Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
ஜீவனுள்ள கிறிஸ்தவத்துக்கான யுத்தம்!
டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் பற்றிய ஓர் அறிமுகம்

THE FIGHT FOR LIVING CHRISTIANITY!
AN INTRODUCTION OF DR. R. L. HYMERS, JR.
(Tamil)

திரு. ஜான் சாமுவேல் கேஹன் அவர்களால்
by Mr. John Samuel Cagan


நெருக்கடியான காலங்களில் மக்கள், தங்களைவிட அதிகமான காரியங்களில் விசுவாசம் வைப்பவர்களைக் கொண்டு சரித்திரம் படைக்கப்படுகிறது. சாதாரண மக்களால் சரித்திரம் படைக்கப்படுவதில்லை. பாதுகாப்பிற்காக மற்றும் நிலைத்திருப்பதற்காக ஆசிப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். தோல்விக்காக அதிகம் பயப்படுபவர்கள் ஒருபோதும் முயற்சி செய்யமாட்டார்கள். அதிக கஷ்டப்பட்டு விலைக்கிரயம் செலுத்த முடியாத காரணத்தால் சிலரால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. உலகத்தில் எதையும் மாற்றமுடியாதவர்கள், தாக்கத்தை உண்டாக்காதவர்கள், ஒருபோதும் வாழாதவர்களைப்போல மரிப்பார்கள். இப்படிப்பட்ட மக்கள் நிறைந்திருக்கும் இந்த காலத்தில், தேவன் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களை எழுப்பினார்.

ஊழியத்திற்குபோக தீர்மானம் செய்யும் அநேகர் ஏறக்குறைய எல்லாவழிகளிலும் தாங்கப்படுகிறார்கள். இருந்தாலும், டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள், தமது சொந்த வழியில் கல்லூரி மூலமாக கட்டணம் செலுத்தப்பட்டு பகலில் வேலை செய்தார் இரவில் பள்ளிக்குச் சென்றார். குடும்பம் மற்றும் நண்பர்கள் மூலமாக அடிக்கடி ஊழியத்தில் சோர்வடைந்தாலும், தன்னை தேவனுடைய ஊழியக்காரராக கனவுகண்டவராக தனது இலக்கை உண்டாக்கிக் கொண்டார், எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தபோதும் அதைவிட்டு விலகாதிருந்தார். மனஎழுச்சியினால் உண்டான வேதனை மற்றும் பிசாசின் தாக்குதல்களுக்கு இடையில் தேவனுடைய ஒரு போதகராக மாறுவதற்கான போராட்டத்தில் நிலைத்து நின்றார். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் தேவனுடைய சத்தியத்தை சொல்லும் நோக்கத்திற்காக ஒவ்வொரு சோதனை மற்றும் உபத்திரவத்தை சகித்தார். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் வாழக்கையில் அக்கினியை அனுபவித்த காரணத்தால், அவர் சத்தியத்திற்காக கொழுந்துவிட்டு எரிகிறவராக இருந்தார்.

டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தை மிகவும் பலமாக விசுவாசித்ததால் அவர் அதற்காக போராட சித்தமாக இருந்தார். தனக்குச் சுகமாக இருப்பதற்காக அவர் ஒரு பொய்யை ஏற்றுக்கொண்டு அதில் போதுமென்று இருக்கும் ஒரு மனிதனல்ல. அவரது வாழ்நாள் முழுவதும் இது நடந்தது. வேதத்தை நிராகரிக்கும் செமினரிகளில் அவதூரான போதனைகளை கேட்டுக் கொண்டு அவர் ஒன்றும் செய்யாமல் பின்னால் சும்மா உட்காரவில்லை. அவருடைய பட்டமளிப்பு மற்றும் படிப்புக்கு இடையூறு நேர்ந்த போதிலும், டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் வேதாகமத்திற்கு விரோதமாக தாக்குதல் நடத்தினவர்களோடு போராடினார். அவர் வகுப்பறைகளை மூடினார், பள்ளி செய்தித்தாள்களில் விஷயங்களை எழுதினார், அவர் தங்கியிருந்த வீட்டில் ஜெபக்கூட்டங்கள் நடந்தன; வேதத்தின் சத்தியத்திற்குப் புறம்பான பொய்களுக்கு விரோதமாக அவரால் முடிந்த வரையிலும் சக்தியை திரட்டி போராடினார். அவரது செமினரியின் தலைவருடைய அலுவலகத்திற்கு அழைத்து அவர் வேதத்தை சார்ந்து கொண்டு மற்றும் வேதத்திற்கு எதிரிடையானவர்களோடு போராடும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டபொழுது, டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் அதற்கு இணங்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் செமினரியில் இருக்கும் மேற்போக்காளர் இஸத்துக்கு விரோதமாக ஒரு புத்தகத்தை எழுதினார். அவர் வேதாகமத்திற்காக போராடியதில் உயர்ந்து மற்றும் உறுதியாக நின்றார்.

சிலர் ஏளனம் செய்தார்கள், மற்றவர்கள் குற்றம் சுமத்தினார்கள், மற்றும் இன்னும் சிலர் ஒப்புகொடுத்தார்கள், ஆனால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் செயல்வீரராக இருந்தார். மரணம் நிச்சயமாக சம்பவிக்கும் நிலையிருந்த போதிலும் தனது தேவனாலும் அவரது சத்தியத்தினாலும் அவர் பலமாக உணர்த்தப்பட்டபடியினால் தனது பட்டயத்தை எடுத்து தீய சக்திகளோடு போராடினார். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் தமது ஜீவனை சங்கிலி விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு அதை நேசிக்கவில்லை. மற்றவர்கள் சமாதானத்துக்குக் கிரயமாக அடிமைதனத்தை ஏற்றுக்கொண்ட பொழுது அவர் ஒரு யுத்தவீரராக இருந்தார்.

ஆலிவுட் கிறிஸ்துவின் முகத்தில் துப்பினபொழுது, டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் தமது இரட்சகரின் முகத்தை துடைக்க கொதித்தெழுந்தார். அதற்காக, அவர் தாக்கப்பட்டார். அவருக்கு விரோதமாக காரியங்கள் செய்தித்தாள்களில் எழுதப்பட்ட பொழுதிலும், அவர் கிறிஸ்துவை சார்ந்திருந்தார்! அதனால் அவர் நண்பர்களை இழந்தார். இருந்தாலும், அவருக்கு சரி என்று நிச்சயித்ததில் டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்தார், எதிர்த்தார், போராட்டம் நடத்தினார்.

சகல சமுதாயமும் ஒரு பெண்ணின் “கருகலைப்பு சரியானது” என்று அனுமதிக்க இருந்த சமயத்தில், டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் அதை மறுத்து ஒரு குழந்தையை கொலை செய்ய விடக்கூடாது என்று போராடினார். சாதாரண மனிதன் ஒரு தரும ஸ்தாபனத்திற்கு இரக்கப்பட்டு சிறந்த அளவு தானம் செய்வான், ஆனால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் ஒரு சதாரண மனிதனல்ல. அவரும் எனது தகப்பனாரும் ஒரு கருகலைப்பு மருத்துவ மையத்திற்கு முன்பாக உட்கார்ந்தார்கள். காவலாளர்கள் கனமான தடிகள் மற்றும் அடையாளங்களோடும் குதிரைகளில் வந்து பயமுறுத்தினதால் மற்றவர்கள் ஓடிவிட்டபொழுது, டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் தமது நம்பிக்கைகளில் உறுதியாக நின்றார். ஒரு குழந்தையின் ஜீவன் மற்றும் ஒரு பெண்ணின் உரிமை இவைகளுக்கு இடையில் அவர் அறிந்ததை கடைசிவரை போராடாமல் விடவில்லை. அவர் தமது சபையோடு சேர்ந்து சகல முயற்சிகளையும்செய்து இரண்டு கருகலைப்பு மருத்துவ மையங்களை மூடும்படி செய்தார். அவர் உயர்ந்து மற்றும் உறுதியாக நின்று கருகலைப்புக்கு விரோதமாக போராடினார்.

அதன்பிறகு நமது சபைக்காக போராட்டம் இருந்தது. ஒரு “பழைய தலைவர்” நமது சபையை விட்டுப் போனார். அவருடைய தூண்டுதலால், 400 உறுப்பினர்கள் நமது சபையை விட்டுப் போய்விட்டார்கள். நமது சபை கட்டிடம் ஏறக்குறைய காலியானது. இந்தச் சபை ஏறக்குறைய திவாலானது. ஒரு பிரபலமான பிரசங்கியார் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களை இதற்குத் தப்பிக்கொள்ளும்படி அழைத்தார், ஒரு பெரிய சபர்பன் சபைக்குப் போதகராக அவரை மாறும்படி கேட்டுக்கொண்டார். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களை மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலை போன்று இருக்கும் நிலையிலிருந்து வெளியே குதிக்கும்படி அவர் தருணம் கொடுத்தார்! அவர் சொன்னார், “வெளியேவர இதுதான் உனக்குக் கடைசி தருணம்.” அநேக போதகர்கள் போய்விட்டார்கள். ஆனால் விடப்பட்ட உறுப்பினர்களோடு சபை பண நெருக்கடியில் இருந்தபொழுது – டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் நிலைத்திருந்தார்! இந்த ஸ்தல சபைக்காக டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் போராட சித்தமாக இருந்தார். அவருடைய ஆவிக்குரிய தைரியம் மற்றும் தங்கள் நேரம் மற்றும் பணத்தைக் கொடுத்த உண்மையுள்ள மக்கள் இருந்த காரணத்தால், நாம் இங்கே லாஸ் ஏன்ஜல்ஸின் மையமான இடத்தில் ஒரு சபையாக இருக்கிறோம்! மேற்கத்திய நாகரிகத்தின் யுத்தத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் ஹிட்லரை எதிர்த்ததுபோல ஏற்கமுடியாமையிலிருந்த சவாலை ஏற்று அவர் தைரியமாக தங்கி இருந்தார்.

ஸ்தல சபையின் முக்கியத்துவத்தால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் உணர்த்தப்பட்டார். இந்த சபையின் வெற்றிக்காகவே தனது முழுவாழ்க்கையும் என்று டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் அடிக்கடி சொன்னார். அவர் இந்தச் சபைக்கு மட்டுமல்ல, உலக முழுவதிலுமுள்ள சபைகளுக்காக, ஆழமான அன்பு கொண்டிருந்தார். இந்தச் சபையின் வல்லமை அவரின் அன்பில் இருக்கிறது. இந்தச் சபையின் ஜீவனில் அவருடைய அடையாளம் இணைந்திருக்கிறது. கிறிஸ்துவுக்காக மற்றும் சபையின் சூப்பர் ஸ்டார் வீரராக, அரசியல் தந்திரியாக, மற்றும் வெற்றிவீரராக ஒரே மன உறுதியோடு இருந்தார். சபை கிறிஸ்துவின் மணவாட்டி என்று அவருக்குத் தெரியும், மற்றும் அதனால் அவர் ஜெபிக்கிறார், போராடுகிறார், மற்றும் சபையின் நன்மைக்காக பிரசங்கிக்கிறார்.

அவரை சிலர் அங்கிகரிக்காமல் மற்றும் சந்தேகப்பட்டாலும், தேவனுக்கு உண்மையாக இருந்த அநேக பிராடஸ்டென்ட் தலைவர்கள் அவரை பாராட்டினார்கள் மற்றும் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்குத் துணைசெய்தார்கள். அவர்களில் சர்வதேச பிரபல சுவிசேஷகர் மற்றும் “தி பைபிள் எவான்ஜிலிஸ்டின்,” நீண்டகால எடிட்டராக இருந்த டாக்டர் ராபர்ட் எல். சம்னார் அவர்களும் ஒருவராகும். 20ம் நூற்றாண்டின் முன்னணி கிறிஸ்தவர்களை சூழ்ந்தவரான, டாக்டர் சம்னார் உண்மையான தேவமனிதர்களை அறிந்திருந்தார். டாக்டர் சம்னார் அவர்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களைப்பற்றி எழுதினார்,

“டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள், தைரியமாக சர்வதேச அளவில் ஒரு நிறுவப்பட்ட சுவிசேஷத்தை பிரசங்கிப்பவராக, சுவிசேஷகராக, வேதத்தை போதிக்கும் சபையை நிருவுபவராக பொல்லாத நகரமாகிய லாஸ் ஏன்ஜல்ஸின் இருதய பாகத்தில் அதை வைத்திருக்கிறார். வேறொன்றுக்காகவுமல்ல, மற்ற மிஷனரிகளோடு சேர்ந்து விலகி சப்ஹர்புக்கு போகாமல் இருப்பதற்காக நான் அவரை பாராட்டுகிறேன்… அவரது எதிரிகள் அனைவரும் அவருக்கு விரோதமாக இருந்தாலும், அவருக்கு உணர்த்தப்பட்ட சத்தியத்திற்காக விருப்பத்தோடு நிற்பதற்காக அவரை நான் பாராட்டுகிறேன் மற்றும் விரும்புகிறேன். ராபர்ட் லிஸ்லீ ஹைமர்ஸ் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு கிறிஸ்தவ ஊழியக்காரராகும்! அமெரிக்காவின் அதிக பொல்லாத நகரங்களில் ஒன்றான மைய நகரத்திலிருந்து, அவர் ஒரு சர்வதேச ஊழியத்தை – ஸ்தல சபையின் அளவில் நிர்வாகித்து வந்தார், அவரது பணிகள் “லைவ்வாக” ஸ்பானிஸ் மற்றும் சீன மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.”

அநேக பத்தாண்டுகளாக சுவிசேஷகராக இருந்தவரான டாக்டர் சம்னார் அவர்கள், டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுடைய மகத்தான பங்கின் பலத்தை மற்றும் வாழ்க்கை குணாதிசயத்தை மற்றும் ஊழியத்தை அங்கிகரித்தார்!

டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் ஒரு தரிசனத்தின் மனிதர். மற்ற அனைத்துவிதமான நம்பிக்கைகளும் தோற்றுப் போனாலும், கஷ்டமான காலங்களிலும்கூட தேவன் மகத்தான காரியங்களை செய்யமுடியும் என்று அவர் விசுவாசிக்கிறார். உலகெங்கிலும் உள்ள போதகர்கள் மற்றும் மிஷனரிகளுக்காக அவர் ஒரு வெப்சைட்டை உண்டாக்கி போதனைகள் மற்றும் போதனை உபகரணங்களை வழங்கி வருகிறார். இப்படிப்பட்ட திறமையான காரியங்களை இதற்கு முன்பாக ஒருவரும் முயற்சிக்கவும் மற்றும் நாம் அதைப்பற்றி கேள்விப்படவுமில்லை. இந்த பெரிய வேலைக்கு ஏற்றபடியாக, பலநாடுகளுக்கு வித்தியாசமான விதத்தில் முயற்சித்து, அவரது ஸ்டைலை மாற்றியும் போதனைகளை தயார் செய்து அனுப்புகிறார்.

அவருடைய ஊழியத்தின் பெரும்பகுதி, டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் ஒரு வெளிக்குறிப்பிலிருந்து பிரசங்கித்தார். இருந்தாலும், அவருடைய போதனைகள் பிறநாடுகளிலிருக்கும் வேதாகமம் அல்லது வேதாகம போதனைகள் கிடைக்கப் பெறாத கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால் அவரது போதனைகளை வார்த்தைக்கு வார்த்தை எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்தார். நீண்ட நெடுங்காலமாக ஊழியம் செய்த அநேக பிரசங்கிகள் தாங்கள் ஆயத்தம் செயதவைகளை மாற்றமாட்டார்கள், ஆனால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் ஒரு தரிசனத்தின் மனிதர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் போதனை பிரதிகள் உலகத்தின் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ளவர்கள் வாசிக்கும்படியாகவும் மற்றும் அவருடைய வெப்சைட் 2016ல் மட்டும் ஒன்றரை மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

எப்பொழுதுமாக ஒவ்வொரு பின்னனியிலிருக்கும் மக்கள்மீது கரிசனை கொண்ட போதகராக, டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் மற்ற மொழிகளில் அவரது போதனைகளை மொழிபெயர்ப்புச் செய்ய ஆரம்பித்தார். முதலாவதாக, அவரது போதனைகள் ஒருசில மொழிகளில் மட்டும் மொழிபெயர்க்கப்பட்டன. எப்படியோ, டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் தமது தரிசனத்தில் தொடர்ந்து மொழி தடையில்லாமல் அதை உலகமுழுவதிலும் பரவசெய்தார்.

இன்று, டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் போதனை பிரதிகள் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன! இந்தப் போதனைகள் மிஷனரிகளுக்கும் மற்றும் போதகர்களுக்கும் மூன்றாவதான உலகத்தில் ஆசீர்வாதமான ஒரு உதவியாக இருக்கின்றன. அவைகள் மக்களை எழுப்புதல் அடையவும் மற்றும் ஆத்துமாக்களுக்கு இயேசுவின் தேவையை உணர்த்தவும், மற்றும் சிலர் அந்தப் போதனைகளை படிப்பதன் மூலமாக மாற்றப்பட்டும் இருக்கிறார்கள். போதனை பிரதிகள் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளதன் மூலமாக இது தரிசனம் மற்றும் பிரதிஷ்டை பெறுகிறது, ஆனால் இது கிறிஸ்தவ உலகத்தில் வல்லமையான ஒரு தாக்கத்தை உண்டாக்க தேவனால் உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்தப் போராட்டத்தின் தன்மை எப்படிப்பட்டதாக இருந்தாலும் பரவாயில்லை, டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் தேவனுடைய அரங்கத்தில் கலக்குகிற மனிதனாக இருக்கிறார். மற்ற அநேகர் அதை மறந்தாலும் அவர் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கித்தார். அவர் பழைய பாணியில் இரக்கத்தோடு மற்றும் மற்ற அநேகர் விட்டுவிட்ட நிலையில் நெருப்பாக பிசங்கித்தார். தேவனுடைய கிருபை மற்றும் வல்லமையின் மூலமான இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள மெய்யான மாறுதலை அவர் விசுவாசிக்கிறார் மற்றும் மற்ற எதையாவது குறைவானதை கவனிப்பதால் நரக அபாயம் உண்டு என்பதை உணர்த்தினார்.

ஜெபம் ஒரு பெயரளவில் மாறிப்போன காலத்தில், டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் ஜெபத்திற்குப் பதில் கொடுக்கும் தேவனுடைய வல்லமையை விசுவாசிக்கிறார். மற்ற சபைகளிலிருந்து உறுப்பினர்களை திருடி அதிக காணிக்கையை பெற நம்பும் இந்தக் காலத்தில், டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் உலகத்திலிருந்து இளம் மக்களை சுவிசேஷத்தின் மூலமாக கொண்டு வருவதை விசுவாசிக்கிறார். ஒன்றன்பின் ஒன்றாக மற்றவர்கள் ஊழியங்களை மூடிக்கொண்டு வரும்பொழுது, டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் சபையின் முக்கியத்துவத்தையும் மற்றும் மதிப்பையும் விசுவாசிக்கிறார். மற்ற அநேகர் ஜீவன் மற்றும் வல்லமை இழந்துபோன பிணசரிரத்தைப் போன்றவைகளைக் கொண்டு போஷிக்கும்போது, டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் ஜீவனுள்ள கிறிஸ்தவத்தை விசுவாசித்து மற்றும் அதற்காக போராடுகிறார்.

இன்னும் சில நேரத்தில் டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் வந்து பிரசங்கிப்பார்கள். ஆனால் அதற்கு முன்னதாக திரு. கிரிப்பித் வந்து டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரியமான பாடலாகிய, “தொடர்ந்து செல், கிறிஸ்தவ போர்வீரனே” என்ற பாடலை பாடுவார்கள்.

ஞாயிறு இரவுக்காக போராட்டம்
(போராட்ட அழுகைகள் வரிசையில் முதலாவது)

THE BATTLE FOR SUNDAY NIGHT
(NUMBER ONE IN A SERIES OF BATTLE CRIES)
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஜனவரி 15, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Sunday Morning, January 15, 2017

“பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனா யிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது” (யூதா 3).

இன்று காலையில் நாம் யுத்த அழுகைகளில் ஒரு வரிசையை ஆரம்பிப்போம். அவைகளில் நாம் “விசுவாசத்தில் ஊக்கமாக நிறைவடைவோம்”. அநேக பொய்ப் போதனைகளுக்கும் மற்றும் பழக்கங்களுக்கும் எதிராக சபைகளில் பேசுவோம்.

1963ல் ஜனாதிபதி ஜான் எப். கெனடி அவர்கள் சர்ச்சில் அவர்களை ஐக்கிய நாடுகளின் முதலாவது மதிப்புக்குரிய பிரஜையாக்கினார். பழைய பெருமைமிக்க யுத்தத் தலைவரைப்பற்றி ஜனாதிபதி சொன்னார், “அவர் ஆங்கில மொழியை திரட்டி அதை யுத்தத்திற்கு அனுப்பினார்.” இரண்டாவது உலக யுத்த சமயத்தில் அவருடைய ஒரு பெரிய பிரசங்கத்தில் அவர் சொன்னார், “உலகத்தில் பெரிய சம்பவங்கள் நடைபெறும்பொழுது, எல்லா மனித ஆத்துமாவும் கலங்குகிறது, அவர்களுடைய இருதயங்களை மற்றும் வீடுகளை, வசதிகளை, சொத்துக்களை மற்றும் மகிழ்ச்சியின் காரியங்களை விட்டுவிட்டு உடனடியாக பயங்கரமான மற்றும் எதிர்க்க முடியாத உணர்ச்சி வேகத்தில் இறங்குகிறார்கள், நாம் மிருகங்கள் அல்ல என்று அறிவோம், மற்றும் நேரம் மற்றும் இடத்தில் சில காரியங்கள் நடைபெறுகின்றன, மற்றும் இடம் மற்றும் நேரத்திற்குப் பின்னாலும், அவை, நாம் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும், அதை நமது கடமை என்று சொல்லுவோம்.”

நாமும் அநேக யுத்தங்களில் இருந்திருக்கிறோம். அதற்காக, பங்களித்தோம், மற்றும் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு சதரன் பாப்டிஸ்டு சபைகளுக்கும் செய்தி அனுப்பினோம் செமினரிகளில் மணவர்களுக்குப் பிரசங்கிகளால் பயங்கரமான பொய்ப் போதனைகள் போதிக்கப்படுகின்றன. எனது இளம்மனைவி இஸ்பேனிக் ஆறுமாத கர்ப்பினியாக இருக்கும்பொழுது இந்த இலக்கியத்தை பென்சில்வேனியா, பிட்டிஸ்பாருவில் சதர்ன் பாப்டிஸ்டு கன்வன்ஷனில் கொடுத்தாள். அவள் சிறியவளாக கனமான குழந்தை பாரத்தோடு இருந்ததை பார்த்தபொழுதும், வளர்ந்த மனிதர்கள் இலக்கியத்தால் கொதிப்படைந்தவர்களாக மெய்யாகவே அவளுடைய முகத்தில் துப்பினார்கள். நாங்கள் அறைக்குத் திரும்பி சென்றபொழுது எனது மனைவி நான் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியைக் கேட்டாள். அவள் சொன்னாள், “ராபர்ட், இவர்கள் எப்படி உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்க முடியும்?” அவர்களில் அநேகர் சதரன் பாப்டிஸ்டுகளாக அல்ல ஆனால் நரகத்திலிருந்து வந்த பிசாசுகளைப்போல காணப்பட்டார்கள். அவள் கேள்விகள் கேட்டதினால் அவள்மீது கோபப்பட்டார்கள் செமினரி புரோப்பசர்கள் தங்கள் செமினரியில் சொன்னார்கள் இயேசுவின் சரிரம் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழவில்லை – ஆனால் காட்டு நாய்களால் தின்னப்பட்டது, மோசே போன்றவர்கள் இல்லை, பவுலின் நிருபங்கள் பொய்யானவைகள், அவைகள் அப்போஸ்தலனால் எழுதப்பட்டவைகள் அல்ல என்று. ஆனால் நாங்கள் தொடர்ந்து இலக்கியங்களுக்காக செலவுசெய்து மற்றும் மெயில் செய்து வருடா வருடம் அனுப்பிக் கொண்டே இருந்தோம் – இறுதியாக நாங்கள் வெற்றிபெற்றோம் மற்றும் அந்த பிசாசு பிடித்த பொய்ப் போதகர்கள் அமெரிக்காவின் சதரன் பாப்டிஸ்டு செமினரிகளால் சுட்டெரிக்கப்பட்டார்கள். தேவனுடைய உதவியினால், நாங்கள் அந்த யுத்தத்தில் வெற்றி பெற்றோம்!

அபார்ஷன் மூலமாக குழந்தைகளை கொலை செய்யாதபடி நிறுத்த மற்ற குழுக்கள் பணம் சேகரித்தபொழுது (அதை அவர்கள் சொந்த பாக்கட்களில் போட்டுக் கொண்டார்கள்) – அவர்களுக்காகவே அதை சேர்த்தார்கள், நமது சபை அனுப்பினது நமது மக்கள் மற்றும் நமது இரத்தத்தால் நனைக்கும் அந்த இரண்டு கிளினிக்களை மூடிப்போட்டார்கள்! ஒரு சமயத்தில் டாக்டர் கேஹான் மற்றும் நான் அப்படிப்பட்ட ஒரு கிளினிக்கின் வாசலில் உட்கார்ந்தோம் – மற்றும் போலீஸ்காரர்கள் குதிரைகளின் மேல் வந்து எங்களை சூழ்ந்துகொண்டு பயமுறுத்தி மற்றும் கைவிலங்கு போட்டுச் சிறைச்சாலைக்குக் கொண்டு போவதாக சொன்னார்கள். ஆனால் நாங்கள் அசையாததை அவர்கள் கண்டு, அவர்கள் தங்கள் குதிரைகளைத் திருப்பி போய்விட்டார்கள். மறுபடியுமாக, தேவனுடைய உதவியினால், நாங்கள் அந்த யுத்தத்தில் வெற்றிபெற்றோம்!

லியூ வாசர்மேன், யுனிவர்சல் பிக்சர்சின் தலைவர், ஒரு அசுத்தமான படத்தை உற்பத்தி செய்தார், கிறிஸ்து மகதலேனா மரியாளோடு பால் உறவு கொள்வதாக எடுக்கப்பட்டது, நாங்கள் பெவர்லி ஹில்ஸ்சில் இருக்கும் வாசார்மேனின் வீட்டுக்கு முன்பாக கிளர்ச்சி செய்வதற்காக சென்றோம். எங்களது கிளர்ச்சி உலகின் எல்லா செய்திதாள்களிலும் முதல் பக்கத்தில் வந்தது, இங்கிலாந்து, ஸ்பெயின், இஸ்ரேல், மற்றும் பிரான்ஸ், இன்னும் கிரேக்கிலும் அந்த படத்துக்கு விரோதமாக கலகம் ஏற்பட்டது! நமது வித்தியாசமான கலகங்கள் எல்லா தொலைகாட்சி செய்திகளிலும் இரண்டு வாரங்களுக்கு – ஒவ்வொரு இரவிலும் ஒளிபரப்பப்பட்டன. எங்களது மெய்பித்துக்காட்டுதல் மூலமாக யுனிவர்சல் பிக்சர்ஸ் மிகவும் பயமடைந்தார்கள் அவர்கள் கிறிஸ்துவை தாழ்வுபடுத்தும் வகையில் அதன்பிறகு ஒருபோதும் படம் உற்பத்தி செய்யவில்லை! மறுபடியுமாக, தேவனுடைய உதவியினால், நாங்கள் அந்த யுத்தத்தில் வெற்றிபெற்றோம்!

பீட்டர் எஸ். ராக்மேன் என்பவர் கிங் ஜேம்ஸ் பைபிளில் வார்த்தைகள் தவறானவைகளாக இருக்கின்றன என்று போதிக்க ஆரம்பித்தார், மேலும் கிரேக்க மற்றும் எபிரெய மொழிகளிலிருந்து திருத்தப்பட்டுள்ளன என்றும், ராக்மேனின் சமய பேதத்தினால் நூற்றுக்கணக்கான சபைகள் சிதறிப்போயின. நான் “ராக்மேனிசம் எகஸ்போஸ்டு” என்ற ஒரு புத்தகத்தை எழுதினேன் – அது விரிவான அளவு சபைகளில் வினியோகிக்கப்பட்டது. இன்று அவைகளுக்கு இது ஏறக்குறைய ஒரு மரண அடியாகவே காணப்படுகிறது, அதிகபட்சம் அந்த புத்தகத்தின் காரணமாகவே, அதை எங்கள் வெப்சைட்டில் நீங்கள் படிக்கலாம் (www.sermonsfortheworld.com). பிறகு, ஆமாம், அதிலே ராக்மேனிசத்தின் பிசாசின் போதனையிலிருந்து, தேவனுடைய உதவியினால், நாங்கள் மறுபடியுமாக அந்த யுத்தத்தில் வெற்றிபெற்றோம்!

அதன்பிறகு ரிச்சார்டு ஆலிவாஸ் என்ற மனிதன் எங்களைவிட்டு 400 பேரை பிரித்து அவனோடு கொண்டுபோனான். நமது மக்கள் $16,000க்கு மேலாக ஒவ்வொரு மாதமும் இந்தக் கட்டிடம் மீட்கப்படும் வரையிலும், அவர்களது தசம பாகம் மற்றும் காணிக்கை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன், எங்கள் சபையை அழிக்க வேண்டும் என்ற ஆலிவாஸின் திட்டம் தடைபடுத்தப்பட்டது. மறுபடியுமாக, தேவனுடைய உதவியினால், நாங்கள் அந்த யுத்தத்தில் வெற்றிபெற்றோம்!

ஆனால் இன்று நாம் இன்னும் அதிக அபாயகரமான போராட்டத்தில் இருக்கிறோம் – ஒரு உள்ளான யுத்தம் இறுதியாக நமது சகல சபைகளையும் ஏறக்குறைய அழிக்கும்படியாக நடக்கிறது. கிறிஸ்துவின் ஊழியக்காரனாக அதற்கு விரோதமாக எச்சரிக்க வேண்டியது என்னுடைய கடமையாகும். அது நமது சபைகளை அழித்து நாசமாக்கிக் கொண்டிருக்கிறது. அது லவோதிகேயாவின் பொய்ப் போதனையாகும். அது ஞாயிறு மாலைகளில் நமது சபைகளில் கூட்டங்கள் நடத்தாமல் மூடவேண்டும் என்ற யோசனையாகும். இந்தப் பொய்யான மற்றும் அபாயகரமான போதனைக்கு விரோதமாக நாம் “தைரியமாய்ப் போராடவேண்டும்” (யூதா 3). நாம் முழுபலத்தோடு அதற்கு விரோதமாக போராடுவோம்.

மத்தேயு 25:5ல் இயேசு நமது சபைகளின் நிலைமையைக்குறித்த பரிபூரணமான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். மில்லியன் கணக்கான சுவிசேஷகர்கள் மற்றும் அடிப்படை கொள்கைகாரர்களும் நித்திரை மயக்கமாக தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக அருகில் நெருங்கிக் கொண்டிருக்கிறது, ஆனால் நமது சபைகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன! ஒரு சபைக்குபின் ஒரு சபையாக தங்கள் மாலைக் கூட்டங்களை மூடிக்கொண்டு வருவதை நாம் பார்க்கிறோம். இது கடைசி காலத்தின் ஒரு அடையாளம் என்று நான் உணர்த்தப்பட்டேன் – உறங்கும் சபைகள் தங்கள் கதவுகளை மூடுகின்றன – காலம் நெருங்கி வரும்பொழுது – நாம் அறிந்திருக்கிற உலகம் முடிவுக்கு வருகிறது). இயேசு சொன்னார்,

“மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்” (மத்தேயு 25:5.

தீர்க்க தரிசனம் நமக்கு விரோதமாக இருப்பதாக காணப்பட்டாலும் – நாம் தொடர்ந்து போராடுவோம் – சிலர் கவனித்து மற்றும் இரட்சிக்கப்படுவார்கள்.

பாப்டிஸ்டு மற்றும் ஒவ்வொன்றும் ஞாயிறு மாலை கூட்டங்களை மூடுவது தற்கால நவீன நடைமுறையாக இருக்கிறது. சதரன் பாப்டிஸ்டு மற்றும் இன்டிபென்டன்ட் பாப்டிஸ்டு, “புரோகரசிவ்” BBFI சபைகள், மற்றும் சில போப் ஜோன்ஸ் பண்டமென்டல் சபைகளும்கூட, ஞாயிறு காலை கூட்டங்களுக்குப் பிறகு கதவுகளை மூடுகின்றன – அமெரிக்காவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரைக்கும் இதே நிலை. ஞாயிறு மாலை கூட்டங்கள் கடந்தகால நிகழ்ச்சிகளாக விரைவில் மாறிக்கொண்டு வருகிறது.

இது நமது சபைகளுக்கு இருக்கும் ஒரு தீவிரமான வியாதியைக் காட்டுகிறது. இது நிச்சயமாக நேர்மறையான ஒரு அடையாளம் அல்ல. எந்தத் தீவிர வியாதியும், சரியாக தீர்மானிக்கப்படாவிட்டால் குணமாகாது என்று மருத்துவர் சொல்ல கூடும். இந்தப் போதனையில், ஒரு மருத்துவரைப்போல, நாம் நோயாளியை பரிசோதிப்போம் (ஞாயிறு மாலை கூட்டங்களை மூடும் சபைகள்) மற்றும் காரணத்தை கண்டறிவோம் – அதன்பிறகு ஒரு தீர்வை சொல்லுவோம் – ஒரு மருந்து மற்றும் ஒரு குணமாகுதல். இந்தச் சபைகளின் நோயை நான்கு வழிகளில் கண்டறிய முடியும்.

I. முதலாவதாக, ஞாயிறு இரவு கூட்டங்களை நமது சபைகளில் மூடுவது மட்டுமே சமீப காலத்தில் ஒரு பொதுவான பிராட்டஸ்டன்டு சபையில் இது நடைபெற்றது.

தி மெத்தடிஸ்ட்கள் ஞாயிறு மாலை கூட்டங்களை 1910 அளவில் மூட ஆரம்பித்தார்கள். தி பிரிஸ்பிடேரியன்கள் 1925 அளவில் ஞாயிறு இரவு கூட்டங்களை மூட ஆரம்பித்தார்கள். தி அமெரிக்கன் பாப்டிஸ்ட்கள் (தற்காலத்தில் நார்த்தரன் பாப்டிஸ்ட் என்று அறியப்படுகிறது) 1945 அளவில் ஞாயிறு மாலை கூட்டங்களை மூட ஆரம்பித்தார்கள். சதரன் பாப்டிஸ்ட் 1985 அளவில் இதை செய்தார்கள். மெத்தடிஸ்ட்கள், பிரிஸ்பிடேரியன்கள் மற்றும் அமெரிக்கன் பாப்டிஸ்டுகள் அனைத்தும் பண்டமென்டல் பாப்டிஸ்டு சபைகளைப்போல வேதத்தை விசுவாசிக்கும் சபைகள் என்பதை மனதில் கொள்ள வேண்டும் இந்த நடைமுறை ஆரம்பித்தபொழுது அந்த பிரிவுகளின் மத்தியில் “புரோகரசீவ்” பிரசங்கிகள் இருந்தார்கள்.

இன்று அந்த மெத்தடிஸ்ட்கள், பிரிஸ்பிடேரியன்கள் மற்றும் அமெரிக்கன் பாப்டிஸ்டுகள் அனைத்தையும் பாருங்கள்! அவர்களுடைய அங்கத்தினர்கள் வருடா வருடம் குறைகிறது. இந்த மூன்று பிரிவுகளிலும் 1900ல் இருந்து நூற்றுக்கணக்கில் ஆயரக்கணக்கில் அங்கத்தினர்களை இழந்தார்கள். அவைகளின் ஆயிரக்கணக்கான சபைகள் முழுவதும் மூடப்பட்டன. முடிவில் ஞாயிறு மாலை கூட்டங்கள் அவர்களுக்கு உதவி செய்யவில்லை. இது ஒரு அழிவின் சாய்தளத்தில் கீழாக இறங்கும் படியாகும்.

இருந்தாலும் இன்று அநேக இன்டிபென்டன்ட் பாப்டிஸ்டுகள் நினைக்கிறார்கள் அவர்கள் “வெட்டு முனையில்” இருப்பதாக சில புதிய புரோகரசிவ்கள் நினைத்தார்கள் அவர்கள் அந்த மெத்தடிஸ்ட்கள், பிரிஸ்பிடேரியன்கள் மற்றும் அமெரிக்கன் பாப்டிஸ்டுகள் பின்பற்றின அதேபாதையை பின் தொடர்ந்தபோது அழிவு வந்தது. கலிபோர்னியா சான் டிகோ அருகில், ஜிம் பாய்ஸீ என்ற, ஒரு இன்டிபென்டன்ட் பாப்டிஸ்டு பிரசங்கி சொன்னார், “நான் அடிப்படையான அடியெடுத்திருக்கிறேன்! நான் நமது ஞாயிறு மாலை கூட்டத்தை மூடிவிட்டேன்!” அது அவருடைய சபைக்கு உதவி செய்யும் என்று நினைக்கிறார், ஆனால் நான் நினைக்கிறேன் அது அவருடைய சபைக்குத் தீமையை மட்டுமே கொண்டுவரும். அப்படிப்பட்ட பிரசங்கியை நான் அணைத்து போடும் மனிதன் என்று சொல்லுவேன் – கிறிஸ்துவின் காரியங்களில் ஒரு துரோகி! இந்த மனிதர்கள் செய்வது என்னவென்றால் நான் குறிப்பிட்டதுபோல சபைகளின் “மெயின்லைனில்” செய்யப்பட்டது போலதான் இது. இந்த சதரன் பாப்டிஸ்ட்கள் இப்பொழுது 200,000 மக்களை ஒவ்வொரு வருடமும் இழந்து போகிறார்கள். இதற்கு ஒரு காரணம் இவர்கள் அநேக சபைகளை ஞாயிறு இரவில் மூடிவிட்டார்கள்.

வின்ஸ்டன் சர்ச்சில் ஒருசமயம் சொன்னார், “வரலாற்றை படியுங்கள்! வரலாற்றை படியுங்கள்!” அவர் சொன்னார், “இன்னும் பின்னால் உங்களால் பார்க்க முடியும், இதற்கு முன்னால் பார்க்க விரும்புவீர்கள்.” அதனால்தான் “மெயின்லைனில்” என்ன நடந்தது என்று அறிந்து கொள்ளுவது அவசியமாகும் புராட்டட்ஸ்டன்ட் மற்றும் பாப்டிஸ்ட் சபைகளைக் கடந்த காலத்தில் ஞாயிறு இரவில் மூடிவிட்டார்கள். எப்படியாக அவர்களுக்கு குறைவு, அவமரியாதை, மற்றும் இறுதியாக அவர்களுக்கு மரணம் வந்தது என்பதை பார்ப்பது முக்கியமாகும்.

இன்று, இந்தச் சடங்காசார “மெயின்லைன்” சபைகள் கடந்த காலத்தில் இருந்ததைவிட சிறிய மீதமானவர்களாக இருக்கிறார்கள். முதலாவது அவர்கள் ஜெபக்கூட்டத்தை விட்டார்கள். பிறகு மாலை கூட்டத்தை விட்டார்கள். இப்பொழுது அவர்கள் ஆவியை இழந்துவிட்டார்கள்! இது பாப்டிஸ்ட்கள் மற்றும் அதே பாதையை பின்பற்றுகிறவர்கள் மத்தியிலும் நமது நாட்களில் வெளிப்படையான விளைவை உண்டாக்கும்.

II. இரண்டாவதாக, ஞாயிறு இரவு கூட்டங்களை நமது சபைகளில் மூடுவது “டிசிசனிஸம்” விளைவுகளை உண்டாக்கும்.

நாம் குறிப்பிட்டதுபோல நமது புத்தகமாகிய, Today’s Apostasy, இல் சார்லஸ் ஜி. பின்னி பெரிய புராட்டட்ஸ்டன்ட் மற்றும் பாப்டிஸ்ட் சபைகளில் “டிசிசனிஸம்” 19ம் நூற்றாண்டின் மத்தியில் பிரபலமாக்கினார். பின்னியின் “டிசிசனிஸம்” வேதாகம மாறுதல் மனித ஆத்துமாவில் தேவனுடைய வேலையினால் “கிறிஸ்துவுக்காக தீர்மானம்” எடுப்பதால் அவன் இரட்சிக்கப் படுகிறான் என்பது மாற்றப்பட்டது. ஒரு வெறுமையான ஜெபம் அல்லது சரீரபிரகாரமான மறுமொழி பழங்கால யோசனையாக வம்சாவழியாக வந்தது. அதன் விளைவாக, புராட்டட்ஸ்டன்ட் மற்றும் பாப்டிஸ்ட் சபைகளில் விரைவாக அங்கத்தினர்கள் மில்லியன் கணக்கில் இழக்கப்பட்ட மக்கள் நிறைய ஆரம்பித்தார்கள். மாற்றப்படாத மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு தரம் சபைக்குப் போக விரும்பவில்லை – அதனால் பின்னியின் முறை பின்பற்ற ஆரம்பித்த பிறகு சில ஆண்டுகளில் ஞாயிறு இரவு கூட்டங்கள் இந்தச் சபைகளில் மறைந்து போயின. மாற்றப்படாத மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவில் சபைக்கு வரமாட்டார்கள்! இதே காரியம் சரியாக அமெரிக்கா முழுவதுமாக “கன்சர்வேட்டிவ்” சபைகளில் மறுபடியுமாக நடைபெறுகிறது.

நான் வாலிபனாக இருந்தபொழுது கலந்துகொண்ட எந்த பாப்டிஸ்டு சபையிலும் ஞாயிறு இரவில் ஒவ்வொருவரும் கலந்து கொள்ளவில்லை. குறைவாக ஒப்புக்கொடுத்தார்கள், அல்லது ஒருபோதும் மெய்யாக மாற்றப்பட்டிருக்க மாட்டார்கள், அங்கே இருக்கவும் மாட்டார்கள். ஆனால் எப்படியோ நாங்கள் தொடர்ந்து சென்றோம். ஞாயிறு மாலை கூட்டங்கள் எனது வாலிபத்தில் எப்பொழுதுமாக சிறந்த மிக சிறந்த கூட்டங்களாக இருந்தன. பாடல்கள் நன்றாக இருந்தது. போதனைகள் பலமாக இருந்தது. ஏனென்றால் இழக்கப்பட்ட சபை ஆட்கள் ஒவ்வொருவருடைய ஆவியை கீழே இழுக்க அங்கே இல்லை. கடந்த அறுபது ஆண்டுகளை திரும்பி பார்த்தால், அதைதான் நான் நினைக்கிறேன்.

இன்று நம்முடைய சொந்த சபையில், ஞாயிறு இரவில் ஒவ்வொருவரும் திரும்பி வருகிறார்கள். அவர்கள் அப்படியாக செய்ய பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நாம் மிகுந்த பயத்துடன் இருந்து ஒவ்வொருவரும் நமது சபையில் அங்கத்தினர் ஆவதற்கு முன்பாக மெய்யாக மாற்றப்பட்டார்கள் என்ற நிச்சயத்தோடு தவறாமல் அவர்களை கவனித்தபடியினால் அப்படி வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மெய்யாக மாற்றப்பட்ட ஒருவரை காத்திருக்கும்படி செய்து பிறகு வேறொரு இழக்கப்பட்ட நபருக்கு, ஞாயிறு இரவு கூட்டங்களுக்கு நமது சபைக்கு வராதவர்களுக்கு விரைவில் ஞானஸ்நானம் கொடுக்கமாட்டேன்!

“டிசிசனிஸம்” நமது சபை பதிவுகளில் இழக்கப்பட்ட மக்களை நிறப்பி இருக்கிறது – மற்றும் இப்பொழுது அதற்கான கிரயத்தை செலுத்துகிறோம். அவர்கள் ஞாயிறு இரவு கூட்டங்களுக்கு வரவிரும்ப மாட்டார்கள் ஏன் என்றால் அவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள்! கடந்த இரண்டு வருடங்களில் சதரன் பாப்டிஸ்ட்கள் ஏறக்குறைய அரை மில்லியன் மக்களை இழந்து போனதற்கு இது ஒரு காரணமாகும்!

III. மூன்றாவதாக, ஞாயிறு இரவு கூட்டங்களை நமது சபைகளில் மூடுவதால் அநேக எதிர்பாராத விளைவுகள் நிகழும்.

நான் குறிப்பிடபோவதற்கும் அதிகமான பாதகமான விளைவுகள் ஏற்படும் என்று நான் நிச்சயமாக சொல்லுகிறேன். ஆனால் மனதில் வந்த சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

1. ஞாயிறு இரவு கூட்டங்களைச் சபைகளில் மூடுவது தங்கள் மக்களை வழிவிலகி போகவைக்கும் மற்ற சபைகளுக்குப் போக கதவைத் திறப்பதாகும். சமீபத்தில் ஞாயிறு இரவு கூட்டங்களை மூடின ஒரு பிரசங்கியார் சொன்னார், “மற்றசபைகளுக்குச் செல்ல அது என்னை விடுதலை ஆக்கியிருக்கிறது.” அது அற்புதம் என்று அவர் நினைத்தார் ஞாயிறு மாலையில் மற்ற பிரசங்கிகளின் பிரசங்கங்களைக் கேட்க முடிகிறது. ஆனால் நான் நினைத்தேன், “அவருடைய மக்கள் நிலைமை என்னாவது? அவர்களில் சிலருக்கு அதேயோசனை வராதா?” அந்த மக்களுக்கு என்ன நடக்கும்? நினைவில் கொள்ளுங்கள், சிறந்த மக்கள் ஞாயிறு இரவில் சபைக்குப் போக இன்னும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் எங்கே போவார்கள்? அவர்கள் அந்த தெருவில் இருக்கும் கரிஸ்மேடிக் சபைகளுக்குப் போவார்களா? அவர்களை தூரமாக கொண்டுபோகும் ஒரு புதிய எவான்ஜிலிகல் வேத ஆசிரியன் “புத்திசாலிதனமான” செய்தியினால், அவனுடைய மூலையில் இருக்கும் சபைக்கு கொண்டு போவானா? ஞாயிறு இரவு கூட்டங்களை சபைகளில் மூடுவதால் நீங்கள் – சில சிறந்த மக்களை இழந்துபோவீர்கள் என்று நான் சொல்லுகிறேன்.

2. ஞாயிறு இரவு கூட்டங்களைத் தங்கள் சபைகளில் மூடுவதால் அந்த வாரத்தில் ஒரு பெரிய சுவிசேஷ ஊழிய தருணத்தை இழந்துவிடுவார்கள். ஞாயிறு இரவு கூட்டங்களை தமது சபையில் மூடின ஒரு பிரசங்கியார் என்னிடம் சொன்னார். தமது சபையில், காலை கூட்டத்திற்குப் பிறகு மக்களுக்கு சேண்டுவிச் கொடுத்து ஆடிடோரியத்திற்கு அழைத்து சென்று வேறு கூட்டம் நடத்துவார்களாம். பின்னர் 2 மணிக்கு வீட்டிற்கு அனுப்பி விடுவார்களாம். அதனால், “அவர்கள் தேவையான அளவிற்கு வேத அறிவு பெற்றுக் கொள்ளுகிறார்கள்” என்று சொன்னார். ஞாயிறு இரவு கூட்டத்தின் ஒரே நோக்கம் “அவர்களுக்கு வேதத்தை அதிகமாக கொடுப்பது”? என்றால் இல்லை, அப்படி இல்லை! அநேக ஆண்டுகளாக நல்ல சபைகளில் ஞாயிறு இரவு சுவிசேஷ கூட்டம் நடந்தது. கடந்தகால பாப்டிஸ்டு சபையின் மிகப்பெரிய உறுதியான பாய்ன்ட் இதுதான் என்று நான் விசுவாசிக்கிறேன். மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் பிறரை மாலை கூட்டத்திற்குக் கொண்டு வந்து சுவிசேஷத்தை கேட்கும்படி உற்சாகப்படுத்தப்பட்டார்கள். ஞாயிறு பிற்பகலில் ஒரு இழக்கப்பட்ட நபரை “சுற்றி வளைத்து” மாலை கூட்டத்திற்கு அழைத்து வரலாம். காலை கூட்டத்திற்குப் பிறகு நீங்கள் மக்களுக்கு ஆகாரம் கொடுக்கலாம், தொடர்ந்து அதிக வேத ஆராய்ச்சி செய்யலாம், ஆனால் ஞாயிறு இரவுகளில் நமது பாப்டிஸ்டு சபைகளை கட்ட உதவி செய்யும் சுவிசேஷ ஊழியத்தை அது அழித்துவிடும்! எனது நண்பராகிய ஒரு போதகர் என்னிடம் சொன்னார் அவருடைய சபையில் இருந்த உறுதியானவர்களில் ஒருவர் ஞாயிறு இரவு கூட்டங்களை தமது சபையில் “மூடினதால்” இழக்கப்பட்டார் என்று சொன்னார். அவரைப்போல எத்தனை மக்களை நீங்கள் தவறவிடுவீர்கள் ஞாயிறு இரவு கூட்டங்களை உங்கள் சபைகளில் மூடுவதால் அந்த ஒரு பெரிய சுவிசேஷ ஊழிய தருணத்தை இழந்துவிடுவீர்களா?

3. ஞாயிறு இரவு கூட்டங்களைத் தங்கள் சபைகளில் மூடுவதால் ஒரு பெரிய சுவிசேஷ ஊழியமாகிய வாலிபர்களை சந்தித்தல் மற்றும் சீஷராக்குதலின் தருணத்தை இழந்துவிடவார்கள். வாலிபர்கள் இரவில் வெளியே போகவிரும்புவார்கள். நினைவில் கொள்ளுங்கள், ஞாயிறு இரவு கூட்டங்களைச் சபைகளில் மூடுதல் வயதானவர்களுக்கு ஏற்றது, அவர்கள் வீட்டிலிருக்கவும், தொலைக்காட்சி பார்க்கவும், மற்றும் விரைவில் படுக்கைக்குப் போகவும் விரும்புவார்கள். ஞாயிறு இரவு கூட்டங்களை வயதானவர்களும் விவாகமானவர்களும் விரும்ப மாட்டார்கள். ஆனால் வாலிபர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பார்கள். ஸ்தல சபையானது இளம் வாலிபர்களுக்கு “இரண்டாவது வீடாக” இருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். நமது சபையின் எதிர்காலம் அவர்களிடம் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். வயதானவர்கள் முன்னதாக வீடுகளுக்குப் போக விரும்பலாம். ஆனால் சபையின் எதிர்காலம் வாலிபர்களின் கையில் இருக்கிறது. ஞாயிறு இரவு கூட்டங்களை இந்த வாலிப இளஞர்களை மனதில் கொண்டு சிறப்பாக அவர்களுக்காக அமைக்கப்பட வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஞாயிறு இரவு கூட்டங்களில் வாலிபர்களுக்காக செயல்படுத்தப்பட்டால், அவர்களுடைய கவனத்தை கவரலாம், அவர்களை கிறிஸ்துவுக்காக வெற்றி கொள்ளலாம், மற்றும் ஸ்தல சபையின் பணிகளுக்காக பயிற்சி அளிக்கலாம். இன்னொரு பக்கம், ஞாயிறு இரவு கூட்டங்களை மூடினால், நமது சபைகளில் விரைவில் கையளவான நரைமயிரோடுள்ள கிழவிகளை மட்டுமே காணமுடியும், ஞாயிறு காலை ஒரு மணி நேரம் கூட்டம் நடத்தி கட்டடத்தை காலியாக்கிவிட்டு – மூலையை சுற்றி இருக்கும் மெத்தடிஸ்டு சபையைபோல – அது ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக ஞாயிறு இரவு கூட்டங்களை கைவிட்டது. ஞாயிறு மாலை கூட்டங்களை மூடிவிடும் சபைகளுக்கும் இன்னும் சில வருடங்களில் அதே நிலைமை தான் இருக்கும் இப்பொழுதிருந்து வாலிப மக்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஞாயிறு இரவும் அவர்களுக்காக போதனை செய்யாவிட்டால் நமது நிலைமையும் அப்படியே ஆகும் !

IV. நாலாவதாக, ஞாயிறு இரவு கூட்டங்களை தங்கள் சபைகளில் மூடினால் அது உண்மையான எழுப்புதலை நம்மிடமிருந்து நிருத்தி விடும்.

இந்தத் தலைப்பை என்னால் சிறிது தொடமட்டுமே முடியும், ஆனால் எழுப்புதல்களின் வரலாற்றை நான் போதுமான அளவு படித்திருக்கிறேன். அதை அறிந்துகொள்ள அவை அடிக்கடி இரவில் ஏற்படுகிறது. மெய்யாகவே எழுப்புதல்கள் வழக்கமாக ஞாயிறு இரவுகளில் தேவனால் அனுப்பப்படுகின்றன!

டாக்டர் A. W. டோசர் “நடுஇரவுக்குப் பிறகு பிறந்தது” என்ற ஒரு செய்தியை எழுதினார். அதில் அவர் சொன்னார்:

எழுப்புதல்கள் நடுஇரவுக்கு பிறகு பிறக்கிறது என்பது ஆராய்ந்து பார்க்கவேண்டிய உண்மையான யோசனையாகும், எழுப்புதல்களுக்காக… போதுமான அளவிற்கு அதிக ஆவலோடு விரும்புபவர்களுக்கு மட்டுமே… மற்றும் முடிந்தவரையில் அதிகமாக அதை பெற்றுக்கொள்ளும் அறிதான ஆத்துமா வழக்கமற்ற அனுபவத்தோடு [எழுப்புதலுக்காக] நடு இரவுக்குப்பிறகு வந்தடைகிறது (A. W. Tozer, “Born After Midnight,” in The Best of A. W. Tozer, compiled by Warren W. Wiersbe, Baker, 1978, pp. 37-39).

நமது மாலை கூட்டம் நடுஇரவு வரையிலும் எப்பொழுதும் போகவேண்டும் என்று நான் சொல்லுவதாக அற்பமாக குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டாம்.

எப்படியானாலும், பழங்கால எழுப்புதல்களின் அரிதான அனுபவம் இரண்டு பாப்திஸ்டு சபைகளில் நூற்றுக்கணக்கானவர்கள் மாறுதல் அடைந்தை கண்ட, அனுபவம் எனக்கு இருந்திருக்கிறது. அவை இரண்டுமே மாலைக்கூட்டங்கள் இரவுவரை தொடர்ந்தன. ஒரு சபையில் மூன்று வருடங்களில் அநேக ஆயிரம் மக்கள் தேவன் அனுப்பிய எழுப்புதலினால் சபையில் சேர்க்கப்பட்டார்கள். அநேக கூட்டங்கள் நடு இரவுக்கு மேலாக தொடர்ந்தவைகள். மற்றசபையில் மூன்று மாதங்களில் ஐநூறு பேர் சேர்க்கப்பட்டார்கள். இரண்டாவதில் தேவன் அனுப்பிய எழுப்புதல் ஞாயிறு மாலை ஆரம்பித்த கூட்டமாகும். முதலாவது சபை ஞாயிறு மாலை கூட்டமும் மற்றும் வாரகடைசி கூட்டமும் தொடர்ந்து இருந்தது. அது பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட எழுப்புதலாக அனுபவிக்கப்பட்டது!

அந்த இரண்டு பாப்டிஸ்டு சபைகள் தங்கள் மாலை கூட்டங்களை மூடிஇருந்தால் அவைகள் அப்படிப்பட்ட எழுப்புதலை அனுபவித்திருக்க முடியுமா? முடியாது, அவைகளால் முடிந்திருக்காது! டாக்டர் A. W. டோசர் சொன்னார், எழுப்புதல் “போதுமான அளவிற்கு அதிக ஆவலோடு விரும்புபவர்களுக்கு மட்டுமே”. நமக்கு எழுப்புதல் வேண்டும் என்று போதுமான அளவிற்கு அதிக ஆவலோடு இருப்போமானால், மெய்யான எழுப்புதலை தேவன் அனுப்பும்போது நாம் கூட்டத்தை மூடமாட்டோம்.

நமது சொந்தச் சபையில் தேவன் சென்ற ஆண்டு குறிப்படத்தக்க ஒரு எழுப்புதலை அனுப்பினார். ஒரு சில இரவுகளில் இருபத்தொன்பது இளம் மக்கள் இரட்சிக்கப் பட்டார்கள் – அவர்கள் மெய்யாக மாற்றப்பட்டபடியினால் நமது சபையிலே தங்கினார்கள். இந்தக் கூட்டங்கள் எல்லாம் ஏறக்குறைய இரவிலே நடந்தவைகள்.

இப்பொழுது நான் இங்கே உள்ள இதுவரையிலும் இரட்சிக்கப் படாதவர்களோடு சுருக்கமாக பேசுவேன். நீ இரட்சிக்கப்பட வேண்டும் என்று கவலையோடு இருக்கிறாயா? உன்னுடைய பாவத்தால் நீ உணர்த்தப்பட்டாயா? உன்னை பாவத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் இரட்சிக்க உனக்கு இயேசு வேண்டுமா? அப்படியானால் இந்த இரவிலே நான் உன்னை எனது முழு இருதயத்தோடு கேட்டுக் கொள்ளுகிறேன் இறங்கி வா. ஜான் கேஹன் பிரசங்கம் செய்யப்போகிறார் “இழக்கப்பட்ட ஆத்துமாக்களுக்காக யுத்தம்.” அது உன்னை மாற்றக்கூடிய ஒரு போதனையாகும் – இயேசுவை கண்டு கொள்ள உனக்கு உதவிசெய்து உன்னுடைய பாவங்களிலிருந்து அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் இரட்சிக்கப்படுவதாகும்! இன்று இரவு ஜானின் டைனமிக் போதனையை கேட்க நிச்சயப்படுத்திக்கொள்!

ஆனால் இப்பொழுது இரட்சிக்கப்படாமல் நீ ஏன் வீட்டிற்குப் போக வேண்டும்? உன்னுடைய பாவத்திலிருந்து மனந்திரும்பி இப்பொழுது இயேசுவை நம்பு! இயேசு உன்னுடைய பாவங்களை இப்பொழுதே சுத்திகரிப்பார் நீ அவரை நம்பு மற்றும் அவரை மட்டுமே நம்பு!

பாடல் எண் 7ஐ தயவுசெய்து எழுந்து நின்று பாடவும், “ஒன்றுமில்லை ஆனால் இரத்தமே.” பாடலை பாடும்போது, நீங்கள் இங்கே முன்னே வந்து ஜெபத்திற்காக முழங்கால் படியிடும்படியாக நான் விரும்புகிறேன். தேவன் உங்களை இயேசுவிடம் அழைத்து வரும்படியாக உங்களுக்கு ஆலோசனை சொல்லவும் மற்றும் உங்களோடு ஜெபிக்கவும் டாக்டர் கேஹன், ஜான் கேஹன் மற்றும் நான் இங்கே இருக்கிறோம். உன்னை இரட்சிக்கும்படியாக சிலுவைமீது சிந்தின இரத்தத்தினால் உன்னுடைய பாவங்களைச் சுத்தமாக கழுவி இயேசு மட்டுமே உன்னை இரட்சிக்க முடியும். நாம் பாடும்பொழுது நீ வரலாம். உங்கள் பாட்டுத்தாளில் பாடல் எண் 7ஐ தயவுசெய்து எழுந்து நின்று பாடவும். “ஒன்றுமில்லை ஆனால் இரத்தமே” இது உங்கள் பாட்டுத்தாளில் பாடல் எண் 7.

என்னுடைய பாவத்தை எதனால் கழுவ முடியும்?
   ஒன்றுமில்லை ஆனால் இயேசுவின் இரத்தமே;
என்னை திரும்ப முழுவதும் சுத்தமாக்க எதனால் முடியும்?
   ஒன்றுமில்லை ஆனால் இயேசுவின் இரத்தமே.
ஓ! ஓடிவருவது விலையேறப்பெற்றது அதுவே
   என்னை பனிக்கட்டியைபோல வெண்மையாக்கும்;
வேறொரு ஊற்றை நான் அறியேன்,
   ஒன்றுமில்லை ஆனால் இயேசுவின் இரத்தமே.

என் மன்னிப்புக்காக இதை நான் பார்க்கிறேன் –
   ஒன்றுமில்லை ஆனால் இயேசுவின் இரத்தமே;
என் சுத்திகரிப்புக்காக இதுவே என் வேண்டுதல் –
   ஒன்றுமில்லை ஆனால் இயேசுவின் இரத்தமே.
ஓ! ஓடிவருவது விலையேறப்பெற்றது அதுவே
   என்னை பனிக்கட்டியைபோல வெண்மையாக்கும்;
வேறொரு ஊற்றை நான் அறியேன்,
   ஒன்றுமில்லை ஆனால் இயேசுவின் இரத்தமே.

பாவத்துக்கு பிராயசித்தபலி எதுவும் முடியாது –
   ஒன்றுமில்லை ஆனால் இயேசுவின் இரத்தமே;
நான் செய்த நன்மையினால் பிரயோஜனமில்லை –
   ஒன்றுமில்லை ஆனால் இயேசுவின் இரத்தமே.
ஓ! ஓடிவருவது விலையேறப்பெற்றது அதுவே
   என்னை பனிக்கட்டியைபோல வெண்மையாக்கும்;
வேறொரு ஊற்றை நான் அறியேன்,
   ஒன்றுமில்லை ஆனால் இயேசுவின் இரத்தமே.
((“Nothing But the Blood” by Robert Lowry, 1826-1899).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. ஆபேல் புருதோம்: யூதா 1-4.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Onward, Christian Soldiers” (by Sabine Baring-Gould, 1834-1924).


முக்கிய குறிப்புகள்

ஞாயிறு இரவுக்காக போராட்டம்
(போராட்ட அழுகைகள் வரிசையில் முதலாவது)

THE BATTLE FOR SUNDAY NIGHT
(NUMBER ONE IN A SERIES OF BATTLE CRIES)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது” (யூதா 3).

(மத்தேயு 25:5)

I. முதலாவதாக, ஞாயிறு இரவு கூட்டங்களை நமது சபைகளில் மூடுவது மட்டுமே சமீப காலத்தில் ஒரு பொதுவான பிராட்டஸ்டன்டு சபையில் இது நடைபெற்றது.

II. இரண்டாவதாக, ஞாயிறு இரவு கூட்டங்களை நமது சபைகளில் மூடுவது “டிசிசனிஸம்” விளைவுகளை உண்டாக்கும்.

III. மூன்றாவதாக, ஞாயிறு இரவு கூட்டங்களை நமது சபைகளில் மூடுவதால் அநேக எதிர்பாராத விளைவுகள் நிகழும்.

IV. நாலாவதாக, ஞாயிறு இரவு கூட்டங்களை தங்கள் சபைகளில் மூடினால் அது உண்மையான எழுப்புதலை நம்மிடமிருந்து நிருத்தி விடும்.