Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




ஒரு நல்ல மனிதன் இழக்கப்பட்டான் மற்றும்
ஒரு கெட்ட மனிதன் இரட்சிக்கப்பட்டான்!

A GOOD MAN LOST AND A BAD MAN SAVED!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

மார்ச் 5, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை
வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Evening, March 5, 2017

“அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர் அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப் பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்” (லூக்கா 18:9-14).


இது ஒரு உவமை ஆகும். இயேசு ஒரு பெரிய சத்தியத்தை விளக்குவதற்காக இந்தக் கதையை சொன்னார். இயேசு இந்த உவமையை நம்பிக்கைக்குரிய, தங்கள் சொந்த நன்மையை நம்பி, மற்றவர்களை தாழ்வாக பார்ப்பவர்களைக் குறித்துச் சொன்னார்.

டாக்டர் ஆர். ஏ. டோரி ஒரு பெரிய சுவிசேஷகர். அவர் அடிக்கடி இந்த வசனங்களை பிரசங்கித்தார். அவர் இந்தப் போதனையை, “ஒரு நல்ல மனிதன் இழக்கப்பட்டான் மற்றும் ஒரு கெட்ட மனிதன் இரட்சிக்கப்பட்டான்” என்று அழைப்பார். டாக்டர் டோரி சொன்னார், “நான் பாடத்தை திரித்துவிட்டேன் என்று உங்களில் சிலர் நினைக்கலாம். அது இப்படியாகத்தான் இருக்க வேண்டும் ‘ஒரு நல்ல மனிதன் இரட்சிக்கப்பட்டான் மற்றும் ஒரு கெட்ட மனிதன் இழக்கப்பட்டான்’. ஆனால் நீங்கள் சொல்வது தவறு. பாடம் தெளிவாக இருக்கிறது, ‘ஒரு நல்ல மனிதன் இழக்கப்பட்டான் மற்றும் ஒரு கெட்ட மனிதன் இரட்சிக்கப்பட்டான்’” கிறிஸ்து இந்தக் கதையை நமக்குக் கொடுத்தார். கிறிஸ்து ஒரு நல்ல மனிதனை பற்றியும் மற்றும் ஒரு கெட்ட மனிதனைப் பற்றியும் பேசினார். கிறிஸ்து நமக்குச் சொன்னார் ஒரு நல்ல மனிதன் இழக்கப்பட்டான் மற்றும் ஒரு கெட்ட மனிதன் இரட்சிக்கப்பட்டான்.

பரிசேயர்கள் நல்ல மனிதர்கள். அவர்கள் மதவாதிகள். அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஆயக்காரர்கள் வரி வசூல் செய்பவர்கள். அவர்கள் தங்களால் முடிந்தவரையிலும் பணத்தை வசூல் செய்தார்கள். அவர்கள் குண்டர்களைப் போன்றவர்கள். அவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி அதிகமான தொகையை வசூலிப்பார்கள். ரோமர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவார்கள். மீதி பணத்தை தங்களுக்காக வைத்துக்கொள்வர்கள். யூத மக்கள் அவர்களை வெறுத்தார்கள். அவர்கள் துரோகிகளாக, மிகவும் தீயவர்களாக எண்ணப்பட்டார்கள். ஆயக்காரர்கள் சகல பாவிகளையும்விட படுமோசமான பாவிகள். அவர்கள் பணம் பரிப்பவர்கள் மற்றும் திருடர்கள். இந்த உவமையிலே இயேசு இந்த முழு மனுவர்க்கத்தையும் மெய்யாகவே பிரிக்கிறார். அவர் அவர்களை இரண்டு வகுப்பு மக்களாக பிரிக்கிறார் – இழக்கப்பட்ட சுயநீதியான மக்கள், மற்றும் தாங்கள் பாவிகள் என்று உணர்ந்து இரட்சிக்கப்பட்ட மக்கள். இழக்கப்பட்டவர்கள் மற்றும் இரட்சிக்கப்பட்டவர்கள். தண்டனைக்குரியவர்கள் மற்றும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். பதர் மற்றும் கோதுமைமணி. நரகத்திற்கு அகலமான வழியில் செல்லுபவர்கள், மற்றும் நெருக்கமான வழியில் இரட்சிப்பிற்குச் செல்லுபவர்கள். இயேசு இந்த முழுமனுவர்க்கமும் மற்றும் இன்று இரவில் இங்கிருக்கும் ஒவ்வொருவரும், இரண்டு வகுப்புகளில் ஒன்றில் இருக்கிறீர்கள். இன்று இரவில் நீங்கள் எந்தக் குழுவில் இருக்கிறீர்கள்? இயேசு சொன்னார், “இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.” ஒரு நல்ல மனிதன் மற்றும் ஒரு கெட்ட மனிதன். நீ அதில் யாராக இருக்கிறாய்?

I. முதலாவது, ஒரு “நல்ல” மனிதன் இழக்கப்பட்டான்.

“பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்” (லூக்கா 18:11-12).

உலகத்தின் பார்வையில் அவன் மெய்யாகவே ஒரு “நல்ல” மனிதன். அவன் ஒரு நீதிக்குரிய மனிதன். அவன் ஒரு சுத்தமாக வாழும் மனிதன். அவன் ஒரு மதசடங்காச்சார மனிதன். அவன் ஒரு தாராளமான மனிதன். அவன் ஒரு மதிபிற்குரிய மனிதன். நான் இரட்சிக்கப்படுவதற்கு முன் இருந்ததுபோல அவனும் இருந்தான். என்னுடைய சூட்டை போட்டுக்கொண்டு நான் வசிக்கும் எனது மாமா வீட்டிற்கு நடந்து போவேன். மற்றவர்கள் குடிகாரர்கள். அவர்கள் தரையில் பதுங்கி மற்றும் படுத்துத் தூங்குவார்கள். நான் 18 வயதுள்ளவனாக இருந்தேன். நான் நினைத்தேன், “நான் அவர்களைபோல இருக்க விரும்பவில்லை.” நான் ஒரு நல்ல பையன். நான் போதைப் பொருள்களை எடுப்பதில்லை. நான் குடிபோதையில் இருந்ததில்லை. மற்றும் நான் ஏற்கனவே புகைப்பதை விட்டுவிட்டேன். நான் ஒரு நல்ல பையனாக இருந்தேன். நான் ஒரு பாப்டிஸ்ட் ஊழியனாக பிரசங்கம் செய்ய ஒப்புக்கொடுத்திருந்தேன். நான் மிகவும் நல்லவனாக இருந்தேன். ஆனால் நான் இன்னும் இழக்கப்பட்டவனாக இருந்தேன்! மற்ற பிள்ளைகள் செய்வதுபோல நான் செய்யாதபடியினால் நான் பெருமையாக இருந்தேன். என்னில் நான் பெருமை உள்ளவனாக இருந்தேன். என்னில் ஒரு தவறும் இல்லை என்று நான் நினைத்தேன். ஆனால் இன்னும் என்னைப்பற்றி நல்லதாக உணரவில்லை. நான் என்னை கேட்டேன், “தேவன் இன்னும் அதிகமாக என்ன விரும்புகிறார்?” நான் சபைக்குப் போனேன். நான் ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் மற்றும் ஒவ்வொரு ஞாயிறு இரவிலும் போனேன். ஒவ்வொரு ஞாயிறு மத்தியானத்திலும் பில்லி கிரகாம் ரேடியோவில் பிரசங்கம் செய்வதை கவனித்தேன். ஒவ்வொரு ஞாயிறு இரவிலும் வாலிபப் பாடற்குழுவில் பாடினேன். நான் ஒரு ஊழியனாக பிரசங்கம் செய்ய, என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருந்தேன். இருந்தாலும் எனது உள்ளத்தின் ஆழத்தில் எனக்குச் சமாதானமில்லை. வேதம் சொல்லுகிறது, “துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்” (ஏசாயா 57:21). தேவன் இன்னும் அதிகமாக என்ன விரும்புகிறார்? நான் அந்தப் பரிசேயனைப்போல இருந்தேன்!

அவன் தன்னை நம்பினான். மற்றவர்களை வெறுத்து ஒதுக்கினான். தான் ஒரு பாவி என்று அவன் ஒத்துக்கொள்ளவில்லை. அவன் தனது பாவமுள்ள இருதயத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அவன் தேவனுக்குப் பதிலாக “தனக்குள்” ஜெபித்தான். அவன் தனது சொந்த நீதிக்காக தன்னை பாராட்டிக் கொண்டான். இந்த இரவிலே நீ அப்படியே இருக்கிறாய்! நீ இருக்கிறபடியே போதுமான அளவு நல்லவன் என்று நினைக்கிறாய். உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டாய். நீ சாத்தானை கவனித்தாய். நீ அவனால் ஏமாற்றப்பட்டாய். நீ வெளியில் நேர்மையாளனாக மற்றும் நீதிமானாக இருக்கிறாய். ஆனால் உன்னுடைய இருதயம் ஆழமான பாவம் நிறைந்தது. வேதம் சொல்லுகிறது “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” (எரேமியா 17:9). நான் அதை பிரசங்கித்தால், நீ விரும்பமாட்டாய். அது உனக்குக் கவலை மற்றும் கூச்சமாக இருக்கும். உன்னுடைய இருதயத்தை பரிட்சிக்க நீ விரும்பமாட்டாய். நீ ஆதாமைப்போல, தேவனிடமிருந்து மறைந்து கொள்ள விரும்புகிறாய். நீ ஆதாமைப்போல, உன்பாவத்தை மூட விரும்புகிறாய். நீ ஆதாமைப்போல, மற்ற மக்களை குற்றம்சாட்ட விரும்புகிறாய். மற்றும் நீ ஆதாமைப்போல, தேவனால் சபிக்கப் பட்டவன்! நீ இழக்கப்பட்டவன். மதத்திலும் மற்றும் அறநெறியிலும் நீ இழக்கப்பட்டவன். சுய ஏமாற்றத்தில் நீ இழக்கப்பட்டவன். பொய்யான நம்பிக்கையில் நீ இழக்கப்பட்டவன். மற்றும் நீ இருக்கும் இந்த நிலையில் மரித்தால், நித்தியம் முழுவதுமாக நீ இழக்கப்படுவாய்.

நித்தியம், நித்தியம்,
நித்தியம் முழுவதுமாக நீ இழக்கப்பட்டவன்.
நித்தியம், நித்தியம்,
நித்தியம் முழுவதுமாக நீ இழக்கப்பட்டவன்!
(“Eternity” by Elisha A. Hoffman, 1839-1929).

நான் என்னை கேட்கிறேன், “தேவன் இன்னும் அதிகமாக என்ன விரும்புகிறார்?” நான் செய்த ஒன்றும் போதுமானதாக காணப்படவில்லை! ஒவ்வொரு நாளும் மற்றும் ஒவ்வொரு இரவும் நான் கூச்சமாக உணர்ந்தேன் – அப்படியே நீயும் இருக்கிறாய்! இந்தவிதமாக நீ ஒருபோதும் மகிழ்ச்சியை உணரமாட்டாய்! இந்தவிதமாக நீ ஒருபோதும் சமாதானத்தை உணரமாட்டாய்! “துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்” (ஏசாயா 57:21). நீ அந்தப் பணக்கார இளம் அதிகாரியை போல இருக்கிறாய். வெளிபிரகாரமாக தேவனுடைய நியமங்களை கைக்கொண்டாய், ஆனால் உன்னுடைய இருதயத்தின் உள்ளான பாவங்களை எண்ணாதிருக்கிறாய். தேவனுடைய நியாயப் பிரமாணத்தின் ஆவிக்குரிய அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். உன் இருதயத்தின் மிகச்சிறிய இச்சையை தேவனுடைய பிரமாணம் தண்டிக்கிறது! உன் மனதில் நீ நல்லவன். ஆனால் தேவனுடைய பார்வையில் ஒன்றுக்கும் உதவாத ஒரு பாவி! நீ இப்படியே மரித்தால் நேராக நித்திய எரிநரகத்துக்குப் போவாய்!

நித்தியம், நித்தியம்,
நித்தியம் முழுவதுமாக நீ இழக்கப்பட்டவன்.

ஆனால் இந்த மனிதனைப்பற்றி இன்னுமொரு காரியத்தை உங்களுக்கு நான் காட்ட விரும்புகிறேன். அவன் எப்படிப்பட்ட ஒரு மோசடியானவன் என்பதை அவனுடைய ஜெபம் நமக்குக் காட்டுகிறது; அவன் முழுவதும் போலியானவன். அவனுக்கு தேவனைப்பற்றி ஒரு விழிப்புணர்வு இல்லை. அவனது “ஜெபம்” செயற்கையானது மற்றும் பொய்யானது. ஒருவருடைய ஜெபம் அவர்கள் இன்னும் ஒருபோதும் மாற்றப்படவில்லை என்பதை அடிக்கடி காட்டிவிடும். அவர்களது ஜெபம் அவர்களுக்கு ஒரு பொய்யான சத்தம் உள்ளதாக இருக்கும். அவர்கள் எந்திரத்தைபோல ஜெபிப்பார்கள். அவர்கள் பாசாங்கு செய்பவர்கள். அவர்கள் மெய்யாகவே ஜெபிப்பதே இல்லை! அவர்கள் வெறும் வார்த்தைகளில் மற்றவர்களை ஈர்க்கும்படியாக – அல்லது உன்னை ஏமாற்றும்படியாக என்று சொல்லலாம். அந்த மனிதன் மெய்யாகவே ஜெபிக்கவே இல்லை! அவன் தனது “நன்மையை” தானே பாராட்டிக் கொள்கிறான் – “கர்த்தாவே, மற்ற மனுஷரைப்போல் இராததனால், உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.” என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்! அவனுடைய வார்த்தைகள் எவ்வளவு பொய்யானவை என்று தேவன் பார்க்கிறார் என்பதை அவன் அறியவில்லையே? பொய் வார்த்தைகள்! அவன் தேவனை மெய்யாக விசுவாசித்தானா? உண்மையான அர்த்தத்தோடு அவன் விசுவாசிக்கவில்லை. அவனுக்குத் தேவன் ஒரு பலனற்ற யோசனை, ஒரு உண்மையான ஆள்தத்துவம் மற்றும் உண்மை தேவன் அல்ல – ஜீவனுள்ள தேவன் அல்ல! அது எனக்கு எப்படி தெரியும்? ஏனென்றால் அவன் “நின்று… தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்” (லூக்கா 18:11-12). இதை இப்படி மொழி பெயர்க்கலாம், “அவன் தனக்கே ஜெபம் பண்ணினான்” (NIV, note a). உண்மையில், இந்த மனிதன் தேவனிடத்தில் ஜெபிக்கவே இல்லை. அவன் தனது சொந்த நன்மையைபற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டான். அவன் தனக்கே ஜெபம் பண்ணினான், தேவனிடத்தில் அல்ல! நீ ஜெபிக்கும் போது, அப்படியாக நீ ஜெபிக்கிறாயா? உனக்கு மட்டும் கேட்கவேண்டும் என்று ஜெபித்தததை சில நேரங்களில் நீ உணரவில்லையா? நீ ஜெபகூட்டத்தில் சத்தமாக ஜெபிக்க பயப்படுகிறாய் இல்லையா ஏன்? உன்னுடைய ஜெபம் பொய்யானது என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று உனக்குத் தெரியாதா? நீ ஜெபிப்பதாக வெளியே மட்டும் காட்டுகிறாய் இல்லையா? மற்றும் அது நீ ஒரு இழக்கப்பட்ட மனிதன் என்பதை காட்டுகிறது, நீ தேவனிடத்தில் மெய்யாகவே ஜெபிக்க முடியாத ஒரு இழக்கப்பட்ட மனிதன் இல்லையா? 14ம் வசனத்தில் இயேசு தெளிவாக நமக்குச் சொன்னார் இந்த “நல்ல” மனிதன் என்று சொல்லப்பட்டவன் “நீதிமானாக்கப்பட்டவன்” இல்லை. அவன் ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனல்ல! அவன் ஒரு இழக்கப்பட்ட மனிதன். அவன் ஒரு மதச் சம்மந்தமான மனிதன் ஆனால் இழக்கப்பட்ட மனிதன். அவன் முடிவில்லாத நித்திய காலமாக நரகத்திற்குப் போய்கொண்டிருந்தான்!

நித்தியம், நித்தியம்,
நித்தியம் முழுவதுமாக நீ இழக்கப்பட்டவன்!

அந்த மனிதன் ஒரு மாயக்காரன் – அப்படியே நீயும் இருக்கிறாய். அவன் தேவனிடத்தில் ஜெபிப்பதைப்போல நடித்தான் – அப்படியே நீயும் இருக்கிறாய்! ஒரு நாளில் உன்னுடைய சொந்த “நன்மைகள்” உனக்கு உதவி செய்யாது. மற்ற ஒவ்வொருவருக்கும் நடப்பதுபோல, பயங்கரமான காரியங்கள் உனக்குச் சம்பவிக்கும். அந்தப் பயங்கரமான மற்றும் நெஞ்சுவலியின் நாளிலே உன்னுடைய மாய்மாலம் உனக்கு ஒரு உதவியும் செய்யாது. வேதம் சொல்லுகிறது, “பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது” (ஏசாயா 33:14). நீ மரித்து மற்றும் தேவனுக்கு முன்பாக நிற்பாய், மற்றும் தேவன் சொல்லுவார், “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை… என்னைவிட்டு அகன்று போங்கள்” (மத்தேயு 7:23). உன்னுடைய பொய்யான மதம் அப்பொழுது உனக்கு உதவி செய்யாது. உன்னை போன்ற எல்லா மாய்மாலக்காரரையும் தேவன் நரக அக்கினியிலே போடுவார். அவன் இந்த உலகத்தின் பார்வையிலே ஒரு நல்ல மனிதன். ஆனால் தேவனுடைய பார்வையிலே ஒரு இழக்கப்பட்ட மனிதன்! ஒருவேளை நீ இந்த உலகத்தின் பார்வையிலே ஒரு நல்ல மனிதனாக இருக்கலாம். ஆனால் தேவனுடைய பார்வையிலே நீ ஒரு இழக்கப்பட்ட மனிதன்.

II. இரண்டாவதாக, இரட்சிக்கப்பட்ட கெட்ட மனிதன்.

“ஆயக்காரன் [வரிவசூலிப்பவன்] தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே [நெஞ்சுமீது] அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்” (லூக்கா 18:13).

அவன் ஒரு நல்ல மனிதனாக இருக்கவில்லை. அவன் ஒரு தார்மீகமான மனிதனாக இருக்கவில்லை. அவன் எவ்வளவு பாவம் செய்தவனாக இருக்கிறான் என்று அவன் அறியவில்லை. அவன் மெய்யாகவே ஒரு இழக்கப்பட்ட பாவியான மனிதன் என்பதை பரிசுத்த ஆவியானவர் அவனுக்குக் காட்டினார். அவன் தேவனுடைய தண்டனைக்கு மட்டுமே பாத்திரமானவன் என்று உணர்ந்தான். சங்கீதக்காரன் சொன்னதுபோல அவன் உணர்ந்தான், “என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது” (சங்கீதம் 51:3). டாக்டர் ஜான் கில் சொன்னார், “அவனால் மேல் நோக்கி பார்க்க முடியவில்லை; வெட்கம் அவனை முழுதும் மூடினது; துக்கம் அவனை [அவனது முகத்தை] விழச்செய்தது; [தேவ] பயம் மற்றும் அதிருப்தி, அவனை ஆட்கொண்டது; [தேவ கிருபைக்கு] அபாத்திரனாக அவன் தன்னை பார்த்தான். அவன் தனது மார்பிலே அடித்துக்கொண்டான்... அவன் கிளரிவிட்டு தூண்ட செய்யும்படியாக... தனது ஆத்துமாவை தூண்ட இப்படி செய்தான், தேவனை நோக்கி… கூப்பிட, ‘தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்’! அதுவே அவனுடைய ஜெபம்; ஒரு சுருக்கமான, ஆனால் மிகவும் நிறைவான ஒன்று… அவன் ஒரு பாவி என்பதன் அறிக்கை, ஆதாமில் ஒரு பாவி, பாவசுபாவத்தை ஆதாமிடத்திலிருந்து பெற்ற [சுதந்தரித்த] ஒரு பாவி, பாவத்தில் கர்ப்பம்தரித்து மற்றும் பிறந்தவன்; மற்றும் நடைமுறையில் ஒரு பாவி, மெய்யாகவே அநேக அக்கிரமங்களை செய்தவன்; ஒரு குற்றவாளி மற்றும் அசுத்தமான பாவி – தேவ கோபாக்கினைக்குப் பாத்திரமானவன், மற்றும் தாழ்ந்த நரகத்திற்குத் [பங்கு] தகுந்தவன்:... தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தவன்” (லூக்கா 18:13ன் மேற்குறிப்பு).

மற்றும் நீ பாவத்தினால் உணர்த்தப்பட்டாலும் இரட்சிக்கப்படாமல் இருக்கலாம். பாவ உணர்த்துதலினால் கண்ணீர் நிறைந்த மக்களின் முகங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் தங்கள் பாவத்திற்காக சிலகாலம் துக்கித்து மற்றும் அழுத போதிலும், அவர்கள் ஒருபோதும் இரட்சிக்கப்படவில்லை. பாவ உணர்த்துதலினால் மக்கள் அதிக துக்கத்தை அடைந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் ஒருபோதும் மாற்றப்படவில்லை. மக்கள் இப்படி சொன்னதை நான் கேட்டிருக்கிறேன், “நான் பாவம் நிறைந்தவன் மற்றும் தவறானவன் என்று உணருகிறேன்.” மக்கள் கண்ணீரோடு இப்படிச் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன் – ஆனால் அவர்கள் ஒருபோதும் இரட்சிக்கப்படவில்லை! அது எப்படி இருக்க முடியும்? நான் இதை எவ்வளவு தெளிவாக்க முடியுமோ அவ்வளவு தெளிவாக்குகிறேன். பாவ உணர்த்துதல் என்பது பாவத்தில் இருந்து மாறுதல் அடைதல் அல்ல. நீ பாவ உணர்த்துதல் அடையலாம் ஆனாலும் இயேசுவினால் இரட்சிக்கப்படாமல் இருக்கலாம். மக்கள் மறுபடியும் மறுபடியுமாக உடைந்து விழுந்ததை நான் பார்த்திருக்கிறேன் – இருந்தாலும் அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒருபோதும் நம்பவில்லை. டாக்டர் மார்டின் லியோடு-ஜோன்ஸ் இதை புரிந்து கொண்டார். அவர் சொன்னார், “கிறிஸ்தவனாவது ஒரு நெருக்கடி, ஒரு விமர்சனச் சம்பவம், புதிய ஏற்பாடு விவரிப்பதுபோல ஒரு பெரிய எழுச்சியான ஒரு புது பிறப்பாகும், அல்லது ஒரு புதுசிருஷ்டியாகும்... அதற்கும் அதிகமாக, இது தேவனாலேயே செய்யப்பட்ட ஒரு இயற்கைக்கு மாறான [செய்யப்பட்ட] செயலாகும், மரித்த ஆத்துமா உயிர்பிக்கப்பட்டது போன்றதான செயல்...” தேவன் உன்பாவ இருதயத்தை வெறுக்கும்படி செய்வது ஒரு நெருக்கடி. தேவன் உனக்குள் உண்டாக்கி இருப்பது இந்த ஒரு நெருக்கடி. விடுதலைக்காக மாறுதலடைய ஏங்கும்போது இது வருகிறது. ஜான் பனியன் ஏழு வருடங்கள் பாவ உணர்த்துதலுக்குள்ளாக இருந்தார். அவைகள் பூமியிலே நரகம் போன்ற ஏழு வருடங்கள். பாவ உணர்த்துதல் என்பது பாவத்திலிருந்து மாறுதல் அடைதல் அல்ல என்பதை நான் அனுபவத்தில் அறிந்திருக்கிறேன்.

ஒரு நபரின் கண்களில் கண்ணீரை கண்டால், அவர் இரட்சிக்கப்பட்டார் என்று நவீன சுவிசேஷகர்கள் நினைக்கிறார்கள்! ஆனால் அவர்கள் வேதனையின் ஆழத்தில் இருந்ததில்லை. நீங்கள் ஒரு கண்ணீரை பார்க்கும்போது மற்றும் உடனடியாக கிறிஸ்துவை நம்பும்படி அவர்களுக்கு சொல்லுங்கள் வழக்கமாக இது நடக்காது. இயேசு அவர்களை இரட்சிக்கும்படியாக ஏங்கும்படி போதுமான அளவிற்கு அவர்கள் இன்னும் உடைக்கப்படவில்லை. அதனால்தான் அவர்கள் அடிக்கடி சொல்லுகிறார்கள், “அதன் பிறகு நான் இயேசுவை நம்பினேன்.” அவர்கள் தங்களைப்பற்றி ஒரு முழுபக்கம் எழுதுகிறார்கள். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைபற்றி மிகவும் சிறிதளவே சொல்லுவார்கள். பிறகு, சில வாரங்கள் கழித்து அவர்களை நாம் கேட்டால், அவர்கள் சொல்லுவார்கள், “இயேசு எனக்காக மரித்தார் என்று நான் விசுவாசித்தேன்.” “அது” காட்டுகிறது அவர்கள் ஒரு போதனையை மட்டும் நம்பினார்கள், ஆனால் இயேசுவை அல்ல. ஒரு இழக்கப்பட்ட பாவி இயேசுவை மட்டும் ஒருபோதும் நம்பமாட்டான். நீங்கள் மிகவும் தைரியம் இழந்து போகும் வரையிலும் அது இல்லை. உணர்த்துதலின் படுவேதனையிலிருந்து தப்பிக்கொள்ள வேறுவழி இல்லை என்று நீ காணும் வரையிலும் அது இல்லை. சிலநேரங்களில் அது விரைவில் நடக்கும். ஆனால் வழக்கமாக அநேக பொய் மாற்றங்கள் மூலமாக நீங்கள் கடந்து வரவேண்டியதாக இருக்கும். அதன் பிறகு மட்டுமே நீ அப்போஸ்தலனோடு சேர்ந்து சொல்லுவாய், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! [இந்த மரணசரீரத்தினின்று] யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:24). அதன் பிறகு மட்டுமே அந்த ஆயக்காரன் செய்ததுபோல தேவனுடைய இரக்கத்திற்காக நீ அழுவாய்! அதன் பிறகு மட்டுமே தேவன் உனக்குப் பதில் கொடுப்பார் மற்றும் இயேசுவினிடத்தில் உன்னை கொண்டு வருவார்!

நவீன சுவிசேஷகர்கள் சகலமும் சீக்கிரமாக மற்றும் சுலபமாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சென்ற ஆண்டு எழுப்புதலில் அதை நாம் பார்த்தோம். உங்களில் அநேகர் இப்படி சொல்லிக்கொண்டு வெளியே வந்தீர்கள், “அதன் பிறகு நான் என்னை இரட்சிக்கும் படியாக இயேசுவை நம்பினேன்.” அல்லது “அதன் பிறகு இயேசு என்னை இரட்சித்தார் என்று நான் விசுவாசித்தேன்.” கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிட்டத்தட்ட முழுமையாக விடப்பட்டார். நீங்கள் பாவத்தால் உணர்த்தபடாத காரணத்தால் விடப்பட்டார். இருதயத்தின் இருளினினால் உணர்த்தபட்ட காரணத்தால். நீ தேவனுக்கு விரோதமான பகை என்று உணர்த்தபட்ட காரணத்தால். உன்னை உன்னால் மாற்ற முடியாது என்று உணர்த்தபட்ட காரணத்தால். ஜான் கேஹன் சொன்னார், “நாம் இயேசுவிடம் வந்திருக்க வேண்டும், ஆனால் என்னால் முடியவில்லை.” “நிர்ப்பந்தமான மனுஷன் நான், யார் என்னை விடுதலையாக்குவார்? இயேசு உன்னை இரட்சிக்க முடியும் என்று மட்டுமே நீ விசுவாசித்தாய் என்று நாங்கள் சொல்லுகிறோம். நீங்கள் சிறிது மனஅமைதி கெட்டுப் போனீர்கள் பிறகு திரும்ப ஆவிக்குரிய தூக்கத்திற்குப் போனீர்கள். உங்களில் அநேகர் ஒருபோதும் மாற்றப்படவே இல்லை! நீங்கள் திரும்ப போகவேண்டும் மற்றும் நீங்கள் மாறுதலின் எல்லா செயல்முறைகளையும் கடந்து வரவேண்டும். மாறுதல் மிகமுக்கியமான காரியம் அது உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் நடைபெற வேண்டும். இயேசுவின் மேலுள்ள உங்கள் நம்பிக்கையை ஒரே வாக்கியத்தில் உங்களால் விளக்க முடியாது. அல்லது ஒரு அறை வாக்கியத்தில், ஒரு பெண் சொன்னதுபோல, அந்த ஒரு பெண் இப்பொழுது நித்திரைக்குத் திரும்ப போய்விட்டாள், இப்பொழுது உணர்த்துதலே இல்லை. உனக்குக் கண்ணீரோடு, பாவ உணர்த்துதல் இல்லாவிட்டால், ஏன் முன்னே வருகிறாய்? நாங்கள் ஏதாவது செய்ய முடியும் என்று நினைக்கிறாயா? ஒரு சில நிமிடங்களில் உங்களை முழு அனுபவத்தின் ஊடாக போக செய்ய முடியுமா? நீ 1000 தடவைகள் பலிபீடத்திற்கு வந்தாலும் உனக்காக எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உனக்குப் போதிக்க எங்களால் ஒன்றும் முடியாது. உனக்கு உதவி செய்வோம் என்று சொல்ல எங்களிடம் ஒன்றுமில்லை! தேவன் மட்டுமே உனக்கு உதவி செய்ய முடியும் – மற்றும் மாய்மாலகாரருக்குத் தேவன் ஒருபோதும் உதவி செய்ய மாட்டார். ஒரு பல்கலைகழகத்தில் ஆழ்ந்து படிக்காமல் மற்றும் இரவிலும் தூக்கமின்றி கஷ்டப்படாமல் டாக்டர் பட்டம் வாங்க முடியுமா? நிச்சயமாக முடியாது! ஆனால் இயேசுவில் இரட்சிப்பு என்பது எண்ணற்ற வகையில் Ph.D பட்டத்தைவிட அதிக முக்கியம் வாய்ந்தது. ஒரு மெய்யான மாறுதல் உனது வாழ்க்கையில் எப்பொழுதும் பெற்றிராத ஒரு மிக முக்கியமான அனுபவமாகும். ஆனால் நீ இழக்கப்பட்டதை உணரும் வரையிலும் நீ ஒருபோதும் மாற்றப்பட முடியாது. நீ நம்பிக்கையற்று இருப்பதை உணரும் வரையிலும் நீ ஒருபோதும் மாற்றப்பட முடியாது. உன் இருதயத்திலும் மற்றும் உன் வாழ்க்கையிலும் உள்ள பாவத்தை நீ வெறுக்கும் வரையிலும் நீ ஒருபோதும் மாற்றப்பட முடியாது. நீ கதறும் வரையிலும், “தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று அழும் வரையிலும். நாம் எழுந்து நின்று உங்கள் பாட்டுத்தாளில் பாடல் எண் 10ஐ பாடுவோம். அது “பாவிகளே, நீங்கள் வாருங்கள்” ஜோசப் ஹார்ட் என்பவர் இயற்றியது (1712 -1768).

இப்பொழுது, நீங்கள் இயேசுவை நம்புங்கள் என்று இந்த இரவிலே நான் உங்களை துரிதபடுத்துகிறேன். நீங்கள் உணர்த்தப்பட்டீர்களானால், நீங்கள் நம்பிக்கையற்றவர்களாக உணர்ந்தால், நீங்கள் இழக்கப்பட்டவர்களாக உணர்ந்தால், புல்பிட்டிற்கு முன்பாக இறங்கி வாருங்கள் மற்றும் நாங்கள் இயேசுவைப்பற்றி உங்களோடு பேசுவோம். இயேசு பரலோகத்திலிருந்து இந்தப் பூமிக்கு இறங்கி வந்தார். அவர் சிலுவையிலே ஆணிகளால் குத்தப்பட்டு உன்னுடைய ஸ்தானத்திலே மரித்தார், உன்னுடைய பாவங்களுக்குரிய தண்டனை கிரயத்தை செலுத்த, உன்னை நியாயத்தீர்ப்பு மற்றும் நரகத்திலிருந்து விடுவிக்க மரித்தார். இயேசு சரீர பிரகாரமாக மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் மற்றும் பரலோகத்திற்கு ஏறிப்போனார். நீ அவரை நம்பினால், அவர் உன்னை உனது பாவத்திலிருந்து இரட்சிப்பார். எழுந்து நின்று பாடுங்கள், “பாவிகளே, நீங்கள் வாருங்கள்.” அது உங்கள் பாட்டுத்தாளில் எண் 10ல் உள்ள பாடல்.

வாருங்கள், பாவிகளே நீங்கள்,
   ஏழைகளான மற்றும் பரிதவிக்கப்பட்டவர்களான,
பெலவீனமான மற்றும் காயப்பட்ட,
   வியாதி மற்றும் புண்ணுள்ளவர்களே;
இயேசு இருக்கிறார் உங்களை இரட்சிக்க,
   பரிதாபம், அன்பு மற்றும் வல்லமையுடன்:
அவரால் முடியும், அவரால் முடியும்,
   அவர் சித்தமாக இருக்கிறார், இனிமேல் சந்தேகமே வேண்டாம்;
அவரால் முடியும், அவரால் முடியும்,
   அவர் சித்தமாக இருக்கிறார், இனிமேல் சந்தேகமே வேண்டாம்.

வாருங்கள், சோர்வுள்ளவர்களே நீங்கள்,
   பாரசுமை சுமந்து, நொறுக்கப்பட்டு
மற்றும் விழுந்து
   உடைக்கப்பட்டவர்களே வாருங்கள்;
நீங்கள் நல்லவர்களாக மாறும்வரை பொறுத்திருந்தால்,
   ஒருபோதும் வரவே மாட்டீர்கள்:
நீதிமான்களை அல்ல, நீதிமான்களை அல்ல,
   பாவிகளை அழைக்க இயேசு வந்தார்;
நீதிமான்களை அல்ல, நீதிமான்களை அல்ல,
   பாவிகளை அழைக்க இயேசு வந்தார்.

இப்பொழுது உயர்த்தப்பட்ட, இரட்சகரை பாருங்கள்,
   அவரது இரத்தத்தின் தகுதிக்காக கெஞ்சுங்கள்;
உங்களை தூக்கி முழுதும் அவர்மேல் வையுங்கள்,
   வேறு ஒன்றையும் நம்பி கூப்பிட வேண்டாம்;
யாருமில்லை ஆனால் இயேசு, யாருமில்லை ஆனால் இயேசுதான்,
   உதவியற்ற பாவிகளுக்கு நன்மை செய்யமுடிந்தவர்;
யாருமில்லை ஆனால் இயேசு, யாருமில்லை ஆனால் இயேசுதான்,
   உதவியற்ற பாவிகளுக்கு நன்மை செய்யமுடிந்தவர்.
(“Come, Ye Sinners” by Joseph Hart, 1712-1768; altered by the Pastor).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Come, Ye Sinners” (by Joseph Hart, 1712-1768).


முக்கிய குறிப்புகள்

ஒரு நல்ல மனிதன் இழக்கப்பட்டான் மற்றும்
ஒரு கெட்ட மனிதன் இரட்சிக்கப்பட்டான்!

A GOOD MAN LOST AND A BAD MAN SAVED!

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர் அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப் பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்” (லூக்கா 18:9-14).

I.    முதலாவது, ஒரு “நல்ல” மனிதன் இழக்கப்பட்டான், லூக்கா 18:11-12,
ஏசாயா 57:21, எரேமியா 17:9, ஏசாயா 33:14, மத்தேயு 7:23.

II.   இரண்டாவதாக, இரட்சிக்கப்பட்ட கெட்ட மனிதன், லூக்கா 18:13,
சங்கீதம் 51:3, ரோமர் 7:24.