Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கிறிஸ்துவின் உயித்தெழுதலுக்கு மூன்று நிரூபணங்கள்

THREE PROOFS OF CHRIST’S RESURRECTION
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஏப்ரல் 1, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, April 1, 2018

“இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஓரு மூலையிலே நடந்த காரியமல்ல” (அப்போஸ்தலர் 26:26).


அப்போஸதலர் 26ம் அதிகாரத்தில் பவுலின் சாட்சியை மூன்றாவது முறையாக லூக்கா பதிவு செய்திருக்கிறார். இதை லூக்கா மூன்று முறை கொடுத்ததற்குக் காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அப்போஸ்தலனாகிய பவுலின் மாறுதலை தவிர, கிறிஸ்தவ வரலாற்றில் வேறு எந்த ஒரு அதிக முக்கியமான நிகழ்ச்சியும் இல்லை.

பவுல் பிரசங்கம் செய்த காரணத்தினால் கைது செய்யப்பட்டவராக இருந்தார்,

“...மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும்“ (அப்போஸ்தலர் 25:19).

இப்பொழுது பவுல், சங்கலிகளால் கைகள் கட்டப்பட்டவராக, அகிரிப்ப ராஜாவுக்கு முன்பாக நிற்கிறார். அகிரிப்பா ஒரு யூதனாக இருந்தார். அதனால் பவுல் பிரசங்கித்தது பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில் கிறிஸ்துவின் உயிர்தெழுதலை அடிப்படையாக கொண்டது என்பதை சார்ந்து இருந்தது. அகிரிப்பா ராஜா கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்தெழுதலைப்பற்றி ஏற்கனவே அறிந்தவர் என்று சொல்லி மேலும் பவுல் அவரை சார்ந்து கொண்டார். கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்தெழுதல் ஏறக்குறைய முப்பது வருடங்களுக்குள் நடைபெற்றது. அகிரிப்ப ராஜாவோடு சேர்த்து, ஒவ்வொரு யூதர்களும் அதைபற்றி அறிந்திருந்தார்கள். அதனால்தான் பவுல் சொன்னார்,

“இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஓரு மூலையிலே நடந்த காரியமல்ல” (அப்போஸ்தலர் 26:26).

“இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல.” அந்த நாட்களில் அது பொதுவான ஒரு கிரேக்க வழக்க சொல்லாக இருந்தது. டாக்டர் கேயிபெல்லின் விமர்சனம் சொல்லுகிறது,

இயேசுவின் ஊழியம் பாலஸ்தீனத்தில் அதிகமாக அறியப்பட்டதாகும், மற்றும் அகரிப்பா அதைபற்றி கேள்விபட்டிருக்க வேண்டும். இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் சரியாக உறுதி செய்யப்பட்டதாகும், மற்றும் கிறிஸ்தவ சுவிசேஷம் மூன்று பத்தாண்டுகளாக பிரகடணப்படுத்தப்பட்டு வந்தது. இந்தக் காரியங்களை ராஜா நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும், “ஏனென்றால் இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல” (The Expositor’s Bible Commentary, Frank E. Gaebelein, D.D., General Editor, Zondervan Publishing House, 1981, volume 9, p. 554; note on Acts 26:25-27).

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சில படிப்பறிவில்லாத மீனவர்கள் மட்டுமே அறிந்த மங்கலான தெளிவில்லாத சம்பவமாக அநேகர் நினைக்கிறார்கள். ஆனால் சத்தியத்தை ஒரு காரியமும் மறைக்க முடியாது! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஏறக்குறைய முப்பது வருடங்களாக ரோம சாமராஜ்யம் முழுவதும் நெருக்கமாக பேசப்பட்டது, மற்றும் இஸ்ரவேலில் இருந்த ஒவ்வொரு யூதர்களும் அதைப்பற்றி அறிந்திருந்தார்கள்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இரகசியமாக வைக்கப்பட்டது அல்ல!

“இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல” (அப்போஸ்தலர் 26:26).

டாக்டர் லென்ஸ்கி சொன்னார்,

இயேசுவைப்பற்றி சொல்லப்பட்டவை எல்லாம் அந்த நாட்டின் தலைநகரில் நடந்தவைகளாகும், சனகரீப் சங்கத்தார் மற்றும் பிலாத்து [ரோம தேனாதிபதி] இதில் தொடர்புடையவர்களாகும், மற்றும் இயேசு ஒரு தேசிய அளவில் அறியப்பட்ட நபராக இருந்தார், அவருடைய கீர்த்தி சுற்றுபக்கத்து நாடுகளிலும் பரவியது. “இது ஓரு மூலையிலே நடந்த காரியமல்ல”... சில படிப்பறிவில்லாத மீனவர்கள் மட்டுமே அறிந்த மங்கலான தெளிவில்லாத சம்பவம் அல்ல, ஆனால் மிகப்பெரிய மற்றும் வெளிப்படையான, மிகவும் பொதுவாக மற்றும் தொலைதூரத்துக்கு எட்டக்கூடிய காரியமாகும், அதாவது அகிரிப்பா [ராஜா] தமது ராஜரீகத்தில் இதற்கு முழுகவனம் செலுத்த கடமைபட்ட காரியமாகும் (R. C. H. Lenski, D.D., The Interpretation of the Acts of the Apostles, Augsburg Publishing House, 1961 edition, p. 1053; note on Acts 26:26).

“இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல” (அப்போஸ்தலர் 26:26).

கிறிஸ்துவின் விரோதிகள் மூன்று பத்தாண்டுகளாக அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவில்லை என்று நிரூபித்து வந்தார்கள். இருந்தாலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். அவர்கள் எவ்வளவு அதிகமாக முயற்சி செய்தாலும், இயேசுவானவர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு மரித்த நிலைமையில் இருந்தார் என்று நிரூபிக்க தவறிவிட்டார்கள். பவுல் அகிரிப்பா ராஜாவோடு பேசின சமயத்தில், ஆயிரக்கணக்காண யூதர்கள், மற்றும் பத்தாயிரக்கணக்காண புறஜாதியர்கள், இப்படியாகப் பிரகடணப்படுத்திக் கொண்டு இருந்தார்கள், “கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்”.

கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஆகும். கிறிஸ்துவின் சரீரம் கல்லறையிலிருந்து எழுந்திருக்கவில்லையானால், கிறிஸ்தவ விசுவாசத்துக்கு அடிப்படை இல்லை. அப்போஸ்தலர் பவுல்தாமே சொன்னார்,

“கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா [பயனில்லை]” (I கொரிந்தியர் 15:14).

கிறிஸ்துவின் விரோதிகள் அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவில்லை என்று நிரூபிக்க மிகவும் கஷ்டப்பட்டதில் ஆச்சரியமில்லை! இருந்தாலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். நான் கிரேக் லாரி அவர்களோடு அநேக காரியங்களில் ஒத்துப்போவதில்லை, ஆனால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் நான் அவரோடு ஒத்துப்போகிறேன். கிரேக் லாரி கிறிஸ்துவின் விரோதிகள் அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவில்லை என்று நிரூபிக்க ஏன் தோற்றுப்போனார்கள் என்று – மூன்று ஆதாரங்களைக் கொடுத்தார். (Greg Laurie, Why the Resurrection? Tyndale House Publishers, 2004, pp. 13-24). நான் இவைகளை சுருக்கப்போகிறேன்.

“இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல” (அப்போஸ்தலர் 26:26).

I. முதலாவது, காலியான கல்லரை.

இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு முதலாவது நிரூபணம் காலியான கல்லறை ஆகும். இயேசு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது கல்லறை காலியாக இருப்பது இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு மிகப்பெரிய நிரூபணங்களில் ஒன்றாகும். இயேசு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது கல்லறை காலியாக இருப்பதை நான்கு சுவிசேஷங்களை எழுதின ஆசிரியர்களும் முழுமையாக ஒத்துக்கொள்ளுகிறார்கள். அநேக சாட்சிகள் மூலமாகவும்கூட அவரது கல்லறை காலியாக இருக்கும் உண்மை சோதித்து நிரூபிக்கப்பட்டது.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு விரோதமான மிகப்பழைய தாக்குதல் யாரோ இயேசுவின் சரீரத்தை திருடி சென்று விட்டார்கள் என்பதாகும். பிரதான ஆசாரியர்கள்

“...மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து: நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள். இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள். அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது” (மத்தேயு 28:12-15).

ஆனால் இந்த வாதம் அநேக மக்களை உணர்த்தவில்லை. சீஷர்கள் இயேசுவின் சரீரத்தை திருடி கொண்டுபோய் உயிர்த்தெழுந்தார் என்று பாசாங்கு செய்திருக்கமட்டார்கள் என்று பொது அறிவு நமக்குச் சொல்லும். மூன்று நாட்களுக்கு முன்பாக கிறிஸ்து கைதுசெய்யப்பட்டபொழுது அவரைவிட்டு தங்கள் ஜீவன்தப்ப ஓடிபோனார்கள் சீஷர்கள். இந்தப் பயந்துபோன மக்கள் இயேசுவின் சரீரத்தை திருடி கொண்டுபோக போதுமான தைரியம் வந்திருக்க முடியும் என்பது அதிகம் ஏற்றுக்கொள்ள முடியாதது – மற்றும் அதன்பிறகு அவர் உயிர்த்தெழுந்தார் என்று தைரியமாக பிரசங்கிப்பது – அவர்களுடைய உயிருக்கு எளிதில் தீங்கு வருவித்துக்கொள்ளுவதாகும்! இல்லை, அது மிகவும் விரும்பப்படாத ஒரு வாதமாகும்! இதில் உண்மை எளிமையாக ஒத்துவரவில்லை. சீஷர்கள் கதவு பூட்டப்பட்ட அறைக்குள் தங்களை மறைத்துக்கொண்டிருக்கிறார்கள், “யூதர்களுக்குப் பயந்ததினால்” (யோவான் 20:19). அவர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தார்கள். அவர் உயிர்த்தெழுந்திருப்பார் என்று அவர்கள் விசுவாசிக்கவில்லை. கிறிஸ்துவை பின்பற்றின ஒருவரும் ரோம அரசாங்கத்தை எதிர்த்துச் சவால்விட்டு இயேசுவின் சரீரத்தை திருடி கொண்டுபோக போதுமான தைரியம் வந்திருக்க முடியாது. இது உளரீதியான உண்மை இதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

கிறிஸ்துவின் சரீரத்தை திருடி கொண்டுபோக முடியுமானால், அது அவருடைய விரோதிகளாக இருக்கலாம், என்ற ஒரே ஐயப்பாடுதான் உண்டு. இதிலே பிரச்சனையாக இருப்பது கிறிஸ்துவின் சரீரத்தை கல்லறையிலிருந்து திருடி கொண்டுபோக எந்தச் செயல் நோக்கமுமில்லை. பிரதான ஆசாரியர்களும் மற்ற மதத்தலைவர்களும் அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும் மத ஒழுங்குகளையும் அவர் கடிந்துகொண்ட காரணத்தால் அவரை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தார்கள். இந்த மக்கள் விரும்பின கடைசி காரியம் என்னவென்றால் கிறிஸ்து மறுபடியுமாக உயிரோடு வந்துவிடுவார் என்பதுதான்! ஆதனால்தான் அந்த மதத்தலைவர்கள் அவருடைய உயிர்த்தெழுதலை தடைசெய்ய அவ்வளவாக பிரயாசப்பட்டு அழித்துவிட முயற்சி செய்தார்கள். அவர்கள் ரோம தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவிடம்போய் பேசினதைப்பற்றி, மத்தேயு சுவிசேஷம் நமக்குச் சொல்லுகிறது,

“ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிட வேண்டும் என்றார்கள் (மத்தேயு 27:63-64).

அவர்களிடம் பிலாத்து சொன்னார் உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே “உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்” – காவல்காரர்களை வைத்து முடிந்தவரை கல்லறையைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் (மத்தேயு 27:65). அதனால் அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு காவல்வைத்து கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள் (மத்தேயு 27:66). விசித்திரமாக, கிறிஸ்துவின் சொந்த சீஷர்களைவிட இந்தப் பிரதான ஆசாரியர்கள் மற்றும் மதத்தலைவர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் அதிக நம்பிக்கையுள்ளவர் களாக இருந்தார்கள் என்பது காணப்படுகிறது!

கிறிஸ்துவின் சரீரம் திருடப்படாதபடிக்கு மதத்தலைவர்கள் அதிக கவனம் எடுத்துக்கொண்டார்கள் என்பதுதான் உண்மையாகும். கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்திருப்பேன் என்று சொன்னது பொய் என்று அவர்கள் நிரூபிக்க விரும்பினார்கள். கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற கதை பரவவிடாதபடி அகற்ற மதத்தலைவர்கள் தங்களால் கூடுமானமட்டும் பாடுபட்டார்கள். சரீரத்தை திருடி கொண்டுபோக முடியுமானால் கடைசியாக அது அவருடைய விரோதிகளாக இருக்கதான் இருக்க முடியும். ஆனால் அவர்கள் அப்படி சரீரத்தை திருடி இருந்தால், அவருடைய சீஷர்கள் அவரது உயிர்த்தெழுதலைக் குறித்துப் பிரசங்கிக்க ஆரம்பித்தபொழுதே சந்தேகமில்லாமல் அதை ஒப்படைத்திருப்பார்கள். ஆனால் கிறிஸ்துவின் சரீரத்தை அவருடைய விரோதிகள் ஒருபோதும் ஒப்படைக்வில்லை. ஏன்? ஏனென்றால் ஒப்படைக்க அவர்களிடம் சரீரம் இல்லை என்பதுதான்! கல்லறை காலியாக இருந்தது! கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்!

“இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல” (அப்போஸ்தலர் 26:26).

கல்லறை காலியாக இருந்தது கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் எனபதற்கு முதலாவது நிரூபணமாகும், ஆனால் இன்னும் அதிகமாக இருக்கின்றன!

II. இரண்டாவதாக, கண்ணால் கண்ட சாட்சிகளின் விபரம்.

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபொழுது, அவருடைய சீஷர்கள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய விசுவாசம் அழிக்கப்பட்டிருந்தது. அவரை மறுபடியும் எப்போதவது காண்போம் என்ற நம்பிக்கை இல்லாதிருந்தார்கள். அதன்பிறகு இயேசுவானவர் வந்தார்,

“இயேசு வந்து நடுவே நின்று உங்களுக்குச் சமாதானம் என்றார்” (யோவான் 20:19).

சீஷர்கள் மறுபடியும் மறுபடியுமாக அவரை உயிருள்ளவராக கண்டார்கள்.

“அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்” (அப்போஸ்தலர் 1:3).

உயிர்த்தெழுந்த கிறிஸ்து இருந்தார் என்று பவுல் அப்போஸ்தலர் சொல்லுகிறார்,

“கேபாவுக்கும் [பேதுரு], பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்
லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்” (I கொரிந்தியர் 15:5-8).

டாக்டர் ஜான் ரைஸ் சொன்னார்,

இயேசுவானவர் உயிர்த்தெழுந்த பிறகு நூற்றுக் கணக்கான மக்கள் கண்கண்ட சாட்சிகளாக பார்த்தார்கள் என்று எழுத்தளவில் உள்ளது எவ்வளவு திணறடிக்க கூடியதாக இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள், சிலர் மறுபடியும் மறுபடியுமாக அந்த நாற்பது நாட்கள் இடைவேளையில்! [அப்போஸ்தலர் 1:3]. வேதாகமத்தின் சட்டம் “இரண்டு அல்லது மூன்று வாய்மொழி சாட்சிகள்” ஆகும். இங்கே நூற்றுக்கணக்கான சாட்சிகள் இருந்தார்கள். ஒன்று அல்லது இரண்டு கண்கண்ட சாட்சிகளால் மரணத்துக்குத் தீர்க்கப்பட்டவர்கள் அநேகர்.
     ஒரு நீதிபதி முக்கியமான ஒரு வழக்கை தீர்க்க வேண்டுமானால் பன்னிரண்டு வாய்மொழி சாட்சிகள் மட்டும் ஒத்துக்கொண்டால் போதும். இங்கே நூற்றுக்கணக்கான கண்கண்ட சாட்சிகள் இயேசுவானவர் உயிர்த்தெழுந்தார் என்று ஒத்துக்கொண்டார்கள். அவருடைய மரித்த சரீரத்தை மூன்று நாட்களுக்கு பிறகு பார்த்ததாக சொல்ல ஒரு நபர்கூட எழுந்தில்லை, எந்த நிரூபணத்தையும் மறுத்துச்சொல்ல ஒருவரும் இருந்ததில்லை.
     அந்தச் சாட்சிகளின் சான்று – கண்கண்ட சாட்சிகள், இரட்சகரைக் கையாண்டவர்கள், தொட்டவர்கள், அவருடைய கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் உண்டான தழும்பை உணர்ந்தவர்கள், சாப்பிட்டதைப் பார்த்தவர்கள், நாற்பது நாட்களாக தொடர்பு கொண்டிருந்தவர்கள் – ஐக்கிய நாடுகளின் உயர்நீதிமன்றம் அல்லது மற்ற எந்த ஒரு உலக நீதிமன்றத்திற்குத் தேவைப்பட்ட நிரூபணச் சாட்சிகளைவிட அந்தச் சாட்சியின் நிரூபணங்கள் உறுதியாக இருந்தன... அந்த நிரூபணங்கள் அதிகமாக போதுமானவைகள் விசுவாசிக்க விருப்பமில்லாதவர்கள் மற்றும் நிரூபணங்களைச் சோதிக்காதவர்கள் மட்டுமே அதை தள்ளிவிடுவார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை வேதாகமம் இயேசு “அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்” அப்போஸ்தலர் 1:3 (John R. Rice, D.D., The Resurrection of Jesus Christ, Sword of the Lord Publishers, 1953, pp. 49-50).

“இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல” (அப்போஸ்தலர் 26:26).

கல்லறை காலியாக இருந்தது, மற்றும் நூற்றுக்கணக்கான கண்கண்ட சாட்சிகள், கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு உறுதியான நிரூபணங்களாகும். ஆனால் இன்னும் அதிகமாக இருக்கின்றன.

III. மூன்றாவதாக, அப்போஸ்தலர்களின் புனித உயிர்த்துறவு.

உயிர்த்தெழுதல் ஒரு பொய்யானதாக இருந்தால் ஒவ்வொரு அப்போஸ்தலரும் அதை அறிவிப்பதற்காக ஏன் இவ்வளவு பாடுகளைக் கடந்து வரவேண்டும்? அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை தொடர்ந்து பிரசங்கித்தது மட்டுமல்ல, அதை மறுதலிப்பதற்குப் பதிலாக அவர்கள் மரித்தார்கள்! நாம் சபையின் சரித்திரத்தை வாசிக்கும்பொழுது ஒவ்வொரு தனிப்பட்ட அப்போஸ்தலரும் [சித்திரவதை செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட – யோவானை தவிர] கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று பிரசங்கித்த காரணத்தால் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். டாக்டர் டி. ஜேம்ஸ் கென்னடி சொன்னார்,

     இது ஒரு இன்றியமையாத முக்கியமான உண்மையாகும். மனோதத்துவ வரலாற்றில் ஒரு பொய்க்காக தனது வாழ்க்கையைக் கொடுக்க சித்தமாக இருந்த அவன் அல்லது அவளை ஒருபோதும் அறிந்ததில்லை. தேவன் அப்போஸ்தலர்களை மற்றும் அனைத்து ஆரம்ப கிறிஸ்தவர்களையும் இப்படிப்பட்ட பாடுகளை அனுபவிக்க, மிக பயங்கரமான, நம்பமுடியாத சித்தரவதைகள் ஊடாக கடந்துபோக ஏன் அனுமதிக்க வேண்டும் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு... நாம் அந்த உண்மை, அந்தக் குணாதிசயம், அந்தப் பாடுகள், மற்றும் இந்தச் சாட்சிகளின் மரணம், அவர்களுடைய இரத்தத்தினால் முத்திரையிடப்பட்ட சாட்சியாகும்... பால் லிட்டில் சொன்னார், “உண்மை என்று தாங்கள் விசுவாசித்தவர்களுக்காக மனிதர் மரிப்பார்கள்... பொய் என்று அறிந்ததற்காக, எப்படியானாலும், அவர்கள் மரிக்க மாட்டார்கள்” (D. James Kennedy, Ph.D., Why I Believe, Thomas Nelson Publishers, 2005 edition, p. 47).

கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று சாட்சி சொன்ன காரணத்தால் இந்த மனிதர் மரித்தார்கள்:

பேதுரு – கொடுமையாக வாரினால் அடிக்கப்பட்டார் அதன்பிறகு தலை கீழாக சிலுவையில் அறையப்பட்டார்.
 அந்திரேயா – ஒரு X வடிவ சிலுவையில் அறையப்பட்டார்.
  யாக்கோபு, செபேதேயுவின் குமாரர் – சிரச்சேதம் செய்யப்பட்டார்.
   யோவான் – கொதிக்கும் எண்ணெய் கொப்பறையில் போடப்பட்டார்,
   அதன்பிறகு பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
    பிலிப்பு – கொடுமையாக வாரினால் அடிக்கப்பட்டார் அதன்பிறகு
    சிலுவையில் அறையப்பட்டார்.
     பர்த்தலமேயு – உயிரோடு தோலுரிக்கப்பட்டார் [தோலை அறுத்து
     எடுப்பது] அதன்பிறகு சிலுவையில் அறையப்பட்டார்.
      மத்தேயு – சிரச்சேதம் செய்யப்பட்டார்.
       யாக்கோபு, கர்த்தருடைய சகோதரர் – ஒரு தேவாலயத்தின்
       உச்சியிலிருந்து தூக்கி எரியப்பட்டார், அதன்பிறகு மரணம்
       வரையிலும் அடிக்கப்பட்டார்.
        ததேயு – அம்பினால் அடித்துக் கொல்லப்பட்டார்.
         மாற்கு – இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.
          பவுல் – சிரச்சேதம் செய்யப்பட்டார்.
           லூக்கா – ஒரு ஒலிவ மரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
            தோமா – ஈட்டிகள் வழியாக ஓடச்செய்து, மற்றும் எரியும்
            அடுப்பில் போடப்பட்டார்.

(The New Foxe’s Book of Martyrs, Bridge-Logos Publishers,
   1997, pp. 5-10; Greg Laurie, Why the Resurrection?
   Tyndale House Publishers, 2004, pp. 19-20).

இந்த மனிதர்கள் பயங்கரமான பாடுகளுக்கு ஊடாக போனார்கள், மற்றும் கொடுமையாக மரித்தார்கள், ஏனென்றால் கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று சொன்னார்கள். மக்கள் பார்க்காத ஒன்றுக்காக மரிக்கவில்லை! இந்த மனிதர்கள் கிறிஸ்து கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு பார்த்தார்கள்! அதனால்தான் சித்தரவதை செய்யப்பட்டார்கள் மற்றும் மரணம் நிகழும் வரையிலும் அவர்கள் அறிவித்ததை நிறுத்த முடியவில்லை, “கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்!”

பேதுரு இயேசுவை அங்கே கடற்கரையில் பார்த்தார்,
கடலோரமாக அங்கே அவரோடு புசித்தார்;
ஒருகாலத்தில் மரித்த உதடுகளால், இயேசு சொல்லிக்கொண்டிருந்தார்,
“பேதுருவே, என்னை நேசிக்கின்றாயா?”
மரித்து இருந்த அவர் மறுபடியுமாக உயிர்த்தெழுந்தார்!
மரித்து இருந்த அவர் மறுபடியுமாக உயிர்த்தெழுந்தார்!
மரணத்தின் கொடுமையான உறுதியான, பிடியை உடைத்தார் –
மரித்து இருந்த அவர் மறுபடியுமாக உயிர்த்தெழுந்தார்!
(“Alive Again” by Paul Rader, 1878-1938).

இந்த மக்கள் கோழைத்தனமான அவிசுவாசத்திலிருந்து பயமற்ற இரத்தச் சாட்சிகளாக மாற்றப்பட்டார்கள் – ஏனென்றால் அவர்கள் கல்லறையிலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு அவரை பார்த்தார்கள்!

தோமா அங்கே அறையிலே அவரை பார்த்தார்,
என் ஆண்டவரே மற்றும் தேவனே என்று அழைத்தார்,
ஆணிகளாலும் மற்றும் பட்டயத்தாலும் ஏற்பட்ட
அவரது காயதுளையில் அவர் விரலை நுழைத்தார்.
மரித்து இருந்த அவர் மறுபடியுமாக உயிர்த்தெழுந்தார்!
மரித்து இருந்த அவர் மறுபடியுமாக உயிர்த்தெழுந்தார்!
மரணத்தின் கொடுமையான உறுதியான, பிடியை உடைத்தார் –
மரித்து இருந்த அவர் மறுபடியுமாக உயிர்த்தெழுந்தார்!
(Paul Rader, ibid.).

பால் ரைடர் அவர்களின் பெரிய பாடலை நமது சபைகளில் மறுபடியும் பாடக்கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் எவ்வளவாக விரும்புகிறேன்! நீங்கள் அதை வேண்டிகேட்டுக்கொண்டால் மற்றும் எனக்கு எழுதினால் நான் அந்தப் பாட்டின் இசையை உங்களுக்கு அனுப்புவேன். டாக்டர் ஆர். எல். ஹைமர்ஸ், ஜுனியர், Dr. R. L. Hymers, Jr., P.O. Box 15308, Los Angeles, CA 90015 என்ற என்னுடைய விலாசத்துக்கு எழுதி – பால் ரேடர் அவர்களின் “மறுபடியுமாக உயிர்த்தெழுந்தார்” என்ற பாடல் இசையை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளவும்.

கிறிஸ்துவின் உயித்தெழுதலைப் பற்றிய இன்னும் அதிகமான ஆதாரங்களை வைக்கோல்போரைப்போல நம்மால் கொடுக்க முடியும், ஆனால் அது உங்களுக்குச் சௌகரியமாக இருக்காது. கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயித்தெழுந்த பிறகு இன்னும் “சிலரோ சந்தேகப்பட்டார்கள்” (மத்தேயு 28:17). விசுவாசத்தினாலே நீ கிறிஸ்துவிடம் வரவேண்டியது அவசியமாகும். மனித உருவில் வந்த கிறிஸ்து சொன்னார்,

“உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரேமியா 29:13).

“நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்“ (ரோமர் 10:10).

நான் 1961 செப்டம்பர் 28, காலை 10:30 மணிக்கு, பையோலா காலேஜ் ஆடிடோரியத்தில் (இப்பொழுது அது பல்கலைகழகம்) டாக்டர் சார்லஸ் ஜே. உட்பிரிட்ஜ் அவர்களின் போதனையைக் கேட்டபிறகு உயிர்தெழுந்த கிறிஸ்துவை நான் எதிர்த்தேன், அவர் தொடக்க நிலையில் உள்ள தாராளவாதம் காரணமாக புல்லர் தியாலஜிக்கல் செமினரியை 1957ல் விட்டுவிட்டார் (Harold Lindsell, Ph.D., The Battle for the Bible, Zondervan Publishing House, 1978 edition, p. 111). உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை நன்றாக அறிந்து கொள்ளலாம் – போதுமான அளவு நீ அவரை அறிந்துகொள்ள விரும்பினால் “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” (லூக்கா 13:24). நீ கிறிஸ்துவிடம் வரும்பொழுது உன்னுடைய பாவங்கள் அவருடைய இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுகின்றன மற்றும் பிராயசித்தம் செய்யப்படுகிறது – மற்றும் மரித்தோரிலிருந்து உயித்தெழுந்த அவர் மூலமாக நீ மறுபடியும் பிறக்கிறாய். நீ விரைவாக கிறிஸ்துவிடம் வரவேண்டும் என்பது என்னுடைய ஜெபமாகும்! ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “In Christ Alone” (by Keith Getty and Stuart Townend, 2001).


முக்கிய குறிப்புகள்

கிறிஸ்துவின் உயித்தெழுதலுக்கு மூன்று நிரூபணங்கள்

THREE PROOFS OF CHRIST’S RESURRECTION

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

“இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஓரு மூலையிலே நடந்த காரியமல்ல” (அப்போஸ்தலர் 26:26).

(அப்போஸ்தலர் 25:19; 1கொரிந்தியர் 15:14)

I.    முதலாவது, காலியான கல்லரை, மத்தேயு 28:12-15;
யோவான் 20:19; மத்தேயு 27:63-64, 65, 66.

II.   இரண்டாவதாக, கண்ணால் கண்ட சாட்சிகளின் விபரம்,
யோவான் 20:19; அப்போஸ்தலர் 1:3; I கொரிந்தியர் 15:5-8.

III.  மூன்றாவதாக, அப்போஸ்தலர்களின் புனித உயிர்த்துறவு,
மத்தேயு 28:17; எரேமியா 29:13; ரோமர் 10:10; லூக்கா13:24.