Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
எழுப்புதல் தள்ளுதலை குணமாக்குகிறது

REVIVAL CURES REJECTION
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஆகஸ்ட் 9, 2017 புதன் கிழமை மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Wednesday Evening, August 9, 2017

“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” (I யோவான் 4:18).


ஒரு பிரசித்தி பெற்ற மனோதத்துவ நிபுணர் பயங்களைப்பற்றிய 288 பட்டியல் அடங்கிய ஒரு புத்தகம் எழுதினார், மக்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் பயங்கள் – 288 விதமான பயங்கள்! பொதுவாக அதிகமான அளவில் காணப்படும் ஆறு பயங்களாவன தள்ளப்படுவோமோ என்ற பயங்கள், மரண பயங்கள், வயோதிகத்தின் பயங்கள், வறுமையின் பயங்கள், நோய்களின் பயங்கள், மற்றும் பரியாசத்தின் பயங்கள். அந்த மனோதத்துவ நிபுணர் சொன்னார், “தள்ளப்படுவோமோ என்ற பயம் பயங்களிலெல்லாம் மிகப்பெரிய பயமாகும். தள்ளப்படுவோமோ என்ற பயம் மரண பயத்தைவிட பலமானதாகும்!” சற்று யோசித்துப்பாருங்கள்! மக்கள் தள்ளப்படுவதைவிட மரித்துவிடுவார்கள்!

டாக்டர் கிறிஸ்டோபர் கேஹன் மற்ற எல்லாரையும்விட என்னை அதிகமாக அறிந்தவர். அவர் சொன்னார், “டாக்டர் ஹைமர்ஸ் ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்க்கப்படவில்லை. அப்படி இருந்திருந்தால் அவர் அதிகமாக வெளியே செல்பவராக மற்றும் இயல்பானவராக இருப்பார். ஆனால் அவருடைய எல்லா இயக்கங்களும் மற்றும் கழிவுகளும் அவரை அதிகமான உள்நோக்குள்ளவராக – உள்ளாக பார்க்கும் ஒருவராக மாற்றிவிட்டது. அவரை நீங்கள் உள்நோக்குள்ளவராக நினைக்காமல் இருக்கலாம் ஏன் என்றால் நன்றாக பிரசங்கிக்கிறார். ஆனால் உள்ளே அவர் நுட்பமான நபர், தமது சொந்த பெலவீனங்களைப்பற்றி விழிப்பாக இருப்பவர்.” டாக்டர் கேஹன் சொன்னது சரி. நான் மகிழ்ச்சியான மக்களின் கூட்டத்தில் இருக்கமுடியும், அவர்களது கூட்டுறவில் மகிழ்வேன், எனது மனநிலை உடனடியாக மாறும்பொழுது எனக்குள் தனிமை மற்றும் தள்ளல் மற்றும் மனஅழுத்தத்தின் வேதனை மற்றும் வலியை உணர்வேன். நான் தள்ளப்பட்டதை உணராத ஒரே நேரம் தனிமையான நேரம் அல்லது தேவனுடைய பிரசன்னத்தை உணர்ந்த நேரம் அப்பொழுதுதான் நான் தள்ளப்பட்டதாக உணர்வதில்லை.

சபையில் நான் வீட்டைப்போல மெய்யாகவே உணர்ந்த நேரங்கள் எழுப்புதலின் நேரங்கள் – தேவன் மெய்யானவராக இருந்த பொழுது என்னுடைய தள்ளல் மற்றும் தனிமையின் உணர்வை வெளியே தள்ளிவிட்டார்.

அதனால்தான் இளம் மக்கள் சபைக்கு வரும்பொழுது எப்படி உணருவார்கள் என்பதை நான் நன்றாக புரிந்துகொண்டிருக்கிறேன். நாம் அவர்களை ஏற்றுக்கொள்ளுகிறோம் மற்றும் அன்புகாட்டுகிறோம். ஆனால் அவர்கள் சில தடவைகள் வந்தால் அவர்கள் “உள்ளே” இருக்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். அவர்கள் இப்பொழுது சரியாகிவிட்டார்கள் என்று நாம் நினைக்கிறோம். விரைவில் அவர்கள் வருவதற்கு முன்பாக இருந்ததைபோல ஒதுக்கப்பட்டவர்களாக மற்றும் கழிக்கப்பட்டவர்களாக உணருகிறார்கள். ஏற்றுக்கொள்ளப்படவில்லையானாலும் பரவாயில்லை என்று உணருகிறவர்கள் நிலைக்கிறார்கள். நான் செய்ததைபோல அவர்களும் தங்குகிறார்கள். நான் தள்ளப்பட்டதாக உணர்ந்தாலும், நான் சபையில் தங்கினேன் ஏனென்றால் போவதற்கு வேறு இடமில்லை. நான் தனிமையாக இருந்தேன், ஆனால் சபையில் ஏராளமான மக்கள் இருந்தார்கள். அதனால் தள்ளப்பட்டவனாக மற்றும் உள்ளான வேதனையை நான் உணர்ந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாக நடித்தேன். ஞாயிற்றுக்கிழமை இரவுகளில், நான் வீட்டிற்குச் சென்றபொழுது, தள்ளப்பட்ட உணர்வு ஏறக்குறைய நிரம்பி வழியும். நான் வீட்டை நெருங்கும்பொழுது ஒரு பிரபலமான பாடலின் வார்த்தைகள் எனது மனதில் நுழைந்தது, “மறுபடியும் தனிமை, இயற்கையாக.”

சபையில் ஒரு இளம் நபர் வரவேற்பை மற்றும் அன்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார், ஆனால் அவர்கள் குளிர்ச்சியையும் கழிவையும் மட்டுமே காண்கிறார்கள். சபை வாக்குப்பண்ணினதை கொடுக்க தவறின காரணத்தினால் ஏறக்குறைய சபையைவிட்டுப்போன எல்லா இளம் மக்களும் அப்படியே போய்விடுகிறார்கள். நாம் பாடுகிறோம்

சபையாகிய வீட்டுக்கு வா மற்றும் சாப்பிடு,
இனிமையான ஐக்கியத்தில் வந்து கூடு,
நாம் சாப்பிட கீழே உட்காரும்பொழுது
இது ஒரு விருந்தைபோல இருக்கும்.

இப்படி நாம் பாடுவதை அவர்கள் கேட்கிறார்கள் மற்றும் அவர்கள் சிடுசிடுப்பாக உணருகிறார்கள். சபையை பற்றிய பரிகாசமான ஒரு குணாதிசியத்தை அவர்கள் வளர்க்கிறார்கள். அவர்கள் முகங்களில் ஒரு சிடுசிடுப்பான புன்னகை இருக்கிறது ஏன் என்றால் நாம் “இனிமையான ஐக்கியம்” என்பதாக பொய்யாக இருக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். “நாம் சாப்பிட கீழே உட்காரும்பொழுது ஒரு விருந்தைபோல இருக்கும் இனிமையான ஐக்கியத்தை” அவர்கள் உணருவதில்லை. அவர்கள் நினைக்கிறார்கள், “இந்த மக்கள் ‘இனிமையான ஐக்கியத்தை’ பற்றி பேசுகிறார்கள் ஆனால் அவர்கள் அதை உணருவதில்லை. டாக்டர் ஹைமர்ஸ் கூட அதை உணரவில்லை.” அதனால், அவர்கள் உலகத்திற்குப் போய்விடுகிறார்கள். அவர்கள் உலகத்திற்குத் திரும்பி போய்விடுகிறார்கள் ஏனென்றால் அது அவர்களுக்குச் சபையைவிட ஒன்றும் அதிகமாக உணருவதில்லை. குறைந்த பட்சம் “இனிமையான ஐக்கியத்தை” பற்றி இந்த உலகம் பொய்ச் சொல்லுவதில்லை. குறைந்த பட்சம் இந்த உலகத்திலே உன்னை ஏற்றுக்கொள்ளும் ஒரு நண்பனை காணமுடியும். சபையில் ஒருபோதும் உன்னால் காணக்கூடாத ஒன்றாக இருக்கிறது. இங்கே நீ காண்பதெல்லாம் மாய்மாலம் மற்றும் குளிர்ந்த தன்மை, மற்றும் தள்ளப்படுதல் ஆகும்.

கிறிஸ்தவனின் அன்பை சபையில் இல்லாதபடி செய்வது என்ன? கிறிஸ்தவனின் உண்மையான அன்பை நம்மிடமிருந்து திருடிக்கொள்ளுவது பயம் ஆகும். அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? அவர்கள் என்னைப்பற்றி என்ன சொல்லுவார்கள்? அவர்கள் என்னைப்பற்றி மெய்யாகவே அறிந்தார்களா? அவர்கள் என்னைப்பற்றி மெய்யாகவே நான் என்ன நினைத்தேன் அல்லது நான் என்ன உணர்ந்தேன் என்று அறிந்தார்களா? அவர்கள் என்னை தள்ளிவிட்டார்கள் – அதைதான் அவர்கள் செய்தார்கள்! தள்ளப்படுவோமோ என்ற பயம் பயங்களிலெல்லாம் மிகப்பெரிய பயமாகும் – தள்ளப்படுவோமோ என்ற பயம் மரண பயத்தைவிட பலமானதாகும்! தள்ளப்படுவோமோ என்ற பயம் வியாதி பயத்தைவிட பலமானதாகும். தள்ளப்படுவோமோ என்ற பயம் இந்த பரந்த உலகத்திலுள்ள மற்ற எந்த பயத்தைவிட பலமானதாகும்!

பாடற்கவிஞராகிய ராபர்ட் ப்ரோஸ்ட் இதை பரிபூரணமாக தெரியப்படுத்தினார். அவருடைய கவிதைகள் “வெளிப்படுத்தல்” என்று அழைக்கப்படுகின்றன.

நமக்காக நாம் ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டோம்
தொந்தரவு மற்றும் பரிகாசம் என்னும் எளிய வார்த்தைகளுக்கு பின்னால்,
ஆனால் ஓ, நமக்கு கலக்கப்பட்ட இருதயம்
நம்மை யாராவது மெய்யாகவே வெளியில் கண்டுபிடிக்கும் வரையிலும்.

இந்த காரியம் தேவைப்படும்போது பரிதாபமாக இருக்கிறது
(அல்லது அப்படி நாம் சொல்லுகிறோம்) அதன் முடிவிலே
ஒரு நண்பனைப்பற்றி புரிந்துகொள்ள செய்ய உணர்த்தும்படி
நாம் நல்ல இலக்கிய நயத்தோடு பேசுகிறோம்.

ஆனால் நம் அனைவருக்குள்ளும், குழந்தை விளையாட்டு
ஓளிந்து கொள்ளுதல் மற்றும் கண்டுபிடித்தல் தேவன் தூரத்தில்,
அப்படியே நாம் அனைவரும் நல்ல தூரத்தில் இருக்கிறோம்
அவர்கள் எங்கே என்று அவசியம் பேசு அல்லது எங்களுக்கு சொல்லு.
(“Revelation” by Robert Frost, 1874-1963).

மற்றும் அது நம்மை நமது பாடத்திற்கு அழைத்து வருகிறது.

“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” (I யோவான் 4:18).

தள்ளுதலின் பயத்தை நாம் எப்படி வெற்றி கொள்ளுவோம்? பரிபூரண அன்பின் மூலமாக! ஆனால் “பரிபூரண” அன்பை நாம் எப்படி பெறமுடியும்? இப்படியாக சொல்லுவதினால் அல்ல “நான் உன்னை நேசிக்கிறேன்! நான் உன்னை நேசிக்கிறேன்!” I யோவான் 3:18ஐ பாருங்கள், “என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.” இதை நாம் எப்படி செய்கிறோம்? அது சுலபமல்ல. அதை செய்ய நாம் பயப்படுகிறோம். நாம் தள்ளிப்போடப்பட வேண்டும்!!! ஆனால் நமக்கு மெய்யாகவே மற்றும் உண்மையாகவே எழுப்புதல் வேண்டும் என்றால் நாம் அதை செய்தாக வேண்டியது அவசியமாகும். நம்மை நாமே கட்டாயப்படுத்தி அதை செய்ய வேண்டும். “ஒரு நண்பனைப்பற்றி புரிந்துகொள்ள மற்றவர்களை உணர்த்தும்படியாக நாம் நல்ல இலக்கிய நயத்தோடு பேசுகிறோம்.” “அப்படியே நாம் அனைவரும் நல்ல தூரத்தில் [தங்களைத் தாங்களே] ஒளிந்து கொண்டு அவர்கள் எங்கே என்று பேசு அல்லது எங்களுக்குச் சொல்லு என்று அவசியமாக கேட்கும் நிலையில் இருக்கிறோம்”. நமக்கு மெய்யாகவே எழுப்புதல் வேண்டுமானால் அந்த வெளிப்பாடுதான் நமக்கு அவசிமாக இருக்கிறது! தயவுசெய்து I யோவான் 1:9 மற்றும் 10ஐ வாசியுங்கள். நான் அதை படிக்கும்போது எழுந்து நில்லுங்கள்.

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்ய வில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்கு கிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது” (I யோவான் 1: 9, 10).

நீங்கள் அமரலாம். எழுப்புதலின் திறவுகோல் நமது பாவங்களை அறிக்கை செய்வதாகும். நாம் தேவனுக்கு விரோதமாக பாவஞ்செய்திருந்தால் கண்ணீரோடு நமது பாவங்களை அவரிடம் அறிக்கை செய்வது போதுமானதாகும். வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல, ஆனால் கண்ணீரோடு, சீனாவிலே அவர்கள் செய்ததுபோல, உண்மையான எல்லா எழுப்புதல்களிலும் செய்ததுபோல. பிரைன் எட்வர்டு சரியாக சொன்னார், “கண்ணீரோடு கூடிய உணர்த்துதல் இல்லாவிட்டால் எழுப்புதல் என்ற ஒரு காரியம் இல்லை” (Revival, p. 115). மறுபடியும், அவர் சொன்னார், “பாவத்தைக்குறித்த ஆழமான, அசௌகரியமான மற்றும் தாழ்த்தக்கூடிய உணர்த்துதல் இல்லையானால் அங்கே எழுப்புதல் இல்லை” (p. 116). “ஆழமான உணர்த்துதலின் காரணம் மக்கள் பாவத்தை உணர்ந்து மற்றும் அதை வெறுக்க வேண்டும் என்பதுதான்” (p. 122). பாவ உணர்த்துதல் எழுப்புதலின் திறவுகோல்! நாம் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்திருந்தால், நாம் தேவனிடம் கண்ணீரோடு அறிக்கை செய்ய முடியும், மற்றும் அவர் “எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பார்.” எழுந்து நின்று பாடுவோம், “தேவனே, என்னை ஆராய்ந்து பாரும்”.

“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்கீதம் 139:23, 24).

நீங்கள் அமரலாம். நாம் முழுமையான எழுப்புதலை பெற்றுக்கொள்ளவில்லை ஏன் என்றால் நாம் எப்பொழுதும் “தொந்தரவு மற்றும் பரிகாசம் (ஏளனம், அவமதிப்பு, அலட்சியம், அதைப்பற்றி ஜோக் அடிப்பது) என்னும் எளிய வார்த்தைகளுக்குப் பின்னால் நமக்காக நாம் ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டோம்”

ஆனால், இரண்டாவதாக, நாம் இன்னும் ஆழமாக போகவேண்டியது அவசியமாகும். யாக்கோபு 5:16க்கு திருப்பிக் கொள்ளுங்கள். நான் அதை படிக்கும்பொழுது தயவுசெய்து எழுந்து நிற்கவும்.

“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்” (யாக்கோபு 5:16).

நீங்கள் அமரலாம். மேத்தியு ஹன்றி சொன்னார்,

இங்கே தேவையான அறிக்கையானது கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர்.... நமது ஒப்புறவாகுதலுக்கு அறிக்கையிடுதல் அவசியமாகும் அதன்மூலமாக நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் நீங்க ஒருவருக்கொருவர் தங்கள் ஜெபங்கள் மூலமாக பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவைகளின்மீது வல்லமை கிடைக்கும்படியாக உதவி செய்து கொள்ளலாம். ஒருவருக்கொருவர் தங்கள் குற்றங்களை அறிக்கையிடுபவர்கள் ஒருவருக்காக மற்றவர் ஜெபிக்க வேண்டியது அவசியமாகும்.

அப்லைடு புதிய ஏற்பாட்டு விளக்கவுரையில் யாக்கோபு 5:16ல் இந்த கருத்து தரப்பட்டுள்ளது,

உண்மையான ஐக்கியத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நமது பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட வேண்டும். நாம் இதை செய்யும்பொழுது ஆவிக்குரிய குணமாகுதலை பெற்றுக்கொள்ளுகிறோம். நாம் ஒருவருக்கொருவர் காரியங்களை மறைக்க வேண்டிய அவசியமில்லை.

ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கு நேராக குற்றங்கள் உண்டு. நமது சுயத்தை சுதந்தரித்துக்கொண்ட காரணத்தினால் நாம் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அன்பில் மெதுவாக பின்வாங்குகிறோம். சபையில் யாராவது ஒருவர் உன்னிடம், அல்லது உன்னைப்பற்றி ஒரு அன்பற்ற வார்த்தை சொல்லுகிறார். யாராவது ஒருவர் உன்னைப்பற்றி கண்டு கொள்ளாததுபோல இருக்கிறார். யாராவது ஒருவர் நீ கர்த்தருக்காக செய்யும் வேலையை பாராட்டாமல் இருக்கிறார். யாராவது ஒருவர் உன்னை கவிழ்க்கும்படியாக சிலவற்றை செய்கிறார். யாராவது ஒருவர் உன் உணர்வுகளை காயப்படுத்துகிறார். நாம் ஒருவருக்கொருவர் குற்றங்களை மறைக்க கூடாது. தேவனுடைய பிரசன்னத்தை உடையவர்களாக இருப்பது மிகவும் விலையேறப்பெற்ற காரியமாகும். நமது காயங்கள் மற்றும் மனத்தாங்கல்களை வைத்திருப்பது ஒருவரையொருவர் நேசிப்பதை நிறுத்திவிடும். “இந்த ஆழமான பாவ உணர்த்துதல் வெளிப்படையான மற்றும் பொதுவான அறிக்கைக்கு நடத்தும்... தவறான உறவுகள் [உள்ளவர்கள்] சரியாவார்கள்... மகிமைக்கு மற்றும் மகிழ்ச்சிக்கு முன்பாக, உணர்த்துதல் இருக்கும், அது தேவனுடைய மக்களோடு ஆரம்பிக்கும். அங்கே கண்ணீர்கள் மற்றும் தேவனுக்கேற்ற துக்கம் இருக்கும். அங்கே தவறுகள் சரிசெய்யப்படும், இரகசிய காரியங்கள், மனித கண்களுக்கு அதிக தூரமானவைகள், தூக்கி எரியப்பட வேண்டியவைகள், மற்றும் கெட்ட உறவுகள் வெளிப்படையாக பழுதுபார்க்கப்பட வேண்டும். இதை [செய்ய] நாம் ஆயத்தமாக இல்லையானால், நாம் எழுப்புதலுக்காக ஜெபிக்காமல் இருப்பது நல்லது. எழுப்புதல் சபையின் மகிழ்ச்சி அனுபவிப்பதற்காக கொடுக்கப்படுவதல்ல, ஆனால் அதனுடைய சுத்திகரிப்புக்காக கொடுக்கப்படுவதாகும். இன்று நாம் பரிசுத்தமில்லாத சபையை உடையவர்களாக இருக்கிறோம் ஏன்என்றால் கிறிஸ்தவர்கள் பாவத்தை உணர்வதில்லை மற்றும் [ஒருவருக்கொருவர் கண்ணீரோடு அறிக்கை செய்வதில்லை]” (Edwards, Revival, pp. 119, 120).

நாம் கண்ணீரோடு நம்முடைய பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கை செய்யாவிட்டால் நமது இருதயஙங்களில் நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. இது சீனாவிலே மறுபடியும் மறுபடியுமாக நடந்தது. நமது சபையில் ஏன் நடக்க கூடாது? நமது குற்றங்களை அறிக்கையிடாமல் நாம் அதிக பெருமையுள்ளவர்களாக இருக்கிறோம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நாம் பயப்படுகிறோம். இந்தப் பயத்தைப் பயன்படுத்தி பிசாசு நாம் அறிக்கை செய்வதை தடுக்கிறான். மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று நாம் பயப்படும்படி செய்து எழுப்புதலின் சந்தோஷத்தை பெறாமல் நம்மை தடுக்க முடியும் என்று பிசாசுக்குத் தெரியும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நாம் பயப்படும்படி செய்து பெலவீனத்திலும் மற்றும் தீமையிலும் நமது சபையை வைக்க பிசாசுக்குத் தெரியும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நாம் பயப்படுவது நம்மை அறிக்கை செய்வதிலிருந்தும் ஆத்துமா குணமாகிறதிலிருந்தும் தடுக்கிறது. ஏசாயா சொன்னார், “சாகப்போகிற மனுஷனுக்கும்… பயப்படுகிறதற்கும், உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?” (ஏசாயா 51:12). வேதாகமம் சொல்லுகிறது, “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்” (நீதிமொழிகள் 29:25). தயவுசெய்து எழுந்து நின்று நீதிமொழிகள் 28:13ஐ வாசிக்கவும் . அது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 692ம் பக்கத்தில் உள்ளது. ஒவ்வொருவரும் அதை சத்தமாக வாசியுங்கள்!

“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதிமொழிகள் 28:13).

“தேவனே, என்னை ஆராய்ந்து பாரும்” – என்ற பாடலை பாடுங்கள்.

“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்கீதம் 139:23, 24).

“ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானவரே”! என்ற பாடலை பாடுங்கள்!

ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானவரே,
கீழே இறங்கி வாரும், நாங்கள் ஜெபிக்கிறோம்.
ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானவரே,
கீழே இறங்கி வாரும், நாங்கள் ஜெபிக்கிறோம்.
என்னை உருக்கும், என்னை உருவாக்கும்,
என்னை உடையும், என்னை வளையும்.
ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானவரே,
கீழே இறங்கி வாரும், நாங்கள் ஜெபிக்கிறோம்.
(“Spirit of the Living God” by Daniel Iverson, 1899-1977;
altered by the Pastor).

நீங்கள் அமரலாம்.

கிறிஸ்து சொன்னார் “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்.” தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மற்றும் அதற்காக அழுகிறவர்கள் என்பதை அது குறிக்கிறது. எழுப்புதலுக்காக ஏங்குகிறவர்களுக்குப் பாவம் ஒரு பெரிய பிரச்சனை ஆகும். உலகம் பார்க்கக்கூடாத உள்ளான பாவங்களை நாம் பார்க்கும்படியாக எப்பொழுதும் செய்கிறது எழுப்புதல். எழுப்புதல் நமது இருதயத்தில் உள்ள உள்ளான பாவங்களின்மீது வெளிச்சத்தை வீசுகிறது. எழுப்புதலுக்காக ஆயத்தப்படுத்த கூட்டங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும்பொழுது, ஏவன் ராபர்ட்ஸ் அவர்களுக்கு சொன்னார் மக்கள் ஆயத்தப்படுத்தப்படாவிட்டால் பரிசுத்த ஆவியானவர் கீழே இறங்கி வரமாட்டார். அவர் சொன்னார் “எல்லாவிதமான கெட்ட நினைவுகளில் இருந்தும் நாம் விடுவிக்கப்பட வேண்டும்” – சகலவித கசப்பு, எல்லா ஒத்துழையாமைகள், எல்லா கோபம். உன்னால் யாரையாவது மன்னிக்க முடியாது என்று நீ நினைத்தால், ஒரு மன்னிப்பின் ஆவிக்காக கீழே தாழ்த்தி மற்றும் ஜெபி – மற்ற மனிதர்களிடம் சென்று மன்னிப்பு கேள் – அப்பொழுது மட்டுமே தேவனுடைய இனிமையான பிரசன்னத்தை நீ உணர முடியும். தேவனுடைய அன்பான மற்றும் பரிசுத்த பிரசன்னத்தை சுத்தமான கிறிஸ்தவன் மட்டுமே உணர முடியும். நம்மைப்போன்ற ஒரு பரிசுத்தமில்லாத சபைக்கு நாம் நமது பாவத்தை ஒத்துக்கொண்டு மற்றும் அதை கண்ணீரோடு அறிக்கையிடாவிட்டால் எழுப்புதலின் சந்தோஷம் வரமுடியாது. அப்பொழுது மட்டுமே தேவனுடைய பிரசன்னத்தின் சந்தோஷத்தை நாம் உணர முடியும். நாங்கள் உங்களுக்கு ஞாயிறு இரவு அறிக்கையிட்டு ஜெபிக்க ஒரு தருணம் கொடுத்ததுபோல கொடுக்கிறோம் அப்பொழுது நமது சகோதரி “என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும்” பாடலை இசைப்பார்கள். ஞயிறு இரவு அறிக்கையிடாத எந்த பாவம் இன்னும் அறிக்கை செய்ய வேண்டியதாக இருக்கிறது என்பதை பரிசுத்த ஆவியானவர் உனக்கும் மற்றவர்களுக்கும் காட்டும்படியாக ஜெபிக்கவும். ஒருவரிடம் ஒருவர், இரண்டு இரண்டாக அல்லது மூவராக சேர்ந்த ஞாயிறு அன்று அறிக்கைகளுக்காக கேட்டபடி ஜெபிக்க செல்லவும். இப்பொழுது எழுந்து நின்று “என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும்” பாடலை பாடவும். அது 17ம் எண் பாடலாகும்.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், இரட்கரே, நான் ஜெபிக்கிறேன்,
   இயேசுவை மட்டும் இன்று நான் பார்க்கும்படி செய்யும்;
பள்ளதாக்கிலே நீர் என்னை நடத்தினாலும்,
   உமது மட்டற்ற மகிமை என்னைச் சுற்றிக் கொள்கிறது.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், எனது ஆசைகளை
   உமது மகிமைக்காக வையும்; என் ஆத்துமா வாஞ்சிக்கும்,
உமது பரிபூரணத்தாலும், உமது பரிசுத்த அன்பாலும்,
   பரத்திலிருந்து வரும் ஒளி என் பாதையில் பாய்ந்தோடும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், பாவமில்லாமலும்
   பாவத்தில் பிரகாசிக்கும் வெளிச்சத்தின் நிழலுமில்லாமலும்.
உம்முடைய ஆசிர்வதிக்கப்பட்ட முகத்தை மட்டும் பார்ப்பேனாக,
   உமது அளவில்லாத கிருபையினால் என் ஆத்துமாவுக்கு விருந்தளியும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,
   உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அனைவரும் பார்க்கட்டும்
   உமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிப்பதை.
(“Fill All My Vision” by Avis Burgeson Christiansen,1895-1985).

இப்பொழுது “நான் இதை மேலும் கடந்துபோக விரும்புகிறேன்” என்ற பாடலை பாடவும். இது உங்கள் பாட்டுத்தாளில் 18ம் பாடலாகும்.

அக்கினி தொடர்ந்து பற்றி எரிய ஒரு நெருப்பு பொறிமட்டுமே தேவை,
அதன் உஷ்ணத்தினால் சுற்றிலும் வெப்பம் விரைவில் பரவ முடியும்,
ஒருமுறை தேவனுடைய அன்பை நீ அனுபவித்துவிட்டால்,
அதுவும் அப்படியே பரவும்,
ஒவ்வொருவரிடமும் தேவனுடைய அன்பை நீயும்,
கடத்த வேண்டுமென்று விரும்புவாய்.

வசந்த காலம் எவ்வளவு ஒரு அற்புதமான காலம்,
எல்லா மரங்களும் தளிர்க்கும் பொழுது,
பறவைகள் பாட ஆரம்பிக்கும்,
மலர்கள் தங்கள் இதழ்களை விரித்து மலர ஆரம்பிக்கும்,
ஒருமுறை தேவனுடைய அன்பை நீ அனுபவித்துவிட்டால்,
அதுவும் அப்படியே மலரும்,
அதன் வசந்த புதுதன்மையை, நீ பாட விரும்புவாய்,
நீ அதை கடத்த வேண்டுமென்று விரும்புவாய்.

நான் கண்ட மகிழ்ச்சியை, என் நண்பனே,
நீ பெற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்,
நீ எங்கே கட்டப்பட்டிருக்கிறாய் என்பது காரியமல்ல,
நீ அவரை சார்ந்து கொள்ள முடியும்,
எனது உலகம் இதை அறிய வேண்டுமென்று,
நான் மலை உச்சிகளிலிருந்து சத்தமிடுவேன்,
கிறிஸ்துவின் அன்பு எனக்கு கிடைத்தது,
நான் அதை கடத்த வேண்டுமென்று விரும்புகிறேன்.
(“Pass It On” by Kurt Kaiser, 1969; altered by the Pastor).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Revive Us Again” (by William P. Mackay, 1839-1885).