Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




வெறுக்கப்பட்டவர் ஆனால் அழகானவர்!

DESPISED BUT LOVELY!
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
மே 13, 2018 கர்த்தருடைய நாள் காலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
ரெவரண்ட் ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, May 13, 2018

“அவர் முற்றிலும் அழகுள்ளவர்” (உன்னதப்பாட்டு 5:16)


சாலமோனின் உன்னதப்பாட்டிலிருந்து நான் ஒருபோதும் ஒரு போதனையை பிரசங்கித்தது இல்லை. ஸ்பர்ஜனுடைய போதனைகளின் முழு அட்டவணையை பார்த்தபொழுது, பிரசங்கிகளின் இளவரசர் 63 போதனைகளை லண்டனில் அவருடைய ஊழியத்தின்போது கொடுத்தார் என்று நான் கண்டேன். அதனால் இன்று நான் இந்தப் பாடத்துக்கு வருகிறேன்.

“அவர் முற்றிலும் அழகுள்ளவர்”
“அவர் முற்றிலும் அழகுள்ளவர்”
“அவர் முற்றிலும் அழகுள்ளவர்.”

டாக்டர் மெக்சி சொன்னார், “சாலமோனின் உன்னதப்பாட்டை யூதர்கள் வேதாகமத்தின் மகா பரிசுத்த ஸ்தலம் என்று அழைத்தார்கள். அதனால், அதன் திரைக்குள்ளாக ஒவ்வொருவரும் பிரவேசிக்க உத்தரவு இல்லை. இங்கே மகா பரிசுத்த ஸ்தலத்தின் இரகசியமான இடத்திலே நீங்கள் வாசம் பண்ணுகிறீர்கள்... கர்த்தராகிய இயேசு உங்களுக்கு ஒரு பெரிய பங்காக இருந்தால் மற்றும் நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள், பிறகு இந்தச் சிறிய புத்தகம் உங்களுக்கு அர்த்தமுள்ள ஒரு பெரிய பங்காக இருக்கும். சாலமோனின் உன்னதப்பாட்டு ஒரு செய்யுள் வடிவில் மற்றும் அனுபவ ரீதியாக உள்ளதாகும். இங்கே ஒரு கதையை வெளிப்படுத்தும் செய்யுள் பாடல்களாக தேவன் தமது ஜனங்களோடு பேசிக்கொண்டு இருக்கிறார். இந்தப் புத்தகத்தை நாம் அணுகும்பொழுது நம்முடைய ஆவிக்குரிய பாதரட்சைகளை நமது பாதங்களிலிருந்து கழட்ட வேண்டியது அவசியமாகும். நாம் பரிசுத்த பூமியிலே நிற்கிறோம். உன்னதப்பாட்டானது கவனமாக கையாளக்கூடிய வலுவற்ற ஒரு மலரைப் போல இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் நான்கு வித்தயாசமான மற்றும் முக்கியமான அர்த்தங்கள் காணப்படுகிறதாக இருக்கிறது” (J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson Publishers, 1982, volume III, p. 143).

முதலாவது, உன்னதபாட்டுக் கணவன் மனைவிக்கு இடையில் உள்ள அன்பை ஒரு படமாக காட்டுகிறது. இரண்டாவது, தேவன் இஸ்ரவேலருக்குக் காட்டின அன்பை ஒரு படமாக காட்டுகிறது. பழங்கால ரபிகள் இந்த இரண்டு விளக்கங்களைக் கொடுத்தார்கள். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு இன்னும் இரண்டு விளக்கங்களும் இருக்கின்றன. மூன்றாவது, கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள அன்பை ஒரு படமாக காட்டுகிறது. நான்காவது, தனிப்பட்ட கிறிஸ்தவனுக்குக் கிறிஸ்துவின் அன்பையும், மற்றும் கிறிஸ்துவோடு ஆத்துமாவின் கூட்டுறவையும் குறித்து விளக்கமாக வர்ணிக்கிறது. தேவனுடைய பெரிய பரிசுத்தவான்களில் அநேகர் இதை அனுபவித்து இருக்கிறார்கள். ஸ்காட்டிஷ் பிசங்கியாகிய ராபர்ட் மூரேய் மெக்சைனி அவர்களுக்கு உன்னதபாட்டின் புத்தகம் மிகவும் பிடித்த புத்தகமாகும், அவர் தமது ஊழியத்தில் பலமான எழுப்புதல் அலைகளை பார்த்தார். மெக்சைனியைக் குறித்துச் சொல்லப்பட்டது, “அவர் தமது புருவத்தின் மீது நித்தியத்தை முத்திரை பதித்தவராக பிரசங்கித்தார்,” அவர் மரிக்கும்பொழுது 29 வயதினராக இருந்தபோதிலும். அவருக்கு வேதாகமத்தில் உன்னதபாட்டின் புத்தகம் மிகவும் பிடித்த புத்தகமாகும். ராபர்ட் மெக்சைனி உன்னதபாட்டின் புத்தகத்திலிருந்து பிரசங்கித்தபொழுது பலமான மனிதர்கள் தங்கள் முழங்காலில் இருந்து அழுதார்கள், மற்றும் கடினப்பட்ட பாவிகள் தங்கள் இருதயத்தை கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிய கொடுத்தார்கள். மிகப்பெரிய ஸ்காட்டிஷ் பிரசங்கியாகிய சாமுவேல் ரூத்தர்போர்டு (1600-1661), டி. எல். மூடி (1837-1899) மற்றும் ஹாரி இரான்சைடு (1876-1951), மற்றும் நான் சொன்னதுபோல, ஸ்பர்ஜன் 63 போதனைகளை உன்னதபாட்டின் புத்தகத்திலிருந்து பிரசங்கித்தார் அவர்களுக்கும் இது மிகவும் பிடித்த ஒரு வேதாகம புத்தகமாகும். உன்னதபாட்டின் புத்தகத்திலிருந்து டங்கன் காம்ப்பெல் பிரசங்கித்தபொழுது லேவிஸ் தீவுக்கு எழுப்புதல் வந்தது.

அதன்பிறகு, இப்பொழுது, இந்தப் பாடத்துக்கு நாம் வருகிறோம். மணவாட்டி தனது கணவனிடம் சொன்னாள், “அவர் முற்றிலும் அழகுள்ளவர்.” அவ்வாறாக, மேலும், உண்மையான கிறிஸ்த பரிசுத்தவான்களும்கூட சொல்லுகிறார்கள், “அவர் முற்றிலும் அழகுள்ளவர்.” நான் இந்த வார்த்தையின்மீது பிரசங்கிக்க யோசித்தபொழுது நான் நினைத்தேன், ஸ்பர்ஜன் செய்ததைபோல, “அது உயர்வானது, அதை என்னால் அடையமுடியாது.” இப்படிப்பட்ட ஆழமான பாடங்கள் சில நேரங்களில் என்னை அதிகமாக அனல் படுத்துகிறது. ஆனால் இதனுடைய எல்லா அர்த்தத்தையும் என்னால் வெளியே கொண்டுவர முடியாவிட்டாலும், அதில் சிலவற்றையாவது வெளியே கொண்டுவர நான் இந்தக் காலையிலே முயற்சி செய்கிறேன். நமது வாழ்நாள் முழுவதும் உலகத்தின் எல்லா மகிமையையும் பார்ப்பதைக் காட்டிலும் இயேசுவை ஒரு சுருக்கமான பார்வை பார்ப்பது மிகவும் நல்லதாகும், ஏனென்றால் அவர் மட்டுமே “முற்றிலும் அழகுள்ளவர்.” இயேசுவைப்பற்றிய இரண்டு வித்தியாசமான கோணங்களை ஒரு சில நிமிடங்களில் நான் உங்களுக்குக் கொடுக்கிறேன் – அதாவது உலகத்துக்கும் மற்றும் உண்மையான கிறிஸ்தவனுக்கும் உள்ள வித்தியாசங்கள்.

I. முதலாவதாக, இழக்கப்பட்ட உலகம் இயேசுவை அழகுள்ளவராகவே நினைக்காது.

உலகம் இன்று இயேசுவை எப்படியாக வெளியே தள்ளி கதவை அடைத்து விட்டது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவருடைய பெயரைக் கேட்ககூட அவர்கள் விரும்பவில்லை என்பதை இது காட்டுகிறது. ஐக்கிய நாடுகளின் விமானப்படை தனிமதகுருக்கள் இனிமேலும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க அனுமதிப்பதில்லை என்று நான் கேள்வி பட்டேன். நகரவிழாக்களில் போதகர்கள் ஜெபிக்க கேட்கபட்டபொழுது, தங்கள் ஜெபங்களை இயேசுவின் நாமத்தில் முடிக்கக்கூடாது என்று இப்பொழுது குறிப்பாக சொல்லுகிறார்கள். இயேசுவின் நாமத்தில் உள்ள இந்த வெறுப்பு புதியதல்ல, ஆனால் இது ஒவ்வொரு வருஷமும் வளர்ந்து கொண்டே வருகிறது. இயக்கப் படங்கள் ஆரம்பிக்கப்பட்ட முன் நாட்களில், கிறிஸ்தவர்கள் ஜெபித்தபொழுதெல்லாம், பின்வரும் நாமத்தைச் சொன்னதைத் திரைப்பட பெருமகன்கள் தடை செய்தார்கள், “இயேசுவின் நாமத்தில், ஆமென்.” அந்தப் பெருமகன்கள் இயேசுவின் நாமத்தை நீக்கிவிட்டதை நாம் கண்டு கொள்ளவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள் என நான் நினைக்கிறேன். ஆனால் நமது ஜெபத்தை முடிக்கும் போதெல்லாம் “இயேசுவின் நாமத்தில் ஆமென்” என்று சொல்லும்போது நாம் இதை கவனிக்கிறோம், அந்த மனிதர்கள் இயேசுவை எவ்வளவாக வெறுத்தார்கள் என்று நம்மை இது கவனிக்க செய்கிறது.

அவர்கள் இரட்சகர்மீது கொண்டிருந்த வெறுப்பு அதிகமாக இருந்ததை தேவதூஷண படத்தைத் தயாரித்து வெளியிட்டபொழுது அதை இன்னும் அதிக வெளிப்படையாக காணமுடிந்தது, “The Last Temptation of Christ,” இரட்சகரை ஒரு காமவெறிகொண்ட முட்டாளாக காட்டியிருந்தார்கள். நமது போதகர் டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் அவரது வீட்டில் தமது இருக்கையில் அமர்ந்து அந்தத் திரைப்படத்தைப்பற்றி நினைத்தபொழுது அது வெளிவரப்போகிறது என்று படித்தார். மற்றும் தேவன் அவரிடம் சொன்னார், “இதை அவர்கள் வெளியிட நீ அனுமதிக்க போகிறாயா?” டாக்டர் ஹைமர்ஸ் சொன்னார், “பிதாவே, என்னால் ஒன்றும் செய்யமுடியாது.” தேவன் அவரிடம் சொன்னார், “உன்னால் முடியாவிட்டால், ஒருவரும் செய்ய மாட்டார்கள்.” அதனால் நாங்கள் சென்று இயேசுவின் சார்பாக நின்றோம். அதை மாலை செய்திகளில் ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் வெளியிட்டார்கள். நியூயார்க் டைம்ஸ் இதழின் முன் பக்கத்தில் அதை போட்டிருந்தார்கள் மற்றும் சுவரொட்டிகளிலும் விளம்பரம் செய்தார்கள். அதை அவர்கள் நைட்லைனிலும், இரவு காட்சிகளிலும், கிராஸ் பயரிலும், மற்றும் ஒரு போட்டோவையும் அதைபற்றிய நமது கதையை டிவி கைடுலும்கூட சான்று விளக்கம் கொடுத்தார்கள்! அது சர்வதேச அளவில் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஆஸ்திரேலியா, மற்றும் இஸ்ரேலிலும், அறிக்கை அனுப்பப்பட்டது அங்கிருந்து டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் நண்பர் எருசலேம் போஸ்ட் என்ற பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் இது வெளியிடப்பட்டதாக போன் செய்து சொன்னார். இந்தத் தலைப்பில் ஒரு புத்தகம் உண்டு “முற்றுகையின் கீழ் ஆலியுட்” அதை தாமஸ் ஆர். லின்லோப் எழுதினார் (2008, The University Press of Kentucky). அதனுடைய அட்டையில் உள்ளது எனது தகப்பனார், டாக்டர் கேஹன், நமது சபை மக்கள் 125 பேரும் அந்த அசுத்தமான, தேவதூஷ்ன திரைபடத்துக்கு விரோதமாக சைன்போர்டுகளை பிடித்துக்கொண்டிருந்ததை கலர் படமாக போட்டிருந்தது. அதனுடைய பிரதானமான சைன்போர்டு, முப்பது அடி நீளமான, சைன்போர்டில் உள்ள வார்த்தை “லியு வாசர்மேன் – இயேசுவை விட்டுவிடு!” லியு வாசர்மேன் என்பவன் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளராகும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் அந்தப் புத்தகத்தில் பதிமூன்று வித்தியாசமான இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தார். அவர்கள் இயேசுவை மட்டும் வெறுக்கவில்லை, ஆனால் டாக்டர் ஹைமர்ஸ் மற்றும் எனது தகப்பனார், மற்றும் நமது சபையை, இரட்சகருக்காக தைரியமாக நின்றதற்காக வெறுத்தார்கள்! அந்தப் புத்தகம் “முற்றுகையின் கீழ் ஆலியுட்” என்று அழைக்கப்பட்டது. இதை நினைத்துப் பாருங்கள், 125 சிறிய பாப்டிஸ்டுகள் அந்த ஆலிவுட்டை “முற்றுகை இட்டார்கள்”! அந்தப் பெரிய வல்லமைமிக்க திரைப்பட பெருமகன்கள் ஒரு நகரத்தின் உள்ளிருந்த சபையின் சில டஜன் சிறிய பாப்டிஸ்டுகளால் “முற்றுகை இடப்பட்டார்கள்”! ஆனால் அந்த ஹாலிவுட் மற்றும் பவர்லி ஹில்சில் இருந்த உயர்ந்தவர்கள், நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் இருந்தவர்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எவ்வளவு அதிகமாக வெறுத்தார்கள் என்பது டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்குத் தெரியும். பில் மாஹாரிலிருந்து ஜார்ஜ் குலோனி வரைக்கும், ஆன்டர்சன் கூப்பரிலிருந்து உல்ப் பிலிட்சர் வரைக்கும் – அவர்கள் தேவகுமாரனை இகழ்ந்தார்கள் மற்றும் புறக்கணித்தார்கள். சபைகளுக்கு விரோதமாக வெளிப்படையான உபத்திரவத்தோடு இது முடிந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை, மற்றும் உங்கள் வாழ்நாளில் இதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலான கேடு என்னவென்றால், நமது அநேக சபைகளில் இயேசு இன்று பின்னாக வைத்து எரிக்கப்படுகிறார். அவருடைய நண்பர்களின் வீடுகளிலும் அவரை வரவேற்பதில்லை! டாக்டர் மைக்கேல் ஆர்டன் தம்முடைய வல்லமை உள்ள மற்றும் ஊடுருவக்கூடியதை தமது புத்தகத்தில் இதைப்பற்றி எழுதி இருக்கிறார் அதன் தலைப்பு, கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவம் (பேக்கர் புக்ஸ், 2008). அதனுடைய மேலுரையில் அது சொல்லுகிறது, “நாம் இன்னும் கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவத்துக்கு வந்தடையவில்லை, சரியாக அதன் வழியிலே நாம் இருக்கிறோம் என்று ஆர்டன் வாதாடுகிறார். நாம் கிறிஸ்துவின் நாமத்தை தொழுதுகொண்டாலும், அடிக்கடி கிறிஸ்து மற்றும் கிறிஸ்து மையமாக கொண்ட சுவிசேஷம் புறம்பாக தள்ளப்படுகிறது.” ஆனால் இன்று இயேசு மிகவும் தீதாக நடத்தப்படுகிறார் என்பதில் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. வேதாகமம் சொல்லுகிறது,

“அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டை
பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்
பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்த
வருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டை
பண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற்போனோம்” (ஏசாயா 53:2-3).

ஒரு ஜென்மசுபாவமுள்ள மனிதன், தனது இரட்சிக்கப்படாத நிலைமையில், இவ்விதமாகவே இயேசுவை பார்க்கிறான். “அழகுமில்லை சௌந்தரியமுமில்லை அவரைப் பார்க்கும்போது நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” அதனால் அவர்கள் அவரை “அசட்டைபண்ணினார்கள் மற்றும் புறக்கணித்தார்கள்”. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கும் அப்படியே இருந்தது. அவர் சிறு பையனாக இருந்தபொழது ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் கத்தோலிக்க சபைக்குள் சுற்றிக்கொண்டே இருந்தார். 1940ல் அவர்கள் எப்பொழுதும் கதவை திறந்தே வைத்திருந்தார்கள். அங்கே நிசப்தமாக மற்றும் அமைதியாக இருந்தால் அவர் அங்கே சென்றிருந்தார். அந்தச் சபையிலே உயிருள்ளதைபோல, இயேசுவின் முழு உருவ சிலை ஒன்று, தமது சிலுவையைச் சுமந்ததாக, அவரது முகத்தில் இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் இயேசுவை துயரம் நிறைந்த உருவமாக, ஒரு இரத்தச் சாட்சியாக, அவருடைய சத்துருக்களால் காரணமின்றி வெறுப்பினாலே கொல்லப்பட்டவராக பார்த்தார். அவர் மாறுதலடைவதற்குச் சில நாட்களுக்கு முன்பு வரையிலும் அந்தக் காட்சி அவரோடு இருந்தது, செப்டம்பர் 28, 1961, அவரது இருபதாவது வயதில் அவர் மாறுதலடைந்தார். அதுவரையிலும் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு இயேசு ஒரு கொடூரமாக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட, துக்ககரமான உருவமாக குறிபிட்ட எந்தக் காரணமுமில்லாமல் சிலுவையிலே அறையப்பட்டு மரித்த, ஒரு உருவமாகவே இருந்தது. ஆனால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் மாற்றப்பட்ட நாளிலே அவரை முதல் முறையாக ஒரு ஜீவனுள்ள, உயிர்த்தெழுந்த மரணத்தை ஜெயித்த இரட்சகராக, பரலோகத்திலே தேவனுடைய வலது பாரிசத்திலே ஜீவிப்பவராக, அவரை பாவத்திலிருந்து இரட்சிக்கிரவராக மற்றும் அவருடைய வாழ்க்கையை மாற்றக்கூடியவராக கண்டார். அந்தக் காலையிலே அவர் இயேசுவை பார்த்தபொழுது, கிறிஸ்து முதல்முறையாக முற்றிலும் அழகுள்ளவர் என்று கண்டார்!

II. இரண்டாவதாக, அவர் முற்றிலும் அழகுள்ளவர் என்று உண்மையான கிறிஸ்தவன் பார்க்கிறான்.

நான் அறிந்தவர்களில் இயேசு மிகவும் இனிமையான பெயர்,
   அவருடைய அழகான பெயரைப்போலவே அவர் அழகானவர்,
நான் அவரை அவ்வளவாக நேசிப்பதற்கு காரணம் அதுவே;
   ஓ, நான் அறிந்தவர்களில் இயேசு மிகவும் இனிமையான பெயர்.
(“Jesus is the Sweetest Name I Know,” Lela Long, 1924).

நமது போதகருக்கு இது வந்ததைபோல, இது உங்களுக்கும் திடீரென்று வரலாம். அல்லது நீ அவருக்கு முன்பாக விழுந்து மற்றும் அவரை உனது இரட்சகராக மற்றும் தேவனாக நம்பும் வரையிலும், அவர் எப்படியாக முற்றிலும் அழகுள்ளவர் என்பதை மெதுமெதுவாக பார்க்கலாம். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் மாற்றப்பட்ட நொடியிலே சார்லஸ் வெஸ்லியோடு சேர்ந்து பாடமுடிந்தது,

எனது சங்கிலிகள் விழுந்தன, எனது இருதயம் விடுதலையானது;
   நான் எழுந்தேன், முன் சென்றேன், மற்றும் உம்மை பின்பற்றினேன்.
அற்புதமான அன்பு! அது எப்படி
   என் தேவனே, நீங்கள், எனக்காக மரித்தீர்கள்?
(“And Can It Be?”, Charles Wesley, 1707-1788).

உண்மையில், டாக்டர் ஹைமர்ஸ் அவர்களை இயேசு இரட்சித்த அன்று காலையில் அவர்கள் இந்தப் பாடலைப் பாடினார்கள்!

எனது ஆவி சிறை படுத்தப்பட்டு நீண்டகாலமாக கிடக்கிறது,
   இயற்கையின் இரவிலும் பாவத்திலும் பலமாக கட்டுண்டது;
உமது கணிலிருந்த ஒரு உயிர்பிக்கும் கதிர் பரவியது,
   நான் விழித்தேன், சிறைக்கிடங்கு வெளிச்சத்தில் பிரகாசித்தது;
எனது சங்கிலிகள் விழுந்தன, எனது இருதயம் விடுதலையானது;
   நான் எழுந்தேன், முன் சென்றேன், மற்றும் உம்மை பின்பற்றினேன்.
அற்புதமான அன்பு! அது எப்படி
   என் தேவனே, நீங்கள், எனக்காக மரித்தீர்கள்?

அந்த நொடிபொழுதிலே நமது போதகர் மெக்சைனி அல்லது ஸ்பர்ஜனோடு சேர்ந்து சத்தமிட்டு இருப்பார், “அவர் முற்றிலும் அழகுள்ளவர்!” அவரது நுரையீரல்களின் உச்சியிலிருந்து அந்தப் பழைய ஜெர்மன் பாடலைப் பாடியிருப்பார்,

முழுவதும் அழகான கர்த்தர் இயேசு, இயற்கையெல்லாம் ஆளுபவர்,
   ஓ நீர் தேவன் மற்றும் தேவ மனித குமாரன்!
உம்மை நான் மகிழ்விப்பேன், உம்மை நான் கனம் பண்ணுவேன்,
   நீரே, என் ஆத்துமாவின் மகிமை, மகிழ்ச்சி, மற்றும் கிரீடம்!

ஆழகான இரட்சகரே! தேசங்களின் கர்த்தாவே!
   தேவகுமாரன் மற்றும் மனித குமாரன்!
முகிமை மற்றும் கனமும், துதியும், புகழும்,
   இப்பொழுதும் மற்றும் எப்பொழுதும் உம்முடையதே!
(“Fairest Lord Jesus,” 17th century German hymn,        translated by Joseph A. Seiss, 1823-1904).

“அவர் முற்றிலும் அழகுள்ளவர்.”

இதுதான் இயேசு,

“அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவை களுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவை களுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்ளானாலும், அதிகாரங்களாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.“ (கொலோசெயர் 1:15-22).

அல்லேலூயா! அதுதான் இயேசு! “ஆமாம், அவர் முற்றிலும் அழகுள்ளவர்!” நாம் அவரை வெறுத்த மற்றும் புறக்கணித்ததிலிருந்து திரும்பி நன்றியுள்ள துதியோடு அவருடைய பாதத்திலே விழுவோம் – ஏனென்றால் அவர் நம்மை இரட்சிக்க சிலுவையிலே மரித்தார், நமக்கு ஜீவனைக்கொடுக்க மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார்! அல்லேலூயா! “அவர் முற்றிலும் அழகு உள்ளவர்!” “ஆமாம், அவர் முற்றிலும் அழகு உள்ளவர்!”

நான் அறிந்தவர்களில் இயேசு மிகவும் இனிமையான பெயர்,
   அவருடைய அழகான பெயரைப்போலவே அவர் அழகானவர்,
நான் அவரை அவ்வளவாக நேசிப்பதற்கு காரணம் அதுவே;
   ஓ, நான் அறிந்தவர்களில் இயேசு மிகவும் இனிமையான பெயர்.

அவளைப் போல நீ வா அந்தப் பொல்லாத பாவியான ஸ்திரி “அவருடைய பாதங்களை முத்தஞ்செய்தாள்” (லூக்கா 7:38). இயேசு அவளிடம் சொன்னார், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” (லூக்கா 7:48). “குமாரனை முத்தம் செய்.” அப்படி செய்யவேண்டும் என்று வேதாகமம் சொல்லுகிறது! “அவரை முத்தஞ்செய்யுங்கள்… அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்” (சங்கீதம் 2:12). நீ தேவகுமாரனை இந்தக் காலையிலே முத்தம் செய்வாயா, மற்றும் உனது நம்பிக்கையை அவர்மீது வைப்பாயா? “தேவகுமாரனை முத்தம் செய்ய வேண்டுமா?” நீ சொல்லுகிறாய். ஆமாம்! ஆமாம்! விசுவாசத்தினாலே முத்தம் செய் மற்றும் அவரை நம்பி இரு, அவரே முற்றிலும் அழகுள்ளவர்! ஸ்பர்ஜன் சொன்னார்,

     நீ இயேசுவிடம் வருவதற்குப் பயப்படவேண்டிய அவசியமில்லை, அவரே “முற்றிலும் அழகுள்ளவர்.” அவர் முற்றிலும் பயங்கரமானவர் என்று அது சொல்லவில்லை – அது அவரைப்பற்றிய உன்னுடைய தவறான கணிப்பு; அவர் ஏதோ கொஞ்சம் அழகானவர் என்றும், ஏதோ குறிப்பிட்ட பாவியை சில நேரங்களில் அவர் ஏற்றுக்கொள்ளுகிறார் என்றும் அது சொல்லவில்லை; ஆனால் “அவர் முற்றிலும் அழகுள்ளவர்,” அதனால் அவர் எப்பொழுதும் படுமோசமானவர்களையும் [பாவிகள்] வரவேற்க தயாராக இருக்கிறார். அவருடைய பெயரை நினைத்துப் பாருங்கள். அது இயேசு என்பது, இரட்சகர். அது ஒரு அழகான பெயர் இல்லையா? அவருடைய வேலையை நினைத்துப் பாருங்கள். அவர் இழந்து போனதைத் தேடவும் மற்றும் இரட்சிக்கவும் வந்தார். அதுவே அவருடைய தொழில். இது அழகானது இல்லையா? அவர் என்ன செய்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். அவர் தமது இரத்தத்தினால் நமது ஆத்துமாக்களை மீட்டு எடுத்தார். அது அழகானது இல்லையா? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துப் பாருங்கள். அவர் [ஜெபிக்கிறார்] பாவிகளுக்காகத் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக... இது அழகானது இல்லையா? [எப்படியானாலும் நீ அவரை நோக்கி பார்] இயேசுவை தேவையான பாவிகளுக்கு அவர் கவர்ச்சிகரமானவர். வா, அதன்பிறகு, வரவேற்கப்படுகிறாய், உன்னை வெளியே வைக்க ஒன்றுமே இல்லை, நீ வர வேண்டும் என்று எல்லாமே [உன்னை அழைத்து] கொண்டிருக்கிறது. இந்த ஓய்வுநாளிலே உனக்கு நான் கிறிஸ்து பிரசங்கித்து இருக்கிறேன், மற்றும் அவரை உயர்த்தி இருக்கிறேன், அவரிடம் இழுக்கப்பட்ட அந்த நாளிலே நீ இரு, அவரை ஒருபோதும் மறுபடியுமாக விட்டுவிடாதே, ஆனால் அவருடையவராக என்றென்றுமாக இரு. ஆமென். (C. H. Spurgeon, “Altogether Lovely,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1977 reprint, volume 17, pages 407-408).

“ஆமாம், அவர் முற்றிலும் அழகானவர்.” மற்றும் அவர் உன்னை அவரிடம் வரும்படியும் மற்றும் அவரை நம்பும்படியும் அழைக்கிறார், எல்லா நேரத்திலும் உன்னுடைய பாவத்திலிருந்து இரட்சிக்கப்படும்படியும், மற்றும் எல்லா நித்தியத்திற்குமாக அழைக்கிறார் – ஏனென்றால் அவர் உன்னை அவ்வளவாக நேசிக்கிறார்! ஏனென்றால் அவர் உன்னை அவ்வளவாக நேசிக்கிறார்! ஏனென்றால் அவர் உன்னை அவ்வளவாக நேசிக்கிறார்! அவரிடம் வா – அவர் உன்னை அவ்வளவாக நேசிக்கிறார்! அவர் உன்னை திருப்பி அனுப்பிவிடமாட்டார் – ஏனென்றால் அவர் உன்னை அவ்வளவாக நேசிக்கிறார்!

என்னுடைய கட்டுகளிலும், துக்கத்திலும், மற்றும் இரவிலும் இருந்து,
   இயேசுவே, நான் வருகிறேன், இயேசுவே, நான் வருகிறேன்;
உம்முடைய சுதந்தரத்துக்குள்ளும், மகிழ்ச்சி, மற்றும் ஒளிக்கும்,
   இயேசுவே, நான் உம்மிடம் வருகிறேன்;
என்னுடைய வியாதியிலிருந்து உம்முடைய குணமாக்குதலுக்குள்,
   என்னுடைய வறுமையிலிருந்து உம்முடைய செல்வத்திற்கு,
என்னுடைய பாவத்திலிருந்து விடுப்பட்டு உம்மிடத்திற்கே,
   இயேசுவே, நான் உம்மிடம் வருகிறேன்.

இப்பொழுது அந்தப் பாடலின் மற்ற வரிகளைக் கவனியுங்கள்,

பயத்திலிருந்து மற்றும் கல்லறையின் மரணத்திலிருந்து,
   இயேசுவே, நான் வருகிறேன், இயேசுவே, நான் வருகிறேன்;
உமது மகிழ்ச்சிக்குள் மற்றும் உமது வீட்டின் ஒளிக்குள்,
   இயேசுவே, நான் உம்மிடம் வருகிறேன்;
சொல்ல முடியாத அழிவின் ஆழத்திலிருந்து,
   உம்முடைய சமாதான பாதுகாப்பான பட்டிக்குள்ளாக,
உமது மகிமையான முகத்தை எப்பொழுதும் பார்க்க,
   இயேசுவே, நான் உம்மிடம் வருகிறேன்.
(“Jesus, I Come,” William T. Sleeper, 1819-1904).

இயேசு உன்னை நேசிக்கிறார். இந்தக் காலையிலே நீ இயேசுவிடம் வா. நீ அவரை நம்பு. அவரைக் கண்டுகொள்ளுவாய் அவர் “முற்றிலும் அழகுள்ளவர்”. உன்னுடைய பாவங்களையெல்லாம் அவருடைய இரத்தம் கழுவி நீக்கும். இயேசுவை நம்புவதைப் பற்றி நீ எங்களோடு பேச விரும்பினால், மற்றவர்கள் மதிய உணவுக்காக மேலறைக்குப் போகும்போது, நீ வந்து முதல் இரண்டு வரிசை இருக்கைகளில் அமரவும். ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “Fairest Lord Jesus” (translated from German by Joseph A. Seiss, 1823-1904).


முக்கிய குறிப்புகள்

வெறுக்கப்பட்டவர் ஆனால் அழகானவர்!

DESPISED BUT LOVELY!

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி

“அவர் முற்றிலும் அழகுள்ளவர்” (உன்னதப்பாட்டு 5:16).

I. முதலாவதாக, இழக்கப்பட்ட உலகம் இயேசுவை அழகுள்ளவராகவே நினைக்காது, ஏசாயா 53:2-3.

II. இரண்டாவதாக, அவர் முற்றிலும் அழகுள்ளவர் என்று உண்மையான கிறிஸ்தவன் பார்க்கிறான், கொலோசெயர் 1:15-22; லூக்கா 7:38, 48; சங்கீதம் 2:12.