Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கிறிஸ்துவின் குமாரத்துவத்தின் நிரூபணம்!

THE PROOF OF CHRIST’S SONSHIP!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஏப்ரல் 15, 2017 அன்று கர்த்தருடைய நாள் சனிக்கிழமை மாலை
வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, April 15, 2017

“இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்” (ரோமர் 1:4-5)


டாக்டர் வில்பர் எம். ஸ்மித் அவர்களை நான் அவருடைய மகத்தான கிறிஸ்துவ இலக்கிய அறிவுக்காக, மற்றும் அவருடைய நேர்மையான மற்றும் முழுமையான செமினெரியை 1963-ல் விட்டு சென்றதற்காக அதிகமாக பாராட்டுகிறேன், அது வேதத்தின் அடிப்படையை விட்டு மேற்போக்கானவற்றை தழுவிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது (பார்க்கவும் Harold Lindsell, Ph.D., The Battle for the Bible, 1978 edition, pp. 110-112). டாக்டர் ஸ்மித் ரோமர்.1:4ஐ குறித்த ஒரு ஊடுருவும் கேள்வியை கேட்டார், “நம்முடைய பெரிய பிரசங்கிகள், இதை ஏன் ஒருபோதும் பிரசங்கிப்பதில்லை என்று நான் ஆச்சரியப்பட்டேன், அல்லது இந்த விசுவாச நிச்சயப் பாடத்தை குறித்துக் குறைந்தது ஒரு போதனையையாவது வெளியிடவில்லை இது ஏன்?” (Wilbur M. Smith, D.D., Therefore, Stand, Keats Publishing, 1981 edition, p. 583). அந்தக் காரணம் ஒருவேளை பொய்யாக இருக்கலாம் உண்மையில் அதைபற்றி சிறிதளவான பிரசங்கம் மட்டுமே கிறிஸ்துவின் உயிர்தெழுதல் கடந்த 125 வருடங்களில், விசேஷமாக “டெஸிசியானிசம்” எழும்பும் வரையிலும் இருந்தது. சி. ஜி. பின்சியின் காலம் முதற்கொண்டு, போதனைகள் அதிகபடியாக மனிதனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது, மற்றும் மனிதன் என்ன செய்தான். இந்த நாட்களில், பிரசங்கிகள் தேவனுடைய காரியங்களை பின்னனிக்கு நழுவி விடுகிறார்கள். பதிலாக, அவர்கள் மனிதனுடைய வேலையில் கவனம் செலுத்துகிறார்கள். இவ்வாறாக கிறிஸ்துவ சுவிசேஷ ஊழியம் இன்று அதிகமாக வேத இயலுக்குப் பதிலாக மானுடவியலாக மாறிவிட்டது, கிறிஸ்து இயலுக்குப் பதிலாக மனோவியலாக, கிறிஸ்து மையத்துக்குப் பதிலாக மனித மையமாக மாறிவிட்டது.

ஒவ்வொரு போதனையும் ஆனால் ஒன்று, அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது, அதில் உயிர்தெழுதல் மையமாக்கப்பட்டு இருக்கிறது. அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் உயர்தெழுதல் இல்லாமல் பிரசங்கிக்க முடியாது! அது சுவிசேஷத்தின் இருதயமாகும் அதை அவர்கள் பிரசங்கித்தார்கள். இன்று, எப்படியோ, கிறிஸ்துவின் உயிர்தெழுதல் குறிப்பிடபடுமானால், அது ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை காலையில் மட்டுமே ஆகும். அதிலும் கூட, ஊழியர்கள் அதனுடைய போதனை தன்மைகளை பிரசங்கிக்க மாட்டார்கள்.

டாக்டர் மைக்கல் ஹர்டன், கிறிஸ்து இல்லாத கிறிஸ்துவம் என்ற புத்தகத்தில், ஈஸ்டர் போதனையில் அநேக பழமைவாத சபைகள் அடிக்கடி “இயேசு எப்படியாக அவருடைய பின்னடைவுகளை வெற்றி கொண்டார் மற்றும் அதனால் [அதைக் காட்டிக்கொண்டு] சுவிசேஷகர்களான நம்மால் முடியுமா என்பது போல [லிபரல்ஸ்] இன்று சுவிசேஷத்துக்கு பதிலாக பாப் உளவியல், அரசியல், அல்லது நீதி போதனை பற்றி பேசுகிறார்கள்” (டாக்டர் மைக்கல் ஹர்டன், Ph.D., Christless Christianity: The Alternative Gospel of the American Church, Baker Books, 2008, p. 30). உறுதியாக, டாக்டர் ஆர். எ. டோரி, அவரை நான் விரும்புகிறேன், அவர் எழுதின கிறிஸ்துவுக்காக வேலை செய்வது எப்படி (Fleming H. Revell, n.d.) என்ற பிரபலமான புத்தகத்தில், ஒருபோதனை கூட கிறிஸ்துவின் உயிர்தெழுதலை பற்றி இல்லை. டாக்டர் டோரி 156 பக்கங்கள் போதனை வெளிக்குறிப்புகளை பிரசங்கிகளுக்குக் கொடுத்திருக்கிறார், ஆனால் ஒரு வெளிக்குறிப்பு கூட இயேசுவின் உயிர்தெழுதலை பற்றி முழுமையாக இல்லை! நிச்சயமாக, இன்று சூழ்நிலை இன்னும் மோசமாக இருக்கிறது!

நான் நவீன பாடல்களை சோதித்துப் பார்த்ததில் கிறிஸ்துவின் உயிர்தெழுதலை பற்றி பத்து பாடல்களே உள்ளன. அவைகள் அனைத்துமே இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பாக எழுதப்பட்டவைகள். இரண்டு 18வது நூற்றாண்டில், மூன்று 19வது நூற்றாண்டில், ஒன்று16வது நூற்றாண்டில், ஒன்று 17வது நூற்றாண்டில், ஒன்று 15வது நூற்றாண்டில், மற்றும் இரண்டு 8வது நூற்றாண்டில் எழுதப்பட்டவைகள்! மெய்யாகவே நல்ல ஒரே ஒரு பாடல் உயிர்தெழுதலை பற்றியது 20ஆம் நூற்றாண்டில் “Alive Again” என்ற பாடல் பால் ரேடர் என்பவர் மூலமாக எழுதப்பட்டது, ஆனால் அது என்னுடைய அறிவில் எந்தப் பாடலிலும் அது தோன்றவில்லை. இந்தப் பாடலை என்னோடு எழுந்து நின்று பாடவும்!

மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்,
   மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்;
மரணபிடியின் உறுதியான பனிகட்டி, உடைக்கப்பட்டது,
   மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்!
(“Alive Again” by Paul Rader, 1878-1938).

நீங்கள் அமரலாம். நீங்கள் எனக்கு கடிதம் எழுதலாம் P.O. Box Box 15308, Los Angeles CA 90015 மற்றும் வார்த்தைகள் மற்றும் இசை பால் ரைடருடைய பாடல் இவைகளை கேட்டு எழுதுங்கள். மறுபடியுமாக, நவீன பாடல்களில் பின்னேயின் நாட்கள் வரைக்கும், மிகவும் நீண்ட காலமாக உயிர்தெழுதல் இல்லாதது எல்லா முக்கியமான பாடங்களும் புறக்கணிக்கபட்டதை காட்டுவதாக நான் நினைக்கிறேன். கிறிஸ்து,

“மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்” (ரோமர்.1:5)

ஆனால் யாரோ ஒருவர் அரிதாக அதை பிரசங்கிக்கிறார்கள், மற்றும் நாம் அதை பற்றி ஒருபோதும் கிட்டத்தட்ட பாடுவதும் இல்லை! மேற்கத்திய உலகத்தின் சபைகள் மரித்துக்கொண்டு இருக்கிறது மற்றும் உதிர்ந்து போகிறது என்பதில் ஆச்சரியம் இல்லை! உயிர்தெழுந்த கிறிஸ்துவில் விசுவாசம் கொள்ளாமல் எழுப்புதலுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, மற்றும் ஜீவனுள்ள செய்தி இல்லை – சுவிசேஷத்தின் பாதிபாகம் மறக்கப்பட்டு இருக்கிறது – அதிகமாக நம்முடைய பிரசங்கத்திலிருந்து அகற்றப்பட்டு இருக்கிறது! தேவன் நமக்கு உதவி செய்வாராக!

மூன்றாம் உலகத்தில் இருப்பவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்விட மிகவும் அதிக சரியான விதத்தில் உயிர்தெழுந்த கிறிஸ்துவை வலியுறுத்துகிறார்கள் என்று நான் கண்டுகொண்டேன். கிறிஸ்தவம் அங்கே வளருகிறது, ஆனால் இங்கே தேங்கி கிடக்கிறது என்பதில் ஆச்சரியம் இல்லை!

மூன்றாம் உலக நாட்டிலிருந்து வந்த இருபதில் இருக்கும் ஒரு இளம் மனிதனை நான் இ-மெயிலில் தொடர்பு கொண்டேன். அவனுடைய பாடுகளை பற்றி பேசினான் “கிறிஸ்துவ விசுவாசத்தை தழுவின படியினால் என்னுடைய குழந்தை பருவம் முதல் பயங்கரமான கொடுமை [கொடுமைப்படுத்தபடுகிறேன்]. நான் உதவிக்காக அழுதேன், ஆனால் ஒருவரும் வரவில்லை, மற்றும் நான் அநேக [கிறிஸ்தவர்கள்] அழிவதை பார்த்தேன்... பிள்ளைகள் [பலர்] உபத்திரவப்பட்டு கொண்டு இருந்தார்கள் மற்றும் அடைக்கலம் புகுவதற்கு இந்தியாவில், மியான்மர், திரும்ப திரும்ப கொடுமைப்படுத்தபடுகிறார்கள் மின்சார அதிர்ச்சி கொடுத்து இயேசுவை விட்டுவிடும்படி சொல்லுகிறார்கள்... அப்படிப்பட்ட உயிர் பிழைத்தவர்களில் நான் ஒருவன்.” அதை நான் படித்தபொழுது நான் அழுதேன். அமெரிக்காவில், அல்லது பொதுவாக மேற்கில் இப்படிப்பட்ட பிள்ளைகள் அல்லது இளம் வாலிபர்களை இங்கே காண முடியும்? இந்த இளம் மனிதன் சொன்னான் அவனும் மற்றும் மற்ற பிள்ளைகளும் உயிர்தெழுந்த கிறிஸ்துவை பற்றி கொண்டார்கள். அவர்கள் உயிர்தெழுந்த கிறிஸ்துவை அனுபவித்தபொழுது அவர் தேவனுடைய குமாரன் என்று அறிந்து கொண்டார்கள். அதன்பிறகு எவ்வளவு அதிகமான சித்தரவதை செய்யப்பட்டாலும் மின்சார அதிர்ச்சி அல்லது அடிகள் இயேசுவை அவர்கள் விட்டுவிட செய்ய முடியுமா. அவர் ஜீவிக்கிறார் என்று அவர்களுக்குத் தெரியும் – மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார்! அது அவர்களை உண்மையான கிறிஸ்தவர்களாக செய்தது! அதைதான் நம்முடைய பாடத்தில் அப்போஸ்தலன் பவுல் சொல்லுகிறார். கிறிஸ்து,

“மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்” (ரோமர்.1:5 தமிழில்)

அந்த பாடலை மறுபடியும் பாடவும்!

மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்,
   மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்;
மரணபிடியின் உறுதியான பனிகட்டி, உடைக்கப்பட்டது,
   மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்!

“ரூபிக்கப்பட்ட” என்ற வார்த்தைக்கு கிரேக்க அர்த்தம் “தெளிவாக காட்டு,” “குறிப்பிட்டுக் காட்டு” (ஸ்ட்ராங் #3724). இயேசு மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்த தேவ குமாரனாக, தெளிவாக காட்டப்பட்டார், குறிப்பிட்டுக் காட்டப்பட்டார். தி ஜெனிவா பைபிள் 1599ல் சொல்லுகிறது “வெளிப்படுத்தப்பட்டார் மற்றும் வெளியரங்கமாக்கப்பட்டார்” (பார்க்கவும் #1 ரோமர்.1:5). கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே தேவ குமாரனாக, “வெளிப்படுத்தப்பட்டார் மற்றும் வெளியரங்கமாக்கப்பட்டார்”,

“மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்” (ரோமர்.1:5)

I. முதலாவதாக, இயேசு தேவ குமாரனாக எப்படி ரூபிக்கப்பட்டார்.

அது பிரதானமாக அவருடைய போதனையினால் அல்ல. அவர் மலை பிரசங்கம் முதற்கொண்டு, அநேக அற்புதமான காரியங்களை கற்பித்தார். ஆனால் அவருடைய போதனைகள் மட்டுமே அவர் தேவ குமாரன் என்று நிரூபிக்கவில்லை. அவருடைய அற்புதங்களும் அல்ல, அவர் மூன்று மக்களை உயிரோடு எழுப்பினது கூட இல்லை. தீர்க்கதரிசியாக எலியா பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு பையனை மரணத்தில் இருந்து எழுப்பினார் மற்றும் அவர் தேவனுடைய குமாரன் அல்ல (I இராஜாக்கள்.17:17-24). எலிசாவும் கூட ஒரு பிள்ளை மரணத்தில் இருந்து எழுப்பினார் (II இராஜாக்கள்.4:32-37) ஆனால் எலிசா தேவனுடைய குமாரன் அல்ல. மோசேயும் கூட, சிவந்த சமுத்திரம் இரண்டாக பிளந்தது முதற்கொண்டு அநேக அற்புதங்களை நடப்பித்தார், ஆனால் அவர் தேவ குமாரன் அல்ல. இயேசு தம்முடைய சொந்த சரிரத்தில் உயிரோடு எழுந்த அந்த ஒரே அற்புதம் தான் அவர் தேவனுடைய குமாரன் என்று நிரூபித்தது. அவருடைய உயிர்த்தெழுதல் இந்த பொல்லாத சந்ததிக்கு ஒரு அடையாளம் என்று இயேசு தாமே சொன்னார்,

“அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்” (மத்தேயு12:39-40).

இயேசு தேவகுமாரன் என்று பிரதான ஆசாரியர்களிடத்தில் ஒப்புகொண்டதினாலே அவர் மரணத்திற்கு தீர்க்கப்பட்டார் (மத்தேயு 26:63-66). அவர் சிலுவையில் தொங்கும்பொழுது, பிரதான ஆசாரியர்கள் அவரை பரியாசம்பண்ணி,

“தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்” (மத்தேயு 27:43).

ஆனால் தேவன் இயேசு தமது குமாரன் என்ற அங்கிகாரத்தை அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினதினாலே வெளிப்படுத்தினார். இயேசு,

“மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்” (ரோமர்.1:5)

தேவன் அவருடைய மரித்த சரீரத்தை மூன்றாம் நாளிலே உயிரோடு எழுப்பினதினாலே அவர் தமது குமாரனாக இருக்கிறார் என்பதை தெளிவாக காட்டினார்! அதை பாடுங்கள்!

மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்,
   மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்;
மரணபிடியின் உறுதியான பனிகட்டி, உடைக்கப்பட்டது,
   மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்!

II. இரண்டாவது, இயேசு தேவ குமாரன் என்று ஏன் ரூபிக்கப்பட்டார்.

டாக்டர் சார்லஸ் ஹட்ஜ் (1797-1878), பிரின்சிடன் வேத கல்லூரியின் புதிய ஏற்பாட்டின் நீண்ட விரிவுரையாளர், சொன்னார்,

கிறிஸ்து உயிரோடு எழுப்பப்படும்வரைக்கும் அவருடைய குமாரத்துவம் முழுமையடையவில்லை, அல்லது அதனுடைய பரிபூரணத்தை அடைதல் அப்போஸ்தலர்களுக்கு அறியப்படவுமில்லை… அது உயர்த்தெழுதலின் மூலமாக அவர் தமது குமாரனாக இருக்கிறார் என்பதை தெளிவாக காட்டினார்… கிறிஸ்து போதித்த [வேதத்தின்] [அநேக] பகுதிகளில் அனைத்து சத்தியங்களின் ஆதாரமாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது, மற்றும் அவர் உரிமை கோரின அனைத்தும் செல்லுபடியாகும் வகையில்… கிறிஸ்துவே தேவனுடைய குமாரன் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டார், அவர் உயிரோடு எழுப்பப்பட்டது அவர் அறிவித்த சத்தியத்துக்கு தேவனுடைய முத்திரையாகும். அவர் மரணத்தின் வல்லமையின் கீழாக தொடர்ந்து இருந்திருந்தால், அவருடைய குமாரனாக அவர் உரிமைகோரினதை தேவன் அனுமதித்திருக்கமாட்டார் [மறுதலிக்கப் பட்டிருப்பார்]; ஆனால் அவரை மரித்தோரிலிருந்து அவரே எழுப்பினதினாலே, அவரை வெளிப்படையாக அங்கிகரித்தார், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் அப்படியாக உமக்கு அதை அறிவிக்கிறேன் (Charles Hodge, Ph.D., A Commentary on Romans, The Banner of Truth Trust, 1997 edition, pp. 20-21; notes on Romans 1:4).

இவ்வாறாக, கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதன் சான்று அவருடைய உயிர்த்தெழுதல் மூலமாக கொடுக்கப்பட்டது, மற்றும் அவர் போதித்த ஒவ்வொரு காரியமும் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் வில்பர் எம். ஸ்மித் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் உத்தரவாதத்தைக் குறித்து சொன்னார்

….அந்த உண்மைத்தன்மை, கிறிஸ்து உரைத்த சகலவற்றையும் சார்ந்திருத்தல். கல்லறையிலிருந்து [அவர் உயிர்த்தெழுந்ததினாலே] மற்றும் [அவர் செய்யப்போவதாக சொன்னதின்படியே] இந்த கணிப்பு நிறைவேறினது, அதன்பிறகு நமது கர்த்தர் எப்பொழுதும் சொன்னதெல்லாமும்கூட உண்மையாக இருந்தாக வேண்டும் என்று எனக்கு தோன்றியது… அவரை விசுவாசிக்கிறவன் யாராக இருந்தாலும் அவன் நித்திய ஜீவனை அடைவான் என்றும், மற்றும் அவரை விசுவாசிக்க மறுப்பவன் யாராக இருந்தாலும் நித்தியமாக ஆக்கினைத்தீர்ப்படைவான் என்றும் நமது கர்த்தர் சொன்னபொழுதெல்லாம், அவர் சத்தியத்தை பேசினார்… அவருடைய உதடுகளிலிருந்து புறப்பட்ட எந்த வார்த்தையின் உண்மைத்தன்மையிலாவது சந்தேகம் இருக்குமானால், நம்மால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஒருபோதும் ஒத்துக்கொள்ள முடியாது (Smith, Therefore Stand, ibid., pp. 418-419).

இயேசு தமது சீஷர்களுக்கு சொன்னார்,

“இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்” (லூக்கா 18:31-33).

லூக்கா 18:31-33ல் இயேசு எதை முன்னறிவித்தாரோ அது அப்படியே எழுத்தின்படி நிறைவேறினது. அவர் பரியாசம் பண்ணப்பட்டார், அடிக்கப்பட்டார், துப்பப்பட்டார், வாரினால் அடிக்கப்பட்டார் மற்றும் சிலுவையில் அடிக்கப்பட்டு மரணமடைந்தார். ஆனால் அவர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு மூன்றாம் நாளில் அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார். இயேசு தம்மைப்பற்றி சொன்ன உத்தரவாதங்கள் உண்மைதன்மைகள் அவர் முன்னறிவித்த சகலமும் சரியாக நிறைவேறின, அவர்

“மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்” (ரோமர்.1:5)

“மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்.” அதை பாடுங்கள்!

மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்,    மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்; மரணபிடியின் உறுதியான பனிகட்டி, உடைக்கப்பட்டது,    மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்!

ஏனென்றால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், அவர் சொன்னபடியே அவர் செய்தார், அவர் இதை சொன்னபொழுது அவர் உண்மையை சொல்லுகிறார் என்று நிச்சயிக்க முடியும் அவர் சொன்னார்,

“நீங்கள் மனந்திரும்பி… விட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 18:3).

அந்த வார்த்தைகளை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் அவைகள் உயிர்தெழுந்த தேவ குமாரனுடைய வாயிலிருந்து வந்தவைகளாகும். நீ மாற்றப்பட்டு இருக்கிறாயா? நீ மாற்றப்பட்டு இருக்கிறாய் என்ற நிச்சயம் உனக்கு இருக்கிறதா? நீ மாற்றப்படாவிட்டால் “பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது” என்று தேவ குமாரன் சொன்னார். ஓ, எவ்வளவு தீவிரமாக நீ உன்னுடைய மாற்றத்தை பற்றி நினைக்க வேண்டும்! நீ மாற்றப்பட்டாய் என்பதை எவ்வளவு கவனமாக நிச்சயப்படுத்தி கொள்ள வேண்டும்!

உயிர்தெழுந்த தேவ குமாரன் மேலும் சொன்னார்,

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).

அவர் சொன்னது என்ன என்று எவ்வளவு தீவிரமாக நீ கவனிக்க வேண்டும்! எவ்வளவு கவலையோடு நீ அவரிடம் வந்து மற்றும் இரட்சிக்கபட வேண்டும்! எவ்வளவு கவனமாக உன் மனதில் உள்ள எல்லா மூடநம்பிக்கைகள் மற்றும் பொய்யான மத யோசனைகள், மற்றும் இயேசுவில் மட்டும் நிலைத்திருக்க வேண்டும் – அவர் சொன்னார், “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”

மறுபடியுமாக, உயர்தெழுந்த தேவகுமாரன் சொன்னார்,

“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37).

ஓ, நீ எவ்வளவாக அவருக்குள் “உள்ளே நுழைய” முயற்சி செய்யவேண்டியது எவவளவு அவசியமாக இருக்கிறது! (லூக்கா13:24). எவ்வளவாக கவனமாக மற்றும் யோசனையோடு இருந்து இயேசுவிடம் நீ வர வேண்டும். கவனத்தில்கொள் அவர் சொன்னார்,

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28).

நீ உயிர்தெழுந்த தேவ குமாரனுக்குச் செவிகொடுக்க வேண்டும் என்று நாங்கள் உனக்காக ஜெபிக்கிறோம். நீ அவரிடத்தில் நேரடியாக வருவாய் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் உன்னுடைய பாவத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ள – மற்றும் அவருடைய உயிர்தெழுந்த ஜீவனாலே இரட்சிக்கபட நாங்கள் ஜெபிக்கிறோம். அவருக்கு செவிகொடு! அவர் என்ன சொன்னாரோ அதை நம்பு! அவரிடத்தில் நேரடியாக வா மற்றும் இரட்சிக்கப்படு, அவர் சொன்னது போலவே செய் – அவர்

“மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்” (ரோமர்.1:5)

மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்,
   மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்;
மரணபிடியின் உறுதியான பனிகட்டி, உடைக்கப்பட்டது,
   மரித்துபோனவர் மறுபடியும் உயிரோடு இருக்கிறார்!
(“Alive Again” by Paul Rader, 1878-1938).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்: லூக்கா 18:31-34.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Hail, Thou Once-Despised Jesus!” (by John Bakewell, 1721-1819).


முக்கிய குறிப்புகள்

கிறிஸ்துவின் குமாரத்துவத்தின் நிரூபணம்!

THE PROOF OF CHRIST’S SONSHIP!

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்” (ரோமர் 1:4-5)

I.      முதலாவதாக, இயேசு தேவ குமாரனாக எப்படி ரூபிக்கப்பட்டார்,
I இராஜாக்கள் 17:17-24; II இராஜாக்கள் 4:32-37;
மத்தேயு 12:39-40; 26:63-66; 27:43.

II.    இரண்டாவது, இயேசு தேவ குமாரன் என்று ஏன் ரூபிக்கப்பட்டார்,
லூக்கா 18:31-33; மத்தேயு 18:3; யோவான் 14:6; 6:37;
லூக்கா 13:24; மத்தேயு 11:28.