Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ!

AS MANY AS RECEIVED HIM!
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஏப்ரல் 15, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, April 15, 2018

“அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” (யோவான் 1:11-13).


இயேசுவானவர் எருசலேமில் இருந்தார். அது பஸ்கா பண்டிகை நாட்களாக இருந்தது. இயேசு அற்புதங்களைச் செய்ததை அநேக மக்கள் பார்த்தார்கள். அந்த அற்புதங்களை அவர்கள் பார்த்தபொழுது அவர்கள் விசுவாசித்தார்கள். ஆனால் அவர்கள் அவரில் விசுவாசம் வைக்கவில்லை. அற்புதங்களை அவர்கள் விசுவாசித்தார்கள் ஆனால் அவர்கள் அவரில் விசுவாசம் வைக்கவில்லை. அதனால் அவர்களுடைய விசுவாசம் மதிப்பில்லாமல் போனது. அவைகள் இன்றுள்ள கரிஸ்மேடிக்ஸ்களை எனக்கு நினைவுபடுத்துகிறது. அவர்களுடைய விசுவாசம் அற்புதங்களை மையமாக கொண்டது. மெய்யாக அதன் அர்த்தம் “அடையாளங்களாகும்”. அவர்கள் எப்பொழுதும் அற்புதங்களை மற்றும் அடையாளங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது அப்படிப்பட்ட மக்களை இரட்சிக்காது.

“அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்த படியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. மனுஷருள் ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்க வேண்டியதாயிருக்கவில்லை” (யோவான் 2:24, 25).

இயேசுவானவரால் அவர்களுடைய இருதயத்துக்குள் இருந்ததைப் பார்க்க முடிந்தது. அவர்கள் ஒருபோதும் அவரை நம்பவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். அவர்கள் அற்புதங்களை மட்டுமே விசுவாசித்தார்கள். அவர்களுடைய விசுவசம் அற்புதங்களை மற்றும் அடையாளங்களைச் சார்ந்தது அது அவர்களை இரட்சிக்க முடியாது என்று அவருக்குத் தெரியும். “அவர்களுக்குள்லிருப்பதை அவர் அறிந்திருந்தார்.” அவர் “எல்லா மனிதருடைய” இருதயத்தை அறிந்திருக்கிறார். அவர் உன்னுடைய இருதயத்தை அறிந்திருக்கிறார். நீ புதுபிறப்பின் அனுபவத்தைப் பெற்றிருக்கிறாயா அல்லது இல்லையா என்று அவருக்குத் தெரியும். நீ புதுபிறப்பைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக உனது இருதயம் முற்றிலுமாக பாவத்தால் கெட்டுப்போய் இருந்தது. வேதாகமம் சொல்லுகிறது,

“எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது…” (எரேமியா 17:9).

இயேசுவானவர் அந்த இரவை எங்கே கழித்தார் என்று வேதாகமம் நமக்குச் சொல்லவில்லை. ஆனால் ஒரு பிரபலமான அறிவாளியான நிக்கொதேமு “இரவிலே இயேசுவிடம் வந்தான்” (யோவான் 3:1, 2). இப்பொழுது யோவான் 1:11-13ஐ பாருங்கள்,

“அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” (யோவான் 1:11-13).

ஒரு பாவி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்பொழுது இரட்சிப்பு வருகிறது. அவரை ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையான வெளிகோட்டை இந்த மூன்று வசனங்கள் வெளிபடுத்துகின்றன. வசனம் 11 சொல்லுகிறது, அநேக மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று. அநேக மக்கள் நரகத்துக்குப் போவார்கள். அது சொல்லுகிறது,

“அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவான் 1:11).

“அவருக்குச் சொந்தமானவர்கள்” என்ற வார்த்தைகளின் முதல் உபயோகம் இந்த உலகத்திலுள்ள மனிதவர்க்கத்தைக் குறித்துப் பொதுவாக பேசுகிறது. “அவருக்குச் சொந்தமானவர்கள்” என்ற வார்த்தைகளின் இரண்டாவது உபயோகம் யூதமக்களைக் குறித்துப் பேசுகிறது. அவரைப்பற்றிய அநேக பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் அவர்களுக்கு இருந்தாலும், பெரும் பகுதியான மக்கள் அவரைத் தங்கள் மேசியாவாக மற்றும் கர்த்தராக ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்து இந்தப் பூமிக்கு இறங்கி வந்தபொழுது யூதர்கள் மற்றும் இந்த உலகத்திலுள்ள பொதுவான மனிதவர்க்கம் இரண்டும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை – அவர்கள் இன்றும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்... அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்“ (ஏசாயா 53:3).

ஒரு இழக்கப்பட்ட பாவியைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர தேவனுடைய தெய்வீக வேலை தேவைப்படுகிறது. ஆனால் இது நம்மை நமது பிரதான பாடத்துக்கு எடுத்துச் செல்லுகிறது யோவான் 1:12,

“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12).

இந்தப் பாடத்திலிருந்து மூன்று கருத்துக்களை நாம் எடுத்துக்கொள்ள முடியும்.

I. முதலாவது, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்றால் அதன் பொருள் என்ன என்பதை நான் விவரிக்கிறேன்.

“ஏற்றுக்கொள்” என்ற பதத்திற்குக் கிரேக்க வார்த்தை “லாம்பானோ” என்பதாகும். அதன் பொருள் “எடுத்துக்கொள்”, “ஏற்றுக்கொள்”, “பெற்றுக்கொள்” என்பதாகும். நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படி நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். நீங்கள் கிறிஸ்துவை எடுத்துக்கொள்ளும்படி நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். நீங்கள் அவரைப் பெற்றுக்கொள்ளும்படி, அவரை நம்பும்படி, அவரை உங்கள் இரட்சகராக மற்றும் கர்த்தராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது வேதத்தில் எழுதி இருக்கிறபடி அவரை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். கிறிஸ்துவே இம்மானுவேல் – தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதாகும். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். பிதாவாகிய தேவனுடைய ஒரேபேரான குமாரனாகிய தேவன். திரித்துவத்தில் இரண்டாம் நபர், மனித சாயலில் உண்டாக்கப்பட்டவர். தேவ மனிதன், பரலோகத்தில் பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் இப்பொழுது அமர்ந்திருக்கும் தேவ மனிதன். கன்னி மரியாளிடத்தில் மனிதனாக பிறந்தவர். அவரே நித்தியமான கர்த்தர் – ஆரம்பம் அல்லது முடிவு இல்லாதவர், நித்தியமான தேவகுமாரன். இதை நீ பெற்றுக்கொள்ளாவிட்டால் உனக்குப் பெற்றுக் கொள்வதற்கு வேறு என்ன இருக்கிறது? அவரே இரட்சகர், உனது பாவத்தை வெளியே எடுத்துப் போடுபவர் மற்றும் நித்தியம் வரைக்கும் பாவங்களிலிருந்து இரட்சிக்கிறவர்!

ஆனால் நீ இயேசுவை ராஜாவாக ஏற்றுக்கொள்ளவில்லையானால் அவரை நீ ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் உனது வாழ்க்கையில் ஆளுகை செய்யவேண்டியது அவசியம். உன்னை அவருக்குக் கொடுத்துவிட வேண்டியது அவசியம். நீ அவருக்குக் கீழ்ப்படிந்து இருக்க வேண்டியது அவசியம். உனது சரீரமும் ஆத்துமாவும் கிறிஸ்துவினால் ஆளப்பட வேண்டியது அவசியம். அவருடைய கட்டுப்பாட்டில் உன்னை கீழ்ப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். நீ அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கவும் மற்றும் அவர் உன்வாழ்க்கையில் உனது சித்தம், உனது எண்ணங்கள், உனது நம்பிக்கைகள், மற்றும் உன் முழுவாழ்க்கையையும், அவர் ஆளுகை செய்யவும் வேண்டியது அவசியம். நீ இனிமேலும் சொல்ல வேண்டிய அவசியமில்லை, “இந்த மனிதன் எங்களை ஆளுகைசெய்ய எங்களுக்கு விருப்பமில்லை” என்று. ஜான் கேஹன் காதுகளால் கேட்டார் “கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடு! கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடு!” என்று. ஆனால் அது அவருக்கு துயரத்தைக் கொடுத்தது. “இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்க” அவர் விரும்பவில்லை. இயேசு அவரை கட்டுப்படுத்த அவர் விரும்பவில்லை. ஆனால் ஜான் பரிதவித்தார். “இயேசு எனக்காக சிலுவையில் அறையப்பட்டார்... ஆனால் நான் அவருக்கு ஒப்புக்கொடுக்கமாட்டேன். இந்த எண்ணம் என்னை உடைத்தது...” அந்த நொடியிலே ஜான் தம்மை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தார். அவர் சொன்னார், “நான் மரிப்பதற்கு என்னையே ஒப்புக்கொடுத்தேன், அதன்பிறகு கிறிஸ்து எனக்கு ஜீவனைக் கொடுத்தார்”. ஜார்ஜ் மெதாசன் (1842-1906) நன்றாக சொன்னார். அவருடைய பாடல் அழைக்கப்படுகிறது “என்னை ஒரு சிறைக்கைதியாக்கும், கர்த்தாவே”

என்னை ஒரு சிறைக்கைதியாக்கும், கர்த்தாவே,
அதன்பிறகு நான் விடுதலையாவேன்;
எனது பட்டயத்தை குடிவாரமாக்க என்னை கட்டாயப்படுத்தும்,
நான் வெற்றியாளனாக இருப்பேன்;
நான் பூமிக்குரிய பயங்களில் மூழ்குகிறேன்,
நான் நானாக எப்பொழுது எழுந்து நிற்பேன்;
உமது புயங்களுக்குள் என்னை சிறைக்கைதியாக்கும்,
எனது கரங்கள் உறுதிபடும்.

கிறிஸ்து ராஜாவாக மற்றும் உனது இரட்சகராக இருக்க வேண்டுமானால், அவரை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். உன்னை அவருக்குக் கொடுக்க வேண்டியது அவசியம். உனக்கு இது நடந்திருக்க வேண்டியது அவசியம். அவருடைய விலையேறப்பெற்ற இரத்தம் உனது பாவத்தை நீக்கிவிட்டதா? அவருடைய இரத்தத்தை நீ நம்பி இருக்கிறாயா? உன்னை அது உனது பாவத்திலிருந்து கழுவி நீக்கிவிட்டதா? நீ ராஜாவாக அவரை ஏற்றுக்கொண்டு அவருக்கு கீழ்ப்படிந்திருக்கிறாயா? கிறிஸ்துவை பற்றிக்கொண்டு மற்றும் அவரை உனது சொந்தமாக உரிமை பாராட்டினால் ஒழிய நீ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை “ஏற்றுக்கொள்வது” என்பது அவரை “விசுவாசிப்பதாகும்” – அதாவது உனது சொந்த இரட்சகராக, மற்றும் உனது சொந்த ராஜாவாக அவரை நம்புவதாகும். சங்கீதக்காரன் இதை இப்படியாக அமைக்கிறார், “குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்… அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்” (சங்கீதம் 2:12). தேவகுமாரனை முத்தஞ் செய்யுங்கள்! தேவகுமாரனுக்கு கீழ்ப்படிந்திருங்கள்! தேவகுமாரனை நம்பி இருங்கள்! அதுதான் தேவகுமாரனை “ஏற்றுக்கொள்வது” என்பதன் அர்த்தம்!

II. இரண்டாவதாக, தேவனுடைய குமாரனை ஏற்றுக்கொள்ள அவர் அதிகாரம் கொடுக்கிறார் என்று நாம் கற்றுக்கொள்ளுகிறோம்.

“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்...”

“அதிகாரம்” என்ற வார்த்தை “எக்ஸோஸியா” என்று மொழிபெயர்க்கப்பட்டது. ஜாமிசன், பாவுஸ்செட் மற்றும் பிரவுன் சொல்லுகிறார், “இந்த வார்த்தை... அதிகாரம் மற்றும் திறமை என்று குறிப்பிடப்படுகிறது. இங்கே நிச்சயமாக இரண்டும் இணைந்து இருக்கிறது” (ப. 348). “தேவனுடைய மகன்கள்” என்பதைவிட சிறப்பாக “தேவனுடைய பிள்ளைகள்” (NKJV) என்று மொழிபெயர்க்கலாம். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது அவருக்குள் உன் நம்பிக்கையை வைப்பதாகும் மற்றும் அவருக்கு உன்னையே ஒப்புக்கொடுப்பதாகும். நீ எப்படி ஒரு தேவனுடைய பிள்ளையாக மாறினாய்? இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதன் மூலமாக அப்படி மாறினாய்.

நான் இரண்டு வயதாயிருக்கும்போது எனது அப்பா போய்விட்டார், மற்றும் நான் அவரோடு ஒருபோதும் மறுபடியும் வாழவில்லை. நான் பெரியவனானபோது பெரிய பையன்களால் நான் அலைகழிக்கப்பட்டேன். அவர்கள் என்னை கேலிசெய்தார்கள், “ராபர்ட்டுக்கு ஒரு அப்பா இல்லை” என்று. அதனால் நான் எனது பெயரை கையெழுத்திடும்போது, “ராபர்ட் எல். ஹைமர்ஸ், ஜுனியர்” என்று கையொப்பமிட ஆரம்பித்தேன். என் அப்பா பெயருக்குப் பிறகு எனது பெயர் சேர்க்கப்பட்டது. எனக்கு மெய்யாகவே ஒரு அப்பா இருக்கிறார் என்று காட்டும்படியாக எனது பெயருக்கு பிறகு “ஜூனியர்” என்று சேர்த்துக்காண்டேன். அதை இந்த நாளிலே நான் செய்தேன். எனக்கு ஒரு அப்பா இருக்கிறார் என்று ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன்! ஆனால் தேவனை உன்னுடைய அப்பாவாக பெற்றிருக்க வேண்டியது அதைவிட மிகவும் முக்கியமானதாகும்! ஒவ்வொரு மனிதனுக்கும், மனுஷிக்கும் மற்றும் பிள்ளைக்கும் இயேசுவை தங்கள் தேவனாக ஏற்றுக்கொள்ளும் தகப்பனாக தேவன் உண்டு! நான் இந்த இரவிலே உங்கள் முன்பாக நின்று நான் ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியின் மகன் என்று சொன்னால், நீங்கள் என்மீது பொறாமை படுவீர்கள். ஆனால் இன்னும் அதிக பெருமையோடு நான் தேவனுடைய பிள்ளை என்று சொல்லுவேன். நான் இயேசுவானவரை ஏற்றுக்கொண்டேன், மற்றும் தேவனுடைய பிள்ளை நான் என்ற அதிகாரத்தை இயேசுவானவர் எனக்குக் கொடுத்தார், இந்தப் பிரபஞ்சத்தையே ஆளுகை செய்யும் அவருடைய பிள்ளை!

நான் ராஜாவுடைய ஒரு பிள்ளை,
   ராஜாவுடைய ஒரு பிள்ளை:
எனது இரட்சகராகிய இயேசுவோடு,
   நான் ராஜாவுடைய ஒரு பிள்ளை.
(“A Child of the King,” Harriet E. Buell, 1834-1910).

நீ தேவனுடைய பிள்ளையாக இருந்தால், நீ அவரால் மிகவும் விரும்பப்படுவாய். நீ தேவனுடைய பிள்ளையாக இருந்தால், அவரோடு உறவில் இணைக்கப்பட்டிருக்கிறாய், “தெய்வீக சுபாவத்தில் பங்குள்ளவர்களாக”. நீ தேவனுடைய பிள்ளையாக இருந்தால், இரவின் எந்த நேரத்திலும் அவரிடம் வரமுடியும், அவர் உனக்கு உதவிசெய்ய மற்றும் உன்னை வழிநடத்த அங்கே இருக்கிறார். ஜான் கேஹனுக்கு ஒரு அற்புதமான அப்பா இருக்கிறார். அவர் அடிக்கடி தனது அற்புதமான அப்பாவை, “எனது அப்பா இரண்டு Ph.D பெற்றிருக்கிறார்” என்று சொல்லுவார். ஆனால் என்னுடைய அப்பாவைப்பற்றி இன்னும் அதிகமாக சொல்ல முடியும்! எனது பூமிக்குரிய அப்பா உயர்நிலை பள்ளியிலிருந்து மேற்படிப்புக்கு போகவில்லை. ஆனால் என்னுடைய பரலோகபிதா இந்த பிரபஞ்சத்தையே ஆளுகை செய்யும் ராஜா!

எனது அப்பா வீடுகளும் நிலங்களும் உள்ள செல்வ சீமான்,
   உலகத்தின் செல்வத்தை அவர் தமது கரங்களில் பிடித்திருக்கிறார்!
அவை மாணிக்கங்களும் வைரங்களும், வெள்ளி மற்றும் பொன்,
d   அவரது பொக்கிஷம் நிறைந்திருக்கிறது,
சொல்லிமுடியாத செல்வம் அவரிடம் உண்டு
   நான் ராஜாவுடைய ஒரு பிள்ளை, ராஜாவுடைய ஒரு பிள்ளை:
எனது இரட்சகராகிய இயேசுவோடு, நான் ராஜாவுடைய பிள்ளை.

என்னுடைய கல்லூரி மற்றும் செமினரி செலவு கட்டணங்களைச் செலுத்த அல்லது ஒரு புது கார் வாங்க பூமிக்குரிய அப்பா எனக்கு இல்லை. ஆனால் பரலோக பிதா எனக்கு உண்டு அவர் “தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் [என்னுடைய] குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலிப்பியர் 4:19). நம்புவதற்கரிய வாக்குத்தத்தங்களைக் கொடுக்கக்கூடிய பரலோக பிதா எனக்கு உண்டு, “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13). என்னைப் பெலப்படுத்துகிற பிதா, எனது வாழ்நாளெல்லாம் என்னுடைய தேவைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்கும் எனது ராஜாவுக்கு, எல்லா மகிமையும் துதியும் கனமும் உண்டாவதாக. என்னுடைய சுய சரிதையின் உள்பக்கத்திலே, டாக்டர் கேஹன் இதை சொன்னார்,

     இயேசு கிறிஸ்து தங்களுக்கும்கூட உதவி செய்ய முடியும் என்று மக்களுக்கு காட்டுவதற்காக தடுமாறின, நசுக்கப்பட்ட மற்றும் உடைக்கப்பட்ட, மிகப்பெரிய தடைகளையும் தாண்டி முன்னுக்கு வந்த ஒரு மனிதனுடைய கதை இதுவாகும்!
     அவர் ஒரு உடைக்கப்பட்ட சண்டை சச்சரவு மிகுந்த குடிகாரக் குடும்பத்தில் வளர்ந்தார் – ஆனால் ஒரு நோக்கமுள்ளவர்களாக ஆயிரக்கணக்கான மக்களை மாற்றியவர். அவர் கல்லூரியில் தோற்றுப்போனார் – ஆனால் தொடர்ந்து மூன்று டாக்டர் பட்டங்களை அவர் வென்றார் மற்றும் 17 புத்தகங்களை எழுதினார். அவர் இறைபணியாளராக வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சித்து தோற்றுப்போனார் – ஆனால் உலக முழுவதிலும் உள்ள மக்களுக்குப் பெலன் கொடுக்கும் ஆதரவாளராக மாறினார்!
     மற்றவர்கள் அமைதியாக இருந்தபொழுது, டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் இருபது வித்தியாசமான இனக் குழுக்களால் உருவான, அற்புதமான ஒரு சபையை, லாஸ் ஏன்ஜல்ஸின் இருதயமான கீழ் நகரத்தில் நிறுவினார், மற்றும் பூமியின் கடைசி வரையிலும் செல்லக்கூடிய உலகளவான ஒரு ஊழியத்தை உண்டாக்கினார்.
     இது டாக்டர் ஆர். எல். ஹைமர்ஸ், ஜுனியர்ஸ் அவர்களின் கதையாகும், எல்லா பயங்களுக்கும் எதிராக எழும்பி முடியாததை – சாதித்த ஒரு மனிதன். எனக்குத் தெரியும், ஏனென்றால் நாற்பது வருடங்கள் அவரோடு நெருங்கி பணிசெய்து இருக்கிறேன்.
          – டாக்டர் கிறிஸ்டோபர் எல். கேஹன்.

நான் ராஜாவுடைய ஒரு பிள்ளை!

இளம் மக்களே, உங்கள் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை இயேசு கிறிஸ்துவின்மீது வையுங்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் அவர் தேவனுடைய மகன்கள் மற்றும் மகள்களாகும்படி உங்களுக்கு அதிகாரங் கொடுப்பார். அவர் உங்கள் வாழ்க்கையையும் ஆசீர்வதிப்பார், எனக்கு ஒரு பெரிய வீடு, ஊழியம் செய்ய ஒரு அற்புதமான சபை, ஒரு அருமையான மனைவி, இரண்டு சிறந்த மகன்கள், மற்றும் இரண்டு அழகான பேத்திகளைக் கொடுத்து என்னுடைய வாழ்க்கையை ஆசீர்வதித்ததுபோல. நான் ராஜாவுடைய ஒரு பிள்ளை!

நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மற்றும் அவருக்காக வாழ்ந்தால், உலகம் ஆச்சரியப்படும்படியாக அவர் உன்னையும் ஆசீர்வதிக்க முடியும் – நீயும்கூட ராஜாவினுடைய ஒரு பிள்ளையாக இருப்பாய். மற்றும் நீயும் இப்படியாக பாடமுடியும்.

நான் ராஜாவுடைய ஒரு பிள்ளை,
   ராஜாவுடைய ஒரு பிள்ளை:
எனது இரட்சகராகிய இயேசுவோடு,
   நான் ராஜாவுடைய ஒரு பிள்ளை.

“அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” (யோவான் 1:11-13).

III. மூன்றாவதாக, நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்பொழுது தேவன் நமக்கு கொடுக்கும் புது பிறப்பைப்பற்றி நாம் கற்றுக்கொள்ள முடியும்

“அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” (யோவான் 1:13).

இந்தப் போதனையின் அடிப்படை கருத்துக்களும் மற்றும் இதன் வெளிகுறிப்புகளும் “பிரசங்கிகளின் இளவரசன்” என்று அழைக்கப்பட்ட, பெரிய ஸ்பர்ஜன் அவர்களிடமிருந்து கடனாக பெற்றவைகளாகும்.

கர்த்தராகிய இயேசுவை நம்பும் ஒவ்வொருவரும் மறுபடியும் பிறந்தவர்களாகலாம். விசுவாசம் அல்லது மறுபிறப்பு – இதில் எது முதலாவது வந்தது என்று சில வேத வல்லுனர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். நான் ஸ்பர்ஜன் அவர்களோடு ஒத்துப்போகிறேன். அவர் சொன்னார் விசுவாசம் மற்றும் மறுபிறப்பு “உடன் நிகழ்வுகளாக இருக்க வேண்டும்” என்று. புதுபிறப்புக்கு வேதாகம நடைமுறை வார்த்தை மறுபிறப்பு ஆகும். ஸ்பர்ஜன் சொன்னார், “நான் இயேசுகிறிஸ்துவை நம்பும்பொழுது, நான் மறுபடியும் பிறந்திருக்கிறேனா என்று கேட்கவேண்டிய தேவையில்லை, எந்த ஒரு மறுபடியும் பிறவாதவரும் எப்பொழுதும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நம்பினதில்லை; மற்றும் மறுபிறப்படைந்திருந்தால் நான் இயேசுவை நம்ப வேண்டியது அவசியம், அப்படி செய்யவில்லையானால் அந்த நபர் பாவத்தில் மரித்து இருக்கிறார் என்பது தெளிவாகும்... ஒரு நபர் மறுபடியும் பிறந்திருக்கிறார் என்பதை விசுவாசத்தின் கிரியை காட்டிவிடும்.”

நாம் கிறிஸ்தவர்களாக பிறப்பதில்லை. நாம் “புருஷனுடைய சித்தத்தினாலும்” பிறப்பதில்லை. இந்த உலகத்திலேயே மிகப்பெரிய கிறிஸ்தவர்களும் நம்மை புதிதாக்கிவிட முடியாது. நாம் “மாம்ச சித்தத்தினாலே” மறுபடியும் பிறக்கவில்லை. நம்முடைய சொந்த சித்தத்தினால் நாம் மறுபடியும் பிறக்கவில்லை. மனித சித்தம் மறுபிறப்பை உண்டாக்க திறமை வாய்ந்ததல்ல. நாம் பரத்திலிருந்து மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியம். பரிசுத்த ஆவியானவர் சக்தியாக நமக்குள் நுழைகிறார் மற்றும் நம்மை புதுசிருஷ்டிகளாக்குகிறார்.

எங்கே இயேசுவில் விசுவாசம் இருக்கிறதோ அங்கே புதிய ஜீவன் இருக்கும். எங்கே இயேசுவில் விசுவாசம் இல்லையோ அங்கே புதிய ஜீவன் இல்லை. நீ இயேசுவை நம்பினால் மறுபடியும் பிறந்திருப்பாய், “புருஷனுடைய சித்தத்தினால் பிறவாமல், தேவனாலே பிறந்திருப்பாய்.” நான் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டியது அவசியம் – நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாயா? ஆம் அல்லது இல்லை என்று சொல்லு. நீ இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாயா? அவரை மட்டுமே நம்புகிறாயா? நீ சொல்லுவாயா,

கிறிஸ்துவாகிய உறுதியான கற்பாறையிலே நான் நிற்கிறேன்,
மற்ற சகல நிலமும் அமிழும் மணலாகும்?

நீ இயேசு கிறிஸ்துவை நம்புகிறாயா? நீ அவரை ஏற்றுக்கொண்டாயா? இதுவரை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இப்பொழுது ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? அவரை ஏற்றுக்கொள்ளுவதில் ஏதாவது கடினம் இருக்கிறதா? என்னில் விசுவாசமாக இருப்பது ஒரு காரியம். ஆனால் நீ இயேசு கிறிஸ்துவில் விசுவாசமாக இருப்பது மற்றொரு காரியம். அவரில் விசுவாசமாக இருப்பது என்றால் அவரை நம்பி இருப்பது. அவரை நம்புவது என்றால் அவரை ஏற்றுக்கொள்ளுவதாகும்.

டாக்டர் கேஹன் அவர்கள் உன்னைக் இப்படிக் கேட்கிறார், “நீ கிறிஸ்துவை நம்பி இருக்கிறாயா?” நீ என்ன சொல்லுவாய்? நீ அவரை பார்க்க வேண்டியதில்லை. நீ அவரை உணர வேண்டியதில்லை. நீ அவரை நம்ப மட்டுமே வேண்டும். டாக்டர் கேஹன் அவர்கள் உன்னை தந்திரமாக திருப்ப முயற்சி செய்ய மாட்டார். அவர் உன்னை தேர்ச்சி பெறசெய்ய விரும்புகிறார், மற்றும் நான் உனக்கு ஞானஸ்நானம் கொடுக்க விரும்புகிறேன். உன்னைப்போன்ற மக்கள் இயேசுவை நம்புவதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். உனது பாவங்களுக்குரிய கிரயத்தைச் செலுத்த இயேசு சிலுவையிலே மரித்தார். நீ அவரை நம்புவாயா? இந்த இரவிலே இயேசு உன்னை ஆழமாக விரும்புகிறார். நீ அவரை நம்புவாயா? இந்த இரவிலே, இப்பொழுது, நீ ஏன் இயேசுவை நம்பக்கூடாது? நீ சொல்லுகிறாய், “நான் இயேசுவை நம்ப விரும்புகிறேன்” என்று. அப்படியானால் அதை இப்பொழுது நீ ஏன் செய்யக்கூடாது? உணர்வை பார்க்க வேண்டாம். இயேசுவை பார். சில பெரிய அனுபவத்தை பார்க்க வேண்டாம். இயேசுவை பார். உனக்குள்ளே பார்க்க வேண்டாம். உன்னை இரட்சிக்கக்கூடிய ஒன்றும் உனக்குள் இல்லை. உனது சொந்த நினைவுகளை நம்ப வேண்டாம். இயேசுவை மட்டும் நம்பு. இயேசுவை ஏற்றுக்கொள், மற்றும் அவர் உன்னை ஏற்றுக்கொள்ளுவார்!

இப்பொழுது ஏன் கூடாது? இப்பொழுது ஏன் கூடாது?
   இப்பொழுது ஏன் இரட்சகரை நம்பக்கூடாது?
இப்பொழுது ஏன் கூடாது? இப்பொழுது ஏன் கூடாது?
   இப்பொழுது ஏன் இரட்சகரை நம்பக்கூடாது?

அலையும் மனதுக்கு சிறிதளவு சமாதானத்தை
   இந்த உலகத்தில் நீ காண தவறிவிட்டாய்;
கிறிஸ்துவிடம் வா, அவர்மேல் விசுவாசம் கொள்,
   சமாதானத்தையும் ஆறுதலையும் நீ பெற்றுக்கொள்ளுவாய்.

இப்பொழுது ஏன் கூடாது? இப்பொழுது ஏன் கூடாது?
   இப்பொழுது ஏன் இரட்சகரை நம்பக்கூடாது?
இப்பொழுது ஏன் கூடாது? இப்பொழுது ஏன் கூடாது?
   இப்பொழுது ஏன் இரட்சகரை நம்பக்கூடாது?
(“Why Not Now?” by Daniel W. Whittle, 1840-1901;
      altered by the Pastor).

இயேசுவை நம்புவது எளிது. எமி ஜெபலகா என்ன சொன்னார் என்று கவனியுங்கள், “நான் ஒரு உணர்வுக்காக காத்திருந்தேன் அல்லது என் விசுவாசத்தை உறுதிபடுத்த ஒருவித அனுபவத்துக்காக காத்திருந்தேன்... முடிவில்லாமல் இயேசுவை புறக்கணித்தல். காத்திருக்கும் இரட்சகருக்குள் நானே போக விட்டுவிட்டேன் மற்றும் அதற்குள் கரைந்து போனேன்.” ஜான் கேஹன் சொன்னார், “எந்தச் செயலோ அல்லது எனது மனதின் சித்தமோ அல்ல, ஆனால் என் இருதயத்தில், எளிமையான கிறிஸ்துவில் ஒரு இளைப்பாறுதல், அவர் என்னை இரட்சித்தார்.” எமியும் மற்றும் ஜானும் இயேசுவை நம்பினார்கள். அவர்கள் அவரை ஏற்றுக்கொண்டார்கள். அவ்வளவுதான்! இந்த இரவில் நீங்கள் இயேசுவை நம்புவீர்கள் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “A Child of the King” (Harriet E. Buell, 1834-1910).


முக்கிய குறிப்புகள்

அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ!

AS MANY AS RECEIVED HIM!

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (யோவான் 1:12).

(யோவான் 2:24, 25; எரேமியா 17:9;
யோவான் 3:1, 2; 1:11-13; ஏசாயா 53:3)

I.   முதலாவது, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்றால் அதன் பொருள் என்ன என்பதை நான் விவரிக்கிறேன், சங்கீதம் 2:12.

II.  இரண்டாவதாக, தேவனுடைய குமாரனை ஏற்றுக்கொள்ள அவர் அதிகாரம் கொடுக்கிறார் என்று நாம் கற்றுக்கொள்ளுகிறோம், பிலிப்பியர் 4:19 , 13; யோவான் 1:11-13.

III. மூன்றாவதாக, நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்பொழுது தேவன் நமக்குக் கொடுக்கும் புது பிறப்பைப்பற்றி நாம் கற்றுக்கொள்ள முடியும், யோவான் 1:13.