Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கெத்செமனேயில் கிறிஸ்துவின் வேதனை

CHRIST’S AGONY IN GETHSEMANE
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

மார்ச் 19, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை
வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Evening, March 19, 2017

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).


சில காலத்திற்கு முன்பாக நான் “இயேசுவின் கண்ணீர்கள்” பற்றி பிரசங்கித்தேன். அதை படிக்க இங்கே கிளிக் செய்யவும். அந்தப் போதனையின் கடைசி முக்கிய விஷயம், “கெத்செமனே தோட்டத்தில் இயேசு அழுதார்” என்பதாகும். நான் சொன்னேன், “கெத்செமனே தோட்டத்தில், அவர் சிலுவையில் ஆணி அடிக்கப்படுவதற்கு முன்பாக, இயேசு பாடுபட்டார் மற்றும் தனிமையாக ஜெபித்தார். அங்கே கெத்செமனேயின் இருளில் இரட்சகர் ஜெபத்தில் தமது ஆத்துமாவை தேவனிடம் ஊற்றினார். எபிரெயர் 5:7ன்படி ‘தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு’ (எபிரேயர் 5:7). அவர் பயந்தது என்ன? நமது பாவங்களுக்குப் பிராயசித்தபலியாக சிலுவைக்குப் போவதற்கு முன்பாக, அவர் தோட்டத்தில் மரித்துவிடுவாரோ என்று இயேசு பயந்தார்.”

டாக்டர் ஜான் ஆர். ரைஸ் சொன்னார், “அந்த மரணத்தின் பாத்திரம் அந்த இரவில் அவரைவிட்டு கடந்து போகவேண்டும் அதனால் அவர் அடுத்த நாளில் சிலுவையில் மரிப்பதற்க்காக ஜீவிக்க வேண்டும்.” வேதவல்லுனர் டாக்டர் ஜே. ஆலிவர் பஸ்வெல் அவர்களும் சொல்லியிருக்கிறார் இயேசு “அவருடைய நோக்கத்தை சிலுவையின்மேல் நிறைவேற்றும்படியாக, தோட்டத்தில் மரணத்திலிருந்து விடுதலையாக்கும்படியாக ஜெபித்தார்.” டாக்டர் ஜே. வர்னான் மெக்ஜீ அதே காரியத்தை சொன்னார்: “என் நண்பரே, அவர் கேட்கப்பட்டார்; கெத்செமனே தோட்டத்தில் அவர் மரிக்கவில்லை.” தேவனால் நம்முடைய பாவங்கள் அவர்மீது வைக்கப்பட்டபடியினால் இயேசு பெரிய வேதனையில் இருந்தார்.

அந்த போதனையை வாசித்த ஒருவர் இயேசு சிலுவைக்குப் போகவேண்டிய தேவை என்ன என்று என்னிடம் கேட்டார். அந்தத் தோட்டத்திலேயே நம்முடைய பாவங்களுக்காக ஏன் அவர் மரித்திருக்க கூடாது? நான் அவருக்கு பதில் சொன்னேன் இது சாத்தியமில்லை. வேதம் சொல்லுகிறது,

“கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:3).

நமது பாவங்களுக்காக கிறிஸ்து மரிக்க வேண்டும் “கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி” – kata tas graphas. அவர் கெத்செமனே தோட்டத்தில் மரித்திருந்தால் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட இரட்சகராக அவர் இருக்க முடியாது. ஒரு மோசக்காரனாக இருந்திருப்பார், அவர் தீர்க்க தரிசனமாக உரைக்கப்பட்ட இரட்சகராக இருக்க முடியாது! அவர் kata tas graphas, “வேதவாக்கியங்களின்படி” அவர் மரிக்க வேண்டும். “வேதவாக்கியங்கள்” என்பது பழைய ஏற்பாட்டைக் குறிக்கும், புதிய ஏற்பாடு அதுவரையில் எழுதப்படவில்லை. கெத்செமனேவுக்கு போவதற்கு சற்றுமுன்பாக இயேசு சொன்னார், “அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 22:37). அவர் ஏசாயா 53:12ஐ குறிப்பிட்டார், அவர் இரண்டு கள்ளர்களுக்கு மத்தியில் மரிப்பதன் மூலமாக அந்த வார்த்தையை நிறைவேற்ற வேண்டும். அவர் கெத்செமனேவில் மரித்திருந்தால் அவரால் ஏசாயா 53:12ஐ நிறைவேற்றி இருக்க முடியாது; அவர் kata tas graphas, “வேதவாக்கியங்களின்படி” மரித்திருக்க முடியாது, அவர் ஏசாயாமூலமாக தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட இரட்சகராக இருக்க முடியாது!

ஏசாயா 53ம் அதிகாரம் பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் சிலுவையிலறையும் காட்சியை முழுமையான தீர்க்கதரிசனமாக கொடுத்திருக்கிறது. மெய்யாகவே அந்தப் பகுதி ஏசாயா 52:13ல் இருந்து ஆரம்பிக்கிறது மற்றும் ஆங்கில வேதாகமத்தில் 15ஆம் வசனம் வரை போகிறது. அது கிறிஸ்துவின் சிலுவையிலறையும் காரியத்தை ஒன்றன்பின் ஒன்றான தீர்க்கதரிசனமாக கொடுக்கிறது. இயேசு கெத்செமனேவில் மரித்திருந்தால் மிகசில தீர்க்கதரிசனங்கள் மட்டுமே நிறைவேறியிருக்க முடியும். ஏசாயா 50:6ல், அவர் வாறினால் அடிக்கப்படுவதையும், வெட்கம் மற்றும் துப்பப்படுவதையும், நிறைவேற்றி இருக்க முடியாது. சங்கீதம் 22:16, அவருடைய கைகளும் கால்களும் உருவக்குத்தப்படுவதைப்பற்றி தீர்க்கதரிசனமாக கொடுக்கிறது, அதுவும் நிறைவேறியிருக்க முடியாது, சகரியா 12:10, “அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்பார்கள்” என்ற வார்த்தையும் நிறைவேறியிருக்க முடியாது. சங்கீதம் 22 ஒன்றன்பின் ஒன்றான தீர்க்கதரிசனமாக கொடுக்கிறது இயேசு கெத்செமனேவில் மரித்திருந்தால் அவைகளும் நிறைவேறியிருக்க முடியாது. பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரினமாக சொல்லப்பட்ட அநேக வேதவாக்கியங்கள் இயேசு தோட்டத்தில் மரித்திருந்தால் நிறைவேறி இருக்க முடியாது. இயேசு கெத்செமனேவில் ஜெபித்ததில் ஆச்சரியமில்லை “தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு” (எபிரெயர் 5:7). அடுத்த நாளில் சிலுவைக்குப் போவதற்கு முன்பாக, அவர் தோட்டத்தில் மரித்துவிடுவாரோ என்று இயேசு பயந்தார்! அவர் எவ்வாறு மரிக்க வேண்டும் என்றால், kata tas graphas “வேதவாக்கியங்களின்படி” அவர் மரிக்க வேண்டும். கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபொழுது அவர் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரினமாக சொல்லப்பட்ட சொற்ப விபரத்தையும் நிறைவேற்றினார். அவர் கெத்செமனேவில் மரித்திருந்தால் இந்தத் தீர்க்கதரிசனங்கள் ஒன்றும் நிறைவேற்றி இருக்க முடியாது – மற்றும் அவர் தீர்க்க தரிசனமாக உரைக்கப்பட்ட இரட்சகராக இருக்கவும் முடியாது, ஒரு மோசக்காரனாக இருந்திருப்பார். “கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி” நமது பாவங்களுக்காக மரித்திருக்க முடியாது (I கொரிந்தியர் 15:3). அவர் இவ்வாறாக ஜெபித்ததில் எந்த ஆச்சரியமுமில்லை, “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்” (லூக்கா 22:42).

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

“வியாகுலம்” என்ற வார்த்தையின் கிரேக்க வார்த்தை “agonia” என்பதாகும். அது “கொடூரமான மனக்கிளர்ச்சி சிரமம் மற்றும் மிக்க வேதனை” (கொடி) குறித்து பேசுகிறது. அங்கே அந்த இருளிலே இயேசுவானவர் அளவுகடந்த பாடுகளை, கடும் வேதனையை மற்றும் நடுங்க வைக்கும் வலியை அனுபவித்தார். இந்த இரவிலே அவர் கெத்செமனே தோட்டத்தில் அடைந்த கடும் வேதனையைபற்றி சில நிமிடங்கள் நினைத்துப் பார்ப்போம்.

I. முதலாவதாக, அவரது கடும் வேதனை விவரிக்கப்பட்டது.

இயேசு தமது பஸ்கா உணவை தம்முடைய சீஷர்களோடு புசித்தார். அங்கே அவர்களோடு கர்த்தருடைய இராவிருந்தை கொண்டாடினார். யூதாஸ் அந்தக் குழுவைவிட்டு மற்றும் பிரதான ஆசாரியர்களிடம் அவரை காட்டிக்கொடுக்க போனான். அங்கே இருந்த மற்றவர்கள் ஒருபாட்டை பாடினார்கள், மற்றும் ஒலிவமலை பக்கமுள்ள கீதரோன் ஆற்றை கடந்து, கெத்செமனே தோட்டத்தின் இருளில் போனார்கள். தோட்டத்தின் ஓரத்தில் இயேசுவானவர் எட்டு சீஷர்களை விட்டு அவர்களிடம், இவ்வாறாகச் சொன்னார், “நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள்” (மாற்கு 14:32). பிறகு அவர் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானையும் தம்மோடே தோட்டத்தின் உள்ளே கூட்டிக்கொண்டுபோய் அங்கே “திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்... என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள்” (மாற்கு 14:33-34). ஜோசப் ஹார்ட் சொன்னார்,

அநேக துன்பங்களை அவர் சகித்தார்,
   அநேக புண்பட்ட சோதனைகளை சந்தித்தார்,
பழக்கப்பட்ட வலிகளை, பொறுத்தார்:
   ஆனால் இன்னும் புண்ணாக்கும் பரிட்சைகள்
உமக்குள் உறுதி செய்யப்பட்டிருக்கும்,
   இருளடைந்த, துக்கமான கெத்செமனே!
உமக்குள் உறுதி செய்யப்பட்டிருக்கும்,
   இருளடைந்த, துக்கமான கெத்செமனே!
(“Many Woes He Had Endured” by Joseph Hart, 1712-1768;
to the tune of “Come, Ye Sinners”).

மத்தேயு சொல்லுகிறார் அவர் “துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்” (மத்தேயு 26:37). “வியாகுலம்” என்பதற்கு, கிரேக்க பதமொழிபெயர்ப்பு குட்வின் சொல்லுகிறார் அங்கே ஒரு இடையூறு அல்லது இயேசுவுக்குள் திசைதிருப்பப்படுதல் தாங்கொணா துயர், இந்த வார்த்தையின் பொருள் “மக்களில் இருந்து பிரிக்கப்படுதல் – இடையூறில் உள்ள மனிதர், மனித வர்க்கத்திலிருந்து பிரிக்கப்படுதல்.” என்ன ஒரு சிந்தனை! இயேசு இடையூறின் கடை ஓரத்துக்குத் தள்ளப்பட்டார், அவருடைய கடும் வேதனையின் தீவிரத்தினால், ஏறக்குறைய பைத்தியம் ஆவதற்குச் சமீபமானர். இரட்சகர் சொன்னதை மத்தேயு குறிப்பிடும்போது, “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” (மத்தேயு 26:38). “மரணத்துக்கேதுவான துக்கம்” என்பதன் கிரேக்க வார்த்தையின் பொருள் “சுற்றிலும் துன்பப்படுதல், தீவிரமான துக்கம் நிறைதல்” (பலமாக), துக்கத்தில் மூழ்குதல். “அவரது தலையும் காதுகளும் துக்கத்தில் மூழ்கி விட்டதால் மூச்சுவிட துவாரம் இல்லை,” எனறு குட்வின் சொல்லுகிறார். ரிநெக்கர் சொன்னார் அவர் “துக்கத்தால் சூழப்பட்டார், துயரத்தில் மூழ்கினார்.” இயேசு ஆழமான துக்கத்தில் மற்றும் துயரத்தில் மூழ்கினார். மாற்கு நமக்கு சொல்லுகிறார் “திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்” (மாற்கு 14:33). “திகிலடைதல்” என்றால் “முழுமையாக ஆச்சரியமடைதல்” (பலமாக), “பயங்கரத்தின் பிடியினால் நடுங்கிக் கொண்டிருத்தல்” (ரிநெக்கர்), “அதிகமாக துயரடைந்தார், பயங்கரவாதத்துக்குள்… எரியப்பட்டார், முழு எச்சரிக்கை மணி அடித்தது, பயப்படுத்தப்பட்டார், பயங்கரமாக பிடிக்கப்பட்டார்” (Wuest). ஜோசப் ஹார்ட் சொன்னார்,

வாருங்கள், தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களே,
   சுத்திகரிக்கும் இரத்தத்தை ஆசித்து உணரும் யாவரும்,
இப்பொழுது எண்ணநிறைவுக்குள் என்னோடு இணையுங்கள்,
   துக்கமான கெத்செமனேயை பற்றிப்பாட

அங்கே ஜீவனின் கர்த்தர் காட்சி கொடுத்தார்,
   தவித்தார், முனகினார், ஜெபித்தார் மற்றும் பயந்தார்,
மனிதனாக அவதரித்த தேவனால் எல்லாம் தாங்க முடிந்தது,
   போதுமான பெலத்தால், மீதி எதுவுமில்லாமல்.
(“Gethsemane, The Olive-Press!” by Joseph Hart, 1712-1768;
to the tune of “‘Tis Midnight, and on Olive’s Brow”).

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

II. இரண்டாவதாக, அவரது கடும் வேதனையின் காரணம்.

கிறிஸ்து தோட்டத்தில் அடைந்த துக்கத்திற்குக் காரணம் என்ன? அவருடைய வேதனை சாத்தானுடைய தாக்குதலால் வந்தது என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் அதை நான் இப்பொழுது விசுவாசிப்பதில்லை. கெத்செமனேயில் அவருடைய கடும் வேதனையில் எந்தவிதத்திலும் சாத்தான் குறிப்பிடப்படவில்லை. அவருடைய ஊழிய ஆரம்பத்தில்தானே அவர் சாத்தானால் கடுமையாக சோதிக்கப்பட்டார். வனாந்தரத்தில் மூன்றுமுறை “சோதனைக்காரன் அவரிடத்தில் வந்தான்” (மத்தேயு 4:3). ஆனால் இயேசுவானவர் அவருடைய சோதனையின் நேரத்தில் ஒருபோதும் “துக்கமடைந்ததாகவும் மற்றும் வியாகுலப்பட்டதாகவும்” நாம் வாசிக்கிறதில்லை. கெத்செமனேயில் வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் வந்ததுபோல ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. வனாந்தரத்தில் இயேசுவானவர் அவருடைய சோதனையின் நேரத்தில் பிசாசை ஓய்வு கொள்ளும் விதத்தில் தேவனுடைய வார்த்தைகளை குறிப்பிட்டு வெற்றிபெற்றார். ஆனால் கெத்செமனேயில் அவருடைய கடும் வேதனை மிகவும் பெரிதாக இருந்தபடியினால் அது அவரை மரணத்தின் விளிம்புக்குக் கொண்டு வந்தது. டாக்டர் மெக்ஜீ சொன்னார், “அவர் தோட்டத்தில் ஜெபித்தபொழுது, ‘இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்’ (லூக்கா 22:42), அந்த ‘பாத்திரம்’ மரணம் என்பதாகும். அவர் கெத்செமனே தோட்டத்தில் மரிக்க விரும்பவில்லை” (J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson Publishers, volume V, p. 540; note on Hebrews 5:7).

கெத்செமனேயின் கசப்பான கடும் வேதனை பிதாவாகிய தேவனிடமிருந்து வந்தது. நான் விசுவாசிக்கிறேன், தோட்டத்தில்,

“கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6).

ஸ்பர்ஜன் சொன்னார், கெத்செமனேயில், பிதாவாகிய தேவன் “பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (II கொரிந்தியர் 5:21). “அவர் இப்பொழுது… பாவிகளுக்கு உரிய சாபத்தை சுமந்தார், ஏனென்றால் அவர் பாவிகளின் ஸ்தானத்தில் நின்றார் மற்றும் பாவிகளுக்குப் பதிலாக… இப்பொழுது அவர் உணர்ந்தார், ஒருவேளை முதல் முறையாக இருக்கலாம், பாவத்தை சுமப்பவராக இருப்பதென்றால் என்ன… அது எல்லாம் அவர்மேல் சுமத்தப்பட்டது” (C. H. Spurgeon, “The Agony in Gethsemane,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1971, volume XX, p. 593).

பாவநிவர்த்தியின் நாளில் ஆரோன் மூலமாக இரண்டு ஆடுகள் உபயோகப்படுத்தப்படும். கிறிஸ்து தோட்டத்தில் இரண்டாவது ஆடாக காணப்படுகிறார். பாவநிவாரண பலியாக பலியானபோது அந்த இரண்டாவது ஆடு பெரிய வேதனையை அனுபவித்தது. அந்த மிருகம் உணர்ந்த பயம் மற்றும் வேதனை ஒரு சிறிய படம் அல்லது கிறிஸ்துவின் கடும் வேதனையின் அடையாளம் மட்டுமே. இயேசு தோட்டத்தில் அடைந்த கடும் வேதனை அதற்கு ஒப்புமையான, நிறைவேறுதலாகும்.

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

ஏசாயா தீர்க்கதரிசி சொன்னார்,

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, [கர்த்தர் அவரை நசுக்க பிரியமானார், துக்கத்தை அவரில் போட்டார் NASV]: அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது…” (ஏசாயா 53:10).

நிச்சயமாக அது கெத்செமனே தோட்டத்தில் ஆரம்பித்தது!

அது நடு இரவு; மற்றும் மற்றவர்களின் குற்றம்,
   துக்கத்தின் மனிதர் இரத்தத்தில் அழுகிறார்;
இருந்தும் கடும்வேதனையில் முழங்காலில் நிற்கிறார்
   அவர் தமது தேவனால் கைவிடப்பட வில்லையா.
(“‘Tis Midnight, and on Olive’s Brow” by William B. Tappan, 1794-1849).

“அது நடு இரவு; மற்றும் மற்றவர்களின் குற்றம், துக்கத்தின் மனிதர் இரத்தத்தில் அழுகிறார்.” டாக்டர் ஜான் கில் சொன்னார், “இப்பொழுது அவர் நொறுக்கப்பட்டார், மற்றும் தமது பிதாவினால் துக்கத்திற்குட்படுத்தப்பட்டார்; அவரது வருத்தம் இப்பொழுது ஆரம்பிக்கிறது, அவை இங்கே முடிவடையவில்லை, ஆனால் சிலுவையின்மேலே… தமது மக்களின் பாவபாரத்தால் மற்றும் தேவ கோபத்தின் உணர்வால், அவர் ‘மிகவும் பாரமடைய’ ஆரம்பித்தார், அதனால் அவர் மிகவும் அழுத்தப்பட்டார் மற்றும் அமுக்கப்பட்டார்… அதனால் அவர் மூர்ச்சை அடைய, மூழ்கி மற்றும் மரிக்க தயாரானார்… அவர் மரணத்தின் தூளிலே கொண்டுவரப்பட்டார்; அவருடைய துக்கங்களும் அவரை விடவில்லை… அவருடைய ஆத்துமாவும் சரிரமும் ஒன்றை ஒன்று பிரிக்கப்பட்ட வரையிலும்” சிலுவையின் மேலே (John Gill, D.D., An Exposition of the New Testament, The Baptist Standard Bearer, 1989 reprint, volume I, p. 334).

கெத்செமனேவில்தான் “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6). ஜோசப் ஹார்ட் சொன்னார்,

அங்கே [தேவ குமாரன்] என் குற்றங்களை எல்லாம் சுமந்தார்,
   இது கிருபையின் மூலமாக என்று விசுவாசிக்க முடிந்தது;
ஆனால் அவர் உணர்ந்த திகில்களை சிந்தித்தால்
   அது அளவுக்கதிகமானதாக காணப்படுகிறது.
உமதுமூலமாக ஒருவரும் ஊடுருவ முடியாது,
   இருளடைந்த, துக்கமான கெத்செமனே!
உமதுமூலமாக ஒருவரும் ஊடுருவ முடியாது,
   இருளடைந்த, துக்கமான கெத்செமனே!
(“Many Woes He Had Endured” by Joseph Hart, 1712-1768;
to the tune of “Come, Ye Sinners”).

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

பாடுபடும் தேவகுமாரனை பாருங்கள்,
   ஒதுங்கிக்கொண்டு, கலங்கிக்கொண்டு, இரத்த வேர்வை சிந்துகிறார்!
அளவில்லாத ஆழமான [கிருபை] தெய்வீகம்,
இயேசுவே, உமது அன்பு என்ன ஒரு அன்பு!
(“Thine Unknown Sufferings” by Joseph Hart, 1712-1768;
to the tune of “‘Tis Midnight, and on Olive’s Brow”).

“கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6).

கெத்செமனே தோட்டத்தில் கிறிஸ்து நமது பாவங்களை எல்லாம் தம்மீது சுமந்துகொண்டார், மற்றும் நமது பாவங்களை “தமது சொந்த சரீரத்திலே” சிலுவையின் மேல் சுமந்தார், அங்கே அவர் அடுத்தநாள் மரித்தார். நமது பாவம் அவரை இரத்த வியர்வை விடும்வரை நொறுக்கினது!

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

ஆமாம், உனது பாவங்களை தமது சரீரத்திலே சிலுவையின் மேல் சுமந்தார்.

“அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார் [மரத்தின் மேல்]” (I பேதுரு 2:24).

கெத்செமனே தோட்டத்திற்கு போ மற்றும் இயேசு உனக்காக மற்றும் எனக்காக என்ன செய்தார் என்று பார். உன் பாவங்களுக்காக நீ நரகத்திற்குப் போயிருக்க வேண்டும். ஆனால் இயேசு அந்தப் பாவங்களை எல்லாம் தம்மேல் சுமந்து கொண்டார், மற்றும் தோட்டத்தில் ஜீவநரகத்துக்குள் போனார் மற்றும் சிலுவையின்மேல், உனது அக்கிரமங்களின் முழுதண்டனை கிரயத்தை செலுத்தினார்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் அடிக்கடி கெத்செமனே மற்றும் சிலுவையை தியானிக்க வேண்டியது அவசியமாகும். கெத்செமனே மற்றும் சிலுவை பிரிக்க முடியாதது. “இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது [சிலுவை] தேவபெலனாயிருக்கிறது” (I கொரிந்தியர் 1:18). கிறிஸ்து கெத்செமனே மற்றும் சிலுவையில் செய்த வேலையின் மூலமாக நாம் தேவனுக்காக வாழும்படியாக அதிகாரம் பெற்று இருக்கிறோம்! கிறிஸ்துவின் கடும் வேதனையை நினைத்தவர்களாக நாம் அவருக்காக வாழ ஊக்குவிக்கப்படுகிறோம்! வாழ்க்கையின் சோதனைகள் நம்மை சோர்ந்து போகபண்ணும்போது, மெய்யான கிறிஸ்தவருக்கு சமாதானம் இருக்கும் மற்றும் இயேசு கெத்செமனே மற்றும் சிலுவையில் நமது பாவங்களுக்கான முழுகிரயத்தையும் செலுத்தினார் என்பதை நினைவில் கொள்! இயேசு மரணத்தின்மீது வெற்றி சிறந்து மரித்தோரிலிருந்து எழுந்ததை நினைவுகூரும்பொழுது நமக்கு சமாதானம் கிடைக்கிறது!

சிலுவையின் அருகே, ஓ தேவாட்டுக்குட்டி,
   அதன் காட்சிகளை எனக்கு முன் கொண்டுவாரும்;
நாளுக்கு நாள் அதன் நிழல் என்மேல் இருக்க,
   நடக்க எனக்கு உதவி செய்யும்.
சிலுவையிலே, சிலுவையிலே,
   எப்பொழுதும் என் மகிமை இருக்கும்;
என் ஆத்துமா ஆனந்தத்தை ஆற்றுக்கு
   அந்தபுறத்திலே பெற்றுக் கொள்ளும்
(“Near the Cross” by Fanny J. Crosby, 1820-1915).

மற்றும் நீ இதுவரைக்கும் இரட்சிக்கப்படவில்லை என்றால் உனக்கு நான் சொல்லுவது, உனக்காக பாடுபட்டிருந்தும் இன்னும் நீ அவரை விட்டு திரும்பி போய்கொண்டிருந்தால், கெத்செமனேயின் இருளில், அவருடைய வேதனை, இரத்தத்தை நீ எப்படி நினைக்க முடியும்? அவர் உன்னுடைய பாவங்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்! நீ அவரை எப்படி மறுதலிக்க முடியும், மற்றும் இப்படிப்பட்ட அன்பை எப்படி தள்ளிவிட முடியும்?

அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

பாடுபடும் தேவகுமாரனை பாருங்கள்,
   ஒதுங்கிக்கொண்டு, கலங்கிக்கொண்டு, இரத்த வேர்வை சிந்துகிறார்!
அளவில்லாத ஆழமான [கிருபை] தெய்வீகம்,
   இயேசுவே, உமது அன்பு என்ன ஒரு அன்பு!

கெத்செமனேயில் இயேசு உன்னுடைய பாவங்களை தம்மேல் எடுத்துக் கொண்டார் ஏன் என்றால் அவர் உன்னை நேசிக்கிறார்! அவர் உன்னுடைய பாவ தண்டனை கிரயத்தை சிலுவையின்மேல் செலுத்தினார் ஏன் என்றால் அவர் உன்னை நேசிக்கிறார்!

இன்று இரவிலே நீ அவரை நம்புவாயா? நித்திய அன்பினால் அன்பு கூர்ந்த அவரிடம் நீ வருவாயா? தாங்கொணா இரட்சகரில் விசுவாசம் வை! அவரை இப்பொழுது நம்பு! உன்னுடைய பாவங்கள் அவரால் மன்னிக்கப்படும், மற்றும் நித்திய ஜீவன் உனக்கு கிடைக்கும்! ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர்
டாக்டர் க்ரிக்டன் எல். சான்: மாற்கு 14:32-41.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“‘Many Woes He Had Endured” by Joseph Hart, 1712-1768; to the tune of “Come, Ye Sinners”).


முக்கிய குறிப்புகள்

கெத்செமனேயில் கிறிஸ்துவின் வேதனை

CHRIST’S AGONY IN GETHSEMANE

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

(எபிரெயர் 5:7; I கொரிந்தியர் 15:3; லூக்கா 22:37;
ஏசாயா 53:12; ஏசாயா 50:6; சங்கீதம் 22:16;
சகரியா 12:10; லூக்கா 22:42)

I.      முதலாவதாக, அவரது கடும் வேதனை விவரிக்கப்பட்டது,
மாற்கு 14:32, 33-34; மத்தேயு 26:37-38.

II.    இரண்டாவதாக, அவரது கடும் வேதனையின் காரணம், மத்தேயு 4:3;
ஏசாயா 53:6, II கொரிந்தியர் 5:21; ஏசாயா 53:10; I பேதுரு 2:24;
I கொரிந்தியர் 1:18.