Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
இயேசுவை நோக்கி

LOOKING UNTO JESUS
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஜூன் 11, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை காலை
வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
டாக்டர் ஆர். எல் ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, June 11, 2017

“விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக் கிற இயேசுவை நோக்கி… அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் (எபிரெயர் 12:1-2).


இந்த வசனம் கிறிஸ்துவின் நற்செய்தியை விளக்குகிறது. உண்மையான கிறிஸ்தவனின் நிலையை எளிமையாக விளக்க இதைவிட ஒரு தெளிவான வசனத்தை என்னால் இந்த வேதத்தில் காணமுடியவில்லை.

இப்பொழுது, இந்தப் போதனையை நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டியது அவசியமாகும், என்னால் முடிந்தவரையிலும் இந்த வசனங்களை எடுத்து மற்றவசனங்களை கொண்டு உங்களுக்குக் கவனமாக விளக்குகிறேன். இருளும் குழப்பமும் உள்ள இப்பொழுது, கிறிஸ்துவின் வெளிச்சம் உங்களுக்குள் பிரகாசிக்கதக்கதாக இந்தப் பாடம் உங்கள் இருதயத்தை திறப்பதாக.

ஒரு நபர் சபைக்குப்போகலாம் ஆனாலும் இன்னும் பெரிய இருளில் இருக்கக்கூடும். ஒரு நபர் வேதத்தை அதிகமாக கற்றிருக்கலாம், இன்னும் படிப்பதிலும் குழப்பத்தில் மற்றும் புரிந்துகொள்ளுதலிலும் இருளில் இருக்கக்கூடும். நான் பிரசங்கிக்கும்பொழுது தேவன் தாமே “உங்களுடைய மனக்கண்களை” (எபேசியர் 1:18) திறந்தருள வேண்டும் என்பது என்னுடைய ஜெபமாக இருக்கிறது. தேவன் இதை செயய்யும்போது மட்டுமே இந்த வசனத்தின் சில சத்தியங்களை நீங்கள் ஜீரணிக்க முடியும்.

இந்தப் பாடம் நமக்கு மூன்று அடிப்படையான சத்தியங்களை தருகிறது:


1. இயேசு உனக்காக என்ன செய்தார்.

2. இயேசு உனக்காக இதை ஏன் செய்தார்.

3. இதன் நன்மைகளை எப்படி பெற்றுக்கொள்வது.

I. முதலாவதாக, இயேசு உனக்காக என்ன செய்தார்.

“இயேசுவை நோக்கி [அவர்]… அவமானத்தை எண்ணா மல், சிலுவையைச் சகித்தார் (எபிரெயர் 12:2).

“சகித்தார்” என்பதன் கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “உபத்திரவத்தில் பொறுமையோடு செல்லுதல்” (வலுவாக). உனது ஆத்துமாவை பாவத்துக்கான தண்டனையிலிருந்து இரட்சிக்க இயேசு பெரிய உபத்திரவத்தில் மற்றும் கஷ்டத்தின் ஊடாக பொறுமையோடு சென்றார். பூலே இதை இப்படி சொன்னார்:

(கிறிஸ்து) சிலுவையினுடைய பாடுகளையும் சகித்தார், சகலவிதமான துன்பங்களையும் (சேர்ந்த துக்கங்களையும்) பாடுகளையும் சகித்தார், ஆத்துமாவின் துக்கங்கள், அவரது சரீரத்தில் அடைந்த தாங்கமுடியாத வேதனைகள், (அடிகள்), வலிகள், முட்களால் உருவக்குத்துதல், வாரினால் அவரது மாம்சத்தை கிழித்தெடுத்தல், ஆணிகளால் (துளையிட்டு) அவரது கைகளிலும் பாதங்களிலும் துளைத்தல், அழுக்கான அல்லது பிசாசுகளின் ஆத்திரத்தினாலும் அல்லது அவர்மீது மனிதனால் விளைவிக்கக்கூடிய சகலவித பொல்லாப்பாலும்; அவர் தமது பாரத்தினால் துவண்டுபோனது மட்டும் அல்ல, அதில் அமிழ்ந்ததுமல்லாமல் அதின்கீழ் மடங்கடிக்கப்பட்டார். அவரைப்பற்றி முன்சொல்லப்பட்ட எல்லாவிதமான பாடுகளை மற்றும் என்னவொரு காணக்கூடாத சாந்தத்தோடு சகித்தார் (ஏசாயா 53ல்)! (Matthew Poole, comment on Hebrews 12:2).

அதன்பிறகு, அதனோடு கூட, கிறிஸ்து சிலுவையில் அறையப்பட சென்றார் “அவமானத்தை சகித்தார்” (எபிரெயர் 12:2). “அவமானப்படுதல்” என்றால் “எளிதாக எடுத்துக்கொள்ளப்படுதல்” அல்லது “அற்பமாக நினைத்தல்” (Vine’s). இயேசு கடந்து சென்ற பெரிய பாடுகளை மிகவும் எளிதாக நினைத்தார் ஏனென்றால் உன்னையும் என்னையும் இரட்சித்துத் தேவனுக்கு மகிமையை செலுத்த அவர் நினைத்துக் கொண்டிருந்தார். “அவமானத்தை சகித்தார்”. அவமானம் என்பதின் அர்த்தம் “ஏளனம்” என்பதாகும் (வலுவாக). உன்னுடைய பாவ தண்டனையிலிருந்து உன்னை இரட்சிக்க இயேசு அவமானப்பட வேண்டியதாகயிருந்தது. அவர் உன்னுடைய ஸ்தானத்தில் அவமானப்பட வேண்டியதாகயிருந்தபடியினால், நீ கடைசி நியாயத்தீர்ப்பில் அவமானப்பட வேண்டியதாகயிருக்காது.

இயேசு அடிக்கப்பட்டதின் மூலமாக அவமானம் அடைந்தார். அவர் துப்பப்பட்டதின் மூலமாக மற்றும் அவருடைய தாடைமயிர் பிடுங்கப்பட்டதின் மூலமாக அவர் அவமானம் அடைந்தார். கோபமான கும்பல், “அவனை சிலுவையில் அறையும்! அவனை சிலுவையில் அறையும்!” என்று கூச்சல் போட்டதினால் அவர் அவமானம் அடைந்தார். அவருடைய ஆடைகள் எல்லாம் அவிழ்க்கப்பட்டபடியினால், மற்றும் அவர் நிர்வாணமாக சிலுவையிலே தொங்கினபடியினாலும் அவமானப்பட்டார்.

அவர் அவமானப்பட்டார், வெட்கப்பட்டார், உன்னுடைய ஸ்தானத்தில்.

“ஏனெனில், கிறிஸ்துவும்... அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்” (I பேதுரு 3:18).

“கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா53:6).

உன்னுடைய பாவங்களுக்காக நீ அனுபவிக்க வேண்டிய தண்டனையை இயேசு எடுத்துக்கொண்டார். இயேசு உன்னுடைய ஸ்தானத்தில் தண்டிக்கப்பட்டார்.

இயேசு உன்னுடைய ஸ்தானத்தில் அவமானப்பட்டார். கடைசி நியாயத்தீர்ப்பில் நீ வாழ்நாளெல்லாம் செய்த ஒவ்வொரு பாவமும் தேவனால் வாசிக்கப்படும். இது உலகம் முழுவதிற்கும் முன்பாக உன்னை வெட்கத்துக்குள்ளாக்கும். ஆனால் இப்பொழுது நீ இயேசுவை நம்பினால், அவர் உன்னுடைய ஸ்தானத்தில் அவமானப்பட்டார். நீ நிர்வாணமாக நிறுத்தப்பட்டு உன்னுடைய பாவங்களுக்காக உன்னை அவமானப்படுத்துவதற்குப் பதிலாக, இயேசு உன்னுடைய ஸ்தானத்தில் அவமானப்பட்டு, சிலுவையிலே நிர்வாணமாக நின்றார் – நீ அவரை விசுவாசித்தால் இது உன்னுடையதாகும்!

“பிறர் பொருட்டு செய்கின்ற பாவ நிவாரணபலி” என்பதை பற்றி இயேசு கிறிஸ்து சிலுவையிலே அடிக்கப்பட்டார் என்று வேதாகமம் போதிக்கிறது! டாக்டர் P. B. பிட்ஸ்வாட்டர் சொல்லுகிறார்:

அவர் பிறர் பொருட்டுச் செய்கின்ற பாவ நிவாரணபலியா னார், இதன்பொருள் மற்றவர்களுக்காக செயல்படுதல், அல்லது மற்றவர்களுக்காக, ஏற்படுத்தப்படுதல் (Christian Theology, Eerdmans, 1948, p. 426).

ஆங்கிலப் வார்த்தையான “vicarious” என்பதற்கு பொருள் “ஒருவனுடைய இடத்தை மற்றொருவன் சொந்தமாக்கிக் கொள்ளுதல்” (Webster’s New Collegiate Dictionary, 1960).

இதைதான் இயேசு கிறிஸ்து உனக்காக செய்தார்! “ஒரு நபருடைய (நீ) ஸ்தானத்தில் வேறொருவர் (கிறிஸ்து) ஏற்படுத்தப்பட்டார்.” உனக்குவர வேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார்.

வேதாகமம் சொல்லுகிறது:

“கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டார்” (எபிரெயர் 9:28).

“கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:3).

கிறிஸ்து உன்னுடைய பாவங்களுக்குச் செலுத்த வேண்டிய தண்டனை கிரயத்தைச் செலுத்தினார். அவர் கிரயத்தைச் செலுத்தினார்.

எனது ஒன்றுவிட்ட அப்பா ஒரு கடினமான பழைய மாறினியாகும். ஒருதரம் அவர் ஒரு போலீஸ்காரரை இருக்கையில் உதைத்தார். அதனால் அவர்கள் அவரை சிறையில் அடைத்தார்கள். நடு இரவில் எனது தாயார் எடி கேலிக்கை அழைத்து ஜாமீனில் விடுவிக்கும்படி கேட்டார். எடி சிறைக்குச்சென்று ஜாமீன் தொகையைக் கட்டினார். அவர்கள் எனது ஒன்றுவிட்ட அப்பாவை விடுவித்தனர். அவர் சிறைக்கு வெளியே நடந்தபொழுது, ஏடியை பார்த்து, இவ்வாறாக கேட்டார், “இங்கே நீ என்ன செய்கிறாய்?”.

அது இயேசு செய்ததை எனக்கு நினைவுப்படுத்தியது. நீ உனது பாவ தண்டனையான நரகத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்காக அவர் ஜாமீன் தொகையை செலுத்தினார். நாம் அவரை சிலுவையில் பார்த்து கேட்கிறோம், “இங்கே நீ என்ன செய்கிறாய்?”. பதில் என்னவென்றால் – தேவனுடைய சிறையாகிய நரகத்திலிருந்து உன்னை விடுவிக்க தக்கதாக – அவர் ஜாமீன் தொகையை செலுத்தினார்! உன்னுடைய நம்பிக்கையை இப்பொழுது இயேசுவின் மீது வை!

II. இரண்டாவதாக, இயேசு உனக்காக இதை ஏன் செய்தார்.

“அவர் தமக்கு முன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு” (எபிரெயர் 12:2).

இயேசு துணிவோடு சிலுவைக்கு சென்றார். அவரால் எந்த நேரத்திலும் தப்பி செல்லும் வல்லமை உடையவராக இருந்தார். அதற்கு பதிலாக, “அவர் அடிக்கப்படுவதற்கு கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியை போல இருந்தார்” (ஏசாயா 53:7). உன்னுடைய பாவங்களுக்காக கிரயத்தை செலுத்த அவர் ஏன் சாந்தமாக சிலுவைக்குப் போனார்? அவர் எதற்காக செய்தார் என்றால் “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு” (எபிரெயர் 12:2).

முதலில், பரலோகத்தில் பிரவேசிக்கும் சந்தோஷம் அவருக்கு இருந்தது. கிறிஸ்து சிலுவையில் மரித்தபொழுது அவர் உடனடியாக பரலோகத்தில் பிரவேசிப்பார் என்று அறிந்திருந்தார். அவருக்கு அருகில் சிலுவையில் மரித்துக் கொண்டிருந்த கள்ளனிடம் சொன்னார், “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” (லூக்கா 23:43).

அதன்பிறகு, அவர் உன்னையும் பரலோகத்தில் பிரவேசிப்பாய் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சந்தோஷத்தை உடையவராக இருக்கிறார். அந்தத் திருடனுடைய மனமாறுதலை பார்த்தபொழுது இயேசுவுக்கு என்னவொரு பெரிய சந்தோஷம் இருந்திருக்க வேண்டும்! அவர் உன்னை பார்க்கும்போதும் அப்படியே சந்தோஷப்படுவார்.

நேற்று நான் சில மனிதர்கள் கிறிஸ்துவுக்குள் நடத்தப்படுவதை பார்த்தேன். அவர்களில் ஒருவர் டீக்கன்களின் தலைவர் ஆவார். மற்றொருவர் ஒரு போதகருக்கு உதவிகாரராக இருந்தவர். இந்த மனிதர்கள் கிறிஸ்துவுக்குள் நடத்தப்படுவதை பார்த்தபொழுது, நாற்பது வருடங்களுக்கு முன்பாக நான் கிறிஸ்துவுக்குள் நடத்தப்பட்டபொழுது அடைந்த சந்தோஷத்தை போல அது எனக்கு இருந்தது. இது கிறிஸ்து பரலோகத்தில் அனுபவிக்க நினைக்கும் சந்தோஷத்தின் பங்காகவும் இருக்கும். அவர் தம்மை துணிகரமாக சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தன் காரணமும் இதுவே ஆகும் – தேர்ப்பதற்காக “அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்க” (எபிரெயர் 2:10).

அதனால்தான் இயேசு “விசுவாசத்தை துவக்கிறவரும் முடிக்கிறவருமான வர்”. அவர் நமக்குள் விசுவாசத்தை சிருஷ்டிக்கிறார் மற்றும் பரிபூரணப்படுத்துகிறார் மற்றும் பாதுகாக்கிறார். இரட்சிப்பு என்பது முழுவதுமாக கிறிஸ்துவுக்குள் உள்ளது!

III. மூன்றாவதாக, இதன் நன்மைகளை எப்படி பெற்றுக்கொள்வது.

“இயேசுவை நோக்கி... தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் (எபிரெயர் 12:2).

அப்போஸ்தலர்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் கிறிஸ்து பரலோகத்துக்கு ஏறினதையும் தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருந்ததையும், அரிதாக ஒரு போதனையில் நேரடியான குறிப்பு இல்லாமல் பிரசங்கித்தார்கள். நமது நாட்களிலும் கூட, அப்போஸ்தலர்கள் செய்ததை போல, நாமும் செய்ய வேண்டும் என்று நான் உணர்த்தப்பட்டேன். அதை அப்படி நினைப்பதற்குக் காரணங்கள் இதோ:

1. கிறிஸ்துவின் பரமேறுதலை மற்றும் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருத்தலை பார்க்கும்பொழுது கிறிஸ்துவும் பிதாவும் இரண்டு நபர்களாக பளிங்கை போல தெளிவாக நமக்குத் தெரிகிறது – இரண்டு வித்தியாசமான – வேறுப்பட்ட நபர்கள். இன்று திரித்துவத்தின் வேதாகம போதனை மங்கலாகி வருகிறது. இந்த முக்கியமான கருத்தை அறியாமல் அநேகர் விரோதமாகி நவீனமாகி வருகிறார்கள்.

2. வேதாகமத்தின் பெரிய போதனைகளாகிய ஒப்புரவாக்குதல், நிவிர்த்தியாக்குதல், மற்றும் நீதிமானாக்குதல் வெளிப்படையாக இழக்கப்பட்டு வருகின்றன ஏனென்றால் திரித்துவத்தில் பிதாவாகிய தேவன் மற்றும் குமாரனாகிய இயேசு தனி நபர்களாக காணப்படவில்லை. கிறிஸ்துவில் மத்தியஸ்தர் வேலையானது பரமேறுதலின் மூலமாக வியக்கத்தக்க விதத்தில் விளக்கப்படுகிறது.

3. பரமேறுதல் மூலமாக தீர்மானம் எடுக்கும் இஷம் குணமாக்கப்படுகிறது. பரமேறின கிறிஸ்துவிடம் மக்களை கொண்டு வருதல் எல்லாவிதமான தீர்மான இஷத்தையும் குணமாக்குகிறது.


சில காலத்துக்கு முன்பாக பரிசேயன் மற்றும் ஆயக்காரன் பற்றி ஒரு புத்திசாலிதனமான போதனை கொடுக்கப்பட்டதை கேட்டேன் (லூக்கா 18:9-14). அவர் கிட்டத்தட்ட எல்லாவிதமான தீர்மானம் எடுக்கும் இஷத்தையும், “பாவிகளின் ஜெபத்தை சொல்லுதல்,” முன்னுக்கு வருதல், சபைக்குச் செல்லுதல், போன்றவைகளை வெளிப்படுத்தினார். அதன்பிறகு அவர் சொன்னார், “நீ இயேசுவை நம்ப வேண்டியது அவசியம்”. நான் நினைத்தேன், “பரிபூரணம்!”. ஆனால் அதன் பிறகு அவர் சொன்னார், “நீ இயேசுவை நம்புவது என்றால், உன்னுடைய பாவங்களுக்கான கிரயத்தை அவர் செலுத்த அதாவது மரித்தார் என்று நீ நம்ப வேண்டும்.” நான் நினைத்தேன், “ஓ, இல்லை! இந்தப் போதனையை அவர் விசுவாசித்து, இயேசுவை தாமே நம்புவதாக அறிக்கை செய்கிறார்!”

இந்தப் பிரசங்கியார் தமது புத்திசாலிதனமான போதனையை முடிக்கும்பொழுது இழக்கப்பட்ட பாவிகள் மேலே பார்ப்பதன் மூலமாக – பரமேறின கிறிஸ்து – தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பவர் – பரலோகத்தில் தானே!

“இயேசுவை நோக்கி (அவர்)... தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் (எபிரெயர் 12:2).

அதைதான் பார்க்க வேண்டும்! அவரைதான் விசுவாசிக்க வேண்டும்! அப்படிதான் இரட்சிக்கப்பட முடியும்!

“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப்போஸ்தலர் 16:31).

நோக்கி பார்த்து வாழ், என் சகோதரா, நீ வாழ்!
இப்பொழுது இயேசுவை நோக்கி பார்த்து வாழ்!
அது அவருடைய வார்த்தையில் பதிவுசெய்து உள்ளது, அல்லேலூயா!
நீ மட்டும் “நோக்கி பார் மற்றும் வாழ்.”
(“Look and Live,” William A. Ogden, 1841-1897).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்: யோவான் 12:28-32.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “
Look and Live” (William A. Ogden, 1841-1897).


முக்கிய குறிப்புகள்

இயேசுவை நோக்கி

LOOKING UNTO JESUS

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக் கிற இயேசுவை நோக்கி… அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் (எபிரெயர் 12:1-2).

I.   முதலாவதாக, இயேசு உனக்காக என்ன செய்தார் – “அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்தார்”, I பேதுரு 3:18; ஏசாயா 53:6; எபிரெயர் 9:28;
I கொரிந்தியர் 15:3.

II.  இரண்டாவதாக, இயேசு உனக்காக இதை ஏன் செய்தார் – “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு”, ஏசாயா 53:7.
1. பரலோகத்தில் பிரவேசிக்கும் சந்தோஷம், லூக்கா 23:42.
2. நீ பரலோகத்தில் நுழைவதை பார்க்கும் சந்தோஷம், எபிரெயர் 2:10.

III. மூன்றாவதாக, இதன் நன்மைகளை எப்படி பெற்றுக்கொள்வது – “இயேசுவை நோக்கி... தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்”, அப்போஸ்தலர் 16:31.