Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
ஸ்பர்ஜன் அவர்களின்
“எல்லா இறையியலிலும் இருந்த கருத்து”

SPURGEON’S “SUBSTANCE OF ALL THEOLOGY”
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் மே 6, 2018
கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள
பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
Preached by Dr. R. L. Hymers, Jr.
at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, May 6, 2018


ஸ்பர்ஜன் அவர்கள் 27 வயதுள்ளவராக மட்டுமே இருந்தார்கள். ஆனால் அவர் அதற்குள்ளாக லண்டன் மாநகரிலே மிகவும் பிரபலமான பிரசங்கியாக இருந்தார். அவர் ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் 30,000 மக்களுக்கு பிரசங்கம் செய்து வந்தார். செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 1861ல், அந்தப் பிரபலமான இளம் பிரசங்கியார் ஸ்வான்சீ நகரத்துக்கு விஜயம் செய்தார். அந்த நாளில் மழை பெய்துகொண்டிருந்தது. அதனால் அவர் இரண்டு இடங்களில் பிரசங்கம் செய்வார் என்று மக்களுக்குச் சொல்லப்பட்டது. பகலில் மழை நின்றது. அன்று மாலையிலே இந்தப் புகழ்பெற்ற பிரசங்கியார் வெளியிலே ஒரு பெரிய திரளான கூட்டத்துக்குப் பிரசங்கம் செய்தார். அந்தப் போதனையைதான் சில சேர்க்கைகளோடு இன்று இரவு நான் பிரசங்கிக்கிறேன். தயவுசெய்து நமது பாடத்துக்குத் திருப்பிக்கொள்ளுங்கள், யோவான் 6:37.

“பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை“ (யோவான் 6:37).

ஒருவர் ஆயிரம் போதனைகளை போதிக்க கூடிய பாடம் இதுவாகும். நமது வாழ்நாள் பாடமாக இதிலுள்ள இரண்டு கருத்துக்களையும் எடுத்துக் கொண்டாலும் – அதில் அடங்கியுள்ள பெரிய சத்தியங்கள் ஒருபோதும் முடிவுறாது.

இன்றுள்ள அநேக பெரிய பிரசங்கிகள் முதல் பாதியை நன்றாக பிரசங்கிக்க முடியும், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்…”

வேறுவிதமாக சொன்னால் அநேக நல்ல ஆர்மீனியன் பிரசங்கிகள் இந்தப் பாடத்தின் இரண்டாவது பாதியை நன்றாக பிரசங்கிக்க முடியும், “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.” ஆனால் அவர்களால் மிகவும் அழுத்தமாக முதல் பாதியை நன்றாக பிரசங்கிக்க முடியாது, “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்…”

இரண்டு குழுக்களிலும் உள்ள பிரசங்கிகளால் இரண்டு பக்கங்களையும் பார்க்க முடியாது. அவர்கள் இந்தப் பாடத்தை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அவர்களால் இரண்டு கண்களையும் திறந்து பார்க்கக்கூடிய எல்லாவற்றையும் பார்க்க கூடாது.

இப்பொழுது இன்று இரவிலே இந்தப் பாடத்தின் இரண்டு பாதிகளையும் எனது திறமையை சிறந்த வகையில் பயன்படுத்தி பேச முயற்சி செய்கிறேன் –அப்படியாக இயேசுவானவர் நாம் கேட்க வேண்டுமென்று விரும்பிய எல்லாவற்றையும் அறிவிக்கிறேன்.

I. முதலாவதாக, இரட்சிப்பு நிலைகொண்டுள்ள அஸ்திபாரம்.

“பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்”

நாம் செய்யும் ஏதோசில காரியங்களிலே இரட்சிப்பு நமக்குக் கிடைக்கவில்லை. பிதாவாகிய தேவன் செய்த சில காரியங்களிலே இரட்சிப்பு அடங்கியுள்ளது. பிதாவானவர் தமது குமாரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு, குறிப்பிட்ட மக்களை கொடுக்கிறார். குமாரன் சொல்லுகிறார், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்.” அதன் பொருள் என்னவென்றால் கிறிஸ்துவிடம் வரும் ஒவ்வொருவரும் பிதாவானவர் கொடுத்தது ஆகும். அவர்கள் வந்த காரணம் என்னவென்றால் பிதாவானவர் அவர்கள் வரும்படிக்கு அவர்களுடைய இருதயங்களில் எண்ணத்தை வைத்தார். ஒரு நபர் இரட்சிக்கப்பட்டதற்கு, மற்றும் ஒருவர் இழக்கப்பட்டதற்குக் காரணம், தேவனில் காணப்படுகிறது – ஒருவர் செய்த ஏதோ ஒன்றினால், அல்லது செய்யாத ஏதோ ஒன்றினால் இது அல்ல. ஒருவர் இரட்சிக்கப்பட்டது உணர்வினால், அல்லது உணராமையினால் அல்ல. ஆனால் அது அவனுக்கு வெளியே உள்ள ஒன்றாகும் – தேவனுடைய சர்வ வல்லமையான கிருபையினால் உண்டானதாகும். தேவனுடைய வல்லமையின் நாளிலே, அந்த இரட்சிக்கப்பட்ட நபர் இயேசுவிடம் வர சித்தம் கொடுக்கப்பட்டார். இந்தக் கருத்தை வேதாகமம் விளக்க வேண்டியது அவசியமாகும். வேதாகமம் சொல்லுகிறது,

“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” (யோவான் 1:12, 13).

மறுபடியும், வேதாகமம் சொல்லுகிறது,

“ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்” (ரோமர் 9:16).

தேவன் கிறிஸ்துவிடம் இழுத்துக்கொண்ட காரணத்தினால்தான், ஒவ்வொருவரும் பரலோகத்தில் இருக்கிறார்கள். மற்றும் பரலோகத்திற்குப் போகும் வழியிலே இருக்கும் ஒவ்வொருவரையும் தேவன் மட்டுமே அப்படியாக செய்கிறார் “மற்றவரைவிட விசேஷித்தவனாகும்படி செய்கிறவர்” (I கொரிந்தியர் 4:7).

சுபாவத்தினாலே, எல்லா மனிதரும், இயேசுவின் அழைப்பிற்கு இணங்கி வர மறுக்கிறார்கள். “யாவரும் பாவத்திற்குட்பட்டவர்கள்… உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை” (ரோமர் 3:9, 11, 12). மக்கள் இயேசுவிடம் வராததற்கு அநேக சாக்குப்போக்குகளைச் சொல்லுகிறார்கள். “அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள்” (லூக்கா 14:18). சிலர் இயேசுவை பார்க்காத காரணத்தினால் அவரிடம் வர முடியவில்லை என்று சொல்லுகிறார்கள். மற்றும் சிலர் இயேசுவை உணர முடியாத காரணத்தினால் அவரிடம் வர முடியவில்லை என்று சொல்லுகிறார்கள். இன்னும் சிலர் மற்றவர்கள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு காப்பி அடித்துக் கொண்டு இயேசுவிடம் வர முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் இயேசுவை மறுப்பதற்குச் சாக்குப்போக்குகளை உண்டாக்குகிறார்கள். ஆனால் தேவன், தமது சர்வ வல்லமையுள்ள கிருபையினால், சிலரில் ஒரு வித்தியாசத்தை உண்டாக்குகிறார். சில மனிதர்கள் மற்றும் மனுஷிகளை இயேசுவிடம் வருவதற்கு ஏதுவாக சித்தத்தை கொடுத்துத் தேவன் அவர்களை இழுத்துக்கொள்ளுகிறார். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்.” அவர்கள் “உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுமாக இருப்பார்கள்” (சங்கீதம் 110:3). தேவன், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால், கிறிஸ்துவிடம் சில மக்களை இழுக்கிறார். “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்” (I யோவான் 4:19). அதனால், எனது நண்பரே, தெரிந்துகொள்ளுதல் இருக்கிறது.

நீண்ட காலமாக நான் இதை விசுவாசிக்கவில்லை. இருந்தாலும் நான் எப்படி இரட்சிக்கப்பட்டேன் என்று எப்பொழுதும் நான் ஆச்சரியப்பட்டேன். ஹன்டிங்டன் பார்கில் உள்ள முதலாவது பாப்டிஸ்ட் சபைக்கு ஒரு ஞாயிறு பள்ளி வகுப்புக்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அந்தப் பெரிய வகுப்பில் இருந்தவர்களில் என்னுடைய அறிவுக்கு எட்டினவரையிலும் நான் ஒருவர் மட்டுமே இன்னும் சபையில் இருக்கிறேன். நான் அறிந்த வரையிலும், நான் ஒருவன் மட்டுமே மாற்றப்பட்டவனாகும். அது எப்படி முடியும்? நான் மிகவும் ஒரு பயங்கரமான பின்னணியிலிருந்து வந்தேன். சபையில் இருந்தவர்களால் நான் ஏளனம் செய்யப்பட்டேன் மற்றும் அலக்கழிக்கப்பட்டேன். எனக்கு எந்த உற்சாகமும் தரப்படவில்லை. இருந்தாலும் இயேசுவை தவிர எனது இருதயத்திலே வேறு எந்த நம்பிக்கையும் நான் அறியவில்லை. அதை நான் எப்படி அறிந்து கொண்டேன்? என்னுடைய சுயசரிதயைப் படியுங்கள் தலைப்பு, எல்லா பயங்களுக்கும் விரோதமாக. எனக்கு ஒரு நம்பிக்கையின் கதிர் கூட இல்லை. இருந்தாலும் அறுபது ஆண்டுகள் கழித்தும், இங்கே நான் இருக்கிறேன், இரட்சிப்பை பிரசங்கித்துக் கொண்டு இருக்கிறேன்! எனது வகுப்பில் இருந்தவர்களில் ஒரு கிறிஸ்தவனை கூட நான் அறியவில்லை, மற்றும் சுவிசேஷத்தை அறுபது வருடங்களாக ஒருவரும் பிரசங்கிக்கவில்லை. இது எப்படி முடியும்?

டாக்டர் கேஹானை பாருங்கள். அவர் ஒரு நாஸ்தீகனாக எழுப்பப்பட்டுயிருந்தார். அவருக்கு ஒருவரும் உதவி செய்யவில்லை. அவரை ஒருவரும் கவனிக்கவில்லை. இருந்தாலும் நான் இதுவரை அறிந்தவர்களில் மிக சிறந்த கிறிஸ்தவர்களில் அவர் ஒருவராக இருக்கிறார். இது எப்படி முடியும்?

திருமதி சாலசாரை பாருங்கள். அவள் சபைக்கு வந்ததால் அவளுடைய கணவன் அவளை அடித்தார். அவளுடைய பிள்ளைகள் சபையைவிட்டுப் போனார்கள் மற்றும் தேவனுக்கு உபயோகமற்றவர்களானார்கள். இருந்தாலும் திருமதி சாலசார் சிரமப்பட்டு தனிமையாக நடக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் ஒரு மகிழ்ச்சி நிறைந்த ஸ்திரியாக இருக்கிறார்கள். அவர்கள் தனது வாழ்க்கையை இளம் மக்கள் சபைக்கு வருவதற்கு உதவியாக பயன்படுத்துகிறார்கள். இது எப்படி முடியும்?

ஆரோன் யாஞ்சை பாருங்கள்! அவருடைய குடும்பத்தில் ஒரு நல்ல கிறிஸ்தவர்கள் கூட இல்லை. இருந்தாலும் நான் அறிந்த வரையில் ஆரோன் மிக சிறந்த கிறிஸ்தவர்களில் ஒருவராக இருக்கிறார். அது எப்படி முடியும்?

திருமதி வின்னி சென்னை பாருங்கள். அவள் கிறஸ்துவின் பின்னணியில் அமைதியாக எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கிறாள். சபையில் உள்ள மற்ற பெண்கள் அனைவரையும் விட சுவிசேஷ ஊழியத்தில் அதிகமான பெயர்களை அவள் கொண்டு வருகிறாள். அவளை தொடர்ந்து நடக்க வைப்பது என்ன? இது எப்படி முடியும்?

ஜான் சாமுவேல் கேஹானை பாருங்கள். அவர் பெரிய சபை பிளவிலே கடந்து போனார். அவருடைய நண்பர்கள் எல்லாரும் விழுந்து போனார்கள். இருந்தாலும் ஜான் கேஹான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் இங்கே பிரசங்கிறார். இருந்தாலும் ஒரு பிரசங்கியாக மாறுவதற்காக அவர் செமினரியில் படிக்கிறார். இது எப்படி முடியும்?

திருமதி ஹைமர்ஸை பாருங்கள். அவள் என்னுடைய சுவிசேஷ பிரசங்கத்தை முதல் முறையாக கேட்டவுடனே அற்புதமாக இரட்சிக்கப்பட்டாள். அவளுடைய தோழிகள் அனைவரும் சுயநலம் மற்றும் பாவத்தின் காரணமாக சபையை விட்டுப் போய்விட்டார்கள். ஆனால் திருமதி ஹைமர்ஸ் தேவனுடைய வல்லமை நிறைந்த ஒரு பெண்ணாக அதை கடந்து வந்தாள்! அது எப்படி முடியும்? இந்த மக்களின் மாற்றங்களை விவரிக்க வேறு வழி எனக்குத் தெரியவில்லை, கிறிஸ்துவின் மகா பெரிய உண்மை மற்றும் சபையின் உண்மையினால் இது முடிந்தது. தெரிந்து கொள்ளுதல் மட்டுமே இதற்குப் பதிலாகும்! யோபுவின் பாடலோடு சேர்ந்து அவர்களால் சொல்ல முடிந்தது,

“அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” (யோபு 13:15).

நான் இதுவரை அறிந்த கிறிஸ்தவர்களில் மிக பெரிய கிறிஸ்தவர் போதகர் ரிச்சர்டு வாம்பிரண்டு ஆகும். அவருடைய கதையைப் படியுங்கள் தலைப்பு, கிறிஸ்துவுக்காக வாதிக்கப்பட்டவர்கள். அதைப் படித்துப்பாருங்கள், நான் சொல்வதை ஒப்புக்கொள்வீர்கள், அதாவது அவர் தேவனுடைய பார்வையில் பில்லி கிரகாம், போப் ஜான்பால் II, அல்லது மற்ற எந்த 20ம் நூற்றாண்டின் திருச்சபை குருமார் தொகுதியிலும் அவர் மேலானவர். அவர் ஒரு கமினியூஸ்டு சிறைச்சாலையில் 14 வருடங்கள் மரணம் மட்டுமாக வாதிக்கப்பட்டவர், மரணம் மட்டுமாக அடிக்கப்பட்டவர், கிட்டதட்ட பைத்தியமாகும் அளவுக்குச் சித்தரவதை செய்யப்பட்டவர். யோபுவின் பாடலோடு சேர்ந்து அவர்களால் சொல்ல முடிந்தது,

“அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” (யோபு 13:15).

தேவனுடைய சர்வ வல்லமையான கிருபை இல்லாதிருந்தால் அதாவது அவரை தெரிந்துக்கொண்டார் மற்றும் இயேசு கிறிஸ்துவிடம் இழுத்தார் இது எப்படி முடிந்திருக்கும்? கிறிஸ்துவின் வார்த்தைகள் உண்மையாக இல்லாதிருந்தால் இது எப்படி முடிந்திருக்க முடியும்? இயேசுவானவர் தாமே சொன்னார்,

“நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்” (யோவான் 15:16).

“பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்.”

II. இரண்டாவதாக, இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட அனைவருக்கும் நித்திய இரட்சிப்பு.

“பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்”

இது நித்தியமாக உறுதியாக்கப்பட்டது, மற்றும் மனிதனால் அல்லது பிசாசினால் இதை மாற்ற முடியாத அளவுக்கு உறுதியாக்கப்பட்டது. மிகப் பெரிய அந்திகிறிஸ்துவும் கூட இயேசுவிடம் வரும் ஒருவரை நிறுத்த முடியாது, அவர்களுடைய பெயர்கள் “உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டுள்ளது” (வெளிப்படுத்தல் 13:8). இழக்கப்பட்ட ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவரால், இயேசுவிடம் இழுத்து வரப்படுகிறார்கள், மற்றும் கிறிஸ்துவில் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் காக்கப்படுகிறார்கள், மற்றும் அவருடைய ஆடாக, மகிமையின் மலைமீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்!

கவனியுங்கள்! “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.” இயேசுவுக்குப் பிதாவினால் கொடுக்கப்பட்ட ஒருவரும் அழிந்து போகார்கள். ஒருவர் இழக்கப்பட்டாலும், பின்வரும் வார்த்தைகள் பாடத்தில் வரும் “ஏறக்குறைய எல்லாரிலும்” அல்லது “ஒருவர் தவிர எல்லாரும்”. ஆனால் அது சொல்லுகிறது, “யாவும்” எந்தவிதமான தவிர்ப்பும் இல்லாமல் அனைவரும். கிறிஸ்துவின் கிரிடத்திலிருந்து ஒரு நகை இழக்கப்பட்டால், கிறிஸ்துவின் கிரிடம் சகல மகிமையோடும் விளங்க முடியாது. கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு அவயவம் அழிந்தால், கிறிஸ்துவின் சரீரம் பரிபூரணம் அடையாது.

“பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்.” “ஆனால் ஒருவேளை அவைகள் வராதிருந்தால்.” அப்படிப்பட்ட காரியங்கள் என்னால் முடிந்திருக்க முடியாது. கிறிஸ்து சொல்லுகிறார் அவர்கள் “வருவார்கள்”. தேவனுடைய வல்லமையின் நாளிலே அவர்கள் விருப்பமுள்ளவர்களாக மாற்றப்படுவார்கள். ஒருவேளை மனிதன் ஒரு சுதந்தரமான முகவராக இருந்தாலும், தேவன் அவனுக்குச் செவிசாய்க்க முடியும், சித்தமுள்ளவராக, இயேசுவிடம் வர முடியும். மனிதனை யார் சிருஷ்டித்தது? தேவன்! தேவனை உண்டாக்கினது யார்? தேவனுடைய சர்வ வல்லமையுள்ள சிங்காசனத்திற்கு நம்மை உயர்த்த முடியுமா? எஜமானாக இருப்பது யார், தனது வழியை உடையவர் யார்? தேவனா அல்லது மனிதனா? தேவனுடைய சித்தம், அது சொல்ல வைக்கிறது அவர்கள், “வர வேண்டும்,” அவர்களை எப்படி வர வைப்பதும் தெரியும்.

கடினமாக்கப்பட்ட முகமதியர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இயேசுவிடம் வருகிறார்கள் என்று இப்பொழுது நாம் வாசிக்கிறோம். ஏசாவின் பிள்ளைகளை மதத்தினால் பிசாசு அகத்தூண்டுதலால் குருடாக்கி வைத்திருந்தான் அவர்களில் இப்பொழுது அதிகமான முகமதியர்கள் இயேசுவிடம் வருகிறார்கள். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்.” தேவன் அநேக விதங்களை உபயோகப்படுத்துகிறார், ஈரானிலும், சீனாவிலும், கடலின் தீவுகளிலும், சாத்தானுடைய நுகத்தின் கீழ் உள்ள சிறைகளிலும்கூட தேவன் அநேக விதங்களை உபயோகப்படுத்துகிறார். பின்னியின் பொய்ப் போதனைகளும் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சர்வ வல்லமையுள்ள கிருபையை மேற்கொள்ள முடியாது! இதுவே வேதாகமத்தின் போதனையாகும்! இந்தத் தேவனுடைய போதனை எழுப்பதலிலே உபயோகப்படுத்தப்பட்டதாகும். ஹிப்பிகளின் போதை பொருள்கள் மற்றும் சுயாதீன பாலுறவு போன்றவை சாத்தானுடைய பிள்ளைகளைத் தேவனுடைய இராஜ்யத்திற்கு இயேசுவின் இயக்கத்தின் மூலமாக கொண்டு வரப்படுவதை தடுக்க முடியாது! மற்றும் அவர் மறுபடியுமாக அதை செய்ய முடியும்! “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்.”

ஆனால் ஒருவேளை தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட ஒருவர் மிகவும் கடினமாக மாறினால் அவருக்கு நம்பிக்கை உண்டா? அதன் பிறகு என்ன? அந்த மனிதன் தெரிந்துக்கொள்ளப்பட்டால் அவன் தேவனுடைய கிருபையினால் சிறைப்படுத்தப்பட்டவனாக இருப்பான். அவனுடைய தாடைகளில் கண்ணீர் வழிந்து ஓடும், மற்றும் அவன் இயேசுவிடம் வருவான் மற்றும் இரட்சிக்கப்படுவான். நான் கிரியையினால் இரட்சிப்பு என்று 8 வருடங்கள் இழக்கப்பட்டேன். தேவன் என்னுடைய சித்தத்தை வளைத்து, மற்றும் என்னை இயேசுவிடம் கொண்டு வர கூடுமானால், எந்த மனிதனையும் அவரால் இழுத்து வர முடியும்! தெரிந்துகொள்ளப்பட்ட எந்த ஆத்துமாவுக்கும் நம்பிக்கை அடையாமல் இருக்க முடியாது, தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவரும் நரகத்தின் கதவுகளிலிருந்து, இயேசுவிடம் இழுக்கப்படாமல் இருக்க முடியாது! தேவன் தமது கரத்தை நீட்டி, அவருடைய கையைப் போட முடியும், இழுத்துவிட முடியும் “அக்கினியினின்று தப்புவிக்க” (சகரியா 3:2).

III. மூன்றாவதாக, நமது பாடத்தின் இரண்டாவது பகுதியை கவனியுங்கள்.

“பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை“ (யோவான் 6:37).

இங்கே எந்தத் தவறும் இல்லை. தவறான நபர் வர முடியாது. ஒரு இழக்கப்பட்ட பாவி இயேசுவிடம் வந்தால், அவன் சரியானவனாக இருப்பது நிச்சயம். ஒருவர் சொல்லுகிறார், “ஒருவேளை நான் தவறான வழியிலே வருகிறேன்.” நீ தவறான வழியில் இயேசுவிடம் வர முடியாது. இயேசு சொன்னார், “ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்” (யோவான் 6:44, 65). நீ இயேசுவிடத்தில் முழுமையாக வந்தால், வருவதற்குரிய வல்லமை பிதாவினால் உனக்குக் கொடுக்கப்படுகிறது. நீ இயேசுவிடத்தில் வந்தால், அவர் உன்னை எந்த விதத்திலும் புறம்பே தள்ளிவிட மாட்டார். இயேசுவிடம் வரும் எந்தப் பாவியையும் தள்ளிவிடுவதற்குச் சாதகமான காரணம் ஒன்றுமில்லை. இயேசு சொன்னார்,

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28).

இது அவருடைய அழைப்பு மற்றும் வாக்குதத்தமும், ஆகும்.

ஸ்பர்ஜன் 27 வயதானவராக மட்டுமே இருந்தார். இந்த இளம் பிரசங்கியார் தமது போதனையை இந்த வார்த்தைகளோடு முடித்தார்:

உங்கள் ஒவ்வொருவரிடமும் இயேசுவானவர் இதை தான் சொல்லுகிறார் – இதுவே சுவிசேஷ அழைப்பு: “வா, வா, இயேசுவிடம் வா, நீ இருக்கிறபடியே வா.” நீ சொல்லுகிறாய், “ஆனால் நான் இன்னும் அதிகமாக உணர வேண்டியது அவசியமாகும்.” “இல்லை, நீ இருக்கிறபடியே வா.” “ஆனால் நான் வீட்டுக்குச் சென்று ஜெபிக்க வேண்டும்.” “இல்லை, இல்லை, நீ இருக்கிறபடியே இயேசுவிடம் வா.” நீ இயேசுவை மட்டும் நம்பினால், அவர் உன்னை இரட்சிப்பார். ஓ, நீ அவரை நம்ப தைரியத்திற்காக நான் ஜெபிக்கிறேன். யாராவது ஆட்சேபனை செய்தால், “நீ அவ்வளவு அசுத்தமான ஒரு பாவியாக இருக்கிறாய்,” பதில், “ஆமாம், அது உண்மை, நான் இருக்கிறேன்; ஆனால் நான் வர வேண்டும் என்று இயேசுவே சொன்னார்.”

வாருங்கள், பாவிகளே, ஏழைகளே மற்றும் பரிதவிக்கிறவர்களே,
பெலவீனமான மற்றும் காயப்பட்ட,
   வியாதியும் பருக்களும் உள்ளவனே;
இயேசு உன்னை இரட்சிக்க தயாராக நிற்கிறார்,
   இரக்கம் நிறைந்தவராக வல்லமை இணைந்தவராக;
அவரால் முடியும்,
   அவர் சித்தமுள்ளவர், அவர் சித்தமுள்ளவர்,
   இனிமேலும் சந்தேகப்படாதே.
(“Come, Ye Sinners,” Joseph Hart, 1712-1768).

பாவியே, இயேசுவை நம்பு, இயேசுவை நம்பினதால் நீ அழிந்துவிட்டால், உன்னோடு நானும் அழிந்துவிடுவேன். ஆனால் அது ஒருபோதும் இருக்க முடியாது; இயேசுவை நம்புகிறவர்கள் ஒருபோதும் அழிந்து போவதில்லை. இயேசுவிடம் வா, மற்றும் அவர் உன்னை புறம்பே தள்ளிவிடமாட்டார். நீ அதை உருவகப்படுத்த முயற்சி செய்யாதே. அவரை அப்படியே நம்பு, மற்றும் நீ ஒருபோதும் அழிந்துவிடமாட்டாய், ஏனென்றால் அவர் உன்னை நேசிக்கிறார்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்பாக வாசிக்கப்பட்ட வேதப்பாடம்: யோவான் 6:35 - 39.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Come, Ye Sinners” (by Joseph Hart, 1712-1768)


முக்கிய குறிப்புகள்

ஸ்பர்ஜன் அவர்களின்
“எல்லா இறையியலிலும் இருந்த கருத்து”

SPURGEON’S “SUBSTANCE OF ALL THEOLOGY”

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

“பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை“ (யோவான் 6:37).

I.    முதலாவதாக, இரட்சிப்பு நிலைகொண்டுள்ள அஸ்திபாரம்,
யோவான் 6:37அ; யோவான் 1:12, 13; ரோமர் 9:16;
I கொரிந்தியர் 4:7; ரோமர் 3:9, 11, 12; லூக்கா14:18;
சங்கீதம் 110:3; I யோவான் 4:19; யோபு 13:15; யோவான் 15:16.

II.   இரண்டாவதாக, இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட அனைவருக்கும் நித்திய இரட்சிப்பு, யோவான் 6:37அ; வெளிப்படுத்தல் 13:8;
சகரியா 3:2.

III.  மூன்றாவதாக, நமது பாடத்தின் இரண்டாவது பகுதியைக் கவனியுங்கள், யோவான் 6:37ஆ; மத்தேயு 11:28.