Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
பாவிகளுக்காக அப்பம் கேட்டுக் கொண்டிருத்தல் –
ஒரு புதிய சிந்தனை!

ASKING BREAD FOR SINNERS – A NEW THOUGHT!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஏப்ரல் 22, 2017 அன்று கர்த்தருடைய நாள் சனிக்கிழமை மாலை
வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, April 22, 2017


ஜான் சாமுவேல் கேஹன் சில நிமிடங்களுக்கு முன்பாக லூக்கா 11:5-13 வரை வாசித்தார். ஆனால் நீங்கள் அதற்கு மறுபடியுமாக திருப்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1090வது பக்கத்தில் இருக்கிறது. அது ஒரு தொல்லை கொடுக்கிற நண்பனின் உவமையாகும். இன்று இரவிலே இந்த உவமையிலே சில முக்கியமான காரியங்களை நான் வெளியே கொண்டுவர விரும்புகிறேன்.

முதலாவது, இந்த உவமையிலே மூன்று நபர்கள் இருக்கிறார்கள்.

“பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதி ராத்திரியிலே போய்: சிநேகிதனே, என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்” (லூக்கா 11: 5-6).

முதலாவது “நண்பனிடத்தில்” ஏராளமான ரொட்டிகள் இருந்தன. அவர் பிதாவாகிய தேவன். இரண்டாவது நண்பன் ரொட்டி வேண்டும் என்று கேட்பவன். அவன் கிறிஸ்தவன், அப்பம் வேண்டி நிற்பவன். அந்த மூன்றாவது நண்பன் கிறிஸ்தவனிடத்தில் வந்த மனிதன். அவன் இழக்கப்பட்ட ஒரு மனிதன், இரட்சிக்கப்படாத ஒரு நபர். இந்த மனிதனுக்குதான் அப்பம் வேண்டும். உண்மை கிறிஸ்தவர்களாகிய நீங்களும் நானும் அந்த இழக்கப்பட்ட மனிதருக்கும் தேவனுக்கும் இடையில் நிற்கிறோம். இந்த உவமையில் “அப்பம்” என்பது என்ன? முன்னதாக நம்மில் சிலர் அப்பம் பரிசுத்த ஆவி என்று நினைத்திருந்தோம். ஆனால் இப்பொழுது நான் நினைக்கிறேன் அது தவறு. பரிசுத்த ஆவியானவர், ஜெபத்திற்கு விடையாக, கொடுக்கப்படுகிறார் என்பது உண்மை, வசனம் 13ல்,

“பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்” (லூக்கா 11:13).

ஆனால் “அப்பம்” பரிசுத்த ஆவி அல்ல என்று நான் உணர்த்தப்பட்டேன். லூக்காவில் உள்ள இந்த உவமைக்கு டாக்டர் ஜான் ஆர். ரைஸ் விளக்கமாக எழுதினார் (Prayer: Asking and Receiving, Sword of the Lord, 1970, p. 70). “அப்பத்தை” குறித்து, டாக்டர் ரைஸ் சொன்னார் அது கிறிஸ்து. “அவர்தாமே அந்த அப்பமாக இருக்கிறார்” (யோவான் 6:35). “அப்பம்” என்பது முன்னதாக நான் பரிசுத்த ஆவி என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு. கிறிஸ்துதாமே அந்த அப்பமாக இருக்கிறார். இது புதிய ஏற்பாட்டில் தெளிவாக இருக்கிறது. இயேசு “ஜீவ அப்பமாக” இருக்கிறார் என்று கிட்டத்தட்ட ஒரு முழு அதிகாரமே பேசுகிறது. யோவான் ஆறாம் அதிகாரத்தில் இயேசு என்ன சொல்லுகிறார் என்று கவனியுங்கள்:

“வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்” (யோவான் 6:33).

“அந்த ஜீவஅப்பம் நானே” (யோவான் 6:35).

“ஜீவஅப்பம் நானே” (யோவான் 6:48).

“நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்” (யோவான் 6:51).

“நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே” (யோவான் 6:51).

இயேசுதாமே “ஜீவஅப்பம்” என்று நேரத்திற்கு நேரம் நமக்கு சொல்லப்பட்டது.

பிறகு அந்தக் கிறிஸ்தவன் லூக்கா 11:6ல் ஏன் அப்படி சொன்னான் “என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை”? ஏனென்றால் அவர்களை “ஜீவ அப்பம்” சாப்பிட வைக்க நாம் சக்தி அற்றவர்கள்! நாம் ஆத்தும ஆதாயம் செய்வதில் மற்றும் நமது பிரசங்கத்தில், நாம் அவர்களுக்கு “ஜீவஅப்பம்” கொடுக்க நமக்குச் சக்தி இல்லை! நமக்கு சுவிசேஷம் தெரியும், ஆனால் நம்மிடம் வல்லமை இல்லை என்று, நாம் உணருகிறோம், அதனால் நாம் அறிந்திருக்கிறோம் “என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை” (லூக்கா 11:6).

அதுதான் என்னுடைய அறிக்கை – “அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை”. இன்று ஒரு பாப்டிஸ்ட் சபைக்கு அநேக இளம் மக்கள் விஜயம் செய்யும்போது அதைதான் அவர்கள் உணருகிறார்கள். அவர்களுக்குத் தேவையானதை சபை அவர்களுக்குக் கொடுக்க முடியவில்லை என்று அவர்கள் உணருகிறார்கள். நமது அதிகபடியான பாப்டிஸ்ட் சபைகளுக்கு, அவர்களிடம் ஏதோசில சமகாலப் பாடல்கள் தவிர “அவர்கள் முன் வைக்கிறதற்கு அவர்களிடத்தில் ஒன்றுமில்லை”. நான் அவர்களை எவ்வளவாக வெறுக்கிறேன்! அவர்களின் சத்தம் ஒன்றுபோலவே இருக்கிறது! அவர்களிடம் “ஆராதனை பாடல்கள்” இருக்கின்றன – ஒரு பாவிக்கு இயேசு தேவை என்று நினைக்க செய்ய அவர்களிடத்தில் ஒன்றுமில்லை! அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை ஆனால் ஒரு ஒன்றுமில்லாத “ஆராதனை” பாடல். ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை! அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை ஆனால் ஒரு காய்ந்துபோன குப்பையான, ஜீவனில்லாத, வசனத்துக்கு வசனம் வேதவிளக்கம். ஒன்றுமில்லை ஆனால் மரித்துப்போன “ஆராதனை” பாடல்கள் ஒரு மந்தமான மற்றும் சலித்துப்போன வேத ஆராய்ச்சி. சென்ற இரவு கேட்டீர்கள்! எந்த ஒரு ஆரோக்கியமான, சாதாரண இளம்மக்களும் அதனால் உதவிபெற முடியாது. ஜீவனோடிருந்த ஒரேகாரியம் பால் ரைடர் பாடிய பெரிய ஈஸ்டர் பாடல், “மீண்டும் உயிர்த்தார்”. நாம் பாதி மரித்த வழிபாட்டுமுறையில் மிகவும் மாய்மாலம் உள்ளவர்கள் நாம் அதை சரியாகபாட நம்மை போதுமான அளவுக்கு எழுப்ப நான் கத்தி மற்றும் வியர்வை சிந்தவேண்டி இருக்கிறது! நமது சபைகள் இழக்கப்பட்ட இளம் மக்களை உலகத்திலிருந்து ஜெயிக்க முடியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை! நாம் 90% சதவீதம் இளம் மக்களை சபையில் ஏற்கனவே இழந்துவிட்டோம் என்பதில் ஆச்சரியமில்லை. நான் இளம் வயதில் இருக்கும்போது அதுதான் நடந்தது என்பதில் ஆச்சரியமில்லை. என்னை விடுவிக்க எனது சபையில் ஒன்றுமில்லாதிருந்தது. அது மரித்த மற்றும் காய்ந்துபோன மற்றும் ஊசிப்போனதாக இருந்தது. என்னுடைய முதல் சபையில் எனக்கு சவாலாக ஒன்றுமில்லை. ஒவ்வொரு வழிபாட்டிலும் எனது மனம் பின்நோக்கி சென்றது. எனது மனம் பின்நோக்கி சென்றதின் காரணம் இயேசு அங்கே இல்லை. அந்த வழிப்பாடுகள் அனைத்தும் பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்டவைகள் போல காணப்பட்டது. எனக்கு முன்பாக வைக்க அவர்களிடம் ஒன்றும் இல்லை! சார்லஸ் ஸ்டேன்லியை தொலைக்காட்சியிலும், பால் சேப்பலை வலைத்தலத்திலும் ஒரு பார்வை பாருங்கள். மரித்த, உலர்ந்துபோன, உற்சாகம் இல்லாத அவர்களுடைய பாவங்களுக்குப் பதிலுரைக்கும்படி, அவர்களுடைய தனிமை, மற்றும் அவர்களுடைய நித்தியமான நிலைமையில் இயேசுகிறிஸ்துவை முன்வைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். “என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை!” நான் ரிக் வார்ன் சபையில் இருந்து கொண்டிருந்தேன். அது டலாசில் முதல் பாப்டிஸ்ட் சபையாக இருந்துகொண்டிருந்தது. நான் எங்களுடைய BBFI சபைகளில் இருந்து கொண்டிருந்தேன்! அவைகள் “அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை” என்ற இழுபரி நிலைமையில் காணப்பட்டன.

இதன் விடை 9 மற்றும் 10 வசனங்களில் உள்ளது.

“மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்” (லூக்கா 11: 9-13).

இயேசு இந்த உவமையை முடிக்கும் போது தேடுங்கள், தட்டுங்கள் மற்றும் கேளுங்கள் என்று சொல்லி முடிக்கிறார் எதுவரை என்றால் “தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம்” (லூக்கா 11:13). அதனால் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் (அதுதான் அதன் கிரேக்க பதத்தின் அர்த்தமாகும்). தேடிக்கொண்டே இரு! தட்டிக்கொண்டே இரு! கேட்டுக்கொண்டே இரு!

பாருங்கள், நமது வழிபாடுகளில் பரிசுத்த ஆவியானவரை உடையவர்களாக இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவரை உடையவர்களாக இருக்க வேண்டும் இல்லையானால் இயேசு முக்கியமாக காணப்படமாட்டார் –மற்றும் இயேசு பிரசன்னராக இருக்கமாட்டார்! ஒருவரும் இரட்சிக்கப்பட மாட்டார்கள்! 8 ஆம் வசனத்தில் இரட்சகர் சொல்லுகிறார்,

“தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 11:8).

“வருந்தி கேட்டுக் கொண்டதினிமித்தம்” என்பதற்கு கிரேக்க பதம் (in KJV) “வெட்கமில்லாத நிலைப்பேறு” என்பதாகும். நிலைப்பேறு – என்பதன் அர்த்தம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமைக்காக ஒவ்வொரு வழிபாட்டுக் கூட்டத்திலும் நாம் ஜெபிக்க வேண்டியது அவசியமாகும். வனாந்தரத்திலே இஸ்ரவேலர் “மன்னாவை” இரவு முழுவதும் வைத்திருக்க முயற்சித்தால் அது கெட்டுப்போகும். இன்றும்கூட அப்படியே இருக்கிறது. நாம் “வெட்கமில்லாத நிலைப்பேறு” உடையவர்களாக நமது ஜெபக்கூட்டங்கள் மற்ற வழிபாடுகளில் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் இல்லையானால் நமது ஜெபக்கூட்டங்கள் மற்ற வழிபாடுகள் “அழுகி” போகும்!

நமது ஜெபக்கூட்டங்கள் மற்ற வழிபாடுகளில் – வெளிப்படுத்தல் புத்தகத்தில் லவோதிக்கேயா சபையில் அவரை வெளியே நிறுத்தி மூடி விட்டதைபோல நாம் வெளியே இயேசுவை நிறுத்தி மூடி விட்டோம். அது மந்தமாக இருந்தது. அக்கினி இல்லை! இடி இல்லை! சக்திவாய்ந்த பாடல் இல்லை! பிரசங்கம் இல்லை – வார்த்தைக்கு வார்த்தை வேதவிளக்கம் மட்டுமே இருக்கிறது! மரித்துப்போன விளக்கமான போதனையை கொடுக்க உனக்குப் பரிசுத்த ஆவி தேவை இல்லை! விளக்கமான போதனை மூளைக்குப் பேசுவது! சுவிசேஷக போதனை இருதயத்துக்குப் பேசுவதாகும்! இருதயத்துக்கு! இருதயத்துக்கு! “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்” (ரோமர் 10:10). மூளையோடு அல்ல – இருதயத்தோடு! மனதோடு மட்டுமல்ல! கிறிஸ்து இருதயத்தில் பேசவேண்டியது அவசியமாகும் அல்லது ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது – அல்லது ஒருவரும் எழுப்புதலடைய முடியாது – ஒருவரும் ஜீவ அப்பத்தை ருசிபார்க்க முடியாது! நமது வெதுவெதுப்பான சுவிசேஷ மற்றும் பாப்டிஸ்டு சபை வழிபாடுகளில் கிறிஸ்து வெளியே தள்ளப்பட்டு மூடப்பட்டு இருக்கிறார்! வெளியே தள்ளப்பட்டு மூடப்பட்டார்! வெளியே தள்ளப்பட்டு மூடப்பட்டார்! வெளியே தள்ளப்பட்டு மூடப்பட்டார்! இயேசு சொன்னார், “நான் வாசற்படியில் நின்று, தட்டுகிறேன்” (வெளிப்படுத்தல் 3:20). அவர் ஏன் வெளியே இருந்து கதவை தட்டிக்கொண்டிருக்கிறார்? ஏனென்றால் நாம் அவரை வெளியே தள்ளி மூடிவிட்டோம், அதனால்தான் அவர் வெளியே இருக்கிறார். நாம் ஒவ்வொரு வழிபாடுகளிலும் பரிசுத்த ஆவியானவர் இறங்க வேண்டும் என்று ஜெபிக்கவில்லையானால், அந்த வழிபாடுகளில் இயேசு நம்மிடம் இருக்க மாட்டார்! பரிசுத்த ஆவியானவர் பிரசன்னமாக இருக்கும் இடத்தில் மட்டுமே இயேசுவானவர் வருவார் – பரிசுத்த ஆவியானவர் இறங்கி வரவேண்டும் என்று நாம் ஜெபித்தால் மட்டுமே அவர் பிரசன்னம் ஆவார்! இறங்கி வரவேண்டும் என்று நாம் ஜெபித்தால் மட்டுமே அவர் பிரசன்னராவார்! இறங்கி வரவேண்டும் என்று நாம் ஜெபித்தால் மட்டுமே அவர் பிரசன்னராவார்! நம்முடைய அநேக வழிபாடுகள் கத்தோலிக்க மாஸ்ஸைவிட அதிக ஜீவனுள்ளதாக இல்லை. நீங்கள் அதை பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் அதை பார்த்திருக்கிறீர்கள். உண்மையில், அது ஒரு கத்தோலிக்க மாஸ்ஸைவிட அதிக மரித்ததாக உள்ளது! நான் சொல்லுவது சரி என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்!

“என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை” (லூக்கா 11:6).

மற்றும் அந்த நடுஇரவு நேரத்தில் அந்த மனிதன் கேட்ட அந்த “அப்பம்” என்ன? அவனுக்கு என்ன வேண்டுமென்று விரும்பி அவன் அயல் வீட்டு கதவை தட்டினான்? அவன் தேடினது அப்பம், அப்பத்திற்காக அவன் தட்டினான், மற்றும் அவன் கேட்ட அப்பம் இயேசுவே. பாவிகளுக்கு வேறு என்ன தேவையாக இருக்க முடியும்? 13ஆம் வசனத்தின் முடிவில், இயேசு சொன்னார், “பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” (லூக்கா 11:13). இங்கே இந்தக் கருத்தை ஸ்கோபீல்டு தவறவிடுகிறார். ஜெபவீரன் பரிசுத்த ஆவியை தனக்காக கேட்கமாட்டான். அவன் தனது இழக்கப்பட்ட நண்பனுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பான் பரிசுத்த ஆவி அவனுடைய இருதயத்தை திறக்கவில்லையானால் மற்றும் அவனை இயேசுவிடம் கொண்டுவராவிட்டால் ஒருபோதும் இயேசுவை நம்பமாட்டான்!

“என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை”

மெய்யாகவே, உனது ஜெபத்திற்கு விடையாக பரிசுத்த ஆவியை தேவன் கொடுக்காவிட்டால், இழக்கப்பட்ட பாவிகளுக்கு கொடுக்க, உன்னிடம் ஒன்றுமே இருக்காது! இதை டாக்டர் ஜான் ஆர். ரைஸ் நன்றாக சொன்னார்.

     இயேசு இந்த பாடத்தின் முடிவுவரையிலும் இதைபற்றி சரியான வார்த்தைகளை கொடுக்கவில்லை… ஜெபித்துக்கொண்டிருத்தல், அதாவது பரிசுத்த ஆவிக்காக ஜெபிப்பதைபற்றி சீஷர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்… அவரே மெய்யாக எழுப்புதலை கொண்டு வருபவர், பாவியை உணர்த்துகிறவர் மற்றும் அவர்களை மாற்றுகிறவர், ஞானம் மற்றும் வல்லமை மற்றும் தலைமைத்துவத்தை தேவனுடைய மனிதனுக்கு கொடுக்கிறவர்! நாம் பாவிகளுக்கு அப்பத்துக்காக ஜெபிக்கும்பொழுது, நமக்கு மெய்யாகவே தேவை… தேவனுடைய பரிசுத்த ஆவி தேவை என்று மெய்யாகவே அர்த்தப்படுத்துகிறோம். (Rice, ibid., p. 96).

நான் இப்பொழுது இன்னும் இழக்கப்பட்ட மக்களிடத்தில் பேசுகிறேன். அந்த உவமையில் இயேசு கிறிஸ்துவே அப்பமாக இருக்கிறார். உனக்குத்தேவையான எல்லாவற்றையும்விட இயேசு கிறிஸ்துவே உனக்கு அவசியமாக தேவை! நமது சபை வழிபாடுகளில் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வராவிட்டால் உங்கள் பவங்களிலிருந்து நீங்கள் ஒருபோதும் உணர்த்தப்பட முடியாது. இயேசு சொன்னார்,

“அவர் வந்து, பாவத்தைக்குறித்தும்… உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்” (யோவான் 16:8).

பரிசுத்த ஆவியானவர் வந்து இழக்கப்பட்ட பாவிகளான உங்களை போன்றவர்களின் இருதயத்தின் கொடிய பாவத்தை, கடினமான இருதய ஆழத்தின் பாவதன்மையை உணர்த்தும்படி நாங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் வந்து இவைகளை உணர்த்தாவிட்டால் நீங்கள் ஒருபோதும் கிறிஸ்துவின் மெய்யான தேவையை உணர மாட்டீர்கள்.

மேலும், அதன்பிறகு, தேவனுடைய ஆவியானவர் முழு இரட்சிப்புக்குக் கிறிஸ்துவிடம் உங்களை இழுக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்க வேண்டியது அவசியம். இரட்சகர் சொன்னார்,

“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” (யோவான் 6:44).

அதனால், இயேசுவிடம் உங்களை இழுத்து வரும்படி தேவ ஆவிக்காக நாங்கள் ஜெபிக்க வேண்டியது அவசியம், ஏனென்றால் இயேசு மட்டுமே உங்களை பாவம் மற்றும் நரகத்திலிருந்து இரட்சிக்க முடியும்.

இதுவரையிலும் நீங்கள் சுவிசேஷத்தை மட்டும் கேட்டீர்கள். உங்கள் பாவங்களுக்கான கிரயத்தை செலுத்த சிலுவையிலே மரித்தார் என்று மட்டும் கேட்டீர்கள். இயேசுவின் இரத்தம் உங்கள் பாவங்களை கழுவ முடியும் மற்றும் தேவனுடைய பார்வையில் நீதிமானாக்க முடியும் என்று மட்டும் கேட்டீர்கள். இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று மட்டும் கேட்டீர்கள். அவர் பரலோகத்திலே ஜீவனோடு, உனக்காக ஜெபிக்கிறார் என்று மட்டும் கேட்டீர்கள். இந்த சத்தியங்களை மட்டும் கேட்டீர்கள், ஆனால் உங்களுடைய வாழ்க்கையில் ஒருபோதும் இதை அனுபவிக்கவில்லை. நீங்கள் ஞாயிற்றுக் கிழமைக்கு பிறகு ஞாயிற்றுக் கிழமை சபையில் அப்படியே உட்கார்ந்து இவைகளை வெறுமையாக மறுபடியும் மறுபடியுமாக கேட்டுக் கொண்டிருக்கலாம், ஆனால் இந்த அற்புதமான உண்மைகளை நீங்கள் ஒருபோதும் அனுபவித்தது இல்லை. இந்த உண்மைகளை கேட்பதைவிட அதிகமாக உங்களுக்கு சிலகாரியங்கள் நடக்க வேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாது!

பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து உங்களை பாவத்தை உணரும்படி செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து உங்களை இயேசுவிடம் இழுத்துவர வேண்டும். பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து உங்களுக்கு ஜீவிக்கும் கிறிஸ்துவோடு தெய்வீக மனுஷீக இணைப்பை கொடுக்க வேண்டும். இரட்சகரிடம் உன்னை இழுத்துவர ஒரு அற்புதம் நடக்க வேண்டும். மறுபடியும் பிறக்க உனக்கு ஒரு அற்புதம் நடக்க வேண்டும். அந்த அற்புதத்தை உன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய ஆவியானவர் மட்டுமே செய்ய முடியும். உன்னுடைய ஆவிக்குரிய தேவைகளை சந்திக்க பரிசுத்த ஆவியானவர் இல்லையானால், உங்களுடைய வழிபாடுகளில் பரிசுத்த ஆவியானவர் இல்லையானால், அவர் ஆஜராகவில்லையானால் நாங்கள் இதை மட்டுமே சொல்ல முடியும்,

“என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை” (லூக்கா 11:6).

அதனால்தான் நாங்கள் உங்கள் இரட்சிப்புக்காக ஜெபித்தோம். அதனால்தான் நாங்கள் உங்களை தொடர்ந்து கேட்டுகொண்டே இருக்கிறோம். அதனால்தான் நாங்கள் உங்களை தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறோம். அதனால்தான் நாங்கள் உங்களை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்கிறோம் –தேவன் வானத்தை திறந்து தமது ஆவியை கீழே இறக்கி உங்களை மனம் மாற்றி நித்திய ஜீவன் கொடுக்கும் வரைக்கும், இப்படி செய்துகொண்டே இருப்போம்! இயேசு சொன்னார், “பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் [கொடுப்பார்]” (லூக்கா 11:13). நாங்கள் உங்களுக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருக்கிறோம். தேவன் தமது ஆவியை உங்களுக்கு அனுப்பி உங்கள் பாவத்தை உங்களுக்கு உணர்த்தி, மற்றும் மாற்றப்பட்ட அனுபவத்தோடு கிறிஸ்துவிடம் உங்களை இழுத்து வரும்படி உங்களுக்காக தேவனிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்! கிறிஸ்துவின் இரத்தம் உங்கள் பாவங்களை கழுவ முடியும். கிறிஸ்து உங்களை தமது நீதியினால் உடுத்தி மற்றும் தேவனை நேசித்து பாவத்தை வெறுக்கும் இருதயத்தை கொடுப்பார். அவர் உனது கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு மற்றும் சதையான இருதயத்தைக் கொடுப்பார்! “உங்களுக்காக நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்.” அந்த பாடலை பாடவும்!

உங்களுக்காக நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்,
   உங்களுக்காக நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்,
உங்களுக்காக நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்,
   நான் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்.
   (“உங்களுக்காக நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்” by S. O’Malley Clough, 1837-1910).

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாங்கள் பரிசுத்த ஆவியானவருக்காக ஜெபித்தோம். எல்லாரும் போய்விட்டார்கள் நான் டாக்டர் கேஹானுடன் உட்கார்ந்திருந்தேன். பிறகு டாம் ஷியா வந்தார் பிறகு இரட்சிக்கப்பட்டார் – ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் இறங்க ஜெபித்திருந்தோம்! ஆமென் மற்றும் ஆமென்!

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர்
திரு. ஜான் சாமுவேல் கேகன்: லூக்கா 11:5-13.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“I Am Praying For You” (S. O’Malley Clough, 1837-1910).