Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
நோவா கிருபை பெற்றார்!

(ஆதியாகம புத்தகத்தில் 19வது போதனை)
NOAH FOUND GRACE!
(SERMON #19 ON THE BOOK OF GENESIS)
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஜூன் 24, 2017 அன்று கர்த்தருடைய நாள் சனிக்கிழமை
மாலை வேளையில் லாஸ்ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, June 24, 2017

“கர்த்தர் நோவாவை நோக்கி நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதியாகமம் 7:1).


நோவா நல்லவனாக இருந்த காரணத்தினால் இரட்சிக்கப்படவில்லை. அவர் எதனால் இரட்சிக்கப்பட்டார் என்றால், “உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதியாகமம் 7:1) அதனால் அவர் இரட்சிக்கப்பட்டார். தேவன் அவரை நீதிமானாகக் கண்டார். ஏன்? இதற்குப் பதில் எளிமையானது. அது ஆதியாகமம், ஆறாம் அதிகாரம், எட்டாம் வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து உங்கள் வேதாகமத்தை அங்கே திருப்புங்கள்.

“நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” (ஆதியாகமம் 6:8).

நோவா தேவனுடைய பார்வையில் கிருபை பெற்றார். தேவன் சொன்னார், “இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதியாகமம் 7:1).

அது நீதிமானாக்கப்பட்டதை பற்றி பேசுகிறது. எபிரெயர் 11:7 நோவா விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டார் என்று தெளிவாக சொல்லுகிறது:

“விசுவாசத்தினாலே நோவா... தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்” (எபிரெயர் 11:7).

நான் திரும்ப சொல்ல வேண்டியது அவசியம், நோவா நல்லவனாக இருந்த காரணத்தினால் இரட்சிக்கப்படவில்லை, அவன் அநேக காரியங்களில் ஒரு நல்ல மனிதனாக இருந்தான். ஆனால் அவன் ஒரு பரிபூரணமானவன் அல்ல, ஜலப்பிரளயத்திற்குப் பிறகு அவன் திராட்சரசம் குடித்தான் என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது (ஆதியாகமம் 9:20-21ஐ பார்க்கவும்). நாம் நோவாவை மன்னிக்க முடியும். அவனுக்குப் பயமூட்டக்கூடிய காரியத்தின் ஊடாக கடந்து சென்றான், மற்றும் தன்னுடைய பயங்களின் நடுக்கத்திலிருந்து குறைத்துக்கொள்ள இரவு நேரங்களில் வெள்ள சமயத்தில் திராட்சரசம் குடிக்க பழகியிருக்கலாம். அல்லது அது ஒரு தவறு மட்டுமே, பெருவெள்ளத்தின் தண்ணீர் குறைந்து வருதற்கு முன்பாக அங்கே தண்ணீர் விதானம் மற்றும் நொதித்தல் இல்லாதிருந்தது.

இந்தக் காரியங்களில், நோவாவை ஒரு பரிபூரண மனிதனாக வேதாகமம் படம் பிடித்துக்காட்டவில்லை. ஆனால் அவர், பூரிட்டன்ஸ் சொன்னது போல, “பாவம் செய்திருந்தும் நீதிமானாக்கப்பட்டான்.” அவர் பரிபூரணமானவர் அல்ல, ஆனால் தேவனுடைய பார்வையில் விசுவாசத்தின் மூலமாக மனிதவடிவில் வந்த கிறிஸ்துவின் மூலமாக நீதிமானாக்கப்பட்டார். நோவாவுக்கு கிறிஸ்துவில் விசுவாசம் இருந்தது, அது தேவனுடைய கிருபையினாலே அவருக்குக் கொடுக்கப்பட்டது (ஆதியாகமம் 6:8 பார்க்க). நோவா கிறிஸ்துவில் விசுவாசத்தை அப்பியாசித்தபொழுது, தேவன் அவருடைய கணக்கில், கிறிஸ்துவின் நீதியை ஏற்றுக்கொண்டார், அல்லது எண்ணிக்கொண்டார். புதிய ஏற்பாட்டில் இந்தப் பாடத்தைக்குறித்துச் சில அற்புதமான காரியங்கள் சொல்லப்படுகிறது. ரோமர், நான்காம் அதிகாரம், ஐந்து மற்றும் ஆறாம் வசனங்களைக் கவனியுங்கள்.

“ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிற வரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும் [ஏற்றுக்கொள்ளப்படும்] ...எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக் கிறான்” (ரோமர் 4:5-8).

தேவன் நோவாவிடம் சொன்னபோது, “இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதியாகமம் 7:1), அவர் நோவாவின் பாவங்களை பார்க்கவில்லை என்று சொன்னார், ஏனென்றால் விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்துவின் நீதி அவனுடைய கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதுதான் மறுமலர்ச்சியின் கவன வார்த்தையாகும் – “சோலா பைடு” – கிறிஸ்துவில் மட்டுமே விசுவாசத்தின் மூலமாக இரட்சிப்பு! நோவா நல்லவனாக இருந்தபடியினால் இரட்சிக்கப்படவில்லை. அவன் முன்னதாக மாம்சத்தில் வந்த கிறிஸ்துவில் விசுவாசத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டார்!

இப்பொழுது அந்தப் பேழையை பற்றி கவனிப்போம். அந்தப் பேழை ஒரு படகு அல்ல. அது பிரயாணம் செய்ய கட்டப்பட்டது அல்ல. அது ஒரு நீளமான கருப்பான மறைக்கப்பட்ட முனைகளை கொண்ட பெட்டியாகும். அது முற்றிலும் கருப்பான கீலினால் மூடப்பட்டிருந்தது. இந்தப் பெட்டியை பற்றி டாக்டர் மெக்ஜி இந்த விமர்ச்சனத்தை கொடுத்தார்:

அநேக மக்கள் தங்களுக்குச் சிறு வயதில் ஞாயிறு பள்ளியில் படகு வீட்டை போன்ற படத்தைப்போல அந்தப் பெட்டி இருக்கும் என்ற உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது, எனக்கு, ஒரு கேலிக்குரிய பரிகாசமாக இருந்தது. அது உண்மையாக இருந்ததற்குப் பதிலாக அந்தப் பேழையின் ஒரு கேலிச்சித்திரமாக இருந்தது.
     அந்தப் பெட்டியைக் கட்டுவதற்குக் கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு ஆரம்பித்து, அது கணிசமாக பெரிதாக காணப்பட்டது. “அந்தப் பெட்டியின் நீளம் முந்நூறு முழமாகும்”. ஒரு முழம் பதினெட்டு அங்குளமாக இருக்கும்பொழுது, அந்தப் பெட்டியானது எவ்வளவு நீளம் இருந்திருக்கும் என்று கணித்துக் கொள்ளலாம்.
     அந்த நாளின் இப்படியாக அவர்கள் எப்படிக்கட்டியிருக்க முடியும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். எனது நண்பரே, நாம் குகை மனிதனை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஒரு மிகவும் புத்திசாலியான மனிதனிடம் சலகிரணை செய்கிறோம். பாருங்கள், இன்றைக்கு இருக்கிற மனித வர்க்கத்தின் புத்திசாலிதனம் நோவா மூலமாக வந்து, மற்றும் அவர் மிகவும் புத்திசாலியான மனிதனாக இருந்திருக்கக்கூடும்.
     நோவா ஒரு சமுத்திரத்தில் செல்லும் ஐம்பது அடி உயர அலைகளுக்குத் தாங்கதக்க கப்பலைக் கட்ட வில்லை. அவர் கட்டியதெல்லாம், மிருகங்கள் மற்றும் மனிதனின் வாழ்க்கைக்கு ஒரு இடம், சில காலத்துக்குத் தங்கும்படியாக – ஒரு புயலின் ஊடாக போக வேண்டிய தில்லை, ஆனால் வெள்ளத்தில் அப்படியே காத்திருக்க வேண்டும். அந்தக் காரணத்திற்காக கட்டப்பட்டது, நீங்கள் சமுத்திரத்தில் செல்லும் கப்பலில் காண்பதை போல ஒரு பெரிய வித்தியாசம் அந்தப் பேழையில் இருந்திருக்கலாம், அது ஒரு பெரிய அதிக அறைக்கு ஒப்பந்ததை உடையதாகும் (J. Vernon McGee, Thru the Bible, Thomas Nelson, 1983, volume I, p. 39).

ஒயிட்காம் மற்றும் மோரிஸ் அவர்கள் பாபிலோனியர்களுக்கு ஒரு முழத்துக்கு 19.8 அங்குலங்கள் மற்றும் எகிப்தியர்களுக்கு 20.65 அங்குலங்கள் ஒரு முழம் என்று குறிப்பிடுகிறார். ஒயிட்காம் மற்றும் மோரிஸ் சொல்லும்போது எபிரெயர்களுக்கு ஒரு முழம் 20.4 அங்குலங்கள் என்று சொல்லுகிறார் (John C. Whitcomb and Henry M. Morris, The Genesis Flood, Presbyterian and Reformed Publishing Company, 1993, p. 10). அது ஐநூற்றொன்று அடி நீளமாகும். தீ குயின் மேரி, லாஸ் ஏஞ்சலுக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள, நீண்ட கடற்கரையின் கீழே, 1018 அடி நீளமாகும், அது அந்த பேழையின் இரு மடங்கு நீளமாகும். ஆனால் குயின் மேரியினுடைய அதிகமான இடத்தின் பரப்பளவு எஞ்சின் மற்றும் உபகரணங்களை வைப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பேழையில் எந்தவிதமான இயந்திர சாதனங்களும் இல்லை. அது முழுவதுமாக காலியாக இருந்தது, அதனுடைய காலியிடங்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்குப் போதுமானதாக இருந்தது, அல்லது ஒருவேளை அதிகமானதாக, குயின் மேரியைவிட பெரிதாக இருந்திருக்கலாம் – அது ஒரு மிகப் பெரிய பாத்திரம்.

டாக்டர் ஒயிட்காம் மற்றும் டாக்டர் மோரிஸ் சொன்னது சரி அதாவது பேழையின் மகத்தான அளவானது ஒரு உலக அளவு வெள்ளம்:

ஒரு சாதாரண உள் ஊர் வெள்ளத்துக்கு அவ்வளவு பெரிய பூதாகரமான மகத்தான பேழை அவசியமில்லை என்பது மட்டுமல்ல, ஆனால் அங்கே ஒரு பேழையும் அவசியமே இல்லை! அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தை கட்டின முழு செயல்முறையும், ஒரு நூற்றாண்டாக திட்டமிட்டு மற்றும் உழைத்தது, ஒரு உள் ஊர் வெள்ளத்துக்குத் தப்பும்படி யாக, அதுபோல விவரிக்கப்பட்ட எந்த பொருளும் ஆனால் முற்றிலுமாக மதியீனமாக மற்றும் தேவையற்ற தாக இருந்தது. வரபோகும் அழிவைக்குறித்து நோவா வுக்கு தேவன் எச்சரித்தது எவ்வளவுக்கு அதிகமான அர்த்தமுள்ளதாக இருந்திருக்க வேண்டும், அதன் மூலமாக வெள்ளத்தினால் பாதிக்கப்படாத ஒரு இடத்துக்கு அவரால் நகர முடிந்தது, லோத்து வானத்திலிருந்து அக்கினி விழுவதற்கு முன்பாக சோதோமிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது போல. அதுபோல மட்டுமல்ல, மேலும் எல்லாவிதமான பெரிய அளவு மிருகங்களும், நிச்சயமாக பறவைகள், எளிதாக வெளியே சென்று இருக்க முடியும், ஒரு வருடகாலம் பேழையில் அடைத்து மற்றும் பாதுகாத்தாலும்! இந்த வெள்ளம் கிழக்கின் அருகே உள்ள சில இடத்தில் நடந்திருக்கலாம் என்று வரையறுக்கப்பட்டது (John C. Whitcomb and Henry M. Morris, The Genesis Flood, Presbyterian and Reformed, 1993, p. 11).

இந்தப் பேழையை பற்றி இன்று நமக்கு பெரிய உற்சாகமாக உள்ள ஏழு காரியங்கள் உள்ளன. அவைகளில் மூன்று காரியங்களை நாம் சிந்திக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

I. முதலாவதாக, நீ இரட்சிக்கப்படுவதற்கு கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்தப் பேழை நமக்குச் சொல்லுகிறது.

நமது ஆரம்பப் பாடம் நமக்குச் சொன்னது

“கர்த்தர் நோவாவை நோக்கி நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதியாகமம் 7:1).

இப்பொழுது ஆதியாகமம் ஏழு, பதினாறாம் வசனத்தைக் கவனியுங்கள்:

“நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன. தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாகச் சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன. அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்” (ஆதியாகமம் 7:15-16).

மற்றும் ஏழாம் வசனம் சொல்லுகிறது:

“ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்” (ஆதியாகமம் 7:7).

நோவாவும் அவருடைய குடும்பமும் தேவன் சொன்னபடியே செய்தார்கள் (ஆதியாகமம் 7:1). அவர்கள் பேழைக்குள் பிரவேசித்தார்கள். நீ கிறிஸ்துவுக்குள் வரவேணடியது அவசியமாகும். வேதாகமம் சொல்லுகிறது,

“அவரை [இயேசு] விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள் ளாகத் தீர்க்கப்படான்...” (யோவான் 3:18)

அந்த “ரை” என்ற வார்த்தை “இஸ்” என்று மொழிபெயர்க்கபட்டது. டாக்டர் ஜோடியாடீஸ் சொன்னபடி, அதன்பொருள் “இயக்கத்தின் பிரதானமான எண்ணம் ஒரு இடத்துக்குள் அல்லது பொருளுக்குள்.” நீங்கள் விசுவாசத்தின் மூலமாக இயேசுவுக்குள் – மேலே பரலோகத்தில், தேவனுடைய வலது பாரிசத்தில் வர வேண்டும். நோவா பேழைக்குள் வந்தது போல, நீங்கள் கிறிஸ்துவுக்குள் வர வேண்டியது அவசியம். “அவரை விசுவாசிக்கிறவன் [அவருக்குள்] ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படான்...” (யோவான் 3:18). “கிறிஸ்துவுக்குள்” இருப்பவர்கள் என்பதை பற்றி அநேக நேரங்களில் வேதம் பேசுகிறது. நன்றாக அறிந்த இரண்டு வசனங்கள் இங்கே உள்ளன:

“ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களா யிருந்து... ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோமர் 8:1).

“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்…” (II கொரிந்தியர் 5:17).

“கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களை” பற்றி பவுல் பேசுகிறார் (ரோமர் 16:7).

நீ கிறிஸ்துவுக்குள் இருக்கிறாயா? நோவா பேழைக்குள் வந்தது போல, நீ விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்துவுக்குள் வர வேண்டும். இயேசு சொன்னார்,

“நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்” (யோவான் 10:9).

இதை எப்படி விளக்குவது என்று எனக்குச் சரியாக தெரியாது, ஆனால் எளிதாக தோன்றுகிற இதற்குள் மக்களை வரவழைப்பது என்பது ஊழியத்தில் மிகவும் கஷ்டமான காரியங்களில் ஒன்றாக காணப்படுகிறது என்பது கருத்தாகும்: கிறிஸ்துவிடம் வா. கிறிஸ்துவுக்குள் வா!

இதை நான் இப்படி அமைக்கிறேன். ஒருவேளை நீ நோவாவின் காலத்தில் வாழ்ந்திருந்தால் மற்றும் ஒரு பெரிய வெள்ளம் வர போகிறது என்று அவர் பிரசங்கிப்பதை கேட்டு இருந்தால். நீ காப்பாற்ற பட வேண்டுமானால் பேழைக்குள் வா என்று அவர் சொல்லுவதை நீ கேட்கிறாய். “ஆம்,” நீ சொல்லுகிறாய், “இது உண்மை. நியாயத்தீர்ப்பு வருகிறது. ஆமாம், இது உண்மை, அந்த பேழை மட்டுமே என்னை காப்பாற்ற முடியும். நான் அதை விசுவாசிக்கிறேன்.” நீ அந்த வெள்ளத்தில் காப்பாற்றப்பட்டிருக்க முடியுமா? ஒருவேளை இல்லை! நீ மெய்யாகவே இரட்சிக்கப்படுவதற்கு எழுந்திருந்து பேழைக்குள் வந்திருக்க வேண்டியது அவசியம் – அது உன்னை இரட்சிக்க முடியும் என்று வெறுமையாக விசுவாசிப்பது மட்டுமல்ல – ஆனால் அதற்குள் வர வேண்டும்! அதைதான் நீ செய்ய வேண்டுமென்று நான் கேட்கிறேன்! அங்கே உட்கார்ந்து கிறிஸ்து இரட்சிக்க முடியும் என்று நீ விசுவாசிக்க வேண்டாம்! விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்துவுக்குள் வா! இயேசு சொன்னார்:

“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37).

ஆமாம், நீ கிறிஸ்துவுக்குள் வர வேண்டுமென்று அந்தப் பேழை சொல்லுகிறது.

II. இரண்டாவதாக, நீ சபைக்குள் வர வேண்டியது அவசியம் என்று அந்தப் பேழை சொல்லுகிறது, கிறிஸ்துவின் சரீரம்.

அநேக மக்கள் என்னோடு ஒத்துக்கொள்ளுவதில்லை என்று நான் உணர்த்தப்படுகிறேன். அநேகர் இன்று உள் ஊர் சபையை குறைவாக எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் செய்வது தவறு. பேழையானது கிறஸ்துவுக்கு ஒரு அடையாளம் மட்டுமில்லை. அது ஒரு புதிய ஏற்பாட்டு, உள் ஊர் சபையின் படமாகவும் உள்ளது.

இப்பொழுது, நீ எப்படி சபைக்குள் வருவாய்? I கொரிந்தியர், பன்னிரண்டாம் அதிகாரம், இருபத்தி ஏழாம் வசனம், அது சொல்லுகிறது,

“நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள். தேவனானவர் சபை யிலே…” (I கொரிந்தியர் 12:27-28).

நாம் இங்கே நிறுத்தலாம். இங்கே “கிறிஸ்துவின் சரீரம்” என்பது சபையை, உள் ஊர் இயேசுவுக்குள் விசுவாசிகளான சரீரத்தை குறிக்கிறது என்ற உண்மையை நான் விவரிக்க விரும்புகிறேன். இப்பொழுது பதிமூன்றாம் வசனத்தை கவனியுங்கள்:

“ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ் நானம்பண்ணப்பட்டோம்...” (I கொரிந்தியர் 12:13).

நீ பரிசுத்த ஆவியினாலே உள்ஊர் சபையிலே ஞானஸ்நானம்பண்ணப்பட்டாய். இவ்வாறாக தான் நீ ஒரு உண்மையான, ஜீவிக்கிற உறுப்பினராக சபையில் மாறுகிறாய்!

இப்போது, இது எப்படி நடக்கிறது என்று கவலைப்படுவது உன்னுடைய காரியம் அல்ல. இயேசுவுக்குள் வர வேண்டியது உன்னுடைய காரியமாகும். நீ இயேசுவுக்குள் வரும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் தானாகவே உன்னை அந்தச் சபைக்குள் ஞானஸ்நானம் செய்கிறார்!

தயவுசெய்து ஆதியாகமம், ஏழாம் அதிகாரம், பதினாறாம் வசனத்துக்கு திருப்பிக்கொள்ளுங்கள். நோவா பேழைக்குள் வந்தபொழுது, வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் அவனை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார்” (ஆதியாகமம் 7:16). பரிசுத்த ஆவியானவராகிய தேவன் ஆவிக்குரிய பிரகாரமாக சரீரத்திற்குள் உன்னை சபைக்குள் வைத்து மூடுவதை பற்றி பேசுகிறது! ஆமாம், பேழையானது கிறிஸ்துவுக்குள் உள்ள ஒற்றுமையைப் பற்றி பேசுகிறது மற்றும் உள்ஊர் சபையில் உள்ள ஒற்றுமையைப் பற்றி பேசுகிறது. நீ கிறிஸ்துவோடு மற்றும் உள்ஊர் சபையில் கர்த்தர் மூலமாக “உள்ளே வைத்து அடைக்க” படாவிட்டால், நீ நியாயத்தீர்ப்பில் அழிந்துவிடுவாய். நீ உள்ளே வைத்து “அடைக்கப் பட்டால்” பாதுகாப்பாக இருப்பாய். இது மாற்றப்பட்டவர்களுக்கு உள்ள நித்தியமான பாதுகாப்பை பற்றி பேசுகிறது. கிறிஸ்துவைக் கவனிப்பவர்கள் ஒருபோதும் அழிக்கப்படமாட்டார்கள்!

III. மூன்றாவதாக, நீ நெருக்கமான வாசல் வழியாக பிரவேசிக்க வேண்டியது அவசியம் என்று அந்த பேழை சொல்லுகிறது

நோவா பேழைக்குள் எப்படி பிரவேசித்தார்? ஆதியாகமம், ஆறாம் அதிகாரம், பதினாறாம் வசனத்துக்கு திருப்பிக்கொள்ளவும்:

“...பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைக்க வேண்டும்...” (ஆதியாகமம் 6:16).

இயேசு சொன்னார், “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்...” (யோவான் 10:9). நோவா கதவு வழியாக பேழைக்குள் வந்தார். நீ கிறிஸ்து மூலமாக இரட்சிப்புக்குள் வர வேண்டியது அவசியம். இயேசு சொன்னார், “இடுக்கமான [நெருக்கமான] வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்” (மத்தேயு 7:13).

மறுபடியுமாக, கிறிஸ்து சொன்னார்:

“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப் படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 13:24).

அதுவே நோவாவின் நாட்களில் சரியாக நடந்தது. ஆதியாகமம், ஏழாம் அதிகாரம், வசனம் நான்கு. தேவன் சொன்னார்:

“இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப் பண்ணுவேன்...” (ஆதியாகமம் 7:4).

பத்தாம் வசனத்தை கவனியுங்கள்:

“ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று” (ஆதியாகமம் 7:10).

நோவா பேழைக்குள் பிரவேசித்தார். தேவன் அவரை உள்ளே விட்டு கதவை அடைத்தார். கதவு அடைக்கப்பட்டது. ஏழுநாள் ஆனது மற்றும் ஒன்றும் நடக்கவில்லை. அதன்பிறகு நியாயத்தீர்ப்பு ஆரம்பித்தது. ஒருவரும் உள்ளே பேழைக்குள்ளே பிரவேசிக்கவில்லை! அது மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது,!

மக்கள் சத்தமிடுவதை என்னால் கேட்க முடிகிறது “எங்களை உள்ளே விடுங்கள்! எங்களை உள்ளே விடுங்கள்!” ஆனால் அது மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது!

“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப் படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 13:24).

இப்பொழுதே இயேசுகிறிஸ்துவிடம் வா – அதிக காலதாமதம் ஆவதற்கு முன்பாக!

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்: ஆதியாகமம் 6:5-8.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“If You Linger Too Long” (by Dr. John R. Rice, 1895-1980).


முக்கிய குறிப்புகள்

நோவா கிருபை பெற்றார்!

(ஆதியாகம புத்தகத்தில் 19வது போதனை)
NOAH FOUND GRACE!
(SERMON #19 ON THE BOOK OF GENESIS)
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“கர்த்தர் நோவாவை நோக்கி நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதியாகமம் 7:1).

(ஆதியாகமம் 6:8; எபிரெயர் 11:7; ஆதியாகமம் 9:20-21; ரோமர் 4:5-8)

I.    முதலாவதாக, நீ இரட்சிக்கப்படுவதற்கு கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்தப் பேழை நமக்குச் சொல்லுகிறது, ஆதியாகமம் 7:16,7; யோவான் 3:18; ரோமர் 8:1;
II கொரிந்தியர் 5:17; யோவான் 10:9; யோவான் 6:37.

II.   இரண்டாவதாக, நீ சபைக்குள் வர வேண்டியது அவசியம் என்று அந்தப் பேழை சொல்லுகிறது, கிறிஸ்துவின் சரீரம்,
I கொரிந்தியர் 12:27-28, 13; ஆதியாகமம் 7:16.

III.  மூன்றாவதாக, நீ நெருக்கமான வாசல் வழியாக பிரவேசிக்க வேண்டியது அவசியம் என்று அந்தப் பேழை சொல்லுகிறது, ஆதியாகமம் 6:16; யோவான் 10:9; மத்தேயு 7:13; லூக்கா 13:24; ஆதியாகமம் 7:4; ஆதியாகமம் 7:10.