Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
ஏரோது மற்றும் யோவான்

HEROD AND JOHN
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்கள்
by Dr. R. L. Hymers, Jr.

நவம்பர் 12, 2017 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, November 12, 2017

“அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவ னென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்” (மாற்கு 6:20).


இராஜாவாகிய ஏரோது மற்றும் யோவான் ஸ்நானகனின் கதை வேதாகமத்திலும் மற்றும் வரலாற்றிலும் பெரிய துக்கங்களில் ஒன்றாகும். யோவான் ஸ்நானகன் ஒரு உயிரோட்டமுள்ள இளம் சுவிசேஷகராகும். அவர் இராஜாவாகிய ஏரோதுக்கு – எண்ண உறுதி இன்றி தடுமாறும், பெலவீன சித்தமுள்ள ஆளுநர் விரோதமாக உருவெடுக்கிறார். அவன் யோவானுக்குக் கீழ்ப்படிய விரும்பினான். அவன் தேவனோடு சமாதானமாக இருக்க விரும்பினான். ஆனால் அவனுடைய பெலவீனம் மற்றும் தீர்மானம் எடுக்காதது அவனுடைய அழிவுக்கு நடத்தினது – யோவான் ஸ்நானகனை கொலை செய்தான், முடிவில் யோவானின் தலையை வெட்டினான்!

நான் இராஜாவாகிய ஏரோதுவைபற்றி படிக்கும்போது நான் எப்பொழுதும் அவனுக்காக துக்கப்படுவேன். ஆனால் அதன்பிறகு அவன்மீது கோபப்படுவேன். அவன் அவ்வளவு துக்ககரமான ஒரு முட்டாள். அவன் இரட்சிப்புக்கு மிகவும் சமீபமாக வந்தான். இருந்தாலும் அவன் ஒருபோதும் இரட்சிக்கப்படவில்லை. அவன் மாற்றத்துக்கு மிகவும் சமீபமாக வந்தான். இருந்தாலும் அவன் நரகத்துக்குப் போனான். நான் ஏரோதை நினைக்கும்போது திரு. கிரிபித் பாடின பாடல் எனது ஆத்துமாவை சிலிர்க்கச் செய்யும்,

இப்பொழுது விசுவாசிக்க வேண்டுமென்று
ஏறக்குறைய வற்புறுத்தினார்;
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று
ஏறக்குறைய வற்புறுத்தினார்;
ஏறக்குறைய முடியவில்லை,
ஏறக்குறைய ஆனால் இழக்கப்பட்டான்!
துக்கம், கசப்பான புலம்பலோடு துக்கம்,
ஏறக்குறைய ஆனால் இழக்கப்பட்டான்!
(“Almost Persuaded,” Philip P. Bliss, 1838-1876).

ஏறக்குறைய வற்புறுத்தினார்!
துக்கம், கசப்பான புலம்பலோடு துக்கம் –
ஏறக்குறைய ஆனால் இழக்கப்பட்டான்!

ஏரோது மற்றும் யோவான் ஸ்நானகனின் புராண கதையானது நமக்கு அநேக கிறிஸ்தவ சத்தியங்களை காட்டுகிறது.

முதலாவது, இரட்சிப்பின் செய்தியானது எப்பொழுதும் ஒரு தீர்மானம் செய்ய வேண்டுமென்று உன்னை அழைக்கிறது. “தீர்மானம்” என்ற வார்த்தையை பார்க்கும்பொழுது – “தீர்மானத்தை” போல தீயதாக நமக்கு காணப்படுகிறது. ஆனால் அநேக “தீர்மானம்” தீயதாகவே மட்டுமே இருக்கிறது ஏன் என்றால் அநேக மக்கள் தவறான தீர்மானம் செய்கிறார்கள்! ஏரோது சரியான தீர்மானம் செய்திருக்க முடியும். ஆனால் அதற்கு பதிலாக அவன் முன்னும் பின்னுமாக அலைகழிக்கப்பட்டான் – மற்றும் யோவான் ஸ்நானகன் அவனுக்குப் பிரசங்கித்த சத்தியத்துக்கு அவன் ஒருபோதும் ஒரு நிலையாக நிற்கவில்லை. யோவானுடைய பிரசங்கத்தைபற்றிய மிகவும் முதன்மையான காரியம் ஒரு தீர்மானம் செய்யும்படியான அவரது சவாலாகும். அவர் மனந்திரும்புதலை பிரசங்கித்தார் மற்றும் அவரது பிரசங்கத்தை கேட்டவர்களை ஒரு தீர்மானம் எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். அவர் மிகவும் வல்லமையாக பிரசங்கித்த படியினால் மக்கள் கேட்டார்கள், “அப்படியானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” (லூக்கா 3:10). கிறிஸ்து வந்தபொழுது அவர் அந்த பிரகாரமாகவே பிரசங்கித்தார். அவர் மக்களுக்கு இரண்டு விதமான தெரிந்து கொள்ளுதல்களை மட்டுமே கொடுத்தார். அது பரலோகம் அல்லது நரகம், அழிவுக்குச் செல்லும் அகலமான பாதை அல்லது ஜீவனுக்கு செல்லும் நெருக்கமான பாதை. மணலின்மேல் கட்டும் வீடு அல்லது கற்பாறையின்மேல் கட்டும் வீடு. தேவன் அல்லது உலக பொருள். கிறிஸ்துவின் பக்கமா அல்லது அவருக்கு விரோதமான பக்கமா, என்று மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்துவின் பிரசங்கம் அவருக்காகவா அல்லது அவருக்கு விரோதமாகவா என்று ஒரு தீர்மானம் எடுக்கும்படி கோரிக்கையை வைத்தது. பேதுரு பெந்தகொஸ்தே நாளில் அவ்விதமாகவே பிரசங்கித்தார். பேதுரு அவர்களிடம் ஒரு தீர்மானம் எடுக்கும்படி கோரிக்கையை வைத்தார். அதற்கு மக்கள் கேட்டார்கள், “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” (அப்போஸ்தலர் 2:37). அப்போஸ்தல நடபடிகளின் கடைசி அதிகாரத்தில் பவுலின் பிரசங்கம் மக்களை இரண்டு குழுக்களாக பிரித்தது. “அவன் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள்” (அப்போஸ்தலர் 28:24). அவர்கள் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்! மற்றும் கிறிஸ்தவ வரலாறு முழுவதிலும் ஒவ்வொரு எழுப்புதலிலும் தேவனுடைய மனிதர்கள் அப்படியாகவே பிரசங்கித்தார்கள். அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டவர்கள் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்!

இன்று நாம் ஒருவித வித்தியாசமான பிரசங்கத்தை கேட்கிறோம். எந்தக் கோரிக்கையும் வைக்கப்படுவதில்லை. சில பிரசங்கிகள் குணமாகும்படியாக மக்களை இனிமையாக அழைப்பார்கள். சில பிரசங்கிகள் அவர்களுக்கு மென்மையான ஆறுதல்படுத்தும் கதைகளைச் சொல்லுவார்கள். மற்றும் சில பிரசங்கிகள் அவர்களுக்குக் குப்பை போன்ற உலர்ந்துபோன இரத்த பலி இல்லாத வேத விளக்கங்களைக் கொடுப்பார்கள். அந்த அக்கினி எங்கே? அந்த சவால் எங்கே? நமது சபைகளிலிருந்து இளம் மக்கள் கூட்டம் கூட்டமாக ஓடுவதில் ஆச்சரியமில்லை! இன்று அதிகமான பிரசங்கம் ஒரு பக்கட் வெதுவெதுப்பான சூட்டுக்கோல் மதிப்பாக இல்லை – மற்றொரு சந்தர்பத்தில் உதவி தலைவர் ஜான் நான்ஸ் கார்னர் (1933-1941) மேற்கோள் காட்டினார். ஏரோது மற்றும் யோவான் ஸ்நானகனின் கதையானது நமக்கு அப்படிப்பட்ட பிரசங்கத்தின் முழுமையான பிரயோஜனமற்ற தன்மையை காட்டுகிறது. கிறிஸ்து நம்மை ஒரு தீர்மானம் எடுக்க அழைக்கிறார் என்பதை அது நமக்கு நினைவு படுத்துகிறது. அந்த விதமாக, நீ ஒரு தீர்மானம் எடுத்தது உண்டா? அது உனது வாழ்க்கையை பாதித்து இருக்கிறதா? அது உன்னை மாற்றி இருக்கிறதா?

ஏரோது “அவரை மகிழ்ச்சியாக கவனித்து கேட்டான்.” ஏரோது அந்தப் பிரசங்கியை விரும்பினான். அவர் பிரசங்கித்ததை அவன் ஆனந்தமாக கேட்டு இரசித்தான். ஆனால் அது அவனில் எந்தப் பாதிப்பையும் செய்யவில்லை. நான் எவ்வளவு பெரிய போதனையை பிரசங்கித்தேன் என்று மக்கள் என்னிடம் சொல்லுவதை கேட்க நான் ஒருபோதும் விரும்பவில்லை. அதிலே எனக்கு எந்த மகிழ்ச்சியுமே இல்லை. யாராவது சிலர் தங்கள் பாவத்துக்கு மனந்திரும்ப தீர்மானிக்கும்போது மற்றும் தங்களை இயேசுவின் இரக்கத்துக்கு ஒப்புவிக்கும்போது மட்டுமே நான் மகிழ்ச்சி அடைகிறேன். யாராவது சிலர் தாங்கள் உறுதியாக தீர்மானித்து மெய்யான மாறுதலோடு மற்றும் வாழ்க்கை மாற்றப்பட்டு இயேசுவை நம்பும்போது மட்டுமே என்னை மகிழ்ச்சி படுத்துகிறது. எனது பிரசங்கம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டது என்பதற்கு பரிட்சை அதுதான்! நீங்கள் அதை அனுபவித்தீர்கள் என்பதல்ல. நீங்கள் அதனால் பாதிக்கப்பட்டீர்கள் என்பதுமல்ல, நீங்கள் என்னை விரும்ப வேண்டும் மற்றும் எனது பிரசங்கத்தினால் மகிழ வேண்டும் என்பதுமல்ல. பரிட்சை இதுதான் – அது உன்னை ஒரு தீர்மானம் எடுக்க செய்ததா, கிறிஸ்துவை நிச்சயமாக முழுஇருதயத்தோடு மற்றும் உனது முழுவாழ்க்கையும் மாறும்படியான கிரியை செய்ததா? ஒரு நபர் கேட்டார், “அவர்களுக்கு இன்னும் அதிகமாக என்ன வேண்டும்?” கிறிஸ்து உனது முழுவாழ்க்கையையும் – எல்லாவற்றோடும் அப்படியே விரும்புகிறார்!

ஆனால் ஏரோதுவை போல இருக்கும் சில மக்களுக்குத் துக்கமான காரியம் இருக்கிறது. அவன் பெரும்பாலும் தீர்மானம் செய்துவிட்டான். அவன் பெரும்பாலும் கிறிஸ்துவை நம்பும்படி மற்றும் உண்மையான கிறிஸ்தவனாக மாறும்படி வற்புறுத்தப்பட்டான். ஏரோதைப்போல இருக்கும் மக்களுக்கு எவ்வளவு துக்கம் மற்றும் பரிதாபம். நீ சபைக்கு வருகிறாய். நாங்கள் பிசங்கிப்பதை கேட்கிறாய். மற்றும் உணர்ச்சிவசப்பட்டு அசைக்கப்படுகிறாய். நீ இயேசுவை நம்ப வேண்டியது அவசியம் என்று உணருகிறாய். நீ அவரை நம்ப வேண்டும் என்று சொல்லுகிறாய். ஆனால் நீ ஒருபோதும் செய்வதில்லை. நீ இயேசுவை நம்ப வேண்டியதற்கு பதிலாக அவரை நம்பி இருக்கிறேன் என்பதற்கு நிரூபணம் வேண்டும் என்று பார்க்கிறாய். அது ஒருபோதும் நடக்காது! ஒருபோதும் நடக்காது! ஒருபோதும் நடக்காது! ஏன் நடக்க கூடாது? நீ அவரை நம்புவதற்கு முன்பாகவே உனக்கு ஒரு “உணர்வு” வேண்டுமானால் அது எப்படி சாத்தியமாகும்? அது முட்டாள்தனம்! நீ இயேசுவை நம்புவதற்கு ஒரேவழி ஒரு உணர்வுக்குப் பதிலாக அவரை நம்ப வேண்டும். நீ இயேசுவை நம்புவதற்கு ஒரு அடி தூரம் இருக்கிறாய். ஆனால் நீ ஒருபோதும் செய்யமாட்டாய். நீ எவ்வளவு வித்தியாசமான நபராக இருக்கிறாய். நீ ஞாயிறுதோறும் வருகிறாய். ஆனால் நீ இரட்சகரை நம்ப மறுக்கிறாய். நீ கூட்டம் முடிந்த பிறகுகூட வந்து எங்களை சந்திக்கிறாய் – ஆனால் அவரை நம்பி இருக்க வேண்டும் என்ற உள்எண்ணம் உனக்கு இல்லை. நான் கேட்கிறேன், “நீ அவரை நம்பி இருக்கிறாயா?” நீ சொல்லுகிறாய், “இல்லை.” நீ சொல்கிறாய் “இல்லை” என்று உறுதியாக – நீ இல்லை என்பதில் மிகவும் நிச்சயமாக இருக்கிறாய். நீ ஏன் அவ்வளவு நிச்சயமாக இருக்கிறாய்? நீ ஏதோ சில உணர்வை அல்லது மற்றதை பார்த்துக்கொண்டு இருக்கிறாய்! அதுதான் காரணமாக இருக்க முடியும்! நான் உன்னோடு கொடுமையாக நேர்மையாக இருக்கிறேன். நீ விரும்பும் அந்த “உணர்வு” ஒரு குட்டிப்பிசாசு! உனது மனதுக்கு முன்பாக பிசாசு அந்த குட்டி பிசாசை ஊசலாட விட்டிருக்கிறான். “அந்த உணர்வை நான் அடைய வேண்டியது அவசியம்! நான் அதை மிகவும் மோசமாக விரும்பினேன்! அந்த உணர்வாகிய குட்டிப்பிசாசு இல்லாமல் நான் ஒருபோதும் திருப்தி அடைய மாட்டேன்!” பிசாசு அவனுடைய வார்த்தையின் கீழ் உன்னை வைத்திருக்கும்போது, நீ அதனால் அடிமை படுத்தப்பட்டாய் – அவன் ஒரு உணர்வை உனக்குக் கொடுப்பான்! அதன்பிறகு நீ அதனால் மிகவும் வசப்படுத்தப்படுவாய் மற்றும் மகிழ்விக்கப்பட்டவனாவாய் அதனால் நீ ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாது! அந்தக் குட்டிப்பிசாசின் “உணர்வு” உனது காதலி, உனது நேச அனல், உனது விக்கிரகம். அது உனக்கு நடக்கும்பொழுது அப்படிப்பட்ட ஒரு பலமான, மாய்மாலமான உச்சரிப்பு அது, உன்னை இரட்சிக்க சிலுவையிலே மரித்த உண்மையான இயேசுவை நம்ப முடியாதிருப்பாய்! அந்தக் குட்டிபிசாசின் “உணர்வு” உன்னை, கீழே இழுத்துச் செல்லும், அடிமைபடுத்தும், நரகத்தின் வயிற்றுக்குள் கொண்டு போகும். குட்டிப்பிசாசு “உணர்வு” உன்னை பார்த்து நகைப்பதை நான் ஏறக்குறைய கேட்க முடிகிறது! “நீ இப்பொழுது பிடிபட்டாய்! நீ இப்பொழுது பிடிபட்டாய்! இப்பொழுதிருந்து என்றென்றும் நரகத்தில் நீ என்னுடைய அடிமை!” நீங்கள் சிரிக்காதீர்கள். மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்குள் மெய்யாகவே ஒரு குட்டிப்பிசாசை வைத்துக்கொண்டு – தங்களுக்குப் பரிசுத்த ஆவி இருப்பதாக நினைக்கிறார்கள். ஆவியானவரால் நிரப்பப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் குட்டிபிசாசினால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்! நீ இரட்சிக்கப்பட்டதற்கு நிரூபணத்தை பார்த்துக்கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் நான் எச்சரிக்கிறேன் – நான் உங்களை எச்சரிக்கிறேன்! நீ மறைவானதோடு விளையாடிக் கொண்டிருக்கிறாய்! நீ நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறாய்! அந்த “உணர்வு” குட்டிபிசாசிடமிருந்து உன்னை இரட்சிக்க இரத்தம் சிந்தி சிலுவையிலே மரித்த, தேவகுமாரனாகிய, இயேசுவிடம் உன்னை ஒப்படைத்துவிடு!

அடிமை தனத்தின் தோற்றுவாயாக மாறின குறிப்பிட்ட பிரசங்கிகள் இருக்கிறார்கள். பிரசங்கிகள் அவர்களோடு இணைக்கப்பட்ட மக்களை நான் அறிவேன், அவர்கள் பிசாசின் காரியங்களையே செய்துகொண்டு, அவர்களுக்கு இரட்சிப்பை வாக்கு பண்ணுகிறார்கள். அவர்கள் தங்களை பின்பற்றுபவர்களை கிறிஸ்துவிடம் விடாமல் தாங்களே கட்டி வைத்துக்கொள்ளுகிறார்கள். யோவான் ஸ்நானகனை அந்த வகுப்பில் எந்த சூழ்நிலையிலும் நான் சேர்க்க மாட்டேன்.

ஏரோதியாளை ஒரு விபச்சாரி என்று அழைத்தபடியினால், ஏரோது யோவனை சிறையிலே போட்டான். வேதாகமம் சொல்லுகிறது “யோவான் நிதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்தான்”. அவன் யோவானை ஒரு பரிசுத்தவானாக கண்டான். அதனால் ஏரோது யோவனை மறுபடியும் சிறையில் பார்த்த நேரம் இருந்தது. பாடம் சொல்லுகிறது அவன் “அவரை பாதுகாத்தான்”. அதன் பொருள் அவரை “பத்திரமாக வைத்திருந்தான்” என்பதாகும். யோவனிடம் பரிசுத்தம் மற்றும் சிலவித்தியாசங்கள் இருந்ததை ஏரோது அறிந்திருந்தான். அவர் “தேவபக்தியுள்ளவர் [யோவான்] என்று கேள்வி பட்டான்.” அவன் ஒரு பரிசுத்தவானை ஆராதனை செய்யும் அநேகரைபோல இருந்தான். பரிசுத்த அகஸ்தியனை போன்ற பரிசுத்தவான், ஒரு தேவ மனிதன் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் பரிசுத்தவானின் வார்த்தைகளை வாசிக்கலாம் மற்றும் தியானம் செய்யலாம், அகஸ்தியனைப் போன்றவர்கள் அவர்களுக்குச் செய்ய சொன்னதை, அதாவது அவர்கள் கிறிஸ்துவை ஒருபோதும் நம்பவில்லை. கத்தோலிக்கர்கள் ஒரு பரிசுத்தவானை பார்ப்பதுபோல ஒருவேளை ஏரோது யோவனை பார்த்திருப்பான் என்று நான் நினைக்கிறேன். “விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்.” ஆனால் அது அவனுக்கு உதவி செய்யவில்லை!

ஏரோது யோவானை சிறையில் சென்று பார்த்தான். இது அவனுடைய மனைவியை பிரியபடுத்தாது என்று அவன் அறிந்திருந்தான். இருந்தாலும் அவன் தொடர்ந்து போனான். அங்கே அவன் ஈர்க்கப்பட்டவனாக உணர்ந்தான். அவனை ஏதோ சில, எதிர்க்க முடியாதது அங்கே இழுப்பதாக உணர்ந்தான். அவன் யோவான் சொன்னதை கேட்க போனபொழுது, “விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்.” தீர்க்கதரிசியின் சொல்லை கேட்க வேண்டும் என்று பரிசுத்த ஆவி அவனை இழுத்தார். அதே காரணத்துக்காக அநேக மக்கள் சபைக்கு வருகிறார்கள். போதனை அவர்களை கண்டித்தாலும், அவர்கள் சபைக்குள்ளே இருப்பதை விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் கிறிஸ்துவுக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பதில்லை. ஏரோது ஏறக்குறைய மாற்றப்படும் நிலைக்கு வந்தான். ஆனால் அவன் ஒருபோதும் மாற்றப்படவில்லை. மற்றும் அதன்பிறகு ஏரோது ஏன் யோவான்ஸ்நானகனுடைய தலையை வெட்டினான்? இந்த மனிதனாகிய ஏரோதை நாம், எப்படி புரிந்துகொள்ள முடியும்?

யோவானுடைய பிரசங்கத்தின்கீழ் அவன் தேவனுடைய வல்லமையை உணர்ந்தான். யோவான் சரியானவர் என்று அவன் அறிந்திருந்தான். இருந்தாலும் அவன் தன்னை கிறிஸ்துவுக்கு ஒப்புகொடுக்கவில்லை. யோவான் அவனுக்குப் பிரசங்கித்ததைப் புரிந்து கொண்டான். ஆனால் அவன் கிறிஸ்துவை நம்பவில்லை. அவன் கற்றுக்கொண்டே இருந்தான், ஆனால் அவன் ஒருபோதும் உறுதியாக கிறிஸ்துவை நம்ப தீர்மானம் செய்யவில்லை. அவனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள அவன் விரும்பவில்லை. அந்த பொல்லாத பெண்ணாகிய ஏரோதியாளிடமிருந்து அவன் பிரிந்து வந்திருக்க வேண்டும். அவனது வாழ்க்கையின் காரியங்களை மாற்றிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அநேக கீழ்நாட்டு இளம் மக்கள் அப்படியே இருக்கிறார்கள். அவர்களுடைய பெற்றோர் நமது சபைக்கு வரவேண்டும் என்று சொல்லிவிடுகிறார்கள், ஆனால் நாங்கள் பிரசங்கிக்கிறவைகளை அவர்கள் முழுமையாக ஒத்துக்கொள்வதில்லை. நாங்கள் மிகவும் கெடுபிடியாக இருக்கிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகள் நமது சபைக்கு வருகிறார்கள் – ஆனால் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இது உனக்கு உண்மையாக இருக்கிறதா? உனது பெற்றோர் நாங்கள் மிகவும் கெடுபிடியாக இருக்கிறோம் என்று நினைக்கிறார்களா? அவர்கள் உன்னை வரவிடுகிறார்கள், ஆனால் அவர்கள் உன்னிடம் பேசும்போது எங்களை கேலிபரிகாசம் செய்கிறார்கள். இவ்வளவு அதிக நேரம் சபையில் வீணாக்க வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் காரியங்களை இப்படியாக சொல்லுகிறார்கள், “உன்னால் இவ்வளவாக இங்கே இருக்க முடியுமா?” அதனால் நீ உனது பெற்றோர் மற்றும் இந்தச் சபையின் இடையில் கிழிக்கப்படுகிறாய். நாங்கள் சரியானவர்கள் என்று உனக்குத் தெரியும், ஆனால் நீ உனது பெற்றோரை பிரியப்படுத்த விரும்புகிறாய். உனது கிறிஸ்தவரல்லாத பெற்றோருக்கு விரோதமாக, எங்களோடு நிற்க நீ பயப்படுகிறாய். இயேசு சொன்னதை அவர்கள் மறந்துவிட்டார்கள், “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” (மத்தேயு 10:37). ஏரோது ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்பினான், ஆனால் அவன் ஏரோதியாளையும் பிரியப்படுத்த விரும்பினான். வேதாகமம் சொல்லுகிறது, “இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்” (யாக்கோபு 1:8). டாக்டர் சார்லஸ் C. ரெய்ரி சொன்னார், “இருமனமுள்ளவன் ஒரு மனிதன் பிரிக்கப்பட்ட பற்றுறுதியாக [இருக்கிறான்] (ரெய்ரி ஸ்டடி வேதாகமம்). அந்தத் தப்பு ஏரோதிடம் இல்லையா? அவன் ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்பினான், இருந்தாலும் அவன் ஏரோதியாளையும் பிரியப்படுத்த விரும்பினான். அவன் இருமனம் உள்ளவனாக இருந்தான். அதனால் அவனால் ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருக்க முடியவில்லை.

நாங்கள் சமீபத்தில் அதுபோல ஒரு கிழக்கத்திய பெண்ணை பெற்றிருந்தோம். அவள் தனது கிறிஸ்தவரல்லாத பெற்றோரை பிரியப்படுத்த விரும்பினாள். ஆனால் அவள் கிறிஸ்தவளாக இருக்கவும் விரும்பினாள். இறுதியாக அவள் இயேசுவினிடம் முழுமையாக வரவேண்டியது அவசியம் என்று காணும் வரையிலும் அவள் பகுதியாக கிழிக்கப்பட்டாள். தனது பெற்றோருக்கு விரோதமாக போக மற்றும் முழுமையாக இயேசுவிடம் வர தீர்மானம் செய்தாள். அவள் இதை செய்த நொடியிலே உடனடியாக மாற்றப்பட்டாள். இயேசுவை தனது வாழ்க்கையின் கர்த்தராக ஏற்றுக்கொள்ள தீர்மானம் செய்தாள். அவளுடைய குழப்பமெல்லாம் போய்விட்டது மற்றும் அவள் இப்பொழுது ஒரு இரம்மியமான கிறிஸ்தவளாக இருக்கிறாள். ஆனால் ஏரோது யோவான்ஸ்நானகனுக்கும் ஏரோதியாளுக்கும் இடையில் தீர்மானம் செய்யவில்லை. அதனால் அவன் ஒருபோதும் ஒரு உண்மையான கிறிஸ்தவனாக மாறமுடியவில்லை. அவன் மரித்து நரகத்துக்குப் போனான். வேதாகமம் சொல்லுகிறது, “பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்” (யோசுவா 24:15). உனது இழக்கப்பட்ட பெற்றோருக்கும் கிறிஸ்துவுக்கும் இடையில் நீ தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உனது இழக்கப்பட்ட நண்பர்களுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையில் நீ தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இரட்சிக்கப்படுவதற்கும் கிறிஸ்துவுக்காக ஒரு தெளிவான சாட்சியாக இருப்பதற்கும் வேறுவழி இல்லை. ஏரோதைப்போல முன்னும் பின்னுமாக அலைய வேண்டாம். கிறிஸ்துவையும் சபையையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு தெளிவான தீர்மானத்தை எடுங்கள். “பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்.” “இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்” (யாக்கோபு 1:8). இயேசு சொன்னனார், “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” (மத்தேயு 10:37).

ஏரோது யோவான் பிரசங்கத்தை கேட்க சென்றான் மற்றும் “அவர் சொன்னதை கேட்டபோது, அவன் அநேக காரியங்களை செய்தான்.” ஆமாம், அவன் அநேக காரியங்களை செய்தான். ஆமாம், எல்லா காரியங்களும் ஆனால் ஒரு காரியம் அது மிகவும் முக்கியம். அவன் சில குறிப்பிட்ட பாவங்களை விட்டான் சந்தேகமில்லை. ஆமாம், “அவன் அநேக காரியங்களை செய்தான்,” ஆனால் யோவான் அவனை செய்ய சொன்ன ஒரு காரியத்தை அவன் ஒருபோதும் செய்யவில்லை. அவன் ஒருபோதும் இயேசுவை நம்பவில்லை! நீ ஏறக்குறைய ஒரு கிறிஸ்தனாக இருப்பதற்கு இது காரணமில்லையா? ஏறக்குறைய, ஆனால் இன்னும் இழக்கப்பட்டிருக்கிறாய்! “அநேக காரியங்கள்” அவைகள் போதாது. ஒரு இளம் பெண் சொன்னாள், “அவர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?” அவள் சொல்லி இருக்க வேண்டும், “தேவனுக்கு இன்னும் என்ன வேண்டும்?” நான் பின்பற்றின இந்தப் போதனையை, டாக்டர் மார்டீன் லியோடு ஜோன்ஸ் மூலாதாரமாக பிரசங்கித்தார். டாக்டர் லியோடு ஜோன்ஸ் சொன்னார், “உன்னை பின்னாலே பிடித்து வைத்திருப்பது என்ன? உன்னை நீயே சோதித்துப்பார். ஞானமாக இருந்து அதை போகவிடு! ‘அநேக காரியங்கள்’ [போதுமானது] அல்ல. தேவன் உன்னுடைய முழுமையான கீழ்ப்படிதலை விரும்புகிறார், [வெறுமையாக] குறிப்பிட்ட பாவங்களை விட்டுவிடுவதல்ல ஆனால் உனது முழுசித்தத்தை விரும்புகிறார்,” உனது முழுவாழ்க்கையும் கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட வேண்டியது அவசியம்! (D. Martyn Lloyd-Jones, M.D., “Missing the Mark”).

ஒரே ஒரு காரியத்தை நான் சொல்ல விரும்புகிறேன். வசனம் 24ல், ஏரோதியாள் தனது மகளிடம் யோவான்ஸ்நனகனுடைய தலையை கேட்க சொன்னாள். ஏரோது மிகவும் துக்கப்பட்டான், ஆனால் “கூடப்பந்தியிருந்தவர் களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்க மனதில்லாமல்” (மாற்கு 6:26). ஓ, அங்கே அது இருந்தது – தற்புகழ்ச்சி மற்றும் மற்றவர்களின் நல்ல மதிப்பீடு. இந்த மக்கள் தவறானவர்கள் என்று தனது இருதயத்திலே அவன் அறிந்திருந்தான். மறுபக்கமாக, யோவனை பாராட்டினான் மற்றும் அவர் சரியானவர் என்று அறிந்திருந்தான். இருந்தாலும் அவன் பாவிகளுக்கு ஒப்புக்கொடுத்தான் மற்றும் யோவானுடைய பிசங்கத்தைத் தள்ளிவிட்டான். அவன் நித்திய இரட்சிப்பைவிட்டு நரகத்துக்கு எளிதாக போனான் ஏனென்றால் அந்த மக்கள் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று பயந்தான். ஓ, எல்லாவற்றுக்கும் மேலாக பயித்தியமானான்! ஒரு வேளை இந்த உலகம் முழுவதுமே உன்னை கேலிபரியாசம் செய்தாலும் செய்யட்டும், உனது முழு குடும்பமும் உன்னை மத பைத்தியமாக மாறிவிட்டான் என்றாலும் பரவாயில்லை, ஒவ்வொருவரும் உன்னை முட்டாள் என்று அழைக்கட்டும், நீ தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் – அதிலே என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது? அவர் மட்டுமே நியாயாதிபதியாக இருக்கிறார்!

தேவன் என்ன சொல்லுகிறாரோ அதைச் செய். அவருடைய குமாரனாகிய இயேசுவை நம்பு. நீ இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து திரும்பி விட்டாய் என்று, உனது குடும்பம் மற்றும் நண்பர்கள், மற்றும் இந்த முழு உலகத்துக்கும் காட்டு – மற்றும் உனது வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்கு முழுவதுமாக கொடுத்ததாக சொல்லு!

கிறிஸ்து சரியானவர் மற்றும்உண்மையானவர் என்று நீ ஒருமுறை அறிந்து விட்டால் உன்னை முழுவதுமாக அவருக்குக் கொடுக்கும் வரையிலும் ஒருபோதும் உனக்குச் சமாதானம் இருக்காது. ஏழை ஏரோது! அவன் யோவானை சிரசேதம் செய்த பிறகு அவனுடைய வாழ்க்கை எவ்வளவு பயங்கரமாக இருந்தது! யோவான் அவனுடைய வாழ்க்கையை வேட்டையாடினான் மற்றும் வாதித்தான். ஏரோது இயேசுவை பற்றி கேள்விபட்டபோது, அது யோவான் மரித்தோரிலிருந்து உயித்தெழுந்தான், என்று அவன் நினைத்தான். யோவான் இரவிலே அவனுடைய வாழ்க்கையை வேட்டையாடினான் மற்றும் வாதித்தான்! யோவனுடைய தலை தட்டிலே வைக்கப்பட்டு அது அவனிடம் வருவதாக அவன் கனவு கண்டான். நீ சத்தியத்தை தள்ளிவிட்டாலும் அதோடு அதை எரிந்துவிட முடியாது. அது உன்னை வேட்டையாடும் என்றென்றுமாக வாதிக்கும். அது உனக்கு இளைப்பாறுதலை அல்லது சமாதானத்தைக் கொடுக்காது. ஏரோது இரவிலே யோவானைப்பற்றி கனவு கண்டான் – “ஓ, யோவானே, நான் உன்னை ஏன் கவனிக்காமல் போனேன்? ஓ, யோவானே, நான் என்னுடைய ஆத்துமாவை ஏன் தூரமாக எரிந்தேன்? ஓ, யோவானே, நான் ஏன் அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று அவ்வளவாக பயந்தேன்? ஓ, யோவானே, நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தேன்.”

ஏரோதின் வாழ்க்கையை படக்காட்சியாக பார் அவன் யோவானை சிரசேதம் செய்தபிறகு அவனுடைய வாழ்க்கை எவ்வளவு பயங்கரமாக இருந்தது. நீ இந்த உலகத்தை விட்டுவிட தீர்மானிக்கவில்லையானால், இயேசு கிறிஸ்துவை நம்பவில்லையானால், உனது வாழ்க்கையை அவருக்குக் கொடுக்காவிட்டால் உன்னுடைய வாழ்க்கையும் அப்படியே இன்னும் பயங்கரமாக இருக்கும். நான் உன்னை காயப்படுத்த முயற்சி செய்வதால் கண்டிக்கப்படுவேன் என்று நான் பயப்படவில்லை. நான் உன்னை நிச்சயமாக பயப்படுத்த முயற்சி செய்கிறேன். இயேசு கிறிஸ்துவின் அற்புதமான அன்பு உன்னை கவர்ச்சிக்கவில்லையானால் கிறிஸ்து இல்லாத நித்தியத்தின் பயங்கரத்தைபற்றி நான் உன்னை பயப்படுத்த என்னால் முடிந்தவரையிலும் செய்வேன். நித்தியமான குற்ற உணர்வு, நித்தியமான பரிதாபம், சொல்லமுடியாத வேதனையான வாதிப்புக் காத்திருக்கிறது. எல்லாவற்றையும்விட்டு மற்றும் கிறிஸ்துவை முழு இருதயத்தோடும் தழுவிக்கொள்ள தவறுபவர்களுக்கெல்லாம் அதுதான் காத்திருக்கிறது. உனது பாவத்திலிருந்து உன்னை கிறிஸ்து இரட்சிப்பாராக, அவர் அப்படி செய்ய காத்துக்கொண்டு இருக்கிறார். நீ விசுவாசத்தோடு கிறிஸ்துவிடம் வா மற்றும் அவரை நம்பு என்னவானாலும் பரவாயில்லை – நீ இரட்சிக்கப்படுவாய். வேறுவழி இல்லை. ஆமென். ஜான் கேஹன் அவர்களே, தயவுசெய்து வாருங்கள் யாராவது சிலர் தங்கள் முழுவாழ்க்கையையும் இயேசுவுக்குக் கொடுக்க நம்மை ஜெபத்தில் நடத்துங்கள்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Almost Persuaded” (Philip P. Bliss, 1838-1876).