Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
புதிதாக மாற்றப்பட்டவர்களுக்காக ஏழு கருத்துக்கள்

SEVEN POINTS FOR NEW CONVERTS
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

அக்டோபர் 7, 2017 சனிக்கிழமை மாலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, October 7, 2017

“சீஷருடைய மனதைத் திடப்படுத்தி [வலுப்படுத்தி], விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்” (அப்போஸ்தலர் 14:22).


தி அப்லைடு புதிய ஏற்பாட்டு விமர்சனம் இந்த வசனத்தைப்பற்றி இப்படி சொல்லுகிறது,

ஒரு இடத்தில் ஒருதடவை மட்டுமே சுவிசேஷத்தை பிரசங்கிப்பது போதமானதல்ல. புதிய விசுவாசிகள் விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி கற்பித்து அவர்களை நிலைபடுத்த வேண்டியதும் அவசியமாகும். இதைதான் பவுலும் பர்னபாவும் செய்தார்கள். புதிய சீஷர்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க அவர்கள் அநேக கஷ்டங்களை சகிக்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் விரும்பினார்கள் [உபத்திரவங்களை, பாடுகளை].

அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார், “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் [தாங்கிக்கொண்டோமானால்] அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” (II தீமோத்தேயு 2:12). உண்மையாக ஒப்புக்கொடுத்த ஒரு கிறிஸ்தவன் வரப்போகும் கிறிஸ்துவின் இராஜ்யத்தில் அவரோடுகூட ஆளுகை செய்ய வேண்டுமானால் தனது வாழ்க்கையில் நெருக்கங்களை சகிக்க வேண்டியது அவசியமாகும். “நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி” (II தீமோத்தேயு 2:3).

I. முதலாவது, நீ சில கஷ்டங்களை தாங்கவேண்டியது அவசியம்.

நீ அறிந்துகொள்ள வேண்டிய முதலாவது காரியம் இதுவாகும். நீ அப்படியே எளிதாக இரட்சிக்கப்பட்டுப் பரலோகம் போய்விட முடியாது. நீ இரட்சிக்கப்பட்ட பிறகு, “நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி... அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” (II தீமோத்தேயு 2:3, 12). நான் இதற்கு முன்பாக சீனசபைக்கு போனபோது இது எனக்குக் கற்பிக்கப்படவில்லை. நீ கிறிஸ்துவை நம்பு மற்றும் நீ பரலோகத்துக்குப் போகலாம் என்று நான் நினைத்தேன். கிறிஸ்துவின் இராஜ்யத்தில் நான் அவரோடு அரசாள வேண்டுமானால் நான் ஒரு ஜெயங்கொள்ளுகிற கிறிஸ்தவனாக இருக்க வேண்டும் என்று டாக்டர் தீமோத்தேயு லின் எனக்குக் கற்பித்தார், “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான்… ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்” (வெளிப்படுத்தல் 2:26). கிறிஸ்துவின் இராஜ்யத்தில் அவரோடு அரசாள வேண்டுமானால் அவர்கள் ஒரு ஜெயங்கொள்ளுகிற கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்று முஸ்லீம் உலகத்திலும் சீனாவிலும் இருக்கும் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். நமது ஆரம்ப பாடம் சொல்லுவதைப்போல, “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்” (அப்போஸ்தலர் 14:22). நாம் கிறிஸ்துவின் இராஜ்யத்தில் அவரோடு அரசாள வேண்டுமானால் அநேக உபத்திரவங்களின் (திலிப்சிஸ் – நெருக்கங்கள்) வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் புதிய கிறிஸ்தவர்களுக்குக் கற்பித்தார். இந்த எழுப்புதலில் நீங்கள் மாற்றம் அடைந்திருந்தால் அதைதான் நீங்கள் செய்ய வேண்டும். நமது துதிபாடல் தொகுதியில் டாக்டர் வாட் அவர்களின் பிரபலமான பாடல் ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளாக நமக்கு கற்பிக்கிறது!

வானங்களில் மலர் படுக்கைகளில் எளிதாக
நான் சுமந்து செல்லப்பட வேண்டுமா,
மற்றவர்கள் பரிசை ஜெயிக்க போராடி,
இரத்தக்கடலில் பிரயாணம் செய்யும்பொழுது?
நான் அரசாள வேண்டுமானால்,
நானும் நிச்சயமாக போராட வேண்டும்,
கர்த்தாவே, எனது தைரியத்தை வர்த்திக்க செய்யும்,
உமது வார்த்தையின் உதவியினால்,
நான் வேதனையை தாங்கிக்கொண்டு,
விடாமல் உழைப்பேன்.
(“Am I a Soldier of the Cross?” by Dr. Isaac Watts, 1674-1748).

II. இரண்டாவது, உனக்கு ஒரு வேதாகமம் இருக்க வேண்டியது அவசியம் மற்றும் நீ அதை படிக்க வேண்டும்.

“வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட் டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக் கிறது” (II தீமோத்தேயு 3:16, 17).

நீங்கள் ஒரு ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமம் வாங்க வேண்டிய தேவை இருக்கிறது அப்பொழுது நாங்கள் பக்க எண்ணை கொடுக்கும்பொழுது நீங்களும் எங்களை பின்பற்ற முடியும். நீங்கள் இந்த போதனைகள் அச்சிடப்பட்ட மூல பிரதிகளை உங்களோடு வீட்டுக்கு எடுத்துச்சென்று வாரநாட்களில் படியுங்கள். எந்த ஒரு வானொலி அல்லது தொலைகாட்சி பிரசங்கிகளையும் கவனிக்க வேண்டாம். அவர்களில் அநேகர் பொய் போதகர்கள். டாக்டர் ஜெ. வெர்னன் மெக்ஜீ அவர்களை தவிர வேறு ஒருவரையும் கவனிக்க வேண்டாம். அவருடைய அனுதின வேத ஆராய்ச்சிகளை பகல் அல்லது இரவு எந்த நேரத்திலும் உங்கள் கணணியில் www.ttb.org அல்லது www.thrutheBible.org என்ற வலை தளங்களில் கவனிக்கலாம். டாக்டர் மெக்ஜீ அவர்கள் திறந்தவெளி சபையில், 550 தெற்கு ஓப் தெருவில், இங்கே டவுன்டவுன் லாஸ் ஏன்ஜல்ஸில் நீண்டகால போதகராக இருந்தார். ஒவ்வொரு நாளும் அவரை கவனித்து நான் வேதாகமத்தை கற்றுக்கொண்டேன். இன்று அவர் எல்லாவிதமான தவறுகள் மற்றும் இராஜ துரோகங்களை தவிர்க்கிறார். வானொலி அல்லது தொலைகாட்சி பிரசங்கிகளில் நான் நம்பக்கூடிய ஒரு வேதபோதகர் அவர் ஒருவர் மட்டுமே – ஒரே ஒருவர் மட்டுமே. வானொலியில் டாக்டர் மெக்ஜீ அவர்களுக்கு முன்னும் பின்னும் வந்தவர்களை கவனித்த மக்கள் குழம்பிப் போனவர்களை நாங்கள் அறிவோம். அதனால்தான் உங்கள் கணினியில் அவரை கவனிப்பது மிகசிறந்தது (ஆங்கிலமல்லாத மற்ற மொழிபெயர்ப்புகளை www.ttb.org/global-reach/regions-languages என்ற வலைதளத்தில் காணலாம்).

ஒவ்வொரு நாளும் வேதாகமத்தை வாசியுங்கள். “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்”(சங்கீதம் 119:11).

III. மூன்றாவது, நீங்கள் விடுமுறையில் இருந்தால் தவிர மற்றபடி வேறு சபைகளுக்குப் போகவேண்டாம்.

சபைகளில் ஆழமான விசுவாச துரோகம் உள்ள ஒரு காலத்தில் நாம் வசிக்கிறோம். அவர்களிடமிருந்து தூரமாக விலகி இருங்கள்.

“அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்” (மத்தேயு 24:11, 12).

மற்ற சபைகளுக்கு நாங்கள் சிபாரிசு செய்ய முடியாது. “தீர்மானத்தை” நிறைவேற்றும் பாப்டிஸ்டு சபைகளுக்கும் மற்றும் பிற இராஜ துரோகிகளிடமும் நாங்கள் சிபாரிசு செய்ய முடியாது.

IV. நாலாவது, இந்தச் சபையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மாலை கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். மேலும் வியாழன் இரவு ஜெபக்கூட்டங்களிலும் மற்றும் ஒவ்வொரு வார சுவிசேஷ ஊழியங்களிலும் பங்கு பெறுங்கள்.

V. ஐந்தாவது, போதகர் மற்றும் துணை போதகரை அணுகி அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் எந்த நேரத்திலும் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்குப் போன் செய்ய முடியும் மற்றும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கலாம் – அல்லது இங்கே சபையிலே அவரை பாருங்கள்.

“தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” (எபிரெயர் 13: 7).

“உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக் களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக் கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமா யிருக்கமாட்டாதே” (எபிரெயர் 13:17).

“நடத்துகிறவர்கள்” இந்த வார்த்தைகளை “உங்கள் தலைவர்கள்” என்று மொழிபெயர்க்க முடியும். தி ரிபர்மேஷன் ஸ்டடி வேதாகமம் எபிரெயர் 13: 17ல் சொல்லுகிறது, “உண்மையுள்ள சபை தலைவர்கள் உண்மையுள்ள மேய்ப்பர்களாக இருக்கிறார்கள்... தலைவர்களின் (போதகர்கள்) கவனிப்பு ஆழமானது மற்றும் தூய்மையானது ஏனென்றால் அவர்கள் தேவனால் நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய ஊழியத்தை எதிர்க்கும் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டியதாக இருக்கும்.” அந்தப் போதகர் டாக்டர் ஹைமர்ஸ். நீங்கள் அவருக்கு (818)352-0452 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம். துணை போதகர் டாக்டர் கேஹன். அவருக்கு (323)735-3320 என்ற எண்ணுக்கு நீங்கள் போன் செய்யலாம்.

VI. ஆறாவது, உங்கள் வாழ்க்கையில் ஆத்தும ஆதாயத்தை ஒரு உறுதியான முக்கியமானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

சுவிசேஷத்தை கேட்கும்படியாக மக்களை கொண்டுவர கஷ்டப்பட்டு உழைக்காத எவரும் ஒரு நல்ல கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. இயேசு சொன்னார், “என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14: 23).

VII. ஏழாவது, சிறிய ஜெபக்குழுக்கள்pல் ஒன்றில் சேர்ந்துகொள்ளுங்கள்.

திருமதி ஹைமர்ஸ் அல்லது டாக்டர் கேஹன் அவர்களிடம் உங்களுக்குச் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க உதவிசெய்யும்படி கேளுங்கள். ஒவ்வொரு வாரமும் உங்கள் ஜெபக்குழுவோடு கூடுங்கள்.

“ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்” (மத்தேயு 18:20).

நீங்கள் இதுவரையிலும் இரட்சிக்கப்படவில்லையானால், உங்கள் பாவத்துக்கு மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை நம்புங்கள் என்று உங்களை வருந்தி கேட்டுக்கொள்ளுகிறோம். நீங்கள் மனந்திரும்பி அவரை நம்பும்பொழுது, அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, உங்களைச் சுத்திகரிக்கும்.

“அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்“ (I யோவான் 1:7).

தயவுசெய்து டாக்டர் கேஹான் அவர்களை பாருங்கள் மற்றும் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று நினைத்தால் அவர் உங்கள் சாட்சியைக் கேட்கட்டும். அவருடைய போன் எண் (323)735-3320.

ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Am I a Soldier of the Cross?” (by Dr. Isaac Watts, 1674-1748).


முக்கிய குறிப்புகள்

புதிதாக மாற்றப்பட்டவர்களுக்காக ஏழு கருத்துக்கள்

SEVEN POINTS FOR NEW CONVERTS

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்” (அப்போஸ்தலர் 14:22).

(II தீமோத்தேயு 2:12, 3)

I.    முதலாவது, நீ சில கஷ்டங்களை தாங்கவேண்டியது அவசியம்,
II தீமோத்தேயு 2:3, 12; வெளிப்படுத்தல் 2:26.

II.   இரண்டாவது, உனக்கு ஒரு வேதாகமம் இருக்க வேண்டியது அவசியம் மற்றும் நீ அதை படிக்க வேண்டும், II தீமோத்தேயு 3:16, 17; சங்கீதம் 119:11.

III.  மூன்றாவது, நீங்கள் விடுமுறையில் இருந்தால்தவிர மற்றபடி வேறு சபைகளுக்குப் போகவேண்டாம், மத்தேயு 24:11, 12.

IV.  நாலாவது, இந்த சபையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மாலை கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். மேலும் வியாழன் இரவு ஜெபக்கூட்டங்களிலும் மற்றும் ஒவ்வொரு வார சுவிசேஷ ஊழியங்களிலும் பங்கு பெறுங்கள்.

V.   ஐந்தாவது, போதகர் மற்றும் துணை போதகரை அணுகி அறிந்து கொள்ளுங்கள், எபிரெயர் 13:7, 17.

VI.  ஆறாவது, உங்கள் வாழ்க்கையில் ஆத்தும ஆதாயத்தை ஒரு உறுதியான முக்கியமானதாக ஆக்கிக்கொள்ளுங்கள், லூக்கா 14:23.

VII. ஏழாவது, சிறிய ஜெபக்குழுக்களில் ஒன்றில் சேர்ந்துகொள்ளுங்கள்,
மத்தேயு 18:20; I யோவான் 1:7.