Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




எழுப்புதலில் ஜெப போராட்டம்!

THE BATTLE OF PRAYER IN REVIVAL!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஜூலை 9, 2017 அன்று கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, July 9, 2017


நான் என்னுடைய பாடல் புத்தகங்களைப் பார்த்தபொழுது சபை யுத்தத்தில் இருந்ததை போன்ற பாடலையும் நான் காணவில்லை – ஆனால் ஒன்று. ஒரே ஒரு சபை போராடும், மற்றும் அந்தப் பாடலில் ஒரே ஒரு வசனம் மட்டும் இருந்தது! பதினைந்து பாடல்கள் “பாதுகாப்பு” பற்றி இருந்தன. முப்பத்தி இரண்டு பாடல்கள் “துதியை” பற்றி இருந்தன. இருபது பாடல்கள் “குழந்தைகளுக்கு” இருந்தன. இருபத்தி ஒன்று பாடல்கள் “வாழ்த்து” பற்றி இருந்தன. ஒரே ஒரு சபை “போராடும்” பாடல் – சபை யுத்தத்தில் இருக்கிறது! அந்த ஒரு பாடலில் ஒரே ஒரு சரணம் மட்டுமே, அதில் போராட்டத்தை எப்படி சச்சரவோடுகூட நடத்த வேண்டும் என்று அது சொல்லவில்லை! இந்தப் பாட்டு புத்தகம் முழுவதிலும் ஒரே ஒரு சரணம் மட்டுமே நாம் பிசாசு மற்றும் பேய்களோடு யுத்தத்தில் இருக்கிறோம் என்பதை சொல்லுகிறது! திரு. கிரிப்பித் அந்தச் சரணத்தை சற்று முன்பாக பாடினார்.

வெற்றியின் அடையாளத்தில் சாத்தானுடைய சேனைகள் ஓடும்;
அதன்பிறகு, கிறிஸ்தவ வீரர்கள், வெற்றி பெறுவார்கள்!
துதியின் சத்தத்தால் நரகத்தின் அஸ்திபாரங்கள் நடுங்கும்;
சகோதரர்களே, உங்கள் சத்தத்தை உயர்த்துங்கள்,
உங்கள் பாடலின் சத்தம் உயரட்டும்!
கிறிஸ்தவ வீரர்களே, யுத்தத்தில் போராடுவது போல,
முன்னோக்கி வாருங்கள்,
கிறிஸ்துவின் சிலுவை முன்னே போகிறது.
   (“Onward, Christian Soldiers,” Sabine Baring-Gould, 1834-1924).

அந்த ஒரே ஒரு பாடலில் ஒரே ஒரு சரணம் மட்டுமே நாம் சாத்தான் மற்றும் பேய்களோடு யுத்தத்தில் இருக்கிறோம் என்பதை சொல்லுகிறது! அந்த ஒரு சரணம் மட்டும் இன்றுள்ள நவீன பாடல் புத்தகங்கள் அனைத்திலும் நீக்கப்பட்டு உள்ளது! அந்தச் சரணம் 1957ல் நீக்கப்பட்டது. அதிலும் மோசம் என்னவென்றால், இப்பொழுது கிட்டதட்ட எல்லா நவீன பாடல் புத்தகங்களிலும் இந்தப் பாடல் நீக்கப்பட்டுவிட்டது! மேற்கத்திய உலகத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பதே தெரியாது. நாம் நித்திரையில் இருக்கிறோம். தென் பாப்டிஸ்டுகள் ஒவ்வொரு வருடமும் தங்கள் சபைகளில் ஒரு கால் மில்லியன் மக்களை இழந்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் தங்கள் சபைகளில் ஒரு ஆயிரம் கதவுகள் என்றென்றுமாக மூடப்பட்டு வருகின்றன! இது நம்முடைய BBFI சபைகளையும் சேர்ந்ததாகும். ஜெபக்கூட்டங்கள் வேதஆராட்சிகளாக மாற்றப்பட்டன அல்லது முழுவதுமாக முடிந்துபோனது. மேற்கத்திய உலகத்தில் எல்லா இடங்களிலும் சபைகளில் ஞாயிறு இரவு கூட்டங்கள் மூடப்பட்டு வருகின்றன. இது நம்முடைய BBFI சபைகளையும் சேர்ந்ததாகும். “பிரசங்கங்கள்” என்று அழைக்கப்படுபவைகள் காய்ந்துபோன வெறும் குப்பைகளைபோல வேதவிளக்கங்களாக மாறிவிட்டன. மெய்யான சுவிசேஷக பிரசங்கங்கள் மரித்துப் போனது. ஒரு சுவிசேஷ போதனையை எப்படி தயார் செய்ய வேண்டும் – குறைந்த பட்சம் ஒன்றை எப்படி பிரசங்கிப்பது என்று எந்த போதகருக்காவது தெரியுமா என்றே எனக்கு தெரியவில்லை! இன்று நமது எந்தச் சபையிலும் சுவிசேஷக பிரசங்கத்தை என்னால் கேட்க முடியவில்லை. இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரசங்கிகளில் ஒருவர் டாக்டர் லியோடு-ஜோன்ஸ் ஆகும். அவர் சொன்னார்,

       அநேக நீண்ட வருட காலங்களாக கிறிஸ்தவ சபைகள் வனாந்திரத்தில் இருந்துவருகின்றன என்று தேவன் அறிவார். 1840 ஆம் ஆண்டுகளுக்கு முன் உள்ள சபை வரலாற்றை நீங்கள் வாசித்தால் அநேக நூற்றாண்டுகளாக தொடர்ந்து எழுப்புதல்கள் இருந்ததை பார்க்கலாம்… ஒவ்வொரு பத்து ஆண்டுகள். அல்லது அதுபோன்ற இடைவெளிகளில் ஏற்பட்டு இருந்திருக்கின்றன. 1859க்கு பிறகு ஒரே ஒரு பெரிய எழுப்புதல் உண்டானது... சபை வரலாற்றின் நீண்ட காலங்களாக ஒரு மிகப்பெரிய மலட்டுத்தன்மையை [ஜீவனற்ற] கடந்து வந்திருக்கிறோம்… அது இன்னும் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது… நாம் அதற்கு விலகி இருக்கிறோம் என்று [யாராவது] ஆலோசனை தந்தால் அவர்களை நம்ப வேண்டாம், நாம் அப்படி அல்ல. சபை வனாந்திரத்தில் இருக்கிறது (Martyn Lloyd-Jones, M.D., Revival, Crossway Books, 1992 edition, p. 129).

நமது சபைகள் ஏன் இப்படி மரித்துக் கிடக்கின்றன? நாம் நாற்பது நிமிடங்கள் பாடல்களை பாடுவதன் மூலமாக ஜீவனுண்டாகும் என்று முயற்சி செய்தோம்! நாம் டிரம்ஸ் மற்றும் கிட்டார்கள் வாசிப்பதன் மூலமாக மக்களின் உணர்ச்சிகளை கிளறிவிட முயற்சி செய்தோம். ஆனால் அது உதவி செய்யவில்லை! நாம்செய்த ஒன்றும் நமக்கு உதவி செய்யவில்லை – பாப்டிஸ்டுகள் அல்லது கரிஸ்மேடிக்கள் செய்த ஒன்றும் தேவன் நமக்கு எழுப்புதலை அனுப்ப அதை நாம் அனுபவிக்க உதவி செய்யவில்லை. நான் திரும்ப சொல்லுகிறேன் – ஒன்றும் நமக்கு உதவி செய்யவில்லை!

பதில்தான் என்ன? நாம் யாரோடு போராடுகிறோம் என்று நமக்குத் தெரியவில்லை! நாம் போராட்டத்தில் இருக்கிறோம் என்றே நமக்குத் தெரியவில்லை! தயவுசெய்து என்னோடுகூட ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1255 ஆம் பக்கத்திற்குத் திருப்பிக்கொள்ளுங்கள். அது எபேசியர் 6:11 மற்றும் 12. நான் 11 மற்றும் 12 வசனங்களை வாசிக்கும்போது தயவுசெய்து எழுந்து நில்லுங்கள்.

“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்க ளோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களி லுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபேசியர் 6:11, 12).

நீங்கள் அமரலாம். வசனம் 12ன் புதிய அமெரிக்கன் மொழி பெயர்ப்பில் இப்படி இருக்கிறது,

“ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல [ஒரு மனித சத்துரு], ஆனால் துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபேசியர் 6:12 NASB).

டாக்டர் சார்லஸ் ரெய்ரி சொன்னார், “விசுவாசிகளுடைய சத்துருக்களான சாத்தானின் பிசாசு சேனைகள், எப்பொழுதும் சாவுக்கு ஏதுவான போராட்டத்துக்காக கூடி எதிர்த்து நிற்கும்” (எபேசியர் 6:12ன் மேற்குறிப்பு). இது காணக்கூடாத போராட்டம் – சாத்தானோடு ஆவிக்குரிய யுத்தம். சாத்தானோடும் அவனுடைய பிசாசு சேனைகளோடும் போராட நமக்குச் சக்தியோ மற்றும் வைராக்கியமோ இல்லை. நாம் அவைகளோடு போராடிக்கொண்டிருக்க வேண்டும் என்றுகூட நமக்குத் தெரியவில்லை! சாத்தான் நம்மை தூங்கவைத்து விட்டான்! அந்த ஒரு சரணமும் “கிறிஸ்தவ வீரர்களே, முன்னோக்கி வாருங்கள்” தவறானதாகும். அது சொல்கிறது, “துதியின் சத்தத்தால் நரகத்தில் அஸ்திபாரங்கள் நடுங்கும்!” இல்லை – அவைகள் நடுங்கவில்லை! “துதியின் சத்தத்தால்” அந்தப் பிசாசுகள் பயப்படவில்லை! அவைகள் “துதியின் சத்தத்தால்” சிரிக்கின்றன! அவைகள் பாப்டிஸ்டுகள் பாடும் பாடல்களால் சிரிக்கின்றன! சினார் ட்ரம்ஸ்களால்! மின்சார கிட்டார்களால் உண்டாகும் சத்தத்தால் சிரிக்கின்றன! அவைகள் காரிஸ்மேடிக் சத்தத்தால் சிரிக்கின்றன! நாம் சத்தத்தால் மற்றும் ட்ரம்ஸ்களால் படுவேகமாக வாசிப்பதால் அவைகளை விரட்டிவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருப்பதால் அவைகள் சிரிக்கின்றன!

நமக்கு எளிதான ஒரு வேலை இருக்கிறது என்று நாம் நினைத்துவிடக்கூடாது. சத்தானுடைய மிகப்பெரிய ஆயுதங்களில் ஒன்று எழுப்புதலில் தேவனுடைய பிரசன்னத்தை எளிதாக பெற்றுவிடலாம் என்று நினைக்க வைப்பதாகும், “ஏனெனில் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல நமது போராட்டம்.” ஆனால் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நாம் போரட அழைக்கப்பட்டுள்ளோம்.

நாம் எளிதாக போரடி இந்தச் சக்திகளை வென்றுவிடலாம் என்று நாம் நினைத்துவிடக்கூடாது! முதலாவதாக, நாம் அவைகளால் நாகரீக கட்டுப்பாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட உலகத்தில் வாழுகிறோம். எழுப்புதல் மேற்கத்திய நாடுகளைவிட புறஜாதிய நாடுகளிலிருந்து அடிக்கடி மிகஅதிகமாக வருவதை நான் கவனித்திருக்கிறேன். இதற்குக் காரணம் அமெரிக்கர்களாகிய நாம் மற்றும் மேற்கில் வாழ்பவர்கள் அதிக வல்லமையுடைய பிசாசினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நாகரீகத்தின் ஆழத்தில் வாழுகிறோம். நாம் இந்த உலகத்தின் அந்தகார லோகாதிபதிகளோடு போராட வேண்டியது அவசியமாகும். டாக்டர் உங்கர் இதை இதை இப்படியாக மொழிபெயர்த்தார், “இந்த உலகத்தின் அந்தகாரலோக அதிபதிகளோடு போராட்டம்”. டாக்டர் ரெய்ரி சொன்னார், “பொல்லாத தூதர்கள் தேசங்களின் காரியங்களை ஆட்சி செய்ய தேடுகின்றன… தேசங்களை கட்டுப்படுத்துவதில் நல்ல மற்றும் தீய தூதர்களிடையில் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது” (Ryrie Study Bible, note on Daniel 10:13). டாக்டர் உங்கர் அவைகளை அழைக்கிறார் “இந்த உலகத்தின் அந்தகாரலோக அதிபதிகள்” (Biblical Demonology, Kregel, 1994, p. 196). தானியேல் 10:13ல் ஆளுகை செய்யும் பிசாசுகள், “பெர்சியா இராஜ்யத்தின் அதிபதி” என்று அழைக்கப்பட்டார்கள். இன்று அமெரிக்காவையும் அதன் கூட்டுநாடுகளையும் “மேற்கத்திய அதிபதி” கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறான். பொருளாதார கொள்கையினால் வல்லமை பெற்று நமது மக்களை அடிமைபடுத்தும்படி ஆட்சி செய்யும் பிசாசுகள் அனுமதிக்கப்பட்டன. அமெரிக்காவையும் அதன் கூட்டுநாடுகளையும் பொருளாதாரக் கொள்கை என்னும் பிசாசு கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறான். பொருளாதாரக் கொள்கை என்னும் பிசாசு நமது ஜெபங்களுக்கு தடையாக இருக்கிறது, நமது மக்களை அடிமைபடுத்துகிறது, மற்றும் எழுப்புதல்களை தடை செய்கிறது. மிகப்பெரிய பிரசங்கிகளில் ஒருவரான டாக்டர் லியோடு-ஜோன்ஸ் இதை புரிந்து கொண்டார். அவர் சொன்னார் இந்தப் பிசாசுகள் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களின் மனங்களை குருடாக்கி மற்றும் நமது சபைகளை பிளவுபடுத்தி இருக்கிறான். அவர் சொல்கிறார், “தேவனுடைய முழுயோசனைகளும் போய்விட்டது… தேவனைப்பற்றிய நம்பிக்கை மற்றும் மதங்கள் மற்றும் இரட்சிப்பு [இப்பொழுது] தள்ளுபடியானது மற்றும் மறக்கப்பட்டு போனது” (Revival, ibid., p. 13). பொருளாதார கொள்கை என்னும் பிசாசின் வேலையினால் இது நடந்தது, இந்த பிசாசை நான் “மேற்கத்திய அதிபதி” என்று அழைக்கிறேன்.

மூன்றாம் உலகின் நாடுகளில் பொருளாதார கொள்கை என்னும் பிசாசு நமது நாகரீகத்தில் உள்ளதுபோன்ற அதேவல்லமையோடு செயல்பட முடியவில்லை. மில்லியன் கணக்கான இளம் மக்களடங்கிய சீனா, ஆப்ரிக்கா, இந்தோனேசியா, மேலும் முஸ்லீம் நாடுகளிலும்கூட – மில்லியன் கணக்கான இளம் மக்கள் கிறிஸ்தவர்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அமெரிக்கா அதன் கூட்டுநாடுகளில் மில்லியன் கணக்கான இளம் மக்கள் சபைகளைவிட்டு போய்கொண்டிருக்கிறார்கள். போல்ஸ்டர் ஜார்ஜ் பர்னா சொல்லுகிறார் 88% மக்கள் 25 வயது உள்ளவர்கள் சபைகளிலிருந்து வெளியே போய்கொண்டிருக்கிறார்கள், “ஒருபோதும் திரும்புவதில்லை.”

பொருளாதார கொள்கை பெரிய பிசாசு அவர்களை எப்படி கட்டுப்படுத்துகிறது? அவர்கள் போர்னோகிராபியை, வலைத்தளங்களிலிருந்து மணிக்கணக்காக பார்த்துக்கொண்டு இருப்பதால் கட்டுப்படுத்த படுகிறார்கள். அவர்கள் ஜெபங்களில் சிரிக்கிறார்கள், ஆனால் ஹிப்னாடிசம் மூலமாக சமுதாய மீடியாக்களில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள். அவர்கள் காலையில் எழுந்தவுடன் தங்களுக்குத் தேவையான நொடி பொழுதில் தங்கள் ஸ்மார்ட் போனை எடுக்கிறார்கள். ஒரு நாளில் 150 தரங்களுக்கு மேலாக தங்கள் ஸ்மார்ட் போனை சோதிக்கிறார்கள் என்று, சமீபக்கால கணக்கெடுப்புச் சொல்லுகிறது. அவர்கள் மாரிஜுனா மூலமாக சோம்பலுக்கு இழுக்கப்பட்டார்கள். அவர்கள் எழுத்தளவில் கேஜெட்டுகளானால் இணைக்கப்பட்டு, இந்தப் பொருளாதார கொள்ளை பிசாசுகளால் காலை முதல் இரவு வரை கட்டுப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் ஸ்மார்ட் போனை தங்களுடைய ஒவ்வொரு விடுப்பான நேரங்களிலும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஓசியா தீர்க்கதரிசியின் நாட்களில் பழைய இஸ்ரவேலர்கள் தங்கள் விக்கரங்களை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது போல அவர்கள் பார்க்கிறார்கள். சமுதாய மீடிய சாத்தானால் உபயோகப்படுத்தப்படும் விக்கரகம் இன்று நம்முடைய இளம் மக்களின் மனங்கள் மற்றும் இருதயங்களை அவைகள் கட்டுப்படுத்துகின்றன! அதிக அளவு பெரிய பிரசங்கிகள் அது குளிர்ச்சியானது மற்றும் நவீனமானது என்று நினைக்கிறார்கள்! அவர்கள் பிசாசின் சக்திகளோடு தொடர்புபடுத்தியிருக்கிறார்கள் என்றும் உணராமல் உள்ளனர், டாக்டர் லீயோ ஜோன்ஸ் சொன்னது போல! சபைகள் மிகவும் உலக பிரகாரமானதாக மற்றும் அதிக பெலவீனமானதாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை!

ஓசியா தீர்க்கதரிசியின் நாட்களில் தேவன் அவரிடம் சொன்னதை பற்றி நான் மிகவும் தீமையாக உணர்ந்தேன், “[இஸ்ரவேலர்] விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு” (ஓசியா 4:17). அந்தத் தேசம் தேவனால் கைவிடப்பட்டது. அவர்கள் தனித்துவிடப்பட்டார்கள், பிசாசின் சக்திகளால் மற்றும் வல்லமையின்கீழ் – அடிமைப்படுத்தப்பட்டு கட்டுப் படுத்தப்பட்டார்கள்!

அவர்களை நாங்கள் சபைக்குக் கொண்டு வருகிறோம். ஆனால் தேவன் இங்கே இல்லை. தேவன் இங்கே இல்லையென்று அவர்கள் உணர முடியும். ஓசியா தீர்க்கதரிசி சொன்னார் “அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்” (ஓசியா 5:6). தேவன் போய்விட்டார்! அவர் நமது சபையைவிட்டுப் போய்விட்டார். இப்பொழுது அநேக வாரங்களாக அவர் நமது சபையைவிட்டுப் போய்விட்டார். அவர் போய்விடவில்லை ஏனென்றால் அவர் உயிர் வாழவில்லை. ஓ, இல்லை! அவர் போய்விடவில்லை ஏனென்றால் அவர் உயிர் வாழவில்லை! அதனால்தான் அவர் நம்மை தனிமையாகவிட்டார். அவர் முற்றிலும் பரிசுத்தர். அவர் முற்றிலுமாக நம்மீது கோபமாக உள்ளார். அதனால்தான் அவர் தனிமையாக விட்டுவிட்டார். அதனால்தான் அவருடைய பிரசன்னம் நம் மத்தியில் இல்லை. அதனால்தான் பரிசுத்த ஆவியானவர் போய்விட்டார். அதனால்தான் நமக்கு எழுப்புதல் கிடைக்கவில்லை!

நாம் அவர்களை சபைக்கு கொண்டு வருகிறோம். நாம் அவர்களுக்கு ஒரு பிறந்த நாள் விருந்து மற்றும் ஒரு நல்ல ஆகாரம் கொடுக்கிறோம். நாம் அவர்களுக்கு ஒரு கார்டூன் காட்டுகிறோம். ஆனால் அவர்களுக்கு நாம் செய்ய கூடியது அவ்வளவுதான்! அந்த அதிஸ்டம் இல்லாத நண்பன் சொன்னது போல, “அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை” (லூக்கா 11:6). அவனுடைய நண்பன் வந்தான் ஆனால் அவன் முன் வைப்பதற்கு அவனிடத்தில் ஒன்றுமில்லை! சிறிது ஆகாரமும் ஒரு பழைய கார்டூன் மட்டுமே. தேவனுடையதை அவனுக்கு முன் வைக்க ஒன்றுமில்லை! அந்த உவமையானது இவ்வாறாக முடிவு பெறுகிறது, “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்” (லூக்கா 11:13).

ஆனால் நாம் சென்ற ஆண்டு செய்தது போல பின்னோக்கி சென்று நாம் செய்ய விரும்பவில்லை. நமது சோம்பலான தூக்கம் மற்றும் சோம்பேறிதனம் பரிசுத்த ஆவி இல்லாமல் செய்தது. தொடர்ந்து செய்வதையே செய்தோம். ஏன் ஒரு கலக்குக் கலக்க வேண்டும்? ஏன் கவலைப்பட வேண்டும்? நமது சோம்பலினால் தூங்கி கொண்டு இருப்போம். நாம் கடினமான வேலைகளாகிய ஜெபம் மற்றும் உபவாசம் இருந்து தேவனுடைய பிரசன்னம் மற்றும் வல்லமையை விரும்பவில்லை.

நமது சபையில் நாற்பது வருட காலமாக ஒரே ஒரு எழுப்புதல் கூட நிகழவில்லை. ஏன் இல்லை? நான் அநேக தடவைகள் எழுப்புதலை பற்றி பிரசங்கித்தேன். ஆனால் நமக்கு ஒன்றுகூட இல்லை. ஒவ்வொரு முறையும் எழுப்புதலை வலியுறுத்தும்போது பயங்கரமான பின்னடைவு ஏற்படுகிறது. மக்கள் கோபப்படுகிறார்கள். மக்கள் சபையை விட்டு போய்விடுகிறார்கள். நாம் மெய்யாகவே எழுப்புதலை வலியுறுத்த பயப்படுகிறோம். ஆசீர்வாதத்துக்குப் பதிலாக அது சாபத்தைபோல காணப்படுகிறது! நமது சபையின் மக்களில் அதிகமானவர்கள் மாற்றப்படாதவர்களாக இருக்கிறார்கள் காரணம் அது பெரிதாக இருக்கிறது. எழுப்புதலை விரும்புபவர்கள் ஒரு சிறிய சிறுபான்மையாக இருக்கிறார்கள். நாம் மாற்றப்படாதவர்களால் நிரப்பப்பட்டு இருக்கிறோம். ஆனால் அவர்கள் மெதுவாக போய்விடுகிறார்கள். நமது மக்களில் அநேகர் மாற்றப்படுகிறார்கள். நாம் மறுபடியுமாக எழுப்புதலுக்காக ஜெபிக்க வேண்டிய நேரம் இது என்று நான் உணர்ந்தேன்.

இப்பொழுது போதுமான அளவு உண்மையான கிறிஸ்தவர்கள் பொய்யான மாற்றத்தில் இருந்து அதிக அளவாக இருக்கிறார்கள். அதனால் நாம் எழுப்புதலுக்காக ஜெபிக்க ஆரம்பித்தோம். நம்மில் அநேகர் போதுமான அளவு தேவனிடத்தில் விசுவாசமுள்ளவராக இருந்தபடியினால் அவர் நமக்குப் பதில் கொடுத்தார். ஜெசி ஜெகாமிட்சின் இரட்சிக்கப்பட்டார். மின்வா இரட்சிக்கப்பட்டார். டேனி சார்லஸ் இரட்சிக்கப்பட்டார். ஆயாக்கோ ஜெபலக்கா இரட்சிக்கப்பட்டார். தீமோத்தேயு சென் இரட்சிக்கப்பட்டார். ஜோசப் காங் இரட்சிக்கபட்டார். ஜுலி சிவிலே இரட்சிக்கபட்டார். பாய்யான் சாங் இரட்சிக்கப்பட்டார். ஆன்ட்ரு மார்சுசாக்கா இரட்சிக்கப்பட்டார். அலிசியா ஜெகமிட்சின் இரட்சிக்கப்பட்டார். தாமஸ் லூம் இரட்சிக்கப்பட்டார். டாம்சியா இரட்சிக்கப்பட்டார். எர்வின்லூ இரட்சிக்கப்பட்டார். ஜெசிக்கா என் இரட்சிக்கப்பட்டார். ராபர்ட் வாங் இரட்சிக்கப்பட்டார். சூசான்சொள இரட்சிக்கப்பட்டார். விர்ஜில் நிக்கில் இரட்சிக்கப்பட்டார். 17 மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். டாக்டர் சான் எழுப்புதல் பெற்றார். ஜான் சாமுவேல் கேஹான் சுவிசேஷத்தை பிரசங்கிக்க ஒப்புக்கொடுத்தார். ஆரோன் யான்சி மற்றும் ஜேக் நாகன் உதவிக்காரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கிர்ஸ்டியன் நகுயான் மற்றும் திருமதி லீ ஜெப வீராங்கனைகளாக மாறினார்கள்.

ஆனால் ஒவ்வொரு இரவிலும் பிசாசோடும் மற்றும் அவனுடைய சேனையோடும் எங்களுக்கு யுத்தம் இருந்தது! டாக்டர் கேஹான் இதை தம்முடைய எழுப்புதலின் அனுதின கணக்கில் எழுதினார். “டாக்டர் ஹைமர்ஸ் சொன்னார் அவர் இந்த நாள் குறிப்பை படித்தபொழுது அவர் இரண்டு காரியங்களை கவனித்தார். முதலாவது, பரிசுத்த ஆவியானவராகிய தேவன் பிரசன்னராகி இருந்தார், வல்லமையான மற்றும் பெரிய காரியங்கள் நடைபெற்றன. இரண்டாவதாக, தேவன் பிரசன்னராக இல்லாதபொழுது, எதுவும் நடைபெறவில்லை.” எழுப்புதலின்பொழுது என்னை ஒரு மனிதன் தாக்கினார் மற்றும் அவன் சபையைவிட்டுத் தன் குடும்பத்தோடு வெளியேறினான். ஒரு இளம் பெண் சபையை விட்டுப் போனாள். அவர்கள் அந்த “திறந்த கதவு” மக்களை போலவே செயல்பட்டார்கள். சாத்தானுடைய முகம் எழுப்புதலுக்கு விரோதமாக இருந்தது போலவே தெளிவாக அது அந்தக் காரியங்கள் இருந்தன.

ஜேக் நாகன் ஜெபத்தில் சாத்தானோடு இருந்த போராட்டத்தைப் பற்றி எழுதினார். ஜேக் ஆரோன் யான்சியோடு ஜெபித்து கொண்டிருந்தார். அவர் சொன்னார், “தேவனுடைய பிரசன்னத்திற்காக நாங்கள் ஜெபிக்க ஆரம்பித்தோம். நான் என்னுடைய இரண்டாவது ஜெபத்தை செய்தபொழுது, நான் லேசான தலை கனம் மற்றும் மயக்கத்தை உணர ஆரம்பித்தேன். ஜெபிப்பதில் கஷ்டம் இருப்பதாக மற்றும் என்னால் தொடர்ந்து ஜெபிக்க முடியவில்லை என்று ஆரோனிடம் நான் சொன்னேன். அதன்பிறகு ஆரோன் ஜெபிக்க ஆரம்பித்தார் அவரும் தமது ஜெபத்தை தொடர முடியாமல் கஷ்டத்தை அனுபவித்தார். அங்கே ஒரு பெரிய பிசாசின் தடை இருப்பதாக நாங்கள் உணர்ந்தோம் மற்றும் நாங்கள் எங்கள் முழங்காலிருந்து பிசாசின் சமுகத்தை கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீக்கும்படி கெஞ்சி ஜெபித்தோம். நான் தரையில் சோர்ந்துபோய் முகங்குப்பற விழுந்தேன். நாங்கள் மூன்றாவது சுற்றில் அதே நிலையில் ஜெபிக்க ஆரம்பித்தோம் மற்றும் தேவன் தமது பிரகாசத்தினால் பிசாசினுடைய பிரசன்னத்தை உடைத்து எறிந்ததை உணர ஆரம்பித்தோம். இந்த ஜெபம் முக்கியமானதாக இருக்க போகிறது என்று நாங்கள் அறிந்து கொண்டோம். இது மாலை 4 மணிக்கு நடைபெற்றது”.

அன்று இரவு, மாலை கூட்டத்துக்கு இரண்டு மணி நேரங்கள் கழித்தபிறகு, அமெரிக்கா மற்றும் மேற்கில் சபைகளில் எழுப்புதல் ஏன் இல்லை என்பதை பற்றி நான் பிரசங்கித்தேன். அந்தப் போதனை ஜான் கேஹானின் முழுமையான சாட்சியோடு இணைந்து இருந்தது. நான் அழைப்பு கொடுத்தபொழுது திரு. நிக்கல் கண்ணீரோடு முன்னுக்கு வந்தார் மற்றும் அவர் இழக்கப்பட்டவர் என்று ஒத்துக்கொண்டார். டாக்டர் கேஹான் அவருக்கு ஆலோசனை கொடுத்தார் மற்றும் அவர் இயேசுவை நம்பினார் மற்றும் இரட்சிக்கப்பட்டார். இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாக ஆரோன் மற்றும் ஜேக் நாகன் ஜெபித்தபோது சாத்தானுடைய போராட்டம் ஏன் இருந்தது என்பதை பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம்!

புது வருட நாளில் நான், “ஒரு நரகத்தின் வருடம் – ஒரு எழுப்புதலின் வருடம்!” என்ற தலைப்பில் பிரசங்கம் செய்தேன். நான் சொன்னேன் நாம் மெய்யான புதிய ஏற்பாட்டின் கிறிஸ்தவத்தை அனுபவித்தோம் – அது ஆவிக்குரிய யுத்தம்.

“ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத் தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களி லுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபேசியர் 6:12).

ஜெபத்தில் இருந்த உண்மையான போராட்டத்தினால் வெற்றி கிடைத்தது.

செவ்வாய் கிழமை ஜான் சாமுவேல் மற்றும் டாக்டர் கேஹான் இந்தியாவுக்குப் பிரயாணம் செய்வார்கள் ஜான் மூன்று வித்தியாசமான சுவிசேஷ சிலுவை போர்கள் பிரசங்கம் செய்வார். நமது சபையில் உள்ள ஒவ்வொருவரும் புதன் கிழமை மாலை உள்ள ஒரு ஜெபக் கூட்டத்துக்கு வந்து ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் – சுவிசேஷக ஊழியம் இல்லை. ஜான் கேஹான் கூட்டங்களில் மாறுதல்களுக்காக நாம் ஒரு மணி நேரம் ஜெபத்தில் செலவிடுவோம், மற்றும் நமது சபையில் தேவன் எழுப்புதலோடு வரும்படியாக அடுத்த மணி நேரத்தில் ஜெபிப்போம். புதன் கிழமை இரவு 7:00 மணிக்கு இந்த முக்கியமான ஜெபக் கூட்டத்துக்கு வரும்படியாக உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று இரவு நான் சுவிசேஷத்தை பிரசங்கிக்கவில்லை. ஆனால் நான் எல்லா நேரத்திலும் ஒவ்வொரு கூட்டத்திலும் அதை பிரசங்கித்து இருக்கிறேன். இயேசு உன்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார். உன்னுடைய எல்லா பாவங்களையும் கழுவும்படியாக அவர் தம்முடைய பரிசுத்தமான இரத்தத்தை சிந்தினார். அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் உனக்காக ஜெபிக்கும்படி ஜீவனோடு இருக்கிறார். இயேசு கிறிஸ்துவை நம்பு. அவர் உன்னை உனது பாவத்தில் இருந்தும் தேவனுடைய நியாய தீர்ப்பில் இருந்தும் இரட்சிப்பார். நீ இயேசுவை விரைவாக நம்பும்படி நான் ஜெபிக்கிறேன்.

டாக்டர் கேஹான் மற்றும் ஜான் கேஹான், தயவுசெய்து வந்து இந்த புல்பிட்டுக்கு முன்பாக இரண்டு நாற்காலிகளில் அமரும்படி கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் செவ்வாய் கிழமை புறப்பட்டு மூன்று வார பயணமாக இந்தியாவுக்குச் செல்ல இருக்கிறார்கள். அங்கே ஜான் மூன்று வித்தியாசமான நகரங்களில் சுவிசேஷ சிலுவை போரின் பிரசங்கம் செய்வார். இந்தக் கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும், தயவுசெய்து முன்னுக்கு வந்து அவர்களுக்காக ஜெபிக்கவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. சி. எல். கேஹன்:
எபேசியர் 6:10-12.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Onward, Christian Soldiers” (Sabine Baring-Gould, 1834-1924).