Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கிறிஸ்துவில் மட்டுமே!

IN CHRIST ALONE!
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஏப்ரல் 22, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, April 22, 2018

“கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக்குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமூகத்தில் பிழைத்திருப்போம்” (ஓசியா 6:1, 2).


இந்த வார்த்தையின் அர்த்தம் தெளிவாக இருக்கிறது. இஸ்ரவேலருக்குத் தேவனுடைய கடைசி அழைப்பு இதுவாகும். விரைவாக அவர்கள் அசீரியராலும் அதன்பிறகு பாபிலோனியராலும் அவர்கள் சிறைகளாக கொண்டுபோகப்பட இருந்தார்கள். அதன்பிறகு அவர்கள் அடிக்கப்பட்டார்கள் பீறிகிழிக்கப்பட்டார்கள் பிறகு அவர்கள் சொன்னார்கள், “கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்”.

ஆமாம், தீர்க்கதரிசனம் நிறைவேறினது, மற்றும் அவர்கள் பாபிலோனியரால் சிறைகளாக கொண்டுபோகப்பட்டார்கள். இந்தத் தீர்க்கதரிசனம் எதிர்காலத்தைப்பற்றி பேசுகிறது. தேவன் அவர்களை எதிர்காலத்தில் குணமாக்குவார். “அவர் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமூகத்தில் பிழைத்திருப்போம்.” அந்த எதிர்காலத்தில் இஸ்ரவேலரை தங்கள் தேசத்துக்குத் திரும்ப கொண்டு வந்து மற்றும் இரட்சிப்பார். அந்தத் தீர்க்கதரிசனத்தை தேவன் நமது நாட்களில் நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறார். இஸ்ரவேல் ஒரு சுதந்திர நாடாக 1948ல் அறிவிக்கப்பட்டது. அந்த நேரம் வரையிலும் யூதமக்கள் தேவன் தங்களுக்கு கொடுத்த சுயதேசத்துக்குத் திரும்பிக்கொண்டு இருந்தார்கள். விரைவில் அவர்கள் தங்கள் தேவனுடைய பார்வையில் இரட்சிக்கப்படுவார்கள், “இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்” (ரோமர் 11:26). இந்த வார்த்தைகளின் விளக்கம் இதுதான்.

ஆனால் இன்னும் அதிகம் இருக்கிறது. ஒருவர் சொன்னார், “ஒரு விளக்கம் இருக்கிறது ஆனால் அதற்கு அநேக செயல்பாடுகள் இருக்கின்றன.” இந்த வசனங்களுக்கு இரண்டு செயல்பாடுகள் இங்கே உள்ளன.

I. முதலாவதாக, இந்தப் பாடம் கிறிஸ்தவர்களுக்குப் பொறுந்துவதாகும்.

இந்தப் பகுதியானது கிறிஸ்தவர்களுக்குப் பொறுந்துவதை குறித்துப் பேசுகிறது. ஒரு சில கிறிஸ்தவர்கள் தடையில்லாமல் கிறிஸ்துவை பின்பற்றுகிறார்கள். அவர்கள் தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் நிலையாக இருக்கிறார்கள். ஆனால் அநேக கிறிஸ்தவர்கள் நேரத்துக்கு நேரம் குளிர்ந்து போகிறார்கள். அதனால் தேவன் நமக்குக் கஷ்டங்களையும் மற்றும் துன்பங்களையும் அனுப்புகிறார். பிரச்சனைகளும் சோதனைகளும் நம்மை பீறிகிழிக்கின்றன மற்றும் நம்மை அடிக்கின்றன. தேவன் உன்னுடைய மனதின் சமாதானத்தை எடுத்துப்போடுகிறார். நீ மன அழுத்தத்தோடும் பாரமான இருதயத்தோடும் இருக்கும்படியாக தேவன் செய்கிறார். இந்த இரவிலே இங்கே சபையிலே நீ அமர்ந்திருக்கலாம். இது உனக்கு நடக்கும்படி தேவன் ஏன் அனுமதித்தார்? நீ ஏதோ ஒரு புதிய காரியத்தை செய்யும்படியாக இதை அவர் நன்றாக வைத்திருக்கலாம். அடுத்த வருடம் ஒரு புதிய சபையை ஆரம்பிக்கும்படியாக எனக்கு உதவி செய்ய தேவன் உன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கலாம். அல்லது இந்தச் சபையிலே நீ ஒரு புதிய கடமையை செய்ய உன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கலாம். மனிதர்களாக, நாம் மாற்றத்தை விரும்பமாட்டோம். அதனால் நாம் வித்தியாசமான பொறுப்புகளை எடுத்துக்கொள்ள சித்தமாக இருக்கும் வரையிலும் தேவன் நம்மை அடிக்கவும் மற்றும் கிழிக்கவும் செய்கிறார். தமது ராஜ்யத்திலே நம்மை அதிக உபயோகமாக மாற்றதக்கதாக நாம் பற்றிக்கொண்டிருக்கும் விக்கிரகம் எதுவாக இருந்தாலும் அதை தேவன் கிழித்துப்போடுகிறார். டாக்டர் டோசர் சொன்னார், “ஒரு நபரை ஆழமாக காயப்படுத்தாவிட்டால் தேவன் அவரை அதிகமாக ஆசீர்வதிக்க முடியுமா என்பது சந்தேகமாகும்.” நீ மாற்றப்பட்டால், தேவன் உன்னை அழிக்கமாட்டார். ஆனால் அவர் உன்னை அசைத்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை தேவன் எழுப்புதலில் உன்னை உபயோகப்படுத்தலாம்!

“இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமூகத்தில் பிழைத்திருப்போம்”

நாம் ஒரு புது சபையை ஆரம்பித்தால் உங்களில் சிலர் உறுதியான கிறிஸ்தவர்களாக மாற அது உதவியாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். பிள்ளைகள் பெரியவர்களாகும்போது அடிக்கடி அவர்களுடைய கால்களிலும் கைகளிலும் வலியை உணருவார்கள். அவர்கள் அதை “வளர்ச்சி வலி” என்று அழைப்பார்கள். அதிர்ச்சி அடைய வேண்டாம். இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் உன்னை உயிர்ப்பிப்பார் மற்றும் அதிகமான நம்பிக்கையையும் அதிகமான ஜீவனையும் கொடுப்பார்! அவர் எதையெல்லாம் கிழித்துப்போடுகிறாரோ, அதற்குப் பதிலாக தமது பிரியமான குமாரனோடு அவைகளை அதிகமாக மாற்றுவார்! ஜான் நியுட்டன் எழுதினார் “ஆச்சரியமான கிருபை”. அவர் இந்தப் பாடலையும் எழுதினார்,

வளரவேண்டும் என்று நான் கர்த்தரிடம் வேண்டினேன்
விசுவாசத்திலும், அன்பிலும், மற்றும் ஒவ்வொரு கிருபையிலும்;
அவரது இரட்சிப்பை அதிகமாக அறிந்து கொள்ளவேண்டும்,
அவரது முகத்தை, அதிக ஊக்கத்தோடு, தேடவேண்டும்.

அப்படியாக ஜெபிக்கும்படி அவர் கற்றுக்கொடுத்தார்,
மற்றும் நான், நம்பும் அவர், ஜெபத்துக்கு பதிலளித்தார்!
ஆனால் என்னை ஏறக்குறைய ஏமாற்றத்துக்கு எரிந்துவிட்டார்,
அப்படியாகதான் அந்த வழி எனக்கு காணப்பட்டது.

சில நன்மையான நேரங்களில் நான் நம்பியிருந்தேன்,
உடனடியாக அவர் என் ஜெபத்துக்குப் பதில் கொடுத்தார்;
நெருக்கி ஏவும் அவரது அன்பின் வல்லமை மூலமாக,
எனது பாவங்களை நீக்கினார், இளைப்பாறுதலைத் தந்தார்.

இதற்கு பதிலாக, எனது இருதயத்தில் மறைக்கப்பட்டிருந்த
தீமைகளை நான் உணரும்படியாக அவர் செய்தார்;
எனது ஆத்துமாவின் ஒவ்வொரு பகுதியையும் நரகத்தின்
கோப வல்லமைகளிலிருந்து விலக்கி காத்துக்கொள்ளும்.

அதன்பிறகு தேவன் என்ன செய்கிறார் என்று நமக்கு அவர் சொல்லுகிறார்,

எனக்கு நியமிக்கப் பட்டிருக்கும் இந்த உள்ளான சோதனைகள்,
என்னை சுயத்திலும், பெருமையிலுமிருந்து, விலக்கி விடுவிக்கிறது;
மற்றும் பூலோக மகிழ்ச்சி திட்டங்களை உடைத்தெரிகிறது,
என்னுடைய எல்லாவற்றையும் அவருக்குள் நான் காணசெய்கிறது.”
(“I Asked the Lord that I Might Grow” by John Newton, 1725-1807).

II. இரண்டாவது, இந்தப் பாடம் இரட்சிக்கப்படாதவர்களுக்குப் பொறுத்தமாக உள்ளது.

இந்த மாலையிலே என்னுடைய பிரதானமான நோக்கம் இந்த இரண்டாவது பொறுத்தத்தை உங்களுக்குக் கொடுக்க வேண்டும், நீ இதுவரையிலும் மாற்றப்படாதிருந்தால் இது எப்படியாக உன்னோடு பேசுகிறது என்பதை உனக்குக் காட்டவேண்டும் என்பதாகும்! தேவன் உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்,

“கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக்குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமூகத்தில் பிழைத்திருப்போம்” (ஓசியா 6:1,2).

மாற்றமடைவது வேதனையுள்ளதாகும். அது வேதனையுள்ளது ஏனென்றால் நீ மாற்றமடைய விரும்பவில்லை. ஒருவேளை நீ மாற்றப்பட விரும்புகிறேன் என்று சொல்லலாம் – ஆனால் அது உண்மையல்ல. ஒருவேளை நீ மாற்றப்பட விரும்புகிறேன் என்றும் நினைக்கலாம் – ஆனால் அதுவும் உண்மையல்ல! வேதாகமம் சொல்லுகிறது, “தேவனைத்தேடுகிறவன் இல்லை” (ரோமர் 3:11). பிறகு ஏன் சில மக்கள் கிறிஸ்துவை தேட ஆரம்பிக்கிறார்கள்? அதற்குப் பதில் யோவான் 16:8ல் இருக்கிறது, அது நமக்குச் சொல்லுகிறது பரிசுத்த ஆவியானவர் “பாவத்தைக் குறித்துக் கண்டித்து உணர்த்துவார்”. “கண்டித்து உணர்த்துவார்” என்பதற்கு கிரேக்க வார்த்தை “எலின்காக்கோ” – “உணர்த்துதல்,” “ஒரு குற்றத்தை சொல்லுதல்,” “கடிந்து கொள்ளுதல்,” “உணரசெய்தல்” என்பதாகும்.

நீ ஒரு இழக்கப்பட்ட பாவி என்று சொல்லும்பொழுது அதை ஒருவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் சுவிசேஷ பிரசங்கத்தில் அப்படி சொல்லவேண்டியது அவசியம். நீ இன்னும் மாற்றப்படாததற்குக் காரணம் உனது பாவத்தை நீ உணரவில்லை என்பதாகும். அதனால்தான் ஜெபம் தேவைப்படுகிறது, தேவன் தமது ஆவியை அனுப்ப வேண்டும் என்று கேட்டும், இழக்கப்பட்ட மக்கள் கிழிக்கப்படவும், மற்றும் அடிக்கப்படவும், மற்றும் உணர்த்தப்படவும், மற்றும் கடிந்துகொள்ளப்படவும், தங்களுடைய சுயநலத்தை உணரவும், மற்றும் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு விரோதமாக அவர்களின் கலகத்தை அவர்களுக்கு உணர்த்தவும் அதிகமான ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகின்றன. இவ்வளவு அதிகமான கலகம் மற்றும் பாவம் உனக்குள் இருக்கும்பொழுது நீ எப்படி தேவனுடைய கடைசி நியாயத்தீர்ப்பில் நிற்க முடியும்? இப்படிப்பட்ட ஒரு போதனையைக் கேட்டு அதன்பிறகு மேலறையில் உள்ள ஐக்கிய விருந்தில் புசிக்க மற்றும் உனது நண்பர்களோடு பேசி சிரிக்க உன்னால் எப்படி முடியும்? ஒருநாளுக்கு ஒரு போதனையைகூட படிக்காமல் மற்றும் வீடியோவில் கவனிக்காமல் வாரமெல்லாம் எப்படி கடந்துபோவாய்? நீ பயப்பட வேண்டியது அவசியமாகும், உன்னுடைய குளிர்ந்துபோன எண்ணங்கள் மற்றும் கடினப்பட்ட இருதயங்களுக்காக உங்களைக்குறித்து இடறலடைந்து மற்றும் கோபத்தோடு இருக்கும் உண்மையான தேவனுக்கு, நீ பயப்பட வேண்டியது அவசியமாகும்!!! இது தீவிரமானதாக இருக்கிறது! இந்த உலகத்திலே இதைவிட அதிக தீவிரமானது வேறொன்றுமில்லை. நரக அக்கினி ஸ்வாலை உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது, மற்றும் பிரசங்கம் முடிந்த பிறகு உனது நண்பர்களோடு நீ சிரிக்கிறாய்! அப்படிப்பட்ட எந்த நம்பிக்கையும் உனக்கில்லை!

ஜான் கேஹன் சொல்லுவதை கவனியுங்கள், “எனது மாறுதலுக்கு முன்பாக நான் மரிப்பதைப்போல உணர்ந்தேன். நான் தூங்காமல் இருந்தேன். என்னால் புன்னுருவல் செய்யமுடியவில்லை. எந்தச் சமாதானத்தையும் என்னால் காணமுடியவில்லை... நான் அவ்வளவாக வாதிக்கப்பட்டதாக உணர்ந்ததை என்னால் நிறுத்த முடியவில்லை. நான் முழுமையாக காலியாக்கப்பட்டேன். அவைகளிலெல்லாம் நான் மிகவும் சோர்ந்து போனேன். என்னையே வெறுக்க ஆரம்பித்தேன், என் பாவத்தை வெறுத்தேன் மற்றும் அது என்னை எவ்வளவாய் உணரும்படி செய்தது... எனது பாவம் முடிவில்லாமல் மோசமாகி கொண்டே போனது. அதை என்னால் எடுத்தெறிய முடியவில்லை. என்னை நரகத்தில் தள்ள தேவன் நீதியுள்ளவர் என்று நான் அறிந்திருந்தேன். நான் போராடி மிகவும் களைத்துப் போனேன். நான் எல்லாவற்றிலும் சோர்ந்து போனேன்... நான் இயேசு இல்லாமலே இருந்தேன்... நான் இரட்சிக்கப்பட ‘முயற்சி’ செய்தேன். நான் இயேசுவை நம்ப ‘முயற்சி’ செய்து கொண்டிருந்தேன் மற்றும் முடியவில்லை. நான் ஒரு கிறிஸ்தவனாக மாற தீர்மானம் செய்ய முடியவில்லை, மற்றும் அது என்னை மிகவும் நம்பிக்கையற்றவனாக மாற்றியது.

இதற்கு பதிலாக, எனது இருதயத்தில் மறைக்கப்பட்டிருந்த
தீமைகளை நான் உணரும்படியாக அவர் செய்தார்;
எனது ஆத்துமாவின் ஒவ்வொரு பகுதியையும் நரகத்தின்
கோப வல்லமைகளிலிருந்து விலக்கி காத்துக்கொள்ளும்.

எனது பாவம் என்னை நரகத்திற்கு தள்ளிக் கொண்டு போவதை என்னால் உணரமுடிந்தது, இருந்தாலும் என்னுடைய பிடிவாதம் என்னுடைய கண்ணீரை வெளியே தள்ளியதை என்னால் உணரமுடிந்தது... நான் எல்லாவற்றையும் மரிக்க செய்தேன்!”

இது ஜானுக்கு எப்படி ஏற்பட்டது? சரியான வார்த்தைகளை சொல்ல கற்றுக்கொண்டதால் அல்ல! ஓ தேவனே, இல்லை! வார்த்தைகள் ஒருபோதும் அவருக்கு உதவிசெய்திருக்க முடியாது! ஒரு “உணர்வு” உண்டாவதினால் அல்ல. ஓ, தேவனே இல்லை! எந்த உணர்வும் அவருக்கு உதவி செய்ய முடியவில்லை.

கர்த்தர் “அவரை பீறினார். அவரே அவரை அடித்தார்!” அவரே ஜானுடைய இருதயத்தை உடைத்தார்! அவரே ஜானை அடித்து கீழே தள்ளினார்!

உண்மையான மாறுதல் வேதனை உள்ளது! நீ சர்வ வல்லமையுள்ள தேவனோடு போராடிக் கொண்டிருக்கிறாய்! அதிலிருந்து உனது வழியை அகலமாக்கிக் கொள்ள உன்னால் முடியாது. உனது வழியை அதிலிருந்து பேசிக்கொள்ள முடியாது! அதிலிருந்து உனது வழியை உன்னால் கற்றுக்கொள்ள முடியாது!!!

எனக்கு நியமிக்கப் பட்டிருக்கும் இந்த உள்ளான சோதனைகள்,
என்னை சுயத்திலும், பெருமையிலுமிருந்து, விலக்கி விடுவிக்கிறது;
மற்றும் பூலோக மகிழ்ச்சி திட்டங்களை உடைத்தெறிகிறது,
என்னுடைய எல்லாவற்றையும் அவருக்குள் காணசெய்கிறது.

“குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்” (சங்கீதம் 2:12).

ஏமி ஜெபலக்கா சொல்லுவதை கேளுங்கள், “நான் எனது பாவத்தின் கரிசனையோடு இருந்த சுய இரக்கத்தினால் மிகவும் முழுமையாக போர்த்தப்பட்டிருந்தேன்... எனது இருதயத்தின் அந்தக் கோரமான மற்றும் கருமை பார்ப்பதற்கு எப்படி இருந்தது என்று என்னால் முழுமையாக விளக்க முடியாது. தேவன் பார்த்தார் என்று அறிந்த காரியத்தை பற்றி நான் வெட்கப்பட்டிருந்தேன். எல்லாவற்றையும் பார்க்கும் தேவனுக்கு முன்பாக நான் ஒரு பயனற்ற ஜெந்துவாக காணப்பட்டேன். நான் சபையில் செய்ததெல்லாம் சுயநலப் பாவத்திலே வேறுன்றி இருந்ததுதான். சுத்தமான கிறிஸ்தவர்கள் மத்தியிலே நான் ஒரு அசுத்தமான குஷ்டரோகியை போல இருந்தேன். ஆனால் அப்படி இருந்தாலும் நான் கிறிஸ்துவை நம்பவில்லை. இயேசு வெறும் வார்த்தையாகவே இருந்தார்... மிகவும் தூரமான ஒருவராக இருந்தார்... நான் ஒரு உணர்வுக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன்... நான் இரட்சிக்கப்பட்டேன் என்று நிரூபிக்கும் ஒருவிதமான அனுபவத்துக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்... கடைசியாக டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் நான் சர்வ வல்லமையுள்ள தேவனோடு விளையாடுவதாக என்னைக் கடிந்து கொண்டார். நான் பயத்தால் நடுங்கிக்கொண்டு, என்னுடைய இருக்கையிலே அமர்ந்திருந்தேன். அது நான்தான் என்று எனக்குத் தெரியும். டாக்டர் ஹைமர்ஸ் இந்தப் பாடத்தின் மூலமாக பேசினார்,

“கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக்குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்... மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமூகத்தில் பிழைத்திருப்போம்” (ஓசியா 6:1, 2).

ஏமி சொன்னாள், “எனது பாவம் ஒரு பாதாள சமுத்திரத்தைபோல வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அதை இனிமேலும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் இயேசுவை உடையவளாக இருக்க வேண்டும்! நான் அவருடைய இரத்தத்தை உடையவளாக இருக்க வேண்டும்!”

கர்த்தர் “அவரை பீறினார். அவரே அவரை அடித்தார்!” அவரே எமியினுடைய இருதயத்தை உடைத்தார்! அவரே எமியை அடித்து கீழே தள்ளினார்!

உண்மையான மாறுதல் வேதனை உள்ளது! நீ சர்வ வல்லமையுள்ள தேவனோடு போராடிக் கொண்டிருக்கிறாய்! அதிலிருந்து உனது வழியை அகலமாக்கிக் கொள்ள உன்னால் முடியாது! உனது வழியை அதிலிருந்து பேசிக்கொள்ள முடியாது! அதிலிருந்து உனது வழியில் உன்னால் சிரித்துக்கொண்டிருக்க முடியாது!!!

அந்த வியாதி உனக்கில்லையா? நீ பீதியுற்று இருக்கிறாயா? உனது மதத்தினால் நீ கழுத்து வரையிலும் நோய்யுற்று இருக்கிறாயா? ஓ தேவனே, அக்கினி சுவாலையிலிருந்து அவர்களை இரட்சியும்!

“குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்” (சங்கீதம்.2:12).

நீ கர்த்தரால் பீறப்பட்டு இருக்கிறாயா? நீ அவருடைய கரத்தினால் காயப்பட்டு இருக்கிறாயா? தேவன் உன்னை நேசிக்கவில்லை என்பதை உன்னுடைய துக்கமாக மற்றும் வேதனையாக நீ உணருகிறாயா? அதைப்பற்றி ஒருவருக்கும் சொல்லமுடியவில்லை என்பதாக நீ உணருகிறாயா? கெத்சமெனே தோட்டத்திலே தேவன் கிறிஸ்துவை கைவிட்டதைபோல நீ தனிமையை உணருகிறாயா? நீ உனக்குள் சொல்லிக்கொண்டு இருக்கிறாயா – “தேவன் என்னை ஏன் கைவிட்டார்?” பிசாசு உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறதா, “நீ ஏன் தொடர்ந்து போகவேண்டும்? உன்னைப்பற்றி ஒருவரும் கவனிப்பதில்லை. உன்னை ஒருவரும் நேசிக்கவில்லை.” நான் உன்னை கெஞ்சுகிறேன், “பிசாசுக்குச் செவிகொடுக்க வேண்டாம்!”

நீ கவனிக்க வேண்டிய சரியான நபர் நான்தான். இந்த விதமான வேதனையின் ஊடாக குறைந்தது ஆறு தடவைகள் எனது வாழ்க்கையில் நான் கடந்து வந்திருக்கிறேன். நான் மாறுதல் அடைவதற்கு முன்பாக, ஐந்து முறைகள் நான் கடந்து வந்தேன்.

“கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக்குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமூகத்தில் பிழைத்திருப்போம்” (ஓசியா 6:1,2).

இதை நான் கடந்து வந்த ஒவ்வொரு முறையும், தேவனுக்காக நான் அதிகமாக செயல்படும்படியாக அது என்னை ஆயத்தப்படுத்தியது. ஒவ்வொரு முறையும் அந்த வேதனையானது மிகவும் அதிகமாகயிருந்தது அது ஒருபோதும் முடிந்து போகாது என்று நான் நினைத்தேன். மற்றும் இயேசுவானவர் என்னிடம் சொன்னார்,

எனக்கு நியமிக்கப் பட்டிருக்கும் இந்த உள்ளான சோதனைகள்,
என்னை சுயத்திலும், பெருமையிலுமிருந்து, விலக்கி விடுவிக்கிறது;
மற்றும் பூலோக மகிழ்ச்சி திட்டங்களை உடைத்தெறிகிறது,
என்னுடைய எல்லாவற்றையும் அவருக்குள் காணசெய்கிறது.

நான் மாற்றப்பட்டபொழுது முதலாவதாக இது வந்தது. மிகவும் சமீபகாலமாக நான் புற்று நோயினால் அடிக்கப்பட்ட பிறகு இது வந்தது. அவர்கள் சொன்னார்கள், “உனக்கு புற்றுநோய் இருக்கிறது.” அவர்கள் என்னை ஏராளமான மருந்துகளால் சுட்டார்கள். அப்பொழுது மோசே வனாந்தரத்திலே தனிமையாக இருந்ததைபோல நான் உணர்ந்தேன். நான் மறுபடியும் மறுபடியுமாக, நடு இரவிலே கண்ணீரினால் வெடித்தேன்! நான் முடிந்து போனேன் என்று நான் நினைத்தேன். நான் பீறப்பட்டவனாகயிருந்தேன். நீ எப்படி உணருவாய் என்று எனக்குத் தெரியும். ஆத்துமாவின் இருளான இரவைக் கடந்து வந்த ஒவ்வொரு நேரத்திலும், ஏதோ சில புதிய காரியத்துக்காக தேவன் என்னை ஆயத்தப்படுத்திக்கொண்டு இருந்தார். இந்த முறை ஒரு புதிய சபையை ஆரம்பிக்கும்படியாக அது இருந்தது.

அன்பான நண்பரே, தேவன் உன்னை மறந்துவிடவில்லை. ஆமாம், அவர் உன்னை பீறினார் – ஆனால் அவர் உன்னை குணமாக்குவார்! ஆமாம், அவர் உன்னை காயப்படுத்தினார் – ஆனால் அவரே உன்னை கட்டுவார்! அவர் உன்னை ஒரு நோக்கத்துக்காக அடித்தார் மற்றும் பீறினார் – கிறிஸ்து ஒருவர் மட்டுமே உனக்கு நம்பிக்கை கொடுக்க முடியும் என்று நீ அறியும்படியாக அவர் செய்கிறார்! கிறிஸ்துவுக்குள் மட்டுமே உனக்குச் சமாதானம் உண்டு என்பதை நீ அறியும்படியாக அவர் செய்கிறார்! கிறிஸ்துவுக்குள் மட்டுமே உனக்கு சந்தோஷம் உண்டு என்பதை நீ அறியும்படியாக அவர் செய்கிறார்! உன்னுடைய பாவங்களுக்குரிய கிரயத்தை செலுத்த அவர் மரித்தார் என்பதை நீ அறியும்படியாக செய்கிறார்! உனக்குப் புதிய ஜீவனை கொடுக்கும்படியாக அவர் உயிர்த்தெழுந்தார் என்பதை நீ அறியும்படியாக செய்கிறார்!

கிறிஸ்துவில் மட்டுமே எனது நம்பிக்கை காணப்பட்டது;
அவரே எனது வெளிச்சம், எனது பெலன், எனது பாடல்;
   இந்த மூலைக்கல், இந்த உறுதியான நிலம்,
   அது புயல் மற்றும் கொடிய பஞ்சத்துக்கு உறுதியாக நிற்கும்.
என்ன பெரிய உயரமான அன்பு, எவ்வளவு ஆழமான சமாதானம்,
பயங்கள் நிறுத்தப்படும்பொழுது, துடிப்புகள் நிற்கும்பொழுது!
   என்னை ஆறுதல் படுத்துபவர், எனது எல்லாமுமாக இருப்பவர் –
   கிறிஸ்துவின் அன்பிலே நான் நிற்கிறேன்.

மாம்ச வடிவெடுத்த, கிறிஸ்துவில் மட்டுமே,
உதவியற்ற பிள்ளைக்கு தேவனுடைய பரிபூரணம் உள்ளது!
   இந்த அன்பு மற்றும் நீதியின் வரங்களால்,
   தாழ்ந்தவர்களை அவர் இரட்சிக்க வந்தார்.
இயேசு சிலுவையில் மரித்தபொழுது,
தேவனுடைய கோபம் திருப்தியடைந்தது;
   எனது ஒவ்வொரு பாவமும் அவர்மேல் வைக்கப்பட்டது –
   கிறிஸ்துவின் மரணத்திலே நான் ஜீவிக்கிறேன்.

அங்கே அந்த தரையிலே அவருடைய குழந்தை கிடந்தது,
உலகத்தின் வெளிச்சம் இருளிலே வெட்டப்பட்டது;
   பிறகு மகிமையான நாள் வெடித்து வந்தது,
   கல்லறையிலிருந்து மறுபடியும் அவர் உயிரோடெழுந்தார்!
அவர் வெற்றியோடு நிற்கிறார்,
பாவத்தின் சாபம் என்மீது அதன் வல்லமையை இழந்தது;
   நான் அவருடையவன் மற்றும் அவர் என்னுடையவர் –
   கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கொண்டேன்.
(“In Christ Alone” by Keith Getty and Stuart Townend, 2001).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“In Christ Alone” (by Keith Getty and Stuart Townend, 2001). முக்கியக் குறிப்புகள்


முக்கிய குறிப்புகள்

கிறிஸ்துவில் மட்டுமே!

IN CHRIST ALONE!

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

‘“கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக்குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமூகத்தில் பிழைத்திருப்போம்” (ஓசியா 6:1, 2).

(ரோமர் 11:26)

I.   முதலாவதாக, இந்தப் பாடம் கிறிஸ்தவர்களுக்குப் பொறுந்துவதாகும்.

II.  இரண்டாவது, இந்தப் பாடம் இரட்சிக்கப்படாதவர்களுக்குப் பொறுத்தமாக உள்ளது, ரோமர் 3:11; யோவான் 16:8; சங்கீதம் 2:12.