Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
அடிக்கப்படுதல், பிடுங்கப்படுதல், வெட்கப்படுதல் மற்றும் துப்பப்படுதல்

THE SMITING, PLUCKING, SHAME AND SPITTING
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

மார்ச் 25, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, March 25, 2018

“‘அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).


கிறிஸ்துவின் பாடுகளை பரிபூரண தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட அடிமை பக்கங்களில் இது மூன்றாவதாகும். மற்றவைகளோடு, இந்த பாடத்தையும் சேர்த்து, இயேசுவானவர் தமது சீஷர்களுக்கு அவர் சொல்லும்போது குறிப்பிட்டார்,

“பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை வாரினால் அடித்து, கொலைசெய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார்” (லூக்கா 18:31-33).

குறிப்பிடத்தக்க ஏசாயா 50:6ன் தீர்க்கதரிசனம் வேறு ஒருவரையும் குறிப்பிட முடியாது ஆனால் இயேசுவை மட்டும் குறிப்பிடுகிறது. இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக எழுத்தளவில் நிறைவேறிவிட்டது.

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

இந்தப் பாடத்திலிருந்து இந்த இரவிலே நான் மூன்று சத்தியங்களை வெளியே கொண்டு வருகிறேன்.

முதலாவது, இயேசுவானவர் தம்மைத்தாமே அந்தச் சித்திரவதை செய்ய “ஒப்புக்கொடுத்தார்”!

டாக்டர் ஸ்டார்ங் (எண் 5414) நமக்குச் சொல்லுகிறார் “நாத்தான்” என்ற எபிரேய வார்த்தைக்கு “ஒப்புக்கொடு” என்று அர்த்தமாகும். மெய்யாகவே, இயேசுவானவர் தமது முதுகை அடிப்பவர்களுக்குக் “ஒப்புக்கொடுத்தார்”. தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்குத் தன் தாடைகளை “ஒப்புக்கொடுத்தார்”. “அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும்” தன் முகத்தை “ஒப்புக்கொடுத்தார்”. இயேசு சொன்னார்,

“நான் என் ஜீவனை… கொடுக்கிறேன்… ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்: நானே அதைக் கொடுக்கிறேன்” (யோவான் 10:17-18).

மறுபடியுமாக, கெத்சமெனே தோட்டத்தில், அவரை அவர்கள் கைது செய்ய வந்தபொழுது, இயேசு பேதுருவிடம் சொன்னார்,

“நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்க வேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்” (மத்தேயு 26:53-54).

இயேசுவானவரை இழுத்துச்செல்ல வந்த போர் சேவகர்களிடமிருந்து, தம்மை காத்துக்கொள்ள 72,000 தூதர்களை அவர் அழைத்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படிசெய்ய துணிந்து மறுத்துவிட்டார். ஆமாம், இரட்சகர் தமது முதுகை மற்றும் தமது தாடையை மற்றும் தமது முகத்தை “அடிப்பவர்களுக்கு” அவர் “ஒப்புக்கொடுத்தார்”. அவர் “ஒப்புக்கொடுத்தார்” இந்தப் பூமிக்கு வந்த நோக்கத்தை நிறைவேற்ற, தமது மக்களை இரட்சிக்க, அவரிடம் வரும் எல்லா மக்களையும் மீட்க அந்தப் பாடுகளுக்குத் தம்மைதாமே ஒப்புக்கொடுத்தார். அவர்,

“எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார்” (I தீமோத்தேயு 2:6).

அவர்,

“அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி… நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலாத்தியர் 1:4).

அவர்,

“அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும்… நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (தீத்து 2:14).

அவர் சொன்னார்,

“நான் என் ஜீவனை… கொடுக்கிறேன்… ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன்” (யோவான் 10:17-18).

அவரே தம்மை சித்திரவதைசெய்ய, அவமானத்துக்கும் மற்றும் சிலுவையிலறைய தம்மை ஒப்புக்கொடுத்தார் ஏனென்றால் அவர் உன்னை நேசிக்கிறார்! அவர் சொன்னார்,

“ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13).

இயேசுவானவர் இந்த நோக்கத்துக்காகவே பரலோக சிங்காசனத்திலிருந்து இந்தப் பூமிக்கு வந்தார்: நாம் வாழும்படியாக அவர் தமது ஜீவனை அவர் அந்த அவஸ்தைக்கு ஒப்புக்கொடுத்தார்! ஓ, என்ன ஒரு கருத்து! அவர் சொல்லுகிறார், “எனது முதுகை அடிப்பவர்களுக்கு நான் ஒப்புக்கொடுத்தேன் ஏனென்றால் நான் உன்னை நேசிக்கிறேன். எனது தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளை ஒப்புக்கொடுத்தேன் ஏனென்றால் நான் உன்னை மீட்க இது ஒரேவழிதான் என்று அறிந்திருந்தேன். அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை ஒப்புக்கொடுத்தேன் ஏனென்றால் நான் உன்னை கடைசி நியாயத்தீர்ப்பிலிருந்து உனது முகத்தை இரட்சிக்க!” அந்த கொடுமைக்கு அவர் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தார் ஏனென்றால் அவர் உன்னை நேசிக்கிறார் மற்றும் உனது நண்பனாக இருக்கிறார்! “இயேசு பாவிகளின் நண்பராக இருக்கிறார்!” இதை எழுந்து நின்று பாடுங்கள்!

இயேசு பாவிகளின் நண்பராக இருக்கிறார்,
   பாவிகளின் நண்பர், பாவிகளின் நண்பர்;
இயேசு பாவிகளின் நண்பராக இருக்கிறார்,
   அவர் உன்னை விடுதலையாக்க முடியும்!
(“Jesus is the Friend of Sinners,” John W. Peterson, 1921-2006).

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

இரண்டாவது, உனது பாவ ஆத்துமாவை குணமாக்க இயேசுவானவர் தம்மைத்தாமே அந்தச் சித்திரவதை செய்ய “ஒப்புக்கொடுத்தார்”!

அவர் “[தமது] முதுகை அடிப்பவர்களுக்கு ஒப்புக்கொடுத்தார்”. அதை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்! வேதாகமம் சொல்லுகிறது,

“அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து வாரினால் அடிப்பித்தான்” (யோவான் 19:1).

ஸ்பர்ஜன் சொன்னார்,

தேசாதிபதியாகிய, பிலாத்து, கொடுமையாக வாரினால் அடிக்க அவரை ஒப்புக்கொடுத்தான்... அந்தக் கசை... மாட்டுத்தோலினாலானது... அதன் நுனிகளில் ஆட்டுத்தொடை எலும்புகள், எலும்பு துண்டுகள் முறுக்கி வைக்கப்பட்டன, அதனால் ஒவ்வொரு அடியிலும் அடிக்கப்படும் ஏழை சரீரத்திலிருந்து தசை அதிக அளவில் கிழித்து எடுக்கப்படும், அந்தப் பயங்கரமான அடியினால் சிதைக்கப்படும். வாரினால் அடிப்பது அவ்வளவு பயங்கரமான ஒரு தண்டனை பொதுவாக அது மரணத்தைவிட மோசமான தண்டனையாக கருதப்பட்டது, மற்றும் உண்மையில், அந்த அடிவாங்கியே அநேகர் அழிந்திருக்கிறார்கள், அல்லது அதிவிரைவில் மரித்திருக்கிறார்கள். நமது ஆசீர்வதிக்கப்பட்ட மீட்பர் தமது முதுகை அடிப்பவர்களுக்கு ஒப்புக்கொடுத்தார், மற்றும் [அவர்கள்] அங்கே ஆழமான [காயங்களை] உண்டாக்கினார்கள். ஓ பொதுகாட்சியான துயரம்! அதை பார்த்து நாம் எப்படி தாங்க முடியும்? (C. H. Spurgeon, “The Shame and Spitting,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1972 reprint, volume XXV, p. 422).

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

உமது முதுகை ஏன் அடிப்பவர்களுக்கு ஒப்புகொடுத்தீர், இயேசுவானவரே? மறுபடியுமாக, ஏசாயாதான் இதற்கு பதிலை நமக்கு கொடுக்கிறார்,

“அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5).

அவருடைய முதுகில் உள்ள “தழும்புகளால்” நமது ஆத்துமாக்கள் பாவத்திலிருந்து குணமாகிறது! அப்போஸ்தலனாகிய பேதுரு இதை மிகவும் தெளிவாக்குகிறார் அவர் சொன்னார்,

“நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும் படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (I பேதுரு 2:24).

பாவத்தால் சிதைந்துபோன மற்றும் அழிக்கப்பட்ட, நமது ஆத்துமாக்கள், இயேசுவானவர் ஏற்றுக்கொண்ட காயங்களால் குணமாக்கப்பட முடியும்!

அவர் திபேரியா கடல் அருகே இருந்த போது பெரிய திரள் கூட்டமான மக்கள் வந்தார்கள்,

“அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கினார்” (மத்தேயு 12:15).

அவர்களை அவர் குணமாக்கினதுபோல, உன்னுடைய பாவம் நிறைந்த இருதயத்தையும் அவரால் குணமாக்க முடியும், அது “திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருந்தாலும்” (எரேமியா 17:9). சார்லஸ் வெஸ்லி, தமது பெரிய கிறிஸ்மஸ் பாடலில் “தூதர்கள் முன்னறிவித்து பாடுவதை, கேளுங்கள்,” அவர் சொன்னார் கிறிஸ்து “தமது செட்டைகளில் குணமாக்குதலோடு உயிர்த்தெழுந்தார்... பூமியின் குமாரர்களை உயிர்பிக்க பிறந்தார், அவர்களுக்கு இரண்டாம் பிறப்பை கொடுக்க பிறந்தார்.” இயேசுவிடம் வா மற்றும் உனது ஆத்துமாவின் பாவ காயங்கள் அவருடைய தழும்புகளால் குணமாக்கப்படும், மற்றும் நீ மறுபடியும் பிறப்பாய்!

மூன்றாவது, ஒரு பாவியாகிய உனக்குப் பதிலாக இயேசுவானவர் தம்மைத்தாமே அந்த சித்திரவதை செய்ய “ஒப்புக்கொடுத்தார்”!

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன், அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

இதைவிட தெளிவாக எதுவும் இருக்க முடியாது:

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:5-6).

இயேசுவானவர் உனது ஸ்தானத்திலே, நரகத்தின் கொடிய வாதையிலிருந்து உன்னை இரட்சிக்க அந்தச் சித்தரவதைகளை எல்லாம் கடந்து போனார்!

“அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்” (மத்தேயு 26:67).

“அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்” (மாற்கு 14:65).

“அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்” (மத்தேயு 27: 30).

“அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்” (மாற்கு 15:19).

“இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து, அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி, மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்” (லூக்கா 22:63-65).

“அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்.” (யோவான் 19: 1).

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன், அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

ஜோசப் ஹார்ட் இதை நன்றாக சொன்னார்,

இயேசுவானவர் எவ்வளவு பொறுமையாக நிற்கிறார் பாருங்கள்,
[இந்தப் பயங்கரமான இடத்தில்] உள்ளே அவமதிக்கப்பட்டார்!
பாவிகள் சர்வவல்லவருடைய கரங்களைக் கட்டினார்கள்,
மற்றும் தங்கள் சிருஷ்டிகரின் முகத்திலே துப்பினார்கள்.
(“His Passion” by Joseph Hart, 1712-1768; altered by Dr. Hymers).

இயேசுவானவர் அந்த பாடுகளை எல்லாம் கடந்து போனார். அதன்பிறகு அவர்கள் ஒரு சிலுவையிலே அவருடைய கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அடித்தார்கள்! அவர் உனக்குப் பதிலாக அந்தப் பயங்கரமான வேதனை மற்றும் பாடுகளை எல்லாம் கடந்து போனார். அவர் உனது ஸ்தானத்தில் உன்னுடைய பாவங்களின் கிரயத்தை கொடுக்க, உன்னை குணமாக்கி மற்றும் சுத்திகரித்துத் தேவனிடத்தில் கொண்டுவர பாடுபட்டு, சிலுவையிலே மரித்தார்!

“ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்” (I பேதுரு 3:18).

டாக்டர் ஐசக் வாட்ஸ் சொன்னார்,

பாருங்கள், இயேசுவின் தலையிலிருந்து, கைகளிலும், கால்களிலும்,
   துக்கமும் அன்பும் கலந்து கீழே வழிந்தோடுகிறது;
எப்போதாவது இப்படிப்பட்ட துக்கமும் அன்பும் சந்தித்தது உண்டா,
   அல்லது முட்கிரீடம் இவ்வளவு ஆழமாக பதிந்தது உண்டா?

என்னுடைய முழுசுபாவ ஆட்சி எல்லையும் அங்கே இருந்தது,
   அது மிகசிறியதாக ஆஜராகி காணப்பட்டது;
எவ்வளவு தெய்வீகமானது, அதிக அற்புதமான அன்பு,
   எனது ஆத்துமா, எனது ஜீவன், என் எல்லாவற்றையும் கேட்கிறது.
(“When I Survey the Wondrous Cross,” Isaac Watts, D.D., 1674-1748).

மற்றும் வில்லியம் வில்லியம்ஸ் சொன்னார்,

மனிதவர்க்கத்தின் குற்றமாகிய மிகப்பெரிய பாரம்,
   இரட்சகர்மீது சுமக்கும்படியாக வைக்கப்பட்டது,
துயரத்தின் ஒரு வஸ்திரத்தோடு இருந்தார், அவர்
   அணிவகுத்து வந்த பாவிகளுக்காக.
அணிவகுத்து வந்த பாவிகளுக்காக.
(“Love In Agony,” William Williams, 1759).

ஏமி ஜெபலகா நமது சபையில் பிறந்தாள். அவள் ஒவ்வொரு கூட்டத்துக்கும் வந்தாள். ஆனால் அது அவளை ஒரு கிறிஸ்தவளாக மாற்றவில்லை. மற்ற ஒவ்வொருவரைப்போலவும் அவள் சுபாவத்தில் ஒரு பாவியாக இருந்தாள். அவள் தனது பாவத்தோடு மற்றும் அவளாகவே போராடினாள். ஆனால் ஒரு நாள் எனது போதனையின் இறுதியில் அவள் முன்னுக்கு வந்தாள். அவள் முழங்கால்படியிட்டு மற்றும் கிறிஸ்துவை நம்பினாள்! அவள் என்ன சொன்னாள் என்று கவனியுங்கள்,

“என்னுடைய பாவம் ஒரு ஆழங்காண முடியாத சமுத்திரத்தைபோல வெளியே நீட்டியது. இனிமேலும் என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் கிறிஸ்துவை உடையவளாக இருந்திருக்க வேண்டும்! நான் அவருடைய இரத்தத்தை உடையவளாக இருந்திருக்க வேண்டும்! நான் முழங்கால்படியிட்டேன் மற்றும் இயேசுவையே நம்பினேன். தேவன் என்னுடைய போலியான நினைவுகள், உள்ள உணர்வு நிலைகள், மற்றும் நிச்சயத்தின் ஆசைகளில் இருந்து என்னை போராடி விடுவித்தார். அவைகளை போகும்படி நான் விட்டுவிட்டேன் மற்றும் இரட்சகரின் கரங்களில் சரிந்து விழுந்தேன். மற்றொரு பொய்யான மாறுதலுக்காக பயப்படுவதற்குப் பதிலாக, அல்லது எனக்குள்ளே மற்றும் நான் இதற்குமுன் எப்பொழுதும் செய்வதுபோல எனது உணர்வுகளைச் சோதித்துப் பார்த்துக்கொண்டு இருப்பதற்குப் பதிலாக, நான் விசுவாசத்தோடு கிறிஸ்துவைப் பார்த்தேன். ஜீவனுள்ள கிறிஸ்து என்னை இரட்சித்தார். அவர் என்னுடைய பாவத்தை தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவினார். அவர் என்னுடைய பளுவான பாவபாரத்தை எடுத்துப் போட்டார். என்னை நரகத்துக்கு அனுப்பக்கூடிய தேவனுடைய கோபத்தை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் என்னுடைய எல்லா பாவத்தையும் மன்னித்தார் மற்றும் பொறுத்துக்கொண்டார். என்னுடைய பதிவேட்டில் தமது சொந்த இரத்தத்தினால் “குற்றமில்லை” என்று முத்திரை குத்தினார். அவர் என்னுடைய வழக்கறிஞர், என் மீட்பர், என் தலைவர், மற்றும் என்னுடைய கர்த்தர்! நான் அப்போஸ்தலனாகிய பவுலோடு சேர்ந்து சொல்லுவேன், “தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக – இயேசு அவர்களுக்கு ஸ்தோத்திரம்.”

உனக்குப் பதிலாக கிறிஸ்து இருக்கிறார். அவர் உன்னுடைய ஸ்தானத்திலே மரித்தார் – உன்னுடைய பாவத்துக்குக் கிரயம் செலுத்த. பெரிய ஸ்பர்ஜன் சொன்னார், “மற்றவர்கள் வேறுகாரியங்களை பிரசங்கிக்கலாம், ஆனால் இந்த புல்பிட்டை பொறுத்த மட்டும், எப்பொழுதும் கிறிஸ்துவின் ஆள்மாற்றத்தைப்பற்றி சத்தமிட்டுக்கொண்டே இருக்கும்!”

இயேசுவானவர் உன்னுடைய பாவகடன்களை அவருடைய பாடுகள் மற்றும் சிலுவை மரணத்தின் மூலமாக கொடுத்து விட்டார்! இயேசுவிடம் வா மற்றும் அவர் உன் பாவங்களை எல்லாம் மன்னிப்பார் மற்றும் உன் ஆத்துமாவை இரட்சிப்பார்! நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் சொல்லுவாயாக,

கர்த்தாவே, நான் வருகிறேன்!
உம்மிடம் இப்பொழுது வருகிறேன்!
என்னை கழுவும், என்னை சுத்திகரியும்
கல்வாரியிலே பெருக்கெடுத்து ஓடின அந்த இரத்தத்தினால்.
(“I Am Coming, Lord,” Lewis Hartsough, 1828-1919).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “My Jesus, I Love Thee” (by William R. Featherstone, 1842-1878).


முக்கிய குறிப்புகள்

அடிக்கப்படுதல், பிடுங்கப்படுதல், வெட்கப்படுதல் மற்றும் துப்பப்படுதல்

THE SMITING, PLUCKING, SHAME AND SPITTING

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன், அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

(லூக்கா 18:31-33)

I.   முதலாவது, இயேசுவானவர் தம்மைத்தாமே அந்த சித்திரவதை செய்ய “ஒப்புக்கொடுத்தார்”! யோவான் 10:17-18; மத்தேயு 26:53-54;
I தீமோத்தேயு 2:6; கலாத்தியர் 1:4; தீத்து 2:14; யோவான் 15:13.

II.  இரண்டாவது, உனது பாவ ஆத்துமாவை குணமாக்க இயேசுவானவர் தம்மைத்தாமே அந்த சித்திரவதை செய்ய “ஒப்புக்கொடுத்தார்”! யோவான் 19:1; ஏசாயா 53:5; I பேதுரு 2:24; மத்தேயு 12:15; எரேமியா 17:9.

III. மூன்றாவது, ஒரு பாவியாகிய உனக்குப் பதிலாக இயேசுவானவர் தம்மைத்தாமே அந்த சித்திரவதை செய்ய “ஒப்புக்கொடுத்தார்”! ஏசாயா 53:5-6; மத்தேயு 26:67; மாற்கு 14:65; மத்தேயு 27:30;
மாற்கு 15:19; லூக்கா 22:63-65; யோவான் 19:1; I பேதுரு 3:18.