Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
மனிதனுடைய வீழ்ச்சி

THE FALL OF MAN
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஏப்ரல் 28, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, April 28, 2018


ஆதியாகமத்தின் புத்தகம் வேதாகமத்தின் “நாற்றங்கால்” ஆகும். அது அநேக நவீன பொய்களுக்குப் பதலளிப்பதாக உள்ள மிக சிறந்த விரும்ப தக்க ஒன்றாக இருக்கிறது. சி. எஸ். லேவிஸ், தனது வாழ்க்கையின் முடிவில், டார்வினின் பரிணாம கோட்பாடு நவீனக் காலத்தின் “மையமான பொய்யாக உள்ளது” என்றார்.

ஆதியாகமத்தில் டார்வினின் கோட்பாடு இரண்டு வழிகளில் மறுத்துரைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, மிருகங்கள் மற்றும் தாவரங்களும் கூட தேவனால் நேரடியாக சிருஷ்டிக்கப்பட்டது என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, எல்லாவிதமான தாவரங்கள் மற்றும் மிருகங்கள் “தங்கள் தங்கள் ஜாதிகளின்படியே” மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும் என்று ஆதியாகமம் நமக்குச் சொல்லுகிறது. மிருகங்கள் மற்றும் தாவரங்கள் தங்கள் “ஜாதியின்படியே” இனப்பெருக்கம் செய்ய முடியும். இது பரிணாம கோட்பாட்டை மறுத்துரைக்கிறது, பரிணாமத்தில் இனப்பெருக்கமானது “ஜாதிகளின்” குறுக்காக உண்டாக முடியும் என்று சொல்லுகிறது. பரிணாமத்தின் மிகவும் பெலவீனமான விவாதம் என்னவென்றால் இனப்பெருக்கமானது “ஜாதிகளின்” குறுக்காக உண்டாக முடியும் என்பதாகும், அந்த ஒரு “ஜாதியிலிருந்து” மற்ற ஜாதியை பிறப்பிக்க முடியும் என்பதாகும். இதுவரை இது நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறாக, பரிணாமத்தின் ஒரு அடிப்படை அம்சம் ஒரு முழுபொய் என்று ஆதியாகமம் காட்டுகிறது! ஒரு நாய் ஒருபோதும் ஒரு குதிரையாக மாறமுடியாது. ஒரு கழுகு ஒருபோதும் ஒரு கோழியாக மாறமுடியாது. ஒரு “ஜாதியிலிருந்து” மற்ற ஜாதிக்கு குறுக்காக இனப்பெருக்கம் இல்லை. பரிணாமத்தின் ஒரு அடிப்படை அம்சம் ஒரு அசுத்தமான பொய் என்று ஆதியாகமம் காட்டுகிறது!

இரண்டாவதாக, இயற்கையிலிருந்து மனிதவர்க்கம் உண்டானது என்பதை ஆதியாகமம் மறுக்கிறது. நமது முதல் பெற்றோர் ஒரு பரிபூரணமான சுற்றுப்புற சூழ்நிலையில் வசித்தார்கள். இருந்தாலும் அவர்கள் பாவிகளாக மாறினார்கள். மற்றும் அவர்களுடைய முதல் மகன் ஒரு கொலைக்காரனானான்!

மூன்றாவதாக, தீமை பிரச்சனையின் யோசனை புரிந்துக்கொள்ள முடியாதது என்பதை ஆதியாகமம் மறுக்கிறது. ஏதேன் தோட்டமானது பிசாசின் மற்றும் சாத்தானுடைய செயல்பாடுகளின் இடமாக அதிகமாக இருந்தது. ஏவாளை பாவம் செய்ய சோதித்த சர்ப்பத்திற்குள் சாத்தான் குடியிருந்தான். “நெப்பிலிம்” ஆறாம் அதிகாரத்தில் பிசாசு பிடித்த மனிதர்கள் சாதாரண பெண்களோடு கூடி வாழ்ந்தார்கள். இவ்வாறாக தீமையின் “பிரச்சனை” என்பது ஒரு பொய், சாத்தான் மற்றும் பிசாசுகளை போலியான நவீன மனிதர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறுகிறார்கள்.

நான்காவதாக, ஒருரூபப்படுத்தும் நவீன புவியியல் கோட்பாடு ஒரு பொய் என்று ஆதியாகமத்தில் காட்டப்படுகிறது. ஒரு சர்வதேச பிரளயம் உண்டானதை பற்றி ஏராளமான தகவல்கள் பூமியில் காட்டப்படுகிறது. ஒருரூபப்படுத்துதல் சொல்லுகிறது, “சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்” (II பேதுரு 3:4). அவர்கள் நோவா காலத்தில் உண்டான பெரும் பிரளயத்தை “சித்தத்தோடு அறியாதவர்கள்.” பெரிய இடுங்கிய செங்குத்தான பள்ளதாக்குப் போன்றவை எப்படி உண்டானது என்பதற்கு நவீன புவியியலில் சரியான விளக்கம் தரப்படவில்லை, அல்லது கடல்வாழ் ஜந்துக்கள் படிமங்கள் எப்படி அதி உயர்ந்த மலைகளில் காணப்படுகின்றன என்றும் விளக்கம் தரப்படவில்லை. இவ்வாறாக நவீன புவியியலுக்குப் பின் உள்ள பொய்யை ஆதியாகமம் மறுக்கிறது.

ஐந்தாவதாக, மனிதனுடைய ஒழுக்கக்கேடு நம்பத்தகுந்த வகையில் விளக்கப்படவில்லை, மற்றும் எல்லாவிதமான கோட்பாடுகளும் ஒரு பொய் என்று நடைமுறையில் நிரூபிக்கப்படுகிறது, ஏனென்றால் ஆதியாகமத்தின் வரையப்பட்டுள்ளவைகள் மனிதன் எப்படியாக தனது நீதியின் மூலப்படிவத்திலிருந்து விழுந்து காட்டுமிராண்டிதனத்திற்கு நெருங்கி சேர்ந்தான் என்பதை நம்மை சுற்றியுள்ள நவீன உலகத்தில் நாம் பார்க்கிறோம், “அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்தரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது” (ரோமர் 1:21). இவ்வாறாக, நவீனக்கால பலவிதமான மனோதத்துவங்கள் ஒரு பொய் என்று ஆதியாகமப் புத்தகத்தின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த இரவிலே இந்தப் பொய்யைப் பற்றி அதிக விளக்கமாக நாம் நோக்குவோம். தயவுசெய்து ஆதியாகமம் 3:1-10க்கு திருப்பிக்கொள்ளவும்.

“தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதா யிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத் திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம். ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள். பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள், அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக் கொண்டார்கள். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். அதற்கு அவன் நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்” (ஆதியாகமம் 3:1-10).

ஆர்த்தர் W. பிங்க் ஒரு பிரிட்டிஷ் வேத வல்லுநர் மற்றும் வேதாகம கருத்துரையாளராக இருந்தார். பிங்க் ஆதியாகமம் மூன்றாம் அதிகாரம் தேவனுடைய வார்த்தையில் மிக முக்கியமான பக்கங்களை கொண்டதாகும் என்று சரியாக சொன்னார். பிங்க் சொன்னார்,

இது “வேதாகமத்தின் நாற்றங்கால்” ஆகும். இங்கே நம்முடைய விசுவாசத்தின் பிரதானமான போதனைகளின் அஸ்திபாரங்கள் அநேகமாக அடங்கியிருக்கிறது. இங்கே தெய்வீக சத்தியத்தின் அநேக ஆறுகளின் உற்பத்தி ஸ்தானத்தை சென்றடைய முடியும். மனித வரலாற்றின் பெரிய நாடகம் இயற்றப்பட்ட மேடையின் ஆரம்பம் இங்கே இருந்தது... இங்கே [மனித] சமுதாயத்தின் அழிக்கப்பட்ட நிலைமை மற்றும் விழுந்து போன தற்கால நிலைமையின் தெய்வீக விளக்கத்தை நாம் காண்கிறோம். நமது சத்துருவாகிய பிசாசுடைய தந்திரமான ஆயுதங்களைப் பற்றி, இங்கே கற்றுக்கொள்ளுகிறோம்... மனிதவர்க்கத்தின் ஒட்டு மொத்த விரிவுடைய சுபாவத்தை மனிதனுடைய சொந்தக் கைவேலையின் ஒரு ஆயுதத்தின் மூலம் அதனுடைய சொந்த நீதியின் வெட்கத்தை மூடுவதைப் பார்க்கிறோம். (Arthur W. Pink, Gleanings in Genesis, Moody Press, 1981 edition, p. 33).

ஏதேன் தோட்டத்தில் சாத்தான் எப்படி நுழைந்தான் என்று மூன்றாம் அதிகாரம் நமக்குச் சொல்லுகிறது, இன்னும் நியாயம் தீர்க்கப்படாத சர்ப்பத்தின் வாயின் மூலமாக பேசிக்கொண்டு குடியிருந்ததைப் பற்றி நமக்குச் சொல்லுகிறது. அங்கே சாத்தான் ஸ்திரியோடு பேசினதை நாம் பார்க்கிறோம், தேவன் ஆதாமுக்குச் சொன்னதை பற்றி சந்தேகத்தை உண்டாக்கினதை, தேவன் கொடுத்த வார்த்தையை உருவேறுபடுத்தி மற்றும் திரித்ததை, நீங்கள் “நன்மை தீமை அறியதக்க” மரத்தின் கனியைப் புசித்தால், “நீங்கள் சாகவே சாவதில்லை” என்று சொன்னதை நாம் பார்க்கிறோம்.

இந்த நேரத்திலே சாத்தானானவன் ஏற்கனவே ஏமாற்றத்தின் எஜமானாக இருந்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டியது அவசியமாகும். வெளிப்படுத்தின விசேஷத்தில் வேதாகமம் சொல்லுகிறது,

“அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று…” (வெளிப்படுத்தல் 12:4).

அதன்பிறகு சில வசனங்கள் கழித்து இதனுடைய தெளிவான அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது, வெளிப்படுத்தல் 12:9ல்,

“உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்” (வெளிப்படுத்தல் 12:9).

டாக்டர் ஹென்றி எம். மோரிஸ் சொன்னார்,

இங்கே சொல்லப்பட்ட வலுச்சர்ப்பமானது ஏதேனில் காணப்பட்ட சர்ப்பத்துக்கு அடையாளமாகும் (ஆதியாகமம் 3:1)... மற்றும் இயேசுவானவரை சோதித்த [வனாந்தரத்தில்] பிசாசாகும் (Henry M. Morris, Ph.D., The Defender’s Study Bible, World Publishing, 1995, p. 1448; note on Revelation 12:9).

தேவனுக்கு விரோதமாக கலகம் செய்த காரணத்தினால் மற்றும் தேவனுடைய சிங்காசனத்தை எடுத்துக்கொள்ளும்படி தேடினபடியினால், சாத்தான் பரலோகத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டான் (ஏசாயா 14:12-15; எசேக்கியேல் 28:13-18). சாத்தான் பரலோகத்திலிருந்து இந்தப் பூமிக்குத் தள்ளப்பட்டான், அங்கே அவன் இப்படியாக மாறினான்

“...கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்கேற்றபடியாக” (எபேசியர் 2:2).

ஆனால் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்த சாத்தனை பின்பற்றின தூதர்களுக்கு என்ன நடந்தது? வெளிப்படுத்தல் 12:9 சொல்லுகிறது,

“பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது: அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்” (வெளிப்படுத்தல் 12:9).

சாத்தானோடு எவ்வளவு தூதர்கள் கலகம் செய்தார்கள்? எத்தனை பேர் “அவனோடுகூட வெளியே தள்ளப்பட்டவர்கள்” பூமியில் தள்ளப்பட்டார்கள்? வெளிப்படுத்தல் 12:4 சொல்லுகிறது,

“அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று” (வெளிப்படுத்தல் 12:4).

டாக்டர் மோரிஸ் சொன்னார்,

இந்த ‘வானத்தின் நட்சத்திரங்கள்’ சாத்தானுடைய தூதர்களாக அடையாளம் காட்டினது வெளிப்படுத்தல் 12:9 (Morris, ibid., p. 1447).

இவ்வாறாக, பரலோகத்தின் தூதர்களில் மூன்றில் ஒரு பங்கு தங்கள் தலைவனாகிய சாத்தானோடு கலகம் செய்து பூமியிலே விழத்தள்ளப்பட்டார்கள், இயேசுவானவரின் பூலோக ஊழியத்தில் அடிக்கடி எதிர்த்தவைகள் பிசாசுகளாக மாறினவைகள் இவை ஆகும்.

சாத்தான் இந்தத் தூதர்களோடு பொய்ச் சொல்லியிருப்பான். அதேவிதமான பொய்யை அவன் தூதர்களிடம் உபயோகப்படுத்தியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை, ஏதேன் தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளிடம் சொன்னான், “நீங்கள் தேவர்களை போல இருப்பீர்கள்” (ஆதியாகமம் 3:5). அந்தத் தூதர்களை அழித்துப்போட்டது அந்தப் பொய்யாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, “என்னோடுகூட வாருங்கள், மற்றும் நீங்கள் தேவர்களை போல இருப்பீர்கள்.” அவர்கள் பிசாசின் பொய்யை நம்பினார்கள், ஆனால் அவர்கள் “தேவர்களை போல” மாறவில்லை. ஓ, இல்லை! அவைகள் நேர்மைக்கேடான அசுத்தமான பிசாசுகளாக மாறின, கோபத்தோடும் ஆசை இச்சைகளோடும், மற்றும் குமுறலோடும் இந்த உலகத்தை சுற்றிக்கொண்டு இருந்தன!

சாத்தான் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்ய, தூதர்களோடு பொய்ச் சொன்னதை போல, அவன் மனிதாரிடத்தில் பொய் சொன்னபொழுது மறுபடியுமாக அப்படி செய்தான். தூதர்களிடத்தில் வெற்றிக்கொண்ட அதே யோசனையை, அவர்களை அழித்த அதே பொய்யான யோசனையை, ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாளை சோதிக்கும்போது உபயோகப்படுத்தினான். ஆதியாகமம் 3:4-5ஐ கவனியுங்கள்,

“அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” (ஆதியாகமம் 3:4-5).

பரலோத்திலே உயர்த்தப்பட்ட ஸ்தானத்திலே இருந்த பெரிய தூதர்களை அவர்களுடைய நிலைமையிலிருந்து விழச்செய்யும்படியாக, சாத்தான் அப்படிப்பட்ட ஒரு வாதத்தை, அதைபோன்ற ஒரு பொய்யைதான் உபயோகப்படுத்தி இருப்பான்.

மற்றும் இப்பொழுது அந்த பொய்யை, அந்த வடிவ சிதைவை தேவனுடைய வசனத்தில், நமது முதல் பெற்றோரிடம் கொண்டு வந்தான். மற்றும், அந்தத் தூதர்களை போல, அந்தத் தோட்டத்திலே நமது பெற்றோர்களும் அவனுடைய பொய்யை விசுவாசித்தார்கள் மற்றும் அந்த “பொய்களின் பிதாவானவனை” விசுவாசித்த தூதர்களை போல அழிக்கப்பட்டவர்களாக அவர்களும் மாறினார்கள், அதனால்தான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பரிசேயர்களிடம் சொன்னபொழுது சாத்தானை பொய்களின் பிதா என்று அழைத்தார்,

“நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்
படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” (யோவான் 8:44).

இந்த வசனத்தில் இயேசுவானவர் சாத்தானை பற்றி இரண்டு முக்கியமான காரியங்களை சொன்னார்: (1) “அவன் ஆதிமுதல் கொலைப்பாதகன்” மற்றும் (2) “அவன் ஒரு பொய்யன், மற்றும் அதற்கு பிதாவானவன்.”

சாத்தானை பின்பற்றும்படி தூதர்களை அவன் சோதித்தபொழுது தூதர்களிடம் பொய்ச் சொன்னான். ஆதாம் ஏவாளிடம் அந்தத் தோட்டத்தில் விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசிக்க சாத்தான் சோதித்தபொழுது அவன் பொய்ச் சொன்னான்.

சாத்தான் “ஆதிமுதற்கொண்டு மனுஷக் கொலைப்பாதகனாய்” இருந்தான். அவனுடைய பொய்களின் மூலமாக அவன் அவனை பின்பற்றின அவனுடைய தூதர்களை அவன் “கொலை செய்தான்,” “அவனுடைய தூதர்களை”, அவர்கள் பரலோகத்திலிருந்து பூமிக்குத் துரத்தப்பட்டார்கள், அங்கே அவர்கள் நிச்சயமான நரக ஆக்கினையின் தண்டனைக்கு வைக்கப்பட்டார்கள், “பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினி” (மத்தேயு 25:41). “அவன் ஆதிமுதற்கொண்டு ஒரு கொலைக்காரன்,” பரலோகத்தின் மூன்றில் ஒரு பங்கு தூதர்களுக்கு அவன் “கொலைக்காரன்” மட்டுமல்ல, அவன் தனது ஏமாற்று மற்றும் பொய்யினால் மனித வர்க்கம் முழுவதையும் கொலை செய்தான். இயேசு சொன்னார்,

“அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக் கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லை...” (யோவான் 8:44).

சாத்தான் மூன்றில் ஒரு பங்கு தூதர்களை அவர்களுடைய வீழ்ச்சியினால் அழித்தான். மற்றும் மனிதன் ஜீவனுள்ள தேவனை எதிர்த்து நிற்க செய்ததன் மூலமாக மற்றும் இந்தப் பெரிய பாவத்தினால் பிடிப்பட்டதன் மூலமாக சாத்தான் முழு மனுகுலத்தையும் “கொலை” செய்தான், மற்றும் சாத்தானை பின்பற்றி விழுந்த மனிதனுடைய வீழ்ச்சியை, நமது ஆரம்ப பாடத்தில் பதிவு செய்யப்பட்டது ஆதியாகமம் 3:1-10ல்.

ஆதாம் பாவம் செய்தபொழுது அவன் சாதாரண மனிதன் அல்ல. அவன் மனுக்குலம் முழுமைக்கும் இயற்கையான தலைவனாகும், மற்றும் அதேசமயம் ஒரு கூட்டாச்சி தலைவனாகவும் இருந்தான். சாத்தானுடைய கலகம் தூதர்களில் மூன்றில் ஒரு பங்கை நேரடியாக பாதித்ததைபோல, ஆதாமுடைய வீழ்ச்சியினால் ஏற்பட்ட கலகம் மற்றும் பாவம் மற்றவர்களுக்கு பெரிய விளைவைகளை உண்டாக்கியது. அவர்களின் கூட்டாச்சி தலைவனாகிய ஆதாமின் வீழ்ச்சி மனுவர்க்கம் முழுவதையும் வீழ்ச்சி அடைய செய்தது. குழந்தைகளின் ஒரு பழைய பாடப் புத்தகம் சரியாக சொல்லுகிறது, “ஆதாமின் வீழ்ச்சியினால், நாம் அனைவரும் பாவம் செய்தோம்.” சாத்தானுடைய பொய்யை விசுவாசித்து, மற்றும் விலக்கப்பட்ட கனியைப் புசித்ததால், ஆதாம் தன்னுடைய சந்ததி முழுவதுக்கும் – இந்த முழு மனுகுலத்துக்கும் மரணத்தைக் கொண்டுவந்தான். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுவதைபோல,

“ஒரே மனுஷனாலே [ஆதாம்] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோல...“ (ரோமர் 5:12).

ஆதாமின் பாவத்தின் விளைவு மனிதவர்க்கம் முழுவதையும் பாவத்தில் அழுத்தியது. வீழ்ச்சிக்கு முன்பாக, மனிதனும் தேவனும் ஐக்கியமாக இருந்தார்கள். வீழ்ச்சிக்குப் பிறகு ஐக்கியம் முடிந்து போனது. அவர்கள் தேவனைவிட்டு துண்டிக்கப்பட்டார்கள். வீழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் தேவனிடமிருந்து மறைந்துகொள்ள முயற்சி செய்தார்கள்.

வீழ்ச்சிக்கு முன்பாக மனிதன் கபடற்றவனாக மற்றும் பரிசுத்தமாக இருந்தான். ஆதாம் மற்றும் ஏவாளுக்கு எந்தப் பாவசுபாவமும் இல்லை. வீழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் பாவத்தால் நிறைந்திருந்தார்கள் மற்றும் வெட்கப்பட்டார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்,

“ஒரே மனுஷனாலே பாவம் உலகத்திலே பிரவேசித்தது“ (ரோமர் 5:12).

அந்த வசனம் “பாவங்கள்” உலகத்திலே பிரவேசித்தது என்று சொல்லவில்லை. அது “பாவம்,” என்று ஒருமையில் சொல்லுகிறது. ஆதாம் ஒரு கெட்ட உதாரணத்தை வைத்து பாவத்தை உலகத்துக்குள் கொண்டுவரவில்லை. அவனுடைய செயல் அவனது சுபாவத்துக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. அவனது இருதயமே கேடுபாடடைந்தது.

வீழ்ச்சிக்கு முன்பாக மனிதன் ஜீவவிருட்சத்தின் கனியை புசித்திருந்தால் என்றென்றும் வாழ்ந்திருப்பான் (ஆதியாகமம் 2:9; 3:22). வீழ்ச்சிக்கு பின்னாக ஆதாமின் பாவத்துக்கு தண்டனையின் ஒரு பகுதியாக சரீர மரணம் உண்டானது. ரோமர் 5:12 சொல்லுகிறது,

“ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது…” (ரோமர் 5:12).

இது ஆவிக்குரிய மற்றும் சரீர மரணம் இரண்டையும் குறிக்கிறது. ஆதாம் பாவம் செய்த பிறகு, தேவன் சொன்னார்,

“...நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” (ஆதியாகமம் 3:19) .

இவ்வாறாக, ஆதாமுடைய பாவத்தின் விளைவாக ஆவிக்குரிய மற்றும் சரீர மரணம் உண்டானது.

ஆதாமுடைய வீழ்ச்சியின் விளைவாக, பாவமானது மனிதவர்க்கத்தில் சர்வதேசமயமாக மாறினது. இப்பொழுது எல்லா மனிதர்களும் இயற்கையில் பாவம் நிறைந்தவர்களாக, மனிதவர்க்கத்தின் கூட்டாட்ச்சி தலைவனாகிய ஆதாமிடமிருந்து சுதந்தரித்துக்கொண்ட, ஒரு பாவ சுபாவத்தோடு பிறந்திருக்கிறோம். வேதாகமம் சொல்லுகிறது,

“இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது“ (ரோமர் 5:12).

இந்த மனிதனுடைய விழுந்துபோன பாவ-சுபாவம் வேதாகமம் முழுவதிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது,

“பாவம் செய்யாத மனிதனில்லை” (I ராஜாக்கள் 8:46).

“ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை” (பிரசங்கி 7:20).

“அந்தப்படியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப் போனார்கள்; நன்மைசெய்கிறவன்இல்லை, ஒருவனாகி லும் இல்லை” (ரோமர் 3:10-12).

“மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கு” (ரோமர் 3:19).

“நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது” (I யோவான் 1:8).

ஆதாமுடைய பாவம் அவனுடைய சந்ததி முழுவதற்கும் வந்தது, அதாவது, இந்த மனுவர்க்கம் முழுவதற்கும் வந்தது. மனிதனுடைய வர்க்கத்தில் ஒன்றுப்பட்ட ஒருமனபாட்டினால், ஆதாமுடைய பாவத்தை அவனுடைய வர்க்கம் முழுவதற்கும் செயல் காரணமாக தேவன் சுட்டிக்காட்டினார். இவ்வாறாக, இப்பொழுது எல்லா மனிதரும் ஆதாமுடைய வீழ்ச்சிக்குப் பிறகு அந்தச் சுபாவத்தை அவன் மூலமாக பெற்றுக்கொண்டார்கள். ரோமர் 5:12ன்படி மரணம் (ஆவிக்குரிய மற்றும் சரீர) எல்லா மனிதருக்கும், அவர்களுடைய இயற்கை தலைவனாகிய, ஆதாமின் பாவத்தின் காரணமாக அனைவருக்கும் வந்தது.

இதுதான் மனிதவர்க்கத்துக்குக “கூட்டு மொத்த நடத்தை கேடு” மூலமாக கிடைத்தது. இதன் பொருள் மனிதன் தனது இயற்கையான நடத்தை கேட்டின் நிலைமையினால் தேவனுக்கு உண்மையான அன்பு இல்லாமல் மனுவர்க்கம் முழுவதும் கெட்டுப்போனது. இதன்பொருள் தேவனுக்கு ஈடாக தன்னையே தெரிந்துக்கொண்டான், அதாவது தனது சிருஷ்டிகரைவிட தன்னையே அதிகமாக நேசிக்கிறான். கூட்டு மொத்த நடத்தை கேடானது ஒவ்வொரு மனிதனும் தனது ஜென்மசுபாவகேட்டினால் தேவனை வெறுக்கிற நிலையில் இருக்கிறான், அவருக்கு விரோதமாக ஒரு வெறுப்பு அல்லது பகைமையை உடையவனாக இருக்கிறான், மற்றும் அவருக்கு விரோதமாக இருக்கிறான்.

“எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை” (ரோமர் 8:7).

அந்த “மாம்ச சிந்தை” என்பது “ஒரு மனிதன் மறு ஜென்மம் எடுக்கவில்லை,” மறுபடியும் பிறக்கவில்லை என்பதை குறிக்கிறது (The Geneva Bible, 1599, note on Romans 8:7).

இவ்வாறாக, ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில், ஆதாமுடைய வீழ்ச்சி, உன்மீது நேரடியான பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. நீ சபையிலே எழுப்பப்பட்டிருந்தாலும் அல்லது இல்லையானாலும், நீ தேவனுக்கு மற்றும் கிறிஸ்துவுக்கு விருப்பமில்லாத சுபாவத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறாய், இது உன்னுடைய முற்பிதாவாகிய ஆதாமிலிருந்து கடத்தப்பட்டதாகும். நீ சுதந்தரித்துக் கொண்டிருக்கும் உள்ளான ஊழலிருந்து உன்னை திருப்ப உனது நினைவு, அறிவு அல்லது செய்கையின் மூலமாக முடியாது. அதனால், இரட்சிப்பானது “வெளி” தோற்றுவாயிலிருந்து, முற்றிலுமாக உன்னால் அல்லாத ஒரு தோற்றுவாயிலிருந்து உண்டாக வேண்டும். அந்தத் தோற்றுவாயானது தேவன் ஆகவே இருக்கிறார். உன்னுடைய உள்ளான கேடுபாடிலிருந்து தேவன் உன்னை உயிர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். நீ பொய்யாக கொண்டிருக்கிற இரட்சிப்பின் யோசனையை தேவன் உதிர செய்ய வேண்டியது அவசியமாகும், மற்றும் உன்னுடைய உள்ளான கேடுப்பாட்டை உனக்கு உணர்த்த வேண்டியது அவசியமாகும். தேவன் உன்னை கிறிஸ்துவினிடம் இழுக்க வேண்டியது அவசியமாகும், உன்னை சுத்திகரிக்கவும் மற்றும் புதுபிறப்பை உனக்குள் சிருஷ்டிக்கவும் வேண்டியது அவசியமாகும். ஆதாமின் பாவத்தின் காரணமாக, ஒருவருமல்லாமல் கிறிஸ்து, “கடைசி ஆதாமாகிய” அவரல்லாமல், உன்னை இரட்சிக்க முடியாது. அது கிருபையினாலே மட்டுமே, கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே உண்டான இரட்சிப்பாகும். அதைதான் நாங்கள் விசுவாசிக்கிறோம் மற்றும் பிரசங்கிக்கிறோம்.

ஆதாம் விழுவதற்கு முன்பாக, அவன் தேவனோடு பரிபூரண உறவு கொண்டிருந்தான். அவன் ஒரு நண்பனைப்போல தேவனோடு நடந்தான். ஆனால் அவன் பாவம் செய்த பிறகு, ஆதாமும் அவனுடைய மனைவியும் தோட்டத்தின் மரங்களுக்கிடையில் தேவனுக்கு விலகி மறைந்து கொண்டார்கள்.

நீ ஒரு ஆதாமின் பிள்ளையாக இருக்கிறாய். அதனால்தான் தேவனைப்பற்றிய உனது சிந்தனைகள் எல்லாம் தவறாக இருக்கிறது! அவரை நம்புவதற்கு பதிலாக, நீ அவருக்கு எதிராக கலகம் செய்கிறாய், மற்றும் உன்னுடைய முற்பிதா ஆதாம் செய்ததுபோல, நீ அவருக்கு மறைந்து கொள்ளுகிறாய். அதனால்தான் நீ கிறிஸ்துவை நம்ப முயற்சி செய்யும்பொழுது ஒன்றன்பின் ஒன்றாக தவறு செய்கிறாய். அதனால்தான் உனது மனம் வட்டமிட்டுக்கொண்டு – செய்த தவறையே மறுபடியும் மறுபடியுமாக, மற்றும் மறுபடியும், மறுபடியுமாக, முடிவில்லாமல் செய்து கொண்டே போகிறது.

ஒரு கல்லூரி மாணவனின் சாட்சி

நான் ஒன்றுக்குப்பின் ஒன்றாக பொய் மாறுதலை அடைந்தேன். மாறுதலுக்காக ஒரு உணர்ச்சி உண்டாக வேண்டியது தேவை என்று நான் நினைத்தேன். பொய் மாறுதலை பெற்றிருந்த சமயம் எனக்கு ஒரு பயங்கரமான நேரமாகும்.

நான் ஆலோசனைக்காக வந்தபொழுது, சிலவற்றை சொல்ல வேண்டுமென்று நான் முயற்சி செய்ய நினைத்தேன். போதனையில் என்ன சொல்லப்பட்டது என்பதை நினைவில் கொள்ள முயற்சித்தேன், அதனால் அதில் சிலவற்றை என்னால் திரும்ப சொல்ல முடிந்தது. ஆனால் என்னுடைய வார்த்தைகளில் எந்த அர்த்தமும் ஒருபோதும் இல்லை. மற்றவருடைய மாறுதலின் சாட்சியை நான் காப்பியடிக்க முயற்சி செய்தேன். என்ன பைத்தியக்காரத்தனம்!

என்னுடைய சொந்த பாவத்தை நினைத்து நான் தனிமையாக ஜெபிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு சுவிசேஷத்தின் பிரசங்கம் எனக்கு மிகவும் தெளிவானது. நான் இயேசுவிடம் ஒரு நிர்பந்தமான பாவியாக என்னில் எந்த நம்பிக்கையில்லாதவனாக வந்தேன் – ஆனால் என்னுடைய நம்பிக்கை இயேசுகிறிஸ்துவில் இருந்தது. இயேசுவிடம் வந்தது எனக்கு மிக முக்கியமான காரியமாக இருந்தது மற்றும் அவருடைய இரத்தத்தின் மூலமாக என்னுடைய பாவங்கள் கழுவப்பட்டு சுத்தமானது. நான் அவருடைய இரத்தத்தை நம்பினேன்.

ஒரு கல்லூரி வயது பெண்ணின் சாட்சி

சாத்தான் என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தான், “இந்த மக்கள் தவறானவர்கள். நீ இருக்கிற வகையில் நீ பரிபூரணமாக இருக்கிறாய். உனக்கு இயேசு தேவையில்லை”. அதன்பிறகு நான் சபைக்கு வந்தேன் மற்றும் நான் தவறானவள் என்று அறிந்துக்கொண்டேன். நான் அழுதுக்கொண்டிருந்தேன் மற்றும் என்னால் நிறுத்த முடியவில்லை. டாக்டர் கேஹான் என்னிடம் கேட்டார், “நீ கிறிஸ்துவிடம் வர முடியுமா?” நான் சொன்னேன் “ஆமாம், நான் அவரிடம் வருவேன். நான் அவரிடம் வருவேன்.” அந்த நாளில் என்னை கிறிஸ்துவிடம் எறிந்துவிட்டேன். நான் முற்றிலுமாக கிறிஸ்துவுக்கு என்னையே ஒப்புக்கொடுத்துவிட்டேன். இயேசுகிறிஸ்து என்னை தழுவி கொண்டார் மற்றும் என்னுடைய பாவங்கள் அவருடைய இரத்தத்தினால் கழுவி நீக்கப்பட்டன.

ஒரு இளம் மனிதனின் சாட்சி

என்னுடைய இருதயம் அசுத்தமானது, கலகமுள்ளது, பொல்லாப்பு நிறைந்தது, மற்றும் தேவனுக்கு விரோதமானது என்ற உண்மையை நான் இனிமேலும் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. நான் ஒரு நல்ல நபர் என்று நினைத்துக்கொண்டு என்னை ஏமாற்றி கொள்ள எனது இருதயத்தை இனிமேலும் விடமாட்டேன். நான் சரியில்லாமல் இருந்தேன் மற்றும் என்னில் எந்த நன்மையும் இல்லை. அப்பொழுது நான் மரித்தால் நான் நேராக நரகத்திற்குப் போவேன் என்று நான் அறிந்திருந்தேன். நான் நரகத்திற்குப் போக தகுதியானவன். நான் ஒரு பாவி. மக்களிடமிருந்து எனது பாவங்களை மறைத்துவிட முடியும் என்று நான் நினைத்தேன். ஆனால் என்னால் தேவனிடமிருந்து அவைகளை மறைக்க முடியாது. தேவன் என்னுடைய பாவங்களை எல்லாம் பார்த்தார். ஆதாம் விலக்கப்பட்ட கனியை புசித்த பிறகு மறைந்துகொள்ள முயற்சி செய்ததை போல நானும் உணர்ந்தேன். நான் முழுமையாக நம்பிக்கையில்லாதவனாக உணர்ந்தேன். என்னை போன்ற ஒரு நிர்ப்பந்தமான பாவியை என்னுடைய நல்ல கிரியைகள் எல்லாம் என்னை இரட்சிக்க முடியாது. கிறிஸ்து மட்டுமே என்னை இரட்சித்தார். அவருடைய இரத்தம் என்னுடைய பாவங்களை எல்லாம் கழுவி சுத்தகரித்தது மற்றும் என்னை மூடிக்கொண்டது. கிறிஸ்து அவருடைய இரத்தத்தில் என்னை உடுத்தினார். அவர் தம்முடைய நீதியினால் என்னை உடுத்தினார். என்னுடைய பாவம் நிறைந்த இருதயத்தை அவருடைய இரத்தம் கழுவினது. என்னுடைய நம்பிக்கை மற்றும் நிச்சயம் கிறிஸ்துவில் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு பாவியாக இருந்தேன் – ஆனால் இயேசு என்னை இரட்சித்தார்.

ஒரு இளம் கல்லூரி - வயது பெண்ணின் சாட்சி

நான் சபைக்குள் நடந்து சென்றேன் மற்றும் எனது இருதயம் பாரமாக இருந்தது. நான் ஒரு பாவி என்று உணர்ந்தேன். என்னுடைய இருதயம் அசுத்தமாக, பொல்லாததாக, தீமையினால் நிறைந்ததாக தேவனுக்கு விரோதமாக இருந்த உண்மையை இனிமேலும் நான் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. அதன்பிறகு, போதனையானது முடிவுக்கு வரும் தருணத்தில், நான் முதல் முறையாக சுவிசேஷத்தை கேட்டேன். அது எனக்கு இதற்கு முன்பாக ஒருபோதும் அர்த்தமுள்ளதாக இல்லை. கிறிஸ்து என்னுடைய ஸ்தானத்தில் என்னுடைய பாவத்துக்குரிய கிரயத்தை செலுத்த, சிலுவையிலே மரித்தார். அவர் சிலுவையிலே எனக்காக மரித்தார்! அவருடைய இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது! இயேசு எனக்கு மிகவும் தேவையாக இருந்தார். என்னுடைய கண்கள் என்னை விட்டு வெளியே உயர்த்தப்பட்டது. நான் முதல் முறையாக கிறிஸ்துவை நோக்கி பார்த்தேன், அந்த நொடிப் பொழுதிலே கிறிஸ்து என்னை இரட்சித்தார்! இப்பொழுது ஜான் நியூட்டன் அர்த்தப்படுத்துவது என்ன என்று நான் புரிந்துக்கொண்டேன், “அற்புதமான அன்பு! இந்தச் சத்தம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது, அது என்னை போன்ற ஒரு நிர்ப்பந்தமானவனை இரட்சித்தது! ஒரு காலத்தில் நான் இழக்கப்பட்டிருந்தேன் ஆனால் இப்பொழுது நான் கண்டுபிடிக்கப்பட்டேன், ஒரு காலத்தில் நான் குருடானாக இருந்தேன் ஆனால் இப்பொழுது நான் பார்க்கிறேன்!” நான் ஒரு பாவியாக இருந்தேன், இயேசு என்னுடைய பாவத்திலிருந்து என்னை இரட்சித்தார்.

நான் இயேசுவை பார்க்க அல்லது உணரவில்லை. எனக்கு ஒரு தெய்வீகமான மத சம்பந்தமான அனுபவம் ஏற்படவில்லை. நான் அவரை எளிமையாக நம்பினேன். நான் இயேசுவை நம்பின நொடிப்பொழுதிலே, அவர் என்னுடைய பாவத்தை தமது இரத்தத்தால் கழுவி நீக்கினார்.

என்னுடைய இரட்சகரின் அழைப்பை என்னால் கேட்க முடிகிறது,
என்னுடைய இரட்சகரின் அழைப்பை என்னால் கேட்க முடிகிறது,
என்னுடைய இரட்சகரின் அழைப்பை என்னால் கேட்க முடிகிறது,
நான் அவரோடு போவேன், எல்லா வழியிலும் அவரோடு போவேன்!
(“Where He Leads Me,” Ernest W. Blandy, 1890).

நான் வருகிறேன், கர்த்தாவே, இப்பொழுது உம்மிடம் வருகிறேன்;
என்னை கழுவும், கல்வாரியில் வழிந்த இரத்தத்தினால்,
என்னை சுத்தகரியும்.
(“I Am Coming, Lord,” Lewis Hartsough, 1828-1919).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“I Am Coming, Lord” (Lewis Hartsough, 1828-1919).