத்தை இந்த மக்கள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை! அநேகர் அவர்களைப் பின்பற்றினார்கள், மற்றும் அவர்களுடைய பிரசங்கத்தில் இரத்தத்தைப் பற்றி வெளிப்படுத்தவில்லை. இது எனக்குத் தீவிரமானதாக கடைசி கால ஏமாற்றுதலாக இருக்கிறது. சாத்தான் கிறிஸ்துவின் இரத்தத்தை வெறுக்கிறான் என்பதை நாம் மனதில் கொண்டிருந்தால் நாம் தவறி போகமாட்டோம், மற்றும் அவன் ஒரு பொய்யன் மற்றும் ஒரு ஏமாற்றுபவன்! ஆமென். கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தைப் பற்றி எல்லா போதகர்களும் பிரசங்கம் செய்ய வேண்டியது அவசியம்! எல்லாவற்றையும்விட, இதைதான் வேதாகமமும் இப்படியாக அழைக்கிறது,

“...கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம்” (I பேதுரு 1:19)

III. மூன்றாவதாக, கிறிஸ்துவின் இரத்தம் நம்மை மீட்கிறது.

பேதுருவின் முழு பகுதியும் சொல்லுகிறது,

“உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக் குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்
தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (I பேதுரு 1:18-19).

நீங்கள் பொன்னினால் மீட்கப்படவில்லை. தேவன் உங்களை வெள்ளியினால் இரட்சிக்கவில்லை. நீங்கள் எவ்வளவு பணம் சபைக்குக் கொடுப்பீர்கள் என்பதற்காக உங்களை தேவன் இரட்சிக்கவில்லை. நாம் மீட்கப்பட்டது எதனாலெனில் “கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால்”.

மீட்பு என்றால் அடிமைத்தனத்திலிருக்கும் ஒருவரை விலைக்கொடுத்து வாங்குவதாகும். இயேசு சொன்னார் “அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (மத்தேயு 20:28). அவர் அதை விளக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் அப்பொழுது உலகத்திலிருந்த மக்களில் மூன்றில் இரண்டு பாகம் அடிமைகளாக இருந்தார்கள். மக்கள் எல்லா இடங்களிலும் அடிமைகள் இருந்தார்கள், பழங்கால பிரிட்டன், ஸ்பெயின், ஆப்பிரிக்கா – மற்றும் எல்லா இடங்களிலும். ஒவ்வொரு இனத்திலும் இருந்த குழுக்களில் சில காலம் அடிமைகளாக இருந்தார்கள். யூத மக்கள் எகிப்தில் 400 வருடங்கள் அடிமைகளாக இருந்தார்கள் என்று, சில நொடிகளுக்கு முன்பாக நான் சொன்னேன்.

கிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தினால் உன்னை அடிமைத்தனத்திலிருந்து விலைக்கு வாங்கினார் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னார். அவர் உன்னை எதிலிருந்து விலைக்கு வாங்கினார்? பாவ அடிமைத்தனத்திலிருந்து விலைக்கு வாங்கினார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மில்லியன் கணக்கான மக்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். அவர்கள் சிகரெட்களுக்குக் கொக்கியினால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் – மற்றும் அவர்களால் நிறுத்த முடியவில்லை. அவர்கள் போர்னோகிராப்பியினால் கொக்கி போட பட்டிருக்கிறார்கள், அதை பார்க்காமல் நிறுத்த அவர்களால் முடியவில்லை. நீயும் அந்தப் பாவத்துக்கு ஒரு அடிமையாக இருந்தாய்! ஆனால் கிறிஸ்து உன்னை விடுதலையாக்க முடியும் என்று வேதாகமம் சொல்லுகிறது. அவர் உன்னை அவிசுவாசமான கலகம் நிறைந்த இருதயத்தின் பாவத்திலிருந்து மீட்டு எடுக்க முடியும். இது மிகவும் கடினமான காரியம் என்று நான் நினைக்கிறேன். கிறிஸ்து உன்னுடைய அவிசுவாசமான பொல்லாத இருதயத்திலிருந்து மீட்டு எடுக்க முடியும்! இன்னும் அதிகமாக இருக்கிறது ஆனால் நான் நேரமில்லாமையினால் கடந்து போகிறேன்! உன்னுடைய இரட்சிப்பு முழுவதும் கிறிஸ்துவின் இரத்தத்தைச் சார்ந்ததாக இருக்கிறது! கிறிஸ்துவின் இரத்தம் உன்னுடைய சகல பாவங்களிலிருந்து உன்னை மீட்க முடியும்! வில்லியம் கூப்பர் சொல்லுவதை கவனியுங்கள்,

விசுவாசத்தின் மூலமாக, அந்த ஊற்று ஓடுவதை நான் பார்த்தேன்
   உம்முடைய காயங்களிலிருந்து அனுப்பப்பட்டு வழிந்தோடுகிறது,
மீட்பின் அன்பு என்னுடைய மைய கருப்பொருளாக இருந்தது,
   மற்றும் நான் மரிக்கும் வரையிலும் அதுவே அப்படியிருக்கும்.

இரத்தத்தால் நிறைந்த ஒரு ஊற்று உண்டு
   [இம்மானுவேலின்] தமனியிலிருந்து இழுக்கப்பட்ட,
மற்றும் பாவிகள், அந்த வௌ;ளத்தினுள் மூழ்கி
   தங்கள் குற்றக்கறைகளை எல்லாம் நீக்குகிறார்கள்.
(“There Is a Fountain” by William Cowper, 1731-1800;
to the tune of “Amazing Grace”).

மற்றும் பேனி குருஸ்பே சொன்னார்,

மீட்கப்பட்டேன், மீட்கப்பட்டேன்,
   ஆட்டுக்குட்டடியின் இரத்தத்தினால் மீட்கப்பட்டேன்;
மீட்கப்பட்டேன், மீட்கப்பட்டேன்,
   நான், என்றென்றும், அவருடைய பிள்ளை!
(“Redeemed,” Fanny J. Crosby, 1820-1915).

IV. நான்காவதாக, கிறிஸ்துவின் இரத்தம் உன்னை சகல பாவங்களிலிருந்தும் சுத்தகரிக்க முடியும்.

இயேசு யார் என்பதை மறந்துவிடாதே! அவர் வேறு யாருமில்லை. உன்னுடைய பாவங்களைக் கழுவக்கூடிய இரத்தம் இல்லாத நீ அறிந்த மற்றவர்களை போல அல்ல. ஆனால் தெருவில் இருக்கும் யாரோ ஒருவராக இயேசு இல்லை. ஓ, இல்லை! இயேசு நித்தியமான தேவனுடைய குமாரனாக இருக்கிறார், பரிசுத்த திரித்துவத்தின் இரண்டாவது நபராகும், “அவரே தேவாதி தேவன்”.

“சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டான தொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” (யோவான் 1:3).

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து இறங்கி வருவதற்கு முன்பாக இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் சிருஷ்டித்தார். உன்னுடைய பாவங்களைச் சுத்திகரிப்பதற்கு அவருடைய இரத்தம் ஒன்றுதான் உண்டு – மற்றும் நீ பரலோகத்துக்குப் போவதற்குச் சுத்தமடைய போதுமானது அது ஒன்றுதான்! அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னார்,

“அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (I யோவான் 1:7).

நமது பாடம் அதே காரியத்தைச் சொல்லுகிறது,

“நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினவர்” (வெளிப்படுத்தல் 1:6).

இது உனக்குச் சம்பவிக்க வேண்டுமென்று நீ விரும்புகிறாயா? சாத்தானுடைய கொடும் பிடியிலிருந்து நீ விடுவிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறாயா? கிறிஸ்துவின் இரத்தம் அதை செய்ய முடியும்! பாவத்திலிருந்து மீட்கப்பட நீ விரும்புகிறாயா? கிறிஸ்துவின் இரத்தம் அதை செய்ய முடியும்! உன்னுடைய சகல பாவங்களிலிருந்து கழுவி சுத்திகரிக்கப்பட நீ விரும்புகிறாயா, அதேப்போல நீ பரலோகத்திற்குச் சென்று மற்றும் அங்கே எங்களோடேகூட மகிழ்ச்சியாகயிருக்க விரும்புகிறாயா? கிறிஸ்துவின் இரத்தம் அதை செய்ய முடியும்!

ஆனால் சில காரியத்தை நீ செய்ய வேண்டியது அவசியம். அந்தக் காரியங்களைக் கிறிஸ்துவின் இரத்தம் உனக்குச் செய்வதற்கு முன்பாக, நீ உன்னுடைய பாவத்திலிருந்து வெளியே திரும்ப வேண்டியது அவசியமாகும். அது முதலாவதாகும். நீ உன்னுடைய பாவங்களிலிருந்து திரும்ப வேண்டியது அவசியம். அதன்பிறகு, இரண்டாவதாக, நீ இயேசுவை நம்ப வேண்டியது அவசியம். விசுவாசத்தினாலே அவரிடம் வா மற்றும் அவரை நம்பு. சிலர் சொல்லுகிறார்கள், “அவ்வளவுதானா?” ஆமாம்! அவ்வளவுதான்! அவருடைய இரத்தம் ஒவ்வொரு பாவத்தையும் சுத்திகரிக்கும், மற்றும் உன்னை ஐக்கியத்துக்குள் கொண்டு வரும் மற்றும் பிதாவாகிய தேவனுடைய சந்தோஷத்திற்குள் கொண்டு வரும்! நீ உனது பாவத்திலிருந்து திரும்பி மற்றும் இயேசுவை நம்புவாயா? திருவாளர் கிரிப்பித் அவர்கள் பாடிய தனிப்பாடலின் ஒரு பல்லவியைப் பாடும்பொழுது கவனியுங்கள். திருவாளர் கிரிப்பித் அவர்களே, மிகவும் வேகமாக அதை பாட வேண்டாம்.

என்னுடைய மீட்பு வெள்ளியினாலும் பொன்னாலும் கிடைத்தது அல்ல,
   என்னுடைய ஏழை ஆத்துமாவை இந்தப் பூமியின் செல்வங்களால் இரட்சிக்க முடியவில்லை;
என்னுடைய ஒரே ஊற்று சிலுவையின் இரத்தம் மட்டுமே,
   என்னுடைய இரட்சகரின் மரணம் இப்பொழுது என்னை பூரண படுத்துகிறது.
நான் மீட்கப்பட்டேன், ஆனால் வெள்ளியினால் அல்ல,
   நான் விலைக்குக் கொள்ளப்பட்டேன், ஆனால் பொன்னால் அல்ல;
இயேசுவின் இரத்தமே, ஒரு விலைக்கிரயமாக என்னை மீட்டது,
   சொல்ல முடியாத அன்பின் விலையேறப்பெற்ற கிரயம்.
(“Nor Silver, Nor Gold,” Dr. James M. Gray, 1851-1935).

இயேசுவை நம்புவதைப் பற்றி நீ எங்களோடு பேச விரும்பினால், மற்றவர்கள் மதிய உணவுக்கு மேலறைக்குச் செல்லும்பொழுது, நீ வந்து முதல் இரண்டு வரிசை இருக்கைகளில் அமரவும். ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “Nor Silver Nor Gold” (Dr. James M. Gray, 1851-1935).


முக்கிய குறிப்புகள்

கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டது

WASHED IN CHRIST’S BLOOD!

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி

“நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினவர்” (வெளிப்படுத்தல் 1:6).

(வெளிப்படுத்தல் 7:14)

I.   முதலாவதாக, இரத்த பலியானது ஆரம்பக்காலத்துக்குத் திரும்ப அழைத்துப் போகிறது, யாத்திராகமம் 12:13; மத்தேயு 26:26-28.

II.  இரண்டாவதாக, கிறிஸ்துவின் இரத்தம் சாத்தானால் மிகவும் கசப்பாக வெறுக்கப்பட்டது, வெளிப்படுத்தல் 12:10-11; I பேதுரு 1:19.

III. மூன்றாவதாக, கிறிஸ்துவின் இரத்தம் நம்மை மீட்கிறது, I பேதுரு 1:18, 19; மத்தேயு 20:28.

IV. நான்காவதாக, கிறிஸ்துவின் இரத்தம் உன்னை சகல பாவங்களிலிருந்தும் சுத்தகரிக்க முடியும், யோவான் 1:3; I யோவான் 1:7.