Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
தேவனுடைய ஆவியானவரின் தளர்த்தும் வேலை

THE WITHERING WORK OF GOD’S SPIRIT
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

மார்ச் 12, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை
வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Evening, March 12, 2017


இரண்டு ஏசாயாக்கள் இருந்ததாக லிபரல் செமினரியில் எங்களுக்குக் கற்பித்தார்கள். ஆனால் அவர்கள் தவறானவர்கள். முதல் 39 அதிகாரங்கள் பாவங்களைப்பற்றியும் மற்றும் மக்கள் சிறையிருப்பிற்கு வருவதைப் பற்றியும் பேசுகின்றன. ஆனால் 40ஆம் அதிகாரத்திலிருந்து முடிவுவரையிலும், தீர்க்கதரிசி அவர்களுடைய மீட்பைக் குறித்துப் பேசுகிறார். இரண்டாவது பாதி கிறிஸ்துவின் பாடுகளின் மூலமாக கிடைக்கும் இரட்சிப்பைக் குறித்துப் பேசுகிறது.

“பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் [அதன் அழகெல்லாம், NASV; அவைகளின் மகிமையெல்லாம், NIV] வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல். புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது” (ஏசாயா 40:6-8).

“பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று, ஒரு சத்தம் உண்டாயிற்று.” தீர்க்கதரிசியிடம் பேசின அந்த சத்தம் என்ன? அது “கர்த்தரின் வாக்கு” என்று, ஐந்தாம் வசனத்தில் பார்க்கிறோம். “சத்தம்” என்ற வார்த்தைக்கு எபிரெய வார்த்தை qârâ என்பதாகும். அதன் பொருள் “ஒரு நபரை சந்திக்க [எதிர்கொள்ள] – கூப்பிடுதல்” என்பதாகும் (Strong #7121). அதே எபிரெய வார்த்தைதான் ஏசாயா 58:1ல் உபயோகப்படுத்தபட்டது,

“சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி” (ஏசாயா 58:1).

அவ்விதமாகவே யோவான் ஸ்நானகன் பிரசங்கம் செய்தார். யோவான் ஸ்நானகன் ஏசாயா 40:3ஐ குறிப்பிட்டார். அவர் சொன்னார், “கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்” (யோவான் 1:23; ஏசாயா 40:3). யோவான் 1:23ல் குறிப்பிடப்பட்ட “கூப்பிடுகிற” என்ற வார்த்தைக்குக் கிரேக்க வார்த்தை bǒaō என்பதாகும். அதன் பொருள் “சத்தமிடு... கூப்பிடு” (வலுவாக) என்பதாகும். எபிரெய வார்த்தை மற்றும் கிரேக்க வார்த்தை சொல்லுகிறது “சத்தமாக கூப்பிடு” என்று (ஏசாயா 58:1). அதன் அர்த்தம் என்னவென்றால் பிரசங்கியார் தேவனுடைய வாயாக சத்தமாக கூப்பிட்டு சொல்லவேண்டும்... “சத்தமிடுதல் மற்றும் கூப்பிடுதல்” இழக்கப்பட்டவர்களை மற்றும் குழப்பத்தில் உள்ளவர்களை சத்தமாக கூப்பிட வேண்டும்! தங்களுக்குச் செவிகொடுப்பவர்களை தேனுடைய வார்த்தையை கேட்பவர்களை பிரசங்கிகள் கூப்பிட்டுச் சொல்ல வேண்டும். துக்ககரமாக, இன்று இந்தவிதமான பாணியில் பிரசங்கம் செய்வது பிரபலமாக இல்லை. வேதத்தை பிரசங்கிப்பதில் அடிப்படையான கீழ்ப்படியாமை இன்று நிலவுகிறது. நவீன ஊழியர்கள், “அமைதியான பிரசங்கம் மற்றும் போதனைக்குப் போய்விட்டார்கள்” என்று பழங்கால டைமர் உரைக்கிறார். இந்த நவீன ஊழியர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை. தேவன் ஏசாயாவிடம் சொன்னார், “சத்தமிட்டுக் கூப்பிடு, அடக்கிக் கொள்ளாதே.” நவீன பிரசங்கிகள் இயேசுவின் மாதிரியை பின்பற்றுவதில்லை. இயேசு “தேவாலயத்தில்; உபதேசிக்கையில் சத்தமிட்டு” (யோவான் 7:28), அது “நின்று, சத்தமிட்டு” யோவான் 7:37ல் உள்ள இயேசுவின் சத்தத்துக்கு நிகரானதல்ல. பெந்தேகோஸ்தே நாளில் பேதுருவை போலும் அல்ல. அவர் “உரத்த சத்தமாய்” அவருக்குக் கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையை சத்தமாக அறிவித்தார் (அப்போஸ்தலர் 2:14). ஜான் கில் சொன்னார், “அவர் தமது சத்தத்தை உயர்த்தினார், அந்த முழுகூட்ட மக்களுக்கும் கேட்கும்படியாக… அவர் தமது வைராக்கியத்தையும் உற்சாகத்தையும் காட்டும்படியாக, ஆவி மற்றும் தமது மனோபாவத்தை காட்டும்படியாக அப்படி சத்தமிட்டார்; உன்னதத்திலிருந்து வந்த ஆவியை தாங்கினவராக, அவர் மனிதர்களுக்குப் பயமில்லாதவராக இருந்தார்” (An Exposition of the New Testament; note on Acts 2:14). அதனால், நான் திரும்ப சொல்ல வேண்டியது அவசியம், நமது மேடைகளில் வேதத்தை பிரசங்கிப்பதில் தேவனுக்கு அடிப்படையான கீழ்ப்படியாமை இன்று நிலவுகிறது, பிரசங்கிப்பதிலும் பிரசங்கப்பாணியிலும் முறையிலும் பயங்கரமான கீழ்ப்படியாமை காணப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இதை கடைசி நாட்களில் உண்டாகும் ஒரு விசுவாச துரோகத்திற்கு அடையாளம் என்று சொல்லுகிறார். அவர் சொன்னார், “ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு… அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி (காதுகளை சந்தோஷப்படுத்திக் கொண்டு, NASV), தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு” (II தீமோத்தேயு 4:2,3). நமது நாட்களில் நிலையான “போதனைகள்” காணப்படுகின்றன, ஆனால் பிரசங்கங்கள் மறக்கப்பட்டன. நாம் கேட்பதெல்லாம் போதனைகள் – “போதனை” அக்கினி மற்றும் அவசரமில்லாமல்! அதுவே அவர்கள் இன்றைய செம்னரிகளில் கற்றுக்கொண்டவை! குப்பையாக, வார்த்தைக்கு வார்த்தை போதித்தல்! ஒருவரும் சுவிசேஷத்தோடு எதிர்கொள்ளுபவர்கள் இல்லை மற்றும் “போதித்தலின்” மூலமாக அவர்களின் ஆவிக்குரிய தூக்கத்தை கலைப்பவர் ஒருவருமில்லை. வெள்ளாடுகளை செம்மறியாடாக மாற்ற “போதிக்க” உன்னால் முடியாது! அவைகளின் பாவம்நிறைந்த மற்றும் சோம்பலில் இருந்து அவைகளை வெளியே கொண்டுவரப்பட போதிக்க வேண்டும்! “அந்தச் சத்தம் சொன்னது, கூப்பிடு” (ஏசாயா 40:6). அதுதான் மெய்யான சுவிசேஷ பிரசங்கத்தின் பாணியாகும்! மரித்த இருதயங்கள் மற்றும் மந்தமான மனங்கள் அசைக்கப்பட தேவனால் உபயோகப்படுத்தப்படுவது வேறொன்றும் அல்ல ஆனால் பிரசங்கம் மட்டுமே! வேறொன்றும் அல்ல ஆனால் ஆத்துமாவை கிளர்ச்சி அடைய செய்யும் பிரசங்கம் அதை செய்ய முடியும்! பிரைன் எச். எட்வர்டு சொன்னார், “இருதயம் மற்றும் மனசாட்சிக்கு ஒரு சம்மட்டியை போல அதிகாரத்தோடும் மற்றும் வல்லமையோடும் தேவனுடைய வார்த்தையை கொண்டுவருவது எழுப்புதலான பிரசங்கம் ஆகும். நமது அநேக பிரசங்கங்களில் இதுதான் இன்று இல்லாமல் இருக்கிறது. எழுப்புதலில் பிரசங்கிக்கும் மனிதர்கள் எப்பொழுதும் பயமில்லாமல் மற்றும் அவசரமாக இருப்பார்கள்” (Revival! A People Saturated With God, Evangelical Press, 1997 edition, p. 103). டாக்டர் லியோடு-ஜோன்ஸ் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரசங்கிகளில் ஒருவராகும். அவர் சொன்னார், “பிரசங்கம் என்றால் என்ன? அக்கினியின்மேல் தர்க்கம்!... அது தியாலஜியின்மேல் அக்கினி. மற்றும் ஒரு தியாலஜி அக்கினியை எடுக்காவிட்டால் அது ஒரு குறையுள்ள தியாலஜி ஆகும்... தியாலஜி பிரசங்கம் அக்கினி மேல் நிற்கும் ஒரு மனிதன் மூலமாக வருகிறது… இவைகளை பேசகூடிய ஒரு மனிதனுக்கு எது இருந்தாலும, உணர்வு இல்லாவிட்டால் அவனுக்கு ஒரு புல்பிட்டில் உரிமை இல்லை; அவனை ஒரு போதும் உள்ளேவிட அனுமதிக்க கூடாது” (Preaching and Preachers, p. 97).

பிறகு ஏசாயா சொன்னார், “என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன்?” (ஏசாயா 40:6). ஒரு இளம் மனிதன் என்னிடம் செமினரி விரிவுரையாளர் சொன்னதாகச் சொன்னான். ஒரு ஆறுமாத காலத்திற்கான போதனைகளின் திட்டம் முன்னதாக தயார் செய்யப்பட வேண்டியது அவசியமாகும் என்று சொன்னதாக சொன்னான். அப்படிப்பட்ட காரியம் செய்யும் ஒரு மனிதனை நான் முற்றிலும் வெறுக்கிறேன்! அப்படி செய்யும் ஒரு மனிதனிடம் மெய்யாக, தேவனுடைய போதனை இருக்க முடியாது! அது சாத்தியமில்லை! எல்லா காலத்திலும் ஸ்பர்ஜன் ஒரு மிகப்பெரிய பிரசங்கியாகும். அவர் ஒருபோதும் அதை செய்ததில்லை. உண்மையான பிரசங்கி தேவனுடைய செய்திக்காக அவரிடம் கேட்க வேண்டியது, மற்றும் அதை கொடுக்கும்படி தேவனிடம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும். “என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன்?” தேவன் எனக்கு பிரசங்கிக்க சொன்ன செய்தியை நான் கூப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவசியமாகும். நான் ஹிட்லரைபோல பிரசங்கிப்பதாக யாரோ ஒருவர் சொன்னார். ஒருவிதத்தில் அவர் சரி. ஹிட்லர் மிகுந்த உணர்வோடு பொய்களைப் பிரசங்கித்தான். நாம் மிகுந்த உணர்வோடு சத்தியத்தை பிரசங்கிக்க வேண்டியது அவசியமாகும்! உணர்வுள்ள பிரசங்கம் மட்டுமே மனிதர்களை செயலாக்கத்திற்கு அசைக்கும். வேதாகம உன்னதமான காரியங்கள் அவர்களை தூங்க வைக்கும்! டாக்டர் லியோடு-ஜோன்ஸ் சொன்னார், “தற்கால பிரசங்கங்கள் மனிதர்களை இரட்சிக்காது. அது மனிதர்களை தொந்தரவுகூட செய்யாது, ஆனால் அவர்களை இருக்கிற இடத்திலே, எந்த மிகசிறிய தொந்தரவுமில்லாமல் அப்படியே துல்லியமாக விட்டுவிடும்.” இது தவறு! அவர்கள் தொந்தரவு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்!

“பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் [அதன் அழகெல்லாம்] வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்” (ஏசாயா 40:6-8).

I. முதலாவது, நான் வாழ்க்கையின் திணரலைப்பற்றி கூப்பிட்டு சொல்ல வேண்டியது அவசியமாகும்.

“பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்” (ஏசாயா 40:6-8).

வாழ்க்கை சீக்கிரமாக கடந்து போகும். அது அதி சீக்கிரம் நடக்கும். உனது இளமை நீண்டகாலம் இருப்பதுபோல காணப்படும் – ஆனால் அது மிகவும் சீக்கிரமாக கடந்து போகும். எனது சுயசரிதையை நான் எழுதுகிறேன். அதை செய்யும்படி எனது மகன் ராபர்ட் என்னிடம் கேட்டுக் கொண்டான். இன்னும் சில வாரங்களில் நான் எழுபத்தி ஆறு வயதை எட்டுவேன். நான் சில மாதங்களுக்கு முன்பாக ஒரு இளம் மனிதனாக இருந்ததாக எனக்குக் காணப்படுகிறது! அப்படியே உங்களுக்கும் இருக்கும்! கோடை சூரியன் மேலே வருகிறது. புற்கள் பழுப்பு நிறமாக மாறுகின்றன. மலர்கள் கவிழ்ந்து மற்றும் மரித்துப்போகின்றன. வாழ்க்கை மறையக்கூடியது, விரைந்தோடுகிறது, தற்காலிகமானது, குறுகியது, மற்றும் குறைவாக வாழப்பட்டது. இதைப்பற்றி அப்போஸ்தலனாகிய யாக்கோபு பேசியிருக்கிறார். அவர் சொன்னார்,

“ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான். சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்” (யாக்கோபு 1:10-11).

வெகுசில மக்களே இதை பார்க்கிறார்கள். அவர்கள் வெளிப்படையானவைகளை உணர்ந்து கொள்ளாமல் இந்த உலகத்தில் முன்னேறும்படி உழைத்துச் சம்பாதிக்கிறார்கள் – அது சீக்கிரமாக முடிந்து போகும் அதன்பிறகுதான் அவர்கள் நினைப்பார்கள்! சி. டி. ஸ்டட் (1860-1931) அதைக் கண்ட பணக்காரர்களில் ஒருவர். அவர் ஒரு பெரிய அதிஸ்டத்தை சுதந்தரித்தார், ஆனால் அவை அனைத்தையும் விட்டுச் சீனாவுக்கு ஒரு மிஷனரியாக போனார் –அதன்பிறகு அவர் அபாயகரமாக இருந்தபொழுது ஆப்பிக்காவின் இருதயத்துக்குப் போனார். அந்த சி. டி. ஸ்டட் இதை சொன்னார்,

ஒரே ஒரு வாழ்க்கை,
   அதுவும் சீக்கிரம் கடந்து போகும்;
கிறிஸ்துவுக்காக செய்தது மட்டுமே
   என்றும் நிலைத்திருக்கும்.

ஒவ்வொரு இளம் மனிதனும் சி. டி. ஸ்டட்டை பற்றி படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மற்றும் அவரை உங்கள் ஹீரோக்களில் ஒருவராக ஆக்கிக் கொள்ளுங்கள்! அவருடைய கவிதையின் உண்மையை நீங்கள் பார்க்க முடிந்தால்!

ஒரே ஒரு வாழ்க்கை,
   அதுவும் சீக்கிரம் கடந்து போகும்;
கிறிஸ்துவுக்காக செய்தது மட்டுமே
   என்றும் நிலைத்திருக்கும்.

இயேசு சொன்னார்,

“மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” (மாற்கு 8:36, 37).

“பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் [அதன் அழகெல்லாம்] வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்” (ஏசாயா 40:6-8).

அதனால் நான் வாழ்க்கையின் குறுகிய தன்மையைப்பற்றி அடிக்கடி பேச வேண்டியது அவசியமாகும்! மற்றும் உங்கள் வாழ்க்கையின் குறுகிய தன்மையைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டியது அவசிமாகும். வேதம் சொல்லுகிறது, “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங்கீதம் 90:12).

II. இரண்டாவது, நான் பரிசுத்த ஆவியானவரின் தளர்த்தும் வேலையைப்பற்றி கூப்பிட்டு சொல்லவேண்டியது அவசியமாகும்.

“தளர்த்தும்” என்ற வார்த்தை சுருக்கும், உலர்த்தும், மற்றும் அதனுடைய புத்துணர்ச்சியை இழக்கும் என்று பொருளாகும். ஏசாயா 40:7 சொல்லுகிறது,

“கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்” (ஏசாயா 40:7).

ஸ்பர்ஜன் சொன்னார், “தேவனுடைய ஆவி, காற்றைபோல, உன்னுடைய ஆத்துமாவின் நிலத்தை கடந்து போக வேண்டியது அவசியமாகும், மற்றும் [உன்னுடைய] அழகை மங்கும் மலரைப்போல செய்யும். அவர் [உன்] பாவத்தைக்குறித்து உணர்த்த வேண்டியது அவசியமாகும்… அதாவது [உனது] விழுந்துபோன சுபாவமே ஊழல் உள்ளது என்று [ஒருவேளை நீ] பார்க்கும்படியும், மற்றும் ‘மாம்சத்துக்குரியவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க முடியாது’. [நாம் ஒருவேளை உணரும்படியும்] நமது பழைய மாம்ச வாழ்க்கையின் தண்டனை மரணம்… பிணியாளிகளுக்கு மட்டுமே ஒரு வைதியன் வேண்டும்… உயிர்பிக்கப்பட்ட பாவி, தேவன் தன்மேல் இரக்கமாக இருக்கவேண்டும் என்று வேண்டும்பொழுது, அதை காணும்படி குணமாக்கப்படுகிறான், வேகமான ஒரு சமாதானத்திற்கு பதிலாக, தேவனுடைய கோபத்தின் ஒரு உணர்வோடு அவனுடைய ஆத்துமா கீழே தாழ்த்தப்படுகிறது… நீ முதலாவது ஒரு தீட்டான பொருள் என்று அறிந்து கொண்டு புலம்பாமல் நமது சகல பாவங்களையும் சுத்தம் செய்யும் [கிறிஸ்துவின் இரத்தம்] மதிப்பை ஒருபோதும் உன்னால் மதிப்பிட முடியாது” (“The Withering Work of the Spirit,” pp. 375, 376).

அதுதான் பரிசுத்த ஆவியானவரின் தளர்த்தும் வேலையாகும். உன்னுடைய பொய்யான நம்பிக்கைகளை உலர்ந்துபோக செய்வதே பரிசுத்த ஆவியானவரின் வேலையாகும், அது உன்னுடைய இருதயத்தின் மரித்த தன்மையை உனக்குக் காட்டுகிறது, அது உன்னுடைய மனதின் நம்பிக்கைகளை எல்லாம் உதிர்த்துகிறது, உன்னுடைய மெய்யான நம்பிக்கை கிறிஸ்துவில் மட்டுமே என்று, உன்னை பாவத்திலிருந்து இரட்சிக்க உன்னுடைய ஸ்தானத்தில் மரித்த கிறிஸ்துவில் மட்டுமே என்று காணும்படி செய்கிறது. பரிசுத்த ஆவியானவர் உன்னுடைய ஆத்துமாவை “தளர்த்தும்” பொழுது, பிறகு உனது “நன்மை” என்று அழைக்கப்படுபவை ஒன்றுமில்லை ஆனால் அழுக்கான கந்தைகள் என்பதை காண்பாய், நீ இதுவரை செய்த ஒன்றும் தேவனுக்கு ஏற்றவனாக உன்னை மாற்ற முடியவில்லை; நீ செய்தவைகளெல்லாம் உன்னை நியாயத்தீர்ப்பு மற்றும் நரகத்திலிருந்து இரட்சிக்க முடியாது.

அதனால்தான் தேவன் உன்னை பொய்யான மாறுதல் அடையும்படி விடுகிறார். அவர் உனக்குச் சமாதானத்தை கொடுப்பதற்கு முன்பாக நீ அநேக பொய் மாறுதல்களை அடைய உன்னை விட்டிருக்கலாம். அதனால் தேவன் உன்னை விட்டுவிட்டார் என்று அர்த்தமல்ல. இல்லவே இல்லை! தேவன் இந்தப் பொய் மாறுதல்களை உபயோகப்படுத்துகிறார். அவர் அவைகளை உபயோகப்படுத்தி நீ கதரும்படி செய்கிறார், “மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும்; இருக்கிறது”. தேவன் உன்னை உதிரும்படி செய்து, உன்னை இரட்சிக்கும்படி ஏதோ சிலதை செய்தல் அல்லது சொல்லுதலின் பொய்யான நம்பிக்கையிலிருந்து உலரும்படி செய்கிறார். ஜான் நியூடன் சொன்னார்,

சில சாதகமான நேரத்தில் நான் நம்பி இருந்தேன்,
   எனது வேண்டுதலுக்கு உடனடியாக பதிலளித்தார்,
மற்றும் அவரது கட்டுப்படுத்தும் வல்லமையினால்
   என் பாவங்களை நீக்கினார் மற்றும் இளைபாறுதல் தந்தார்.
இதற்கு பதிலாக, என் இருதயத்தின் மறைந்திருந்த
   தீமைகளை நான் உணரும்படி செய்தார்;
மற்றும் நரகத்தின் கோப சக்தி என் ஆத்துமாவின்
   ஒவ்வொரு பாகத்திலும் தாக்கும்படி விட்டார்.

ஆயாக்கோவைக் கேளுங்கள்! டானியைக் கேளுங்கள்! ஜான் கேஹனைக் கேளுங்கள்! என்னைக் கேளுங்கள்! நாங்களெல்லாம் இளைப்பாறுதல் தரும்படி தேவனிடம் கதறினோம் – ஆனால் அதற்குப் பதிலாக அவர் எங்களை ஷீலா நாஹானைப்போல உணரும்படி செய்தார். அவள் சொன்னாள், “என்னைப்பற்றி நான் மிகவும் வெறுப்பாக உணர்ந்தேன்.” மற்றொரு பெண் சொன்னாள், “நான் என்னில் மிகவும் பிரியமில்லாமல் போனேன்.” டாக்டர் கேஹான் மற்றும் நான் அவளிடம் சொன்னோம் அவள் வெறும் “பிரியமில்லாமல்” போனதைவிட அதிகமாக உணர்ந்திருக்க வேண்டும். ஷீலாவைப் போல, “வெறுப்பாக” உணர்ந்திருக்க வேண்டும். உன்னில் நீ முற்றிலும் “வெறுப்பாக” உணரும் வரையிலும், மெய்யான மாறுதல் அடைந்தவர்களுக்கு தளர்த்துதலை, உரிய உள்ளான இழப்பை உன்னால் அனுபவிக்க முடியாது.

“தளர்ந்த” என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது. உனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள நீ அறிந்திருக்க வேண்டியது அவசியம். “தளர்ந்த” என்ற வார்த்தையின் அர்த்தம் “வெட்கப்படுதல்… உலர்ந்து போதல் (தண்ணீரை போல)… வெட்கப்படுதல், குழப்பமடைதல், மற்றும் தளர்ந்து போதல்” (Strong #300).

“கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்” (ஏசாயா 40:7).

உன்னுடைய இருதயத்திலும் அப்படிதான் நடக்கிறது. பரிசுத்த ஆவியானவர் உன்னுடைய சுய நம்பிக்கையை தளர்ந்ததாக்கி மற்றும் உலர செய்ய வேண்டும். உன்னுடைய இருதயம் ஒரு மரித்த பூவைபோல வாடி உதிர்ந்து போகும் வரைக்கும் – உன்னுடைய சொந்த வக்கிர சுபாவம் சங்கடப்படும் மற்றும் வெட்கப்படும் வரைக்கும். தனது மாறுதலுக்கு முன்பாக ஷீலா சொன்னாள், “என்னைப்பற்றி நான் மிகவும் வெறுப்பாக உணர்ந்தேன்.” ஒரு உண்மையான மாறுதலில் அதுதான் நிகழ்கிறது.

“கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்” (ஏசாயா 40:7).

உன்னைப்பற்றி வெறுப்பாக நீ உணரும்போது, நீ இயேசுவை நம்ப வேண்டும் என்று நாங்கள் சொல்ல வேண்டியது அவசியம். அவர் தமது இரத்தத்தினால் பாவத்திலிருந்து உன்னை சுத்திகரிப்பார், மற்றும் தேவனுடைய நியாய தீர்ப்பிலிருந்து உன்னை இரட்சிப்பார்.

பெரிய சுவிசேஷகரான ஜார்ஜ் ஒயிட்பீல்டு சொன்னார், “இயேசுவில் உனக்கு நம்பிக்கை இல்லை என்று தேவன் உனக்கு எப்போதாவது காட்டினாரா? நீ எப்போதாவது இப்படியாக ஜெபித்தாயா, ‘கர்த்தாவே, கிறிஸ்துவை பற்றிக் கொண்டிருக்க எனக்கு உதவி செய்யும்’? கிறிஸ்துவிடம் வரமுடியாத உனது குறைவை தேவன் எப்போதாவது உனக்கு உணர்த்தினாரா, மற்றும் கிறிஸ்துவில் விசுவாசம் கொள்ள ஜெபத்தில் கதரும்படி செய்தாரா? அப்படி இல்லை என்றால், உனது இருதயத்துக்குள் சமாதானம் இருக்காது. தேவன் தாமே உனக்கு இயேசுவில் உறுதியான சமாதானத்தை தருவாராக, நீ மரிப்பதற்கு முன்பாக மற்றும் வேறுதருணம் உனக்கு இல்லை” (“The Method of Grace”). நீ மெய்யான மாறுதலை அடைவதற்கு முன்பாக பாவத்தோடு ஒரு தீவிர போராட்டத்தை அனுபவித்திருக்க வேண்டியது அவசியம். கெத்சமெனே தோட்டத்தில் உன்னுடைய பாவங்கள் அவர்மேல் வைக்கப்பட்டபோது கிறிஸ்து என்ன உணர்ந்தாரோ அதை ஓரளவிற்கு நீ உணர வேண்டும். அவர் கதரினபோது என்ன உணர்ந்தாரோ அதை ஓரளவிற்கு நீ உணர வேண்டும், “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது… என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்” (மத்தேயு 26:38, 39).

தயவு செய்து எழுந்து நின்று பாடல் எண் 10ஐ பாடவும், அது “பாவிகளே நீங்கள் வாருங்கள்” என்ற பாடல்.

வாருங்கள், பாவிகளே நீங்கள்,
   ஏழைகளான மற்றும் பரிதவிக்கப்பட்டவர்களான,
பெலவீனமான மற்றும் காயப்பட்ட,
   வியாதி மற்றும் புண்ணுள்ளவர்களே;
இயேசு இருக்கிறார் உங்களை இரட்சிக்க,
   பரிதாபம், அன்பு மற்றும் வல்லமையுடன்:
அவரால் முடியும், அவரால் முடியும்,
   அவர் சித்தமாக இருக்கிறார், இனிமேல் சந்தேகமே வேண்டாம்;
அவரால் முடியும், அவரால் முடியும்,
   அவர் சித்தமாக இருக்கிறார், இனிமேல் சந்தேகமே வேண்டாம்.

வாருங்கள், சோர்வுள்ளவர்களே நீங்கள்,
   பாரசுமை சுமந்து, நொறுக்கப்பட்டு
மற்றும் விழுந்து
   உடைக்கப்பட்டவர்களே வாருங்கள்;
நீங்கள் நல்லவர்களாக மாறும்வரை பொறுத்திருந்தால்,
   ஒருபோதும் வரவே மாட்டீர்கள்:
நீதிமான்களை அல்ல, நீதிமான்களை அல்ல,
   பாவிகளை அழைக்க இயேசு வந்தார்;
நீதிமான்களை அல்ல, நீதிமான்களை அல்ல,
   பாவிகளை அழைக்க இயேசு வந்தார்.

இப்பொழுது உயர்த்தப்பட்ட, இரட்சகரை பாருங்கள்,
   அவரது இரத்தத்தின் தகுதிக்காக கெஞ்சுங்கள்;
உங்களை தூக்கி முழுதும் அவர்மேல் வையுங்கள்,
   வேறு ஒன்றையும் நம்பி கூப்பிட வேண்டாம்;
யாருமில்லை ஆனால் இயேசு, யாருமில்லை ஆனால் இயேசுதான்,
   உதவியற்ற பாவிகளுக்கு நன்மை செய்யமுடிந்தவர்;
யாருமில்லை ஆனால் இயேசு, யாருமில்லை ஆனால் இயேசுதான்,
   உதவியற்ற பாவிகளுக்கு நன்மை செய்யமுடிந்தவர்.
(“Come, Ye Sinners” by Joseph Hart, 1712-1768; altered by the Pastor).

இப்பொழுது ஒரு நம்பிக்கைமிக்க மாற்றப்பட்டவரின் வார்த்தைகளை கவனியுங்கள். இங்கே ஒரு இளம் நபருடைய சாட்சி.

நான் என்னை சுயமாக இரட்சித்துக்கொள்ள ஒருவழியை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பெருமைநிறைந்தவன், நான் பெருமைநிறைந்தவன் என்பதைகூட சுயமாக ஒத்துக்கொள்ள முடியாத பெருமைநிறைந்தவன். இயேசுவில் நம்பிக்கை வைக்காமல் தேவனுக்கு விரோதமாக எப்படி போராடினேன் என்று இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்… நான் வேதத்தை படிக்க ஆரம்பித்தேன், “நடைமுறையில்” ஒவ்வொரு நாளும் ஜெபித்துக்கொண்டிருந்தேன், சபை நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டேன். ஆனால் எனக்குள் உள்ளான சமாதானம் இல்லை. உள் ஆழத்தில், நான் இன்னும் இழக்கப்பட்டவன் என்று நான் அறிந்திருந்தேன் ஆனால் மிகவும் பெருமையாக மற்றும் அதை எதிர்கொள்ள முடியாத கோழையாக இருந்தேன். நான் ஒரு பாவி என்ற எண்ணத்தில் என்னை மறைத்துக் கொண்டேன். அந்த எண்ணத்தை வெளியேற்ற, என்னை திசைதிருப்ப என்னால் முடிந்ததையெல்லாம் செய்தேன். என் நம்பிக்கையை நியாயப்படுத்த எந்தச் சாக்குக் கிடைக்கும் என்று பார்த்தேன், எனது பாவசுபாவத்திலிருந்து என்னை நல்லவனாக நான் உணர்ந்தேன். அதன்பிறகு தேவன் பரலோகத்தை திறந்து எழுப்புதலை கீழே அனுப்பினார், மறுபடியும், எனது பெருமை பெரிதாக இருந்ததால் என்னை இரட்சிக்க இயேசு தேவை என்று நான் ஒத்துக்கொள்ளவில்லை… இந்தக் கருத்தில், நான் மனரீதியாக காலியாகிவிட்டேன். நான் என்ன செய்தாலும், என் பாவத்திலிருந்து, இயேசுவை நம்பாத பாவத்திலிருந்து, சுயநீதியான பாவத்திலிருந்து என்னால் சுயமாக இரட்சித்துக்கொள்ள முடியாது என்று பார்க்க ஆரம்பித்தேன். நான் உதவியற்றிருந்தேன். நான் இயேசுவை நம்ப எனக்குள் போராடிக் கொண்டிருந்தேன் ஆனால் எனது பெருமை என்னை விடவில்லை… நான் எல்லா நம்பிக்கையையும் விட்டேன், என் சுயத்தை விட்டேன். எனது பாவம் என்னுடைய எல்லா எண்ணங்களையும், உணர்வுகளையும் அழுத்தியது. நான் உயிரோடிருந்தும் ஒரு நோயாளியாக உணர்ந்தேன். அந்த நேரத்தில், அற்புதமாக, இயேசு என்னிடம் வந்தார், என்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாக, அவரை நம்பினேன். நான் இயேசுவிடம்வர முயற்சி செய்துகொண்டிருந்தேன், இரட்சிக்கப்பட என்னால் முடியாது என்று நினைத்தபொழுது இயேசு என்னிடம் வந்தார். இயேசு என்னிடம் வந்தபொழுது, அவரில் நம்பிக்கை வைப்பது மிகவும் எளிது… இயேசு என்னை ஏற்றுக்கொண்டார் மற்றும் தமது இரத்தத்தினால் என்னை கழுவினார்… என்னில் இருக்கும் ஒவ்வொரு நன்மையும் இயேசு என்னை இரட்சித்த காரணத்தால். நான் இயேசுவை நினைக்கும்போது எனது கண்ணீரை நிருத்த என்னால் முடியவில்லை, மகிழ்ச்சிக் கண்ணீர், அவர் எனக்கு செய்தவைகளுக்காக நன்றி நிறைந்த கண்ணீர். எனக்காக இயேசு வைத்திருக்கும் எல்லா அன்புக்கும், நான் போதுமான அளவு சாத்தியமானபடி அன்புகூரவில்லை, என்னால் போதுமான அளவு நன்றிகூர முடியவில்லை. என்னால் செய்ய முடிந்ததில்லெல்லாம் சிறந்தது, எனது வாழ்க்கையை எனது இரட்சகர், இயேசுவுக்கே ஒப்புக்கொடுப்பதுதான்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Come, Holy Spirit, Heavenly Dove” (by Dr. Isaac Watts, 1674-1748;
to the tune of “O Set Ye Open Unto Me”).


முக்கிய குறிப்புகள்

தேவனுடைய ஆவியானவரின் தளர்த்தும் வேலை

THE WITHERING WORK OF GOD’S SPIRIT

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல். புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது” (ஏசாயா 40:6-8).

(ஏசாயா 40:5; 58:1; 40:3; யோவான் 1:23; யோவான் 7:28, 37;
அப்போஸ்தலர் 2:14; II தீமோத்தியு 4:2, 3)

I. முதலாவது, நான் வாழ்க்கையின் திணரலைப்பற்றி கூப்பிட்டு சொல்ல வேண்டியது அவசியமாகும், ஏசாயா 40:6; யாக்கோபு 1:10-11; மாற்கு 8:36, 37;
சங்கீதம் 90:12.

II. இரண்டாவது, நான் பரிசுத்த ஆவியானவரின் தளர்த்தும் வேலையைப்பற்றி கூப்பிட்டு சொல்லவேண்டியது அவசியமாகும், ஏசாயா 40:7;
மத்தேயு 26:38, 39.