Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் தமது 60ம் திருமண நாளன்று ஊழியத்தில் பிரசங்கிக்கிறார் “எனது வாழ்க்கையின் ஆசீர்வாதங்கள்”

DR. HYMERS SPEAKS ON HIS 60TH ANNIVERSARY IN MINISTRY
"THE BLESSINGS OF MY LIFE"
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஏப்ரல் 8, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில், யோர்பா லின்டா, கலிபோர்னியாவில் உள்ள ரிச்சர்ட் நிக்சான் பிரசிடென்சியல் நூலகத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Richard Nixon Presidential Library,
Yorba Linda, California
Lord’s Day Evening, April 8, 2018


எனது வாழ்க்கையின் வசனத்தை நான் வாசிக்கும்பொழுது தயவுசெய்து எழுந்து நிற்கவும்.

“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13).

நீங்கள் அமரலாம்.

என்னுடைய ஊழியத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்கு நிக்சான் நூலகத்தை நான் ஏன் தெரிந்து கொண்டேன் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். என்னுடைய சுயசரிதையை நீங்கள் படிக்கும்பொழுது எனது வாழ்க்கையின் வசனத்தை நான் எப்படியாக தலைவர் நிக்சான் இடமிருந்து பெற்றேன் என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13).

நான் இரண்டு வயது ஆனபோது எனது தகப்பனார் கடந்து போனார். நான் மறுபடியும் அவரோடு வாழவில்லை. நான் 12 வயது வரையிலும் எனது தாயாரோடு மட்டுமே வாழ்ந்தேன். அதன்பிறகு நான் ஒரு இடத்திலிருந்து மறு இடத்துக்கு மாறிக்கொண்டே இருந்தேன், என்னை விரும்பாத உறவினர்களோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் உயர்நிலை பள்ளியிலிருந்து கல்லூரிக்கு மாறுவதற்கு முன்பாக 22 வித்தியாசமான பள்ளிகளில் படித்தேன். நான் எப்பொழுதும் பள்ளிக்குப் “புதிய பிள்ளையாகவே” இருந்தேன். நான் நடைமுறையில் மெய்யான ஒரு அநாதையாக இருந்தேன். ஆனால் மிகப்பெரிய ஒரு இழப்புத் தகப்பனில்லாமல் வளர்ந்ததுதான். நான் எந்தத் துணையும் அல்லது உதவியும் இல்லாமல், எனது சொந்தமாக இருந்தேன். ஆனால் மிகமோசமானது என்னவென்றால், எனக்கு முன்மாதிரியாக இருக்க ஒரு தந்தை இல்லை. அதனால் நான் சரித்திர தலைவர்களை பார்க்க ஆரம்பித்தேன் மற்றும் அவர்களிலிருந்து ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து கொண்டேன். இந்த மனிதர்கள் எனது ஹீரோக்களாக மாறினார்கள்.

அவர்களை எனது சமுதாய முன்மாதிரிகளாகவும் கிறிஸ்தவ முன்மாதிரிகளாகவும் வகுத்துக் கொண்டேன். பெரிய சோதனைகளைச் சந்தித்து மற்றும் வெற்றி பெற்றவர்களை எனது ஹீரோக்களாக கொண்டேன். ஆபிரகாம் லிங்கன், ஜான் வெஸ்லி, ரிச்சர்டு உம்ரான்டு மற்றும் ஜான் ஆர் ரைஸ் போன்றவர்களை எனது கிறிஸ்தவ ஹீரோக்களாக கொண்டேன். வின்ஸ்டன்டு சர்ச்சில் மற்றும் ரிச்சர்டு நிக்சான் போன்றவர்களை எனது சமுதாய ஹீரோக்களாக கொண்டேன். நிக்சான் அவர்களின் சரிதையை எழுதின ஒருவர் சொன்னார், “அவர் வெளிஉலக ஈடுபாடுகளில் சிந்தனையை உட்புறமாக திருப்பும் ஒரு இயல்புடையவர். நம்பமுடியாத வகையில் அவர் ஒரு வெற்றியுள்ள அரசியல்வாதியாக மாறினார். நாணமுடைய மற்றும் புத்தக ஆர்வமுடைய, அவர் அடிக்கப்படுவார் என்றும், புறம்பாக்கப்படுவார் என்றும் அறிந்திருந்தார், இருந்தாலும் – எப்பொழுதும் தடைகள் என்னவாக இருந்தாலும் – மறுபடியும் எழுவார்”. இல்லை, அவர் ஒரு கிறிஸ்தவர் அல்ல. ஆனால், ஆமாம், அவர் எப்பொழுதும் மறுபடியுமாக போராடும்படியாக வந்தார். வேதாகமத்தில் பிலிப்பியர் 4:13 நிக்சானுடைய பிடித்தமான வசனமாக இருந்தது.

தலைவர் நிக்சான் அவர்களுக்கு அவ்வளவாக பிடித்தமான வசனமாக இது இருந்தது ஏன் என்று நான் பின்னர் அறிந்து கொண்டேன், என்னால் அவரை ஒருபோதும் வெறுக்க முடியவில்லை. அவர் ஒரு இன ஆவியுடையவராக அநேக தடைகளை வெற்றி கொண்டிருக்கிறார் என்பதை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் இருளான சமயத்தில், அடிக்கடி நான் நினைத்தது உண்டு, “ரிச்சாடு நிக்சான் தண்ணீர் கேட் மூலமாக வாழ முடியுமானால், நானும் இதை கடந்துபோக முடியும்”. பத்திரிகையாளர் வால்டர் குரோன்கைட் சொன்னார், ‘‘ரிச்சாடு நிக்சானாக நீயோ அல்லது நானோ இருந்தால், நாம் செத்துப்போயிருப்போம்”. தீர்மானம் எடுப்பதற்கு எனக்கு அவர் ஒரு முன்மாதிரியாக இருந்தார். நிக்சான் சொன்னார், “ஒரு மனிதன் தோல்வி அடையும்போது முடிந்து விடுவதில்லை. அவன் செயல்படுவதை விட்டுவிடும்பொழுது முடிந்து போகிறான்”. அவரை ஒன்றும் நிறுத்த முடியவில்லை. 1960ல் அவர் ஜான் கெனடியோடு போட்டியிட்டு தலைவர் தேர்தலில் தோற்றார். 1962ல் கலிபோர்னியாவில் கவர்னர்களின் ஓட்டத்தை அவர் இழந்தார். 1968ல் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றார். அவர் அலுவலகத்திலிருந்து தண்ணீர் கேட் வழியாக துரத்தப்பட்டார். ஆனால் அவர் எப்பொழுதும் மறுபடியுமாக வந்தார். அதனால்தான், அவர் ஒரு கிறிஸ்தவராக இல்லாவிட்டாலும், அவர் என்னுடைய சமுதாய ஹீரோவாக இருக்கிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்,

“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13).

என்னுடைய தலையில் முடியை வளர்க்க முடியும் என்பது அதன் அர்த்தமல்ல! என்னால் பறக்க முடியும் என்பது அதன் அர்த்தமல்ல! என்னால் கணிதம் போட முடியும் என்பது அதன் அர்த்தமல்ல! அப்போஸ்தலன் சொன்னதின் அர்த்தம், அவரால் எல்லா சோதனைகளையும் தாங்கிக்கொண்டு தனது கடமைகளை நிறைவேற்ற முடியும், அவரை பெலப்படுத்தும் கிறிஸ்துவின் மூலமாக – எல்லா தடைகளையும் அவரால் வெற்றி கொள்ள முடியும். எனக்கும் இது உண்மையாக இருந்ததை நான் கண்டுகொண்டேன். நான் இந்த வசனத்துக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். ஆனால் அதற்கு மேலாக என்னை பெலப்படுத்த கிறிஸ்துவைக் கொடுத்ததற்காக நன்றி செலுத்துகிறேன்! நான் கல்லூரியில் தோல்வியடைந்தேன், ஆனால் கிறிஸ்து தொடர்ந்து பின்செல்ல பெலன் கொடுத்தார் மற்றும் மூன்று டாக்டர் பட்டங்களைப் பெற்றேன். நான் ஒரு அருட்பணியாளராக மாறதோற்றுப்போனேன், ஆனால் கிறிஸ்து என்னுடைய பெலனாகமாறி நமது இணையதளத்தின் மூலமாக உலகமுழுவதிலும் உள்ள மக்களுக்கு ஊற்றாக மாற்றினார்.

என்னுடைய புத்தகத்தை நீங்கள் படியுங்கள், திருவாளர் கிரிபித் இப்பொழுது பாடின அந்தத் தனிபாடல் என்னுடைய பிரியமானதாக மாறினது ஏன் என்று அறிந்து கொள்ளுவீர்கள்.

ஆண்டவர் நம்மை அழைத்தார்; சாலை கவர்ச்சியற்றதாக இருக்கலாம்
   வழியில் அபாயங்கள் மற்றும் துக்கங்கள் சிதரியிருக்கலாம்;
ஆனால் சோர்வுற்றவருக்குப் பரிசுத்த ஆவியான தேவன்
ஆறுதல் அருளுவார்;
   நாம் இரட்சகரை பின்தொடருவோம் மற்றும் பின்வாங்க மாட்டோம்;
ஆண்டவர் நம்மை அழைத்தார், சந்தேகங்கள் மற்றும் சோதனைகள்
   நம்மை சுற்றிக்கொண்டாலும், நாம் ஆனந்தமாக பாடுவோம்:
“மேல் நோக்கி பார்த்து, தொடர்ந்து முன்னேறுவோம்,”
அதிக உபத்திரவங்கள் மூலமாக;
   சீயோனின் புத்திரர்கள் அவர்களது ராஜாவை பின்பற்ற வேண்டும்.
(“The Master Hath Come,” Sarah Doudney, 1841-1926).

எனது மகன் ராபர்ட் சொன்னதன் காரணமாக நான் என் சுய சரிதையை எழுதினேன். எனது வாழ்க்கை துன்பம், போராட்டம் மற்றும் வேதனை நிறைந்ததாக இருந்த காரணத்தால் இதை எழுதுவதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. அது மிகவும் எதிர்மறையாக இருந்த காரணத்தால் மூலபிரதிகளைத் தூக்கி வெளியே எரிவதைபோல பலமுறை நான் உணர்ந்தேன். ஆனால் ஜான் சாமுவேல் கேஹன் சொன்னார், “டாக்டர் ஹைமர்ஸ் அவர்களே, அதை தூக்கி வெளியே எரிய வேண்டாம். அதற்குத் தேவையானதெல்லாம் இன்னுமொரு அதிகாரம்தான். உங்கள் தாயார் ‘உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுங்கள்’ என்று சொன்ன நேரத்தைப்பற்றி சொல்லுங்கள்.” நான் ஜான் சொன்னதைக் கேட்டு கடைசி அதிகாரத்தை எழுதினேன், அதை இப்பொழுது சுருக்கமாக உங்களுக்குத் தருகிறேன்.

நான் மருத்துவமனையிலே எனது தாயாருடைய படுக்கைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தேன். அது நன்றி செலுத்துதலுக்குப் பிறகு சில வாரங்கள் கழித்து நடந்தது. எங்களுக்குப் பிடித்தமான சில மக்களில் ஒருவரைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம், ஆபிரகாம் லிங்கன், மற்றும் ஜனாதிபதி லிங்கன் எப்படியாக நன்றி செலுத்துதலை ஒரு தேசிய விடுமுறையில் வைத்தார் என்று பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் நன்றி செலுத்துதலில் பாடின அந்தப் பாடலைப் பாடினோம்.

வாழ்க்கையின் தலையணையில் புயலில் நீ தள்ளாடின பொழுது,
எல்லாம் இழந்ததென்று, நினைத்து நீ சோர்ந்து போனபொழுது,
உங்கள் ஆசீர்வாதங்களை, ஒன்றன்பின் ஒன்றாக எண்ணுங்கள்,
தேவன் என்னென்ன செய்தார் என்று அது உங்களை ஆச்சரியப்படுத்தும்.
உங்கள் ஆசீர்வாதங்களை, ஒன்றன்பின் ஒன்றாக எண்ணுங்கள்,
உங்கள் ஆசீர்வாதங்களையும், தேவன் என்ன செய்தார் என்று பாருங்கள்!
உங்கள் ஆசீர்வாதங்களை, ஒன்றன்பின் ஒன்றாக எண்ணுங்கள்,
உங்கள் ஆசீர்வாதங்களையும், தேவன் என்ன செய்தார் என்று பாருங்கள்!
(“Count Your Blessings,” Johnson Oatman, Jr., 1856-1922).

நாங்கள் இந்தப் பாடலை பாடி முடித்த பொழுது, அம்மா சொன்னார்கள், “ஓ, ராபர்ட், நாம் மெய்யாகவே நமது வாழ்க்கையில் அதிகமாக நன்றி செலுத்த வேண்டும்.” அதன்பிறகு நாங்கள் எங்கள் ஆசீர்வாதங்களை “ஒன்றன்பின் ஒன்றாக” எண்ண ஆரம்பித்தோம். அவர்கள் எங்கள் பையன்களுக்காக, ராபர்ட் மற்றும் ஜான்காக நன்றி செலுத்த ஆரம்பித்தார்கள். அதன் பிறகு எனது மனைவி, இல்லினாவுக்காக நன்றி செலுத்தினார்கள். “அவள் எனக்கு நல்லவளாக இருக்கிறாள், ராபர்ட், அவள் மிகவும் நல்ல ஒரு தாய் மற்றும் மனைவியாக இருக்கிறாள்.” அவள் எங்கள் வீட்டில் வசிப்பதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினார்கள். நமது சபைக்காக தேவனுக்கு நன்றி செலுத்தினார்கள். சபை உறுப்பினர்களுக்காகத் தேவனுக்கு நன்றி செலுத்தினார்கள், “ஒருவர் பின் ஒருவருக்காக”. பிறகு நன்றி செலுத்த வேண்டிய அநேக காரியங்களை நான் கொடுத்தேன். மறுபடியுமாக அந்தப் பாடலை நாங்கள் பாடினோம்.

உங்கள் ஆசீர்வாதங்களை, ஒன்றன்பின் ஒன்றாக எண்ணுங்கள்,
உங்கள் ஆசீர்வாதங்களையும், தேவன் என்ன செய்தார் என்று பாருங்கள்.

அந்த இரவு அதிக நேரமாகிவிட்டது. நான் அவர்களை முத்தமிட்டேன், நான் அறையைவிட்டபொழுது அவர்கள் சொன்னதை நான் வாழும் வரையிலும் ஒருபோதும் மறக்க முடியாது. அவர் சொன்னார், “ராபர்ட், எனக்குக் கிடைத்த எல்லாவற்றிலும் மிகச்சிறந்த பொருள் நீதான்.” அவர்களது அறையைவிட்டு போனபொழுது கண்ணீர் என் கண்களை நிரப்பியது, அந்த இரவில் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தேன். அவர்களோடு உரையாடின கடைசி உரையாடல் அதுவாகும். அதன்பிறகு அந்த இரவில் அவர்களுக்குக் கடுமையான தாக்குதல் ஏற்பட்டது அது அவர்களுடைய ஜீவனை எடுத்துக்கொண்டது.

“டாக்டர் ஹைமர்ஸ் அவர்களே, அதை தூக்கி வெளியே எரிய வேண்டாம். அதற்குத் தேவையானதெல்லாம் இன்னுமொரு அதிகாரம்தான். உங்கள் தாயார் ‘உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுங்கள்’ என்று சொன்ன நேரத்தைப்பற்றி சொல்லுங்கள்.” அதனால் எனது வாழ்க்கை பிரயாணத்தில் தேவன் எனக்குக் கொடுத்த சில நம்புதற்கரிய ஆசீர்வாதங்கள் இங்கே இருக்கின்றன.

முதல் முதலாக, எனது தாயார் இறுதியாக இரட்சிக்கபட்டதற்காக நான் நன்றி செலுத்துகிறேன். அவர்கள் என்பது வயதாகி இருந்தார்கள் அவர்கள் ஒருபோதும் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று நான் நினைத்தேன். நான் இல்லினா மற்றும் அந்தப் பையன்களோடு நான் அநேக சபைகளில் பிரசங்கித்துக்கொண்டு, நியு யார்க்கில் இருந்தேன். நான் எனது அறையில் முன்னும் பின்னுமாக நடந்து, எனது தாயாரின் இரட்சிப்புக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். பிறகு, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று, உடனடியாக அறிந்தேன். பழைய காலத்தில் சொல்வதுபோல நான் “முழுமையாக ஜெபித்தேன்”. நான் டாக்டர் கேஹனுக்கு போன்செய்து எனது தாயாரிடம் சென்று அவர்களை கிறிஸ்துவிடம் நடத்தும்படி கேட்டுக்கொண்டேன். இதற்கு முன்பாக அவர்கள் ஒருபோதும் அவரை கவனித்தது இல்லை. ஆனால் இந்தத் தரம் அவர்கள் இயேசுவை நம்பினார்கள். அது ஒரு அற்புதமாக இருந்தது, மற்ற எல்லா உண்மையான மாறுதலைப்போல இருந்தது. அந்த நாளிலே அவர்கள் புகைப்பதையும் குடிப்பதையும் நிறுத்தினார்கள். ஒரு ஆல்கஹால் குடிப்பவர் உடனடியாக அதை நிறுத்தினால் மற்றும் சரியாக கவனிக்க படவில்லையானால் அவர்களுக்கு வலிப்புவரும் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அப்படி ஒன்றும் இல்லை. அது ஒரு அற்புதம். அவர்கள் ஒருபோதும் அடத்த சிகரேட்டை பிடிக்கவில்லை மற்றும் இன்னொரு மதுவை அருந்தவில்லை. அவர்கள் வேதாகமத்தை முழுமையாக அநேகமுறை படித்தார்கள் மற்றும் வாரத்தில் நான்குமுறை என்னோடு சபைக்கு வந்தார்கள். அவர்களுடைய பிரியமான விடுமுறை நாளான ஜுலை 4ல், நான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். எனது தாயார் இரட்சிக்கப்பட்டதற்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

இரண்டாவதாக, எனது அற்புதமான மனைவி இல்லினாவிற்காக, நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் நடத்திக்கொண்டிருந்த ஒரு விவாகத்துக்கு அவள் வந்திருந்தாள். விவாகத்துக்கு முன்பாக நான் யோவான் 3:16ல் ஒரு குறுகிய போதனையைப் பிரசங்கித்தேன். ஒரு புரோட்டஸ்டன்டு சபையில் அவள் கேட்ட ஒரு முதல் போதனை அதுவாகும். அவள் அழைப்புக்குக் கவனம் செலுத்தி உடனடியாக இரட்சிக்கப்பட்டாள்! நான் அவளிடம் முதல்முறையாக என்னை விவாகம் செய்ய விருப்பமா என்று கேட்டபொழுது, அவள் சொன்னாள், “முடியாது”. நான் இருதயம் உடைந்தவனானேன். ஆர்லான்டோ மற்றும் இர்னி வால்கூஸ் (இந்த இரவில் இங்கே இருக்கிறார்கள்) என்னை பூர்டோ ரிக்கோவுக்கு வரும்படி அழைத்தார்கள். நான் சென்றேன், ஆனால் நான் இல்லினாவை நினைத்துக்கொண்டே இருந்தேன். அவளும், என்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்திருக்கிறாள். அவள் சொன்னாள், “அவர் என்னை மறுபடியும் கேட்பார் என்று நான் நம்புகிறேன்.” நான் கேட்டேன், மற்றும் அவள் இந்தமுறை, “சரி” என்றாள். நாங்கள் விவாகம் செய்து முப்பத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. எனது இனிமையான சிறிய மனைவிக்காக நான் தேவனுக்கு ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்துகிறேன்! அவள் எனக்கு ஒரு குறிப்பு எழுதினாள் அதில், “ராபர்ட், நான் உம்மை எனது முழு இருதயத்தோடும் மற்றும் ஆத்துமாவோடும் நேசிக்கிறேன். எப்பொழுதும் அன்புகூரும், இல்லினா”. அவள் நீதிமொழிகள் 31ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட குணசாலியான ஸ்திரியை போன்றவளாகும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அந்த அதிகாரத்தை வாசியுங்கள் அதிலே எனது இனிமையான இருதயம், இல்லினாவை விவரிக்கப்பட்டிருப்பதை காண்பீர்கள். நான் அவளைப் போற்றி என் இருதயத்தில் வைத்து என்றென்றும் பாதுகாப்பேன். அவளுடைய தகப்பனாரும் இந்த இரவில் இங்கே இருக்கிறார். அவர் இங்கே இருக்க குடமாலாவிலிருந்து இங்கே வந்திருக்கிறார். திருவாளர் குயிலார் அவர்களே, உங்களுக்கு நன்றி! மற்றும் அவளுடைய சகோதரன் மற்றும் அவருடைய குடும்பமும்கூட இங்கே இருக்கிறார்கள். இர்வினுக்கு, நன்றி!

மூன்றாவதாக, எனது இரண்டு மகன்கள், ராபர்ட் மற்றும் ஜானுக்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவர்கள் இரட்டையர்கள், அவர்களுக்கு இப்பொழுது முப்பத்தி நான்கு வயதாகிறது. அவர்கள் இருவரும் நார்த்ரிட்ஜில் உள்ள கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர்கள். ராபர்ட் கொரியாவை சேர்ந்த ஜின் என்ற அழகான பெண்னை விவாகம் செய்திருக்கிறார். அவளுடைய பெற்றோர் இந்த இரவில் இங்கே இருக்கிறார்கள், அப்படியே அவளுடைய சகோதரனும் அவரது மனைவியும் இங்கே இருக்கிறார்கள். நீங்கள் வந்ததற்கு நன்றி! இராபர்ட்டும் ஜின்னும் இரண்டு பெண் பிள்ளைகளுக்குப் பெற்றோராகும், ஹன்னா மற்றும் சாரா. அப்படிப்பட்ட அழகான பேரப்பிள்ளைகளை தேவன் எனக்குக் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி.

எனது அடுத்த மகன் ஜான் வெஸ்லி, பெரிய ஆங்கில பிரசங்கியின் பெயரிடப்பட்டவர். ராபர்ட்டும் ஜானும் நமது சபையின் ஒவ்வொரு கூட்டங்களிலும் கலந்து கொள்ளுகிறார்கள். வெஸ்லி ஒரு ஜெபவீரன். அவர் மணிக்கணக்காக, ஜெபித்து வேதம் வாசிக்கிறார். அவர் ஒரு நல்ல கிறிஸ்தவர் மற்றும் எனது நண்பர். எனது இரண்டு மகன்களில் நான் பிரியப்படுகிறேன். அவர்கள் எனக்கும் எனது மனைவிக்கும் வியக்கத்தக்க ஆசீர்வாதமாகும்.

டாக்டர் கிறிஸ்டோபர் கேஹனுக்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் ஒருபோதும் பெற்றிராத சகோதரன் அவர். அவர் எனது சிறந்த நண்பர் மற்றும் நெருங்கின உடன் ஊழியர். நாங்கள் ஒருவரை ஒருவர் அதிகமாக மறியாதை செலுத்துகிறோம் நாங்கள் முதல் பெயரை வைத்து ஒருவரை ஒருவர் அழைத்ததே இல்லை. நாங்கள் தனிமையாக இருக்கும்பொழுதும் நான் எப்பெழுதும் டாக்டர் கேஹன் என்றும் அவர் என்னை டாக்டர் ஹைமர்ஸ் என்றும் அழைத்துக் கொள்ளுவோம். அப்படிப்பட்ட ஒரு ஞானமான உண்மையுள்ள நண்பரை எனக்குக் கொடுத்ததற்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுகிறோம். நாங்கள் இருவரும் தற்சோதனை செய்து கொள்ளுவோம், அதிக நேரம் வேதவாசிப்பிலும் ஜெபத்திலும் செலவிடுவோம். அவர் தமது நினைவுகளில் அதிகமாக அறிவியல் பூர்வமாக மற்றும் கணிதரீதியாக சிந்திப்பவர். நான் அதிகமாக விசித்திரமான மற்றும் உள்ளுணர்வு சார்ந்தவனாக இருப்பேன். ஆனால் நாங்கள் பரிபூரணமாக இணைந்து பணிபுரிதல் எளிதாகவே இருக்கும். நாங்கள் பங்குதாரர்கள், ஆல்ம்ஸ் மற்றும் வாட்சனைபோல, ஜான்சன் மற்றும் பொஸ்வெல் போல (சிலர் சொன்னார்கள், “லாயுரல் மற்றும் ஹார்டி போல அல்லது ஆபாட் மற்றும் காஸ்டிலோ போல,” பழங்கால நகைச்சுவையாளர்கள்).

நான் ஒரு கண்டுபிடிப்பாளர் மற்றும் அவர் ஒரு கெட்டியானவர். நான் இலக்கிய மனம் கொண்டவன். அவர் கணிதபூர்வமான மனம் கொண்டவர். அவர் என்னை ஒரு தலைவராக கணக்கில் கொண்டிருக்கிறார். நான் அவரை ஒரு மேதையாக கணக்கில் கொண்டிருக்கிறேன். எங்கள் கூட்டுறவு எங்களிருவருக்கும் ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறது. டாக்டர் கிறிஸ்டோபர் கேஹனுக்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஜான் சாமுவேல் கேஹனுக்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவர் டாக்டர் மற்றும் திருமதி கேஹனுக்கு மூத்த மகன் ஆகும். ஜான் இந்தக் கூட்டத்தை நடத்தும் ஒரு இளம் மனிதர். அவர் நேற்று ஒரு பாப்டிஸ்டு ஊழியராக நியமிக்கப்பட்டார். அதனால் அவர் இப்பொழுது ரெவரன்டு ஜான் சாமுவேல் கேஹன்! அவர் மிக நல்ல பிரசங்கி மற்றும் ஆலோசகர். நான் ஜானை ஊழியத்தில் எனது “மகனாக” கருதுகிறேன். அவர் பயோலா பல்கலைகழகத்தின் டோல்போட் பள்ளியின் தியாலஜியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். அவர் மிகவும் புத்திசாலி. அவரது தகப்பனார் இரண்டு டாக்டர் பட்டம் பெற்றவர் மற்றும் அவரது தாயார் ஜூடி ஒரு மருத்துவ டாக்டர், அதனால் இது ஆச்சரியமில்லை. ஜான் ஒரு நேரடியாக முதல் மாணவர். அவர் தியாலஜியில் Ph.D. பட்டம் வாங்க திட்டமிட்டிருக்கிறார். 24வது வயதில் இந்தியா, டோமினிக்கன் குடியரசு, மற்றும் ஆப்பிரிக்காவில் மூன்று நாடுகளில் சுவிசேஷ கூட்டங்களில் பிரசங்கித்தார். அவர் ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் நமது சபையில் பிரசங்கிக்கிறார். நாங்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை பிற்பகலில் வேதபோதனைகளைப் பற்றியும், ஊழிய வேலைகளைப்பற்றியும் கலந்துரையாடல் செய்கிறோம். ஜானுக்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவர் என்னை பின்பற்றி நமது சபையின் அடுத்த போதகராக இருப்பார். அவர் எனது நண்பர். அதைபோல இது எளிமையானது.

நோவா சாங்க்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவர் என்னுடைய மற்றொரு “பிரசங்கிக்கும் பையன்”. நோவா தன்னுடைய கல்லூரி வேலைகளை முடிக்கிறார் மற்றும் அதன்பிறகு செமினரிக்குப் போவார். அவரும் ஜான் கேஹனும் ஒரு நல்ல கூட்டாளிகள், மற்றும் அவர்கள் நம்முடைய சபையை எதிர்காலத்தில் நடத்துவார்கள்.

நோவா, ஆரோன் யான்ச் மற்றும் ஜேக் நாஹனுக்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவர்கள் நம்முடைய புதிதாக நியமிக்கப்பட்ட உதவிகாரர்கள். ஆரோன் என்னுடைய உடன் பிறந்த தோழன். ஒரே ஒரு கோழிக்குஞ்சை உடைய கோழி தன்குஞ்சை கவனிப்பதைபோல அவர் என்னை கவனித்துக் கொள்ளுகிறார். என்னுடைய நெருங்கிய நண்பர்களில் அவர் ஒருவர். ஜேக் நாஹன் விவாகமானவர் அவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. இங்கே உங்களுக்குத் தெரியாத சிலது இருக்கலாம். நான் இன்னும் முழுமையாக முடிக்கவில்லை! அடுத்த வருடம் ஜேக் நாஹனுடைய வீட்டில் ஒரு புத்தம் புதிய சீன சபையை நான் நாட்டப்போகிறேன்.

ஜான் கேஹன், நோவா சாங், ஆரோன் யான்ச், ஜேக் நாஹன் மற்றும் பென் கிரிப்பித் என்னுடைய ஜெப கூட்டாளிகள். நாங்கள் ஒவ்வொரு புதன் கிழமை இரவுகளிலும் ஜெபத்திற்காக எனது வீட்டு வாசிப்பு அறையில் கூடுகிறோம். இந்த மனிதர்களுக்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். சில கடினமான நேரத்தில் கடந்துவர அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள், குறிப்பாக எனது புற்றுநோய்க்கான மருத்துவம் பார்த்தபொழுது அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள்.

டாக்டர் சென், திருமதி சாளாசார் மற்றும் அந்த “39”க்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். டாக்டர் சென் நமது உதவி போதகர், சுவிசேஷ ஊழியம் மற்றும் நமது தொலைபேசி தொடர் ஊழியத்துக்குப் பொறுப்பானவர் ஆகும். திருமதி சாளாசார் ஸ்பானிஷ் ஊழியத்துக்குப் பொறுப்பானவர் ஆகும். அந்த “39” உண்மையுள்ள மக்கள் நமது சபையை பெரிய பிளவின் சமயத்தில் திவாலாவதிலிருந்து காப்பாற்றியவர்கள். அவர்கள் ஒவ்வெருவருக்காகவும் நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். திருவாளர் ஆபேல் புருடோமிக்காகவும் நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். சபை பிரிந்து போவதை தடுத்து நிருத்திய மனிதன் அவராகும். விர்சில் மற்றும் பிவர்லி நிக்கலுக்காகவும் நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நமது சபை கட்டிடத்தை வாங்க அந்த தம்பதியர்தான் அதிக பணம் நமக்கு கடன் கொடுத்தவர்கள். நமக்குத் துணைசெய்வதில் அவர்கள் ஒருபோதும் அலைசடிபடவில்லை. அவர்கள் இப்பொழுது நமது சபையின் கௌரவ உருப்பினர்களாக இருக்கிறார்கள்.

நமது சபையில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் முப்பது வயதுக்குள் உள்ள இளம் மக்கள் ஆகும். நான் இளம் மக்களை பராமரிப்பதில் எப்பொழுதும் ஆனந்தமடைவேன். இப்பொழுதுள்ள குழு மிகவும் நேர்த்தியான நான் ஒருபோதும் அறியாத மிகவும் சிறந்ததாகும். நமக்கு அற்புதமான உதவிக்காரர்குழு இருக்கிறது. எட்டு உதவிக்காரர்கள் இருக்கிறார்கள், மற்றும் ஒவ்வொரு இரண்டாண்டிலும் அவர்களை நாங்கள் சுழற்றுவோம். ஆரோன் யான்ச் உதவிக்காரர்களின் நிரந்தரமான தலைவர் ஆகும், அதனால் அவர் ஒருபோதும் மாறமாட்டார். இந்த மனிதர்களுக்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

முதிர் வயது மக்கள் நாங்கள் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் மிகவும் பெரிய துணைசெய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு கூட்டங்களிலும் கலந்து கொள்ளுகிறார்கள். அவர்கள் மிகவும் நன்றாக ஜெபிக்கிறார்கள், நமது சபையைக் கட்ட நன்றாக உழைக்கிறார்கள். நான் மன்டாபெல்லோவில் ஒரு புதிய சீன சபையை ஆரம்பிக்க, ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் ஜான் கேஹன் மற்றும் அவரது தகப்பனாரிடம் விட்டு செல்லுவதில் எனக்குப் பயமில்லை. நான் அவர்களை முழுமையாக நம்புகிறேன். நான் ஒவ்வொரு ஞாயிறு இரவிலும் தாய்ச்சபையில் பிரசங்கிக்க வந்துவிடுவேன்.

நமது சபையில் உள்ள மக்களைச் சுற்றியே எனது முழுவாழ்க்கையும் சுழன்று கொண்டிருக்கிறது. அங்கே எனது “குடும்ப மந்தை” இருக்கிறது. அப்படிப்பட்ட நீட்டிக்கப்பட்ட அற்புதமான குடும்பத்துக்குக் குலபதியாக இருக்க எனக்கு மிகவும் பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது. இயேசு சொன்னார்,

“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” (யோவான் 13:35).

இந்தச் செய்தியை முடிப்பதற்கு முன்பாக ஒரு உண்மை கதையை உங்களுக்கு சொல்லி முடிப்பது ஒரு சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன். நான் மாரின் கவுன்டியில் திறந்த கதவு சபையில் பிரசங்கித்துக் கொண்டிருக்கும்போது, நான் எப்பொழுதும் ஒரு இளம் மக்கள் குழுவை சான் பிரான்சிஸ்கோவுக்கு ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவும் எடுத்துச் செல்லுவேன். அவர்கள் கைபிரதிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும்போது நான் தெருவில் பிரசங்கம் செய்வேன். அந்த நகரத்தின் வடக்குக் கடற்கரை பகுதிக்கு நாங்கள் அடிக்கடி சென்றோம். அது வெளிப்படையான அழகான ஒரு இடம், அங்கே மக்கள் போதை பொருள்களை எடுத்துக்கொள்வார்கள், மற்றும் அங்கே “நீண்ட நையாண்டி செய்பவர்கள்” சேர்ந்து கொள்ளுவார்கள். “ஏதேன் தோட்டம்” என்ற ஒரு பகுதியின் பக்க வழியாக நீண்ட நையாண்டி செய்பவர்கள் முன்பாக நான் வழக்கமாக பிரசங்கித்தேன்!!!

ஒரு இரவில் சில பிள்ளைகள் ஒரு இளம் மனிதனை என்னிடம் அழைத்து வந்தார்கள். அவனுக்கு மிகவும் அதிக செலவுள்ள எராயின் போதை பழக்கம் இருப்பதாக அவன் சொன்னான். அந்தப் பழக்கத்திலிருந்து விடுதலைபெற விரும்புவதாக அவன் சொன்னான். நான் அவனிடம் பேசினபொழுது அவன் நேர்மையானவன் என்று உணர்ந்தேன். அந்த மாலையின் இறுதியில் அவனிடம் எனது காருக்குள் ஏறும்படி சொன்னேன் மற்றும் எனது குடியிருப்புக்கு அவனை என்னோடுகூட கொண்டு சென்றேன். அவனை ஒரு சமையல் அறையில் விட்டு, கதவை பூட்டி எனது படுக்கை அறையில், படுத்து உறங்கினேன்.

அடுத்த சில நாட்களில் அவன் சமையலறை தரையில் அமர்ந்தவனாக சில விடுவிப்பு படலத்தை கடந்தான். இறுதியாக அவன் ஓரளவு அமைதி அடைந்தான் மற்றும் ஒரு கிட்டார் கிடைக்குமா என்று என்னிடம் கேட்டான். என்னிடம் இருந்த பிள்ளைகளில் ஒருவன் ஒரு கிட்டாரை கொண்டு வந்து கொடுத்தான். அவன் தரையில் அமர்ந்து சில நாட்கள் அந்த கிட்டாரை வாசித்துக் கொண்டிருந்தான். அதன்பிறகு ஒரு பாட்டுப் புத்தகம் கேட்டான். அதைக் கொடுத்தோம் மற்றும் அவன் ஒரு பாடலுக்குப் புது சுரம் கண்டுபிடிக்க முயற்சி செய்தான். அந்தப் பையனுடைய உண்மையான பெயரை நான் மறந்து விட்டேன். நான் எப்பொழுதும் அவனை டிஏ, போதைப் பழக்கத்துக்கு அடிமையானவன் என்று அழைப்பேன்!

பிறகு ஒருநாள் டிஏ என்னிடம் சொன்னான், “இதைக் கவனியுங்கள்.” அவன் கிட்டாரை எடுத்தான், பாட்டுப் புத்தகத்தை திறந்தான், ஆல்பர்ட் மிடிலின் (1825-1909) பாடலை, “உமது வேலையைப் புதுப்பியும்” அவனுடைய புதிய இசையில் பாடினான். முழுவதும் அழகாக இருந்தது! இந்த நாளில் அந்தப் பாடலை நாம் அந்த டிஏ இசையில் பாடுகிறோம்!

உமது வேலையை புதுப்பியும், ஓ கர்த்தாவே!
வெறுமையிலிருந்து உமது வல்மையான கரம் உண்டாக்கின;
   மரித்தோரை உயிர்பித்து எழுப்பின உமது சத்தத்தால் பேசும்,
   மற்றும் உமது மக்கள் கேட்கும்படி செய்யும்.
உயிர்பியும்! உயிர்பியும்! மற்றும் புதுப்பிக்கும் மழையைத் தாரும்;
   மகிமையெல்லாம் உமக்கே சொந்தம்; ஆசீர்வாதம் எங்களுக்குரியது.
(“Revive Thy Work,” Albert Midlane, 1825-1909).

நான் லாஸ் ஏன்ஜல்ஸ்சுக்கு திரும்பி வந்த பிறகு, நான் டிஏவின் தொடர்பை விட்டேன். வாழ்க்கை கடந்தது மற்றும் இறுதியாக நமது சபை நாம் இப்பொழுது இருக்கும் இடத்தில் அமைந்தது. ஒரு இரவில் போன் மணி ஒலித்தது. நான் என் அலுவலகத்துக்குச் சென்று, “ஹலோ” என்றேன். அந்தப் போனில் குரல் சொன்னது, “ஹாய், டாக்டர் ஹைமர்ஸ், இது டிஏ.” நான் கேட்டேன், “யாரது?” அவன் சொன்னான், “டிஏ. நியாபகம் இருக்கிறதா, போதைக்கு அடிமையானவன் – டிஏ.” நான் ஏறக்குறைய முடிந்து விட்டதாக உணர்ந்தேன். நான் அவனது குறலை ஏறக்குறைய முப்பது வருடங்களாக கேட்கவில்லை! நான் கேட்டேன், “நீ எங்கே இருக்கிறாய்?” அவன் சொன்னான், “நான் ப்புளோரிடாவில் இருக்கிறேன். நான் விவாகம் செய்து விட்டேன். எனக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள், ஒரு நல்ல மனைவி இருக்கிறாள். நான் எங்கள் சபையில் ஞாயிறு பள்ளியில் போதிக்கிறேன்”.

நான் மகிழ்ச்சியில் சிரித்தேன்! அந்த இரவெல்லாம் பாடிக்கொண்டே இருந்தேன்! இந்தமாதிரியான நேரங்கள் என்னை மகிழ்ச்சியாக்கும் நான் அந்த ஊழியத்துக்குள் 60 வருடங்களுக்கு முன்பாக சென்றேன். நான் ஒன்றுமில்லை பாடுகளுக்கும் வேதனைக்கும் தகுதியானவன்! டிஏவை போல, இளம் மக்களை, வெற்றி கொள்ளுவது எனது சந்தோஷத்தை நிறைவாக்குகிறது!

இரட்சிக்கப்பட்ட எல்லா இளம் மக்களையும் நான் நினைக்கும்பொழுது எனது வலியும் துக்கமும் உருகி ஓடுகிறது. எனது அறுபது வருட ஊழியம் மகிழ்ச்சியின் பெரிய நேரங்களைக் கொடுத்திருக்கிறது. நான் ஊழியத்தை எதற்காகவும் வியாபாரம் செய்யவில்லை!

நான் எப்பொழுதும், சுவிசேஷத்தை விளக்க சில நிமிடங்களை எடுத்துக்கொள்ளுவது அவசியம். இயேசுவானவர் பரலோகத்திலிருந்து ஒரு பிரதான காரணத்துக்காக இறங்கி வந்தார் – அவர் நமது பாவங்களுக்கு உரிய கிரயத்தைச் செலுத்ததக்கதாக சிலுவையிலே மரிக்க வந்தார். அவர் சரிரபிரகாரமாக, எலும்பும் சதையுமாக, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று உயிர்த்தெழுந்தார். நமது சகல பாவங்களையும் சுத்திகரிக்க தமது விலையேறப்பெற்ற இரத்தத்தைச் சிந்தினார். தம்மை நம்பும்படி அவர் சொன்னார், மற்றும் நாம் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுவோம்.

நான் பரிபூரணமாக இருந்து எனது இரட்சிப்பைச் சம்பாதிக்க முடியும் என்று எண்ணினேன். நான் ஒரு பரிசேயனாக இருந்தேன். ஆனால் 1961 செப்டம்பர் 28ல், பயோலா கல்லூரியில், நான் இயேசுவை நம்பினேன். இந்தப் பாடல்தான் என்னை கிறிஸ்துவிடம் கொண்டு வந்தது:

பாவத்தால் கட்டுண்டு மற்றும் இயற்கையின் இரவிலே
   சிறைபட்ட எனது ஆவி நீண்டகாலமாக ஏங்கியிருந்தது.
உமது கண் ஒரு உயிர்பிக்கும் கதிரை பரப்பியது,
   இருட்டறையில் ஒளிவீசியது, நான் விழித்தேன்.
என் சங்கிலிகள் கழன்று விழுந்தன,
என் இருதயம் விடுதலையாக்கப்பட்டது,
   நான் எழுந்தேன், முன் சென்றேன், மற்றும் உம்மை பின்பற்றினேன்.
அற்புதமான அன்பு! அது எப்படி இருக்க முடியும்
   என் தேவனாகிய, நீரே, எனக்காக மரித்தது?
(“And Can It Be?”, Charles Wesley, 1707-1788).

இயேசுவானவர் மாம்சத்தில் வந்த தேவன். அவர் எனக்காக மரித்தார். நான் அவரைப் புதிய வழியில் நினைத்திருந்தேன். நான் கிறிஸ்துவை நம்பினேன். நீ இயேசுவை நம்பி இரட்சிக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய ஜெபமாகும். அதன்பிறகு ஒரு வேதத்தை விசுவாசிக்கும் சபைக்குப் போக வெண்டும் என்று நிச்சயப்படுத்திக்கொள் மற்றும் உனது வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்காக வாழவேண்டும்.

நான் உனக்குச் சொல்லுவதெல்லாம் என்னவென்றால், “என்னுடைய எல்லா உயர்வு தாழ்வுகள் மற்றும் என்னுடைய எல்லா பயங்களையும் நீக்கி என்னை ஆசீர்வதித்ததைபோல தேவன் உன்னையும் ஆசீர்வதிப்பாராக.” “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை” (III யோவான் 4). ஆமென்.

நான் இந்தக் கூட்டத்தை முடிக்கும்படி, இப்பொழுது ரெவரென்ட் ஜான் கேஹனுக்கு திரும்ப கொடுக்கிறேன். (டாக்டர் மற்றும் திருமதி ஹைமர்ஸ் அவர்களின் பிறந்த நாளை, இரண்டு கேக்குகளோடு ஜான் அறிவிக்கிறார் “உங்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள்”).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாக வேதத்தை வாசித்தவர் திரு. ஜான் வெஸ்லி ஹைமர்ஸ்: சங்கீதம் 27:1-14.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Must Jesus Bear the Cross Alone?” (by Thomas Shepherd, 1665-1739;
முதலாவது மற்றும் இறுதி சரணங்கள்)/
“The Master Hath Come” (by Sarah Doudney, 1841-1926;
கடைசி இரண்டு சரணங்கள்).