Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
இந்த “புதிய” புதிய பாப்டிஸ்டு ஆசாரிப்புக் கூடாரம்!

THE “NEW” NEW BAPTIST TABERNACLE!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஜூலை 2, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை
காலை வேளையில் லாஸ்ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, July 2, 2017

“ஆ… தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி… பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படி செய்யும்” (ஏசாயா 64:1-2).


தேவன் கீழே இறங்கி வரும்பொழுது “பர்வதங்கள் அவருக்கு முன்பாக [அவருடைய சமூகத்தில்] உருகும்”. அவிசுவாசமான மலைகள் அவருடைய சமூகத்தில் உருகும். சந்தேகங்கள் என்ற மலைகள் அவருடைய சமூகத்தில் உருகும். பயம் என்ற மலைகள் அவருடைய சமூகத்தில் உருகும். பெருமை என்ற மலைகள் அவருடைய சமூகத்தில் உருகும். ஏமாற்றம் என்ற மலைகள் அவருடைய சமூகத்தில் உருகும். சுயநலம் என்ற மலைகள் அவருடைய சமூகத்தில் உருகும். சாத்தானுடைய பிடி என்ற மலைகள் அவருடைய சமூகத்தில் உருகும். கிறிஸ்துவுக்கு விரோதமாக நிற்கும் மலைகளெல்லாம் தேவன் எழுப்புதலில் இறங்கி வரும்பொழுது அவருடைய சமூகத்தில் உருகும்! “தேவனுடைய பிரசன்னத்தில் [ஒரு உருக்காலையில் இருந்து உருக்கி ஊற்றப்படும் குழம்புபோல] மலைகள் உருகும்!”

உண்மையான எழுப்புதல் ஜெபம் என்றால் தேவனை உறுதியாக பிடித்துக் கொண்டு அவரை போகவிடாமல் இருப்பதாகும் – யாக்கோபு இரவு முழுவதும் ஜெபத்தில் கிறிஸ்துவோடு போரடினதுபோல – மற்றும், “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்” (ஆதியாகமம் 32:26). டாக்டர் லியோடு ஜோன்ஸ் சொன்னார் எழுப்புதல் ஜெபம் என்பது “தேவனை பற்றிக்கொள்ளுதல், அவரிடம் கெஞ்சுதல், அவரிடம் காரணம்காட்டி போராடுதல், மேலும் அவரிடம் வேண்டிக்கொள்ளுதல், மற்றும் ஒரு கிறிஸ்தவன் மட்டுமே அந்த நிலையை அடையும்பொழுது அவன் மெய்யாகவே ஜெபிக்க ஆரம்பிக்கிறான்” அது எழுப்புதல் ஜெபங்கள்! (Lloyd-Jones, Revival, p. 305).

ஆனால் எழுப்புதல் ஜெபம் ஏசாயாவை போன்ற மனிதர்கள் மூலமாக வரவேண்டியது அவசியமாகும், அந்தத் தீர்க்கதரிசியோடு சேர்ந்து சொல்ல வேண்டும், “இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்” (ஏசாயா 6:8) – நமது தேவனுடைய மற்றும் கிறிஸ்துவினுடைய ஊழியத்துக்கு தங்கள் வாழ்க்கைகளை அர்ப்பணம் செய்ய சித்தமாக உள்ள மனிதர்களாக இருக்க வேண்டும்! டாக்டர் A. W. டோசர் சொன்னார்,

“கிறிஸ்தவம் ஜீவனோடு நிலைநிற்க வேண்டுமானால் அவள் சரியான விதத்திலுள்ள மனிதர்களை; உடையவளாக இருக்க வேண்டியது அவசியமாகும். அவளுக்குத் துணிகரமாக பேசமுடியாத பெலவீனமானவர்கள் அவசியம்… சாரமுள்ள தீர்க்கதரிசிகள் மற்றும் இரத்தச் சாட்சிகளை அவசியமாக அவள் தேடவேண்டும்.. அவர்கள் தேவனுடைய மனிதர்களாக மற்றும் தைரியமுள்ள மனிதர்களாக இருப்பார்கள்… அவர்களுடைய ஜெபங்கள் மற்றும் உழைப்புகளால் [தேவன்] நீண்டகாலமாக தாமதித்த எழுப்புதலை அனுப்புவார்” (Dr. A. W. Tozer, We Need Men of God Again).

இந்த நேரத்தில் நமது சபைக்கு இதுதான் வேண்டியதாக இருக்கிறது – “தேவனுடைய மனிதர்களாக மற்றும் தைரியமுள்ள மனிதர்களாக இருக்க வேண்டும்.” இந்த உலகத்தின் மாயையை பார்த்த மனிதர்கள் நமக்கு வேண்டும், பாதுகாப்பைவிட தியாகம் செய்ய விரும்பும் மனிதர்கள் நமக்கு வேண்டும். பயத்துக்கு நீங்கலான ஆண்களும் பெண்களும், தீர்க்க தரிசியோடு சேர்ந்து சொல்ல வேண்டும், “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” (ஏசாயா 6:8), வாலிப ஆண்களும் பெண்களும் தங்கள் ஆத்துமாவின் ஆழத்திலிருந்து இப்படி ஜெபிக்க வேண்டும்,

“ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும், தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படி செய்யும்!” (ஏசாயா 64:1-2).

வாலிப மக்களே, நீங்கள் எழுந்து வைராக்கிய வாஞ்சையோடும் வல்லமையோடும் அந்த ஜெபத்தை ஜெபிக்க உங்கள் உதடுகளை கொடுங்கள். வாலிப மக்களே, நீங்கள் எழுந்து உங்கள் சமாதானத்தை, உங்கள் சொத்தை, உங்கள் வாழ்க்கையையே தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணம் செய்யுங்கள்! வாலிப மக்களே, நீங்கள் எழுந்து பிசாசோடும் அவனுடைய குட்டிசாத்தான்களோடும் உங்கள் முழுபலத்தோடும் ஜெபத்தில் போராடுங்கள், தேவனுடைய மகிமை நமது சபையில் வல்லமையான எழுப்புதலின் மழையோடு இறங்கி வரும்படி ஜெபிக்க வேண்டும்! “கிறிஸ்தவ போர்வீரனே, முன்னோக்கி வா.” அந்தப் பாடல் நமது பாட்டுத்தாளில் முதலாவது பாடல். அதை பாடுங்கள்! எழுந்து நின்று பாடுங்கள்!

கிறிஸ்தவ போர்வீரனே, முன்னோக்கி வா, யுத்தத்திற்கு போவதைப்போல,
இயேசுவின் சிலுவை உனக்கு முன்பாக போகிறது:
கிறிஸ்துவாகிய, இராஜரீக எஜமான், எதிரிக்கு விரோதமாக நடத்துகிறார்;
யுத்தத்திற்கு முன்பாக, அவருடைய கொடிகள் போகின்றன பார்.
கிறிஸ்தவ போர்வீரனே, முன்னோக்கி வா, யுத்தத்திற்கு போவதைப்போல,
இயேசுவின் சிலுவை உனக்கு முன்பாக போகிறது.
   (“Onward, Christian Soldiers,” Sabine Baring-Gould, 1834-1924).

நீங்கள் அமரலாம்.

இளம் மக்களே, நானும் இளைஞனாக இருந்தேன், ஆனால் இப்பொழுது நான் கிழவனாகிவிட்டேன். நமது தலைவர்களும் அப்படிதான். நாங்கள் இந்த சபை உடைந்த நீண்ட காலத்திற்கு முன்னிருந்து, இந்தச் சபையை நடத்தி வருகிறோம். இப்பொழுது இருப்பதைபோல நல்ல சபையாக மாற்றுவதற்காக நாங்கள் எங்கள் நேரத்தையும், எங்கள் பணத்தையும், மற்றும் எங்கள் இளம் பருவத்தையும் தியாகம் செய்தோம். மற்றும் இது நன்றாக இருக்கிறது. நாங்கள் கிரயத்தை செலுத்தினோம். இந்தச் சபை உலகளவாக வலைதளத்தில் ஊழியம் செய்வதற்காக நாங்கள் கிரயத்தை செலுத்தினோம். ஆனால் எங்களின் கண் புருவங்களின்மீது அந்த இளமை இன்னும் நீடித்து இருக்கவில்லை. இந்தச் சபையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல எங்களுக்குப் பெலமோ அல்லது சத்துவமோ இன்னும் நீடித்து இருக்கவில்லை. எங்களுக்கு வீரியம் குறைந்துவிட்டது, இந்த சபையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல ஆயுளும் செயல்திறனும் குறைந்துவிட்டது. இந்தச் சபையை காப்பற்ற எங்கள் இளமையின் பெலத்தை நாங்கள் செலவிட்டோம், ஆனாலும் எங்களுக்கு “புதிய” புது பாப்டிஸ்டு ஆசரிப்பு கூடாரத்தை உருவாக்க சக்தி இன்னும் நீடித்து இருக்கவில்லை. இளம் மக்களாகிய நீங்கள் அதை செய்ய வேண்டும், இல்லையானால் அது செய்யப்பட முடியாது. அதை செய்யுங்கள்! அதை செய்யுங்கள்! அதை செய்யுங்கள்!

ஒரு காலத்தில் நான் நெருப்பான இளம் போதகராக இருந்தேன். ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்றுமுறை மின்னோட்டத்தோடு பலமான பிரசங்கம் செய்ய என்னால் முடிந்தது. 1,000 மக்களின் கவனத்தை கையகப்படுத்தி வைத்திருக்க என்னால் முடிந்தது, அவர்களில் மூன்றில் ஒரு பகுதி முதல் முறை சந்திப்பவர்கள். ஆனால் இப்பொழுது நான் எழுபத்தாறு வயதுள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவன். அதற்கு நான் இப்பொழுது மிகவும் வயதானவன். ஆதிக ஜெப தியானத்திற்குப் பிறகு, நாம் இனிமேலும் காத்திருக்க முடியாது என்று நான் அறிந்துகொண்டேன். இப்பொழுது தலைமைத்துவத்தை நமது இளைஞர்களுக்கு மாற்ற ஆரம்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று நான் சொல்லுகிறேன் –நாங்கள் உங்களோடு தங்கி வழிநடத்தி உதவி செய்ய எங்களுக்கு நேரம் இருக்க வேண்டும். அடுத்த வசந்த காலத்தில் நான் அறுபது வருட ஊழியத்தில் இருக்க வேண்டியதாக இருக்கிறது. சில போதகர்கள் அறுபது வருட ஊழியத்தில் பிரசங்கிகளாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நிறுத்தி மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து, தலைவர்களாக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அதனால், நமது சபையில் ஜான் சாமுவேல் கேஹனை ஊழியராக ஏற்படுத்தி, மற்றும் நமது சபையின் போதகராக அந்த நேரத்தில் அவர் இருப்பார் என்று நான் நினைக்கிறேன்! அதே நேரத்தில் நான் திரும்பி வந்து, ஓய்வுபெற்ற போதகர் என்ற பட்டத்துடன் அவருக்கு வழிகாட்டியாக இருப்பேன். மேலும் அந்த நேரத்தில் நோவா சாங் ஊழியத்தில் லைசன்ஸ் பெற்றவராக இருப்பார் என்று நான் தீர்மானிக்கிறேன், மேலும் ஆரோன் யான்சி, ஜேக் நாஹன், ஆபேல் புருடோமி மற்றும் கியு டாங் லீ இந்த சபையின் உதவிக்காரர்களாக ஏற்படுத்த இருக்கிறார்கள், அதில் ஆரோன் யான்சி நிரந்தரமாக “உதவிக்காரர்களின் தலைவர்” என்ற பட்டம் கொடுக்கப்படும். அதன்பிறகு ஒரு புதியமுறையை நாம் பின்பற்றுவோம், இந்த சில சிறந்த மனிதர்களை “செயல் உதவிகாரர்களாக” நமது சபையில் சுற்றிமாற்று அடிப்படையில் உண்டாக்குவோம். தருணத்தை கைபற்றி நமது சபையின் இளம் மனிதர்களின் வெளிச்சத்தை காட்டவேண்டிய நேரம் இப்பொழுது தாகும். அவர்கள் மெய்யாகவே “புதிய” புது பாப்டிஸ்டு ஆசாரிப்பு கூடாரமாக நம்மை நடத்த வேண்டியது அவசியமாகும். கிறிஸ்தவ போர்வீரனே, முன்னோக்கி வா! அந்தப் பாடலின் இரண்டாவது சரணம் மற்றும் பல்லவியை நாம் எழுந்து நின்று பாடலாம்.

வெற்றியின் அடையாளத்தால் சாத்தானின் படைகள் ஓடும்;
அதன்பிறகு, கிறிஸ்தவ போர்வீரர்கள், வெற்றிபெறுவார்கள்!
துதியின் சத்தத்தால் பாதாளத்தின் அஸ்திபாரங்கள் நடுங்கும்;
சகோதர்களே, உங்கள் சத்தத்தை உயர்த்துங்கள்,
உங்கள் பாடல்களின் சத்தம் உயரட்டும்!
கிறிஸ்தவ போர்வீரனே, முன்னோக்கி வா, யுத்தத்திற்கு போவதைப்போல,
இயேசுவின் சிலுவை உனக்கு முன்பாக போகிறது.

இருந்தாலும் உங்கள் இளமை மட்டுமே இதை ஏற்படுத்திவிட முடியாது என்று எனது அறுபது வருட அனுபவத்தில் நான் அறிந்திருக்கிறேன். தேவனுடைய ஆவியானவரின் புதிய ஊற்றப்படுதலை நாம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும் இல்லையானால் உங்களால் செய்ய முடியாது.

சீன பாப்டிஸ்டு சபையில் டாக்டர் தீமோத்தேயு லின் அவர்கள் 24 வருடங்கள் என்னுடைய போதகராக இருந்தார். டாக்டர் லின் அவர்கள் ஒரு வல்லமையுள்ள ஜெபவீராக இருந்தார். டாக்டர் லின் அவர்கள் சொன்னார், “ஜெபத்தின் இலக்குத் தேவனுடைய பிரசன்னத்தை உடையதாக இருப்பதாகும்”. அவர் சொன்னார், “கடைசிகாலத்தின் சபை வளர வேண்டுமென்று விரும்பினால் தேவனுடைய பிரசன்னம் இருக்க வேண்டியது அவசியமாகும். தேவனுடைய பிரசன்னம் இல்லாமல் நமது பிரயாசங்கள் அனைத்தும் வீணாகும்” மற்றும் வெற்றிபெறாது. தேவனுடைய பிரசன்னத்தின் வல்லமையில்லாமல் நாம் வளரமுடியாது என்று சாத்தானுக்குத் தெரியும். டாக்டர் லின் அவர்கள் சொன்னார் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நாம் எவ்வளவாக நெருங்கிக்கொண்டிருக்கிறோமோ, “அவ்வளவாக ஜெபத்துக்கு விரோதமாக சாத்தானின் அழுத்தம் அதிகமாக இருக்கும்” (சகல குறிப்புகளும் டாக்டர் லின் அவர்களின், The Secret of Church Growth என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டன). அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார், “ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல…” சாத்தானோடும் பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு (எபேசியர் 6:12). அந்தகார லோகாதிபதிகளோடும் பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நாம் எப்படி போராட முடியும்? பவுல் இதற்குப் பதிலை தந்தார். “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி” (எபேசியர் 6:18). யாரவது ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, உனது மனதை அதை கவனிக்கும்படி கட்டாயப்படுத்து அவர் செய்கிற ஒவ்வொரு ஜெபத்தையும் கவனி. ஒவ்வொரு ஜெபத்தின் முடிவிலும், “ஆமென்” என்று சொல். அது அந்த ஜெபத்தை நீ சொந்தமாக செய்ததைபோல ஆகும்! அது சாத்தானுக்கு விரோதமாக வல்லமையான சக்தியான ஜெபமாக இருக்கும்! எழுந்து நின்று மறுபடியுமாக இரண்டாவது சரணத்தை பாடவும்!

வெற்றியின் அடையாளத்தால் சாத்தானின் படைகள் ஓடும்;
அதன்பிறகு, கிறிஸ்தவ போர்வீரர்கள், வெற்றிபெறுவார்கள்!
துதியின் சத்தத்தால் பாதாளத்தின் அஸ்திபாரங்கள் நடுங்கும்;
சகோதர்களே, உங்கள் சத்தத்தை உயர்த்துங்கள்,
உங்கள் பாடல்களின் சத்தம் உயரட்டும்!
கிறிஸ்தவ போர்வீரனே, முன்னோக்கி வா, யுத்தத்திற்கு போவதைப்போல,
இயேசுவின் சிலுவை உனக்கு முன்பாக போகிறது.

தேவன் நமது வேலையில் இறங்கி வரவேண்டும் என்பது நம்முடைய பிரதான ஜெபமாக இருக்க வேண்டும் – தேவனுடைய பிரசன்னம் ஒரு வல்லமையான எழுப்புதலில் இறங்கி வரவேண்டும்!

“ஆ… தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி… பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படி செய்யும்” (ஏசாயா 64:1-2).

தேவன் நமது மத்தியில் வரும்பொழுது “[அவருடைய] பிரசன்னத்தில் பர்வதங்கள் அவருக்கு முன்பாக உருகும்”. அவிசுவாசமான மலைகள் அவருடைய சமூகத்தில் உருகும்! சந்தேகங்கள் என்ற மலைகள் அவருடைய சமூகத்தில் உருகும்! பொறாமை என்ற மலைகள் அவருடைய சமூகத்தில் உருகும்! நம்மை பிரிக்கும் ஒருவரை விட்டு ஒருவரை பிரிக்கும் மலைகள் அவருடைய சமூகத்தில் உருகும்! அவருடைய சமூகத்தில் ஒருவரில் ஒருவர் ஆழமான அன்பு பெருகும்! நமது தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் விரோதமாக நிற்கும் மலைகளெல்லாம், தேவன் எழுப்புதலில் இறங்கி வரும்பொழுது, நெருப்புபோல ஒரு எரிமலையில் இருந்து உருக்கி ஊற்றப்படும் குழம்புபோல உருகும்! தேவனுடைய பிரசன்னம் வல்லமையான எழுப்புதலோடு இறங்கி வரும்படி ஒவ்வொரு நாளும் ஜெபிக்கும்படி நான் உங்களை கேட்டுக்கொள்ளுகிறேன்! எழுப்புதல் ஜெபம் என்றால் தேவனை உறுதியாக பிடித்துக் கொண்டு அவரை போகவிடாமல் யாக்கோபு போரடினது போலதாகும், “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்”. டாக்டர் லியோடு ஜோன்ஸ் சொன்னதுபோல, “தேவனை பற்றிக்கொள்ளுதல், அவரிடம் கெஞ்சுதல், அவரிடம் காரணம்காட்டி போராடுதல், மேலும் அவரிடம் வேண்டிக்கொள்ளுதல்… மற்றும் ஒரு கிறிஸ்தவன் மட்டுமே அந்த நிலையை அடையும்பொழுது அவன் மெய்யாகவே ஜெபிக்க ஆரம்பிக்கிறான் [அதாவது, அவன் எழுப்புதல் ஜெபத்தை ஜெபிக்கிறான்],” Revival, p. 305.

உங்களில் சிலர் மறுபடியும் எழுப்புதலுக்காக நாங்கள் ஜெபிக்க வேண்டாம் என்று விரும்பலாம்! சென்ற ஆண்டு “எழுப்புதலின் தொடுகை” அதிக நன்மையை செய்யவில்லை என்று நீங்கள் நினைக்கலாம்! ஆனால் நீங்கள் நினைப்பது தவறு! சென்ற ஆண்டு எழுப்புதலின் “தொடுகையை” மட்டுமே நாம் பெற்றோம், ஆனால் அதன் பலனாக என்ன நடந்தது என்று பாருங்கள் – ஜான் கேஹன் எதிர்ப்பதை நிறுத்திவிட்டு சுவிசேஷத்தை பிரசங்கிக்க ஒப்புக்கொடுத்தார்! நமக்கு ஒரு புது போதகர் கிடைத்தார் – அவர் அந்த எழுப்புதலின் “தொடுகையினால்” வெளியில் வந்தார்! நமக்கு ஆரோன் யான்சி, நோவா சாங், மற்றும் ஜாக் நாஹன் சென்ற ஆண்டு எழுப்புதலின் “தொடுகையினால்” நாம் பெற்றோம்! அடுத்தபடியாக நாம் மூன்றுமுறைக்கு மேலாக ஞானஸ்நானம் கொடுத்தோம் இதற்குமுன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகமானபேர் ஞானஸ்நானம் பெற்றார்கள்! இவ்வளவு புதுமாறுதல் அடைந்தவர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்? அவர்கள் கடந்த கோடையில் தேவன் நமக்கு அனுப்பிய அந்த சிறு “தொடுகையின்” எழுப்புதல் மூலமாக வந்தார்கள், அப்படியாகத்தான் அவர்கள் வந்தார்கள்! அந்த இரண்டாவது சரணத்தை மறுபடியுமாக பாடுங்கள்! அதை எழுந்து நின்று பாடுங்கள்!

வெற்றியின் அடையாளத்தால் சாத்தானின் படைகள் ஓடும்;
அதன்பிறகு, கிறிஸ்தவ போர்வீரர்கள், வெற்றிபெறுவார்கள்!
துதியின் சத்தத்தால் பாதாளத்தின் அஸ்திபாரங்கள் நடுங்கும்;
சகோதர்களே, உங்கள் சத்தத்தை உயர்த்துங்கள்,
உங்கள் பாடல்களின் சத்தம் உயரட்டும்!
கிறிஸ்தவ போர்வீரனே, முன்னோக்கி வா, யுத்தத்திற்கு போவதைப்போல,
இயேசுவின் சிலுவை உனக்கு முன்பாக போகிறது.

நீங்கள் அமரலாம்.

சென்ற ஆண்டு நாம் எழுப்புதல் கூட்டங்களை முடித்தபொழுது நாம் எழுப்புதலின் ஒரு “தொடுகையை” மட்டுமே பெற்றோம் என்று நான் உங்களுக்கு சொன்னேன், ஆனால் இந்த வருடத்தில் தேவனுடைய பிரசன்னத்தின் பெரிய ஊற்றுதலை நாம் ஒருவேளை பெறலாம். இது நடக்க முடியும் என்று என்னுடைய அறுபது ஆண்டு அனுபவத்தில் நான் அறிந்திருக்கிறேன். ஒரு சுத்திகரிக்கும் நீர்க்கால் கிடைப்பதற்கு முன்பாக எழுப்புதலின் ஒரு “தொடுகையை” நீங்கள் பெறமுடியும்! மெய்யாகவே சீனசபையில் அதுதான் நடந்தது. அந்தவிதமாகவே அது வந்தது. முதலாவது – ஒரு தொடுகை! இரண்டாவது – ஒரு சுத்திகரிக்கும் நீர்க்கால்! எனது வாழ்க்கையில் மூன்று வல்லமையான எழுப்புதல்களை நான் பார்த்திருக்கிறேன்! அதை மறுபடியுமாக தேவன் இங்கே நமது சபையில் செய்ய முடியும் என்று நான் அறிந்திருக்கிறேன்! இந்த இளம் மனிதரை தலைமை பொறுப்பில் வைப்பதால் மட்டுமே நாம் ஒரு “புதிய” புதுபாப்டிஸ்டு ஆசரிப்புக் கூடாரத்தை கண்டுவிட முடியாது, தேவனுடைய பரிசுத்த பிரசன்னத்தின் மகாபெரிய வல்லமை நம்மத்தியில் இறங்கவேண்டும் என்று நாம் ஜெபிக்காவிட்டால் நமது சபையை பெலப்படுத்திவிட முடியாது என்று நான் அறிவேன்!

“ஆ… தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி… பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படி செய்யும்” (ஏசாயா 64:1-2).

தயவுசெய்து பாடல் எண் 3ஐ எழுந்து நின்று பாடவும், “Old-Time Power” by Paul Rader, 1879-1938.

உமது ஆசீர்வாதத்திற்காக நாங்கள் கூடினோம்,
எங்கள் தேவனில் நாங்கள் காத்திருப்போம்;
எங்களில் அன்புகூர்ந்த எங்களை தமது இரத்தத்தால் விலைக்கு கொண்ட,
அவரில் நாங்கள் நம்பிக்கையாக இருப்போம்.
ஆவியானவரே, எங்களை இப்பொழுது உருக்கி எங்கள்
இருதயங்களையெல்லாம் அன்பினால் இயங்க செய்யும்,
பழங்கால வல்லமையோடு மேலிருந்து எங்கள்மீது ஊதும்.

உமது அற்புதமான கிருபையை நாங்கள் பாடுவோம்,
உமது வல்லமையில் நாங்கள் மேன்மை பாராட்டுவோம்;
நீர் எங்களுக்கு வாக்குப்பண்ணினபடியே, எங்கள் மத்தியில் வாரும், வாரும், ஓ வாரும், உமது ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளும்.
ஆவியானவரே, எங்களை இப்பொழுது உருக்கி எங்கள்
இருதயங்களையெல்லாம் அன்பினால் இயங்க செய்யும்,
பழங்கால வல்லமையோடு மேலிருந்து எங்கள்மீது ஊதும்.

உமக்கு முன்தாழ்மையாக ஜெபிக்க கொண்டுவாரும்,
விசுவாசத்தை எங்கள் ஆத்துமாக்களில் உயிர்ப்பியும்,
பரிசுத்த ஆவி மற்றும் அக்கினியின் வாக்கை,
விசுவாசத்தோடு, உரிமைகோரும் வரையிலும்.
ஆவியானவரே, எங்களை இப்பொழுது உருக்கி எங்கள்
இருதயங்களையெல்லாம் அன்பினால் இயங்க செய்யும்,
பழங்கால வல்லமையோடு மேலிருந்து எங்கள்மீது ஊதும்.
   (“Old-Time Power,” Paul Rader, 1879-1938).

எனது அன்பான நண்பரே, உமது பாவத்தின் தண்டனை கிரயத்தை கொடுக்க இயேசு கிறிஸ்து சிலுவையிலே மரித்தார். உமது பாவத்தை கழுவி நீக்க இயேசு கிறிஸ்து சிலுவையிலே தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தினார். இயேசு கிறிஸ்து மரித்தோரில் இருந்து உயிரோடு எழுந்தார். அவர் மேலே பரலோகத்தில், உனக்காக ஜெபித்துக் கொண்டு இருக்கிறார். அவரை மட்டும் நீ நம்பு. அவரை மட்டும் நீ நம்பு. அவர் உன்னை இரட்சிப்பார். அவர் உன்னை இரட்சிப்பார். இப்பொழுதே அவர் உன்னை இரட்சிப்பார்!

சீமோன் என்ற பரிசேயனுடைய வீட்டிலே ஒரு பாவியான ஸ்திரீ இயேசுவிடம் வந்தாள். வேதாகமம் சொல்லுகிறது,

“அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து, அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்” (லூக்கா 7:37-38).

இந்த ஸ்திரீ அந்த நகரத்தில் ஒரு பாவியாக அறியப்பட்டவள். அவள் மிகவும் பாவமுள்ளவள் என்று மக்கள் அறிந்திருந்தார்கள். அவளுக்கு ஒரு கெட்ட பெயர் இருந்தது. இயேசுவானவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அவள் அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து பரிமளதைலத்தைப் பூசினாள். அவள் இயேசுவிடம் வந்தாள்,

“அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யாரென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்” (லூக்கா 7:48-50).

அவள் மிகவும் பாவம் நிறைந்தவள். ஆனால் எப்படியோ அவள் இயேசுவிடத்தில் வந்தாள். அவள் அவரிடத்தில் வந்து அவருடைய பாதங்களை முத்தமிட்டாள். அவளை நோக்கி இயேசு சொன்னார், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது”. அவள் இயேசுவிடத்தில் வந்தாள் அவள் செய்தது அவ்வளவுதான். ஆனால் அது போதுமானதாக இருந்தது! அவளுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன மற்றும் அவள் இரட்சிக்கப்பட்டாள்!

நீ இரட்சிக்கப்படுவதற்குச் செய்யவேண்டியதெல்லாம் அவள் செய்த அதே காரியம்தான். அவள் இயேசுவினிடத்தில் எளிமையாக வந்ததன் மூலமாக இரட்சிக்கப்பட்டாள். இயேசு உனக்கு சொல்லுகிறார்,

“என்னிடம் வா… நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28).

நீ இப்பொழுதே இயேசுவிடம் வந்தால், இந்த காலையில், அவர் உன்னுடைய பாவங்களை மன்னிப்பார், வேதாகம காலத்தில் அவர் மக்களை இரட்சித்ததுபோல உன் ஆத்துமாவை இரட்சிப்பார். நீ அவரிடத்தில் வந்தால் இரட்சிக்கப்படுவாய். அவர் சிலுவையிலே சிந்தின இரத்தத்தினால் உன்னுடைய எல்லாபாவங்களையும் கழுவுவார். அவர் தமது நீதியினால் உன்னை உடுத்துவார். அவர் உன்னை இரட்சிப்பார். நீ செய்யவேண்டியதெல்லாம் அவரிடம் வரவேண்டியதுதான். அவர் இப்பொழுது பரலோகத்தில், தேவனுடைய வலது பாரிசத்தில், ஜீவிக்கிறார். நீ அவரிடம் வருவாயா? ஒரு பழைய பாடல் சொல்லுகிறது,

என்னுடைய அடிமை கட்டு, துக்கம் மற்றும் இரவிலிருந்து,
   இயேசுவே, நான் வருகிறேன், இயேசுவே, நான் வருகிறேன்;
உம்முடைய விடுதலை, மகிழ்ச்சி மற்றும் வெளிச்சத்திற்கு,
   இயேசுவே, நான் உம்மிடம் வருகிறேன் –
என்னுடைய சுயத்திலிருந்து உம்முடைய அன்பில் வாழ,
   என்னுடைய விரக்த்திலிருந்து உம்முடைய உயரே எடுக்கப்படுதலுக்கு,
ஒரு புறாவைபோல சிறகுகளால் பறந்து மேலே எப்பொழுதும்,
   இயேசுவே, நான் உம்மிடம் வருகிறேன்.
(“Jesus, I Come,” William T. Sleeper, 1819-1904).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்: ஏசாயா 64:1-4.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Revive Thy Work, O Lord” (Albert Midlane, 1825-1909).