Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
எழுப்புதலுக்காக இருதய அழுகை!

HEARTCRY FOR REVIVAL!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஜூலை 16, 2017 அன்று கர்த்தருடைய நாள் காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, July 16, 2017

“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரேமியா 33:3).


எரேமியா சிறையில் இருந்தார். யூதா மக்கள் சிறையாக கொண்டு போகப்படுவார்கள் என்று அவர் பிரசங்கித்தபடியினால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். எரேமியா நம்பிக்கையற்றவராக இருந்தார். தமது மக்கள் தேவனால் கைவிடப்பட்டார்கள் என்று அவர் நினைத்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார் மற்றும் தம்முடைய எல்லா நம்பிக்கையும் இழந்துவிட்டார். இப்பொழுது அவருடைய இருதயத்தில் கர்த்தர் பேசினார். தேவன் அவரிடம் சொன்னார்,

“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரேமியா 33:3).

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு போதனையை நான் பிரசங்கித்தேன் “எழுப்புதலின் ஜெப போராட்டம்! ” நாம் ஒரு பெரிய பொருளாதார கொள்கை என்ற பிசாசின் கீழ் இருக்கிறோம் என்று நான் சொன்னேன். நான் சொன்னேன், “தேவன் போய்விட்டார்! அவர் நமது சபைகளை விட்டுவிட்டார். அவர் நமது சபைகளை விட்டுவிட்டார்... ஆனால் தேவன் மறுபடியும் திரும்பி வர வேண்டுமென்று நாம் விரும்பவில்லை. நம்முடைய சோம்பலான நித்திரையானது பரிசுத்த ஆவியானவரை இல்லாதபடி செய்கிறது. தொடர்ந்து சொல்லப்பட்டவைகளை கவனியுங்கள். ஒரு கலக்குதல் ஏன் உண்டாக வேண்டும்? நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நமது சோம்பலினால் நாம் தூங்கி கொண்டே இருப்போம். நாம் கடினமான வேலைகளாகிய ஜெபம் மற்றும் உபவாசத்தில் தேவனுடைய பிரசன்னம் மற்றும் வல்லமையை தேட பின்செல்ல விரும்பவில்லை.” சில வாரங்களில் பதினேழு மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். டாக்டர் சென் திரும்ப சேர்க்கப்பட்டார் மற்றும் எழுப்புதல் அடைந்தார். ஜான் சாமுவேல் கேஹான் சுவிசேஷத்தை பிரசங்கிக்க சமர்ப்பணம் செய்தார். ஆரோன் யாஞ்ச் மற்றும் ஜேக் நாஹன் உதவிகாரர்களாக மாறினார்கள். கிரிஸ்டியான் நகுயான் மற்றும் திருமதி லீ ஜெப வீராங்கனைகளாக மாறினார்கள்.

நமக்கு எழுப்புதலின் ஒரு ‘தொடுகை’ கிடைத்தது. அந்த நாட்களில் டாக்டர் கேஹான் மற்றும் நானும் சேர்ந்து, தேவன் பிரசன்னராகி இருந்ததை மற்றும் மக்கள் இரட்சிக்கப்பட்டதை கற்றுக்கொண்டோம் ஆனால் தேவன் பிரசன்னராக இல்லாவிட்டால் ஒன்றுமே நடந்திருக்காது. ஆரோன் மற்றும் ஜேக் நாஹன் சில காரிங்களை கற்றுக்கொண்டார்கள். அவர்கள் ஜெபத்தில் பிசாசின் வல்லமைகளோடு எப்படி போராடுவது என்று கற்றுக்கொண்டார்கள். ஜேக் சொன்னார்,

‘நாங்கள் தேவனுடைய பிரசன்னத்திற்காக ஜெபிக்க ஆரம்பித்தோம். நான் இரண்டாவது முறை ஜெபிக்க ஆரம்பித்தபொழுது, என்னுடைய இருதயம் எளிதாக இருந்ததை நான் உணர்ந்தேன் மற்றும் சோர்ந்துபோன நிலைமையையும் உணர்ந்தேன். ஜெபங்களை நடத்துவது கஷ்டமாக இருந்தது. ஒரு பெரிய பிசாசின் ஆளுகையை நாங்கள் உணர்ந்தோம் மற்றும் என்னால் தொடர முடியவில்லை. நாங்கள் முழங்கால் படியிட்டோம் மற்றும் பிசாசின் பிரசன்னத்தை எடுத்து போடும்படி நாங்கள் ஜெபித்தோம் அப்பொழுது கிறிஸ்துவின் இரத்தத்தை கெஞ்சி பிராத்தித்தோம். நான் தரையில் முழங்குப்புற விழுந்தேன். நாங்கள் மூன்றாவது சுற்றில் இதே நிலைமையில் ஜெபிக்க ஆரம்பித்தோம் மற்றும் தேவன் பிசாசின் பிரசன்னத்தை மற்றும் மனச்சோர்வை தேவன் உடைத்து போட்டார் என்று உணர ஆரம்பித்தோம். நாங்கள் அந்த [மாலை கூட்டம்] ஜெபம் முக்கியமானதாக இருக்க போகிறது என்று அறிந்திருந்தோம். இது மாலை 4:00 மணிக்கு நடைப்பெற்றது.’

அந்த மாலை கூட்டத்துக்கு, இரண்டு மணிநேரங்களுக்கு பிறகு, திரு. வெர்ஜில் நிக்கல் கண்ணீரோடு முன்னுக்கு வந்தார், மற்றும் டாக்டர் கேஹான் கிறிஸ்துவுக்குள் அவரை நடத்தினார். இரண்டு மணிநேரங்களுக்கு முன்பாக ஆரோன் மற்றும் ஜேக்கிற்கு சாத்தானோடு ஏன் போராட்டம் இருந்தது என்று பிறகு அறிந்து கொண்டோம்!”

“ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபேசியர் 6:12).

ஆவிக்குரிய போராட்டங்களை ஜெபங்களின் மூலமாக வெற்றி பெறலாம்!

“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரேமியா 33:3).

“ஜெபத்தில் வல்லமை,” அதை எழந்து நின்று பாடவும்!

ஜெபத்தில் வல்லமை, கர்த்தாவே, ஜெபத்தில் வல்லமை,
   இங்கே ‘பூமியின் பாவம்’ துக்கம் மற்றும் கவலை மையங்கொண்டுள்ளது;
நம்பிக்கையற்ற ஆத்துமாக்களுக்கு, எழுப்புதல் வேண்டும் நமக்கு;
   ஓ வல்லமை எனக்குத் தாரும், ஜெபத்தில் வல்லமை!
(“Teach Me to Pray” by Albert S. Reitz, 1879-1966).
நான் மூன்றாவது வரியை கீழுள்ளவாறு மாற்றினேன்
“நம்பிக்கையற்ற ஆத்துமாக்களுக்கு, எழுப்புதல் வேண்டும் நமக்கு;
ஓ வல்லமை எனக்குத் தாரும், ஜெபத்தில் வல்லமை!”

நீங்கள் அமரலாம்.

எழுப்புதலுக்காக ஜெபிக்காதபடி சாத்தான் உங்களில் அநேகரை அடைத்து வைத்தருக்கிறான். கடந்த வியாழக்கிழமை இரவு நான் ஒரு வாக்கெடுப்பு செய்தேன். நான் சொன்னேன், “நான் உங்களிடம் எழுப்புதலுக்காக ஜெபிக்க கேட்டபொழுது நமது சபைக்கு அதிக ஆட்கள் வேண்டும் என்று நான் விரும்புவதாக உங்களில் எத்தனைபேர் நினைக்கிறீர்கள்?” நமது மக்களில் ஏறக்குறைய பாதிபேர் தங்கள் கரங்களை உயர்த்தினார்கள். பிறகு நான் சொன்னேன், “நான் உங்களிடம் எழுப்புதலுக்காக ஜெபிக்க கேட்டபொழுது எழுப்புதலுக்காக நீங்கள் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று உங்களில் எத்தனைபேர் நினைக்கிறீர்கள்?” உங்களில் மூன்றில் ஒரு பங்கு தங்கள் கரங்களை உயர்த்தினீர்கள். அது அதிர்ச்சியாக இருந்தது. அநேக, அநேக நேரங்களில் நான் உங்களிடம் சொன்னேன், “இது அதிக மக்களுக்காக அல்ல!” அநேக, அநேக நேரங்களில் நான் உங்களிடம் சொன்னேன் “இது அதிக வேலைக்காக அல்ல!” அநேக, அநேக நேரங்களில் நான் உங்களிடம் சொன்னேன், “எழுப்புதல் வரும்பொழுது குறைவான வேலைகளே இருக்கும்!”

இப்பொழுது நாம் ஒரு நபரை பார்வையாளராக பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நூற்றுக்கணக்கான மற்றும் நூற்றுக்கணக்கான பெயர்களை நீங்கள் கொண்டுவரவேண்டியதாக இருந்தது. மற்றும் அந்த ஒரு பார்வையாளரான நபர் திரும்ப வருவதில்லை! எழுப்புதலில் நீங்கள் மிக சிறிய அளவு பெயர்களை கொண்டு வந்தாலும் மற்றும் அந்த சில பார்வையாளரான நபர்களில் அநேகர் திரும்ப வருவார்கள். நாம் ஒருவேளை சுவிசேஷ ஊழியத்தையே நிறுத்த முழுமையாக வேண்டியதாகவும் இருக்கும் மற்றும் அதிகமான மக்கள் வந்து கொண்டே இருப்பார்கள் மற்றும் இரட்சிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்! அந்த சீன சபையில் எந்த சுவிசேஷ ஊழியமும் இல்லை. அவர்கள் எந்த படை முயற்சிகளையும் ஏற்பாடு செய்யவில்லை. இருந்தாலும் 2,000 மக்கள் உள்ளே வந்தார்கள் மற்றும் தங்கினார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் எழுப்புதல் அடைந்தார்கள்! அதுதான் காரணம்! இதை உங்களுக்கு முன்னமே சொன்னேன், ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை. நீங்கள் என்னை நம்பவில்லை ஏனென்றால் நீங்கள் அதை பார்க்கவில்லை. நமது பாடத்தை மறுபடியும் கவனியுங்கள்.

“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரேமியா 33:3).

நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை நான் உனக்கு காட்டுவேன்.” உன்னால் அதை நம்ப முடிகிறதா? இதுவரை நீ ஒருபோதும் பார்த்திராத காரியங்களை தேவன் செய்துகாட்ட முடியும் என்று நம்புகிறாயா? உங்கள் ஜெபங்களுக்கு பதிலாக “நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான” காரியங்களை தேவன் செய்ய முடியும் என்று உன்னால் போதுமான அளவு உன்னைத் தாழ்த்தி நம்ப முடிகிறதா? எழுந்து நின்று அதைப்பாடுங்கள்!

ஜெபத்தில் வல்லமை, கர்த்தாவே, ஜெபத்தில் வல்லமை,
   இங்கே ‘பூமியின் பாவம்’ துக்கம் மற்றும் கவலை மையங்கொண்டுள்ளது;
நம்பிக்கையற்ற ஆத்துமாக்களுக்கு, எழுப்புதல் வேண்டும் நமக்கு;
   ஓ வல்லமை எனக்குத் தாரும், ஜெபத்தில் வல்லமை!
(“Teach Me to Pray” by Albert S. Reitz, 1879-1966).

இழக்கப்பட்ட சிறுவர்களை சபைக்குள் கொண்டுவர நமது இருதயத்தில் நாம் கிரியை செய்கிறோம். ஆனால் அவர்கள் இங்கே வரும்பொழுது தேவனை உணர முடிகிறதில்லை. ஏன் முடிகிறதில்லை? ஏனென்றால் அவர் வல்லமையோடு இங்கே இல்லை. தேவன் எல்லாவற்றிலும் பரிசுத்தர். “நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான காரியங்களை தேவன் செய்ய முடியும்” என்று உங்களில் அநேகர் மெய்யாகவே நம்பவில்லை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் அதை அப்படியே நம்பவில்லை. இவையெல்லாம் தேவதைக்கதைகள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நான் ஒரு வயதான கிழவன், ஒரு அற்புதத்தைப்பற்றி பிதற்றுகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், நீங்கள் ஒருபோதும் ஒரு அற்புதத்தைப்பார்க்கவில்லை, அதனால் நீங்கள் அதை நம்பவில்லை.

நாங்கள் அநேக அற்புதங்களைப் பார்த்திருக்கிறோம், ஆனால் நீங்கள் அதை இன்னும் நம்பவில்லை! இந்த சபை கட்டிடத்தை காப்பாற்ற முப்பத்தொம்பது மக்கள் இரண்டு மில்லியன் டாலர்களை கொடுத்தார்கள். இது நடந்திருக்க முடியும் என்று நான் ஒரு பிரசங்கியிடம்கூட பேசினது இல்லை. ஆனால் இது நடந்தது! அது ஒரு பெரிய அற்புதம்! ஆனால் அதை நீங்கள் பார்க்கவில்லை! நீங்கள் அதை நம்பவில்லை! கடந்த ஆண்டில் 17 மக்கள் ஒரு சில வாரங்களில் இரட்சிக்கப்பட்டார்கள். ஆனால் அதை நீங்கள் பார்க்கவில்லை! அது ஒரு அற்புதம் நீங்கள் அதை நம்பவில்லை! ஜான் கேஹன் நமது பிரசங்கியாக, ஒரு புது போதகராக, நமக்கு கிடைத்தார் அவர் பற்களை கடித்தவராக சொன்னார், “நான் ஒருபோதும் இதை செய்யமாட்டேன்!” இது ஒரு அற்புதம். ஆனால் அதை நீங்கள் பார்க்கவில்லை! நீங்கள் அதை நம்பவில்லை! நமக்கு 35 மொழிகளில் உலகளாவிய ஊழியம் இருக்கிறது – இந்த போதனைகளை உலகளவில் வெளியே அனுப்புகிறோம். ஆனால் அதை நீங்கள் பார்க்கவில்லை! நீங்கள் அதை நம்பவில்லை!

ஓ, நீங்கள் விழித்தெழுந்து எழுப்புதலின் அற்புதத்திற்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்! ஓ, நீங்கள் பரிசேயர்களைப்போல இருக்கக்கூடாது, அவர்களைப்பற்றி சொல்லப்பட்டது, “அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை” (யோவான் 12:37).

இப்பொழுது உங்கள் மதத்தில் மகிழ்ச்சியில்லை என்று நான் அறிந்திருக்கிறேன், மற்றும் சில நேரங்களில் எனது இருதயம் உங்களுக்காக அழுகிறது. உங்களுக்கு மகிழ்ச்சியில்லை. உங்களுக்கு நம்பிக்கையில்லை. சிறையில் அடிமையாக மாவரைத்துக் கொண்டிருந்த ஏழை சிம்சோனைப்போல நீங்கள் தொடர்ந்து மாவரைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆமாம்! உங்களில் சிலருக்கு இந்த சபை ஒரு சிறைச்சாலையாக இருக்கிறது, கூட்டங்கள் மூலமாக ஒரு சிறை வீட்டில் மாவு அரைக்கிறீர்கள், சுவிசேஷ ஊழியத்தை ஒரு அடிமைத்தன ஊழியத்தை போல மாவு அரைக்கிறீர்கள். அதனால் நீங்கள் அதை வெறுக்கிறீர்கள்! ஆனால் எப்படி தப்பிக்கொள்ளுவது என்று உங்களுக்கு தெரியவில்லை! நீங்கள் ஆவிக்குரிய சங்கிலியினால் கட்டப்பட்டு, எந்த நம்பிக்கையும் இல்லாமல் அரைக்கிறீர்கள், அரைக்கிறீர்கள், அரைத்து கொண்டிருக்கிறீர்கள். சில நேரங்களில் விட்டு போய்விட வேண்டுமென்று நினைக்கிறீர்கள். உங்களில் சிலர் அதை செய்வீர்கள் என்று நான் அறிந்திருக்கிறேன். ஆனால் உங்களால் போக முடியாது. உங்களுக்கு இருக்கும் நண்பர்கள் இங்கு மட்டுமே இருக்கிறார்கள். உங்களுக்கு இருக்கும் உறவினர்கள் இங்குதான் இருக்கிறார்கள்! நீங்கள் எப்படி ஒருபோதும் கவலையினமான மாவு அரைத்தல் இருந்து தப்பி போக முடியும், உங்களுக்கு ஒரு சபையின் வேலை மற்றும் அதிக வேலைப்பளு வெறுப்பாக ஒரு சிறைச்சாலையாக இருக்கிறது அல்லவா? நான் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன்! நான் செய்வேன் என்று தேவனுக்கு தெரியும்! தப்பி போவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. பிரசங்கியாரே, உங்களுக்கு எப்படி தெரியும்? ஏனென்றால் நீங்கள் இப்பொழுது இருக்கிற அதே இடத்தில் நான் இருந்திருக்கிறேன்! நான் ஒரு சபையில் விலங்கிடப்பட்டேன், மாவு அரைத்தேன், அரைத்தேன், அரைத்து கொண்டேயிருந்தேன் அதை வெறுத்துக் கொண்டிருந்தேன் – ஆனால் தப்பி செல்ல வழியை கண்டுபிடிக்கவில்லை! தப்பி செல்ல ஒரே வழி இயேசுவே! உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள்! ஏன் முடியாது? உங்களை கட்டியிருக்கும் விலங்கு சங்கிலிகள் உங்கள் பாவங்களே! அவைகளில் இருந்து விடுதலை பெறுங்கள்! மனந்திரும்புங்கள் மற்றும் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுங்கள், இயேசு மட்டுமே உங்கள் விலங்கு சங்கிலிகளை விலக்கி விடுதலையாக்கி மற்றும் மறுபடியுமாக உங்களை சுதந்தரராக்க முடியும்.

“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர்; அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்...” (யாக்கோபு 5:16).

உங்களுடைய பயங்கள், சந்தேகங்கள், பாவங்கள், உங்களுடைய கோபம், உங்களுடைய கசப்பு, உங்களுடைய பொறாமை இவைகளை அறிக்கையிடுங்கள். “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர்; அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்...” (யாக்கோபு 5:16). ஒரு ஸ்திரி இதை செய்தாள்! இயேசு அவளை குணமாக்கினார். ஒரு மனிதன் அதை செய்தான், இயேசு அவனை குணமாக்கினார். இப்பொழுதே ஒரு நம்பிக்கையின் ஒளிக்கதிர் இருக்கிறது. நீங்கள் நினைக்கிறீர்களா, “அது உண்மையாக இருக்க முடியுமா?” ஆமாம்! அது உண்மைதான்! யாராவது சிலர் தங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கையிட்டு மற்றும் குணமாக்கும்படி ஜெபியுங்கள்.

“கிறிஸ்து சொன்னார், ‘துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்’ (மத்தேயு 5:4) தங்கள் பாவங்களை உணர்ந்து மற்றும் அதற்காக அழுபவர்களை இது குறிக்கிறது. எழுப்புதலுக்காக ஏங்கி கொண்டிருக்கும் கிறிஸ்தவனுக்கு எப்பொழுதும் பாவம் ஒரு பிரச்சனையாகும், மற்றும் எழுப்புதல்கள் எப்பொழுதும் இந்த உலகம் காணக் கூடாத விதத்தில் அசௌகரியம் இல்லாதபடி சலக்கிரணை செய்கிறது. இருளான இடங்களில் எழுப்புதல் வெளிச்சத்தை பாச்சுகிறது... எவன் ராபர்ட்ஸ் அவர்களுக்கு நினைவுப்படுத்தினார் எழுப்புதலுக்காக ஆயத்தப்பட வேண்டுமானால், மக்கள் ஆயத்தம் இல்லாவிட்டால் [பரிசுத்த] ஆவி வராது: ‘[சபையின்] எல்லாவிதமான கெட்ட உணர்வுகளிலிருந்தும் – எல்லா கபடு, பொறாமை, தற்புகழ்ச்சி, மற்றும் தவறான புரிந்துகொள்ளுதல்களிலிருந்து நாம் விடுவிக்கப்பட வேண்டியது அவசியமாகும். எல்லாவிதமான இடறல்களும் மன்னிக்கப்படும் வரையிலும் [ஜெபிக்க வேண்டாம்]: ஆனால் உன்னால் மன்னிக்க முடியாது என்று நீ உணர்ந்தால், தூளுக்கு உன்னை தாழ்த்து, மற்றும் ஒரு மன்னிக்கிற ஆவிக்காக வேண்டிக்கொள். அதன்பிறகு நீ அதை பெற்றுக்கொள்ளுவாய்’”… சுத்தமான கிறிஸ்தவன் மட்டுமே தேவனுக்கு அருகாமையில் ஜீவிக்க முடியும் (Brian H. Edwards, Revival, Evangelical Press, 2004, p. 113)... “ஒவ்வொரு மனிதனும் மற்ற ஒவ்வொருவரையும் மறக்க வேண்டும். ஒவ்வொருவரும் தேவனோடு முகமுகமாக ஒத்துயிருக்க வேண்டும் [அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டபொழுது]... [இது] ஒவ்வொரு எழுப்புதலிலும் அடையாளமாக பதிவு செய்யப்பட்டது. ஆழமான பாவ உணர்வினால் தாழ்த்தப்பட்டு மற்றும் அசௌகரியத்தை உணராமல், எந்த எழுப்புதலும் இல்லை” (ibid., p. 116)... “இன்று நமக்கு ஒரு அசுத்தமான சபையிருக்கிறது ஏனென்றால் கிறிஸ்தவர்கள் பாவத்தை உணர்வதில்லை அல்லது அதற்கு பயப்படுவதில்லை... எழுப்புதலுக்காக அதிகமாக ஏங்குபவர்கள் தங்கள் இருதயங்களை ஆராய்ந்து பார்ப்பதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் மற்றும் ஒரு பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக ஜீவிக்க வேண்டும். நம்முடைய பாவங்களை நாம் மூடுவோமானால் மற்றும் அதை இப்பொழுது அறிக்கை செய்யவில்லையானால் [நாம் எழுப்புதலை பெற்றுக்கொள்ள மாட்டோம்]... ஒரு பரிசுத்தமுள்ள தேவன் ஒரு கிறிஸ்தவனின் மிக சிறிய பாவத்தையும் குறித்து விழிப்பாக இருக்கும்படி செய்கிறார்... பரிசுத்தமுள்ள தேவனுக்கு முன்பாக தாங்கள் ஜீவிக்கிறோம் என்று அறிந்திருப்பவர்கள் தங்கள் தனிப்பட்ட பாவங்களை குறித்து எப்பொழுதும் விழிப்பாக இருப்பார்கள்... இந்த ஆழமான உணர்த்தலின் வேலை எப்பொழுதும் விடுதலை மற்றும் சந்தோஷத்துக்கு மற்றும் மன்னிப்பின் புதிய அனுபவத்துக்கு நடத்துகிறது. ‘இருதயத்தில் அடித்துக்கொள்ளுதலானது’ இரட்சிப்பின் மகிழ்ச்சியை வெளிபடையாக தொடர்ந்து கொண்டு வருகிறது” (ibid., p. 120).

“உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்க மாட்டீரோ?” (சங்கீதம் 85:6).

நாம் கண்ணீரோடு நமது பாவங்களை அறிக்கை செய்யாவிட்டால் நமது இருதயத்தில் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது! சீனாவில் அதுதான் நடந்தது. நமது சபையில் ஏன் நடக்க கூடாது? நாம் ஒருவருக்கொருவர் நமது பாவங்களை அறிக்கையிட பயப்படுகிறோம், மற்றும் நாம் சுகமடையும்படிக்கு, ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்க பயப்படுகிறோம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் நம்மை அறிக்கையிடாமல் நிறுத்துகிறது. ஏசாயா சொன்னார், “சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?” (ஏசாயா 51:12, 13).

10வது பாடலை பாடவும்!

“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.” (சங்கீதம் 139:23,24)

17வது பாடலை பாடவும்!

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், மாயையின் பாவம் என்னை ஆளாவிடாதிரும்
வெளிச்சத்தின் பிரகாசம் உள்ளுக்குள் நிழலிடட்டும்.
உம்முடைய ஆசீர்வாதமான முகத்தை மட்டும் நான் பார்க்கும்படி செய்யும்,
உமது அளவில்லாத கிருபையினால் எனது ஆத்துமாவுக்கு விருந்தளியும்.
தெய்வீக இரட்சகரே, என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
உமது பரிசுத்த சாயல் எனக்குள் பிரதிபலிக்கும் வரைக்கும், எல்லாரும் பார்க்கும்படியாக என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும்.
(“Fill All My Vision” by Avis Burgeson Christiansen, 1895-1985).

இதற்கு முன்பாக நீ அறிக்கை செய்யவில்லை. நீ அறிக்கை செய்ய வேண்டுமென்று அறிந்திருந்தாய், ஆனால் நீ பயப்பட்டாய். நான் தொலைபேசியினால் பயங்கரமாக பின்வாங்கிவிட்டேன் என்று ஒரு ஸ்திரி என்னிடம் சொன்னாள். பிறகு ஞாயிற்றுக்கிழமை காலையில் நான் அவளை நோக்கி பார்த்தேன் மற்றும் அவள் என்னை நோக்கி பார்த்தாள். அவர் வர வேண்டுமென்று விரும்புகிறாள் என்று என்னால் பார்க்க முடிந்தது. நான் அவள் கையை பிடித்தேன் மற்றும் சொன்னேன், “வா.” அவள் வந்தாள். அவள் வருவதற்கு பயந்து கொண்டிருந்தாள். அவள், ஒரு உதவிகாரரின் மனைவியாக இருந்தாள்! அவளுடைய குற்றத்தை அவள் அறிக்கையிட்டாள் மக்கள் என்ன நினைப்பார்கள்? மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறந்து விடுங்கள்! நாம் எழுந்து நின்று பாடும்பொழுது, இங்கே வந்து முழங்கால் படியிட்டு மற்றும் உங்கள் குற்றங்களை அறிக்கை செய்யுங்கள். தேவன் உங்கள் பாவத்தை உணர்த்தியிருந்தால், கிறிஸ்துவின் இரத்தம் சிலுவையின் மேல் சிந்தப்பட்டது உன்னுடைய பாவங்களை சுத்தம் செய்து புதிதாக்கும் படியாகவே.

17வது பாடலை பாடவும்!

என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும்,
மாயையின் பாவம் என்னை ஆளாவிடாதிரும்
வெளிச்சத்தின் பிரகாசம் உள்ளுக்குள் நிழலிடட்டும்.
உம்முடைய ஆசீர்வாதமான முகத்தை மட்டும் நான் பார்க்கும்படி செய்யும்,
உமது அளவில்லாத கிருபையினால் எனது ஆத்துமாவுக்கு விருந்தளியும்.
தெய்வீக இரட்சகரே, என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும்,
உமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.
உமது பரிசுத்த சாயல் எனக்குள் பிரதிபலிக்கும் வரைக்கும்,
எல்லாரும் பார்க்கும்படியாக என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும்.
(“Fill All My Vision” by Avis Burgeson Christiansen, 1895-1985).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்:
I யோவான் 1:5-10.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“O Breath of Life” (by Bessie P. Head, 1850-1936).