Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
சேன்டாமனிஸத்துக்கு விரோதமான போராட்டம்
(போராட்ட அழுகைகள் வரிசைகளில் மூன்றாவது)

THE BATTLE AGAINST SANDEMANIANISM
(NUMBER THREE IN A SERIES OF BATTLE CRIES)
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஜனவரி 22, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, January 22, 2017

“வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக் கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:39, 40).


நீங்கள் ஒரு வேதகல்லூரி மாணவராக இல்லாவிட்டால் சேன்டாமனிஸம் என்ற வார்த்தை உங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் இது ஒரு ஆத்துமாவை குறைவுபடுத்தும் மதவிரோதமாகும். அது சுவிசேஷ பிரகடணத்தை அழித்தது. அது மில்லியன் கணக்கான மக்களை நித்திய நரக அக்கினிக்கு அனுப்பியது. ராபர்ட் சேன்டாமன் (1718-1771) என்பவரால் சேன்டாமனிஸம் பரப்பப்பட்டது. இதனுடைய பிரதானமான போதனை கிறிஸ்துவைப்பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்பதை நீ மனதில் ஏற்றுக்கொண்டால் நீ இரட்சிக்கப்படுவாய் என்பதாகும். சேன்டாமனிஸம் சொல்லுகிறது கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்து மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள் – வேதத்தில் சொல்லப்பட்ட இந்தக் காரியங்களை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் மாற்றப்படுவார்கள். இன்று சேன்டாமனிஸம் நம்முடைய எல்லா சபைகளிலும் ஒரு பெரிய தவறாக இருக்கிறது. அது மில்லியன் கணக்கான மக்களை நரகத்துக்கு அனுப்புகிறது. இந்த மரணத்துக்கு ஏதுவான மதவிரோதத்தை விசுவாசிப்பவர்கள் நமது சபையில் அநேகர் இருக்கிறார்கள்! நான் அதற்கு விரோதமாக தொடர்ந்து பேசினாலும், அவர்கள் நான் சொல்லுவதை கேட்பதில்லை. அவர்கள் தொடர்ந்து இந்த மரணத்துக்கு ஏதுவான சேன்டாமனிஸம் கொள்கையை விசுவாசிக்கிறார்கள். சென்ற ஆண்டு நமது சபையில் தாங்கள் இரட்சிக்கப்பட்டதாக நினைத்திருந்த ஆறுபேர் இதை விசுவாசித்தார்கள். அவர்கள் இழக்கப்பட்டவர்களாக மற்றும் அதை விசுவாசித்ததால் நரகத்தை நோக்கி போகிறவர்களாக இருந்தார்கள். (see “Sandemanianism” in The Puritans: Their Origins and Successors by Dr. Martyn Lloyd-Jones, Banner of Truth, 1996 edition, pp. 170-190).

வேதத்தில் சொல்லப்பட்ட கிறிஸ்துவின் மரணத்தை பற்றிகாரியங்களை நீ விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அதுதான் அவர்களுடைய நிலை. டாக்டர் லியோடு ஜோன்ஸ் சொன்னார், “இந்த மணி நேரத்தில் நமக்கு முன்பாக உள்ள ஒரு பிரதானமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகும்” (ibid., p. 177). சென்ற ஆண்டு நமது சபையில் தாங்கள் இரட்சிக்கப்பட்டதாக நினைத்திருந்த குறைந்தது ஆறுபேர் இதை விசுவாசித்தார்கள் அவர்கள் இழக்கப்பட்டவர்கள் ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவையே நம்புவதற்குப் பதிலாக கிறிஸ்துவைப்பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்பதை விசுவாசித்தார்கள்.

இயேசு சிலுவையில் மரித்தார் என்பதை விசுவாசிப்பதால் அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். கிறிஸ்துவின் மரணத்தைப்பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்பதை அவர்கள் விசுவாசித்தார்கள். ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது என்பதை விசுவாசித்தால் அது ஒருவரையும் இரட்சிக்காது. இந்தப் போதனையில் இதற்கு ஆதாரத்தை நான் கொடுக்கப்போகிறேன்.

I. முதலாவது, சேன்டாமனிஸம் கிறிஸ்துவினாலே திருத்தப்பட்டது.

இயேசு பரிசேயர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். யூதர்கள் தங்கள் இரட்சிப்பில் சேன்டாமனிஸம் போல இருந்தார்கள். இயேசு சொன்னார்,

“[நீங்கள்] வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக் கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:39, 40).

வேதத்தை ஆராட்சி செய்வதாலும் மற்றும் வேதத்தை விசுவாசிப்பதாலும் அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று இந்த மனிதர்கள் நினைத்தார்கள். மேத்யு ஹென்றி சொன்னார், “அவர்கள் வேதத்தை ஆராய்ச்சி செய்வதாலும் மற்றும் வேதத்தை வாசிப்பதாலும் [நித்திய ஜீவன்] என்று எதிர்பார்த்தார்கள். பொதுவான வழக்கம் ஒன்று அவர்கள் மத்தியில் இருந்தது, ‘நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை [வேதவாக்கியங்களை] உடையவன் நித்திய ஜீவன் உள்ளவன்.’ நிச்சயமாக பரலோகம் உண்டு… வேதவசனங்களை மனப்பாடமாக சொல்ல முடியுமானால் அவர்களுக்கு நிச்சயமாக பரலோகம் உண்டு என்று நினைத்தார்கள்” (Matthew Henry’s Commentary on the Whole Bible). டாக்டர் ப்ராங்க் ஜேபிலின் சொன்னார் வேதத்தில் அவர்களுடைய நம்பிக்கை “அவர்களுக்கு ஜீவனை கொண்டுவரும்” என்று நினைத்தார்கள் (The Expositor’s Bible Commentary). அவர்கள் வேதவசனங்களை விசுவாசித்தார்கள், ஆனால் அவர்கள் இயேசுவிடம் வரவில்லை.

அதுதான் சேன்டாமனிஸத்தின் தவறாகும். டாக்டர் லியோடு-ஜோன்ஸ் சொன்னார், “நீங்கள் வேதத்தின் வார்த்தைகளை உங்கள் மனதில் ஏற்றுக்கொள்ளுகிறீர்கள், மற்றும் அவ்வளவுதான் அதுதான் தேவையானது” (ibid., p. 175). “இயேசுவைப்பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்று விசுவாசிதால் அது அவர்களை இரட்சிக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்” (ibid.).

ஆயிரத்தில் பத்துப் பிள்ளைகள் இந்த மரணத்துக்கு ஏதுவான உபதேசத்தை நமது சபைகளில் கற்றிருக்கிறார்கள். அவர்கள் வேதவசனங்களை மனப்பாடம் செய்யவேண்டும் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். பிறகு அவர்கள் “தங்கள் கையை உயர்த்துவார்கள்” – மற்றும் அவர்கள் ஞானஸ்நானம் கொடுப்பார்கள்! அவர்கள் இயேசுவிடம் வருவதே இல்லை! அவர்கள் யோவான் 3:16ஐ மட்டும் விசுவாசிக்க வேண்டும் மற்றும் ஒரு ஜெபத்தை திரும்ப சொல்லவேண்டும். நமது சபைகள் மில்லியன் கணக்கான சபைகளை (மற்றும் மூத்தவர்களை) சேன்டாமனிஸத்தின் பொய்யான போதனையினால் நரகத்திற்கு அனுப்பியது. இயேசு சொன்னார்,

“[நீங்கள்] வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக் கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:39, 40).

இங்கே நமது சொந்த சபையில் ஐந்து பேர் அப்படியாக இருக்கிறார்கள்.

ஒரு சீன இளம் வாலிபன் தான் இரட்சிக்கப்பட்டதாகச் சொன்னான் எப்படி என்றால், “அந்த இயேசு அவனுக்காக மரித்தார்” அதை விசுவாசித்ததால் இரட்சிக்கப்பட்டான். வேதம் சொன்னதை விசுவாசிப்பது இயேசுவிடம் வருவதைப் போல என்று அவன் நினைத்தான்! அவன் ஒரு இழக்கப்பட்ட சேன்டாமனிஸத்தினனாக இருந்தான்.

ஒரு இளம் பெண் சொன்னாள், “இயேசு ஒருவர் மட்டுமே என்னை இரட்சிக்க முடியும்”. இயேசுவைப்பற்றி வேதம் சொன்னதை அவள் விசுவாசித்தாள், ஆனால் அவள் இயேசுவிடம் வரவில்லை. அவளாகவே இயேசுவிடம் வரவில்லை ஏனென்றால் அவளுடைய இருதயத்தில் சபையை விட்டுவிடு என்று பிசாசு சொல்லுவதை அவள் கேட்காமல் நிருத்தவில்லை. அப்படிப்பட்ட பாவமுள்ள நினைவுகளை அவளால் விடமுடியவில்லை. இயேசு ஒருவர் மட்டுமே இரட்சகர் என்று அவள் விசுவாசிக்கிறாள், ஆனால் அவளால் இழக்கப்பட்ட மக்களின் சாத்தான் ஆலோசனையிலிருந்து திரும்ப முடியவில்லை. அவள் ஒரு வேதத்தை விசுவாசிக்கும் இழக்கப்பட்ட சேன்டாமனிஸத்தினளாக இருந்தாள், ஆனால் இயேசுவை நம்பவில்லை. அவள் இயேசுவைப்பற்றி வேதம் சொன்னதை விசுவாசிக்கிறாள். ஆனால் அவள் இயேசுவிடம் வரவில்லை. அவள் தனது பாவத்திலிருந்து திரும்பி வராதபடியினால், அவளுடைய பாவத்திலிருந்து அவருடைய இரத்தத்தால் சுத்தம் செய்துகொள்ள அவளால் இயேசுவிடம் வரமுடியாது. அவள் ஒரு இழக்கப்பட்ட சேன்டாமனிஸத்தினளாக இருந்தாள்.

ஒரு இளம் இஸ்பேனிக் மனிதன் சொன்னான் இயேசுவை நம்புவது என்பது அந்த கிறிஸ்து சிலுவையில் மரித்ததை நம்புவதைப் போலதான். மறுபடியுமாக, இந்த இளம் மனிதன் வேதம் சொன்னதை விசுவாசித்தான், ஏனென்றால் அவன் சேன்டாமனிஸத்தை பற்றிக்கொண்டிருந்தான். வேதத்தை நம்புவதும், இயேசு அவனுக்காக சிலுவையில் மரித்ததை வேதத்தின்படி நம்புவதும் இயேசுவை நம்புவதைப் போல அல்ல. அதனால் அவன் ஒரு இழக்கப்பட்ட சேன்டாமனிஸத்தினனாக இருந்தான்.

இன்னுமொரு சீன இளம் வாலிபன் அதே காரியத்தை சொன்னான். அந்த இயேசு அவனுக்காக மரித்ததை நம்புவது இயேசுவை நம்புவதைப்போலதான். அவன் வேதம் சொன்னதை விசுவாசித்தான், ஆனால் இயேசுவை நம்பவில்லை. அவனும் ஒரு இழக்கப்பட்ட சேன்டாமனிஸத்தினனாக இருந்தான்.

இன்னுமொரு சீனப் பெண் சொன்னாள் இயேசு அவளுக்காக மரித்ததை நம்புவது இயேசுவை நம்புவதைப்போலதான். அது ஒரு தவறு என்று அவளுக்குத் தெரியும், ஆனால் அவள் டாக்டர் கேஹன் அவர்களால் “ஆச்சரியமாக எடுத்துச் செல்லப்பட்டாள்” அவர் அவளிடம் அதுபோல் நம்புவது சரியான காரியமா எனக் கேட்டார். அவர் அவளிடம் அப்படியாக கேட்டபொழுது அவள் “ஆச்சரியமாக எடுத்துச் செல்லப்பட்டாள்” ஏனென்றால், அவளுடைய இருதயத்தில், அவள் ஒருபோதும் இயேசுவை நம்பவில்லை. அவள் செய்ததெல்லாம் வேதத்தின் ஒன்று அல்லது இரண்டு வசனங்களை விசுவாசித்தாள். அவள் “ஆச்சரியமாக எடுத்துச் செல்லப்பட்டாள்” ஏனென்றால் அவளுடைய இருதயத்தில் அவள் ஒருபோதும் இயேசுவை நம்பவில்லை, வேதத்தின் ஒரு போதனையில் மட்டுமே அவள் தங்கியிருந்தாள். அவளும் ஒரு இழக்கப்பட்ட சேன்டாமனிஸத்தினளாக இருந்தாள்.

டோனால்டு டிரம்ப் ஜனாதிபதி என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நீங்கள் அவரை சந்தித்ததே இல்லை! அவர் ஜனாதிபதி என்று நீங்கள் விசுவாசிப்பது அவரிடம் வருவதைப்போல அல்ல. இயேசுவைப்பற்றி வேதம் சொன்னதை விசுவாசிப்பது இயேசுவையே நம்புவது இவைகளுக்கிடையில் ஏராளமான வித்தியாசம் இருக்கிறது. அது மிகவும் சிறியதாக காணப்படலாம் – ஆனால் அப்படியல்ல. நீ இயேசுவை தாமே நம்பாமல் போனால் நீ நரகத்திற்குப் போவாய்! இயேசு சொன்னார், “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:40). ஒரு வேதவசனத்தை விசுவாசிப்பது அல்லது ஒரு வேத போதனையை விசுவாசிப்பது ஒருவரையும் நரக அக்கினியிலிருந்து தப்புவிக்காது!

மக்கள் ஏன் இப்படி தொடர்ந்து செய்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் பாவத்தினால் உணர்த்தப்பட வில்லை! நீ பாவ உணர்வுக்குள் இருந்தால், ஜான் கேஹன் இருந்ததைப்போல, நீ செய்த ஒன்றும் உன்னை இரட்சிக்காது என்று உணர்ந்து கொள்ளுவாய் – நீ ஒன்றும் செய்யவில்லை! அது இயேசு உன்னை இரட்சிக்க முடியும் என்று விசுவாசிப்பதையும் சேர்க்கிறது! நீ உனது பாவத்தால் உணர்த்தப்பட்டால் வேறொன்றினாலும் அல்ல ஆனால் இயேசுவினால் மட்டுமே உன்னை திருப்திபடுத்த முடியும்! நீ சொல்லுவாய், “என் பாவத்தை எதனால் கழுவ முடியும்? வேறொன்றுமில்லை ஆனால் இயேசுவின் இரத்தமே”. “கர்த்தாவே, நான் வருகிறேன், இப்பொழுதே உம்மிடத்தில் வருகிறேன். என்னை கழுவும், கல்வாரியில் வழிந்த அந்த இரத்தத்தினால் என்னை சுத்திகரியும்”.

II. இரண்டாவதாக, சேன்டாமனிஸம் ஒரு பிசாசுகளின் உபதேசம்.

“வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக் கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:39, 40).

பரிசேயர்கள் ஏன் வேதத்தை ஆராய்ந்தார்கள், ஆனால் இயேசுவிடம் வரமுடியவில்லை? ஏனென்றால் அவர்கள் சாத்தானின் அதிகார ஆளுகையின் கீழ் இருந்தார்கள்! இதே மனிதர்களிடம் இயேசு சொன்னனார், “என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவார்கள்…” (யோவான் 8:43, 44).

இயேசுவைப்பற்றி வேதம் என்ன சொல்லுகிறதோ அதை விசுவாசிப்பது இயேசுவை விசுவாசிப்பது போன்றது அல்ல என்று நான் சொல்லும்பொழுது உன்னால் அதை கேட்க முடியவில்லை. நீ பிசானுடைய கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த எளிய கருத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இயேசு அப்படியாக சொன்னார். அவர் சொன்னார், “என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவார்கள்” (யோவான் 8:43, 44). நீங்கள் பிசாசுக்குச் சொந்தமானவர்கள். பிசாசு உங்கள் தேவன். பிசாசு உங்கள் மனதைக் குருடாக்கி இருக்கிறான். ஏனென்றால் நீ இயேசுவை நம்பி இரட்சிக்கப்படுவதை பிசாசானவன் விரும்பவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்,

“எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப் போகிறவார்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய [சாத்தான்] அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்…” (II கொரிந்தியர் 4:3, 4).

பிசாசு உங்களை எப்படி குருடாக வைத்திருக்கிறான்? நீ இயேசுவினிடத்தில் வராமல் தடைசெய்யும் வல்லமை பிசாசுக்கு எப்படி கிடைத்தது?

1. அநேக சீன இளம் மக்கள் தங்கள் இரட்சிக்கப்படாத புத்தமதப் பெற்றோர்களால் குருடர்களாக மற்றும் பிசாசினால் சங்கிலியினால் கட்டப்பட்டவர்களாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். நீ இரட்சிக்கப்படாமல் இருக்க இந்தப் பெற்றோர்கள் எல்லாவிதமான சாத்தானின் வல்லமையையும் உபயோகப்படுத்துவார்கள். ஆனால் இயேசு சொன்னார், “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” (மத்தேயு 10:37). சீக்கிரமாக சீன புத்தாண்டு வரப்போகிறது. உங்களில் சில இரட்சிக்கப்படாத பெற்றோர் தைரியமாக பெரிய விருந்துக்குத் திட்டமிட்டிருப்பார்கள் அதேசமயத்தில் சபையும் இருக்கிறது. நீங்கள் இப்பொழுதே, இன்றே, அவர்களிடம் சொல்லவேண்டியது அவசியம் சனிக்கிழமை இரவு ஜெபக்கூட்டம் அல்லது ஞாயிறு இரண்டு கூட்டங்களின் நேரத்தில் விருந்து ஏற்பாடு செய்தால் நான் அங்கே இருக்கமாட்டேன் என்று சொல்லிவிடுங்கள் – அதன் பிறகு உங்கள் சத்தியவாக்கை காப்பாற்றுங்கள் சபையிலே இருங்கள், அவர்கள் உங்கள்மீது எவ்வளவு கோப்பட்டாலும் கவலைப்படவேண்டாம். உங்கள் இரட்சிக்கப்படாத புத்தமத பெற்றோர்களின் கோபத்தால் சாத்தான் உங்களை கட்டி வைக்காதபடி பாருங்கள். “ஆனால்,” நீ சொல்லலாம், “அவர்கள் என்மீது ஆத்திரம் அடைவார்கள் மற்றும் கூக்குரல் இடுவார்கள்!” அவர்கள் ஆத்திரம் அடைந்து மற்றும் கூக்குரலிடட்டும்! தேவன் நியாயத்தீர்ப்பின் கடைசிநாளில் உன்னை தள்ளிவிடுவதை கேட்பதைவிட அவர்களுடைய ஆத்திரத்தை கேட்பது நல்லது. அவர்களுடைய தேவனுக்கு விரோதமான பாவமாகிய முரட்டாட்டத்தை உடைத்து விடுதலையாக இருங்கள்! சாத்தானின் சங்கிலிகளை உடைத்து விடுதலையாக இருங்கள்.

2. உங்களில் அநேகர் இரகசிய பாவங்களால் குருடர்களாக மற்றும் பிசாசினால் சங்கிலியினால் கட்டப்பட்டவர்களாக வைக்கப் பட்டிருக்கிறார்கள். ஒருவருக்கும் தெரியாது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பாவங்களைப்பற்றி – நீ சொல்லலாம், “ஒருவருக்கும் தெரியாது.” ஆனால் நீ நினைப்பது தவறு. நீ செய்த “இரகசிய பாவங்களை” பற்றி இரண்டு பேருக்குத் தெரியும். அவர்கள் யார்? நீ செய்த இரகசிய பாவங்களைப்பற்றி தெரிந்த முதல் நபர் நான். பாருங்கள், வரும் ஏப்ரல் முதல் 59 வருடங்களாக நான் இந்த ஊழியத்தில் இருக்கிறேன். நான் மனதை படிக்கிறவனாக இருக்கிறேன் என்று மக்கள் என்னை குற்றம் சொல்லுவார்கள் – ஆனால் நான் மனதை படிக்கிறவனல்ல, அல்லவே அல்ல. ஆனால் நான் முகத்தை படிக்கிறவன். 59 வருடங்களாக சபைகளில் மக்களின் முகங்களை பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு, நீ எப்படிப்பட்ட இரகசியமான பாவங்களை செய்து கொண்டிருக்கிறாய் என்று முகத்தைப் பார்த்தவுடன் நன்றாக சொல்லமுடியும். போலீஸ்காரர்கள் முகங்களை பார்த்துப் படித்தறியும் பயிற்சியை பெறுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நமது வேதக்கல்லூரிகளிலும் மற்றும் வேதபள்ளிகளிலும் இளம் பிரசங்கிகளுக்கு முகங்களை எப்படி படித்தறிவது என்று கற்பிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆமாம், உன்னுடைய முகத்தைப் பார்த்து நீ என்ன இரகசிய பாவத்தை செய்தாய் என்று அடிக்கடி என்னால் சொல்ல முடியும்.
         ஆனால் இன்னும் ஒருவர் என்னைவிட அதிக நுணுக்கமாக அறிந்தவர் இருக்கிறார். உண்மையாக அவருக்கு உன்னுடைய பாவங்களைப்பற்றி 100 சதவீதம் தெரியும். அவர் இங்கே உன்னை இப்பொழுது பார்த்துக் கொண்டு இருக்கிறார். உண்மையாக அவருக்கு உன்னுடைய இரகசிய பாவங்களைப்பற்றி அனைத்தும் தெரியும். அவர் யார்? நீங்கள் கண்டு பிடியுங்கள் – அது தேவன்! அவருக்கு மறைக்க உன்னால் முடியாது. அவர் சர்வவியாபி – அதன் பொருள் அவர் ஒரேநேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்கக்கூடியவர். உன்னுடைய சரீரத்தில் நீ செய்கிற எல்லாவற்றையும் அவர் பார்க்கிறார். உனது மனதில் நினைக்கும் எண்ணங்களை அவர் அறிந்திருக்கிறார். உன் இதயத்தில் இருக்கும் ஆழ்ந்த இரகசியங்களை அவர் அறிவார். வேதம் சொல்லுகிறது, “கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” (II நாளாகமம் 16:9). “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது” (நீதிமொழிகள் 15:3). “எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள்… அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்” – நீ செய்யும் ஒவ்வொரு இரகசிய பாவத்தின் மீதும். “எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்” (உபாகமம் 11:12). நீ செய்யும் ஒவ்வொரு இரகசிய பாவத்தையும் தேவன் தமது புத்தகங்களில் எழுதுகிறார் என்று வேதம் சொல்லுகிறது. கடைசி நியாயத்தீர்ப்பின் நாளில் தேவன் நீ செய்த ஒவ்வொரு இரகசிய பாவங்களையும் தமது புத்தகத்திலிருந்து வாசிப்பார். அவருடைய புத்தகங்கள் ஒரு பெரிய கம்பியூட்டரை போல இருக்கும், நீ செய்யும் ஒவ்வொரு இரகசியப் பாவமும் அங்கே பதிவு செய்யப்படும். கடைசி நியாயத்தீர்ப்பின் நாளில் தேவனுக்கு முன்பாக நீ நிற்க வேண்டும். ஒருவருக்கும் தெரியாது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பாவங்களைப்பற்றி அவர் விளக்கமாக படிப்பார். உனது பாவங்களைப் பற்றி அந்தப் புத்தகத்தில் வாசிக்க கேட்டபிறகு, உனக்குச் சாதகமாக எதையும் உன்னால் செய்யமுடியாது. அந்தப் பாவங்களை நீயே நினைத்துப் பார்ப்பாய். உனது இரகசிய பாவங்களைப்பற்றி அந்தப் புத்தகத்தில் வாசித்த பிறகு, நீ “அக்கினிக் கடலிலே தள்ளப்படுவாய்” (வெளிப்படுத்தல் 20:11-14).

3. உங்களில் அநேகர் உங்கள் இருதயம் பொல்லாததாக இருக்கிறது என்று அறிக்கை செய்யாமல் இருப்பதால் நீங்கள் குருடர்களாக மற்றும் பிசாசினால் சங்கிலியினால் கட்டப்பட்டவர்களாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். வேதம் சொல்லுகிறது, “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” (எரேமியா 17:9). ஜார்ஜ் ஒயிட்பீல்டு (1714-1770) சொன்னார், “நீ எவ்வளவு உறுதியாக மறுத்தாலும் கவலையில்லை, நீ விழிக்கும்போது, உன்னுடைய வாழ்க்கையில் நீ செய்த பாவம் உன்னுடைய [சொந்த இருதயத்திலிருந்து]... அவன் மிகவும் விஷமானவன் மற்றும் கலகக்காரன் தனது [சொந்த இருதயத்தில்] என்று அவர் பார்க்கிறார் அதனால், அவனுடைய முழுவாழ்க்கையிலும் ஒரு வெளிபிரகாரமான பாவத்தையும் செய்யாவிட்டாலும் அவனை குற்றப் படுத்துவது தேவனுக்குச் சரியானதாக இருக்கும்”. ஜூலி சொன்னாள், “நான் மெய்யாகவே நல்லவள் அல்ல என்று பரிசுத்த ஆவியானவர் எனக்குக் காட்டினார்... நான் ஒரு பயங்கரமானவள் மற்றும் சுயநலமுள்ளவள் மற்றும் மிகவும் பெருமையுள்ளவள், மற்றும் மிகவும் வெட்கப்பட்டேன்... எனக்குள்ளாக மிகவும் ஆழத்தில் நான் யாராக இருந்தேன் [எனது இருதயம்]... நான் பாவமுள்ளவளாக மற்றும் தவறாக உணர்ந்தேன்”. வெளிப்பிரகாரமாக அவள் மிகவும் நல்லவள், ஆனால் அவளுக்குப் பாவமான இருதயம் இருந்து. அவள் சொன்னாள், “நான் நல்லவளைப்போல நடித்தேன், ஆனால் என் [இருதயத்தின்] உள் ஆழத்தில் நான் நல்லவளாக இல்லை... என்னை நானே இரட்சித்துக் கொள்ள போதுமான அளவிற்கு நல்லவள் அல்ல என்று அறிந்திருந்தேன்... எனது முகம் கண்ணீரால் நனைந்தது”. அவள் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு சுவிசேஷ சபையில் இருந்தவள், ஆனால் இப்பொழுது அவளது இருதயத்தின் பயங்கரமான பாவத்தை உணர்ந்தாள். அவளுடைய சொந்த இருதயத்தின் பாவத்தை அவள் உணரும் வரையிலும் அவளது வாழ்க்கையில் வேதாகமம் எந்தத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை என்று அவள் சொன்னாள்; அவள் பாவஉணர்வு அடையும் வரையிலும், இயேசுவின் இரத்தம் அவளை சுத்திகரித்ததை அவள் உணரவில்லை. அவளது இருதயம் எவ்வளவு பயங்கரமானது என்று அவள் உணரும்வரையிலும் அவளுக்கு எந்த உணர்வும் இல்லை. அந்த சுவிசேஷசபையின் சேன்டாமனிஸத்தார் வேத வசனங்களை அவளுக்குக் கற்பித்தார்கள், ஆனால் தேவன் அவளுடைய இருதயத்தின் பாவங்களை அவளுக்கு உணர்த்தும் வரையிலும் அவைகள் அவளுடைய வாழ்க்கையில் எந்த ஒரு தாக்கத்தையும் உண்டாக்கவில்லை.

III. மூன்றாவதாக, சேன்டாமனிஸம் வெளிப்படையான அநேக நல்ல மக்களை நரகத்திற்கு அனுப்புகிறது.

நீங்கள் சொல்லுகிறீர்கள், “அநேக மக்கள் செய்வதுபோல நான் சில பொல்லாதவைகளை ஒருபோதும் செய்யவில்லை. நான் சுத்தமாக வாழுகிறேன். நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் சபைக்குப் போகிறேன். நான் ஒரு நல்லவன்” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நீ எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் பரவாயில்லை, நீ எவ்வளவு அதிகமாக வேதம் வாசித்து ஜெபித்தாலும் பரவாயில்லை, இயேசுவைப்பற்றி வேதம் சொல்லுவதை நீ விசுவாசித்தாலும் பரவாயில்லை – இயேசு அவரை மட்டும் நீ நம்பாவிட்டால் பொல்லாத மக்களோடு நீயும் நரகத்திற்குதான் போவாய் என்று நான் உன்னை எச்சரிக்கிறேன். உன்னை இரட்சிக்க இயேசு கிறிஸ்து சிலுவையிலே மரித்தார் என்று விசுவாசிப்பது உன்னை இரட்சிக்காது! அப்போஸ்தலன் என்ன சொன்னார் என்று கவனியுங்கள்,

கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்கள்” (II தீமோத்தேயு 3:15).

கிறிஸ்து சிலுவையிலே மரித்தார் என்று விசுவாசிப்பது உன்னை இரட்சிக்காது. அது உபதேச நம்பிக்கை மட்டுமே. “கிறிஸ்து இயேசுவைப்பற்றும்… இரட்சிப்புக்கு” உன்னை வழிநடத்தும்படியாக வேதம் கொடுக்கப்பட்டது. வேதத்தை நீ எவ்வளவாக விசுவாசித்தாலும் நீ இயேசுவை நம்பாவிட்டால் நீ இரட்சிக்கப் படவில்லை. வேதம் கொடுக்கப்பட்டதன் நோக்கம் உன்னை இயேசு கிறிஸ்துவிடம் நடத்தும்படியாகத்தான்!

டாக்டர் A.W. டோசர் அவர்கள் சேன்டாமனிஸத்தின் தவறைக் குறித்த ஒரு ஆழமான உள்காட்சியை “வேதம் கற்றுக் கொடுத்ததா அல்லது ஆவி கற்றுக் கொடுத்ததா?” என்ற ஒரு கட்டுரையின் மூலமாக தருகிறார். டாக்டர் A.W. டோசர் சொன்னார்,

“சபைகள் தங்கள் பிள்ளைகளுக்கு வேதத்தைக் கற்றுக் கொடுக்கின்றன [மற்றும்] ஜீவனுள்ள கிறிஸ்தவத்தை அவர்களுக்குள் இன்னும் ஒருபோதும் உற்பத்தி செய்வதில்லை... அவர்களுடைய மதசம்மந்தமான வாழ்க்கை சரியான மற்றும் காரணத்துக்குரிய நீதியாக இருக்கிறது, ஆனால் முழுமையாக இயந்திரமயமானதாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் [இளைய மக்கள்] மாய்மாலக்காரர்கள் என்று தள்ளிவிட முடியாது. அவர்களில் அநேகர் அதைப்பற்றி [மிகவும்] சீரியஸாக இருக்கிறார்கள். அவர்கள் சாதாரணமாக குருடராக இருக்கிறார்கள்... விசுவாசக்கூடு என்ற வெளிப் பிரகாரமான கூட்டோடு பலவந்தப்படுத்தப் பட்டிருக் கிறார்கள், அவர்களுடைய இருதயங்கள் ஆவிக்குரிய மெய்தத்துவத்திற்காக எப்பொழுதும் பசியோடு இருக்கின்றன மற்றும் அவர்களுக்குள் இருக்கும் தவறு என்ன என்று அவர்கள் அறிவதில்லை... இயேசு கிறிஸ்துவே சத்தியம், அவர் [வேதத்திலுள்ள] வெறும் வார்த்தைகளில் அடங்கி இருக்க முடியாது.”

நோவா சாங்கைப்போல நீங்கள் எப்பொழுதாவது உணர்ந்தது உண்டா? நோவா சொன்னார், “நான் தேவனோடு சரியாக இல்லை என்று நான் அறிந்திருந்தேன். நான் டாக்டர் கேஹான் அவர்களோடு பேசும்படி போனேன் மற்றும் என்னுடைய பாவத்தால் மற்றும் எனது அறியாமை மற்றும் என்னுடைய திருக்குள்ள இருதயத்தால் நான் உணர்த்தப்பட்டேன். நான் எப்படிப்பட்ட உதவியற்ற பாவி என்பதை பரிசுத்த ஆவியானவர் உணர்த்தினார். எனது பாவத்தினால் நான் மிகவும் வெறுப்படைந்தேன், மற்றும் நான் தேவனுடைய கிருபைக்கு எந்த விதத்திலும் தகுதியற்றவனாக உணர்ந்தேன்... டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்கள் மற்றும் அவர் சொன்னார், ‘பரிபூரண விசுவாசம் இரட்சிக்காது. இயேசு இரட்சிப்பார்!’ இயேசு எல்லா நேரத்திலும் இருக்கிறார் என்ற சத்தியத்துக்கு நான் குருடனாக இருந்தேன். நான் அவரை நம்ப வேண்டியதாக இருந்தது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் என்னிடம் கிறிஸ்துவை நம்புகிறாயா என்று கேட்டார், அதற்கு நான் “ஆம்” என்று சொன்னேன். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் பாடினார்கள், ‘மில்லியன் கணக்கில் ஆட்கள் வந்தாலும், இன்னும் ஒருவருக்கு இடமுண்டு, சிலுவையில் உனக்கும் இடமிருக்கிறது.’ என்னுடைய எல்லா குற்றத்தோடும் மற்றும் பாவத்தோடும் நான் இயேசுவிடம் வந்தேன், மற்றும் இயேசு என்னை வெளியே திருப்பி விடவில்லை. அந்த ஷணத்திலே நான் அவரில் இளைப்பாறுதல் பெற்றேன்! என்ன ஒரு மன்னிக்கும் இரட்சகர்! நான் ஒரு குப்பையைப்போல தாழ்வாக உணர்ந்தேன், ஆனால் இயேசு என்னை மேலே உயர்த்தி மற்றும் இரட்சித்தார். என்னுடைய பாவங்களுக்கான கிரயத்தை செலுத்த, இயேசு எனக்காக சிலுவையிலே இரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார், மற்றும் அவர் என்மீது கொண்டிருக்கும் அன்பை, எப்பொழுதும் நினைவு கூருவேன்.” இதை எழுதின இளம் மனிதன் நோவா சாங். அவர் போதகராவதற்குப் படிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். அவருடைய தகப்பனார் எங்களுடைய எல்லா போதனைகளையும் சீன மொழியில் மொழிபெயர்க்கிறார் அந்த விடியோவை www.sermonsfortheworld.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இன்னும் சில வாரங்களில் நோவா சீனா மற்றும் இந்தோனேஸியாவுக்கு பிரசங்கிக்க போகபோகிறார்!

என்னுடைய நண்பரே, “அந்த” இயேசு இரட்சிக்கிறார் என்று நம்புவதை நீ நிறுத்துவாயா? நீ நேராக இயேசுவிடம் வந்து அவரை மட்டும் நம்புவாயா? நீ செய்த ஒவ்வொரு பாவத்தையும் அவருடைய நியாயத்தீர்ப்பின் புத்தகத்திலிருந்து இயேசு கழுவி துடைத்துவிடுவார். அவர் தமது இரத்தத்தால் உன்னை சுத்தம் பண்ணுவார். அவர் உன்னை இரட்சிப்பார். அவர் உன்னை இரட்சிப்பார். அவர் உன்னை இப்பொழுதே இரட்சிப்பார்! ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. ஆபேல் புருதோம்: யோவான் 5:39-46.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“There’s Room at the Cross For You” (by Ira F. Stanphill, 1914-1993).


சேன்டாமனிஸத்துக்கு விரோதமான போராட்டம்

(போராட்ட அழுகைகள் வரிசைகளில் மூன்றாவது)
THE BATTLE AGAINST SANDEMANIANISM
(NUMBER THREE IN A SERIES OF BATTLE CRIES)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக் கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:39, 40).

I.    முதலாவது, சேன்டாமனிஸம் கிறிஸ்துவினாலே திருத்தப்பட்டது,
யோவான் 5:39, 40.

II.   இரண்டாவதாக, சேன்டாமனிஸம் ஒரு பிசாசுகளின் உபதேசம், யோவான் 8:43, 44; II கொரிந்தியர் 4:3, 4; மத்தேயு 10:37; II நாளாகமம் 16:9; நீதிமொழிகள் 15:3; உபாகமம் 11:12; வெளிப்படுத்தின விசேஷம் 20:11-14; எரேமியா 17: 9.

III.  மூன்றாவதாக, சேன்டாமனிஸம் வெளிப்படையான அநேக நல்ல மக்களை நரகத்திற்கு அனுப்புகிறது, II தீமோத்தேயு 3:15.