Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
அவர்கள் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்

THEY FORSOOK HIM AND FLED
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

மார்ச் 4, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, March 4, 2018

“ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்” (மத்தேயு 26:56).


இயேசுவானவர் தனிமையாக கெத்சமெனேவில் ஜெபித்த ஜெபத்தின் நேரத்தை முடித்தார். அவர் தூங்கிக்கொண்டிருந்த சீஷர்களை எழுப்பினார். அவர் சொன்னார், “என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்” (மத்தேயு 26:46). பிறகு யூதாஸ் தலைமையாக வந்தான் “பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும் [தடிகளையும்] பிடித்துக்கொண்டு வந்தார்கள்” (மத்தேயு 26:47).

கெத்சமெனேயின் இருளில் எல்லா சீஷர்களும் ஒன்றுபோலவே காணப்பட்டிருக்க கூடும். யூதாஸ் தேவாலய காவலர்களிடம் சொல்லி இருந்தான், “நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்” (மத்தேயு 26:48). யூதாஸ் இயேசுவை தாடையிலே முத்தமிட்டான். “அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்” (மத்தேயு 26:50). “அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்” (யோவான் 18:10). இயேசு “அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்” (லூக்கா 22:51). அதன்பிறகு இயேசுவானவர் பேதுருவிடம் அவனுடைய பட்டயத்தை போட்டுவிடும்படி சொன்னார். இயேசு அவனிடம் சொன்னார், “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு [72,000 தூதர்கள்] அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்க வேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்” (மத்தேயு 26:53-54). அதன்பிறகு இயேசுவானவர் தம்மை கைது செய்ய வந்தவர்கள் பக்கமாக திரும்பி சொன்னார், “அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் [தடிகளையும்] எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே” (மத்தேயு 26:55). இது நம்மை நமது பாடத்துக்கு கொண்டுவருகிறது,

“ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்” (மத்தேயு 26:56).

இந்த சம்பவமானது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக தீர்க்கதரிசிகள் மூலமாக முன்னறிவிக்கப்பட்டது. டாக்டர் ஆர். சி. எச். லென்ஸ்கி சொன்னார், “இந்த முழுகாரியமும் ஒரு காரியத்துக்காக ஒன்றே ஒன்றுக்காக சம்பவித்தது: ‘தீர்க்கதரிசிகளின் வேதவசனங்கள் நிறைவேறும்படியாக... இது சம்பவித்தது.’ இந்த இரவில் நிகழ்வதில் இங்கே உண்மையான சக்திகள் கிரியையில் இருக்கின்றன: தேவன் தமது தீர்க்கதரிசன திட்டத்தை நிறைவேற்றுகிறார், இயேசுவானவர் கைதுசெய்பவர்களின் கரத்தில் தம்மை ஒப்புவித்தார்... இப்பொழுது வசனம் 56 நிறைவேறியது. இயேசுவானவர் கடத்தப்பட்டுக் [கொண்டு] போகப்பட்ட பொழுது, சீஷர்கள் அனைவரும் ஓடிப்போனார்கள்” (R. C. H. Lenski, Ph.D., The Interpretation of St. Matthew’s Gospel, Augsburg Publishing House, 1964 edition, p. 1055; note on Matthew 26:56).

“ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்” (மத்தேயு 26:56).

இந்த போதனையில், இந்த வசனத்தை நான் ஆராய்ச்சி செய்யப்போகிறேன், சீஷர்கள் “அவரைவிட்டு ஓடிப்போன” காரணங்களை தோண்டி வெளியே எடுக்கப்போகிறேன். டாக்டர் ஜார்ஜ் ரிக்ரி பெரி சொன்னபடி, “விட்டு” என்பதற்கு கிரேக்க வார்த்தை “அபான்டன்” என்பதாகும் (A Greek-English Lexicon and New Testament Synonyms). இயேசுவானவரை சீஷர்கள் ஏன் கைவிட்டார்கள், ஏன் ஓடிப்போனார்கள் என்பதற்கு இங்கே அநேக காரணங்கள் இருந்தன.

I. முதலாவதாக, தீர்க்கதரிசிகளின் வேதவசனங்களை நிறைவேற்ற அவர்கள் இயேசுவானவரை விட்டு ஓடிப்போனார்கள்.

நமது பாடம் சொல்லுகிறது, “ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது…” இது சீஷர்கள் அவரை விட்டு ஓடிப்போகும் தீர்க்கதரிசனத்தையும் சேர்க்கிறது. சகரியா 13:6-7 சொல்லுகிறது,

“உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்… மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்” (சகரியா 13:6-7).

பின்வரும் வார்த்தைகளை குறித்து சொல்லும்பொழுது “மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்” டாக்டர் ஹென்றி எம். மோரிஸ் சொன்னார்,

இந்த வசனத்தை மத்தேயு 26:31 மற்றும் மாற்கு 14:27ல் கிறிஸ்து தாமே குறிப்பிட்டு இருக்கிறார். அவர், நல்ல மேய்ப்பனாகியவர், ஆடுகளுக்காக தமது ஜீவனை கொடுக்கிறார் (யோவான் 10:11), ஆனால் இந்த உலகத்தை மாற்றும் புற அதிர்ச்சி புண் சம்பவங்களில், அவரது ஆடுகள் சிறிது காலம் சிதரடிக்கப்பட வேண்டும் (Henry M. Morris, Ph.D., The Defender’s Study Bible, World Publishing, 1995 edition, p. 993; note on Zechariah 13:7).

சகரியா 13:7 தீர்க்கதரிசனத்தை சீஷர்கள் அவரை விட்டு ஓடிவிடுவார்கள் என்பதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே சொன்னார். மத்தேயு 26:31ல் கிறிஸ்து சொன்னார்,

“அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்” (மத்தேயு 26:31).

மறுபடியும், மாற்கு 14:27ல்,

“இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்” (மாற்கு 14:27).

சகரியா 13:7 தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலின்படி சீஷர்கள் அவரை விட்டு ஓடினார்கள்.

“ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்” (மத்தேயு 26:56).

II. இரண்டாவதாக, அவர்கள் இயேசுவானவரை விட்டு ஓடிப்போனார்கள் ஏன் என்றால் அவர்கள் விழுந்துபோன மனித வர்க்கத்தின் அங்கத்தினர்கள்.

மனித வர்க்கமானது விழுந்துபோன ஒரு வர்க்கமாகும். நாம் அதை ஒருபோதும் மறந்து போகக்கூடாது. நீ பாவம் நிறைந்த ஒரு மனுகுலத்தின் – ஆதாமின் பிள்ளை – அங்கமாக இருக்கும் காரணத்தால் நீ ஒரு பாவியாக இருக்கிறாய். வேதாகமம் சொல்லுகிறது,

“ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது” (ரோமர் 5:12).

அதனால்தான் எல்லா மக்களும் பிறந்து “அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருக் கிறார்கள்” (எபேசியர் 2:5). அதனால்தான் எல்லா மக்களும் “சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்” (எபேசியர் 2:3). அதனால்தான் நீ சுபாவத்தினாலே ஒரு பாவியாக இருக்கிறாய். எல்லாவற்றையும் பிசாசின்மீது குற்றம் சாட்டாதே! நாம் சுபாவத்தினாலே ஒரு பாவியாக இல்லாவிட்டால் பிசாசு நம்மை அடிமைகொள்ள முடிந்திருக்காது. ஆதாமின் சந்ததி அனைத்தும் சுபாவத்தினாலே பாவிகளாக இருக்கிறார்கள். நீ சுபாவத்தினாலே ஒரு பாவியாக இருக்கிறாய். ஆமாம், நீ!

நம்மைவிட சீஷர்கள் எந்தவிதத்திலும் சிறந்தவர்கள் அல்ல. அவர்களும், கூட, “சுபாவத்தினாலே கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்தார்கள்.” அவர்களும், கூட, “அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருக்கிறார்கள்.” அவர்களும், கூட, ஆதாமின் புத்திரர்கள். ஒரு பழைய புது இங்கிலாந்து குழந்தைகள் புத்தகம் சொல்லுவதுபோல,

“ஆதாமின் வீழ்ச்சியினால்
நாம் அனைவரும் பாவம் செய்தோம்.”

சீஷர்கள் மாம்ச சிந்தை உடையவர்களாக இருந்தார்கள் “தேவனுக்கு விரோதமான பகையாக” (ரோமர் 8:7). இவ்வாறாக கிறிஸ்து அவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்த ஒவ்வொரு தரமும் அவர்கள் அதை புறக்கணித்தார்கள். அப்படியே நீயும் சுவிசேஷத்தை புறக்கணித்தாய் ! டாக்டர் ஜே. வெர்மன் மெக்ஜீ சொன்னார்,

[கிறிஸ்து] தாம் மரிப்பதற்காக எருசலேம் போவதாக ஐந்து முறை திரும்பத்திரும்ப சொன்னார் (மத்தேயு [16:21]; 17:12; 17:22-23; 20:18-19; 20:28). இப்படிப்பட்ட ஊக்கமான அறிவுறுத்தலுக்கு பிறகும், அவரது உயிர்த்தெழுதல் வரையிலும் அதன் உட்கருத்தை [சுவிசேஷம்] கிரகித்துக்கொள்ள சீஷர்கள் தவறிவிட்டார்கள் (J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson Publishers, 1983, volume IV, p. 93; மத்தேயு 16:21 பற்றிய குறிப்பு).

சுவிசேஷத்தின் “உட்கருத்தை கிரகித்துக்கொள்ள” சீஷர்கள் ஏன் தவறி விட்டார்கள்? அதற்கு பதில் எளிமையானது,

“எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப் போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்” (II கொரிந்தியர் 4:3).

யோவான் 20:22 குறிப்பில், டாக்டர் மெக்ஜீ சொன்னார் அந்த சீஷர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவினால் என்கவுன்டர் செய்யப்படும் வரையிலும் மறுபடியும் பிறக்கவில்லை (மறுஜென்மமாக்கப்படவில்லை), மற்றும் அவர் அவர்கள்மீது ஊதினார், பிறகு சொன்னார், “பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள்” (டாக்டர். ஜே. வெர்மன் மெக்ஜீ வுh.னு. iடினை .இ p. 498; ழெவந ழn துழாn 20:22) - (J. Vernon McGee, Th.D., ibid., p. 498; யோவான் 20:22 பற்றிய குறிப்பு). (எனது பின்வரும் பொருளடங்கிய பிரசங்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் – "சீடர்களின் பயம்" “இந்த வார்த்தை அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது,” “பேதுருவின் மாறுதல்,” “உணர்த்துதலின் கீழ் பேதுரு,” மற்றும் “யூதாஸின் பொய்யான மனந்திரும்புதல்.”)

“அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப் போனார்கள்” (மத்தேயு 26:56).

அவர்கள் பாவிகள் என்று பார்க்கும்படியாக இப்படி அவர்கள் போக வேண்டியதாக இருந்தது. ஜான் கேஹன் மற்றும் எமி ஜெபலகா தாங்கள் அழிக்கப்பட்ட பாவிகள் என்று கண்டதுபோல. நீயும் ஒரு இழக்கப்பட்ட பாவி என்று காணச் செய்ய வேண்டியது அவசியமாகும்!

சிலர் உன்னிடம் சொல்லலாம் நான் சீஷர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவினால் என்கவுன்டர் செய்யப்படும் வரையிலும் மறுபடியும் பிறக்கவில்லை மறுஜென்மமாக்கப்படவில்லை என்று சொன்னதால் நான் அதிக தூரமாக சென்றுவிட்டதாக சொல்லலாம். உன்னைவிட சீஷர்கள் வித்தியாசமானவர்கள் என்று நீ நினைக்கிறாயா? அவர்கள் என்னைவிட வித்தியாசமானவர்களல்ல என்று நான் அறிந்திருக்கிறேன்! இயேசுவின் இரத்தம் இல்லாமல் நான் உங்களுக்கு முன் நின்று கொண்டிருக்க முடியாது! இயேசுவின் இரத்தம் இல்லாமல் நான் நரகத்துக்கு போகும் இழக்கப்பட்ட பாவியாகவே இருப்பேன்!

ஒரு அன்னியனாக இருந்தபொழுது இயேசு என்னை தேடினார்,
   தேவனுடைய கிடையைவிட்டு அலைந்து கொண்டிருந்த என்னை;
அவர், அபாயத்திலிருந்து என்னை காப்பாற்றினார்,
   அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்டார்.
(“Come, Thou Fount” by Robert Robinson, 1735-1790).

நான் இயன் எச். மூரே எழுதிய புத்தகத்தைப் பார்த்து மலைக்கிறேன் அது, The Old Evangelicalism (The Banner of Truth Trust, 2005). மாறுதலைபற்றி பொதுவாக பேசும்பொழுது, இயன் எச். மூரே சொன்னார், “மாறுதலை குறித்த சத்தியத்தை மீட்டுக்கொள்ள வேண்டியது இன்றைய அவசர தேவையாக இருக்கிறது. இந்த பொருளுக்கு முறன்பாடாக ஒரு பெரிய ஆரோக்கியமான காற்று அடித்தாலும் அது ஆயிரக்கணக்கான குறைவான காரியங்களை அடித்து செல்லும்” (p. 68). இதைபற்றி எனக்கு எழுதுங்கள். உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறேன், நான் தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க விரும்புகிறேன்! என்னுடைய இ-மெயில் முகவரி rlhymersjr@sbcglobal.net.

“அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப் போனார்கள்” (மத்தேயு 26:56).

அவர்கள் இன்னும் இயேசுவின் இரத்தத்தினால் தங்கள் பாவங்களிலிருந்து கழுவப்படவில்லை! நீ இயேசுவின் இரத்தத்தினால் உனது பாவங்களிலிருந்து கழுவப்பட்டு இருக்கிறாயா? கழுவ பட்டாயா? கழுவ பட்டாயா? நீ இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படவில்லையானால் உனக்கு எந்த நம்பிக்கையுமில்லை!

III. மூன்றாவதாக, அவர்கள் இயேசுவானவரை விட்டு ஓடிப்போனார்கள் ஏன் என்றால் அவர்கள் இந்த நேரம் வரையிலும் பாவத்திலிருந்து மெய்யான மாறுதலை பெற்றிருக்கவில்லை.

அவர்கள் தங்கள் சொந்த திறமைகளில் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்கள். இதற்கு முன்பாக இதை நாம் மறுபடியும் மறுபடியுமாக பார்க்கிறோம் கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்து மற்றும் அவர்களுக்கு காட்சி கொடுத்தார் மற்றும் அவர்கள்மீது ஊதினார். உதாரணமாக, அந்த இரவிலேயே பேதுரு அவரை மறுதலிப்பான் என்று இயேசுவானவர் சொன்னார். அவர்கள் இன்னும் தங்கள் பாவத்தை உணர செய்யும் உலர் பதனபடுத்துகிற பரிசுத்த ஆவியானவரின் – வேலையின் ஊடாக போகவேண்டியதாக இருந்தது!

“அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதா யிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள்” (மத்தேயு 26:35).

இதுவரையிலும் அந்த சீஷர்களில் ஒருவரும் மாற்றப்படவில்லை! நீயும் மாற்றப்படவில்லை! நீயும் பாவத்தை உணரசெய்யும் உலர் பதனபடுத்துகிற பரிசுத்த ஆவியானவரின் – வேலையின் ஊடாக போகவேண்டியதாக இருக்கிறது! டாக்டர் மார்டின் லியோடு-ஜோன்ஸ் சொன்னார்,

பாவத்தின் போதனை இல்லாமல் மெய்யான சுவிசேஷ ஊழியம் இல்லை, மற்றும் பாவம் இன்னது என்று புரிந்து கொள்ளாமல்... தேவனுடைய பரிசுத்தத்திலிருந்து சுவிசேஷ ஊழியம் ஆரம்பிக்கப்பட வேண்டும், மனிதனுடைய பாவம் நிறைந்த தன்மை மற்றும் தவறான பொல்லாத காரியங்களை செய்வதால் விளையும் நித்திய விளைவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இவ்விதமாக அந்த மனிதன் தனது குற்றஉணர்வை அறிய கொண்டுவரப்பட்டபொழுது மட்டுமே மீட்புக்காகவும் விடுதலைக்காகவும் கிறிஸ்துவிடம் ஓடிவருவான் [டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் குறிப்பு: நான் ஈஸ்டர் நாடகத்தில் யூதாஸாக நடித்தபொழுது மட்டுமே எனக்குள் பாவ உணர்வினால் ஆழமாக உணர்த்தப்பட்டேன்!] (D. Martyn Lloyd-Jones, M.D., Studies in the Sermon on the Mount, InterVarsity, 1959, volume 1, p. 235; emphasis mine).

சீஷர்களெல்லாரும் அதுவரையிலும் சீஷர்கள் மெய்யான மாறுதலுக்குள்ளாக வரவில்லை “அவரைவிட்டு ஓடிப்போனார்கள்”. அதற்கு சற்று முன்பாக சீஷர்கள் சொன்னார்கள், “நீர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்”,

“இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது...” (யோவான் 16:31-32).

பேதுரு கிறிஸ்துவை மறுதலித்தபிறகு, அவரின் துக்கம் மற்றும் உணர்த்துதல், மற்ற சீஷர்களுக்கும் நிச்சயமாக உணர்த்தப்பட்டிருக்கும். “பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்” (லூக்கா 22:61-62). டாக்டர் W. G. T. ஷெட் விமரிசித்தார், “பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதன் உணர்த்தப்பட்ட மனிதனாக மாறும்வரையிலும் சாதாரணமாக மறுஜென்மம்பெற்ற ஒரு மனிதாக மாற்றிவிடமாட்டார்” (Shedd, Dogmatic Theology, volume 2, page 514). சீஷர்கள் இயேசுவை காட்டிக்கொடுக்கும் வரையிலும் தங்கள் பாவத்தால் அவர்கள் உணர்த்தப்படவில்லை. அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் தங்களை சுத்திகரித்து கொள்ள வேண்டியதன் அத்தியவசியமான தேவையை அவர்கள் அதன்பிறகுதான் உணர்ந்தார்கள்! உங்களில் சிலர் முதலாவது பாவ உணர்வினால் உணர்த்தப்படாதபடி மாற்றப்பட முடியும் என்று நினைக்கலாம்! உனது பாவஉணர்வினால் உணர்த்தப்படாதபடி நீ மாற்றப்பட முடியாது! பேதுரு வெளியே போய் மனங்கசந்து அழுதான். அநேக மக்கள் மாற்றப்படுவதற்கு முன்பாக பேதுருவைப்போல மனங்கசந்து அழுகிறார்கள். நீ அப்படி மனங்கசந்து கண்ணீர் விட்டாயா?

செயல்படுத்துதல்

உங்களில் இன்னும் மாற்றப்படாமல் இருக்கும் நபர்களுக்கு இதை செயல்படுத்த நான் திரும்ப பின்னுக்கு செல்லுவேன். நீ அழக்கப்பட்ட ஒரு பாவி என்று உணருகிறாயா, உனது சொந்த இருதயமே “திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது”? (எரேமியா 17:9). நீ உணர்ந்திருக்கிறாயா “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:24). உன்னிலிருக்கும் எல்லா நம்பிக்கையையும் நீ இழந்துவிட்டாயா? உன்னுடைய பாவத்துக்காக நீ கதறி அழுது இருக்கிறாயா? நீ உன்னுடைய பாவத்துக்காக கதறி அழாவிட்டால் உனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை! நீ இப்படியாகச் சொல்லும் வரையிலும், “பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்!” டாக்டர் லியோடு-ஜோன்ஸ் சொன்னதுபோல, “இவ்விதமாக அந்த [மனிதன்] தனது குற்ற உணர்வை அறிய கொண்டுவரப்பட்டபொழுது மட்டுமே, மீட்புக்காகவும் விடுதலைக்காகவும் கிறிஸ்துவிடம் பறந்து வருவான்” (ibid.).

இயேசுவின் நாமத்தில், ஒருமனதோடு,
புனித பாடலை உயர்த்துங்கள்,
இரத்தம் ஒழுகும் ஒவ்வொரு காயத்திலிருந்தும்
சுகமளிக்கும் ஊற்று ஓடுவதை நினைத்துப்பார்.

ஓ, அவர் ஏற்றபாடுகளை யாரால் சொல்ல முடியும்
அந்த பரிசுத்த இரத்தம் சிந்தப்பட்டபொழுது,
நமது குற்றங்கள் அவர்மீது சுமத்தபட்டபொழுது
அவரது கிழிக்கப்பட்ட புயங்களின் வேதனைதான் என்ன?

அவமதித்த புறக்கணிப்பின் சத்தம் அவரின் இருதயத்தை
அதிக ஆழமாக அவதிக்கு உட்படுத்தினதைபோல;
அடிக்கப்பட்ட ஆணிகள், தைக்கப்பட்ட கூரான முள்முடி,
அதிகமான துக்கத்தை அவருக்கு கொடுக்கவில்லை.

ஆனால் சண்டை சச்சரவு போட்டிகள் யாவும் உள்ளான
காட்டி கொடுத்த பாரதுக்கமாக இருந்தது,
அவர்மீது சுமத்தப்பட்ட நமது சகல பாவபாரங்களும்
அவரது பாரம்சுமந்த ஆத்துமா எவ்வளவாக தாங்கினது.
(“The Lord Hath Laid on Him,” William Hiley Bathurst, 1796-1877;
   to the tune of “Amazing Grace”).

சீனாவில் ஏற்பட்ட எழுப்புதலில் அவர்கள் செய்ததுபோல நீ உனது பாவத்தை பலமாக உணர்ந்து மனங்கசந்து அழுது மெய்யாக கண்ணீர் விடவேண்டியது அவசியம்.

நீங்கள் இரட்சிக்கப்படுவதைபற்றி நாங்கள் உங்களோடு பேசும்படியாக முதல் இரண்டு வரிசை இருக்கைகளில் வந்து அமருங்கள் என்று நான் சொல்லுவேன். சொன்ன உடனே உங்களில் அநேகர் வருவீர்கள், ஆனால் உங்களில் அநேகருக்கு அது ஒன்றும் அதிகமாக செய்துவிட முடியாது. இழக்கப்பட்ட பாவிகளாகவே இங்கிருந்து போவீர்கள். இங்கே வருவது ஏன் உங்களுக்கு உதவி செய்ய முடியாது? ஏன் என்றால் நீ இழக்கப்பட்டவராக உணரவில்லை. நீ அந்த சீஷர்களைபோல இருக்கிறாய். உன்மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறாய். நீ இருக்கிறதுபோலவே ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழமுடியும் என்று நீ நினைக்கிறாய். ஆனால் நீ நினைப்பது தவறு. விரைவாகவோ அல்லது தாமதமாகவோ பிசாசு உன்னை வந்து சோதிப்பான். சீஷர்கள் செய்ததைபோலவே மெய்யாக நீயும் செய்வாய். நீ கிறிஸ்துவை விட்டுவிடுவாய். நீ இந்த சபையை விட்டுவிடுவாய். நீ ஒரு பாவவாழ்க்கைக்கு போய்விடுவாய். அது எனக்கு எப்படி தெரியும்? ஏன் என்றால் நான் 60 ஆண்டுகளாக பிரசங்கம் செய்துகொண்டிருக்கிறேன். நான் உன்னைப்போலவே நூற்றுக்கணக்கான மக்களை பார்த்திருக்கிறேன். அதனால்தான் எனக்கு தெரியும் நீ அந்த சீஷர்கள் அந்த இரவில் செய்ததைபோல கிறிஸ்துவை விட்டுவிடுவாய். விரைவாகவோ அல்லது தாமதமாகவோ அவர்கள் செய்ததைபோலவே நீயும் செய்வாய். உனக்கு சித்தமுண்டு என்று நீ நினைக்க மாட்டாய். ஆனால் நீ நினைப்பது தவறு! உனக்கு நீ நேர்மையாக இரு. நீ சபையை விட்டு போவதைப்பற்றி ஏற்கனவே நினைத்துவிட்டாய். நீ நேர்மையாக இரு. நீ சபையை விட்டு போவதைப்பற்றி ஏற்கனவே நினைத்துவிட்டாய், இல்லையா? இல்லையா? இல்லையா? அப்படிதான் என்று உனக்கு தெரியும்.

நீ உனது இருதயத்தை பார்க்க வேண்டியது அவசியம். உனது பாவங்களை உணரவேண்டியது அவசியம். இயேசுவில் உனது விசுவாச குறைவுகளை உணரவேண்டியது அவசியம். நீ ஒரு இழக்கப்பட்ட பாவி என்பதை உணரவேண்டியது அவசியம்! உனது குற்றங்களை உணரவேண்டியது அவசியம் – இயேசுவை நம்பாத குற்றம். அதுவே எல்லா பாவங்களிலும் மிகப்பெரிய பாவமாகும் – இயேசுவை நம்பாத பாவம். இயேசுவானவர் சொன்னார், “விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டா யிற்று” (யோவான் 3:18). நீ நரகத்துக்கு போகும் வரையிலும் காத்திருக்க வேண்டியதில்லை. நீ ஏற்கனவே ஆக்கினை தீர்ப்பு அடைந்து விட்டாய்! டாக்டர் லியோடு-ஜோன்ஸ் சொன்னார், “இவ்விதமாக [நீ உனது] குற்றஉணர்வை [உணர] மற்றும் பார்க்க கொண்டுவரப்பட்டபொழுது மட்டுமே இரட்சிபுக்காகவும் விடுதலைக்காகவும் கிறிஸ்துவிடம் [வருவாய்].” நீ உன்னுடைய பாவத்தை உணருகிறாயா? நீ உன்னுடைய பாவத்தை உணர்ந்தால், அது உன்னை வாதிக்கும், அதன்பிறகு நீ இயேசுவிடம் வருவாய் மற்றும் அவரை நம்புவாய், பிறகு அவரால் இரட்சிக்கப்படுவாய், மற்றும் உன்னுடைய பாவத்திலிருந்து உன்னை கழுவ அவர் சிலுவையிலே சிந்தின இரத்தத்தினால் கழுவப்படுவாய். மெய்யாக இரட்சிக்கப்படுவதற்கு வேறுவழியில்லை. நான் இயேசுவின் இரத்தத்தைப்பற்றி பிரசங்கிக்காத ஒரு ஞாயிற்று கிழமையும் இருக்கக்கூடாது என்று நான் ஜெபிக்கிறேன். இந்த சுவிசேஷத்தை தவிர வேறு சுவிசேஷத்தை நான் அறியேன் – இயேசுவை நம்பு நீ சுத்தமடைவாய். கல்வாரி சிலுவையில் சிந்தின இயேசுவின் இரத்தம் மட்டுமே உன்னுடைய ஒரே நம்பிக்கை! இருந்தாலும் நீ இயேசுவை அல்லது அவருடைய இரத்தத்தை குறிப்பிடவில்லை! ஏன் இல்லை? ஏன் என்றால் நீ உனது பாவத்தை உணரவில்லை – அதனால்தான்! அதனால்தான்! அதனால்தான்! நீ சரியான வார்த்தைகளை கற்றுக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறாய். ஓ, நீ எவ்வளவு முட்டாளாக இருக்கிறாய்! அகஸ்தியன் சொன்னார், “உமக்குள் இளைப்பாறுதலை பெற்றுக்கொள்ளும் வரைக்கும் எங்கள் இருதயங்கள் இளைப்பாறுதல் இல்லாமல் இருக்கிறது.” இரட்சகரின் தமனியில் இருந்து, இழுக்கப்பட்ட இரத்தம் நிறைந்த ஊற்று ஒன்று இருக்கிறது. பாவிகள், அந்த இரத்தத்தின்கீழ் முழுகினால், தங்கள் குற்றக்கறைகள் அனைத்தையும் நீக்கிக்கொள்ளலாம். இப்பொழுதே இயேசுவிடம் வா. அவருடைய பரிசுத்த இரத்தத்தில் மூழ்கி ஒவ்வொரு பாவங்களையும் நீக்கிக்கொள்! ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “Alone” (Ben H. Price, 1914).


முக்கிய குறிப்புகள்

அவர்கள் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்

THEY FORSOOK HIM AND FLED

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

“ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்” (மத்தேயு 26:56).

(மத்தேயு 26:46, 47, 48, 50; யோவான் 18:10;
லூக்கா 22:51; மத்தேயு 26:53-54,55)

I.   முதலாவதாக, தீர்க்கதரிசிகளின் வேதவசனங்களை நிறைவேற்ற அவர்கள் இயேசுவானவரை விட்டு ஓடிப்போனார்கள்,
சகரியா 13:6-7; மத்தேயு 26:31; மாற்கு 14:27.

II.  இரண்டாவதாக, அவர்கள் இயேசுவானவரை விட்டு ஓடிப்போனார்கள் ஏன் என்றால் அவர்கள் விழுந்துபோன மனிதவர்க்கத்தின் அங்கத்தினர்கள், ரோமர் 5:12; எபேசியர் 2:5, 3; ரோமர் 8:7;
II கொரிந்தியர் 4:3.

III. மூன்றாவதாக, அவர்கள் இயேசுவானவரை விட்டு ஓடிப்போனார்கள் ஏன் என்றால் அவர்கள் இந்த நேரம் வரையிலும் பாவத்திலிருந்து மெய்யான மாறுதலை பெற்றிருக்கவில்லை, மத்தேயு 26:35; யோவான் 16:31-32; லூக்கா 22:61-62; எரேமியா 17:9;
ரோமர் 7:24; யோவான் 3:18.