Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




இப்பொழுது உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்!

EXAMINE YOURSELVES NOW!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

பிப்ரவரி 5, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, February 5, 2017

“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்” (II கொரிந்தியர் 13:5).


கொரிந்து சபையிலிருந்த ஒரு கூட்டம் மக்கள் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு விரோதமாக எழும்பினார்கள். அவர்கள் பவுல் முன்னதாக பேசியும் மாற்றப்படாத மக்கள். பவுல் பெலவீனமானவர் மற்றும் அவர் ஒரு மெய்யான அப்போஸ்தலர் அல்ல என்று அவர்கள் சொன்னார்கள். நமது சபையிலிருந்த சில மக்களைப் போன்றவர்கள் – சபை பிளவுபட்ட சமயத்தில் என்னை தாக்கின மக்கள். லாஸ் ஏன்ஜல்சின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பெரிய சபைக்காக நாம் பிசாசோடு போராட வேண்டியதாக இருந்தது. சில பொல்லாத மக்கள் பவுல் ஒரு மெய்யான அப்போஸ்தலர் அல்ல என்று சொன்னார்கள். அதனால் பவுல் அவர்களிடம் சொன்னார் “அவர்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று, அவர்களை அவர்களே சோதித்து அறியுங்கள்”. இந்த வார்த்தையை இவ்விதமாக மொழிபெயர்க்க முடியும், ‘“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே பரீட்சித்து அறியுங்கள்”. அவர்கள் மெய்யாகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களா என்று அவர்களுடைய சொந்த இருதயங்களை மற்றும் அவர்களுடைய சொந்த ஜீவியங்களை பார்க்கும்படி பவுல் அவர்களிடம் சொன்னார். “விசுவாசமுள்ளவர்களோ” என்றால் உண்மையான கிறிஸ்தவன் என்று பொருளாகும். பவுலை தாக்கின அந்த மக்கள், குழுவாக நமது சபையை விட்டுசென்றவர்கள் என்னை தாக்கினது போல தாக்கினவர்கள். இப்பொழுது அவர்களில் அநேகர் சபைக்கே போவதில்லை. மற்றவர்கள் பெலவீனமான சுவிசேஷ சபைகளுக்குப் போனார்கள். அவர்களில் யாராவது வெகு சிலர் உண்மையான கிறிஸ்தவர்களாக இருப்பார்களோ என்று நான் தனிப்பட்ட விதத்தில் நினைக்கிறேன்.

“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்: உங்களை நீங்களே பரீட்சித்துப் [அல்லது சோதித்து] பாருங்கள்.”

ஆப்போஸ்தலனாகிய பவுல் உங்களிடம் சொல்லுகிறார் உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். உங்களுக்குள் கிறிஸ்துவின் இரட்சிப்பின் விசுவாசம் இருக்கிறதா என்று உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள் என்று அவர் சொன்னார். இப்பொழுது நீங்கள் பரீட்சித்துப் பார்க்காவிட்டால் தேவன் உங்களை கடைசி நியாயத்தீர்ப்பில் சோதிப்பார். நீ செய்த ஒவ்வொரு பாவத்தையும் தேவன் பார்க்கிறார். நீ செய்த ஒவ்வொரு பாவத்தையும் மற்றும் எல்லா பாவத்தையும் உன்னுடைய இருதயத்தில் அவர் எழுதி இருக்கிறார். அவர் தமது புத்தகங்களிலிருந்து உன்னுடைய பாவங்களைப் படிப்பார். நீ மரிக்கும்பொழுது உன்னுடைய ஆத்துமா தேவனுக்கு முன்பாக நிற்கும் மற்றும் நியாயத்தீர்ப்படையும். இப்பொழுது உன்னுடைய பாவங்களை நீ பரீட்சித்துப் பார்க்க வேண்டியது அவசியம், அல்லது தேவன் அவைகளை பரீட்சிப்பார் மற்றும் அவைகளுக்காக உன்னை நியாயந்தீர்ப்பார், மற்றும் நீ, “அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்” (வெளிப்படுத்தல் 20:15). உன்னுடை நினைவுகள், மற்றும் வார்த்தைகள் மற்றும் வெளிப்படையான பாவங்களை நீ மரிப்பதற்கு முன்பாக, இப்பொழது நீ பரீட்சித்துப் பார்க்க வேண்டியது அவசியம். நீ மரித்த பிறகு நரக அக்கினியிலிருந்து இரட்சிக்கப்படுவாய் என்பது மிகவும் காலதாமதம் ஆகிவிடும். “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று, உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்” இப்போதே. நீ மரித்த பிறகு இரட்சிக்கப்படுவதற்கு மிகவும் காலதாமதம் ஆகிவிடும். இப்பொழுது நீ மனந்திரும்பி மற்றும் கிறிஸ்துவை நம்பாவிட்டால் நீ “அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்… இரவும் பகலும் இளைப்பாறுதலிராது” (வெளிப்படுத்தல் 14:10, 11). ஆதனால்தான் நீ இப்பொழுதே உன்னை சோதித்துப் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும் – நீ மரித்த பிறகு இரட்சிக்கப்படுவாய் என்பது மிகவும் காலதாமதம் ஆகிவிடும்.

நாங்கள் பழைய பாதைகளை பின்பற்றுகிறோம் என்ற உடனடி உணர்வில்லாமல் நீ எங்கள் சபைக்குள் நடக்க முடியாது. நீ உள்ளே நடந்து வந்தவுடன் முதலாவது பார்க்கும் காரியம் வரிசையாக வண்ணப்படங்கள். அவர்கள் அனைவரும் நீண்ட காலங்களுக்கு முன்பாக இருந்த பிரசங்கிகள் – யோனத்தான் எட்வர்டுஸ், ஜான் பனியன், ஜார்ஜ் ஒயிட்பீல்டு, ஜான் வெஸ்லி, மார்டீன் லுத்தர், ஸ்பர்ஜன், ஜேம்ஸ் அட்சன் டெய்லர், டாக்டர் ஜான் சங், மற்றும் கடந்த காலத்திலிருந்த மற்றவர்கள். நீ பார்க்கும் அடுத்த காரியம் எங்கள் சபையிலிருக்கும் ஒவ்வொரு ஆணும் சூட் மற்றும் டை அணிந்து இருப்பார்கள். அது அவசியமானது. அவர்களுக்கு ஒரு டை மற்றும் வெள்ளை சூட்டும் இல்லை என்றால் நாங்கள் அவர்களுக்கு அவைகளை கடன் கொடுப்போம். அவர்கள் அதை வாங்க மறுத்தால், அவர்கள் உள்ளே வரமாட்டார்கள். கடினம்? ஒருவேளை, ஆனால் இது பழைய வழியாக இருக்கலாம் மற்றும் இதை நாங்கள் மாற்றப்போவதில்லை. பெண்கள் அடக்கமுள்ள ஆடைகள் அணிந்திருப்பார்கள். அது பழையவழி, மற்றும் அது சரியான வழி. டாக்டர் டோஸர் சொன்னதுபோல, “பழையவழிதான் உண்மையான வழி”. நீங்கள் ஆடிடோரியத்திற்கு வந்தால் ஒரு பியானோ மற்றும் ஒரு ஆர்கன் வாசித்து பழைய பாணியில் பாடல் பாடப்படும். அங்கே கிட்டாரோ அல்லது ட்ராம்ஸ்ஸோ கூட்டம் முடியும்வரையில் பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியாது. நாங்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் பழைய பாணியில்தான். நவீன பல்லவிகளும் இருக்காது. ஒரே “சிறப்பான இசை” என்னும் தனிப்பாடல், அறுபது வயதிற்கு மேல் உள்ள, மூத்த டீக்கன்களால் பாடப்படும் தனிப்பாடல் – பிரசங்கத்திற்கு முன்பாக பழைய பாணியில் பாடப்படும். மற்றும் நாங்கள் எப்பொழுதும் பழைய கிங் ஜேம்ஸ் வேதாகமத்திலிருந்துதான் பிரசங்கிப்போம்.

சிலர் சொல்லலாம், “உங்கள் சபை நிறைய பழைய மக்கள்தான் இருப்பார்கள்!” இல்லை, எங்களுக்கு இல்லை! எங்கள் மக்களில் அதிகமானவர்கள் முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள்! அவர்களில் இருபத்தைந்து சதவீதம் கல்லூரி வயது மற்றும் உயர்நிலைப் பள்ளி வயதுடையவர்கள். எந்தச் சபையிலிருந்து எழுந்தவர்கள் வெகுசிலர். அநேகர் தீவிரமான சுவிசேஷ ஊழியத்தின் மூலமாக அருகில் உள்ள கல்லூரிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து கொண்டுவரப் பட்டவர்கள்.

நாங்கள் செய்யும் சகல காரியங்களிலும், நவீனகால சபைகளுக்கு
சவாலாக இருப்பதை நம்புகிறோம். வித்தியாசமாக
   நினைத்துக் கொண்டிருப்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்.
அவர்கள் செய்வதைவிட நாங்கள் அதிகமாக சிறந்த கிறிஸ்தவர்களை
உண்டாக்கும் வழிகளில் நாங்கள் அந்தச்
   சபைகளுக்கு சவாலாக இருக்கிறோம்.
மற்றும் நாங்கள் மெய்யாகவே அவர்கள் செய்வதைவிட அதிகமாக
சிறந்த கிறிஸ்தவர்களை உண்டாக்குகிறோம்!
   நீ அவர்களில் ஒருவராக இருக்க விரும்புகிறாயா?
(Paraphrased from Start With Why, by Simon Sinek, p. 41).

ஒரு சில மாதங்களுக்கு இங்கே வாருங்கள், மற்றும் உண்மையான மாறுதலை அனுபவியுங்கள், மற்றும் எந்த ஒரு “நவீனகால” சபை உருவாக்கும் கிறிஸ்தவனைவிட சிறந்த கிறிஸ்தவராக நீங்கள் இருப்பீர்கள்! எவரும் அறிந்த மிகசிறந்த கிறிஸ்தவராக நீங்கள் இருப்பீர்கள்!

இன்று பழைய வழிகளில் நடக்கும் மிகசில சபைகளே இருக்கின்றன. கிறிஸ்துவும் மற்றும் அப்போஸ்தலர்களும் போதித்த பழைய வழியை அவர்கள் பின்பற்றுவதில்லை. அவர்கள் சீர்திருத்தவாதிகள், அல்லது சுத்திகரித்தவர்கள், அல்லது 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப சுவிசேஷகர்களின் பழைய வழியில் பிரசங்கிப்பதில்லை. அவர்கள் புதிய வழிகளில் நடக்கிறார்கள், பாலாஜியன் ஹெரிடிக் சார்லஸ் பின்னியினால் ஆரம்பிக்கப்பட்ட பொய்யான வழியில் – நமது நாட்களில் தீர்மானம் எடுப்பவர்கள், புதிய சுவிசேஷகர்கள் உட்பட, கரிஸ்மேடிக், ஆன்டினோமன் பைபிள் ஸ்டுடன்ட் மற்றும் நியோ கால்வினிஸ்ட் (அவர்கள் கால்வினிஸ்டிக் போதனைகளை பேசுவார்கள், ஆனால் யோனத்தான் எட்வர்டுஸ், ஜார்ஜ் ஒயிட்பீல்டு, ஸ்பர்ஜன் மற்றும் டாக்டர் லியோடு ஜோன்ஸ் செய்ததுபோல தங்களை கேட்பவர்கள் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கும்படி செய்யமாட்டார்கள்). இந்தப் பின்னியின் கனிகளை விவரித்து உங்கள் நேரத்தை நான் வீணாக்கமாட்டேன். அவர்கள் அனைவரையும் சேர்த்து புது சுவிசேஷகர்கள் என்ற குழுவில் இணைக்க முடியும் என்று நான் எளிமையாக சொல்லுவேன். அவர்கள் தங்களை இப்படியாக அழைத்துக்கொள்கிறார்கள் “புது சுவிசேஷகர்கள்”! மற்றும் அவர்கள் சரி, ஏனென்றால் அவர்கள் போதிப்பது எல்லாம் புதியது. அந்தச் சபைகளில் இருக்கும் ஒவ்வொருவரும் இழக்கப்பட்டவர்கள் என்று நான் விசுவாசிப்பதில்லை. ஆனால் நமது காலத்தில் இரட்சிக்கப்பட்டவர்கள் மீதியானவர்கள் மட்டுமே. நீங்கள் “பழைய சுவிசேஷகர்களை” பற்றிப் படிக்க விரும்பினால் “The Old Evangelicalism” by Iain H. Murray என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். அந்தப் புத்தகம் நமது புத்தகக் கடையில் கிடைக்கும் அல்லது Amazon.comல் இருந்து பெறலாம். அதன் பின் பக்கத்தில் டாக்டர் A.W. டோஸர் அவர்களின் மேற்கோள் இருக்கும், “பழையவழிதான் உண்மையான வழி மற்றும் புதுவழி ஒன்றுமில்லை” – ஒரு உண்மையான கிறிஸ்தவனாக மாற உதவி செய்யும் புதியவழி ஒன்றுமில்லை. எரேமியா தீர்க்கதரிசி சொன்னதுபோல,

“வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (எரேமியா 6:16).

இப்பொழுது நான் உங்களுக்கு இரட்சிப்புக்கு நடத்தும் பழைய வழிக்கும் – மற்றும் நித்திய தண்டனைக்குக் கொண்டு செல்லும் புதிய வழிக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டுகிறேன்.

I. முதலாவதாக, பழையவழி தேவன் மற்றும் அவருடைய மகிமையில் ஆரம்பிக்கிறது; புதியவழி மனிதன் மற்றும் அவனுடைய தேவைகள் மற்றும் உணர்வுகளில் ஆரம்பிக்கிறது.

ஓ, “புதிய வழியிலே” அவர்கள் தேவனை குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவர் வேதத்தின் தேவனல்ல. அவர் வேதாகமத்தின் சர்வ வல்ல தேவனல்ல. அவர் யாரை இரட்சிப்பார் மற்றும் யாரை தங்கள் பாவங்களில் விடுவார் என்று தெரிந்துகொள்ளும் தேவனல்ல. “புதிய வழியின்” தேவன் வேதத்தின் தேவனல்ல, அவரைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் சொன்னார்,

“ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக் கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்” (ரோமர் 9:18).

தேவன் தெரிந்து கொண்டவர்களை இரட்சிக்கிறார், மற்றும் மற்ற அனைவரையும் நரகத்திற்குப் போகும்படி விட்டுவிடுகிறார் என்று ஒருபோதும் புதியவழி போதிக்காது. தேவனைப்பற்றி ஒரு பிரசங்கி சொன்னதை எப்பொழுது கடைசியாக கேட்டாய்? ஒருவேளை நீ இந்த வேதத்தின் மெய்யான தேவனைப்பற்றி கேள்வி பட்டிருக்க மாட்டாய். வேதாகமம் அவரை இவ்வாறு அழைக்கிறது “அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்” (உபாகமம் 7:21). வேதாகமம் அவரை இவ்வாறு அழைக்கிறது “அவர் மகத்துவமும் பயங்கரமுமான தேவன்” (நெகேமியா 1:5) மறுபடியுமாக வேதாகமம் அவரை இவ்வாறாக அழைக்கறது “வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவன்” (நெகேமியா 9:32). மேலும் நாம் எச்சரிக்கப்படுகிறோம், “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே” (எபிரெயர் 10:31). “நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே” (எபிரெயர் 12:29).

ஒரு போதகரோ அல்லது பாதிரியாரோ அந்த தேவனைப்பற்றி பேசினதை நீ கேட்டிருக்கிறாயா – வேதாகமம் அழைக்கிறது போல “ஜீவனுள்ள தேவன்”? (எபிரெயர் 10:31). தேவன் சிலரை தெரிந்து கொண்டு அவர்களை இரட்சிக்கிறார் மற்றும் மற்ற அனைவரையும் நரகத்திற்கு போகும்படி விட்டுவிடுகிறார் என்று ஒரு பிரசங்கி சொன்னதை கேள்விப்பட்டாயா? கிறிஸ்து சொன்னார், “அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர்” (மத்தேயு 22:14). அல்லது ஒரு சிறிய முக்கியமில்லாத எல்லாரையும் இரட்சிக்கும் தெய்வம் – உனக்கும் உன்னுடைய தேவைகளை சேவிக்கும் ஒரு தெய்வம் – பயங்கரமான தேவனுக்குப் பதிலாக, “ஜீவனுள்ள தேவன்” என்று கேள்விப்பட்டாயா? நீ சொல்லுவாய், “உன்னுடைய பயங்கரமான தேவனைப்பற்றி நான் கேட்க விரும்பவில்லை! நான் இந்தச் சபைக்கு இனிமேல் திரும்ப வரமாட்டேன்!” சரி, திரும்ப வரவேண்டாம்! நம்பிக்கொண்டே இரு “உன்னுடைய சொந்த தெய்வத்தை”. ஆனால் நினைவில்கொள், உன்னுடைய சொந்த தெய்வம் மெய்யான தெய்வமல்ல. வேதத்தின் தேவனாகிய “ஜீவனுள்ள தேவனை” நீ முதலாவது விசுவாசிக்காவிட்டால் மற்றும் நீ ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாது மற்றும் ஒரு உண்மையான கிறிஸ்தவனாக மாறமுடியாது.

II. இரண்டாவதாக, பழையவழி உன்னுடைய பாவத்தைப்பற்றி நினைக்கும்படி செய்கிறது, உண்மையான தேவன் நரகத்திலே தண்டிப்பார்; புதியவழி உன் தேவைகள் மற்றும் உணர்வுகளை நினைக்கும்படி செய்கிறது.

நீ ஆழமான பாவத்தில் இருப்பதை ஒரு போதகரோ அல்லது பாதிரியாரோ பேசினதை நீ கேட்டிருக்கிறாயா? உன்னுடைய இருதயம் முறுக்கப்பட்டு மற்றும் அசுத்தமாக இருக்கிறது? உன்னுடைய “இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது”? (எரேமியா 17:9). நீ மெய்யாகவே மாற்றப்படா விட்டால் “நித்திய ஆக்கினை அடைய… போவார்கள்”? (மத்தேயு 25:46). அல்லது நீ கேட்ட முழுமையான செமினரி பிரசங்கி ரோப் பெல் சொன்னதுபோல, ஒவ்வொருவரும் ஹிட்லர்கூட, பரலோகத்திற்குப் போவர்கள். ஆமாம், அவர் அதை சொன்னார்! (அன்பு ஜெயிக்கும்)? முழுமையான தியாலஜி செமினரி நல்லதாக இருந்தால், அவரது பட்டத்தை, மற்றும் பணத்தை திருப்பி அனுப்பு.

நீ சொல்லலாம், “ஒரு இனிமையான, மெதுவான பிரசங்கி மூலமாக என் தேவைகள் சந்திக்கப்பட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்தப் பழைய பாணி சபைக்கு நான் திரும்ப வரமாட்டேன் அந்தப் பிரசங்கிகள் என் பாவத்திற்கு விரோதமாக மற்றும் நான் நரகத்திற்குச் செல்லுவேன் என்று சொல்லுகிறார்கள்!” சரி, மேலே போ மற்றும் எங்களைவிட்டுவிடு. போ மற்றும் ஜோயல் ஓஸ்டின்னின் இனிமையான சிறிய “பாவியின் ஜெபத்தை” நம்பு – அதன்பிறகு அவர் தமது டிவி காட்சியில் சொல்லுகிறார், “நீ அந்த ஜெபத்தை சொன்னால், நீ மறுபடியும் பிறந்துவிடுவாய் என்று நாங்கள் நம்புகிறோம்”. மேலே போ அவரை நம்பு. ஆனால் அவரை போன்ற பிரசங்கிகளை நான் பொய் தீர்க்கதரிசிகள் என்று அழைப்பேன், பொய்யை பிரசங்கிப்பவர்கள் அவர்களே நரகத்திற்குப் போவார்கள்! நான் சொன்னதை அவர்களுக்குச் சொல்லுங்கள், நான் இதை மூலபிரதியிலும் மற்றும் வீடியோவிலும் விட்டு வைக்கிறேன்!

III. மூன்றாவதாக, பழையவழி உன்னுடைய பாவங்களைப்பற்றி நினைக்கும்படி செய்கிறது, விசேஷமாக உன்னுடைய இரகசிய பாவங்கள் மற்றும் உன்னுடைய இருதயத்தின் பாவம்; புதியவழி உன்னைப்பற்றி நல்லவராக உணரும்படி செய்கிறது.

யோனத்தான் எட்வர்டுஸ் (1703-1758) சொன்னார், “மனிதன் இயற்கையாகவே [தன்னுடைய] சுயத்தை மட்டும் நேசிப்பவன்” (“Man is a Very Evil and Hurtful Creature”). சுயநல அன்பு, ஆனால் தேவனுக்காக அன்பு இல்லை. மற்ற யாருக்காகவும் அன்பு இல்லை ஆனால் உன்னுடைய சுயத்திற்கு – ஏன் என்றால் நீ, யோனத்தான் எட்வர்டுஸ் சொன்னதுபோல, “மிகவும் பொல்லாத மற்றும் தீமைநிறைந்த ஜந்த்து”. நீ ஏன் அப்படி இருக்கிறாய்? ஏன் என்றால் நீ இந்த பாவசுபாவத்தை (மூல பாவம்) முழு மனிதவர்க்கத்தின் தகப்பனாகிய, ஆதாமிடமிருந்து சுதந்தரிளத்துக் கொண்டிருக்கிறாய்! அதால்தான் நீ உன்னை மட்டுமே நேசிக்கிறாய். “இல்லை, இல்லை!” சிலர் சொல்லுகிறார்கள், “நான் என் கணவனை நேசிக்கிறேன்”. நீயும் அப்படியா? பிறகு ஏன் இரவு பகலாக அவருக்கு விரோதமாக கலகம் செய்கிறாய் மற்றும் அவருக்கு விரோதமாக குற்றம் சொல்லுகிறாய்? உண்மை என்னவென்றால் நீ உன்னை மட்டுமே நேசிக்கிறாய்!

நீ தேவனை நேசிப்பதில்லை, அதிலே தவறில்லை தெரிந்துகொள். உன்னுடைய நண்பர்களைப் பார்ப்பதற்காக மட்டுமே நீ சபைக்கு வருகிறாய். உன்னுடைய நண்பர்களில் ஒருவர் சபையைவிட்டுப்போனால், நீயும் போய்விடுவாய். நீ என்ன ஒரு மாய்மாலக்காரன் என்பதை இது நிரூபிக்கிறது! நீ கிறிஸ்துவை நேசிக்கிறேன் மற்றும் நம்புகிறேன் என்று சொல்லுவது எதுவாக இருந்தாலும், உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளுகிறாய். இதுவரையிலும் நீ ஒரு பொய் கிறிஸ்தவனாக இருக்கிறாய். நீயே கிறிஸ்தவனாக மாறுவேஷம் போடுகிறாய். நீ பொய் புன்சிறிப்பு மற்றும் நட்பான பார்வையை உடையவனாக இருக்கிறாய், ஆனால் நீ ஒரு கிறிஸ்தவனல்ல. அநேக மக்கள் துறவியைபோல வேஷம் போடுவதைப்போல, நீ கிறிஸ்தவனாக மாறுவேஷம் மட்டுமே போடுகிறாய்! இல்லை, உண்மை என்னனவென்றால் நீ கிறிஸ்துவை நேசிப்பதில்லை. உன்னை மட்டுமே நேசிக்கிறாய். உன்னை மட்டுமே! உன்னை மட்டுமே! உன்னை மட்டுமே! வேதம் சொல்லுகிறது, “கடைசிநாட்களில்… மனுஷர்கள் தற்பிரியராய்” (II தீமோத்தேயு 3:1, 2). அதனால்தான் உனக்கு வேதத்தை வாசிக்க நேரமில்லை. ஜெபிக்க நேரமில்லை. சுவிசேஷ ஊழியத்திற்குச் செல்ல நேரமில்லை – ஆனால் உனக்கு ஏராளமான நேரம், மணிக்கணக்காக, வீடியோ கேம் விளையாடவும் மற்றும் டிவி மற்றும் அசுத்தமான புரோனோகிராப்பி பார்க்கவும் நேரம் இருக்கிறது. சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு சபைக்கு வருவதற்கு நேரமில்லை – ஆனால் திரைப்படங்களுக்குச் செல்ல ஏராளமான நேரம் இருக்கிறது! நீ ஏன் அப்படி இருக்கிறாய்? ஏனென்றால் நீ உன்னை மட்டுமே நேசிக்கிறாய்! தேவனுக்காக அன்பு இல்லை. இயேசுவுக்காக அன்பு இல்லை. நீ உன்னை மட்டுமே நேசிக்கிறாய். இதை ஒத்துக்கொள்! இதை இப்பொழுதே ஒத்துக்கொள் – அல்லது நீ ஒருபோதும் மனந்திரும்பி மற்றும் கிறிஸ்துவை நம்பி ஒரு உண்மை கிறிஸ்தவனாக மாறமுடியாது.

“புதிய” வழியானது பழையவழிக்கு நாங்கள் விசுவாசிக்கும் – நேர்விரோதமானது. “புதிய” வழி சபைக்கு முன்பாக சென்று சீக்கிரமான ஒரு பாவியின் ஜெபத்தை சொல்லும்படி செய்கிறது. அதன்பிறகு அவர்கள் உனக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்! இதை சொல்லுவதால் அநேக பாப்டிஸ்ட்கள் என்னை வெறுப்பார்கள், ஆனால் நான் உங்களுக்குச் சத்தியத்தை சொல்லியாக வேண்டும். அவர்களால் முடிந்த வரையிலும் விரைவாக ஞானஸ்நானம் கொடுத்து விடுகிறார்கள், அவர்கள் “தீர்மானம்” என்று அழைக்கப்படுவதை எடுத்த உடனே. ஏன் அவர்கள் அப்படியாக ஞானஸ்நானம் கொடுக்கறார்கள், சில நேரங்களில் அதே கூட்டத்தில் கொடுத்து விடுகிறார்கள்? அவர்கள் இயேசுவை நேசிப்பதால் அதை செய்வதில்லை! அவர்கள் வேதத்தை விசுவாசிப்பதால் அதை செய்வதில்லை! அவர்கள் தங்களைத் தாங்களே நேசிப்பதால் அதை செய்கிறார்கள்! அவர்களுக்கு உன்னைக் குறித்துக் கவலையே இல்லை. அவர்கள் எத்தனை ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று அறிக்கை கொடுப்பதற்காக மட்டுமே கவலைப்படுகிறார்கள். இதை அறிந்தே செய்யும் போதகர்கள் தாங்களே இரட்சிக்கப்படவில்லை என்று நான் நினைக்கிறேன்! நான் சொன்னதை அவர்களுக்கு சொல்லுங்கள், நான் இதை மூலபிரதியிலும் மற்றும் வீடியோவிலும் விட்டு வைக்கிறேன்!

நீங்கள் சொல்லுகிறீர்கள், “நான் அதை விரும்பவில்லை. எனக்கு தேவன்மீது அன்பு இல்லை என்று நீங்கள் சொல்லுவதை நான் விரும்பவில்லை. என்னை நானே நேசிக்கிறேன் என்று நீங்கள் சொல்லுவதை நான் விரும்பவில்லை. நான் இனிமேல் இந்த சபைக்கு திரும்ப வரமாட்டேன்!” சரி, திரும்ப வரவேண்டாம். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், இந்த பழைய பிரசங்கி உண்மையை சொல்லுகிறேன், முழுமையான சத்தியம், மற்றும் வேறொன்றுமில்லை ஆனால் உண்மை – உன்னைப்பற்றி! நீ என்ன சொன்னாலும் அல்லது என்ன செய்தாலும் இதை நான் நிறுத்தப்போவதில்லை. சில இளம் மக்கள் சொல்லுகிறார்கள், “நீங்கள் மிகவும் கடினமாக பிரசங்கிப்பதால் என்னுடைய நண்பர்களை இங்கே என்னால் கூட்டிவர முடியாது.” இல்லை, எனக்குப் பிரியமானவர்களே, அது காரணம் அல்ல – மற்றும் இதை தெரிந்து கொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் நண்பர்களுடைய ஆத்துமாக்களைப்பற்றி கவலைப்படாத காரணத்தால் இங்கே அவர்களை கொண்டுவரவில்லை! உங்கள் நண்பர்களுடைய ஆத்துமாக்களைப்பற்றி நீங்கள் கவலைப்படுவதே இல்லை – ஏனென்றால் நீங்கள் உங்களை மட்டுமே நேசிக்கிறீர்கள்! அந்த அசிங்கமான பிரதிபலிப்பை உங்கள் முகத்திலிருந்து துடையுங்கள் மற்றும் நான் என்ன சொல்லுகிறேன் என்பதை நினையுங்கள்! இழக்கப்பட்ட இளைஞர்களை கொண்டுவர இதுவே ஏற்ற இடமாகும் என்று அறிந்து கொள்ளுங்கள்! ஏன்? காரணம் அவர்கள் இரட்சிக்கப்பட அருகாமையிலிருக்கும் நான் அறிந்த ஒரே இடம் இதுவாகும்! அதனால்தான்! நீ உன்னை நேசிப்பதைப்போல அவர்களையும் நேசித்தால், அவர்களிடம் சொல்லு, “என்னோடுகூட சபைக்கு வாருங்கள்! அது கடினமானதுதான்! அது பழைய பள்ளி! ஆனால் அது L.A.வின் சிறந்த சபையாகும், உன்னையும் என்னையும் போல இளம் மக்களால் நிறைந்து இருக்கிறது.” நீ உண்மையான கிறிஸ்தவனாக இருந்தால் அதைதான் சொல்லுவாய். ஆனால் நீ அப்படியில்லை. நீ ஒரு போலியாக இருக்கிறாய்! உன்னையே நேசிக்கிற ஒரு நபராக இருக்கிறாய். இன்னுமொரு இழக்கப்பட்ட பிள்ளையாக இருக்கிறாய்.

ஒரு இரட்சிக்கப்படாத இளம்பெண் என்னிடம் சொன்னாள் நான் அதிகமாக சத்தம் போடும் காரணத்தால் அவளால் கவனிக்க முடியவில்லை என்றாள். நான் அவளிடம் சொன்னேன், “நீ அநேக ஆண்டுகளாக இங்கே இருந்து வருகிறாய், மற்றும் நீ இன்னும் இழக்கப்பட்டவளாக மற்றும் கலகமுள்ளவளாக காணப்படுகிறாய். நான் இன்னும் அதிக சத்தம் போடவேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன்!” ஆமாம், அதிக சத்தம் – மற்றும் அதிக சத்தம் – மற்றும் அதிக சத்தம். ஒரு ப்ரிவேயில் ஒரு குருடன் நடப்பதை நீ பார்த்தால், நீ சத்தம்போட மாட்டாயா? “அந்த ப்ரிவேயில்லிருந்து வெளியே வா அல்லது நீ சாகப்போகிறாய்!” அதனால்தான் நான் சத்தமிடுகிறேன் – காரணம் நான் உன் ஆத்துமாவை நேசிக்கிறேன். ஒருபோதும் சத்தமிடாத பிரசங்கிகள் உன்னை நேசிக்கவே இல்லை. அவர்களுக்கு உன்னுடைய பணம் மட்டுமே வேண்டும்! தேவனிடத்தில் நீ எவ்வளவு பாவியாக இருக்கிறாய் மற்றும் சுயநலமாக இருக்கிறாய் என்று ஒத்துக்கொள்ளும்வரையிலும் உண்மையான மாற்றத்தை ஒருபோதும் அனுபவிக்க மாட்டாய். உன்னுடைய இரகசிய பாவங்கள் மற்றும் உன் இருதயத்தின் பாவங்களால் நீ உணர்த்தப்பட வேண்டும். தாவீதோடுகூட நீயும் உணர வேண்டும், “என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது” (சங்கீதம் 51:3). அதுதான் பழைய வழியின் மாற்றம். நீ பாவஉணர்வுக்குள்ளாக வரவேண்டும், அல்லது உனது பாவத்திற்காக கிரயம் செலுத்த, மற்றும் எல்லாபாவத்தையும் சுத்திகரிக்க தமது இரத்தத்தை சிலுவையிலே சிந்தின கிறிஸ்துவின் தேவையை நீ ஒருபோதும் காணமாட்டாய்.

IV. நான்காவது, பழையவழி உன்னை நீயே ஆராய்ந்து பார்க்கும்படி செய்கிறது; புதியவழி நீ இங்கிருந்து வெளியே போகும் வரையிலும் சபையை சுற்றி விளையாடு மற்றும் உன் பாவ வாழ்க்கைக்குத் திரும்பிபோகும்படி செய்கிறது.

நமது பாடம் சொல்லுகிறது, ‘“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்” (II கொரிந்தியர் 13:5). அதுவே பழையவழி. நீ மெய்யாகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா என்று பரீட்சித்துப்பார். யோனத்தான் எட்வர்டு சொன்னார், “அதற்குள் [நீ] பார் பாவத்தினால் பாவஉணர்வு அடைந்ததுபோல பாசாங்கு மட்டும் செய்யாதே; ஆனால் பாவத்திற்காக முறையான புலம்பல் வேண்டும். மற்றும், பாவம் பாரமானது [உனக்கு] மற்றும் அந்த இருதயம் [உன்னுடைய] இளமையானது மற்றும் உணரக்கூடியது.”

இதைதான் நீ உணரவேண்டியது அவசியம் அல்லது நீ பொய்யான மாற்றம் உள்ளவனாக இருப்பாய். உங்களில் சிலர் மற்ற மக்களின் மாற்றங்களை கேட்டிருக்கலாம் அல்லது படித்திருக்கலாம். நீ கேட்ட அல்லது படித்த மாற்றத்தின் சாட்சிகள் உனக்கு மனப்பாடமாக இருக்கலாம். உங்களில் சிலருடைய மாற்றத்தின் சாட்சிகளை நான் படித்து அவைகள் ஷீலா நாஹான், அல்லது ஜானின் வல்லமையுள்ள சாட்சியைக் கேட்டுப் படித்து மனப்பாடம் செய்தவைகளாக இருந்ததை சொல்ல முடியும். நீங்கள் ஏதோ ஒரு சிறிய உணர்வுக்குள்ளாக வந்தீர்கள் அதன்பிறகு அவர்கள் சொன்ன பிரதானமான காரியங்களை காப்பி அடித்துவிட்டீர்கள்! உங்களுக்கென்று உண்மையான ஒரு மாறுதல் இல்லை, உண்மையான மாறுதலடைந்த ஒருவருடைய சாட்சியை மனப்பாடம் செய்யப்பட்ட ஒன்று மட்டுமே. நான் ஜான் கேஹனின் சாட்சியின் பெரும்பகுதியை படிக்கப்போகிறேன். அதை நான் படிக்கும்பொழுது, உங்களை நீங்களே பரீட்சை செய்து பாருங்கள். நான் ஜான் கேஹனின் சாட்சியை படிக்கும்பொழுது உங்களுக்குள் கேளுங்கள், “அது எனக்கு மெய்யாகவே நடந்ததா? அல்லது அவர் சொன்னதை நான் காப்பி செய்து இருக்கிறேனா?” ஒவ்வொரு வார்த்தையையும் ஜாக்கிரதையாக கவனியுங்கள் மற்றும் அது உங்களுக்கு மெய்யாகவே நடந்ததா என்று உங்களை நீங்களே கேளுங்கள். அப்படி உனக்கு நடக்கவில்லையானால் அது பொய்யான மாற்றம். விரைவாகவோ அல்லது தாமதமாகவோ மற்ற அநேகர் செய்ததுபோல, நீ எங்கள் சபையைவிட்டு போய்விடுவாய். நீ உண்மையான மாறுதல் அடைந்திருக்க வேண்டும் அல்லது பிசாசு உன்னிடத்தில் வரும்போது நீ எங்கள் சபையைவிட்டு போய்விடுவாய்.

என்னுடைய சாட்சி
ஜீன் 21, 2009
ஜான் சாமுவேல் கேஹன்

கிறிஸ்து செய்த மகத்தான காரியங்களோடு ஒப்பிடும்பொழுது இப்பொழுது என்னுடைய மாறுதலின் தருணத்தை தெளிவான வார்த்தைகளில் விவரிக்க நினைத்தால் அவை மிகவும் சிறிதாகக் காணப்படுகிறது. என்னுடைய மாறுதலுக்கு முன்னதாக நான் முழுவதும் கோபமும் வெறுப்புள்ளவனாக இருந்தேன். என்னுடைய பாவங்களில் நான் பெருமை கொண்டு மக்களுக்கு வேதனை உண்டாக்குவதில் மகிழ்ச்சி அடைந்தேன் மற்றும் தேவனை வெறுத்தவர்களோடு நான் தொடர்பு கொண்டிருந்தேன். தேவன் என்னில் கிரியை செய்ய ஆரம்பித்தார். நான் மாற்றமடைவதற்கு முன்னதான வாரங்களில் நான் மரிப்பதைப் போல உணர்ந்தேன்: என்னால் தூங்க முடியவில்லை, என்னால் புன்னுருவல் செய்ய முடியவில்லை, என்னால் எந்தவிதமான சமாதானத்தையும் காணமுடியவில்லை. நமது சபையில் சுவிசேஷ கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன மற்றும் எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது அபபொழுது நான் என் போதகரையும் தந்தையையும் முழுவதுமாக மதித்ததில்லை. (ஜான் ஒரு இரட்சிக்கப்படாத நிலையில் ஒரு பைத்தியக்காரனை போல நான் சொன்ன அந்த பெண்ணைப்பற்றி சத்தமாக பேசினதால் என்னிடம் நடந்தான்).

அந்த நேரத்தில் பரீசுத்த ஆவியானவர் மிகவும் உறுதியாக என்னுடைய பாவங்களை உணர்த்த ஆரம்பித்தார், ஆனால் நான் தேவனைப்பற்றியும் மாறுதலைப்பற்றியும் எனக்கிருந்த எல்லா நினைவுகளையும் முழுசித்தத்தோடு புறக்கணித்தேன். நான் அதைப்பற்றி நினைக்க மறுத்தேன், இருந்தாலும் என் துன்பத்தை என்னால் உணராமல் இருக்க முடியவில்லை. (நீ பாவத்தினால் உண்டான துன்பத்தை ஒருபோதும் உணராமல் இருந்தால், நீ ஒருபோதும் இரட்சிக்கப்படவில்லை!)

டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபொழுது, என்னுடைய பெருமை அதை துணிவாக நிராகரிக்க முயற்சி செய்தது, கவனிக்கவில்லை, ஆனால் அவர் பிரசங்கித்துக்கொண்டிருந்த வேளையில் என்னுடைய பாவங்களை நான் என் ஆத்துமாவில் உணர முடிந்தது. அந்த உபதேசம் முடியும்வரையிலும் நான் நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தேன், ஆனால் அந்த போதகர் பிரசங்கம் பண்ணிக் கொண்டே இருந்தார், என்னுடைய பாவங்கள் முடிவில்லாததாக மிகவும் மோசமானதாக மாறியது. நான் இரட்சிக்கபட வேண்டும்! அழைப்புக் கொடுக்கப்பட்டபோது நான் அதை எதிர்த்தேன், ஆனால் என்னால் இனிமேலும் இருக்க முடியாது. நாம் மிகவும் மோசமான பாவி என்று அறிவேன் மற்றும் தேவன் நீதியுள்ளவராக என்னை நரகத்தில் தண்டிக்க வேண்டும். (அந்த ஒரே உணர்வுதான் உனக்குத்தேவை. யோனத்தான் எட்வர்டு சொன்னார் நீ அதை உணரவேண்டும் அல்லது நீ ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாது.) நான் போராடி மிகவும் சலித்துப்போனேன், எனக்கிருந்த எல்லாவற்றிலும் எனக்கு மிகவும் சோர்வு உண்டானது. போதகர் எனக்கு ஆலோசனை கொடுத்து, மற்றும் என்னை கிறிஸ்துவிடம் வரும்படி சொன்னார், ஆனால் என்னால் முடியவில்லை. என்னுடைய எல்லா பாவங்களும் என்னை உணர்த்தினபோதும் என்னால் இயேசுவை நம்பமுடியவில்லை. நான் இரட்சிக்கப்பட “முயற்சி” செய்து கொண்டிருந்தேன், நான் கிறிஸ்துவை நம்ப “முயற்சி” செய்தேன் மற்றும் என்னால் முடியவில்லை, என்னாலே கிறிஸ்துவிடம் வரமுடியவில்லை (எப்படி வருவது என்று நிர்ணயம் செய்) கிறிஸ்துவிடம், நான் ஒரு கிறிஸ்தவனாக மாற தீர்மானம் செய்ய என்னால் முடியவில்லை, மற்றும் அது எனக்கு நம்பிக்கையற்ற உணர்வை கொடுத்தது. என்னுடைய பாவம் என்னை கீழே நரகத்திற்கு தள்ளியது இருந்தாலும் என்னுடைய முறட்டாட்டம் எனது கண்ணீரை அடக்கியது. நான் இந்த போராட்டத்தில் சிக்கிக்கொண்டேன். (பழைய பிரசங்கியார் அந்த “சுவிசேஷ வசனத்தை” அழைத்தார்). என்னுடைய பாவம் என்னை கீழே நரகத்திற்கு தள்ளியதை நான் உணர்ந்தேன். இருந்தாலும் என்னுடைய முறட்டாட்டம் எனது கண்ணீரை அடக்கியது. (கடினமான பிள்ளைகளே அழவேண்டாம். அவன் ஒரு கடினமான பிள்ளை. ஆனால் தேவன் அவனை தள்ளினார் மற்றும் நொறுக்கினார் அவன் அழும்வரையிலும் சுவிசேஷ வசனத்தினால் நொறுக்கினார்.)

உடனடியாக சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரசங்கிக்கப்பட்ட போதனை என்னுடைய மனதில் நுழைந்தது: “கிறிஸ்துவுக்கு ஒப்புகொடு! கிறிஸ்துவுக்கு ஒப்புகொடு!” அந்த நொடியிலே நான் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தேன் மற்றும் விசுவாசத்தினாலே இயேசுவிடம் வந்தேன். அந்த நொடியிலே என்னுடைய சுயத்திற்கு மரிப்பதாக எனக்குக் காணப்பட்டது, அதன்பிறகு கிறிஸ்து எனக்கு ஜீவனை தந்தார்! அங்கே எந்தச் செயலும் இல்லை அல்லது என்னுடைய மனதின் சித்தமும் இல்லை ஆனால் என்னுடைய இருதயத்தில், கிறிஸ்துவில் எளிமையான இளைப்பாறுதல், அவர் என்னை இரட்சித்தார்! என்னுடைய பாவங்களை அவருடைய இரத்தத்தினால் கழுவினார்! அதே நொடிப்பொழுதில், நான் கிறிஸ்துவை எதிர்ப்பதை நிறுத்தினேன். நான் செய்யவேண்டியதெல்லாம் அவரை நம்புவதுதான் என்பது மிகவும் தெளிவானது; அந்தச் சரியான சம்பவத்தை ஏற்படுத்தினவர் கிறிஸ்துவே என்பதை என்னால் நினைவுகூர முடிகிறது. நான் ஒப்புக்கொடுக்க வேண்டும்! அந்த நொடியில் எந்தச் சரீர உணர்வும் அல்லது குருடாக்கும் வெளிச்சமும் இல்லை, எனக்கு ஒரு உணர்வு தேவைப்படவில்லை, நான் கிறிஸ்துவை உடையவனாக இருந்தேன்! கிறிஸ்துவை நம்பினதால் எனது பாவம் என்னுடைய ஆத்துமாவைவிட்டு உயர்த்தப்பட்டதை உணர்ந்தேன். நான் என்னுடைய பாவத்திலிருந்து திரும்பினேன், மற்றும் இயேசுவை மட்டும் நோக்கிப் பார்த்தேன்! இயேசு என்னை இரட்சித்தார்.

ஜானின் சாட்சியைக் கேட்டபிறகு, அது உனக்கு எப்போதாவது ஏற்பட்டதா? அப்படி உனக்கு ஏற்படவில்லையானால் நீ மெய்யாக மாற்றப்பட வேண்டிய தேவை இருக்கிறது. உனக்கு மெய்யான ஒரு மாற்றம் அவசியம், காப்பியடிக்கப்பட்ட ஒன்றல்ல. நீ மெய்யான மாறுதலை அடைய அவசியமாக செய்யவேண்டியது என்ன? முதலாவது, உன்னுடைய இருதயம் எவ்வளவு பாவமுள்ளது என்று நினைக்க வேண்டும், அவ்வளவு பாவத்தோடு நீ மெய்யாகவே மனந்திரும்பி மற்றும் இயேசுவை நம்பவில்லை. அவ்வளவு பாவத்தோடு நீ வசனங்களை கற்றுக்கொண்டு எங்களிடம் தந்திரமாக முயற்சி செய்தாய். நான் சொல்லுவது சரியா? பிறகு உன்னுடைய இருதயத்தின் மற்றும் வாழக்கையின் பாவங்களிலிருந்து மெய்யாக திரும்ப வேண்டியது அவசியம். மற்றும் நீ மெய்யாகவே இயேசுவிடம் வந்து அவர் உனக்காக சிலுவையிலே சிந்தின இரத்தத்தினால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவேண்டியது அவசியமாகும். இங்கே பலிபீடத்திற்கு இறங்கி வாருங்கள், மற்றும் உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் மற்றும் உங்களுக்கு ஆலோசனை கொடுக்கிறோம் மற்றவர்கள் மத்திய உணவிற்காக மேல்மாடிக்குப் போவார்கள். இப்பொழுது வாருங்கள். இப்பொழுதே இங்கே வாருங்கள்! ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. ஆபேல் புருதோம்: சங்கீதம் 51:1-3.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
          “The Old-Fashioned Way” (by Civilla D. Martin, 1866-1948).


முக்கிய குறிப்புகள்

இப்பொழுது உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்!

EXAMINE YOURSELVES NOW!

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்” (II கொரிந்தியர் 13:5).

வெளிப்படுத்தின விசேஷம் 20:15; 14:10, 11; எரேமியா 6:16)

I. முதலாவதாக, பழையவழி தேவன் மற்றும் அவருடைய மகிமையில் ஆரம்பிக்கிறது; புதியவழி மனிதன் மற்றும் அவனுடைய தேவைகள் மற்றும் உணர்வுகளில் ஆரம்பிக்கிறது, ரோமர் 9:18; உபாகமம் 7:21; நெகேமியா 1:5; 9:32; எபிரெயர் 10:31; 12:29; மத்தேயு 22:14.

II. இரண்டாவதாக, பழையவழி உன்னுடைய பாவத்தைப்பற்றி நினைக்கும்படி செய்கிறது, உண்மையான தேவன் நரகத்திலே தண்டிப்பார்; புதியவழி உன் தேவைகள் மற்றும் உணர்வுகளை நினைக்கும்படி செய்கிறது, எரேமியா 17:9; மத்தேயு 25:46.

III. மூன்றாவதாக, பழையவழி உன்னுடைய பாவங்களைப்பற்றி நினைக்கும்படி செய்கிறது, விசேஷமாக உன்னுடைய இரகசியப் பாவங்கள் மற்றும் உன்னுடைய இருதயத்தின் பாவம்; புதியவழி உன்னைப்பற்றி நல்லவராக உணரும்படி செய்கிறது, II தீமோத்தேயு 3:1, 2; சங்கீதம் 51:3.

IV. நான்காவது, பழையவழி உன்னை நீயே ஆராய்ந்து பார்க்கும்படி செய்கிறது; புதியவழி நீ இங்கிருந்து வெளியே போகும் வரையிலும் சபையை சுற்றி விளையாடு மற்றும் உன்பாவ வாழ்க்கைக்குத் திரும்பிபோகும்படி செய்கிறது, II கொரிந்தியர் 13:5.