Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
யூதாசின் பொய்யான மனந்திரும்புதல்

THE FALSE REPENTANCE OF JUDAS
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஏப்ரல் 2, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை
வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, April 2, 2017

“அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்” (மத்தேயு 27:3-5).


மத்தேயு 27 அதிகாலையில் என்று ஆரம்பிக்கிறது, இயேசு கெத்சமனே தோட்டத்தில் கைது செய்யப்பட்டார், பிரதான ஆசாரியர் மற்றும் சனகாரிப் சங்கம் முன்பாக கொண்டுவரப்பட்டார், அவருக்கு விரோதமாக பொய் சாட்சிகள் சாட்சி சொன்னார்கள், பிறகு அவர் முகத்தில் அடிக்கப்பட்டார் மற்றும் பரிகாசம் செய்யப்பட்டார், மற்றும் பிறகு பேதுரு அவரை மறுதலித்தார்.

“விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்” (மத்தேயு 27:1-2).

அவர்கள் இயேசுவை பிதான ஆசாரியனுடைய அரண்மனைக்குக் கொண்டு போனார்கள். யூதாஸ் இயேசுவின் அருகில் வந்து நின்றான். ஆனால் யூதாஸ் இயேசுவிடம் திரும்பி மன்னிப்புக் கேட்கவில்லை. அவன் இந்தக் கடைசி நேரத்தில், திரும்பியிருந்தாலும், அவன் இரட்சிக்கப்பட்டிருக்க முடியும். இயேசுவுக்கு அடுத்துச் சிலுவையிலிருந்த கள்ளன் அவன் மரிப்பதற்கு முன்பாக இரட்சிக்கப்பட்டான். யூதாஸ் மன்னிப்புக்காக இயேசுவிடம் திரும்புவதற்குப் பதிலாக பிரதான ஆசாரியரிடம் திரும்பியது ஏன்? இரண்டு காரணங்கள் இருப்பதாக நான் விசுவாசிக்கிறேன்.

I. முதலாவதாக, யூதாஸ் ஏற்கனவே மன்னிக்க முடியாத பாவத்தை செய்தான்.

இயேசு சொன்னார்,

“எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும் எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை” (மத்தேயு 12:31-32)

டாக்டர் ஜான் ஆர். ரைஸ் சொன்னார் யூதாஸ் “மன்னிக்கமுடியாத பாவத்தை செய்தான்,” என்று காணப்படுகிறது அதாவது, அவன் ஏற்கனவே நிராகரித்தலை தள்ளி விட்டான். டாக்டர் ஜான் ஆர். ரைஸ் சொன்னார்,

மன்னிக்க முடியாத குற்றம் என்பது கிறிஸ்துவை இறுதியாக தள்ளிவிடுவதாகும் அதனால் நிச்சியமாக... அது பரிசுத்த ஆவியானவரை அவமானப்படுத்தி மற்றும் என்றென்றுமாக துரத்திவிடுவதாகும். பிறகு [பரிசுத்த ஆவியானவர்] இனிமேலும் இருதயத்தில் அசைவாடமாட்டார், உணர்த்த மாட்டார் அல்லது இரட்சிப்பின் ஆசையை எழுப்பமாட்டார்... யாரொருவன் [மன்னிக்க முடியாத பாவத்தை செய்தவர்] பரிசுத்த ஆவியானவர் அவனிடத்திலிருந்து விலக்கி கொள்ளப்பட்டபடியினால் அவன் கேட்பாரற்றவன். தேவனிடத்திற்கு மெய்யாக திரும்புதல் இருதயத்தில் பரிசுத்த ஆவியின் கிரியையினால் நிகழ்த்தப்படுவது ஆகும். ஒருவேளை [பரிசுத்த ஆவியானவர்] தாமே பாவியை விலகிவிட்டால், அவனை உணர்த்த மற்றும் இரட்சிக்க வேண்டுமானால் தேவனுக்கு வேறொரு நிருவனம் இல்லை. (John R. Rice, D.D., A Verse-by-Verse Commentary on the Gospel According to Matthew, Sword of the Lord Publishers, 1980 edition, p. 183; comments on Matthew 12:31-32).

டாக்டர் ரைஸின் பாடல், “If You Linger too Long,” யூதாஸைபற்றி விவரிக்கிறது!

நீ காத்திருந்தாய் மற்றும் உலவினாய் இரட்சகரை மறுத்தாய்,
   நீ அவருடைய பொறுமையான எச்சரிப்புகள்,
அவருடைய அன்பான கெஞ்சல்களை ஏற்கவில்லை,
   நீ இவ்வாறு சாத்தானின் வாக்கை நம்பி,
விலக்கப்பட்ட கனியை தின்றாய்,
   இவ்வாறு உன்னுடைய இதயம் கடினப்பட்டது;
பாவம் உனது மனதை இருளாக்கியது.
   நியாயத்தீர்ப்பை சந்திப்பது எவ்வளவு துக்கம்,
பிறகு உனக்கு இரக்கம் கிடைக்காது
   நீ முயற்சித்து மற்றும் உலாவினாய் ஆவியானவர் போய்விட்டார்;
மரணம் உன்னை நம்பிக்கையற்றவனாக பார்க்கும்பொழுது,
   என்ன ஒரு நிந்தை மற்றும் புலம்பல்,
நீ நித்திரையில் உலாவினாய் மற்றும்
   நீண்ட நேரம் காத்திருந்தாய்!
(“If You Linger Too Long,” by Dr. John R. Rice, 1895-1980).

யூதாஸ் “ஆவியானவர் போகும்வரையிலும் உலாவினான்.” அவன் மன்னிக்க முடியாத பாவத்தை செய்தான். அந்தக் காலையில் அவன் இயேசுவிடம் திரும்பவில்லை. அவன் இரட்சிக்கப்படுவது அவனுக்கு மிகவும் காலதாமதம். மிகவும் காலதாமதம்! மிகவும் காலதாமதம்! நித்தியமாக மிகவும் காலதாமதம்!

கர்த்தரை தள்ளிவிடுவதற்கு ஒரு கோடு இருக்கிறது,
   அவருடைய ஆவியானவரின் அழைப்பு இழக்கப்பட்டது;
இன்பம் உன்னை பைத்தியமாக்கியது மற்றும்
   நீ வேகமாக அதோடு போனாய் –
நீ கணக்கிட்டாயா, நீ கிரயத்தை கணக்கிட்டாயா?
   நீ கிரயத்தை கணக்கிட்டாயா, உன் ஆத்துமா இழக்கப்படும்,
உனக்காக உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் என்ன?
   இப்பொழுது நீ அந்த கோட்டை தாண்டிவிட்டாய்,
நீ கணக்கிட்டாயா, நீ கிரயத்தை கணக்கிட்டாயா?
(“Have You Counted the Cost?” by A. J. Hodge, 1923).

உன்னை நான் கெஞ்சுகிறேன், பரிசுத்த ஆவியானவர் உன்னை என்றென்றுமாக விட்டுப் போகும் வரையிலும் காத்திருக்க வேண்டாம்! அவர் உனது பாவத்தை உணர்த்தும்பொழுது – கிறிஸ்துவிடம் வா. உனக்கு வேறொரு தருணம் ஒருபோதும் கிடைக்காமல் போகலாம்! நான் உன்னை கெஞ்சுகிறேன், என்றென்றுமாக காலதாமதம் ஆவதற்கு முன்பாக கிறிஸ்துவிடம் வா!

II. இரண்டாவதாக, யூதாஸினுடைய “மனந்திரும்புதல்” ஆனது “உலகபிரகாரமான துக்கம்” மட்டுமே ஆகும்.

இந்தப் பாடம் சொல்லுகிறது,

“அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டான்...” (மத்தேயு 27:3).

இங்கே “மனஸ்தாபப்பட்டான்” என்ற வார்த்தையானது “மெடெமெலோமை” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும் அதன் பொருள் “வருத்தப்படுவது” (ஸ்ட்ராங்), “அதற்காக வருத்தமாக உணர்வது” (ஜார்ஜ் ரிக்கர் பெர்ரி). ஆனால் “மெடெமெலோமை” இரட்சிப்புக்கு நடத்தாது. அது “வருத்தப்படுதல்” மட்டுமே, பரிசுத்த ஆவியானவரால் பாவத்தை உணர்த்தப்படுதல் அல்ல. ஒரு பாவம் செய்து பிடிப்பட்டு வருத்தப்படுவது மட்டுமே. இந்தவிதமான துக்கம் மற்றும் வருத்தம் மன அழுத்தத்திற்கும், சுய பரிதாபத்திற்கும், மற்றும் நம்பிக்கையின்மைக்கும் மட்டுமே நடத்தும். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்,

“தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது” (II கொரிந்தியர் 7:10).

தேவனுக்கேற்ற துக்கம் மெய்யாக மனந்திரும்புதலை உண்டாக்கும், அது கிறிஸ்துவின் இரட்சிப்புக்கு நடத்தும். இங்கே “மனந்திரும்புதல்” என்ற வார்த்தை II கொரிந்தியர் 7:10ல் சொல்லப்பட்டதுக்கும் மத்தேயு 27:3ல் சொல்லப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளது, அங்கே யூதாஸ் “தனக்குள் மனஸ்தாபப்பட்டான்.” II கொரிந்தியர் 7:10ல் உள்ளதின் கிரேக்க வார்த்தை “மெடெனொயா” – அதன் பொருள் “ஒரு மனமாறுதல்” (வைன்). என்னுடைய சீன போதகர் டாக்டர் தீமோத்தேயு லின் (1911-2009) அவர் ஒரு கிரேக்க மற்றும் எபிரெய வல்லுனராகும். டாக்டர் லின் சொன்னார், “இது ஒரு புதிய ‘னோஸ்,’ ஒரு புதிய மணம்.” இது தேவன் மட்டுமே செய்ய கூடிய ஒருவருடைய இருதயத்தில் மற்றும் மனதில் உண்டாகும் மாறுதல் ஆகும். டாக்டர் ஜார்ஜ் ரிக்கர் பெரி (1865-1945) சொன்னார் “மெடெனொயா” என்பது “ஒரு உயர்வான வார்த்தை [மெடெமெலோமை என்ற வார்த்தையைவிட], மனந்திரும்புதல் மூலமாக தொடர்ந்த வெளிப்பாடு ஆகும்” (Greek-English New Testament Lexicon). இதை புனிதர்களின் ஆசிரியர் ரிச்சர்ட் பாக்ஸ்டர் (1615-1691) அவர்கள் “இது ஒரு பாசத்தின் மாறுதல்” என்றார் – தேவன் மற்றும் பாவம் பற்றிய மனம் மாறுதலாகும், நீ விரும்புவதற்கும் மற்றும் வெறுப்பதற்கும் உள்ள மாறுதலாகும்.

“தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது” (II கொரிந்தியர் 7:10).

தேவனுக்கேற்ற துக்கம் பரிசுத்த ஆவியினால் உண்டானது. பிறகு ஆவியானவர் மனந்திரும்புதலை, கிறிஸ்துவுக்குள் இரட்சிப்புக்கு நடத்தும், ஒரு புது மனதை உண்டாக்குகிறது.

யூதாஸ் பிடிப்பட்டதினால் வருத்த உணர்வு அடைந்தான் அது பொய்யான மனந்திரும்புதலின் அனுபவம் மட்டுமே ஆகும். “அவன் ஆக்கினத் தீர்ப்பு அடைந்ததை பார்த்தபொழுது, [அவன்] தனக்குள் மனஸ்தாபப்பட்டான்.” இதன் உணர்வை தி கிங் ஜேம்ஸ் வேதாகமம் தருகிறது. அவன் “தனக்குள் மனஸ்தாபப்பட்டான்.” தேவன் இதை உண்டாக்கவில்லை. அது சுத்தமான மனுஷிக துக்கம். அது “மனந்திரும்புதலை உண்டாக்கும் [அந்த] தேவனுக்கேற்ற துக்கம் அல்ல.” அது உண்மையான மனமாறுதலை உண்டாக்கும் “தேவனுக்கேற்ற துக்கம்” அல்ல. அது சுயபரிதாபம் மட்டுமே! “உலகபிரகாரமான துக்கம் மரணம் [உண்டாக்கும்].” அதனால் யூதாஸ் “புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்” (மத்தேயு 27:5).

காயீன் ஒரு யூதாஸின் மாதிரி (அல்லது படம்) ஆகும். கிறிஸ்து யூதாஸை “கேட்டின் மகன்” என்று அழைத்தார் (யோவான் 17:12). யூதாஸ் கிறிஸ்துவின் மரணத்திற்கு மனுஷிகமான பொறுப்பு ஆகும். “காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்” (ஆதியாகமம் 4:8). காயீன் மீது ஸ்கோபீல்டு குறிப்பு சொல்லுகிறது, “காயீன்… ஒரு மாதிரியான பூமிக்குரிய மனிதனாகும்... பாவமானது எந்த ஒரு போதுமான ஆதரவற்ற, அல்லது பாவநிவாரணத்தின் தேவையின் உணர்வை உண்டாக்கும்” (The Scofield Study Bible; note on Genesis 4:1). காயின் ஒருபோதும் “தேவனுக்கேற்ற துக்கம்” அடையவில்லை. காயின் ஒருபோதும் “இரட்சிப்புக்கு ஏற்ற மனந்திரும்புதலை” அடையவில்லை. அவன் தனக்காக மட்டுமே வருத்தப்பட்டான். காயின் சொன்னான், “எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது” (ஆதியாகமம் 4:13). சுய பரிதாபம்! அவன் உணர்ந்தது அவ்வளவுதான். அவன் “உலகத்தின் துக்கத்தை” உணர்ந்தான். அது பிடிபட்டதினால் உண்டான துக்கத்திற்கு மேலானதல்ல. அது சுய பரிதாபத்திற்கு நடத்தும், மற்றும் அதைவிட அதிகமாக ஒன்றுமல்ல. அது காயீனை ஒரு நம்பிக்கையற்ற நிலைமையில் விட்டது. உங்களில் சிலர் பாவ உணர்வுக்குக் கீழாகயிருப்பதாக நினைக்கலாம், ஆனால் நீங்கள் அப்படி இல்லை. காயினைப்போல, நீங்கள் உங்களுக்காக மட்டுமே துக்கப்படுகிறீர்கள். சுயபரிதாபம் பாவ உணர்த்துதல் அல்ல! அது “மரணத்தை கொடுக்கும் உலக துக்கம்.”

ஏசா ஒரு யூதாஸின் மற்றொரு மாதிரி (அல்லது படம்) ஆகும். யூதாஸ் முப்பது வெள்ளிக்காசை வாங்கிக்கொண்டு கிறிஸ்துவை காட்டிக்கொடுத்ததுபோல, ஏசா ஒரு கோப்பை கூழுக்காக தனது சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப்போட்டான். தி ஸ்கோபீல்டு குறிப்பு சொல்லுகிறது, “ஏசா பூமிக்குரிய சாதாரண மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான்” (ibid., ஆதியாகமம் 25:25ன் குறிப்பு). ஏசா தான் ஆசீர்வாதத்தை இழந்துவிட்டதை கண்டபொழுது, “மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்” (ஆதியாகமம் 27:34). ஏசா, காயீன் மற்றும் யூதாஸைப் போல, “இந்த உலக துக்கம் அடைந்தான்.” அவன் ஒருபோதும் “மனந்திரும்புதலை உண்டாக்கும் [அந்த] தேவனுக்கேற்ற துக்கம் அடையவில்லை.” அவன் யூதாஸைப் போல, வருத்தம் மற்றும் சுயபரிதாபம் மட்டுமே உணர்ந்தான். மேலும், யூதாசைப் போல, ஏசாவும் சொன்னான், “அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன்” (ஆதியாகமம் 27:41). எபிரெயரின் புத்தகம் ஏசாவை “வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்” (எபிரெயர் 12:16-17). அவன் “கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.” ஆமாம், ஏசாவுக்குக் கண்ணீர் வந்தது. ஆனால் அவைகள் மனம் மாறுதலுக்கான கண்ணீர் அல்ல. அவைகள் அவனுக்காக வருத்தப்படும் கண்ணீர். நீ செய்வதெல்லாம் உனகக்காக மட்டுமே வருத்தப்படுகிறாய், நீ பாவ உணர்வுக்கு கீழாக வரவில்லை. உனக்கு “மரணத்தை கொடுக்கும் உலக துக்கம்” மட்டுமே இருக்கிறது. நீ ஒருபோதும் இரட்சிக்கப்படவில்லை!

நீ காயின், ஏசா மற்றும் யூதாசைப்போல இல்லை என்று நான் நம்புகிறேன். நீ ஆழமான பாவ உணர்வுக்குள்ளாக வருவாய் என்று நான் நம்புகிறேன். நீ காயீனைப்போல “ஒரு மாதிரியான பூமிக்குரிய மனிதனாகும்... பாவமானது எந்த ஒரு போதுமான ஆதரவற்ற, அல்லது பாவநிவாரணத்தின் தேவையின் உணர்வை உண்டாக்கும்” நிலையில் இல்லை என்று நான் நம்புகிறேன். நீ ஏசாவைப் போலவும், ஒரு வேசிக்கள்ளனாக இல்லை என்று நான் நம்புகிறேன். நீ உலகப்பொருளுக்காக உன் ஆத்துமாவை தூரமாக எரிந்துவிடமாட்டாய் என்று நான் நம்புகிறேன். சில வெள்ளிக்காசுகளுக்காக கிறிஸ்துவை விற்றுப்போட்ட யூதாசைப் போல, நீ இல்லை என்று நான் நம்புகிறேன்!

இந்த உலகத்திலிருந்து வெளியே வா. அதனுடைய பாவங்களிலிருந்தும் மற்றும் பொய்யான பொக்கிஷங்களிலிருந்தும் தூரமாக வா! பாவத்திலிருந்து வெளியே வா, கிறிஸ்துவினிடம் வா. தேவனுடைய ஆவியானவர் உன்னை அழைக்கும்பொழுது, மற்றும் உனது இருதயம் பாவபாரத்தை மற்றும் சுமையை உணரும்பொழுது, இயேசுவிடம் வா மற்றும் அவருடைய இரத்தத்தின் மூலம் உனது பாவத்தை கழுவி சுத்தம் செய்துகொள்! என்றென்றுமாக மிகவும் காலதாமதம் ஆவதற்கு முன்பாக, இப்பொழுதே இயேசுவிடம் வா!

பிறகு நியாயத்தீர்ப்பை சந்திப்பது எவ்வளவு துக்கமானது,
   நீ இரக்கத்தினால் அழைக்கப்படமாட்டாய்
முயற்சித்து மற்றும் உலாவினாய் ஆவியானவர் போய்விட்டார்;
   மரணம் உன்னை நம்பிக்கையற்றவனாக பார்க்கும்பொழுது,
என்ன நிந்தை மற்றும் புலம்பல்,
   நீ நித்திரையில் உலாவினாய் மற்றும் நீண்ட நேரம் காத்திருந்தாய்!
(“If You Linger Too Long,” by Dr. John R. Rice, 1895-1980).

எனது தோழர் டாக்டர் கேஹனிடம், ஒரு சமயம் ஒரு இளம் வாலிபன் சொன்னான், “இந்த நிலையில நான் ஒருபோதும் கிறிஸ்தவனாக மாறமாட்டேன்.” அவன் சரியானவன்! நீ பாவ உணர்வுக்குள் வராவிட்டால் உன்னுடைய கல்வி மற்றும் ஜெபம் எல்லாம் உனக்கு உதவி செய்ய முடியாது. அப்பொழுது மட்டுமே நீ இயேசுவிடம் திரும்புவாய். ஒரு ஸ்திரி சொன்னதுபோல, “நான் முழுமையாக என்னில் இழந்துபோனேன்.” அது “மனந்திரும்புதலை உண்டாக்கும் [அந்த] தேவனுக்கேற்ற துக்கம்.” அவள் தனக்குள் “இழக்கப்பட்டதை” உணர்ந்த உடனே அவளுடைய பாவம்நிறைந்த இருதயத்தோடு, அந்த ஸ்திரி கிறிஸ்துவிடம் கொண்டுவரப்பட்டாள் மற்றும் இரட்சிக்கப்பட்டாள். தேவனுடைய ஆவியானவர் உன்னை “முழுமையாக உன்னில் இழந்துபோக” செய்வாராக, “வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் [நீ] யாவரும் தேவனுடைய ஆக்கினைத் தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும்” (ரோமர் 3:19). பாவத்திலிருந்து அவருடைய இரத்தத்தின் மூலமுண்டான பலியினிடத்திற்குத் தேவனுடைய ஆவியானவர் உன்னை இயேசுவிடம் இழுத்துவருவாராக. ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்: மத்தேயு 27:3-5.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“If You Linger Too Long” (by Dr. John R. Rice, 1895-1980).


முக்கிய குறிப்புகள்

யூதாசின் பொய்யான மனந்திரும்புதல்

THE FALSE REPENTANCE OF JUDAS

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்” (மத்தேயு 27:3-5).

(மத்தேயு 27:1-2)

I.   முதலாவதாக, யூதாஸ் ஏற்கனவே மன்னிக்க முடியாத பாவத்தை செய்தான், மத்தேயு 12:31-32.

II.  இரண்டாவதாக, யூதாஸினுடைய “மனந்திரும்புதல்” ஆனது “உலகத்தின் துக்கம்” மட்டுமே ஆகும், II கொரிந்தியர் 7:10; மத்தேயு 27:5; யோவான் 17:12; ஆதியாகமம் 4:8, 13; ஆதியாகமம் 27:34, 41; எபிரெயர் 12:16-17;
ரோமர் 3:19.