Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




பேதுரு – அழைக்கப்பட்டார், உணர்த்தப்பட்டார்
மற்றும் மாற்றப்பட்டார்

PETER – CALLED, CONVICTED AND CONVERTED
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

மார்ச் 18, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, March 18, 2018

பேதுருவின் முழுபெயர் சீமோன் பேதுரு என்பதாகும். நமது பாடத்தில் வருவதைப்போல, சில நேரங்களில் இயேசுவானவர் அவரை “சீமோன்” என்று அழைப்பார்.

“பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாத படிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்” (லூக்கா 22:31-32).


பேதுரு எப்பொழுது மாற்றப்பட்டார் என்று சாதாரண பிரசங்கிகளை கேட்டுப்பாருங்கள். போங்கள்! அதை செய்யுங்கள்! ஏறக்குறைய அனைவருமே பேதுருவை தம்மை பின்பற்றி வா என்று கிறிஸ்து அழைத்தபொழுதே அவர் மாற்றப்பட்டார் என்றுதான் சொல்லுவார்கள் (மத்தேயு 4:19). ஒரு சிலர் பேதுரு எப்போது மாற்றப்பட்டார் என்று சொல்லும்போது பின்வருவரும் வார்த்தைகளைச் சொல்லும் போது என்பர், “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து,” அதற்கு இயேசுவானவர் பிரதியுத்திரமாக “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” (மத்தேயு 16:16, 17). ஆனால் இந்த சம்பவங்களில் ஒன்றும் நமக்குப் பேதுருவின் மாறுதலை காட்டுகிறதில்லை. இயேசுவை பின்பற்றினதின் மூலம் பேதுரு மாற்றப்பட்டிருந்தால், அது கிரியையினால் உண்டான இரட்சிப்பாக இருக்கும் – அதனால் அது பேதுருவின் மாறுதலாக இருக்க முடியாது. பேதுரு இயேசுவை, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து, என்று சொன்னபொழுது மாற்றப்பட்டிருந்தால், அது போதனையின் அடிப்படையில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டதால் ஏற்பட்ட மாற்றமாக இருக்கும். பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்டதை பிசாசுகளும் அறிந்திருந்தன, எப்படி என்றால், “பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால்” (லூக்கா 4:41). அதனால் பேதுருவின் புரிந்துகொள்ளுதல் ஒரு பிசாசுக்கு இருந்ததைவிட மேலானதல்ல! கவனமாக படித்தபிறகு பேதுரு இன்னும் இரட்சிப்படையவில்லை என்று சொல்லும்படியாக நாம் நெருக்கப் படுகிறோம். அவர் மாற்றப்படாதபடிக்கு, ஒரு கிறிஸ்தவராக இருக்க, தட்டுத் தடுமாறி முயற்சி செய்துகொண்டிருந்தார்.

இன்றுள்ள அநேக சுவிசேஷகர்களுக்கு பேதுரு என்ன ஒரு படக்காட்சியாக காணப்படுகிறார்! பேதுருவைப்போல, கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு முயற்சி செய்து – அவர்களும் சுற்றிலுமாக தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்! கிறிஸ்து யார் என்ற சிறிய அறிவு அவர்களுக்கு இருக்கிறது, ஆனால் பேதுரு ஈஸ்டர் ஞாயிறு மாலைவரையிலும் இருந்ததைபோல அவர்களும் இன்னும் மாற்றப்படாதவர்களாக இருக்கிறார்கள்! அநேக பிரசங்கிகளே இன்னும் மாற்றப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்! அவர்கள் கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர் தேவனுடைய குமாரன் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் மாறுதலின் மெய்தத்துவத்துக்கு குருடர்களாக இருக்கிறார்கள். இன்று சுவிசேஷத்தை பிரசிங்கிப்பது இவ்வளவு குறைவாக இருப்பதற்கு இதுவும் பிரதானமான காரணங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். அநேக போதகர்கள் மாற்றப்படாத மக்களுக்கு கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி வாழ்வது என்று போதிக்க முயற்சி செய்வதில் தங்கள் நேரத்தை வீணாக்குகிறார்கள்! கேவலமானதாக இருக்கிறது! எப்படி முடியும் “பாவங்களில் மரித்த” ஒருவன் கிறிஸ்தவ வாழ்க்கையை எப்படி வாழமுடியும்? (எபேசியர் 2:1, 5).

தங்கள் மக்களுக்கு மற்றவர்கள் யாராவது சுவிசேஷம் பிரசங்கித்து விடுவார்களோ என்ற பயம் அநேக பிரசங்கிகளுக்கு இருக்கிறது! நான் தெற்கில் ஒரு சபையில் சுவிசேஷத்தை பிரசங்கிக்க அட்டவணை பட்டியலில் இருந்தேன். அது அன்னையர் தினமாக இருந்தது. நான் அந்த சபைக்கு ஒரு விருந்தினனாக இருந்ததால், அவர்களில் ஒருவரையும் தொந்தரவு செய்யாமல், ஒரு சில மென்மையான வார்த்தைகளை மட்டும் கொடுக்கலாம் என்று நான் நினைத்தேன். என்னுடைய சொந்த தாயாரின் மாறுதலடைந்த சாட்சியை மட்டும் கொடுக்கலாம் என்று நான் நினைத்தேன். நான் 12 நிமிடங்கள் மட்டுமே பேசினேன். என்னுடைய இனிமையான அம்மா எப்படியாக இயேசுவானவரை நம்பினார்கள் மற்றும் இரட்சிக்கப்பட்டார்கள் என்று கூட்டத்துக்குச் சொன்னேன். அந்தக் கூட்டத்தாரின் எதிர்விளைவை பார்த்தால் நரகத்தைபற்றி நான் இரண்டு மணி நேரம் பேசியிருப்பேன் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்! போதகரும் அவருடைய மனைவியும் என்னிடம் கைகொடுக்காமல் சபையை விட்டு அப்படியே ஓடினார்கள். சபை மக்கள் எழுந்து நின்று என்னையும் என் மனைவியையும் வித்தியாசமான போதனையை அவர்கள் இதுவரை கேள்விபடாத புதியதை போதிப்பதாக பார்த்தார்கள்! இறுதியாக ஒரு மூத்த ஸ்திரி எங்களிடம் வந்து கைகுலுக்கினார். அவள் புன்னுறுவலுடன் சொன்னாள், “அது ஒரு அற்புதமான போதனையாக இருந்தது. பல வருடங்களாக நான் அப்படிப்பட்ட ஒரு போதனையை கேட்கவில்லை!” அது ஒரு போதனையே அல்ல! அது ஒரு குறுகிய எனது வயதான இனிய அம்மாவின் 12 நிமிட சாட்சி மட்டுமே!

நானும் என் மனைவியும் குழம்பிபோய் வெளியே வந்தபொழுது நினைத்தோம், “உண்மையாகவே அது அவ்வளவு கெட்டதா? இங்கே நாம் ஒரு அடிப்படை பாப்டிஸ்ட் சபையில், ஆழமான தெற்கில் இருக்கிறோம், மற்றும் எனது அம்மாவின் எளிமையான மாற்றத்தின் கதையினால் அவர்கள் கலக்கப்பட்டார்கள் மற்றும் “உடைக்கப்பட்டார்கள்”!

மற்றொரு அடிப்படை பாப்டிஸ்ட் சபையில், நான் எனது சொந்த மாற்றத்தைபற்றிய ஒரு குறுகிய போதையை கொடுத்தேன். அதன்பிறகு ஒரு வயதான ஸ்திரி எனது மனைவியிடம் வந்து என்னை தனது வயதான கணவரிடம் கொண்டுவந்து அவரை கிறிஸ்துவிடம் நடத்த முடியுமா என்று கேட்டாள். அவளிடம் எனது மனைவி அவளுடைய வயதான கணவரைபற்றி தன் சொந்த போதகரிடம் சொல்லி இயேசுவிடம் வழிநடத்தி இருக்கவேண்டும் என்று ஆலோசனை சொன்னாள். அந்த பெண் சொன்னாள், “ஓ, அதை அவர் செய்ய மாட்டார். நான் அவரிடம் அநேக தடவைகள் கேட்டேன். அவர் எனது கணவர் வருத்தப்படுவாரோ என்று பயப்படுகிறார் என்று நான் நினைக்கிறேன்.”

இது மெய்யாகவே அவ்வளவு தீமையானதா, டாக்டர் ஹைமர்ஸ் அவர்களே? ஓ, ஆமாம்! இது மெய்யாகவே பயங்கரமானது! மிகச்சிறந்த போதகர்களும் மேன்மேலும் சோம்பேறிகளாக, வாய்சாலகர்களாக, இரக்க பண்பு இல்லாதவர்களாக, உணர்ச்சியற்றவர்களாக, கனிவற்றவர்களாக – ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு அரைமணி நேரத்தை எளிமையாக நிரப்புகிறவர்களாக, பசியுள்ள ஆத்துமாக்களுக்கு நீராகாரத்தை மெதுவாக ஒரு ஸ்பூனில் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்! சராசரி சுவிசேஷக போதகர் ஒரு பாதி மரித்த மேற்றாணி பாதிரியாரைபோல பேசுகிறார். நமது பாப்டிஸ்து போதகர்களும் சிறந்தவர்கள் அல்ல. அவர்கள் “விளக்கமளிக்கிற” போதனைகள் என்று அழைக்கப்படும் போதனைகளை செய்யும்போது நமது மக்கள் கண்களை மூடி அப்படியே தூங்குகிறார்கள். அந்தப் போதகர்கள் இளம் மக்களுக்கு எந்தச் சவாலையும் கொடுப்பதில்லை மற்றும் இழக்கப்பட்ட மக்களுக்கு எந்த நம்பிக்கையையும் கொடுப்பதில்லை. அப்படிப்பட்ட போதகர்கள் செத்த பொருட்காட்சியாளர்களைவிட மேலானவர்கள் அல்ல! ஆவிக்குரிய சவப்பெட்டி சுமப்பவர்களைவிட மேலானவர்கள் அல்ல! தேவன் நமக்கு உதவி செய்வாராக! நமது சபைகள் மரித்துக் கொண்டிருக்கவில்லை – அவர்கள் மரித்துவிட்டார்கள்! சிவப்பு இரத்த சுவிசேஷத்தை இப்போது யார் போதிக்கிறார்கள்? இப்போது “நீ மறுபடியும் பிறக்க வேண்டும்” என்று யார் முழக்கமிடுகிறார்கள்? சிலுவையின் செய்திக்கு மற்றும் பாவிகளின் மாற்றத்துக்கு நிற்கும்படி இப்போது யாருக்கு தைரியம் இருக்கிறது? சில இடைக்கால வயது பெண்கள் இவைகளை சபையில் விரும்பாமல் போகலாம்! ஓ, நாம் அந்தப் பெண்களைத் தொந்தரவு செய்யக்கூடாது! அதனால் ஒரு மூழ்கிகொண்டிருக்கும் கப்பலிருந்து எலிகள் நீந்தி ஓடுவதைப்போல நமது இளம் மக்கள் சபைகளிலிருந்து வெளியே ஓடுகிறார்கள்!

பழைய பாணியில் சுவிசேஷ போதனைகள் இல்லாவிட்டால் நமது தேசத்தில் ஒருபோதும் தாக்கத்தை உண்டாக்க முடியாது என்று நான் உணர்த்தப்பட்டேன்! நமது சபையில் கல்லூரி வயது இளம் மக்கள் நிறைந்திருக்கிறார்கள்! நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் பாவத்தையும் – நரகத்தையும்பற்றி பிரசங்கிக்கிறேன் – மற்றும் மெய்யான மாறுதலைபற்றியும் பிரசங்கிக்கிறேன்! உலகத்திலிருந்து வந்த இளம் மக்கள் மந்திரத்தால் மயக்கமடைந்தவர்கள்போல இருக்கிறார்கள்! இதை போன்ற எதையும் ஒருபோதும் கேள்விபடாதவர்களாக இருக்கிறார்கள்! மற்றும் அவர்கள் மத்தியிலிருந்து நமக்கு அநேகர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களில் நமக்கு கிறிஸ்தவரல்லாத பின்னணியிலிருந்து இளம் மக்கள் – அநேகர் மாற்றப்பட்டு கிடைத்தார்கள்.

உண்மையான மாற்றத்தைப்பற்றி நாம் கற்றுக்கொள்ள ஒருவழி வேதத்தில் உள்ள மாற்றங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்து படிப்பதாகும். இந்த மாலையிலே அதை நான் செய்யப்போகிறேன். சீமோன் பேதுருவின் மாறுதலைப்பற்றி நாம் தியானிக்க போகிறோம். பேதுரு எல்லா காலத்திலும் இருந்த மிகப்பெரிய கிறிஸ்தவர்களில் ஒருவராகும். ஆனால் அவர் எப்படி மாற்றப்பட்டார்? அவர் எப்படி ஒரு கிறிஸ்தவராக மாறினார்?

முதலாவது, பேதுரு அழைக்கப்பட்டவராக இருந்தார்.

மத்தேயு சுவிசேஷம் சொல்லுகிறது,

“இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிற போது, அவர்களைக் கண்டு: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்” (மத்தேயு 4:18-20).

இது போதுமானதாக இருந்தது! அல்லது அப்படியாக அது காணப்பட்டது. உடனடியாக அவர்கள் தங்கள் மீன்பிடிக்கும் வலைகளைவிட்டார்கள், மற்றும் கிறிஸ்துவை பின்பற்றினார்கள். பேதுருவுக்கு அது அவ்வளவு சுலபமாக காணப்பட்டது ஏன்? வேதாகமம் சொல்லுகிறது,

“உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்” (சங்கீதம் 110:3).

தேவனால் இரட்சிக்கப்படுவதற்குத் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் முதலாவது அடியை எடுப்பதற்கு விருப்பமுள்ளவர்களாக மாற்றப்பட்டிருப்பார்கள், பேதுரு செய்ததைப் போல.

இந்த வாக்கியத்தை நான் எழுதிக்கொண்டிருக்கும்பொழுது எனது மனைவி பொறிவண்டிகொட்டிலிருந்து ஒரு கடிதத்தை கொண்டுவந்தாள். அதை உடனே நான் அடையாளம் கண்டுகொண்டேன். அதில் ஹண்டிங்டன் பார்க்கிலிருந்த எனது முதலாவது சபையின் ஒரு புகைப்படம் இருந்தது. அதில் தபாலக முத்திரையாக 1950ன் கடைசி இருந்தது, அது நான் மாற்றப்பட்டதற்கு முன்பு ஆகும். அந்த கடிதம் ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளர், திருமதி பக்கர் அவர்களிடமிருந்து வந்ததாகும். அவர்கள் எழுதி இருந்தார்கள்,

அன்புள்ள பாப்,

நீ நம்முடைய அநேக மக்கள் இருப்பதைப்போல, சுகவீனமாக இல்லை என்று நான் நம்புகிறேன். நாங்கள் உன்னை இழந்து தவிக்கிறோம், அதனால் நீ வெளியே இருப்பதற்கு காரணம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, தயவுசெய்து நீ திரும்பி வா.

                  திருமதி பக்கர்

அந்த நல்ல அம்மையார் என்னை திரும்ப சபைக்குக் கொண்டுவர முயற்சி செய்தார்கள். நான் சுற்றிலும் முட்டாளாக்கப்பட்ட, ஓர் இளைஞன். ஆனால் நான் அந்தக் கடிதத்தின் தேதியைப் பார்த்தேன். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு ஒருவரும் என்னை அப்படி சபைக்கு வரமுடியாதபடி நிறுத்தி இருக்க முடியாது. அந்தச் சில மாதங்களில் எனக்கு என்ன நடந்தது? தேவன் என்னை முடிவான பயனுள்ள ஒரு அழைப்பினால் அழைத்தார் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். நான் அவருடைய பராக்கிரமத்தின் நாளிலே மனப்பூர்வமுள்ளவனாக மாற்றப்பட்டேன்.

“உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்” (சங்கீதம் 110:3).

கர்த்தர் என்னை இழுத்துக்கொண்டபொழுது, என்னை திரும்ப சபைக்குக் கொண்டுவர திருமதி பக்கர் அல்லது மற்ற ஒருவருடைய உதவியும் ஒருபோதும் எனக்கு அவசிமில்லாதிருந்தது. தேவனுடைய வல்லமை என்னை இழுத்துக்கொண்டபொழுது, ஒரு பெரிய கட்டுப்படாத குதிரைக்கூட்டமாக இருந்தாலும் அதினால் என்னை சபைக்கு வருவதைத் தடுக்க முடியாது!

பேதுருவுக்கும் அதுவே வழியாக இருந்தது. அவர் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. அந்தக் கடிதத்தை திருமதி பக்கர் எனக்கு அனுப்பினபொழுது நானும் இன்னும் இரட்சிக்கப்படாதிருந்தேன். தேவனுடைய வல்லமை என்னை இழுத்துக்கொண்டு மனப்பூர்வமடைய செய்தது – அப்படியே பேதுருவுக்கும் நடைபெற்றது. அவர் அதுவரையிலும் என்னைப்போலவே இழக்கப்பட்டவராக இருந்தார், ஆனால் தேவன் அவரை மனப்பூர்வமடைய செய்து இயேசுவை பின்பற்ற வைத்தார். அதனால் தனது மீன்பிடிக்கும் வலைகளை உடனடியாக விட்டு இயேசுவை பின்பற்றினார். ஆனால் அது அவர் இரட்சிக்கப்பட்டதற்கு அர்த்தமல்ல.

நாம் சபைக்குக் கொண்டுவரும் சில இளம் மக்கள் இவ்வளவு விரைவாக ஏன் வருகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டது உண்டா? அது ஏன் என்றால் தேவனுடைய வல்லமை அவர்களை உள்ளே இழுத்து வந்தது. ஆனால் அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்று அதற்கு அர்த்தமல்ல. இயேசு சொன்னார், “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்” (மத்தேயு 20:16; 22:14) தேவன் அநேகரை அழைக்கிறார். இந்த மாலையிலே அவர் உன்னை அழைக்கிறார். நீ எங்களுக்கு உனது பெயரையும் போன் நம்பரையும் கொடுத்தாய். அதனால் நாங்கள் காரை அனுப்பி உங்களை கொண்டுவந்தோம். “அழைக்கப்பட்டவர்கள் அநேகர்” – நீங்கள் அழைக்கப் பட்டதைபோல. “தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்”. இதையெல்லாம் நான் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் நீண்ட அனுபவத்தினால் நான் அறிந்திருக்கிறேன், அதாவது நீங்கள் தேவனுடைய தெரிந்துகொள்ளுதலில் ஒருவர், அவர் உங்களை திரும்ப இழுத்துக்கொண்டுவருவார், அவர் உங்களை இங்கே வைப்பார், அவர் உங்களை இங்கே பற்றிக்கொள்ளுவார், நீங்கள் மாறுதல் அடையும்வரையிலும்! நீங்கள் தேவனுடைய தெரிந்துகொள்ளுதலில் ஒருவராக இல்லையானால், விரைவாகவோ அல்லது தாமதமாகவோ நீ சபையைவிட்டு போய்விடுவாய் – ஏனென்றால் “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்”!

கிருபையினாலே மட்டும் நான் இரட்சிக்கப்பட்டேன்,
   இதுவே என்னுடைய வேண்டுதலாகும்.
இயேசுவானவர் எல்லாருடைய பாவத்துக்காகவும் மரித்தார்,
   மற்றும் இயேசுவானவர் எனக்காகவும் மரித்தார்.
(“Grace! ‘Tis a Charming Sound” by Philip Doddridge, 1702-1751;
    chorus altered by Dr. Hymers).

இரண்டாவது, பேதுரு உணர்த்தப்பட்டார்.

பேதுரு மூன்று வருடங்களுக்கு மேலாக இயேசுவானவரை பின்பற்றினார் என்று நான் நினைத்திருந்தேன். அந்த மூன்று வருடங்களில் பேதுரு அநேக அனுபவங்களை பெற்றிருந்தார். ஆனால் அவரது வாழ்க்கையில் மெய்யாகவே நடந்த தாக்கம் என்னவென்றால் இயேசுவானவர் யார் என்று அவர் அறிக்கையிட்டதுதான். இதை முன்னதாக நான் குறிப்பிட்டேன், இந்த போதனையின் தொடக்கத்தில். பேதுரு சொன்னார், “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து”. “இயேசு அவனை நோக்கி... மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” (மத்தேயு 16:16, 17).

இதுதான் “ஒளியூட்டுதல்” என்று அழைக்கப்படுவதாகும். அது மாறுதலுக்கு முன்பாக, மாறுதலின் சமயத்தில், மற்றும் மாறுதலுக்குப் பிறகும் நடக்கலாம்! பேதுருவின் காரியத்தில் தேவன் இந்தச் சத்தியத்தின் வெளிச்சத்தை அவனுடைய மாறுதலுக்கு முன்பாக கொடுத்தார். எனக்கும் அப்படியே நடந்தது. கிறிஸ்து ஒரு நல்ல மனிதர், அவருடைய சத்துருக்கள் அவரை ஒரு இரத்தச்சாட்சியாக கொலை செய்தார்கள் என்று நான் வருடக்கணக்காக நினைத்துக் கொண்டிருந்தேன். மாம்சத்தில் வந்த தேவன் இயேசுவே என்று, எனது இரட்சிப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் தேவன் எனக்கு வெளிப்படுத்தினார். சார்லஸ் வெஸ்லியின் பாடலை பாடிக்கொண்டிருக்கும்போது அது எனக்கு வந்தது – “அற்புதமான அன்பு, அது எப்படி இருக்க முடியும், நீங்கள், என் தேவனாகிய, நீர் எனக்காக மரிக்க வேண்டுமோ?” அதன்பிறகு நான் மூன்று நாட்களாக மாற்றப்படாதிருந்தாலும், அந்த பாடல் எனது மனதை பிரகாசிக்கும்படி செய்தது. அப்படியே பேதுருவும் இருந்தார்!

இப்பொழுது லூக்கா 18:31-34க்கு திருப்பிக் கொள்ளுங்கள் மற்றும் பேதுருவும் மற்ற சீஷர்களும் இதுவரையிலும் இரட்சிக்கப்படவில்லை என்பதை நீங்கள் தெளிவாக பார்க்கலாம். இது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1102ஆம் பக்கத்தில் உள்ளது.

“பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்: மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை” (லூக்கா 18:31-34).

இயேசுவானவர் பேதுரு மற்றும் மற்ற சீஷர்களுக்கு மூன்றாவது முறையாக சுவிசேஷத்தை விளக்கி கூறுகிறார். கிறிஸ்துவானவர் வாரினால் அடிக்கப்பட வேண்டும், மரிக்க வேண்டும், மற்றும் மூன்றாவதுநாள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டும். அதுதான் சுவிசேஷம் – கிறிஸ்தவத்தின் அடிப்படை செய்தி, I கொரிந்தியர் 15:1-4ல் இது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேதுரு இவைகளில் ஒன்றையும் உணரவில்லை, அவைகளின் பொருள் அவருக்கு “மறைவாயிருந்தது”. பேதுரு சுவிசேஷத்தை விசுவாசிக்கவில்லை!

நீ இதுவரையிலும் இரட்சிக்கப்படவில்லையானால் – உனது காரியமும் பேதுருவை போன்றதுதாக இல்லையா? நீ இந்த சபைக்கு “அழைக்கப்பட்டாய்”. நீ உனது பெற்றோர் அல்லது மற்றவரால் இங்கே கொண்டுவரப்பட்டிருக்கலாம். நீ பிறந்த நாள் விருந்துகளுக்கு வந்தாய். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மத்திய மற்றும் இரவு விருந்துகளில் எங்களோடு பங்கு பெற்றாய். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஜான் கேஹன் மற்றும் என்னுடைய பிரசங்கங்களை கேட்டாய். கிறிஸ்துவின் சிலுவை காட்சி, அவருடைய இரத்தம், அவர் எப்படியாக மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை எல்லாம் நாங்கள் சொல்ல கேட்டீர்கள். ஆனால் நாங்கள் கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றி பேசினபோது உங்கள் மனது விலகிபோனது. நீங்கள் மேலும் மேலும் கேட்டீர்கள் ஆனால் அது உங்களை “பற்றிப்பிடிக்கவில்லை”. அது உங்களுக்கு மெய்யானதாக அல்லது மிகமுக்கியமானதாக காணப்படவில்லை! நீ என்ன நினைத்தாலும் – அது ஏன் முக்கியமானது என்று உனக்குத் தெளிவாகவில்லை. பேதுரு தனது பாவத்தினால் உணர்த்தப்படுவதற்கு முன்பாக இருந்ததைப்போல நீயும் இருக்கிறாய்!

“அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை” (லூக்கா 18:33-34).

இப்பொழுது எழுந்து நின்று உங்கள் வேதாகமத்தில் லூக்கா 22:31க்கு திருப்பிக்கொள்ளுங்கள். இது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1108ஆம் பக்கத்தில் உள்ளது.

“பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டுக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான். அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” (லூக்கா 22:31-34).

நீங்கள் அமரலாம்.

நான் வேதாகமத்தில் சீமோன் பேதுரு மற்றும் நினைவாற்றல் Simon Peter in Scripture and Memory (Baker Academic, 2012) என்ற தலைப்பில் ஒரு உற்சாகமான புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். இது டாக்டர் மார்க்கூஸ் பூக்மூசல் என்பவரால் எழுதப்பட்டதாகும். அவர் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தின் வேதாகம மற்றும் ஆரம்ப கிறிஸ்தவ பாடங்களின் ஒரு பேராசிரியராகும். இந்தப் பிரபலமான வல்லுனர் சரியான கருத்தை எடுத்துக்காட்டுகிறார். இயேசுவானவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன் நாள் இரவு வரையிலும் பேதுரு மாற்றப்படாதவராக இருந்தார் என்று பயமில்லாமல் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். மேலும் அவர் சொல்லுவது மிகவும் சரியானதாகும்! மற்ற விமர்சகர்கள் இதை தடுக்கிறார்கள், அல்லது தாண்டிவிடுகிறார்கள். டாக்டர் பூக்மூசல் அப்படி இல்லை! அவர் தெளிவாக இதை விளக்குகிறார்! அவர் சொல்லுவதை கவனியுங்கள். டாக்டர் பூக்மூசல் சொன்னார்,

“பேதுருவின் [விரைவில் வரப்போகும்] சாத்தானுக்கு விரோதமான போராட்டத்தை பற்றிய ஒரு குறிப்புத் தெளிவாக உள்ளது, ‘பின்னால் திரும்புவதை’ பற்றிய பேச்சு இருந்தபடியினால், அதிலே அவர் நிச்சயமாக சோதிக்கப்படுவார் [மற்றும் தோல்வி அடைவார்]. இங்கே சொல்ல விரும்புவது ‘நீங்கள் மறுபடியும் திரும்பும் பொழுது,’ அநேக மொழி பெயர்ப்பாளர்களின் சாதகம் இருந்தாலும், கிரேக்கில் இதற்கு எந்த ஆதரவும் இல்லை” (Dr. Bockmuehl, ibid., pp. 156, 157).

“பின்னும் கர்த்தர் சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்” (லூக்கா 22:31-32).

இவ்வாறாக NIV, NASV, ESV மற்றும் பிற நவீன மொழிபெயர்ப்புகள் தவறானவைகள். “அதாவது ‘நீங்கள் மறுபடியும் திரும்பும்பொழுது’ அநேக மொழிபெயர்ப்பாளர்களின் சாதகம் இருந்தாலும் கிரேக்கில் இதற்கு எந்த ஆதரவும் இல்லை”. டாக்டர் பூக்மூசல் அவர்கள் தொடர்ந்து சொல்லுகிறார் அதாவது “எபிஸ்ட்ரிபோ” என்ற கிரேக்க வார்த்தை “மாற்றப்படு” என்றுதான் இங்கே இருக்க வேண்டும். அதனால், மறுபடியுமாக, நான் கண்டுகொண்டது KJV சரியானது மற்றும்பிற நவீன மொழிபெயர்ப்புகள் குழப்பமானவைகள்! ஆனால் டாக்டர் பூக்மூசல் அவர்கள் தொடர்ந்து சொல்லுகிறார்,

“எப்பொழுது, எங்கே, அல்லது எப்படி பேதுருவின் திரும்புதல் [மாற்றப்படுதல்] நிகழ்ந்தது? இங்கே நாம் பிரச்சனையின் சுருக்கத்துக்கு வருகிறோம். இயேசுவானவரின் ஊழியத்தின் கடைசி இரவிலும், லூக்காவில் பேதுருவின் மாறுதல் எதிர்காலத்தில் [இன்னும் பேசுகிறார்] என்பதாக சொல்லுகிறார். (ibid., p. 156).

“லூக்கா 22:32ல் பேதுருவின் மாறுதல் எதிர்காலத்தில் இருப்பதாக தோன்றுகிறது” (ibid.).

“நீ மாற்றப்பட்ட பொழுது [எதிர்காலம்]” (ibid., p. 156). “பேதுருவின் மாறுதல் இன்னும் எதிர்காலத்தில் இருக்கும் ஒன்று என்பதாக இயேசுவானவர் ஆதாரப்பூர்வமாக முன்னோக்கி பார்க்கிறார். (ibid., p. 158).

ஆனால் பேதுரு தான் மாற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார். அவர் சொல்லுகிறார்,

“அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன்” (லூக்கா 22:33).

அதற்கு இயேசுவானவர் சொன்னார், “பேதுருவே, இன்றைக்குச் சேவல் [சேவல்] கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 22:34). மாறுதல் அடையாமல் (எபிஸ்ட்ரிபோ) பிசாசுக்கு எதிர்த்து நிற்க முடியும் மற்றும் கிறிஸ்துவுக்காக வாழமுடியும் என்று பேதுரு நினைக்கிறார். எவ்வளவு தவறாக அவர் நினைக்கிறார்! மற்றும் நீ எவ்வளவு தவறாக இருக்கிறாய்!

அவர்கள் இயேசுவானவரை கைதுசெய்து பிரதான ஆசாரியனுடைய வீட்டுக்கு இழுத்து சென்றார்கள். “பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்” (லூக்கா 22:54). பேதுரு மக்கள் மத்தியில் வெளியே உட்கார்ந்திருந்தார். ஒரு வேலைக்காரி சொன்னாள், “இவனும் அவனோடிருந்தான் [இயேசுவானவர்]” (லூக்கா 22:56). அதற்கு பேதுரு சொன்னார், “அவனை அறியேன்”. சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு சொன்னான், “மனுஷனே, நான் அல்ல.” ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து சொன்னான், “இவனும் அவனோடிருந்தான்”. அதற்குப் பேதுரு சொன்னான், “மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன்”. அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.

எனது மனைவியும் நானும் இந்தக் காரியங்கள் நடந்த அந்த இடத்தில் இருந்திருக்கிறோம். இயேசு எங்கே நின்றார் மற்றும் பேதுரு எங்கே நின்றார் என்று கைடு எங்களுக்குக் காட்டினார். அவர்கள் அதிக தூரத்தில் இல்லை. இயேசுவானவர் தமது தலையை திருப்பி பேதுருவை பார்த்தார். மற்றும் பேதுரு இயேசுவின் கண்களுக்குள் பார்த்தார்.

“பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்” (லூக்கா 22:62).

இப்பொழுது, இறுதியாக பேதுரு பாவஉணர்வுக்கு கீழாக கொண்டுவரப்பட்டார். நீ பாவஉணர்வின் அனுபவத்துக்குள் வரும்வரையிலும் உனக்கு மெய்யான மாறுதலை பெற்றுக்கொள்ளுவாய் என்ற நம்பிக்கை இல்லை, அதற்குப் பேதுரு செய்ததைபோல நீயும் செய்ய வேண்டும்.

“பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்” (லூக்கா 22:62).

மூன்றாவது, பேதுரு மாற்றப்பட்டார்.

தயவுசெய்து லூக்கா 24:34க்கு திருப்புங்கள். இது ஒரு முக்கியமில்லாத வார்த்தையைபோல காணப்படுகிறது, ஆனால் டாக்டர் பூக்மூசல் அவர்கள் சொல்லுகிறார் இதுதான் பேதுருவின் மாறுதலின் ஆரம்பம். “இயேசுவானவர் பேதுருவை திரும்பி பார்த்த காட்சி அவனுடைய குற்றஉணர்வை எடுத்துக்காட்டியது (லூக்கா 22:61), ஈஸ்டர் தினத்தின் காலையில் இயேசுவானவரை பார்த்தது (லூக்கா 24:34) பேதுருவின் பாவத்தை ஆழமாக உணர்த்தியது.” அப்போஸ்தலனாகிய பவுலும் பேதுருவுக்குக் கொடுக்கப்பட்ட இந்த ஈஸ்டர் காலை தரிசனத்தைக்குறித்துக் குறிப்பிடுகிறார். பவுல் சொல்லுகிறார், “கேபாவுக்கும் [பேதுரு], பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்” (I கொரிந்தயர் 15: 5). இப்பொழுது பேதுரு சுவிசேஷத்தை விசுவாசிக்கிறார், ஆனால் அவர் இன்னும் மாற்றப்படவில்லை.

பேதுருவின் அழைப்பு, அவரது தடுமாற்றம், அவரது விசுவாச குறைவு, மற்றும் சுவிசேஷத்தை குறித்தும் இயேசுவின் பாடுகளைக்குறித்தும் அவரது குருட்டாட்டம் இவை அனைத்தையும் வேதாகமம் ஏன் நமக்குச் சொல்லுகிறது? பேதுரு கிறிஸ்துவை மறுதலித்தது மற்றும் உணர்த்துதலினால் மனங்கசந்து அழுவதை சொல்லுவதற்கு ஒரு முழு அதிகாரத்தையும் வேதாகமம் ஏன் செலவிட்டது? அதன்பிறகு, அவை அனைத்துக்கும் பிறகு, பேதுருவின் மாற்றத்தை ஒரே ஒரு சிறுவசனத்தில் நமக்குக் காட்டுகிறது, “அவர்கள்மேல் [பேதுரு மற்றும் மற்றவர்கள்] ஊதி பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்” (யோவான் 20:22). இந்தச் சமயத்தில் பேதுரு மறுபடியும் பிறந்தார் என்று டாக்டர் ஜே. வெர்னான் மெக்ஜீ சொல்லுகிறார். அவர் சொல்லுவதை நான் ஒத்துக்கொள்ளுகிறேன். ஏன் – ஏனென்றால் ஒரு மெய்யான மாறுதலில் தடுமாற்றம் மற்றும் உணர்த்துதல் மிகவும் முக்கியமான காரியங்களாகும். உனது பாவத்துக்காக நீ எங்கே “வெளியேபோய், மனங்கசந்து அழுதாய்” அந்த இடத்துக்கு நீ கொண்டுவரப்படும் வரையிலும், உனக்குச் சிறிதளவு நம்பிக்கை உண்டு. பேதுரு செய்ததைபோல நீ உணரும் வரையிலும், சுவிசேஷம் உனக்கு ஒன்றுமில்லை! நீ உன்னுடைய பாவங்களிலே மரிப்பாய். நீ அவரை நம்புவதற்கு முன்பாக இயேசுவின் தேவையை உணர வேண்டியது அவசியம், அவருடைய இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட வேண்டியது அவசியம். அநேக மக்கள் அவர்கள் ஒரு மெய்யான மாறுதலை அடைந்தபொழுது துக்கப்பட்டு கண்ணீர்விட்டு அழுது இருக்கிறார்கள். ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Grace! ‘Tis a Charming Sound” (by Philip Doddridge, 1702-1751; chorus altered by Dr. Hymers).


முக்கிய குறிப்புகள்

பேதுரு – அழைக்கப்பட்டார், உணர்த்தப்பட்டார் மற்றும் மாற்றப்பட்டார்

PETER – CALLED, CONVICTED AND CONVERTED

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

“பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாத படிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப் பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்” (லூக்கா 22:31-32).

(மத்தேயு 4:19; 16:16, 17; லூக்கா 4:41; எபேசியர் 2:1, 5)

I.    முதலாவது, பேதுரு அழைக்கப்பட்டவராக இருந்தார், மத்தேயு 4:18-20; சங்கீதம் 110:3; மத்தேயு 20:16; 22:14.

II.   இரண்டாவது, பேதுரு உணர்த்தப்பட்டார், மத்தேயு 16:16, 17;
லூக்கா 18:31-34; லூக்கா 22:31-34; 54, 56, 62.

III.  மூன்றாவது, பேதுரு மாற்றப்பட்டார், லூக்கா 24:34;
I கொரிந்தியர் 15:5; யோவான் 20:22