Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




ஆரம்பகால சபையின் இரகசியத்தைக் கொடுக்கும் மூன்று வார்த்தைகள்!

THREE WORDS GIVE THE SECRET OF THE EARLY CHURCH!
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்கள்
by Dr. R. L. Hymers, Jr.

நவம்பர் 19, 2017 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, November 19, 2017

“அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லா ரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிற வர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டுவந்தார்” (அப்போஸ்தலர் 2:46, 47).


நமது சபைகள் முறிந்து போகின்றன மற்றும் மரித்து போகின்றன. அவர்கள் 88% அதிகமான 16 முதல் 30 வயதுக்குள் உள்ள இளம் மக்களை இழந்து வருகிறார்கள். ஜியார்ஜ் பர்னா, பிரபலமான கணிப்பாளர், வருடக்கணக்காக நமக்கு சொல்லிக் கொண்டிருந்தார். “தி சதரன் பாப்டிஸ்ட் கவுன்சில் ஆன் பேமிலி லைப்” சொன்னார், “88% பிள்ளைகள் சுவிசேஷ குடும்பங்களில் எழுந்தவர்கள் 18 வயது [மேல்] வந்தவர்கள், சபையைவிட்டு போகிறார்கள் திரும்ப ஒருபோதும் வருவதில்லை” (பாப்டிஸ்ட் ப்ரஸ், ஜூன் 12, 2002). மேலும், உலகத்திலிருந்து இளம் மக்களை வெற்றிகொள்ளுவது நமது சபைகளுக்கு கடினமாக இருக்கிறது என்பது நன்கு அறிந்ததாகும். டாக்டர் ஜேம்ஸ் டாப்சன் சொன்னார், “80% சபை வளர்ச்சியின் விளைவு மாறுதலாகி வந்த உறுப்பினர்களாகும்” (“போக்கஸ் ஆன் பேமிலி நியூஸ்லெட்டர்,” ஆகஸ்ட் 1998). ஜேன் ஆட்மேக்கர் என்ற, ஒரு எவான்ஜிலிகல் ஆத்தர், சொன்னார், “நாம் புது மக்களை [சபைக்கு] இழுக்க முடியாதது மட்டுமல்ல, நம்மிடம் இருப்பவர்களை நிலைக்க செய்ய முடியவில்லை. ஏறக்குறைய பாதி அமரிக்க சபைகளில் மாறுதல் மூலமாக சென்ற ஆண்டு ஒரு புது நபரைகூட சேர்க்கவில்லை... 94% சபைகள் வளராதது மட்டுமல்ல அவர்கள் உழைக்கும் சமுதாயத்துக்கு [மக்களை] இழந்து கொண்டிருக்கிறார்கள்... அவர்களுடைய நடைமுறை போக்கு தெளிவாக கீழ்நோக்கியதாக இருக்கிறது, [தி ‘சர்வைவல்’ ஆப் கிரிஸ்டியானிடி இஸ் அட் ஸ்டேக்]” (Interrupted: When Jesus Wrecks Your Comfortable Christianity, NavPress, 2014, pp. 79, 80).

இப்பொழுது சதர்ன் பாப்டிஸ்டுகளை பாருங்கள். கேரோல் பைப்ஸ் மூலமாக வந்த ஒரு தகவலில் “கலிபோர்னியா சதர்ன் பாப்டிஸ்டு” பத்திரிகையில் சொன்னார், “சபைகள் 200,000 அங்கத்தினர்களுக்கும் மேலாக இழந்து விட்டன [சென்ற ஆண்டு], இது 1881லிருந்து பெரிய ஒரு வருட இழப்பாகும் (வருடாந்தர சபை குறிப்பு)... அறிவிக்கப்பட்ட ஞானஸ்நானங்கள் கடந்த 10 வருடங்களில் எட்டாக விழுந்து போனது, அது 1947 முதல் கடந்த வருடம் மிகவும் குறைவு. தாம் ரெனியர் (ஒரு SBC அதிகாரி) சொன்னார், ‘நமது டினாமினேஷனின் சர்ச்சைக்குரிய காரியங்கள் என் இருதயத்தை உடைக்கிறது... சிதைந்து போனதில் ஒன்று.’ டாக்டர் பிராங்க் பேஜ், [வேறொரு சதர்ன் பாப்டிஸ்டு தலைவர்] சொன்னார், ‘உண்மை என்னவென்றால், நமது சபைகளில் குறைவான மக்களை கொண்டிருக்கிறோம் அவர்கள் குறைந்த பணத்தை கொடுக்கிறார்கள் ஏன் என்றால் நாம் மக்களை கிறிஸ்துவுக்காக வெற்றிகொள்ளுவது [இல்லை], மற்றும் அவர்களை நமது கர்த்தருடைய ஆவிக்குரிய ஒழுங்கில் பயிற்சி கொடுப்பதில்லை.’ அவர் தொடர்ந்து சொல்லுகிறார், ‘தேவன் நம்மை மன்னிப்பார்... முதல் நூற்றாண்டு சபைகளில் இருந்த சீஷத்துவத்தைப்போல இருக்க... அதை பற்றி தீவிரமாக இருக்க தேவன் உதவி செய்வாராக.’” (ibid., p. 4).

அமெரிக்காவில் உள்ள சபைகளைபற்றிய இந்த கணிப்புகள் ஒரு சோகமான, மன அழுத்தம் தரும் வகையில் உள்ளன. அவர்கள் தங்கள் சொந்த உறுப்பினர்களை இழக்கிறார்கள், இழக்கப்பட்ட உலகத்திலிருந்து அறிதாக யாராவது ஒருவரை ஆதாயம் செய்கிறார்கள். மிகச்சிறந்த சபைகளும் இழக்கப்பட்ட உலகத்திலிருந்து வெகுசிலரையே சேர்க்கிறார்கள்.

மேற்கத்திய உலகத்திலும் அமெரிக்காவிலும் நமது சபைகளில் அது மிகவும் துக்கமான காட்சியாகும். இப்பொழுது அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்திலிருந்த ஆரம்பகால சபைக்கும் நமது சபைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டு பாருங்கள். நமது பாடத்தை நான் மறுபடியுமாக வாசிக்கிறேன்,

“அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லா ரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிற வர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டுவந்தார்” (அப்போஸ்தலர் 2:46, 47).

என்ன ஒரு வித்தியாசம்! அவர்கள் மகிழ்ச்சியினால் நிரப்பப்பட்டார்கள்! ஒவ்வொரு நாளும் அவர்கள் கூடிவந்தார்கள்! அவர்கள் தேவனை தொடர்ந்து துதித்தார்கள்! “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்” (அப்போஸ்தலர் 2:47).

டாக்டர் மார்டின் லியோடு ஜோன்ஸ் சொன்னார், “நாம் போகவேண்டிய இடம் அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்துக்கு ஆகும். இங்கே டானிக் இருக்கிறது [சக்தி கொடுக்கும் மருந்து], இங்கே உற்சாகப்படுத்தும் இடம் இருக்கிறது, அங்கே தேவனுடைய ஜீவன் ஆதிகால சபையை சுறுசுறுப்பூட்டியதை உணருகிறோம்” (Authentic Christianity, volume 1 (Acts 1-3), The Banner of Truth Trust, p. 225). முதலாம் நூற்றாண்டின் சந்தோஷம், வைராக்கியம் மற்றும் வல்லமையைபற்றி படிக்க நமது இருதயம் கிளர்ந்தெழுகிறது! நானும் டாக்டர் மைக்கல் கிரின் அவர்களின் புத்தகத்தை படிக்க ஏவப்பட்டேன், Evangelism in the Early Church (Eerdmans, 2003 edition). நான் இந்த புத்தகத்தை படித்ததின் மூலமாக, அதேசமயம் அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தையும் வாசித்ததன் மூலமாக, அநேக கிரேக்க வார்த்தைகள் முதலாம் நூற்றாண்டு சபைகளின் ஜீவனை படமாக நமக்கு காட்டுவதை நான் கண்டேன்.

I. முதலாவது, “குரியோஸ்” என்ற கிரேக்க வார்த்தையாகும்.

இந்த வார்த்தையின் தமிழ் அர்த்தம் “கர்த்தர்” என்பதாகும். இது எதைக் குறிக்கிறதென்றால் “ஆண்டவன்,” “எஜமான்,” “சொந்தக்கார்,” “ஆளுபவர்”. இந்த வார்த்தையைதான் அப்போஸ்தலனாகிய பேதுரு பேசும்போது அப்போஸ்தலர் 10: 36ல் பயன் படுத்தினார்,

“(எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற) இயேசுகிறிஸ்துவைக் கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி” (அப்போஸ்தலர் 10:36).

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இயேசுவைபற்றி எப்படியாக பிரசங்கித்தார்கள் என்று டாக்டர் கிரின் சொல்லுவதை கவனியுங்கள்,

இயேசுவே மேசியா அல்லது அவர் மூலமாக பழங்கால வாக்குதத்தங்கள் நிறைவேறினது என்ற நற்செய்தியை, அவர்கள் பரப்பினதை நாம் பார்க்கிறோம். இயேசுவின் மூலமாக சாமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இயேசுவின் கர்த்தத்துவம், இயேசுவின் சிலுவை, இயேசுவின் உயிர்தெழுதல், அல்லது எளிமையாக இயேசுவை... அவர்கள் அறிவித்ததை நாம் காண்கிறோம் ஆரம்பத்தில் சுவிசேஷத்தை அறிவித்தவர்கள் ஒரு பாடம் மற்றும் ஒரே ஒரு பாடம் மட்டுமே, இயேசு!... ஓரிஜன் (185 -254) சொன்னார், “வாழ்க்கையில் ஒரு நல்ல காரியம் இருக்கிறது: ஆனால் இயேசுவே அந்த ஜீவன். மற்றொரு நல்ல காரியம் இருக்கிறது அது உலகத்தின் ஒளி: ஆனால் இயேசுவே அந்த ஒளி. அதேபோல அந்த சத்தியம், அந்த வாசல், அந்த உயிர்த்தெழுதல் என்று சொல்லலாம். இவைகளைபற்றி இரட்சகர் போதித்தார் அதாவது அவரே இருக்கிறார்.” ஓரிஜன் “கிறிஸ்துவைமையமாக கொண்ட சுபாவத்தை [சுவிசேஷம்] ஆதி அப்போஸ்தலர்களும் மற்றும் [அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட] மற்றவர்களும் போதித்தார்கள்”... ஓரிஜன் சுவிசேஷக பிரசங்கத்தின் முழுநோக்கத்தை கொடுத்தார்: “பூமியிலே கிறிஸ்துவின் ஜீவனை பற்றிய அறிவை முழுமையாக்க மற்றும் அவரது இரண்டாம் வருகைக்காக ஆயத்தப்படுத்துவதே ஆகும்” (Green, ibid., pp. 80, 81).

ஆதி கிறிஸ்தவர்கள் சுய உதவி போதனைகளை கேட்கவில்லை. அவர்கள் வார்த்தைக்கு வார்த்தை வேத “விளக்கத்தை” கேட்கவில்லை. அவர்கள் தொடர்ந்து கேட்டது சுவிசேஷத்தை மட்டுமே – அவரது மரணம், அடக்கம் மற்றும் “குரியோஸின்” உயிர்த்தெழுதல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து! “எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து” (அப்போஸ்தலர் 10:36).

நான் ஒவ்வொரு போதனையின் முடிவிவலும் கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலோடு முடிப்பதாக வேறு சபையை சேர்ந்த ஒருவர் என்னை கேலி செய்தார். நான் அதைபற்றி நீண்ட நேரம் நினைத்தேன். அதன்பிறகு ஸ்பர்ஜன் சொன்னதை நினைத்தேன், “நான் ஒரு பாடத்தை எடுப்பேன், அதை விளக்குவேன், அதன்பிறகு சிலுவைக்கு ஒரு தேனீ கோடு [ஒரு நேர் கோடு] போடுவேன்.” ஸ்பர்ஜன், ஆரம்பகால கிறிஸ்தவர்களை போலவே, முழுமையாக கிறிஸ்துவை மையமாக – இயேசு கிறிஸ்துவையே நடுவாக கொண்டிருந்தார், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே! ஆரம்பகால சபை நன்றாக இந்த பாடலை பாட முடிந்தது,

நீரே கர்த்தராக இருக்கிறீர், நீரே கர்த்தராக இருக்கிறீர்,
   நீர் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தீர்
மற்றும் நீரே கர்த்தராக இருக்கிறீர்.
   ஒவ்வொரு முழங்காலும் முடங்கும், ஒவ்வொரு நாவும் அறிக்கையிடும்,
இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று.
   (“He Is Lord” by Marvin V. Frey, 1918-1992.

இதை என்னோடு பாடுங்கள்!

நீரே கர்த்தராக இருக்கிறீர், நீரே கர்த்தராக இருக்கிறீர்,
   நீர் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தீர்
மற்றும் நீரே கர்த்தராக இருக்கிறீர்.
   ஒவ்வொரு முழங்காலும் முடங்கும், ஒவ்வொரு நாவும் அறிக்கையிடும்,
இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று.

முதலாவது வார்த்தை, “குரியோஸ்,” கிறிஸ்துவின் மையத்தை குறிக்கிறது அதை அவர்கள் தங்கள் செய்தியின் பிரதானமான கருத்தாக கொண்டிருந்தார்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையின் கர்த்தராக கொண்டிருந்தார்கள்! அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதில் ஆச்சரியமில்லை,

“நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்” (I கொரிந்தியர் 1:23).

“இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்” (I கொரிந்தியர் 2:2).

சிலுவையில் அறையப்பட்டு மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டியது அவசியமாகும். அதுவே நம்முடைய பிரதான செய்தியாக இருக்க வேண்டியது அவசியம், எப்பொழுதும் மற்றும் எல்லா வழிகளிலும்! அநேக சபைகள் அதை அதிகமாக செய்வதில்லை என்று நான் அறிவேன். அவர்கள் இன்று மரித்துக்கொண்டிருப்பதற்கு அதுதான் பிரதான காரணம்!

முஸ்லீம் தீவிரவாதிகள் மக்களை அவர்களோடு வந்து மரிக்கும்படி அழைக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஆயிரக்கணக்கான இளம் மக்கள் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். ISIS வந்து அவர்கள்மீது குண்டுகளை போடுகிறார்கள், மக்களை கொலை செய்ய போகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதை செய்யவில்லை. அவர் உனக்கு நித்திய ஜீவனை கொடுப்பதற்காக தம்மிடம் அழைக்கிறார். கிறிஸ்து சொன்னார், “நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை” (யோவான் 10:28). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷராகும்படி உன்னை தம்மிடம் அழைக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார், “[ஒருவன்] என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24). கிறிஸ்து நம்முடைய சபைக்கு உன்னை வரும்படி அழைக்கிறார் மற்றும் ஆத்தும ஆதாயம் செய்யும்படி அழைக்கிறார். கிறிஸ்து உன்னை மற்றவர்கள் இரட்சிக்கப்படும்படி எங்களிடம் அழைத்துவர உதவி செய்யும்படி அழைக்கிறார்!

இளம் மக்களாகிய உங்களை அடிப்படை கிறிஸ்தவர்களாக மாறும்படி நான் உங்களை அழைக்கிறேன்! ஆமாம், நீங்கள் அடிப்படை உள்ளவர்களாக இருக்க நான் விரும்புகிறேன்! ஒரு சீஷனாக இரு! இயேசு கிறிஸ்துவுக்காக –சர்வவல்லமையுள்ள தேவனுடைய சபைக்காக ஒரு அடிப்படையுள்ளவனாக இரு! ஞாயிறு காலையில் வாருங்கள். ஞாயிறு பிற்பகலில் எங்களோடு ஆத்தும ஆதாயம் செய்ய வாருங்கள். ஞாயிறு இரவில் திரும்ப வாருங்கள். அடிப்படை சீஷர்களாக மாறுங்கள்! அதை செய்யுங்கள்! அதை செய்யுங்கள்! நமது இளம் மக்களிடம் சில பாப்டிஸ்டு பிரசங்கிகள் நேரத்தைபற்றி சொன்னார்கள் இல்லையா? உங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவை பின்பற்றுங்கள்! ஒரு சீஷனாக இரு! கிறிஸ்துவின் சேனையில் ஒரு போர்வீரனாக இரு! உங்கள் பாட்டுத்தாளில் அது 8 எண் பாடல். அதை பாடுங்கள்!

முன்னேறு, கிறிஸ்தவ போர்வீரனே, போருக்கு அணிவகுத்து நில்,
   இயேசுவின் சிலுவையோடு முன்னேறு;
கிறிஸ்துவாகிய ராஜரிக தலைவர் சத்துருவுக்கு விரோதமாக நடத்துகிறார்;
   முன்னேறி போ, அவருடைய கொடி முன்னே போவதை பார்த்தவாறு.
முன்னேறு, கிறிஸ்தவ போர்வீரனே, போருக்கு அணிவகுத்து நில்,
   இயேசுவின் சிலுவையோடு, முன்னேறு.
(“Onward, Christian Soldiers” by Sabine Baring-Gould, 1834-1924).

அது நம்மை புதிய ஏற்பாட்டில் இரண்டாவது கிரேக்க வார்த்தைக்கு நடத்துகிறது.

II. இரண்டாவதாக, “அகப்பே” என்ற கிரேக்க வார்த்தையாகும்.

W. E. வைன் சொன்னார்கள் அகப்பே என்பது “கிறிஸ்தவத்தின் குணாதிசயத்தின் வார்த்தையாகும்.” இதன் பொருள் சுயத்தை கொடுக்கும் அன்பு. இயேசு இந்த வார்த்தையை முதலாவது சீஷர்களோடு பேசினபோது உபயோகப்படுத்தினார். இயேசு சொன்னார்,

“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்” (யோவான் 13:34, 35).

டாக்டர் தீமோத்தேயு லின் அவர்கள் சீன சபையில் அநேக ஆண்டுகளாக என்னுடைய போதகராக இருந்தார். டாக்டர் லின் சொன்னார்,

நமது கர்த்தரிடமிருந்து அப்போஸ்தலர்கள் இந்த கட்டளையை நேரடியாக பெற்றுக் கொண்டார்கள், அதன்பிறகு அவர்கள் அதை தொடர்ந்து... அனுபவத்தில் கடைபிடித்தார்கள். அதன் விளைவாக, “இதோ கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள்!” என்று ஆச்சரியத்தோடு [கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களால்] புகழ்ந்து குறிப்பிடப்படுதல் உண்டாகி இருந்தது. இன்று “ஒருவருக்கொருவர் அன்புள்ளவர்களாக இருங்கள்” என்பது ஒரு சபையின் வழக்கமான வாசகமாக ஒரு எந்திரத்தை போல மாறிபோனது... [இவ்வாறாக] தேவன் [அவர்களோடு] இருப்பது கூடாத காரியமாக மாறினது. தேவன் நம்மீது இரக்கமாக இருப்பாராக! (Timothy Lin, S.T.M., Ph.D., The Secret of Church Growth, FCBC, 1992, p. 33).

டாக்டர் மைக்கல் கிரின் அவர்கள், தம்முடைய முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் என்ற புத்தகத்தில், இதைபற்றி பேசி இருக்கிறார். கிறிஸ்தவம் புற மதத்தவர்களான ரோமர்களால் “இந்த கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் இந்த வல்லமை ஒருவருக்கொருவர் அன்புள்ளவர்களாக இருப்பதால் கிடைத்ததாகும்” என்று போற்றப்பட்டது என்பதாக சொன்னார் (Michael Green, Evangelism in the Early Church, Eerdmans, 2003, p. 158).

III. மூன்றாவதாக, “கொய்னோனியா” என்ற கிரேக்க வார்த்தையாகும்.

இதன் பொருள் ஐக்கியம், ஒற்றுமை, நல்ல கூட்டுறவு, நட்பு என்பதாகும். சபையில் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அகப்பே அன்பின் விரிவாக்கம் ஐக்கியமாகும்.

கிறிஸ்தவர் அல்லாதவர்கள் நம்மோடு ஐக்கியமாக இருக்க அனுமதிக்க கூடாது என்று சில பிரசங்கிகள் என்னிடம் சொன்னார்கள். ஒருவிதத்தில் அவர்கள் சொல்லுவது சரி. வேதாகமம் சொல்லுகிறது, “கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:11). மற்றசபைகளில் அநேக மக்களால் இந்த வார்த்தை அறிக்கை செய்யப்பட்டது. அதற்கு அர்த்தம் தங்கள் “சபை பிள்ளைகளை” புதிய மக்களோடு கலக்காமல் வெளியே வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதைபற்றி டாக்டர் ஜே. வெர்னான் மெக்ஜீ ஒரு நல்ல குறிப்பு வைத்திருக்கிறார். அதுவும் அடிப்படையாக டாக்டர் தாமஸ் ஹேல் சொன்னதுபோலவே இருக்கிறது, “பவுல் சொன்னார் கனியற்ற [“அந்தகாரக் கிரியைகளுக்கு”] செயல்களுக்கு உடன்பட வேண்டாம்; ஆனால் [இழக்கப்பட்ட மக்கள்] செயல்களுக்கு உடன்பட வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை... எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசுவும்கூட பாவிகளோடு சாப்பிட்டாரே” (Thomas Hale, M.D., The Applied New Testament Commentary, Kingsway Publications, 1997 edition, p. 780; note on Ephesians 5:11).

டாக்டர் மைக்கல் கிரின் அவர்கள் முதலாம் நூற்றாண்டு சபைக்கு சொன்னதை நான் விரும்புகிறேன். அவர் சொன்னார், “விசாரித்து கேட்பவர்களுக்கு மறைவான போதனை இல்லை; ஐக்கியத்திலிருந்து விலக வேண்டியதும் இல்லை (ibid., p. 218). “மாற்றப்படாத புறஜாதி மக்கள், மூன்று வருடங்களாக ஞானஸ்நானம் பெறாமல் இருந்தாலும், சபைக்குள் கொண்டுவரப் பட்டார்கள் மற்றும் ஐக்கியத்தில் பங்கு பெற்றார்கள்” (ibid.).

நமது பாப்டிஸ்டு சபைகள் இன்று வேறுவழியில் இதை செய்கின்றன. அவர்கள் புதிய இளம் மக்களை உடனே ஞானஸ்நானம் கொடுத்து விடுகிறார்கள், ஆனால் தங்கள் பிள்ளைகள் அவர்களோடு ஐக்கியம் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. ஆரம்பகால சபைகள் இதை சரியான வழியில் செய்தார்கள்.

ஜேக் ஹேல்ஸ் இரண்டு கட்டிடங்களை வைத்திருந்தார். ஒரு கட்டிடம் புதியதாக வரும் பிள்ளைகளுக்காக. அவர்களுக்கென்று தனியாக ஆராதனை கூட்டம் நடந்தது! ஆனால் “உண்மையான” சபை பிரதான மூலகட்டிடத்தில் கூடியது. புதிய பிள்ளைகளிடமிருந்து “சபை பிள்ளைகள்” பிரித்து வைக்கப்பட்டிருந்தார்கள். தங்களுடைய “விலைமிகுந்த” சபைபிள்ளைகளை புதிய பிள்ளைகள் கெடுத்து விடுவார்கள் என்று அவர்கள் பயந்தார்கள்!

நான் ஒரு இளம் வாலிபனாக முதலாவது சபைக்கு போனபோது, சபை பிள்ளைகள் என்னை எல்லாவிதத்திலும் கெடுக்க தங்களால் முடிந்தவரையிலும் செய்தார்கள்! உலகத்திலுள்ள இழக்கப்பட்ட மக்கள் செய்வதைவிட மோசமான காரியங்களை தாங்கள் செய்தார்கள் என்று அவர்கள் பேசிக்கொண்டதை நான் கேட்டேன். அதனால் சபையில் இல்லாத பிள்ளைகளை பிரிக்கும் இந்த முறை வேதாகமத்தில் இல்லை, ஆரம்பகால சபைகளும் இதை செய்யவில்லை, எழுதப்பட்டபடி மில்லியன் கணக்கான மக்களை கிறிஸ்துவுக்காக அவர்கள் சந்தித்தார்கள்!

நமது “ஞாயறுபள்ளி” யோசனைகள் சிலவற்றிலிருந்து நாம் விடுவிக்கப்பட வேண்டியது அவசியம் என்று நான் சொல்லுவேன். இரட்சிக்கப்படாத பிள்ளைகளை உள்ளே கொண்டுவாருங்கள். நல்ல ஆகாரத்தை அவர்களுக்கு ஊட்டுங்கள். அவர்களுக்கு ஒரு பிறந்த நாள் விருந்து கொடுங்கள். அவர்களுக்கு நல்ல நேரத்தை காட்டுங்கள் – “எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசுவும்கூட பாவிகளோடு சாப்பிட்டாரே” (Thomas Hale, ibid.). பாடுங்கள் “அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்” என்ற பாடலை பாடுங்கள்!

அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   பாவ வயலிலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்;
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   விருப்பமுள்ள வளையங்களை இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.
(“Bring Them In” by Alexcenah Thomas, 19th century).

நண்டு போன்ற, பழைய மதத்தலைவர்கள் இயேசுவிடம் குற்றம் கண்டு பிடித்தார்கள். மத்தேயு ஒரு வரிவசூல் செய்பவர். இயேசு அவரை அழைத்தார், மத்தேயு இயேசுவை பின்பற்றினார். அதன்பிறகு மத்தேயு தமது வீட்டில் ஒரு பெரிய விருந்து கொடுத்தார். இயேசுவும் அவருடைய பன்னிரண்டு சீஷர்களும் அங்கே இருந்தார்கள். அநேக ஆயக்காரர்களும் பாவிகளும் இயேசுவோடு விருந்து உண்ண வந்தார்கள். இயேசு செய்வது தவறு என்று மதத்தலைவர்கள் நினைத்தார்கள். அவர்கள் சொன்னார்கள், “இந்த பாவிகளோடு ஏன் இயேசு விருந்து உண்ண வந்தார்?” இயேசு பதிலுரைத்தார், “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க [வந்தேன்]” (மத்தேயு 9:13).

அநேக பாவிகள் தங்களோடு இருப்பதற்காக பயப்படும் அந்த பிரசங்கிகள் அதை நினைத்து பார்க்க வேண்டும்! நான் சொல்கிறேன், “பாவிகளை உள்ளே கொண்டு வாருங்கள்! உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேர்களை கொண்டு வாருங்கள்! அவர்கள் அவ்வளவு அதிகமாக மகிழ்ச்சி அடைவார்கள்!” அவர்களை நேராக ஐக்கியத்துக்கு கொண்டுவாருங்கள், இயேசு செய்ததுபோல, ஆதி சபை செய்ததுபோல! “அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்.” அந்த பாடலை பாடுங்கள்!

அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   பாவ வயலிலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்;
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   விருப்பமுள்ள வளையங்களை இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.

ஜீவனுள்ள, வல்லமையுள்ள முதலாம் நூற்றாண்டின் சபையை கவனியுங்கள்.

“அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும்... உறுதியாய்த் தரித்திருந்தார்கள் [கொய்னோனியா!] இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்” (அப்போஸ்தலர் 2:42, 47).

ஜேக் ஹைல்ஸ், மற்றும் அவனுடைய விபச்சார மகன், மற்றும் அவனுடைய வேசிதனம் செய்யும் ஒரு டீன்ஏஜ் மருமகன் – அவர்கள்தான் “மற்ற” கட்டடத்தில் இருக்கிறவர்காக இருந்திருக்க வேண்டும்! அவர்களை வெளியே தள்ளுங்கள், அவர்கள் இரட்சிக்கப்படாத புதிய பிள்ளைகளுக்கு தீங்கு செய்வார்கள்! அப்படிப்பட்ட மதவெறி “நாய்களை” இழக்கப்பட்ட இளம் மக்களிடமிருந்து வெளியே துரத்துங்கள்! இழக்கப்பட்ட இளம் மக்களை நேராக பிரதான சபைக்கு கொண்டு வாருங்கள். அதுசரி, இழக்கப்பட்ட மக்களை கொண்டு வாருங்கள் –வேசித்தன பாப்டிஸ்டு பரிசேயர்களை, ஞாயறுபள்ளி குழந்தைகளை கெடுப்பவர்களை வெளியே துரத்துங்கள்! இழக்கப்பட்ட மக்களை கொண்டு வாருங்கள் நாம் விருந்தோடு மற்றும் ஒரு பிறந்த நாளை கொண்டாடுவோம் –பழைய மக்களின் கேலிசித்திரம் பார்ப்போம்! ஆமென்! இந்த பழைய பிரசங்கியை கவனிப்போம், ஒரு சில பாடல்களை பாடுவோம், பாராட்டும்படியாக மற்றும் “ஆமென்” என்று சத்தமிடுவோம் – ஒரு பெரிய நேரத்தை அனுபவிப்போம்!

ஆந்த மூன்று கிரேக்க வார்த்தைகளும் ஜீவனுள்ள, வல்லமையுள்ள சபையை காட்டுகின்றன! “குரியோஸ்” – கர்த்தர் – கிறிஸ்து நம்முடைய குரியோஸ்! அவர் நம்முடைய கர்த்தர். திரும்பி வாருங்கள் மற்றும் கிறிஸ்துவிடம் கற்றுக்கொள்ளுங்கள், கிறிஸ்துவை பின்பற்றுங்கள், மற்றும் உங்கள் முழு இருதயத்தோடும் கிறிஸ்துவை நேசியுங்கள்! “அகப்பே” – “கிறிஸ்தவனின் அன்பு! திரும்பி வாருங்கள் நாங்கள் உங்களை நேசிக்க போகிறோம். நீங்கள் எங்களை நேசிக்க வேண்டுமென்று நம்பிக்கையோடு இருக்கிறோம். பழைய ஹிப்பிகள் ஒரு “உள் அன்பு” பற்றி பேசினார்கள். அவர்கள் மரஇருப்பை ஒரு “உள் அன்பு” ஆக அழைத்தார்கள். சபையிலே மெய்யான “உள் அன்பு” இருக்கிறது! எங்களுடைய உள் அன்புக்கு திரும்பி வாருங்கள்! அது மரஇருப்பை ஒரு ஞாயிறு பள்ளி சுற்றுலாவைபோல மாற்றும்! அதன்பிறகு “கொய்னோனியா” என்ற வார்த்தை இருக்கிறது. அதன்பொருள் ஐக்கியம், நட்பு, ஒற்றுமை, நல்ல கூட்டுறவு என்பதாகும்! கொய்னோனியா என்றால் ஐக்கியம். ஸ்தல சபையில் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் “அகப்பே” அன்பின் விரிவாக்கம் ஐக்கியமாகும்!

நாங்கள் இங்கே இருக்கிறோம்! நாங்கள் இங்கே உங்களுக்காக காத்திருக்கிறோம்! அடுத்த ஞாயிறு காலையில் வாருங்கள்! அடுத்த ஞாயிறு இரவில் வாருங்கள்! திரும்ப அடுத்த சனிக்கிழமை இரவில் வாருங்கள்! மற்றவர்களை உள்ளே கொண்டுவர நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்! இளம் மக்கள் வந்து நல்ல மகிழ்ச்சியடையும் இடமாக இந்த சபை இருக்க; இளம் மக்கள் வந்து நல்ல நண்பர்களை தெரிந்து கொள்ளும் இடமாக இந்த சபை இருக்க நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்; இளம் மக்கள் வந்து கிறிஸ்துவின் சீஷர்களாக மாறும் இடமாக – சிலுவையின் சிப்பாய்களாக இருக்க நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்! ஆமென்! பாடல் எண் எட்டை பாடவும் – “முன்னேறு, கிறிஸ்தவ போர்வீரனே!” அதைப் பாடுங்கள்!

முன்னேறு, கிறிஸ்தவ போர்வீரனே, போருக்கு அணிவகுத்து நில்,
   இயேசுவின் சிலுவையோடு முன்னேறு;
கிறிஸ்துவாகிய ராஜரிக தலைவர் சத்துருவுக்கு விரோதமாக நடத்துகிறார்;
   முன்னேறி போ, அவருடைய கொடி முன்னே போவதை பார்த்தவாறு.
முன்னேறு, கிறிஸ்தவ போர்வீரனே, போருக்கு அணிவகுத்து நில்,
   இயேசுவின் சிலுவையோடு, முன்னேறு.

டாக்டர் சான் அவர்களே, தயவுசெய்து வந்து நம்மை ஜெபத்தில் நடத்தவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“The Church’s One Foundation” (by Samuel J. Stone, 1839-1900).


முக்கிய குறிப்புகள்

ஆரம்பகால சபையின் இரகசியத்தைக் கொடுக்கும் மூன்று வார்த்தைகள்!

THREE WORDS GIVE THE SECRET OF THE EARLY CHURCH!

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்கள்
by Dr. R. L. Hymers, Jr.

“அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லா ரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிற வர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டுவந்தார்” (அப்போஸ்தலர் 2:46, 47).

I.   முதலாவது, “குரியோஸ்” என்ற கிரேக்க வார்த்தையாகும்,
அப்போஸ்தலர் 10:36; I கொரிந்தியர் 1:23; 2:2; யோவான் 10:28; மத்தேயு 16:24.

II.  இரண்டாவதாக, “அகப்பே” என்ற கிரேக்க வார்த்தையாகும்,
யோவான் 13:34, 35.

III. மூன்றாவதாக, “கொய்னோனியா” என்ற கிரேக்க வார்த்தையாகும்,
எபேசியர் 5:11; மத்தேயு 9:13; அப்போஸ்தலர் 2:42, 47.