Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
உமது மகிமையை எனக்குக் காண்பித்தருளும்

SHOW ME THY GLORY
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஆகஸ்ட் 12, 2017 சனிக்கிழமை மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, August 12, 2017


தயவுசெய்து என்னோடுகூட யாத்திராகமம், 33ம் அதிகாரத்துக்குத் திருப்பிக் கொள்ளுங்கள். அது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 115ம் பக்கத்தில் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் எழுந்து நின்று யாத்திராகமம் 33:18ஐ பாருங்கள். இங்கே மோசே தேவனிடம் ஜெபித்தார்,

“அப்பொழுது அவன் உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் [நான் உம்மிடம் கெஞ்சுகிறேன்] என்றான்” (யாத்திராகமம் 33:18).

நீங்கள் அமரலாம். ஜான் சாமுவேலின் போதனை உங்களுக்கு நினைவிலிருந்தால், “ஜெபத்தில் ஒழுங்கு மற்றும் வாதாடுதல்” என்ற போதனை, யாத்திராகமம் 32 மற்றும் 33 அதிகாரங்களில், அப்படிப்பட்ட அநேக ஜெபங்கள் இருப்பதை காணலாம். மோசே தேவனிடம், வசனம் 15 மற்றும் 18ல் உச்சநிலையில் ஜெபித்தார். 15ம் வசனத்தில் மோசே சொல்லுகிறார், “உம்முடைய சமுகம் என்னோடே கூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.” 18ம் வசனத்தில் மோசே சொல்லுகிறார், “அப்பொழுது அவன் உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.” “மகிமை” என்ற எபிரெய வார்த்தை காவோடு என்பதாகும், எழுத்தளவில் இதன் பொருள் “தேவனுடைய கனம்” என்பதாகும். அந்த “கனத்தை” எனது வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் ஒரு சில முறைகள் உணர்ந்திருக்கிறேன். நான் 15 வயது இருக்கும்போது பாரஸ்டு லாவான் அவர்களுடைய கல்லறையில் புல்லின்மீது பேன்டிங் வைத்தபோது, ஒரு சால்வையைப்போல மெதுவான தேவனுடைய கனம் என்மேல் இறங்கி வந்ததை நான் உணர்ந்தேன். மூன்று வித்தியாசமான எழுப்புதல்களில் நான் சாட்சியாக இருந்திருக்கிறேன், அந்த காவோடை என்னை சுற்றிலும் இருந்த காற்றில் என்னால் உணர முடிந்தது. பிரைன் எச். எட்வர்டு சொன்னார், “தேவனுடைய ‘பிரசன்னம்’ மனித விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது, ஆனால் எழுப்புதலின் அனுபவங்களில் அது அபூர்வமானதாக கணக்கிடப்பட்டிருக்கிறது” (Revival: A People Saturated With God, p. 136). “ஆதாம் மற்றும் ஏவாள் தேவனுடைய பிரசன்னத்துக்கு மறைத்துக்கொண்டார்கள், மற்றும் காயின் ‘தேவனுடைய பிரசன்னத்தை விட்டு வெளியே போனான்’” (ibid., p. 135). “எழுப்புதலில் தேவனுடைய பிரசன்னம் தொட்டுணரும் [தொடக்கூடிய] அனுபவமாக மாறுகிறது’” (ibid., p. 134). “எழுப்புதலில் [தேவனுடைய பிரசன்னம்] மிகவும் வெளிப்படையாக அந்த நேரங்களில் அனலூட்டுவதாக இருக்கிறது (ibid., p. 135).

“எழுப்புதல் என்றால் என்ன என்று புரிந்து கொள்வதற்கு இது திறவுகோலாக இருக்கிறது. இன்று ஆராதனையில் குறைவாக உள்ள ஒரு பகுதி இருக்குமானால், அது தேவனுடைய பிசன்னத்தை உணர்தல்... அதனால்தான் ஆராதனையில் நாம் மிகவும் கவனக்குறைவாக நடந்து கொள்ள முடிகிறது. எழுப்புதலில் பரிசுத்த ஆவியானவன் ஆழமான வேலை தேவன் பிரசன்னராகி இருக்கிறார் என்ற அனுபவத்தை எப்பொழுதும் நமக்கு உணர்த்துவதாகும்... எழுப்புதல் வித்தியாசமானது. தேவன் அங்கே இருந்தது அறியப்பட்டது, மற்றும் அவிசுவாசிகளும்கூட அதை கட்டாயமாக ஒத்துக்கொண்டார்கள் ‘தேவன் மெய்யாகவே உங்கள் நடுவில் இருக்கிறார்,’ I கொரிந்தியர் 14:25” (ibid., p. 134). “தேவனுடைய ஆவி [இறங்கி] வரும்பொழுது அவர் சபையின் ஜெபங்களை எடுத்துக் கொள்ளுகிறார் மற்றும் அவர்களுக்குள் புதிய ஜீவனை ஊதுகிறார்” (ibid., p. 129). “எழுப்புதலில், ஜெபமானது மகிழ்ச்சியாக மற்றும் உற்சாகமானதாக மாறுகிறது” (ibid., p. 128) அறிக்கைக்குப் பிறகு கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் ஒரு புதிய சுத்திகரிப்புக்குக் கொண்டுவரப்படுகிறார்கள்.

செக்ஸோனியில், “ஒரே நேரத்தில் கிறிஸ்துவின் அருகாமையின் உணர்வு எங்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது... தேவன் [அங்கே] என்னசெய்தார் என்பதை, அந்த நேரத்திலிருந்து அந்த வருடத்தின் மழைகாலம் வரைக்கும், அது விவரிக்க முடியாத அளவுக்கு இருந்தது. அந்த இடம் முழுவதும் மனிதரோடு தேவனுடைய ஆசாரிப்புக் கூடாரமாக காட்சியளித்தது” (ibid., p. 135). கொரியாவில், 1907ல், “சபைக்குள் பிரவேசித்த பொழுது ஒவ்வொருவரும் [நபரும்], அந்த அறை முழுவதும் தேவனுடைய பிரசன்னத்தினால் நிறைந்திருந்ததை உணர்ந்தார்கள்... அந்த இரவில் விவரிக்க முடியாத அளவுக்குத் தேவனுடைய அருகாமையின் உணர்வு காணப்பட்டது” (ibid., p. 135, 136).

1980 நவம்பர் மாதம் என்னுடைய ஒரு நண்பரும் நானும் முர்பிரிபாரோ, டெனீசிக்கு டாக்டர் ஜான் ஆர். ரைஸ் அவர்களை நாங்கள் செய்துகொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நேர்காணலுக்காக சென்றோம். டாக்டர் ரைஸ் அவர்கள் மிகவும் வயதாகி, ஒரு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். 85 வயதான அவர் ஒரு சக்கர நாற்காலியில் வைத்து எங்களை பார்க்க அழைத்துவரப்பட்டார். அவர்கள் அவரை உள்ளே நகர்த்தி வரும்பொழுது, எனது நண்பரும் நானும் “காவோடு” ஒரு எளிமையான பாரத்தைப்போல காற்றில் இறங்கி வந்ததை உணர்ந்தோம். நான் பார்த்த மூன்று பழங்கால எழுப்புதல்களிலும் தேவன் இறங்கி வந்தார் ஏனென்றால் அது செய்யப்பட்ட வழியிலே சரியாக உணரப்பட்டது என்பதை நான் அறிந்திருக்கிறேன்.

அந்த நகரத்திலே நாங்கள் ஒரு புகைப்பட கருவியையும் ஒரு புகைபடம் எடுப்பவரையும் வாடகை எடுத்திருந்தோம். அந்தக் கேமராவை இயக்கி கொண்டிருந்தவர் ஒரு கத்தோலிக்க பின்னனியை சேர்ந்தவர், ஆனால் அவர் சபையை விட்டுவிட்டார். நாங்கள் டாக்டர் ரைஸ் அவர்களை நேர்காணல் செய்தபோது அந்த கேமராமேனுக்குக் கண்ணீர் தாடையில் வடிந்தது, டாக்டர் ரைஸ் அவர்கள் நிதானமாக அவர் நடத்தின பெரிய சுவிசேஷ ஊழியங்களை பற்றி பேசினபோது அவர் கண்ணீரை துடைத்துக்கொண்டே இருந்தார். அதன்பிறகு அந்த நேர்காணல் முடிந்தது மற்றும் அவர்கள் வெளியே உருட்டி டாக்டர் ரைஸ் அவர்களை ஒரு காருக்குக் கொண்டுபோனார்கள். எனது நண்பரும் நானும் அந்த கேமராமேனும் தனித்து விடப்பட்டோம். அவன் இன்னும் அழுதுகொண்டிருநதான். அவன் என்னிடம் டாக்டர் ரைஸ் அவர்களைப்பற்றி கேட்டான், அவர் ஒரு பெரிய தேவமனிதன் என்று அவனுக்கு விளக்கினேன். நான் பேசினபோது, இன்னும் அதிக அளவில் தேவனுடைய பிரசன்னம் வளருவதை என்னால் உணரமுடிந்தது. அந்த மனிதன் அழுதுகொண்டிருந்தான். நான் சொன்னதெல்லாம், “இயேசு உன்னை நேசிக்கிறார். அவரை நம்பு மற்றும் அவர் உன்னுடைய பாவங்களிலிருந்து உன்னை சுத்தம் செய்வார்.” வேறொன்றும் நான் சொல்ல வேண்டியதாக இருக்கவில்லை. அவன் தனது முழங்கால் ஊன்றினான் மற்றும் தனது கண்களில் கண்ணீர் வழிய மற்றும் இயேசுவை நம்பினான். அது மிகவும் எளிதாக இருந்தது ஏனென்றால் அங்கே தேவனுடைய பிரசன்னம் இருந்தது. நான் ஒரு வேதவசனத்தை நினைத்தேன், “கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” (II கொரிந்தியர் 3:17). வந்து பார்ப்பவர் மாற்றப்படுவது, அதுவும் முதலாவது வந்து பார்ப்பவர், டாக்டர் ஜான் ஆர். ரைஸ் அவர்கள் பெற்றிருந்ததைபோல தேவனுடைய ஆவியின் வல்லமை நமக்கு இருந்திருந்தால் மற்றப்படுவது எவ்வளவு எளிது என்று நான் அறிந்திருக்கிறேன்!

ஆனால் தேவனுடைய பிரசன்னத்தை பெற்றிருப்பதில் இன்னொரு பெரிய நன்மை உண்டு. அது பரலோகத்தின் ஒரு முன்ருசியாகும். இப்பொழுது பரலோகம் உங்களில் அநேகருக்கு மெய்யல்ல என்று காணப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால் தேவனுடைய “காவோடு” நமது சபையில் இரங்கி வருமானால், மற்றும் அது உன்னை தொடுமானால், பரலோகத்துக்குப் போவதுபோல என்றால் என்ன என்று நீங்கள் உணருவீர்கள். அது ஒரு “தெய்வீக மகிமையின் முன்ருசியாக” இருக்கும். பரலோகத்தை இல்லாத ஒன்றைப்போல இனிமேலும் நினைக்கமாட்டாய். நீ எங்கள் சபைக்குள் நுழையும்பொழுது, நீ எழுத்தின்படியாக பரலோகத்தின் மெய்யான சந்தோஷத்தின் மெய்தத்துவத்தை “ருசிப்பாய்”. அதன்பிறகு உன்னால் ஜான் டபல்யு. பீட்டர்சன்னின் சிறிய பாடலை மிகுந்த மகிழ்ச்சியோடு பாடமுடியும் !

சிலுவையில் எனது இரட்சகர் என்னை முழுமையாக செய்த பொழுது,
பரலோகம் இறங்கிவந்தது மற்றும் மகிமை என் ஆத்துமாவை நிரப்பினது.
என் பாவங்கள் கழுவப்பட்டன, எனது இரவு பகலாக திரும்பினது –
பரலோகம் இறங்கிவந்தது மற்றும் மகிமை என் ஆத்துமாவை நிரப்பினது.
(“Heaven Came Down” by John W. Peterson, 1921-2006).

நான் இப்பொழுது ஒழுங்கில்லாத, காட்டுத்தனமான அதிதீவிர மதவெறியுள்ள சில பெந்தகோஸ்துகளைபற்றி, அல்லது தவறான யோசனைகொண்ட கரிஸ்மேட்டிக்கைபற்றி பேசவில்லை. ஓ, இல்லை! அவர்கள் அடிக்கடி தேவனுடைய ஆவிவருவதற்காக டிரம்களை அடித்து அல்லது பாஷைகளை பேசுவார்கள். அவர்கள் நன்றாக அர்த்தப்படுத்தலாம், ஆனால் அது தேவன் கூட்டங்களில் இறங்கிவருவது அது அல்ல மற்றும் 1905ல் பெந்தகொஸ்த்தின் ஆரம்பத்தில் முன்னதாக மக்களை கலக்கினார்கள். நாம் பழைய வழிக்குத் திரும்பி போகவேண்டியது அவசியம் – ஏனென்றால் பழையவழிதான் உண்மையானவழி – மற்றும் அது இன்னும் அந்த உண்மையான! வழி

நாம் காவோடு கீழே இறங்கி நம்மிடம் வரும்படியாக தரையில் விழும்படியாக, ஒருவேளை தேவன் இறங்கி வரும்போது யாராவது தரையிலே விழலாம். ஆனால் நாங்கள் அதிகமான சாரீரகிளர்ச்சியினால் மக்கள் நடுங்குவதில் மகிழ்ச்சி அடைவதில்லை. ஓ, இல்லை! நாங்கள் கிறிஸ்தவ மக்கள் வாழக்கைகளை பாவபய உணர்வு பற்றிக்கொள்ளும்போது, அவர்கள் பாவத்துக்கு வெட்கப்பட்டு, ஆனால் பாவம் தேவனிடம் அறிக்கை செய்யப்பட வேண்டியது அவசியம் – குற்றங்கள் ஒருவருக்கொருவர் அறிக்கை செய்யப்பட வேண்டியது அவசியம், நாம் ஆவிக்குரியபிரகாரமாக நம்முடைய பரலோக பிதாவாகிய, தேவனால் குணமாக்கப்படலாம்! தயவுசெய்து எழுந்து நின்று பல்லவி எண் 10ஐ உங்கள் பாட்டுதாளிலிருந்து பாடவும்.

“தேவனே, என்னை ஆராய்ந்து,
என் இருதயத்தை அறிந்துகொள்ளும்;
என்னைச் சோதித்து,
என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
என் இருதயத்தை அறிந்து கொள்ளும்;
என்னைச் சோதித்து,
என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ
என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.”
(சங்கீதம் 139:23, 24).

நீங்கள் பயப்பட வேண்டாம் ! தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் அறிக்கை செய்யும்பொழுது அவர் உங்களை நியாயந்தீர்க்கமாட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். உங்கள் பாவம் எவ்வளவு கெட்டதாக இருந்தாலும் பரவாயில்லை, தேவன் அதை குணமாக்க முடியும். இயேசுவின் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்ய முடியும். இங்கே மேடைக்கு முன்பாக இறங்கி வாருங்கள். இரண்டு இரண்டுபேராக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொள்ளுங்கள். இந்த இரவில் ஒரு அறிக்கையிட்டு ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நான் உங்களை நேசிக்கிறேன்! தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்! இங்கே நீங்கள் அதிகமாக நேசிக்கப்படுவீர்கள் நீங்கள் இந்த இரவில் என்ன சொன்னாலும் பரவாயில்லை, உங்களை நேசிப்பதை நாங்கள் நிறுத்திக்கொள்ள மாட்டோம்! எங்களை நம்புங்கள் நீங்கள் பயப்பட வேண்டாம். இயேசுவிடம் திரும்பி வாருங்கள், திரும்பி வாருங்கள் மற்றும் உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள் அதனால் நமது இரட்சகராகிய, இயேசுவின் இரத்தத்தினால் சுத்தமாவீர்கள். அதன்பிறகு நீங்கள் இளமையாக இல்லாவிட்டாலும், இன்று மாலை நீங்களும் வரலாம். நான் மேடைமீது இரண்டு நாற்காலிகளை போட்டு வைப்பேன். உங்கள்அறிக்கை பொதுப்படையாக இருக்க வேண்டாமென்று நீங்கள் நினைத்தால், நேராக இங்கே வாருங்கள் அதைபற்றி என்னிடம் சொல்லுங்கள், மற்றும் அதை கொடுக்க வேண்டியது அவசியமா என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும்.

நமது சகோதரர் ஜேக் நாஹன் என்னுடைய 76வது பிறந்த நாளுக்காக கீழ்கண்ட வார்த்தைகளை எழுதி இருக்கிறார்.

அன்புள்ள டாக்டர் ஹைமர்ஸ் அவர்களே,

     இந்த வருடங்களிலெல்லாம் நீங்கள் உண்மையாக இருந்ததற்காக நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் அடிக்கடி நினைத்தேன் இந்தப் பெரிய நெருக்கடியான காலத்தில் ஒரு கையளவான மீதி இருக்கிறது [குறைந்த பட்சம் ஒருபகுதியில்] ஏனென்றால் தேவன் உங்களை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்… நீங்கள் பிரசங்கிக்கும் சத்தியம் எழுப்புதலின் அக்கினியை ஏற்றிவைக்க உதவியாக இருக்கும் ஒரு நல்ல பகுதியான பொறியாக இருக்கலாம்... உங்கள் ஊழியம் தொடர்ந்து மலரட்டும், உங்கள் பிரசங்கம் [வலைதளத்தில்] நித்தியம் வரைக்கும் பிரதிபலிப்பதாக. போதகரே, நான் உங்களை நேசிக்கிறேன்.

கிறிஸ்துவில் உங்களுடைய,
ஜேக் நாஹன்

P. S. அப்படியாக, “கிறிஸ்துவில் உங்களுடைய” என்ற வார்த்தைகளில் நாங்கள் முடிப்பதற்கு காரணம் உங்கள் ஊழியம் [கிறிஸ்துவின் இரட்சிப்பில் எங்களை நடத்துகிறீர்].

நமது சபைக்காக மற்றும் உங்கள் ஒவ்வொருவருக்காக நான் ஆழமாக கவலைப்படுகிறேன், என்று சகோதரர் ஜேக் நாஹன் அறிந்திருக்கிறார். அதனால்தான் எழுப்புதலின் தேவையை நான் வலியுருத்துகிறேன். மாற்றப்பட்ட சாட்சியை மட்டுமே சார்ந்து கொண்டிருந்தால் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒருவரும் வெற்றியுள்ளவர்களாக இருக்க முடியாது. நீங்கள் கிருபையில் வளர வேண்டும் – மற்றும் அது சிலநேரங்களில் வேதனையாக இருக்க முடியும். உங்கள் வாழ்க்கையில் உங்களை பற்றிப்பிடிக்கும் பாவங்களால் மற்றும் குற்றங்களால் நீங்கள் எதிர்கொள்ளப்பட்டீர்கள். நீங்கள் இந்தப் பாடலை நினைக்க விரும்பவில்லை, “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும், என்னைச் சோதித்து என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும், வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து...” ஆனால் நீங்கள் அதைப்பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அது வேதனையுள்ளதாக இருந்தாலும், உங்களை நீங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. உங்கள் பாவங்களை அறிக்கையிட மற்றும் இயேசுவின் இரத்தத்தினால் மறுபடியுமாக சுத்திகரிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதன்பிறகு தேவனுடைய பிரசன்னத்தை, அந்த காவோடு, தேவனுடைய எழுப்புதலின் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை நீங்கள் அனுபவிக்கலாம்!

“உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும், நான் கெஞ்சுகிறேன்.”

தேவன் மோசேக்கு பதில் கொடுத்தது போல உனக்கும் பதில் தருவார் ஜெபம் பண்ணு மற்றும் அறிக்கை செய்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. கிரிங்டன் எல். சான்: ஏசாயா 64:1-3.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“May Jesus Christ be Praised” (translated by Edward Caswall, 1814-1878).