Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
இரத்த வியர்வை

THE BLOODY SWEAT
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

பிப்ரவரி 18, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, February 18, 2018

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).


இந்த செய்தியானது சி. எச். ஸ்பர்ஜன் அவர்களின் இரண்டு போதனைகளை அடிப்படையாக கொண்டதாகும், “தோட்டத்திலே வேதனை” (அக்டோபர் 18, 1874) மற்றும் “கெத்சமெனே” (பிப்ரவரி 8, 1863). பிரசங்கிகளின் பிரபு மூலமாக கொடுக்கப்பட்ட இந்த இரண்டு செவியறிவு போதனைகளான தலைசிறந்த படைப்புகளிலிருந்து ஒரு பொருள் சுருக்கத்தை நான் உங்களுக்கு தருவேன். இங்கே எதுவுமே அசல் இல்லை. குறைந்த படிப்பறிவுள்ள நவீன மனிதனின் மனதுக்கு ஏற்றவிதத்தில் இதில் இலக்கிய நயத்தை சேர்த்து இந்த போதனைகளை எளிமையாக்கி இருக்கிறேன். இந்த கருத்துக்களை பெரிய பிரசங்கியிடமிருந்து நான் சேகரித்து, இவைகளை உங்களுக்கு முன்பாக வைக்கிறேன் இயேசுவானவர் கெத்சமெனே தோட்டத்தில் அடைந்த வேதனைகள் மற்றும் ஸ்பர்ஜன் அவர்களின் கருத்துக்கள் உங்களுடைய நித்திய விதியை மாற்றும் விதத்தில் உங்கள் ஆத்துமாவை பற்றிப்பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இயேசு பஸ்கா உணவை புசித்து மற்றும் கர்த்தருடைய இராவிருந்தை தமது சீஷர்களோடு கொண்டாடினார். அதன்பிறகு அவர் கெத்சமெனே தோட்டத்துக்கு அவர்களோடு சென்றார். அவரது வேதனையின் ஆரம்ப இடமாக அவர் ஏன் கெத்சமெனே தோட்டத்தை தெரிந்து கொண்டார்? ஆதாமின் பாவம் ஏதேன் தோட்டம் என்ற ஒரு தோட்டத்தில், நம்மை அழித்துவிட்ட காரணத்தினாலா; அதனால் கடைசி ஆதாம் நம்மை மீட்டு திரும்ப சேர்க்க கெத்சமெனே தோட்டம் என்ற மற்றொரு தோட்டத்தை, தெரிந்துகொள்ள விரும்பினாரா?

கிறிஸ்து ஜெபிப்பதற்காக அடிக்கடி கெத்சமெனேவுக்கு வந்திருந்தார். இதற்கு முன்பாக அவர் அநேகதரம் வந்த இடம் அதுவாகும். நமது பாவம் அவரை எல்லாவிதத்திலும் துக்கப்படும்படி மாற்றியது என்பதை நமக்கு காட்டும்படியாக இயேசு அர்த்தப்படுத்தினார். அவர் அதிக ஆனந்தமாக அனுபவித்த இடம் அவருக்கு அதிக வேதனையை அடையும் இடமாக மாறியது.

அல்லது கடந்த காலங்களின் ஜெபத்தை அது நினைவு படுத்திய காரணத்தினால் அவர் ஒருவேளை கெத்சமெனேவை தெரிந்து கொண்டிருக்கலாம். அடிக்கடி தேவன் அவருக்கு பதிலளித்த இடமாக அது இருந்தது. அவர் இந்த வேதனைக்குள் நுழையும்பொழுது, அந்த இடத்தில் அவருக்கு தேவன் பதிலளித்ததை அவர் இப்பொழுது நினைப்பதற்கு உதவியாக இருக்கும் என்று ஒருவேளை அவர் உணர்ந்திருக்கலாம்.

அவர் ஜெபிப்பதற்காக கெத்சமெனேவுக்கு வந்ததற்கு பிரதான காரணம் அங்கே போவது அவருக்கு பழக்கமாக இருந்தது, இதை ஒவ்வொருவரும் அறிந்திருந்தார்கள். யோவான் நமக்கு சொல்லுகிறார், “இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்” (யோவான் 18: 2). அவரை கைதுசெய்வார்கள் என்று அறிந்து வேண்டுமென்றே இயேசு அந்த இடத்துக்கு போனார். அவர் காட்டிக்கொடுக்கப்படும் வேளை வந்தபோது, அவர் போனார் “அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போல” (ஏசாயா 53:7). அவர் பிரதான ஆசாரியருடைய சேவகர்களுக்கு தம்மை மறைத்துக்கொள்ளவில்லை. அவரை திருடனைபோல வேட்டையாட வேண்டிய அவசியமில்லை, அல்லது ஒற்றர்கள் மூலமாக தேடவேண்டியதாக இருக்கவுமில்லை. காட்டிக்கொடுப்பவன் தம்மை எளிதாக காணும்படியும் மற்றும் அவரது விரோதிகள் அவரை கைதுசெய்யவும் ஏற்ற இடத்துக்கு இயேசு விருப்பத்தோடு சென்றார்.

இப்பொழுது நாம் கெத்சமெனே தோட்டத்துக்குள் நுழைகிறோம். இந்த இரவிலே அது எவ்வளவு இருட்டாக மற்றும் பயங்கரமாக இருக்கிறது. நாம் யாக்கோபோடு சேர்ந்து நிச்சயமாக சொல்ல முடியும், “இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது!” (ஆதியாகமம் 28:17). கெத்சமெனேவை தியானிக்கும் போது, கிறிஸ்துவினுடைய வேதனையைபற்றி நாம் நினைக்க வேண்டும், மற்றும் தோட்டத்தில் கிறிஸ்துவினுடைய துக்கத்தைபற்றி மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்க நான் முயற்சி செய்கிறேன்.

I. முதலாவதாக, கெத்சமெனேவில் கிறிஸ்து அடைந்த வலி மற்றும் வேதனைக்கு காரணம் என்ன?

வேதாகமம் நமக்கு சொல்லுகிறது இயேசு, “துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்” (ஏசாயா 53:3), ஆனால் அவர் ஒரு மன அழுத்தம் உள்ளவராக காணப்படவில்லை. அவருக்குள் அவ்வளவு பெரிய சமாதானம் இருந்தபடியினால் பின்வரும் வார்த்தைகளை அவரால் சொல்ல முடிந்தது “என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவான் 14:27). இயேசு சமாதானமுள்ள மகிழ்ச்சியானவராக இருந்தார் என்று நான் சொல்லும்பொழுது, நான் தவறாக எடுத்து கொண்டதாக நான் நினைக்கவில்லை.

ஆனால் கெத்சமெனேவில் எல்லாம் மாறிவிட்டது. அவரது சமாதானம் போய்விட்டது. அவரது மகிழ்ச்சி மிகுந்த துக்கமாக மாறியது. எருசலேமுக்கு போகிற மிகவும் சரிவான மலை பக்கமாக, கெதரோன் ஆற்றை தாண்டி, கெத்சமெனேவுக்கு போனபொழுது, இரட்சகர் மகிழ்ச்சியோடு பேசினார் மற்றும் ஜெபித்தார் (யோவான் 15:17).

“இயேசு இவைகளைச் சொன்ன பின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் [ஆங்கிலத்தில் கேத்ரன்] என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள்” (யோவான் 18:1).

இயேசு தமது வாழ்நாள் முழுவதிலும் மன அழுத்தம் உள்ளவராகவோ அல்லது துக்கம் நிறைந்தவராகவோ ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது, கெத்சமெனேவில் நுழையும்பொழுது, எல்லாம் மாறிவிட்டது. அவர் சத்தமிட்டு சொல்லுகிறார், “இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்” (மத்தேயு 26:39). இயேசு தமது வாழ்நாள் முழுவதிலும், மன அழுத்தம் உள்ளவராகவோ அல்லது துக்கம் நிறைந்தவராகவோ ஒரு வார்த்தையும் சொல்லவில்லை, இருந்தாலும் இங்கே அவர் வேதனையோடும், இரத்த வியர்வையோடும், சொல்லுகிறார், “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” (மத்தேயு 26:38). கர்த்தராகிய இயேசுவே, நீர் இவ்வளவு ஆழமாக கஷ்டபடுவதற்கு, உமக்கு என்ன சம்பவித்தது?

அவருடைய சரீரத்தின் வலியினால் அவர் இப்படியாக துக்கப்படவோ அல்லது மன அழுத்தப்படவோ இல்லை என்பது தெளிவாகிறது. இயேசுவுக்கு சரீரப்பிரகாரமாக எந்த பிரச்சனையையும் இதற்கு முன்பாக இருந்ததாக சொல்லப்படவுமில்லை. அவரது சிநேகிதன் லாசரு மரித்தபோது அவர் துக்கமாக இருந்திருக்கிறார். அவரது விரோதிகள் அவரை மதுவினால் மதிமயங்கி இருக்கிறார் என்றும், அவர் சாத்தானின் வல்லமையினால் பிசாசுகளை துரத்துகிறார் என்றும் சொன்னபோது அவர் சந்தேகமில்லாமல் துக்கமாக உணர்ந்திருப்பார். ஆனால் இவை அனைத்திலும் அவர் தைரியமாக கடந்து முன்னேறினார். அது அவருக்கு பின்னால் இருந்தது. ஆனால் அது வலியைவிட கூர்மையானதாக, நிந்தைகளைவிட அதிகமாக வெட்டக்கூடியதாக, இழப்பைவிட அதிக பயங்கரமானதாக, இப்பொழுது இந்த நேரத்திலே இரட்சகரை அழுத்தமாக பற்றிபிடித்தது, மற்றும் அவரைத் துக்கமடையச் செய்தது “துக்கமடையவும் வியாகுலப்படவும்” (மத்தேயு 26:39).

அது மரணபயமாக இருந்திருக்கும், அல்லது சிலுவையில் அறையப்படும் கொடூரமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அநேக இரத்த சாட்சிகள் தங்கள் விசுவாசத்துக்காக தைரியமாக மரித்திருக்கிறார்கள். அவர்களைவிட கிறிஸ்துவுக்கு குறைவான தைரியம் இருந்தது என்று நினைப்பது அவரை அவமதிப்பதாகும். தம்மை மரணபரியந்தம் பின்பற்றினவர்களைவிட நமது எஜமானுக்கு குறைவான தைரியம் இருந்தது என்று நினைக்கக்கூடாது! மேலும், வேதம் சொல்லுகிறது, “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து...” (எபிரேயர் 12:2). இயேசுவைவிட ஒருவரும் மரணத்தின் வலியை சவாலோடு ஏற்றவர்கள் இல்லை. தோட்டத்திலே அவருக்கு உண்டான வேதனைக்கு காரணம் இதுவாக இருக்க முடியாது.

மேலும், கெத்சமெனேதோட்டத்தில் அவர் அடைந்த பெரிய வேதனை சாத்தானுடைய வழக்கமற்ற தாக்குதலால் ஏற்பட்டது என்று நான் விசுவாசிக்கவில்லை. அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில், கிறிஸ்து வனாந்திரத்திலே இருந்தபோது பிசாசோடு ஒரு தீவிரமான போட்டத்தை கடந்து வந்தார். இருந்தாலும் வனாந்திரத்திலே இயேசு “ஒரு வேதனையில் இருந்தார்” என்று நாம் வாசிக்கவில்லை. அந்த வனாந்திரத்திலே கெத்சமெனே தோட்டத்தில் அவர் அடைந்த பெரிய இரத்த வியர்வை வேதனையைபோல இல்லை. தூதர்களின் கர்த்தர் சாத்தானோடு முகமுகமாக நின்றபோது, அவர் மிகுந்த சத்தமிடவில்லை, மற்றும் கண்ணீர்விட்டு தரையிலே விழுந்து பிதாவினிடத்தில் வேண்டுதல் செய்யவில்லை. இதை ஒப்பிட்டு பார்க்கும்போது, சாத்தானோடு கிறிஸ்துவின் போராட்டம் எளிது. ஆனால் கெத்சமெனேவில் அவர் அடைந்த வேதனை அவருடைய ஆத்துமாவை காயப்படுத்தினது மற்றும் ஏறக்குறைய அவரை கொன்றுவிட்டது.

பிறகு, அவருக்கு உண்டான வேதனை எதனால் ஏற்பட்டது? அது நமக்காக தேவன் அவரை துக்கத்துக்குட்படுத்தினபடியினால் ஏற்பட்டது. அது இயேசு இப்பொழுது பிதாவின் கரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை எடுக்க வேண்டியதாக இருந்தது. அவர் அதற்காக நடுங்கினார். அதனால் அது சரீர வேதனையை காட்டிலும் பயங்ரமானது என்று நீங்கள் நிச்சயப்படுத்திக் கொள்ளலாம், அதுவரையிலும் அவர் திகைத்துவிடவில்லை. அவரோடு மக்கள் கோபம் அடைந்ததைவிட மோசமானது அது – அதிலிருந்து அவர் திரும்பிவிடவில்லை. அதுசாத்தானுடைய தாக்குதலைவிட அதிக பயங்கரமானதாக இருந்தது – அதை அவர் வெற்றிகொள்ள வேண்டியதாக இருந்தது. அது நினைக்கமுடியாத அளவுக்கு பயங்கரமான ஒன்றாக, ஆச்சரியமான பயங்கரமாக இருந்தது – பிதாவாகிய தேவனால் அவர்மேல் வந்தது.

அவருக்கு உண்டான வேதனை எதனால் ஏற்பட்டது என்ற சந்தேகங்களை எல்லாம் இது நீக்குகிறது:

“கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6).

பாவிகள்மீது விழுந்த சாபத்தை இப்பொழுது அவர் சுமக்கிறார். அவர் பாவிகளின் ஸ்தானத்தில் நின்றார் மற்றும் பாடுபட்டார். அதுதான் என்னால் முழுமையாக விவரிக்க முடியாத அந்த வேதனைகளை எல்லாம் தாங்கிகொண்டதன் இரகசியம். எந்த மனித அறிவாலும் இந்தப் பாடுகளைப் புரிந்துகொள்ள முடியாது.

அது தேவனுக்கு, தேவனுக்கு மட்டுமே,
அவரது துக்கம் முழுமையாக தெரியும்.
(“Thine Unknown Sufferings,” Joseph Hart, 1712-1768).

தேவாட்டுக் குட்டியானவர் மனித வர்க்கத்தின் பாவங்களை தமது சரீரத்திலே சுமந்தார், நமது பாவங்களின் பாரம் அவருடைய ஆத்துமாவில் விழுந்தது.

“நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும் படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (I பேதுரு 2:24).

நமது பாவங்களை எல்லாம் கெத்சமெனேதோட்டத்தில் “அவருடைய சொந்த சரீரத்தின்மேல்” வைக்கப்பட்டது என்று நான் விசுவாசிக்கிறேன், மற்றும் நமது பாவங்களை எல்லாம் அடுத்த நாளில் அவர் சிலுவைக்கு சுமந்துபோனார்.

அங்கே தோட்டத்தில் பாவத்தை சுமப்பவர் என்றால் என்ன என்பதை கிறிஸ்து முழுமையாக உணர்ந்தார். அவர் போக்கு ஆடாக மாறினார், இஸ்ரவேலின் பாவத்தை அவரது தலையின்மேல் சுமந்தார், எடுத்து செல்லப்பட்டு பாவநிவாரண பலியானார், பாளையத்துக்கு வெளியே எடுத்து செல்லப்பட்டு மற்றும் தேவகோபாக்கினையின் அக்கினியில் முழுவதும் தகனிக்கப்பட்டார். இதிலிருந்து கிறிஸ்து ஏன் பின்வாங்கினார் என்று உன்னால் இப்பொழுது பார்க்க முடிகிறதா? பாவிகளான நம்முடைய ஸ்தானத்தில் தேவனுக்கு முன்பாக நிற்பது கிறிஸ்துவுக்கு மிகவும் அச்சந்தரும் காரியமாகும் – லூத்தர் சொன்னதுபோல, உலகத்தின் பாவிகலெல்லாம் அவரே என்று தேவன் பார்த்தார். தேவனுடைய கோபம் மற்றும் பழிதீர்வு அனைத்துக்கும் மையமாக அவர் மாறினார். பாவமுள்ள மனிதர்மேல் விழுந்த நியாயத்தீர்ப்பை அவரே தம்மீது சுமந்து கொண்டார். இந்த நிலையில் இருக்க கிறிஸ்துவுக்கு மிகவும் பயங்கரமானதாக இருந்தது.

அதன்பிறகு, மேலும், அந்த தோட்டத்திலே பாவத்துக்குறிய தண்டனைக்கிரயம் அவர்மீது விழ ஆரம்பித்தது. முதலாவது, பாவம் அவர்மீது விழுந்தது, அதன்பிறகு பாவத்துக்குறிய தண்டனைக்கிரயம் அவர்மீது விழுந்தது. தேவனுடைய நீதிக்கு மனிதருடைய பாவங்களின் கிரயம் செலுத்தப்பட்டது என்பது சிறிய பாடுகள் இல்லை. நமது கர்த்தர் சகித்ததை மிகைபடுத்த நான் ஒருபோதும் பயப்படேன். அவர் பருகின பாத்திரத்தில் எல்லா நரகமும் ஊற்றப்பட்டது.

இரட்சகரின் ஆவியை நொருக்கின கடும்துயரம், பெரிய மற்றும் ஆழங்காண முடியாத சமுத்திர அளவான விவரிக்க முடியாத வேதனை அவரது தியாக மரணத்தில் அவரது ஆத்துமாவை மோதியது, விவரிக்க முடியாததை விவரிக்க முயற்சிப்பதாக யாராவது என்னை குற்றம் சொல்லாமல், அல்லது நான் மிகவும் தூரமாக போகாமலிருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் இதைச் சொல்வேன், மனித வர்க்கத்தின் பெரிய சீற்றமிக்க ஆழமான பாவம், கிறிஸ்துவின்மீது பெரும்துளிகளாக ஊற்றப்பட்டபோது, இரத்த வேர்வையில் அவர் மூழ்கினார். ஒரு போதும் பாவம் செய்யாதவரை, ஒரு பாவியாக நடத்துவது, ஒரு பாவியாக தண்டிப்பது – இதுதான் அவரை நமது பாடம் சொல்லும் வேதனையை கொடுத்தது.

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

இப்பொழுது நாம் அடுத்த கேள்விக்கு வருகிறோம்.

II. இரண்டாவதாக, கிறிஸ்துவின் இரத்த வேர்வைக்கு அர்த்தம் என்னவாக இருந்தது?

எலிகாட் நமக்கு சொல்லும் இரத்த வேர்வைக்கு அர்த்தம் என்னவென்றால் “பொதுவாக பெறப்பட்ட கோணம்” (Charles John Ellicott, Commentary on the Whole Bible, volume VI, p. 351). அவர் தொடர்ந்து இதை குறிப்பிடுகிறார் “இந்த வார்த்தைகளான ‘இரத்த வேர்வை’ [அதன்] அர்த்தம் அரிஸ்டாட்டலில் முழுமையாக காலியானதற்கு அடையாளம் என்று குறிப்பிடுகிறது” (ibid.). அகஸ்தியனில் இருந்து இந்த நாள் வரையிலும் இருக்கும் அதிகமான விமர்சகர்கள் “சொல்லப்பட்டபடி அப்படியே” என்று சொல்லுகிறார்கள் அது மெய்யாகவே உண்மையான இரத்தம் என்பதை குறிக்கிறது. கிறிஸ்து மெய்யாகவே இரத்த வியர்வை சிந்தினார் என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒருவேளை பொதுவானதாக இல்லாமல் இருந்தாலும், இது வரலாற்றின் அநேக கால இடைவேளையில் உள்ள மற்ற மக்களால் சாட்சியாக சொல்லப்பட்டது. பழைய மருத்துவ நூல்களில் கேலன், மற்றும் சமீபகாலங்களிலும், நீண்ட பெலவீனத்தினால் மக்களுக்கு இரத்த வியர்வை வந்ததாக பதிவுகள் உள்ளன.

ஆனால் கிறிஸ்து சிந்தின இரத்த வியர்வையின் காரணம் ஒப்பற்றது. அவர் இரத்த வியர்வை சிந்தினது மட்டுமல்ல, ஆனால் அது பெரும் துளிகள் அல்லது “கட்டிகள்,” பெரிய, கனமான துளிகள். இதைபோல வேறு எங்கும் காணப்படவில்லை. வியாதியுள்ள மக்களின் வியர்வையில் சிறிது இரத்தம் காணப்பட்டது உண்டு, ஆனால் பெரும் துளிகள் ஒருபோதும் காணப்படவில்லை. பிறகு நமக்கு சொல்லப்பட்டது என்னவென்றால் இந்த பெரிய இரத்த கட்டிகள் அவருடைய துணியில் உறிஞ்சப்படவில்லை, அவை “தரையில் விழுந்தன”. இங்கே கிறிஸ்து மருத்துவ சரீத்திரத்தில் தனித்து நிற்கிறார். அவர் நல்ல ஆரோக்கியமானவராக, முப்பத்தி மூன்று வயதுள்ளவராக இருந்தார். ஆனால் பாவபாரத்தின் அழுத்தம் மனதில் அதிகரித்தபடியினால், அவருடைய தாங்கும் சக்தி முழுவதும், இயற்கைக்கு மாறான மனகொந்தளிப்பின் தாக்கத்தினால் அவருடைய சரீரம் தாக்கப்பட்டு அவருடைய வியர்வை துளைகள் திறக்கப்பட்டு மற்றும் இரத்தத்தின் பெரும்துளிகள் தரையில் விழுந்தன. அவர்மீது இருந்த பாவசுமை எவ்வளவு என்பதை இது காட்டுகிறது. அவரது தோலிலிருந்து இரத்தம் வெளிவரும் வரையிலும் இரட்சகரை அது நசுக்கியது.

கிறிஸ்துவின் பாடுகளின் தன்னார்வ சுபாவத்தை இது எடுத்து காட்டுகிறது, இதுவரையில் ஒரு கத்தி இல்லாமல் இரத்தம் சுயாதீனமாக வழிந்தது. மருத்துவ டாக்டர்கள் நமக்கு சொல்லுகிறார்கள் அதிகமான மக்கள் பெரிய பயத்தினால் பாதிக்கப்படும்போது, இரத்தம் இதயத்துக்கு விரைந்தோடுகிறது. தாடைகள் ஒட்டி போகின்றன்; ஒரு கவரப்பட்ட உணர்விழப்பு ஏற்படுகிறது; இரத்தம் உள்ளாக போய்விடுகிறது. ஆனால் நமது இரட்சகரின் வேதனையை பாருங்கள். அவர் தம்மை அவ்வளவாக மறந்தபடியினால் அவரது இரத்தம், உள்ளே சென்று அவரை ஊக்குவிப்தற்கு பதிலாக, அது வெளியே தள்ளப்பட்டு தரையில் விழுந்தது. அவருடைய இரத்தம் பூமியிலே ஊற்றப்பட்டதினால் உனக்கு இரட்சிப்பின் பரிபூரணமானது இலவசமாக கொடுக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது. அவரது தோலில் இருந்து இரத்தம் சுயாதீனமாக ஊற்றப்பட்டதுபோல, நீ இயேசுவை நம்பும்பொழுது இலவசமாக உன்னுடைய பாவங்களை கழுவிக்கொள்ள முடியும்.

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

அவருடைய ஆத்தும துக்கத்தின் விளைவாக இரத்த வேர்வை வந்தது. இதயத்தின் வேதனை மிகவும் மோசமான ஒரு வேதனையாகும். துக்கமும் மன அழுத்தமும் இருளான ஆழ்ந்த மனதுன்பமாகும். ஆழமான மனஅழுத்தம் உள்ளவர்கள் இது உண்மை என்று உங்களுக்கு சொல்ல முடியும். மத்தேயுவில் நாம் இவ்வாறாக வாசிக்கிறோம் அவர் “துக்கமடையவும் வியாகுலப்படவும்” (மத்தேயு 26:27). “வியாக்குலம்” – இதன் விளக்கம் அர்த்தம் நிறைந்ததாகும். இது மற்ற நினைவுகள் ஒவ்வொன்றையும் விலக்கி, துக்கத்தினால் முழுமையாக ஆட்கொள்ளப்பட்ட ஒருமனம் என்பது விளக்கமாகும். அவரது மனதை மற்ற எல்லாவற்றையும் விட்டு வெளிப்பட்டு நமது பாவங்களை சுமந்தவராக அவரது நிலைமை இருந்தது. மனகஷ்டத்தின் வல்லமையான சமுத்திர அலைகளின்மேல் அவர் முன்னும் பின்னுமாக அலைகழிக்கப்பட்டார். “அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்” (ஏசாயா 53:4). “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்” (ஏசாயா 53:11). அவரது இருதயம் அவருக்கு தோற்றுபோனது. அவர் பேரச்சத்தாலும் திகிலாலும் நிறப்பப்பட்டிருந்தார். அவர் “வியாக்குலம்” அடைந்தார். அறிஞர் பூரிட்டன் தாமஸ் குட்வின் சொன்னார், “இந்த வார்த்தையானது ஒரு தோற்றுப்போன, குறையுள்ள, மற்றும் ஆவியில் மூழ்கிபோதல், போன்றவைகளால் வரும் வியாதி மற்றும் கரைதலை குறிப்பிடுகிறது.” எப்பாப்பிரோத்தீத்துவின் வியாதி, அவனை மரணத்துக்கு சமீபமாக கொண்டுவந்தது, அதே வார்த்தையில் அதுவும் அழைக்கப்பட்டது. அதனால், கிறிஸ்துவின் ஆத்துமா வியாதியுற்றது மற்றும் சோர்ந்து போனது. காலியாக்கப்பட்டதின் மூலமாக அவரது வியர்வை வந்தது. குளிர்ச்சியான, பசையுள்ள வியர்வை மரித்துக்கொண்டிருக்கும் மனிதருக்கு அவர்களுடைய பெலவீனத்தினால் ஏற்படுகிறது. ஆனால் இயேசுவின் இரத்த வியர்வை நமது பாவங்களின் பாரத்தால், அவரது ஆத்துமா உள்ளாக மரித்ததினால் ஏற்பட்டது. அவர் பயங்கரமான ஆத்தும கரைதலில், மற்றும் உள்ளான மரணத்தில் பாடுபட்டார், அவரது சரீரம் முழுவதும் இரத்த அழுகை ஏற்பட்டது. அவர் மிகவும் “வியாக்குலப்பட்டார்.”

மாற்கு சுவிசேஷம் நமக்கு சொல்லுகிறது அவர் “திகிலடையவும்” (மாற்கு 14:33). அதன் கிரேக்க அர்த்தம் அவரது வியாக்குலம் ஒரு அளவற்ற பயங்கரத்தை உண்டாக்கியது, அப்படிப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய மயிர் அப்படியே நிற்கும் மற்றும் அவர்களுடைய தசைகள் நடுங்கும். நியாயபிரமாணத்தின் வெளிப்பாடு மோசேக்கு பயத்தினால் நடுக்கத்தை உண்டாக்கியது; அதனால் நமது கர்த்தர் தம்மீது வைக்கப்பட்ட அந்த பாவத்தின் காட்சியினால் துன்பப்பட்டார்.

இரட்சகர் முதலாவதாக துக்கத்தால் நிறைந்தார், பிறகு மனபாரத்தால் அழுத்தப்பட்டார், பிறகு இறுதியாக “மிகவும் வியாக்குலப்பட்டார்.” அவர் நடுங்கும் திகைப்பினால் நிரப்பப்பட்டார். அவர் மெய்யாக நமது பாவங்களை சுமக்கும்படியாக நேர்ந்தபொழுது, அவர் முழுவதும் ஆச்சரியப்பட்டார் மற்றும் தேவனுக்கு முன்பாக பாவியின் ஸ்தானத்தில் அவர் பின்னோக்கி எடுத்து செல்லப்பட்டார். அவரை பாவிகளின் பிரதிநிதியாக தேவன் பார்த்ததினால் அவர் ஆச்சரியப்பட்டார். அவரை தேவன் கைவிட்டார் என்ற எண்ணத்தால் அவர் ஆச்சரியப்பட்டார். அது அவருடைய பரிசுத்தமான, மெல்லிய இளமையான, அன்பான சுபாவத்தை, நேராக தாக்கியது மற்றும் அவர் “மிகவும் வியாக்குலப்பட்டார்” மற்றும் “மிகவும் துக்கப்பட்டார்”.

நமக்கு மறுபடியும் சொல்லப்பட்டது அதாவது அவர் சொன்னார், “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” (மத்தேயு 26:38). இதன் கிரேக்க வார்த்தை “பெரிலுபோஸ்” இதன்பொருள் சுற்றிலும் துக்கத்தால் சூழப்படுதல் என்பதாகும். சாதாரண பாடுகளில் பொதுவாக அதிலிருந்து தப்பிசெல்லும் சிலவழி காண்பதற்குரிய துளை இடைவெளி, நம்பிக்கை மூச்சுவிட இடம் இருக்கும். கஷ்டத்தில் இருப்பவர்களுடைய நிலைமை மோசமாக இருக்கும் என்று பொதுவாக நாம் நினைவு படுத்தப்படுவோம். ஆனால் இயேசுவின் காரியத்தில் மோசமான ஒன்றையும் கற்பனை செய்து பார்க்க முடியாது, அவர் தாவீதோடு சேர்ந்து சொல்வார், “பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது” (சங்கீதம் 116:3). தேவனுடைய எல்லா அலைகளும் மற்றும் பேரலைகளும் அவர்மேல் கடந்து சென்றன. அவருக்கு மேலேயும், அவருக்கு கீழேயும், அவரை சுற்றிலும், அவருக்கு வெளியேயும், அவருக்கு உள்ளேயும், எல்லாம், சகலமும் வேதனையாகவே இருந்தன அவரது வலி மற்றும் துக்கத்திலிருந்து தப்பிசெல்ல வழி இல்லை. கிறிஸ்துவுக்கு ஏற்பட்ட துக்கத்தைவிட மேலாது ஒன்றுமில்லை, அவர் சொன்னார், “எனது ஆத்துமா மிகவும் துக்கத்தால் நிறைந்திருக்கிறது,” துக்கம் சூழ்ந்திருக்கிறது, “மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” – மரணத்தின் விளிம்பில்தானே இருந்தது!

அவர் கெத்சமெனே தோட்டத்தில் மரிக்கவில்லை, ஆனால் மரிப்பதற்கு ஒப்பாக அவர் பாடுபட்டார். அவருடைய வலியும் வேதனையும் அவரை மரணத்தின் விளிம்பில்தானே கொண்டு சென்றன – அதன்பிறகு நிறுத்தியது.

அந்த உள்ளான அழுத்தம் நமது கர்த்தரை இரத்தத்தின் பெரும் துளிகளாக வியர்வை சிந்த வைத்தது இதில் நான் ஆச்சரியப்படவில்லை. மனித நிலையிலே நின்று எவ்வளவு தெளிவுபடுத்த முடியுமோ அவ்வளவாக இதை நான் தெளிவாக்கி இருக்கிறேன்.

அது தேவனுக்கு, தேவனுக்கு மட்டுமே, அவரது துக்கம் முழுமையாக தெரியும்.

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

III. மூன்றாவதாக, கிறிஸ்து இவைகளையெல்லாம் ஏன் கடந்து போனார்?

கிறிஸ்து இவைகளையெல்லாம் ஏன் கடந்து போகவேண்டும் மற்றும் அப்படியாக ஏன் இரத்த வேர்வை சிந்த வேண்டும் என்று அநேக மக்கள் ஆச்சரியப்படுவார்கள் என்று நான் நிச்சயத்திருக்கிறேன். ஒருவேளை அவர்கள் சொல்லலாம், “அவர் இவைகளையெல்லாம் கடந்து போனார் என்று எனக்கு தெரியும், ஆனால் அவர் இவைகளையெல்லாம் ஏன் கடந்து போகவேண்டும் என்று எனக்கு புரியவில்லை.” கிறிஸ்து இப்படி கெத்சமெனே தோட்டத்தின் அனுபவத்தை ஏன் கடந்து போகவேண்டும் என்பதற்கு நான் ஐந்து காரணங்களை கொடுக்கிறேன்.

1. முதலாவதாக, அவருடைய மெய்யான மனுஷீகத்தை நமக்கு காட்டும்படியாக. அவரை வெறுமையாக தேவனைப்போல நினைக்க வேண்டாம், அவர் நிச்சயமான தெய்வீகமாக இருந்தாலும், அவரை உனக்கு நெருங்கின சொந்தமானவ ராக, உனது எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாமசமாக உணர்ந்து கொள். அவர் உன்னிடம் எவ்வளவு முழுமையாக கருணைகாட்ட முடியும்! அவர் உனது பாரங்களிலெல்லாம் பாரமடைந்தார் உனது துக்கத்திலெல்லாம் துக்கப்பட்டார். உனக்கு ஒருபோதும் சம்பவித்ததை இயேசுவானவர் புரிந்து கொள்ளாதிருக்கவில்லை. அதனால்தான் உனது சோதனை களில் முற்றமுடிய உன்னை சுமந்துசெல்ல அவரால் முடியும். இயேசுவை உனது நண்பராக ஏற்றுக்கொள். உனது வாழ்க்கை முழுமையிலும் உண்டாகும் கஷ்டங்களுக் கும் ஆறுதலை அவர் தருவார் அது உன்னை முற்றமுடிய சுமந்துசெல்லும்.

2. இரண்டாவதாக, கிறிஸ்துவுக்கு இப்படி கெத்சமெனே தோட்டத்தின் அனுபவம் பாவத்தின் பொல்லாப்பினால் ஏற்பட்டது. நீ ஒரு பாவி, ஆனால் இயேசு ஒருபோதும் பாவமில்லாதவர். ஓ பாவியே, உனது பாவம் அவ்வளவு கொடியதாக இருந்தபடியினால் கிறிஸ்துவுக்கு இப்படியாக வேதனையை தந்தது. நமது பாவத்தின் குற்றம் அவரை இரத்த வியர்வை சிந்தவைத்தது.

3. மூன்றாவதாக, கிறிஸ்துவுக்கு இப்படி கெத்சமெனே தோட்டத்தில் ஏற்ற கஷ்டத்தின் நேரம் நம்மீது அவரது அன்பை காட்டுகிறது. அவர் நமது ஸ்தானத்தில் ஒரு பாவியாக கணக்கிடப்பட்டு அந்த பயங்கரத்தை தாங்கினார். அவர் நமக்கு பதிலாக நமது பாவதண்டனை கிரயத்தை செலுத்த, பாடுபட்டதற்காக நாம் அவருக்கு எல்லாவற்றிலும் கடன் பட்டிருக்கிறோம். இவ்வளவு அதிகமாக அவர் நம்மை நேசித்ததற்காக நாம் அவரை மிகவும் அதிகமாக நேசிக்க வேண்டியது அவசியம்.

4. நான்காவதாக, இயேசுவை கெத்சமெனே தோட்டத்திலே பாருங்கள் மற்றும் அவருடைய பாவநிவாரண பலியின் மகத்துவத்தை கற்றுக்கொள்ளுங்கள். தேவனுடைய பார்வையிலே நான் எவ்வளவு கருப்பாக இருக்கிறேன், தேவனுடைய பார்வையிலே நான் எவ்வளவு இழிவாக இருக்கிறேன். நான் நரகத்தில் போடப்பட மட்டுமே தகுதியானவன் என்று உணருகிறேன். தேவன் என்னை ஏன் இதற்கு முன்பாகவே அங்கே போடவில்லை என்று நான் ஆச்சரியப்படுகிறேன். ஆனால் நான் கெத்சமெனேவுக்கு போவேன், அந்த ஒலிவமரங்களின் கீழே பார்ப்பேன், மற்றும் எனது இரட்சகரையும் பார்ப்பேன். ஆமாம், அவர் வாதிக்கப்பட்டவராக தரையிலே நடுங்கிக்கொண்டிருப்பதை பார்ப்பேன், மற்றும் அவருடைய பெருமூச்சின் சத்தத்தை கேட்பேன். அவரை சுற்றியுள்ள தரையை பார்ப்பேன் அவரது இரத்தத்தினால் அது சிவப்பாக்கப்பட்டிருப்பதை பார்ப்பேன், அவருடைய முகத்தில் இரத்த வியர்வையினால் தோய்ந்துள்ளதை பார்ப்பேன். நான் அவரிடம் சொல்லுவேன், “இரட்சகரே, உனக்கு என்ன சம்பவித்தது?” அதற்கு அவர் பதிலளிப்பார், “உன்னுடைய பாவத்துக்காக நான் பாடுபடுகிறேன்.” அவருடைய பலியின் மூலமாக தேவன் என்னை மன்னிக்க முடியும் என்று நிச்சயத்து கொள்ளுவேன். இயேசுவடம் வா மற்றும் அவரை விசுவாசி. அவருடைய இரத்தத்தின் மூலமாக உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

5. ஐந்தாவதாக, அவருடைய பலியின் இரத்தத்தை தள்ளிவிடுபவர்களுக்கு வரும் தண்டனையின் பயங்கரத்தை நினைத்துப்பாருங்கள். நீ அவரை தள்ளிவிட்டால் ஒரு நாளில் பரிசுத்த தேவனுக்கு முன்பாக உனது பாவங்களின் தண்டனைக்காக நியாயத்தீர்ப்பிலே நிற்க வேண்டும் என்பதை நினைவில் கொள். நான் சொல்லுகிறேன், இதய வேதனையோடு உனக்கு சொல்லுகிறேன், இரட்சகரை, இயேசு கிறிஸ்துவை தள்ளிவிட்டால் உனக்கு என்ன நடக்கும். ஒரு தோட்டத்தில் அல்ல, ஆனால் ஒரு படுக்கையில், நீ மரணத்தால் வெற்றி கொள்ளப்படுவாய் மற்றும் ஆச்சரியப்படுவாய். நீ மரிப்பாய் மற்றும் உனது ஆத்துமா நியாயதீர்ப்புக்கு எடுத்து செல்லப்படும் மற்றும் நரகத்துக்கு அனுப்பப்படுவாய். கெத்சமெனே உன்னை எச்சரிக்கிறது அதை ஏற்றுக்கொள். அதனுடைய பெருமூச்சு மற்றும் கண்ணீர் மற்றும் இரத்த வியர்வை உன்னை பாவத்திலிருந்து மனந்திரும்ப மற்றும் இயேசுவை விசுவாசிக்க செய்வதாக. அவரிடத்துக்கு வா. அவரை நம்பு. அவர் மணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் மற்றும் ஜீவிக்கிறார், பரலோகத்திலே தேவனுடைய வலது பக்கத்திலே அமர்ந்திருக்கிறார். மிகவும் காலதாமதம் ஆவதற்கு முன்பாக, இப்பொழுது அவரிடம் வா மற்றும் மன்னிக்கப்படுவாய். ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Thine Unknown Sufferings” (Joseph Hart, 1712-1768).


முக்கிய குறிப்புகள்

இரத்த வியர்வை

THE BLOODY SWEAT

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

(யோவான் 18:2; ஏசாயா 53:7; ஆதியாகமம் 28:17)

I.    முதலாவதாக, கெத்சமெனேவில் கிறிஸ்து அடைந்த வலி மற்றும் வேதனைக்கு காரணம் என்ன? ஏசாயா 53:3; யோவான் 14:27; 18:1; மத்தேயு 26:39, 38, 37; எபிரேயர் 12:2; ஏசாயா 53:6; I பேதுரு 2:24; லூக்கா 22:44.

II.   இரண்டாவதாக, கிறிஸ்துவின் இரத்த வேர்வைக்கு அர்த்தம் என்னவாக இருந்தது? லூக்கா 22:44; மத்தேயு 26:37; ஏசாயா 53:4, 11; மாற்கு 14:33; மத்தேயு 26:38; சங்கீதம் 116:3; லூக்கா 22:44.

III.  மூன்றாவதாக, கிறிஸ்து இவைகளையெல்லாம் ஏன் கடந்து போனார்? I பேதுரு 2:21; II தீமோத்தேயு 3:12; 2:3; அப்போஸ்தலர் 14:22.